மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.16

நாம் அறிய வேண்டிய கேள்விகளும் அருமையான பதில்களும்!


நாம் அறிய வேண்டிய கேள்விகளும் அருமையான பதில்களும்!

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர். கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய " பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா "
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

பற்றுதல்.

✒கள்வர்கள் யார்?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

✒எதிரி யார்?

சோம்பல்.

✒எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு.

✒குருடனை விட குருடன் யார்?

ஆசைகள்
உள்ளவன்.

✒சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

✒மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

✒எது துக்கம்?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

✒உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

✒தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

✒சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

✒எது சுகமானது?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

✒எது இன்பம் தரும்?

நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

✒எது மரணத்துக்கு இணையானது?

அசட்டுத்தனம்.

✒விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?

காலமறிந்து செய்யும் உதவி.

✒இறக்கும் வரை உறுத்துவது எது?

ரகசியமாகச் செய்த பாவம்.

✒எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?

துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள். நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

✒சாது என்பவர் யார்?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

✒உலகத்தை யாரால் வெல்ல முடியும்?

✨சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

✒யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

✨எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

✒செவிடன் யார்?

✨ நல்லதைக்
கேட்காதவன்.

✒ஊமை யார்?

✨சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

✒நண்பன் யார்?

✨பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

✒யாரை விபத்துகள் அணுகாது?

✨ மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
=============================================================
முதிர்ச்சியைப் பற்றி ஆதிசங்கரர் சொன்னது:

1. Maturity is *when you stop trying to change others, ...instead focus on changing yourself.*

2. Maturity is when you  *accept people as they are.*

3. Maturity is when you *understand everyone is right in their own perspective.*

4. Maturity is when you *learn to "let go".*

5. Maturity is when you are  able to *drop "expectations" from a relationship and give for the sake of giving.*

6. Maturity is when you *understand whatever you do, you do for your own peace.*

7. Maturity is when you *stop proving to the world, how intelligent you are.*

8. Maturity is when you *don't seek approval from others.*

9. Maturity is when you *stop comparing with others.*

10. Maturity is when you *are at peace with yourself.*

11. Maturity is when you *are able to differentiate between "need" and "want" and are able to let go of your wants.*

*& last but most meaningful !*

12. You gain Maturity when you *stop attaching "happiness" to material things !!*

_*Wishing all a happy matured life. 😊*_
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் குருவே!
    இன்றைய தங்கள் பதிவிலும் தங்களின் முத்திரை மிக ஆழமாகப் பதிந்துள்ளது!
    அதுவே தங்களின் வளர்ச்சி முதிர்வைக் காண்பிக்கிறது!புகழ் பாடுவதாக எண்ணவேண்டாம்? தாங்களின் தேர்வு அப்படிப்பட்டதாக உள்ளது!
    ஆதிசங்கரரின் வாக்குகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைத் தத்துவஙகளாக உள்ளது.உ தாரணமாக

    12. You gain Maturity when you *stop attaching "happiness" to material things !!*
    அவ்வளவு சிறிய வயதில் இப்படிப்பட்ட வார்த்தைகளை விதைக்க முடிந்ததே, அவரால்! சுவாமி விவேகாநந்தர் அதுபோலவே வாழ்ந்திருக்கிறார்! நம்மால் படித்த முடியும்,அதைப்பற்றி சிறிது நேரம் சிந்திக்கவும் முடியும், ஆனால் அவர்கள் போல் வாழ முடியவில்லை, ஏனெனில் இன்னும் மனபபக்குவம் பெறவில்லை?எதற்கு எத்தனை ஜென்மம் தேவையோ?
    சிந்திக்கத் தந்த பகிர்வுக்கு நன்றி,வாத்தியாரையா!

    ReplyDelete
  2. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இன்றைய தங்கள் பதிவிலும் தங்களின் முத்திரை மிக ஆழமாகப் பதிந்துள்ளது!
    அதுவே தங்களின் வளர்ச்சி முதிர்வைக் காண்பிக்கிறது!புகழ் பாடுவதாக எண்ணவேண்டாம்? தாங்களின் தேர்வு அப்படிப்பட்டதாக உள்ளது!
    ஆதிசங்கரரின் வாக்குகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைத் தத்துவஙகளாக உள்ளது.உ தாரணமாக
    12. You gain Maturity when you *stop attaching "happiness" to material things !!*
    அவ்வளவு சிறிய வயதில் இப்படிப்பட்ட வார்த்தைகளை விதைக்க முடிந்ததே, அவரால்! சுவாமி விவேகாநந்தர் அதுபோலவே வாழ்ந்திருக்கிறார்! நம்மால் படித்த முடியும்,அதைப்பற்றி சிறிது நேரம் சிந்திக்கவும் முடியும், ஆனால் அவர்கள் போல் வாழ முடியவில்லை, ஏனெனில் இன்னும் மனப்பக்குவம் பெறவில்லை?எதற்கு எத்தனை ஜென்மம் தேவையோ?
    சிந்திக்கத் தந்த பகிர்வுக்கு நன்றி,வாத்தியாரையா!//////

    இறைவனை வழிபடுங்கள். இந்த ஜென்மத்திலேயே உங்களுக்குப் பூரண மனப் பக்குவம் கிடைக்கும்!

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Yes Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!,

    மிக சிறந்த பதிவு. ஆதிசங்கர் கூரிய பலவற்றை, அவர் கூரியது என்று தெரியாமலே பின்பற்றி வருகிறேன்.! ஆனால் ஒன்று, சில நேரங்கள் கடினமாக இருக்கிறது. இந்த காலத்து சில பெரியவர்கள், சுய நலத்துடன் இருக்கிறார்கள் தன் குடும்பம் தான் முக்கியம் என்று. சமுக சேவைகளுக்கும், பொது சேவைகளுக்கும் தடையாக உள்ளார்கள். இந்த காலத்தில் கல்யாணம் ஆன ஆண்கள் இந்த சேவை எண்ணத்தை செயல்படுத்த பல தடைகள். குறிப்பாக இருபாலர்களின்(ஆண், பெண்) தாய் தந்தையர்கள். என்ன செய்ய இந்த நேரங்களில் அவர்களின் சொல்லை மீறவேண்டியுள்ளது.. பிரம்மசாரிகள் பாக்கியலாளிகள்.
    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    மிகவும் அருமை அறிந்து கொள்ள மட்டுமல்ல பின்பற்றி வாழவேண்டியவை..

    ராமன்

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,முதிர்ச்சி பற்றி ஆதிசங்கரின் கூற்று மிகவும் பயனுள்ளது.கடைபிடித்தால் மகிழ்ச்சியே வாழ்வில்.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com