மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.16

மனவளம்: உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!


மனவளம்: உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்புதான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. வணக்கம் குருவே!
    அருமையான உண்மை.அதைப் பகிரந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. Ayya eppodhum pola siriya kadhai periya unmai anbudan Vanakkam

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,இந்த கதையை தினம் ஒருமுறை படித்தால் காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மை போய் தன்நம்பிக்கை வந்துவிடும்.நன்றி.

    ReplyDelete
  4. அன்பு குருவே!,

    நல்ல பதிவு. இன்று நான் ஒரு மாணிக்க கல்லை வாங்க முடிவு செய்ய போகிறேன். என்னே, அதற்கு ஒத்த பதிவு. எனக்கு சிம்ம லக்னம், உத்திராடம் நட்சத்திரம். சூரியன் ராசி கட்டத்தில் தூலாம் ராசியில் நீசம்.. ஆனால் நவாம்சத்தில் உச்சம்(மேஷத்தில்). தற்போது குரு மகா திசா (குரு 8ம் அதிபதி 8ல்). மாணிக்க அணியலாம் என்று நம்புகிறேன். சரிதானே?.

    ///உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய்/// ‍ இதை மனதில்வைத்து காத்து கொண்டுருக்கிறேன்.. சிவபெருமான் நம்பிக்கையோடு.
    நன்றி! ஆசிரியரே!

    ReplyDelete
  5. ஐயா எனக்கு ஒரு ஜாதகம் கனித்து பலன் சொல்லுங்கள். பிறந்த ஊர் கருர். பிறந்த நேரம் :02.00am.பிறந்த தேதி: 01.08.1985.எனக்கு தொழில்,திருமணமும்,எதுஉம் அமையவில்லை. படிப்பும் தடை. வாழ்க்கை மாறுமா?. மிகவும் சிரமப்படுகிறேன். லாரி வாங்கி தொழில் செய்யலாமா?.என்னை சமுதாயம் மதிக்கும் நேரம் வறுமா?இப்படிக்கு உங்கள் கீழ் படிந்த மாணவன் க.ராஜேஷ் குமார். நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருமையான உண்மை.அதைப் பகிரந்தமைக்கு நன்றி!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. /////Blogger kittuswamy palaniappan said...
    Ayya eppodhum pola siriya kadhai periya unmai anbudan Vanakkam/////

    நல்லது. நன்றி கிட்டுசுவாமி!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இந்த கதையை தினம் ஒருமுறை படித்தால் காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மை போய் தன்நம்பிக்கை வந்துவிடும்.நன்றி.////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. ////Blogger Selvam R said...
    அன்பு குருவே!,
    நல்ல பதிவு. இன்று நான் ஒரு மாணிக்க கல்லை வாங்க முடிவு செய்ய போகிறேன். என்னே, அதற்கு ஒத்த பதிவு. எனக்கு சிம்ம லக்னம், உத்திராடம் நட்சத்திரம். சூரியன் ராசி கட்டத்தில் தூலாம் ராசியில் நீசம்.. ஆனால் நவாம்சத்தில் உச்சம்(மேஷத்தில்). தற்போது குரு மகா திசா (குரு 8ம் அதிபதி 8ல்). மாணிக்க அணியலாம் என்று நம்புகிறேன். சரிதானே?.
    ///உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய்/// ‍ இதை மனதில்வைத்து காத்து கொண்டுருக்கிறேன்.. சிவபெருமான் நம்பிக்கையோடு.
    நன்றி! ஆசிரியரே!/////

    திருவாசகம் படியுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!

    ReplyDelete
  10. /////Blogger Chiyaan Rajesh said...
    ஐயா எனக்கு ஒரு ஜாதகம் கனித்து பலன் சொல்லுங்கள். பிறந்த ஊர் கருர். பிறந்த நேரம் :02.00am.பிறந்த தேதி: 01.08.1985.எனக்கு தொழில்,திருமணமும்,எதுஉம் அமையவில்லை. படிப்பும் தடை. வாழ்க்கை மாறுமா?. மிகவும் சிரமப்படுகிறேன். லாரி வாங்கி தொழில் செய்யலாமா?.என்னை சமுதாயம் மதிக்கும் நேரம் வறுமா?இப்படிக்கு உங்கள் கீழ் படிந்த மாணவன் க.ராஜேஷ் குமார். நன்றி.//////

    என்னுடைய மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். நேரம் கிடைக்கும்போது பார்த்துச் சொல்கிறேன். மின்னஞ்சல் முகவரி:classroom2007@gmail.com

    ReplyDelete
  11. ////Blogger Chiyaan Rajesh said...
    Super/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  12. Respected sir,

    Thank you very much sir. I made comments yesterday itself. But My comments are not published. I do not know the reason. I am writing in English. I am not finding the tamil font to comments this issue. Do not mistake me.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  13. // திருவாசகம் படியுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்! //
    பலமுறை இளையராசாவில் சிம்பனி இசையில் உள்ள திருவாசகத்தை கேட்டும், பாடியும் உள்ளேன். இப்பொழுது தாங்கள் கூரியதால், அர்த்ததோடு திருவாசகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். நன்றி! குருவே!

    ReplyDelete
  14. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you very much sir. I made comments yesterday itself. But My comments are not published. I do not know the reason. I am writing in English. I am not finding the tamil font to comments this issue. Do not mistake me.
    with kind regards,
    Visvanathan N/////

    அதே பின்னூட்டத்தை மறுபடியும் எழுதி அனுப்புங்கள். என்ன காரணம் என்று பார்க்கிறேன். உங்கள் ஜாதக சம்பந்தமான கேள்விகளுடன் கூடிய பின்னூட்டமென்றால் வந்திருக்காது. அதை மனதில் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  15. ////Blogger Selvam R said...
    // திருவாசகம் படியுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்! //
    பலமுறை இளையராசாவில் சிம்பனி இசையில் உள்ள திருவாசகத்தை கேட்டும், பாடியும் உள்ளேன். இப்பொழுது தாங்கள் கூரியதால், அர்த்ததோடு திருவாசகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். நன்றி! குருவே!/////

    நல்லது. தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com