மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.7.16

ஆலயம் எதற்கு என்று கேட்டதற்கு என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்.....?


ஆலயம் எதற்கு என்று கேட்டதற்கு என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்.....?

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன்,
அவனிடம்
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்று....
அவன் ஓடிப் போய்
ஒரு சோம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார்
நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல,
ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
அதுதான் ஆலயம்..!
ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!
=============================
*சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!*

1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

4. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.
=========================================================
3
முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*

முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*

*எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகி விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா.?*
_பொறுங்கள்…_
*இன்னும் சில வழிகள் இருக்கின்றன* _தேடுங்கள்_

*மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.
*மாற்ற முடிந்ததை*  மாற்றாமல் விடாதே!.
*மாற்றக்கூடியது எது,*
*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.*

*வேலைகளை ஒத்திப் போடுபவன்,*
வெற்றிகளை ஒத்திப் போடுகிறான்;
*விதைப்பதை ஒத்திப் போடுபவன்,*
விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.

ஆரம்பித்தால் *அரை வெற்றி,*
தொடர்ந்தால் *முக்கால் வெற்றி,*
முடிந்தால் *முழு வெற்றி.*

_*லட்சியம்,*_
 _*திட்டம்*_
_*உழைப்பு,*_
_*விடா முயற்சி*_
 _இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்._

*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல.*
_உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்._

முடியும் *என்பது தன்னம்பிக்கை*
முடியுமா *என்பது அவநம்பிக்கை.*
முடியாது *என்பது மூட நம்பிக்கை*
========================================================
படித்து ரசித்து பகிர்ந்தேன் .....
அன்புடன்
வாத்தியார்
=======================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

adithan said...

வணக்கம் ஐயா,"மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.
*மாற்ற முடிந்ததை* மாற்றாமல் விடாதே!.
*மாற்றக்கூடியது எது,*
*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு."
"முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*

முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்." ........சற்றே குழப்பம்.எந்த பொருளில் சொல்லப்பட்டது என தெரியவில்லை.முழுதும் படித்தால் விளங்குமென நினைக்கிறேன்.நன்றி.

kmr.krishnan said...

சுவாமிஜியின் நினைவுதினம் 4 ஜுலை ஆகும். ஆதனை வெளியிட்ட இப்பதிவு அருமை. நன்றி.

பரிவை சே.குமார் said...

நல்ல தொகுப்பு

வேப்பிலை said...

நான் சரி..
சரி...
நான் மட்டுமே சரி..
சரியல்ல

சரியா?!!

ravichandran said...

Respected Sir,

Happy morning... Wonderful post.

"Lies don't let you to live"
"Truth don't let you to die"

Golden lines.

With kind regards,
Ravi-avn

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தொண்டு என்பது அவரவர் மனதைப் பொருத்து வலியச் செய்யும் உதவி.அதில் பலவகை உண்டு.ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்வதும் ஒருவகைத் தொண்டாக மாறிவிட்ட காலமிது!
நமது வகுப்பறை வாத்தியாரோ,சுமார் என்பது ஆண்டுகளாக ஜோதிட வகுப்பை பல இன்னல்கட்கிடையே விடாமல் நடத்தி வருவதோடு,எத்தனையோ நல்ல தகவல்களை மனமுவந்து நம்மிடையே பகிர்கிறார்!தனக்குத் தெரிந்த ஒரு கலையை, பலரும் தெரிந்து கொண்டு பயன் பெறட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இறைபணியாகச் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.நாம் கேட்ட எத்தனையோ ஜோதிட வினாக்களுக்கு பதிலும் அளித்துள்ளார்! அனைத்துமே போற்றத்தக்கவை!பாராட்டுக்கள், ஐயா!
எங்களுக்கும் உதவும் நோக்கத்துடன் தாங்கள் படித்த நல்விஷயங்களை அன்போடு பகிரும் தங்களின் நல்லுள்ளத்துக்கு நன்றி, ஐயா!
இன்றைய பகிர்ப்பில் சுவாமி விவேகாநந்தர் அவர்களின் பொன்மொழிகளும், "ஆலயம் எதற்கு"
என்பதற்கான விளக்கமும் படித்த மனதுக்கு மகிழ்வு நிறைந்திருந்தது!

"முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*"


" எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்."
இவை இரண்டும் என் மனதில் ஆழப்பதிந்த வரிகள்!
நன்றி, வாத்தியாரையா.

Vicknaa Sai said...

அற்புதம் அற்புதம் குருவே
அத்தனையும் அற்புதம்

மிக்க நன்றி ஐயா

அன்புடன்
விக்னசாயி.

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,"மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.
*மாற்ற முடிந்ததை* மாற்றாமல் விடாதே!.
*மாற்றக்கூடியது எது,*
*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு."
"முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*
முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்." ........சற்றே குழப்பம்.எந்த பொருளில் சொல்லப்பட்டது என தெரியவில்லை.முழுதும் படித்தால் விளங்குமென நினைக்கிறேன்.நன்றி/////.

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
சுவாமிஜியின் நினைவுதினம் 4 ஜுலை ஆகும். ஆதனை வெளியிட்ட இப்பதிவு அருமை. நன்றி./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger பரிவை சே.குமார் said...
நல்ல தொகுப்பு/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
நான் சரி..
சரி...
நான் மட்டுமே சரி..
சரியல்ல
சரியா?!!/////

சரிதான் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Wonderful post.
"Lies don't let you to live"
"Truth don't let you to die"
Golden lines.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தொண்டு என்பது அவரவர் மனதைப் பொருத்து வலியச் செய்யும் உதவி.அதில் பலவகை உண்டு.ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்வதும் ஒருவகைத் தொண்டாக மாறிவிட்ட காலமிது!
நமது வகுப்பறை வாத்தியாரோ,சுமார் ஒன்பது ஆண்டுகளாக ஜோதிட வகுப்பை பல இன்னல்கட்கிடையே விடாமல் நடத்தி வருவதோடு,எத்தனையோ நல்ல தகவல்களை மனமுவந்து நம்மிடையே பகிர்கிறார்!தனக்குத் தெரிந்த ஒரு கலையை, பலரும் தெரிந்து கொண்டு பயன் பெறட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இறைபணியாகச் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.நாம் கேட்ட எத்தனையோ ஜோதிட வினாக்களுக்கு பதிலும் அளித்துள்ளார்! அனைத்துமே போற்றத்தக்கவை!பாராட்டுக்கள், ஐயா!
எங்களுக்கும் உதவும் நோக்கத்துடன் தாங்கள் படித்த நல்விஷயங்களை அன்போடு பகிரும் தங்களின் நல்லுள்ளத்துக்கு நன்றி, ஐயா!
இன்றைய பகிர்ப்பில் சுவாமி விவேகாநந்தர் அவர்களின் பொன்மொழிகளும், "ஆலயம் எதற்கு" என்பதற்கான விளக்கமும் படித்த மனதுக்கு மகிழ்வு நிறைந்திருந்தது!
"முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*"
" எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்."
இவை இரண்டும் என் மனதில் ஆழப்பதிந்த வரிகள்!
நன்றி, வாத்தியாரையா./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டடங்களுக்கும் நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger Vicknaa Sai said...
அற்புதம் அற்புதம் குருவே
அத்தனையும் அற்புதம்
மிக்க நன்றி ஐயா
அன்புடன்
விக்னசாயி./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
பிதாமகர் பிறவி கவிஞர்./////

உண்மைதான். நன்றி செல்வராஜ்!