மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.7.16

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?

*_சிற்றின்பம்_*
 - (இது  நிலையற்றது)
*_பேரின்பம்_*
 - ( இது நிலையானது)
இந்த இரண்டிற்கும் உள்ள  வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்

1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால்
ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.

2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை
ஆராதித்தால் பேரின்பம்.

3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

5. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

6. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

7. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

8. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

9. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி
அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

11. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

12. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

13. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

14. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

15. பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

16. பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

17. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

18. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

19. அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

20. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

21. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

22. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

23. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

24. இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

25. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

26. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

27. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

28. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

29. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.

30. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

31. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

32. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

33. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

34. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.

35. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

36. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப் படுவது பேரின்பம்.

37. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

38. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

39. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.

40. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.

41. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

42. சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.

43. பற்றுக் கொள்வது சிற்றின்பம். பற்றற்று இருப்பது பேரின்பம்.

44. மாறுவது, தாவுவது சிற்றின்பம். மாறாதது நிலைத்தது பேரின்பம்.

45. நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.

46. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம் இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்

47. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்
இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை ( சிவபெருமானை ) நினைத்து வாழ்வது *_பேரின்பம்_*.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

 1. சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?

  ரொம்ப சிம்பிள்!
  சின்ன வீட்டிடம் கிடைக்கும் இன்பம்: சிற்றின்பம்!
  பெரிய வீட்டிடம் கிடைக்கும் இன்பம்: பேரின்பம்!

  ReplyDelete
 2. அன்பு குருவே!,

  மிக சிறந்த‌ பதிவு. பேரின்பம் என்பது, இறைவனை நினைத்து வாழ்ந்து இறைவனடி சேர்வது என்று சுறுக்கமாகதான் தெரியும். ஆனால் இவ்வளவு விரிவாக‌ கொடுத்துள்ளீர்கள் சாமி!. ஒவ்வொரு கருத்தையும் கிரகச்சி நம்மை சோதித்து பார்த்தால் புரியும் நாம் எப்பொழுது சிற்றின்பத்தில் உள்ளோம், எப்பொழுது பேரின்பத்தை முயற்சிக்கிறோம் என்று.
  நமசிவாய! வாழ்க! நாதன் தாள் வாழ்க!
  இமைப்பொழுதும்.. என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!
  நன்றி! சிவ ஆத்மாவே! திருசிற்றம்பலம்.

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,ஆஹா!அற்புதம்!ஆனந்தம்!பேரின்பம்.நன்றி.

  ReplyDelete
 4. ////Blogger நம்பள்கி said...
  சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்?
  ரொம்ப சிம்பிள்!
  சின்ன வீட்டிடம் கிடைக்கும் இன்பம்: சிற்றின்பம்!
  பெரிய வீட்டிடம் கிடைக்கும் இன்பம்: பேரின்பம்!/////

  நல்லது, உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 5. /////Blogger kmr.krishnan said...
  whatsapp news. Very nice Sir./////

  நல்லது. அங்கே கிடைத்ததுதான்! நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 6. /////Blogger mahesh veera said...
  Wow...!!! Great sir./////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. ////Blogger Selvam R said...
  அன்பு குருவே!,
  மிக சிறந்த‌ பதிவு. பேரின்பம் என்பது, இறைவனை நினைத்து வாழ்ந்து இறைவனடி சேர்வது என்று சுறுக்கமாகதான் தெரியும். ஆனால் இவ்வளவு விரிவாக‌ கொடுத்துள்ளீர்கள் சாமி!. ஒவ்வொரு கருத்தையும் கிரகச்சி நம்மை சோதித்து பார்த்தால் புரியும் நாம் எப்பொழுது சிற்றின்பத்தில் உள்ளோம், எப்பொழுது பேரின்பத்தை முயற்சிக்கிறோம் என்று.
  நமசிவாய! வாழ்க! நாதன் தாள் வாழ்க!
  இமைப்பொழுதும்.. என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!
  நன்றி! சிவ ஆத்மாவே! திருசிற்றம்பலம்.//////

  சிவாய நம’ என்றிருந்து விட்டால் எல்லாம் பிடிபடும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. /////Blogger Subathra Suba said...
  All are great lines sir/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 9. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஆஹா!அற்புதம்!ஆனந்தம்!பேரின்பம்.நன்றி./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 10. /////Blogger Sakthi Balan said...
  good words sir..../////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

  ReplyDelete
 11. வணக்கம் குருவே!
  எக்காலத்திலும் மனதில் நிறுத்நி வைக்கவேண்டிய வாக்குகள்!
  கனவிலும் நினைவில் கொள்ளும் வேண்டிய சத்தியங்கள்!
  நன்றி வாத்தியாரையா!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com