மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

20.8.12

Astrology - Popcorn Post போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Astrology - Popcorn Post போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Popcorn Post No.21
பாப்கார்ன் பதிவுகள் - எண்.21

மனிதர்களுக்கு கிடைக்கும் வேலையில்தான் எத்தனை வகைகள்?

சிலர் சேரும் வேலையிலேயே, அது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லை யோ, கடைசிவரை அதிலேயே  உழன்று விடுவார்கள்.அதாவது இருந்து விடுவார்கள்.

சிலர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியில் சேர்ந்து பணியாற்றத் துவங்கிவிடுவார்கள். அதே வங்கியில் 35 வருடங்களோ அல்லது 38 வருடங்களோ தொடர்ந்து பணியாற்றிவிட்டு, பணி ஓய்வு பெறும் வரை அந்த வங்கியிலேயே பணியாற்றுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து பணி செய்துவிட்டு இப்போதுதான் பணி ஓய்வு பெற்றார்.

ஆனால் சிலர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக,  சட்டையை மாற்றுவதுபோல அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.

ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

அதற்குக் காரணம் என்ன?

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. 
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.
இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்

Mesha, Kataka, Thula and Makar are movable astrology signs,
Rishaba , Simha ,Vrischika and kumbha are fixed signs.
Mithuna, Kanya, Dhanu and Meena are known as common signs.
-------------------------------------------------------
1. பத்தாம் அதிபதி (10th Lord) உபய ராசியில் (common signs) அமர்ந்திருப்பதோடு,  சனி, அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், வேலையில் மாற்றங்கள் இருக்கும்.

2. அதே போல 12ஆம் அதிபதி (12th lord) பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒரே வேலையில் இருக்க விடமாட்டான்.

மேலே கூறியுள்ள இரண்டு அமைப்புக்களும், சுப கிரகங்கள் ஏதாவது ஒன்றின் பார்வையைப் பெற்றிருந்தால், அது விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++=====

16 comments:

Gnanam Sekar said...

அய்யா வணக்கம்

Udhaya Kumar said...

Guruvirkku vanakkam
Present
Nandri

ரமேஷ் வெங்கடபதி said...

ராசியின் தன்மை கொண்டு வேலையின் தன்மையை அறிய எளிய வழி வகுத்துக் கொடுத்த ஆசிரியருக்கு மிக்க நன்றி!

Parvathy Ramachandran said...

இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் பதிவு. பதிவின் தலைப்பை ஒட்டிய மனப்பான்மையே, பெரும்பாலான இளைய தலைமுறையினரிடமும் நிறுவனங்களிடமும் இன்று உள்ளது. நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி ஐயா.

astroadhi said...

வணக்கம் அய்யா,
ரத்தின சுருக்கமான பதிவு....
நன்றி

அய்யர் said...

வேலை.. இப்போ
WAY(to)lie என மாறி வரும் சூழலில்

கார்ன் பதிவு
காரணங்களை ஆராய வைக்கிறது.

சட்டைகள் மாறினாலும்
சட்ட விதிகள் மாறவில்லை..

நன்றிகள்
நலமான நல் வாழ்த்துக்கள்

ஸ்ரீ.... said...

அய்யா,

மேஷ ராசிக்கான எதிர்காலம் (வேலையில்) என்னவென்று விரிவாகத் தெளிவுபடுத்தும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ....

kmr.krishnan said...

பத்தாம் அதிபதி செவ்வாய் உபய ராசியான மிதுனத்தில் கடக லக்னத்திற்குப் பன்னிரண்டில் மறைவு. பன்னிரண்டாம் அதிபதி புதனார் இரண்டில் சூரியன் சனியுடன் ஸ்திர ராசியான சிம்மத்தில்!
1972 ஜனவரி முதல் 2009 ஆகஸ்டு வரை 37 ஆண்டுகள் 7 மாதங்கள் ஒரே நிறுவனத்தில் ஒரே ஊரில் பிரமோஷன் எதுவும் விரும்பாமல் கிடந்து உழன்றேன்.

சில சமயம் சோதிட விதிகள் எனக்குப் பொருந்துவதில்லை. பொதுப்பலன் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம்////

உங்களின் வருகைப் பதிவிற்கு சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
Guruvirkku vanakkam
Present
Nandri/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ராசியின் தன்மை கொண்டு வேலையின் தன்மையை அறிய எளிய வழி வகுத்துக் கொடுத்த ஆசிரியருக்கு மிக்க நன்றி!/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படும் பதிவு. பதிவின் தலைப்பை ஒட்டிய மனப்பான்மையே, பெரும்பாலான இளைய தலைமுறையினரிடமும் நிறுவனங்களிடமும் இன்று உள்ளது. நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி ஐயா./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger astroadhi said...
வணக்கம் அய்யா,
ரத்தின சுருக்கமான பதிவு....
நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
வேலை.. இப்போ
WAY(to)lie என மாறி வரும் சூழலில்
கார்ன் பதிவு
காரணங்களை ஆராய வைக்கிறது.
சட்டைகள் மாறினாலும்
சட்ட விதிகள் மாறவில்லை..
நன்றிகள்
நலமான நல் வாழ்த்துக்கள்/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஸ்ரீ.... said...
அய்யா,
மேஷ ராசிக்கான எதிர்காலம் (வேலையில்) என்னவென்று விரிவாகத் தெளிவுபடுத்தும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ..../////

பழைய பாடங்களில் விரிவாக எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
பத்தாம் அதிபதி செவ்வாய் உபய ராசியான மிதுனத்தில் கடக லக்னத்திற்குப் பன்னிரண்டில் மறைவு. பன்னிரண்டாம் அதிபதி புதனார் இரண்டில் சூரியன் சனியுடன் ஸ்திர ராசியான சிம்மத்தில்!
1972 ஜனவரி முதல் 2009 ஆகஸ்டு வரை 37 ஆண்டுகள் 7 மாதங்கள் ஒரே நிறுவனத்தில் ஒரே ஊரில் பிரமோஷன் எதுவும் விரும்பாமல் கிடந்து உழன்றேன்.
சில சமயம் சோதிட விதிகள் எனக்குப் பொருந்துவதில்லை. பொதுப்பலன் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா!/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!