மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.7.16

வார்த்தைகளின் வலிமை!!!


வார்த்தைகளின் வலிமை!!!

Power of words

ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள் ஒரு முனிவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் முனிவரிடம் வந்து தன் வீட்டின் அருகின் உடல் நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது என்றும், அக்குழந்தையை குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப் பணிவுடன் உதவிக் கேட்டாள்.

உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல் நலமில்லாத அக்குழந்தையை அழைத்துவரும்படிக் கூறினார். அந்தப்பெண்ணும் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.

எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா என்ன? என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

உனக்கு அது குறித்து என்ன தெரியும்? நீ ஒரு அறிவில்லாத முட்டாள் என முனிவர் அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார்.

முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான்.

அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. அந்த முனிவரைக் கடுஞ்சொற்களால் எப்படியாவது திட்டி அவர் மனதைக் காயப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்? என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டப்பிறகு அந்த மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.

நீதி : நல்லதைப் பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு.
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Short and Wonderful. This reminds me of positive affirmations videos that I used to watch when negative dasha/subdasha periods that I have faced.
    Thank you for your post.

    Suresh

    ReplyDelete
  2. குருவே வந்தனம்!
    வார்த்தைகள் வெளிப்படும்போது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானே சொல்லிக் படுகிறது! அர்த்தம் பொதிந்ததாகத்தான் இருக்கு ம் என்பதை முனிவர் மிக அழகாக தெளிவாக வெளிப்படுத்துகிறார்! ஜோர்!!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,அடேங்கப்பா!வார்த்தைகளின் வலிமையை சொன்ன வாத்தியாரின் கதை பிரமாதம்.திரும்ப,திரும்ப படித்தேன்.எத்துனை முறை படித்தாலும் அலுக்கவில்லை.நன்றி.

    ReplyDelete
  4. vanakam. Myself ThiruMamagal. There is no expense to say good words. Good words brings happiness,peace, good relationship. But so many people like using hard words.They try to understand the moral of the story. Valluvar says allavai deya aram perugum nallavai nade iniya solin.

    ReplyDelete
  5. //////Blogger Suresh Lakshmanan said...
    Short and Wonderful. This reminds me of positive affirmations videos that I used to watch when negative dasha/subdasha periods that I have faced. Thank you for your post.
    Suresh//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    வார்த்தைகள் வெளிப்படும்போது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தானே சொல்லப் படுகிறது! அர்த்தம் பொதிந்ததாகத்தான் இருக்கும் என்பதை முனிவர் மிக அழகாக தெளிவாக வெளிப்படுத்துகிறார்! ஜோர்!!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அடேங்கப்பா!வார்த்தைகளின் வலிமையை சொன்ன வாத்தியாரின் கதை பிரமாதம்.திரும்ப,திரும்பப் படித்தேன்.எத்துனை முறை படித்தாலும் அலுக்கவில்லை.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. /////Blogger Kondal Vannan said...
    vanakam. Myself ThiruMamagal. There is no expense to say good words. Good words brings happiness,peace, good relationship. But so many people like using hard words.They try to understand the moral of the story. Valluvar says allavai deya aram perugum nallavai nade iniya solin./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. Varthaikalin valimaiyai paditha piragu positive vibrationai think pannanumgira ennam varugirathu

    ReplyDelete
  10. //////Blogger Subathra Suba said...
    Varthaikalin valimaiyai paditha piragu positive vibrationai think pannanumgira ennam varugirathu/////

    வந்தால் சரிதான். நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com