Astrology - Popcorn Post பரதேசம் போவது எப்படி?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினேழு
யாராவது பரதேசம் போக விரும்புவார்களா? என்னடா வாத்தியார் இப்படித் தலைப்பிட்டிருக்கிறார் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.
ஜாதகப்படி பரதேசம் போகும் அமைப்பு சிலருக்கு இருக்கும். நாம் போக விரும்பாவிட்டாலும், அல்லது அப்படிப்போகும் வாய்ப்பு நமக்குக்
கிடைக்காவிட்டாலும் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவை இரண்டையும் சொல்வதுதான் ஜோதிடம். அதைத் தெரிந்து கொள்வதால் ஒன்றும்
கெட்டுப்போய் விடாது. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
பரதேசிகள் அலைந்து திரியும் இடம்தான் பரதேசம். முதலில் பரதேசி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்.
பரதேசி என்றால் ஊர் ஊராகச் சுற்றித்திரியும் பிச்சைக்காரன் என்று அகராதில் குறிப்பிடப்பெற்றுள்ளது. (wandering beggar). குடும்பத்தைத் துறந்து வெளியேறிய துறவிகளையும் அது குறிக்கும்
அந்தக் காலத்தில் பரதேசம் என்றால் நாடுவிட்டு நாடு போவதைக் குறிக்கும். இப்போது அப்படியெல்லாம் போக முடியாது. விசா பிரச்சினை குறுக்கே வந்து நிற்கும். ஆகவே உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது என்று பொருள் கொள்ளலாம்.
சரி, பரதேசம் போவதற்கான ஜாதக அமைப்பு என்ன?
அதை இன்று பார்ப்போம்!
----------------------------------------
பாரப்பா ஈராறோன் இரு நான்கோனும்
பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீசசந்திரனும் கண்ணுற்றாலும்
சிலகாலந் தங்கியிருந்து செம்பொன் தேடி
ஆறப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே!
- புலிப்பாணி முனிவர்
ஈராறோன் என்றால் பன்னிரெண்டாம் அதிபதி (12th Lord)
இரு நான்கோன் என்றால் எட்டாம் வீட்டுக்காரன் (8th Lord)
செவ்வாய் என்றால் நம் அனைவருக்கும் தெரியும்
ஆக அம்மூவரும் கூட்டாக ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் பரதேசம் போவானாம்.
சரி, விதிவிலக்குண்டா?
நீச சந்திரன், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள தேய்பிறைச் சந்திரன், அம்மூவரையும் தன் பார்வையால் பார்த்தால்
சற்று விதிவிலக்கு உண்டு. அதாவது ஜாதகன் போவதை அது தடுத்து நிறுத்தாது. ஆனால் சிலகாலம் ஜாதகன் சுற்றித்திரிந்து தங்கம்
முதலான பொருட்களுடன் திரும்ப வீடு வந்து சேர்வானாம். பொருள் ஈட்டிக்கொண்டு வருவான். அல்லது உங்கள் மொழியில் சொன்னால்
எங்காவது ஆட்டையைப் போட்டுக்கொண்டு வருவான்.
வந்து, தன் நாயகி, தன் மக்களுடன் சேர்ந்தால் சரிதான்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Kalai vannakkam Ayya...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteபன்னிரண்டாம் அதிபதியே செவ்வாயாக இருந்து, தேய்பிறை சந்திரன் எட்டாம் வீட்டுக்காரனாக இருந்து ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையாக பார்த்தால்? அது சேர்ந்து இருக்கும் கணக்கில் வருமா? ஏன் கேட்கிறேன் என்றால், குரு சந்திர யோகம், சசி மங்கள யோகம் போன்ற யோகங்களில் ஒரே வீட்டில் இருப்பதோடு இந்த பார்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது அல்லவா? அதனால் தான்.
ReplyDeleteதெளிவாக, ஐயம் தெளிவித்து வைக்க வேண்டுகிறேன்.
அருமையான பதிவு ஒரு சிறு சந்தேகம் 12டில் கேது இருந்தால் முக்த்தி என்கிறார்களே அது உண்மையா
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் .
ReplyDeletehttp://www.siththarkal.com/2012/03/blog-post_23.html#comment-form
ReplyDeleteகடந்த மார்ச் மாதம் சித்தர்கள் ராஜ்ஜியம் வலைதளத்தில் ஒரு comment பார்த்தேன் .அதில் ஒரு ஜாதகம் ஒன்றை ஒருவர் கொடுத்து இருந்தார் . அவர் பெரிய மகான் என்று குறுப்பிட்டு இருந்தார் .அந்த பக்கத்தை உங்களுக்கு link கொடுத்து உள்ளேன் .இதை பற்றி வகுப்பு எடுங்கள் ஐயா
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல பதிவு
நன்றி
Sir, your heading indicates it to be suffering in foreign country or other states, correct me if i am wrong. if you could give conditions for a long time stay in foreign countries with family and having a good life (not just wandering in foreign country)
ReplyDeleteஆகா.. அற்புதம்..
ReplyDeleteஉறவுகள் ஒன்று கூட
இல்லாமல் இருப்பதும்
இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?
புதுசு கண்ணா புதுசு...மிக்க நன்றி சார்
ReplyDeleteநீங்கள் கூறியுள்ள மூன்று 'கண்டிஷனி'ல் அடியேனுக்கு இரண்டு உள்ளது. 12ம் அதிபன் புதனும்,8ம் அதிபன் சனீஸ்வரனும் இரண்டில் கூடினார்கள்.நல்ல வேளையாக செவ்வாய் 12ல் போய் அமர்ந்துவிடார். 2ம் அதிபதி சூரியனும் 8,12 அதிபர்களைத் தன் சொந்த வீட்டில் இருந்து கண்டித்து விட்டார்.
ReplyDeleteஅதனால் தான் சன்னியாசம் வாங்கப் போனவன் திரும்பி வந்துவிட்டேன் போலும்.என்னுடைய ஆக்கம் "மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை"
வகுப்பறையில் 3 அக்டோபர் 2010ல் வெளிவந்துள்ளது.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!
வணக்கம் சார்,
ReplyDeleteம் என்ன சொலலனும் என்ன பண்ணறது சராசரி நானும் ஒரு பரதேசி தான் பாடம் ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி சார். 12ல் கேதிருந்தால் மோட்சம்
அடுத்த பிறவியில்லை இந்த மாதரி 12ல் கேது இருப்பவர்கள் ரொம்ப கொடுதது வைத்தவர்கள் மேலும் ரிஷப லகனத்திற்கு 12ல் சூரியன் உச்சம் சிம்ம லக்கனத்திற்கு 12ல் குரு உச்சமானாலும் மறு பிறவில்லை இந்த மாதரி அமைப்பு இருக்கிறவங்க ரொம்ப அழிச்சாட்டியம் இந்த பிறவியில் பண்ண இந்த விதி மாறி பிறவி அமைந்து விடும் என்வே புண்ணிய காரியங்கள் செய்யுங்கள் குறிப்பா கோவில் பணம் கொடுங்கள் முடியாவிட்டால் உடல் உழைப்பு தாருங்கள்
சார் இது தப்பாயிருந்தால் திருத்துங்க்ள்.
arumayana pathivu ayya
ReplyDeleteமிக நல்ல பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மிக அரிய தகவல்களைக் கொடுத்து வருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஅய்யா லக்கனதிற்கோ அலலது சந்திரன்க்கோ 10-ம் இடத்தில் முன்று கோள்கள் இருந்தால் அது ஒரு துரவியுடைய ஜாதகம்...சரியா அய்யா...
ReplyDeleteஇதை பொது பலனாகத்தான் எடுத்துக் கொள்ள என்னால் முடிகிறது. எனக்குத் தெரிந்த மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணின் ஜாதகம். கன்னி லக்கினம். 8,12க்குரிய செவ்வாயும், சூரியனும் 8ல். அதுவும் இப்போது சூரிய தசை நடக்கிறது. இப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை இருவரும் பலமாக இருப்பதால் பலன் cancelஆகி விட்டதோ என்னவோ. இருப்பினும் பல கோயிலுக்கு போகிறேன் என்று அடிக்கடி இந்தியா வந்து செல்கிறார். இந்த அமைப்பு தன் வேலையைக் காட்டுகிறதோ என்று கூட சந்தேகம் மனதின் ஒரு மூலையில் ஏற்படுகிறது.
ReplyDeleteபரதேசிகளின் ஜாதக நிலையை பகர்ந்த
ReplyDeleteமுனி புலிப்பாணியின் பாடல்களின் மூலம்
புதிய தகவல் கொண்ட பாடம் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
ஆனந்தம் அவனுக்கு அதிலே அப்படிஎன்றால்
ஆரவனை நிறுத்த முடியும்!
பாடம் அருமை... நன்றிகளோடு.
////Blogger Siva said...
ReplyDeleteKalai vannakkam Ayya...////
வணக்கத்திற்கும், வருகைப் பதிவிற்கும் நன்றி நண்பரே!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.////
வணக்கத்திற்கும், வருகைப் பதிவிற்கும் நன்றி புவனேஷ்வர்!!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteபன்னிரண்டாம் அதிபதியே செவ்வாயாக இருந்து, தேய்பிறை சந்திரன் எட்டாம் வீட்டுக்காரனாக இருந்து ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையாக பார்த்தால்? அது சேர்ந்து இருக்கும் கணக்கில் வருமா? ஏன் கேட்கிறேன் என்றால், குரு சந்திர யோகம், சசி மங்கள யோகம் போன்ற யோகங்களில் ஒரே வீட்டில் இருப்பதோடு இந்த பார்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது அல்லவா? அதனால் தான்.
தெளிவாக, ஐயம் தெளிவித்து வைக்க வேண்டுகிறேன்./////
ஏன் உங்கள் ஜாதகத்தில் அப்படி இருக்கிறதா? படிக்கும்போதே கண்ணைக் கட்டுகிறது சாமி!
/////Blogger சித்தர்கள் ரகசியம் said...
ReplyDeleteஅருமையான பதிவு ஒரு சிறு சந்தேகம் 12ல் கேது இருந்தால் முக்தி என்கிறார்களே அது உண்மையா?/////
உண்மை என்றுதான் நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு 12ல் கேது இல்லை!
//////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் ./////
வணக்கத்திற்கும், வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!!
////Blogger சித்தர்கள் ரகசியம் said...
ReplyDeletehttp://www.siththarkal.com/2012/03/blog-post_23.html#comment-form
கடந்த மார்ச் மாதம் சித்தர்கள் ராஜ்ஜியம் வலைதளத்தில் ஒரு comment பார்த்தேன் .அதில் ஒரு ஜாதகம் ஒன்றை ஒருவர் கொடுத்து இருந்தார் . அவர் பெரிய மகான் என்று குறுப்பிட்டு இருந்தார் .அந்த பக்கத்தை உங்களுக்கு link கொடுத்து உள்ளேன் .இதை பற்றி வகுப்பு எடுங்கள் ஐயா/////
அதையெல்லாம் எடுத்து எழுத அவர்களின் அனுமதி, எழுதியபின் அவர்களுக்குத் தெரிவித்தல் போன்ற தலைவலி மேட்டர்கள் எல்லாம் உண்டு. நமக்கு இருக்கிற தலைவலி போதும்! அதெல்லாம் வேண்டாம் சாமி! சாமி! சாமி!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல பதிவு
நன்றி////
நல்லது. நன்றி உதயகுமார்!!
/////Blogger MAGGEE said...
ReplyDeleteSir, your heading indicates it to be suffering in foreign country or other states, correct me if i am wrong. if you could give conditions for a long time stay in foreign countries with family and having a good life (not just wandering in foreign country)////
foreign countryகளுக்கு வெளிநாடு என்று பெயர். உங்களை ஏன் நீங்களே குழப்பிக்கொள்கிறீர்கள்? வெளிநாட்டில் இருக்கும் இரண்டு கோடி இந்தியர்கள் அனுப்பும் பணத்தால்தான் நமது நாட்டின் பொது நிதி உயரத்தில் உள்ளது.
////Blogger அய்யர் said...
ReplyDeleteஆகா.. அற்புதம்..
உறவுகள் ஒன்று கூட
இல்லாமல் இருப்பதும்
இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?/////
உறவுகள் குறைந்தபட்சம் இரண்டாவது இருக்குமே சுவாமி! அது இல்லாமல் இருந்தால் தொட்டில் குழந்தையா?
////Blogger Arul said...
ReplyDeleteபுதுசு கண்ணா புதுசு...மிக்க நன்றி சார்///
சரி கண்ணா சரி!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteநீங்கள் கூறியுள்ள மூன்று 'கண்டிஷனி'ல் அடியேனுக்கு இரண்டு உள்ளது. 12ம் அதிபன் புதனும்,8ம் அதிபன் சனீஸ்வரனும் இரண்டில் கூடினார்கள்.நல்ல வேளையாக செவ்வாய் 12ல் போய் அமர்ந்துவிடார். 2ம் அதிபதி சூரியனும் 8,12 அதிபர்களைத் தன் சொந்த வீட்டில் இருந்து கண்டித்து விட்டார்.
அதனால் தான் சன்னியாசம் வாங்கப் போனவன் திரும்பி வந்துவிட்டேன் போலும்.என்னுடைய ஆக்கம் "மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை" வகுப்பறையில் 3 அக்டோபர் 2010ல் வெளிவந்துள்ளது.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!////
இரண்டு மட்டும் இருந்ததால் தப்பித்தீர்கள். எங்களுக்கும் பதிவுலகின் மூலம் நல்ல நண்பர் கிடைத்தீர்கள்.
////Blogger sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
ம் என்ன சொலலனும் என்ன பண்ணறது சராசரி நானும் ஒரு பரதேசி தான் பாடம் ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி சார். 12ல் கேதிருந்தால் மோட்சம்
அடுத்த பிறவியில்லை இந்த மாதரி 12ல் கேது இருப்பவர்கள் ரொம்ப கொடுதது வைத்தவர்கள் மேலும் ரிஷப லகனத்திற்கு 12ல் சூரியன் உச்சம் சிம்ம லக்கனத்திற்கு 12ல் குரு உச்சமானாலும் மறு பிறவில்லை இந்த மாதரி அமைப்பு இருக்கிறவங்க ரொம்ப அழிச்சாட்டியம் இந்த பிறவியில் பண்ண இந்த விதி மாறி பிறவி அமைந்து விடும் என்வே புண்ணிய காரியங்கள் செய்யுங்கள் குறிப்பா கோவில் பணம் கொடுங்கள் முடியாவிட்டால் உடல் உழைப்பு தாருங்கள்
சார் இது தப்பாயிருந்தால் திருத்துங்கள்.////
நல்லதைத்தானே சொல்கிறீர்கள். சொல்லுங்கள்!
///Blogger arul said...
ReplyDeletearumayana pathivu ayya////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக நல்ல பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மிக அரிய தகவல்களைக் கொடுத்து வருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!
////Blogger Pandian said...
ReplyDeleteஅய்யா லக்கனதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 10-ம் இடத்தில் முன்று கோள்கள் இருந்தால் அது ஒரு துறவியுடைய ஜாதகம்...சரியா அய்யா.../////
தெரியவில்லையே சாமி! எனக்குத் தெரிந்தவரை ஐந்தில் கேது இருந்தால், ஒன்று அரசன் அல்லது துறவி!
////Blogger ananth said...
ReplyDeleteஇதை பொது பலனாகத்தான் எடுத்துக் கொள்ள என்னால் முடிகிறது. எனக்குத் தெரிந்த மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணின் ஜாதகம். கன்னி லக்கினம். 8,12க்குரிய செவ்வாயும், சூரியனும் 8ல். அதுவும் இப்போது சூரிய தசை நடக்கிறது. இப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை இருவரும் பலமாக இருப்பதால் பலன் cancelஆகி விட்டதோ என்னவோ. இருப்பினும் பல கோயிலுக்கு போகிறேன் என்று அடிக்கடி இந்தியா வந்து செல்கிறார். இந்த அமைப்பு தன் வேலையைக் காட்டுகிறதோ என்று கூட சந்தேகம் மனதின் ஒரு மூலையில் ஏற்படுகிறது.////
நீங்கள் சொன்னால் சரிதான் ஆனந்த்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteபரதேசிகளின் ஜாதக நிலையை பகர்ந்த
முனி புலிப்பாணியின் பாடல்களின் மூலம்
புதிய தகவல் கொண்ட பாடம் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
ஆனந்தம் அவனுக்கு அதிலே அப்படிஎன்றால்
ஆரவனை நிறுத்த முடியும்!
பாடம் அருமை... நன்றிகளோடு.///////
ஆமாம். விதிப்படி நடக்க இருப்பதை யாரால் நிறுத்த முடியும்? நன்றி ஆலாசியம்!
Guru Vanakkam,
ReplyDeleteNeed to catch up with the class, busy with other priorities, will be settling down in chennai after 14 years of foreign land.
Regards
RAMADU.