மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

16.8.12

Short story சம்பந்தி ஆச்சி

சிறுகதை:  சம்பந்தி ஆச்சி 
-----------------------------                           

“ஆச்சி, அமெரிக்கா போறியாமே?” என்று தன் தம்பி ஏகப்பன் கேட்டதும் கோமதி ஆச்சிக்கு வாயெல்லாம் பல்!

“எப்படீடா உனக்குத் தெரியும்?”

“சன் டிவி. .ஃப்ளாஷ் நியூஸில் பார்த்தேன்”

“விளையாடாமச் சொல்லுடா! யார் சொன்னாக - அயித்தான் சொன்னாகளா?”

“உன்னைக் கேட்காம அல்லது உனக்குத் தெரியாம அயித்தான் எப்படிச் சொல்வாக? உன் சின்ன மகள் உமாகுட்டியை ஸ்பென்சர் பிளாசாவில் பார்த்தேன். அவதான் சொன்னா!”

“ஆமான்டா, அடுத்த திங்கட்கிழமை ப்ளைட். நேற்றுத்தான் டிக்கெட் கன்ஃபர்ம் ஆச்சு! வாங்க வேண்டிய சாமான்லாம் நிறைய இருக்குடா?

நீ கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?

“உனக்கு கார் ஓட்டுறத்துக்கு ஆள் வேணும். அதானே!”

“ஏன் நான் சேது டிராவல்ஸ் ஆச்சிகிட்ட சொல்லி வண்டி எடுத்துக்க மாட்டேனா? நீ வந்தா செலக்சனுக்கு உதவியா இருக்கும்டா. அதான்
வா’ங்கிறேன்.”

“ஆகா, வந்தாப் போச்சு. அமெரிக்காவில இருந்து திரும்பி வரும்போது அங்கேயுள்ள சாக்கிலேட் குப்பைகளை எல்லாம் அள்ளிக்கிட்டு
வராம, ஏதாவது உருப்படியா வாங்கிக்கிட்டுவா. எனக்கு ஒரு ஐபேட். உன் கணக்கிலே! அதோட அமெரிக்கா போனா என்ன செய்யணும்  தெரியுமா? சாப்பிடற நேரத்தைத்தவிர மற்ற நேரத்தில வாயைத் திறக்காதே!”

“ஏன்டா?”

“நீ ஒன்னும் ஊர் சுத்திப் பாக்கப் போகலை. உன் மகளுக்குப் பிரசவம். உதவிக்காகப் போறே. வார்த்தைக்கு வார்த்தை இங்கே  அய்த்தான்கிட்ட பேசற மாதிரி அங்கே பேசினா, மாப்பிள்ளைக்கு மண்டை காய்ஞ்சு போயிடும். எந்த மாப்பிள்ளைக்கும் மாமியாரையும்,  மாமனாரையும் ஆரம்பத்தில் பிடித்துப்போனதா சரித்திரம் கிடையாது. அதனால வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லது”

“எனக்கு ஏன்தான் இந்த கெட்ட பெயரோ? நான் வேணும்னா பேசறேன்? ஆனா, எதைப் பேசினாலும் தப்பாப் போகுதுடா? அது ஏன்?”

“ஆங்..அதுதான் பாயின்ட். உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில தலையிடாதே! இரண்டாவது யாரும் கேட்கிறதுக்கு முன்னடியே

யோசனை சொல்றேன்னு உனக்குத் தோணுறதை எல்லாம் சொல்லி வைக்காதே! அயித்தான் லூஸ் டாக்ஸே பேச மாட்டார் பார்த்தியா? அது
மாதிரி நீயும் பேசாம - அதாவது லூஸ் டாக் இல்லாமல் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது”

“சந்தடி சாக்கில லூஸ்டாக்ன்னுட்டே...வருத்தமா இருக்குடா?”

“நமக்குள்ள வருத்தம் வந்தா உடனே போய்விடும். மாப்பிள்ளைகிட்டே அது வராம பார்த்துக்க..” என்று சொல்லிக்கொண்டே அவன்  நிற்காமல் கிளம்பிப் போய்விட்டான்.

                            +++++++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்த நாள் காலை.

கேட்டுக்கொண்டபடி ஏகப்பன் வந்து நின்றான்.

"ஆச்சி, உங்க வீட்டுக் கார்ல நிறைய சாமானை ஏற்ற முடியாது. அதனால் என் ஃபிரண்டோட டவேரா வண்டியை எடுத்துக்கிட்டு  வந்திருக்கேன். சீக்கிரமா புறப்படு, போகலாம்."

"கொஞ்சம் பொறுடா, பயணத்தில ஒரு மாறுதல் இருக்கு. நான் போகலை. ப்ளேன் டிக்கெட்டைக் கான்சல் செய்ய வேண்டியதுதான்"

"ஏன், என்ன ஆச்சு?"

"நேத்து சாயங்காலம் சாலா வந்திருந்தா.."

"யாரு, வில்லிவாக்கம் விசாலாட்சியா?"

"ஆமா!"

"அந்த ஆச்சி வந்தா, கலக்கிவிட்டுட்டுப் போயிருமே!"

"என்னை மாதிரி எல்லோருக்கும் அவ நல்லதுதான் செய்வா! ஆனா கடைசியில கெட்ட பேருதான் மிஞ்சும்!"

"அந்த ஆச்சி உன் அமெரிக்கப் பயணத்தைப் பத்தி என்ன சொன்னாகன்னு சொல்லு. அதுக்கப்புறம், அது நல்லதா, கெட்டதான்னு நான்  சொல்றேன்"

"கோமதி நீ எதுக்காக இப்பப் போறே? அதான் உன் சம்பந்தி ஆச்சி அங்க போயி மூனு மாசமா டேரா போட்டிருக்கான்னு சொல்றியே,  அவளே பிரசவத்தையும் பார்க்கட்டும், அதுக்கப்புறமும் உக்காந்து பச்சைப் பிள்ளையையும் பாத்துக்கட்டும். இன்னும் மூனு மாசம் கழிச்சு  அவ வந்ததுக்கப்புறம் நீ போங்கிறா”

“ஏனாம்”

“இன்னும் பத்து நாள்ல குழந்தை பிறந்த கையோட மகாராணி மாதிரி அவ்க புறப்பட்டு வந்துட்டாகன்னா - பிறக்கிற பச்சைக் குழந்தையோட நீதான் அவதிப்படணும். அதோட பிரசவ லீவு முடிஞ்சு வேலைக்குப் போகிற உன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் நீதான்  சமைத்துப்போடனும் அப்படீங்கறா”

“அதுக என்ன ஊராவிட்டுப் பிள்ளைகளா? நம்ம வீட்டுப் பிள்ளைகள்தானே? உன் மகளும், மாபிள்ளையும்தானே?  பார்த்தா என்ன தப்பாம்?”

“கொள்ளுக்கு மட்டும் அவ வாயைக்காட்டுவா? கடிவாளத்துக்கு நீ வாயைக் காட்டணுமா? என்கிறாள். எனக்கும் நியாயமாத்தான் தோணுது!”

“எனக்கு ஒன்னும் புரியலை. உங்க மாதிரி வயசான சில ஆச்சிமார்களுக்கே தர்ம நியாயமெல்லாம் தனியா இருக்கு. உனக்குத் தோன்றபடி செய்” என்று சொன்னவன், புறப்பட்டுப் போய்விட்டான்

                         ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                                  
தன் அலுவலக வேலையாக தில்லிக்குச் சென்றிருந்த கோமதி ஆச்சியின் கணவர் கிருஷ்ணன் செட்டியார், அன்று மாலை திரும்பிவிட்டார். அவர் வந்ததும் வராததுமாக வீட்டிற்குள் நுழைந்த சற்று நேரத்திற்கெல்லாம்,
ஆச்சி தன் முடிவைச் சொன்னவுடன், கோபமே வராத அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“உன் முடிவு எனக்கு உசிதமாகப் படவில்லை. திட்டமிட்டபடி நீ புறப்பட்டுச் செல்வதுதான் நல்லது. நம் பெண்ணின் நிலைமையை  நினைத்துப்பார். அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணாதே!”

“இதில் தர்ம சங்கடத்திற்கு  என்ன இருக்கிறது?”

“அவர்கள் கேட்டால் என்ன சொல்லுவாய்?”

“வரமுடியாததற்கு என்ன சொல்ல வேண்டும்? என் உடல் நிலையைச் சொல்லுவேன். எனக்கு சர்க்கரை நோய் இருப்பது அனைவருக்கும்
தெரியும். இப்போது குறைந்த ரத்த அழுத்த நோயும் சேர்ந்து கோண்டுவிட்டது. இரண்டு முறை மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிம் காட்டி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவேன்”

“அது பொய்தானே? சொல்லும் பொய்க்கெல்லாம் தெய்வம் துணைக்கு வராது. அது அப்படியே நடந்துவிட்டால் என்ன செய்வாய்? யார் அவதிப்படுவது? நீ போகவில்லை என்றால், நான் போகிறேன். டிகெட்டை எனக்கு மாத்தி வாங்கச் சொல்லு!”

“நீங்கள் போய் என்ன செய்வீர்கள்? பொம்பிள்ளை செய்ற வேலையை எல்லாம் நீங்கள் செய்ய முடியுமா?”

“வேலையில் பொம்பிள்ளை வேலை, ஆம்பிள்ளை வேலை என்று எதுவும் கிடையாது. ஏன் இங்கே நான் செய்ததில்லையா? அங்கே போய்  என் மகளுக்காக அதைச் செய்கிறேன்”

“ஏன் இடக்காகப் பேசுகிறீர்கள்?”

“நான் ஒன்றும் இடக்காகப் பேசவில்லை. நீதான் எல்லாவற்றையும் புரியாமல் உன் மனம்போனபடி செய்கிறாய். முதலில் போகிறேன் என்று சொன்னாய். விசா, விமானப் பயணச் சீட்டு என்று எல்லாம் வந்த பிறகு, போகவில்லை என்கிறாய். அது இடக்கு இல்லையா? மகளுக்குத்  திருமணம் செய்து கொடுத்ததினால், சம்பந்தி ஆச்சியும் நம் வீட்டுப் பெண்தான். என் தங்கச்சி என்று வைத்துக்கொள். முதலில் உன் தன் முனைப்பை எல்லாம் விட்டொழி. எல்லோரையும் நேசிக்கக் கற்றுக்கொள். நேசமும், பாசமும் இருக்கும் இடத்தில், எந்தப் பிரச்சினையும்  தலை எடுக்காது. எடுத்தாலும் அது பெரிதாகத் தெரியாது. உனக்குப் பிறந்த இடத்தில் சகோதரிகள் இல்லை. வாழ்க்கைப்பட்டு வந்த இடத்தில் நாத்தினார்களும் இல்லை. தன்னிச்சையாக இதுவரை இருந்துவிட்டாய். இனிமேலும் இருக்காதே. உன்னை நீ மாற்றிக்கொள்.
அடி வாங்க வாங்கத்தான் இரும்பு வளைந்து கொடுக்கும். வளையும் இரும்புதான் எல்லா வேலைகளுக்கும் பயன்படும். வயசாக வயசாக
பக்குவம் வரவேண்டும். பக்குவம் வராத மனித வாழ்க்கை கடைசியில் பயன்படாது. உன் முடிவை மாற்றிக்கொள். புறப்பட்டுப்போகிற வழியைப் பார்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னவர் எழுந்து போய்விட்டார்.

ஆச்சிக்குச் செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. செட்டியார் சொல்லிவிட்டுச் சென்ற ஒவ்வொரு வார்த்தையும் காதில் திரும்பத்
திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவும் ’தன்னிச்சை’ என்று அவர் சொன்ன சொல் பலமாக ஒலித்தது.

கோமதி ஆச்சி தன்னிலைக்குவர அரை மணி நேரம் ஆயிற்று.

அதற்குள் வாங்கிய சொல்லடியால் மனம் பக்குவப்பட்டிருந்தது.

அப்புறம்?

அப்புறம் ஒன்றுமில்லை. வாங்கிய பயணச்சீட்டின்படி, ஆச்சி அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
-------------------------------------
அடிக்குறிப்பு: அடியவன் எழுதி, 20.7.2012ம் தேதியன்று மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை  இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

32 comments:

சரண் said...

நேசம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் தலை எடுக்காது. - சத்தியமான வார்த்தைகள்.

சாலையில் செல்லும்போது நம் வாகனத்தில் குறுக்கே யாராவது எக்குத்தப்பாக வந்துவிட்டால் அவர் மீது 'ஏன்யா...அறிவில்லை' என்று பாய முயல்கிறோம். அதுவே நம் உறவினர் அல்லது நண்பர் என்றால், என்ன மாப்ளே ரோட்ட ப்ளாக் பண்றீங்க என்று சிரித்துக்கொண்டே விலகிப்போகிறோம்.

உறவை மேம்பட வைக்கும் சிந்திக்கத்தூண்டும் சிறுகதை.

ஜி ஆலாசியம் said...

ஒரு பத்து ரீல் கொண்ட சிரியப் படம் பார்த்தது போன்று இருந்தது...

மிகவும் அருமை.. விறுவிறு என்று போனது...

மனைவியின் குணம் அறிந்து அமைதியாகப் போகும் கிருஷ்ணன் செட்டியார்... அவரின் அமைதியின் அர்த்தத்தை அவரின் மனைவியைப் பற்றிய பிறப்பு வளர்ப்பு மற்றும் புகுந்த வீட்டு நிலை அனைத்தையும் மனதில் கொண்டு மனைவியின் இயல்பையும் மனதிலே கொண்டு அனுசரித்து போனவர்...

மிகவும் அழகாக கோபப் பட்டு ஆச்சிக்கு அறவுரை கூறியது அற்புதம்....

///“நமக்குள்ள வருத்தம் வந்தா உடனே போய்விடும். மாப்பிள்ளைகிட்டே அது வராம பார்த்துக்க..” ///

///சம்பந்தி ஆச்சியும் நம் வீட்டுப் பெண்தான். என் தங்கச்சி என்று வைத்துக்கொள். ///

///சாக்கிலேட் குப்பைகளை எல்லாம் அள்ளிக்கிட்டு
வராம, ஏதாவது உருப்படியா வாங்கிக்கிட்டுவா. ///

////எந்த மாப்பிள்ளைக்கும் மாமியாரையும், மாமனாரையும் ஆரம்பத்தில் பிடித்துப்போனதா சரித்திரம் கிடையாது. அதனால வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லது”///


///வயசாக வயசாக
பக்குவம் வரவேண்டும். பக்குவம் வராத மனித வாழ்க்கை கடைசியில் பயன்படாது. உன் முடிவை மாற்றிக்கொள். புறப்பட்டுப்போகிற வழியைப் பார்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னவர் எழுந்து போய்விட்டார்.////

சிறு சிறு பனித்தூரல்களாய்...மிகவும் அழகாக; மிகவும் ஆழமான விசயங்களை அத்திப் பழத்தை தேனில் நனைத்தது போன்று அருமையாக வடித்துள்ளீர்கள்.

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Thanjavooraan said...

திருமண பந்தங்கள் இரு குடும்பங்களை ஒன்றிணைக்கின்றன. அப்படி இணையும் குடும்ப உறுப்பினர்கள் ஒரே மாதிரியான அலைவரிசையில் இருந்தால் மோசமில்லை. அப்படியில்லையென்றால் வம்புதான். ஒருவருக்கொருவர் தான் உயர்வா, சம்பந்தி உயர்வா எனும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், பெண்ணின் தாயாருக்குப் (பொதுவாக) "பொசசிவ்" உணர்வு மிகுந்து மாப்பிள்ளை வீட்டார் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொள்வார்கள். மாப்பிள்ளையின் தாய் தந்தையரும் மருமகள் என்றால் இளக்காரமாக நினைப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாமனார், மருமகள் ஏதாவது குடும்பப் பிரச்சினையில் தலையிட்டால், உடனே ஆங்கிலத்தில் "யூ ஹேவ் நோ ரைட்" என்பார். பின்னர் மருமகள் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை என்றும் புகார் படிப்பார். இது ஏன்? நியாயம் பேச உரிமையில்லாத மருமகள் இவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமா? இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள உலகில் ஆசிரியர் ஐயாவின் கதை ஒரு நல்ல வழியைக் காண்பிக்கிறது. உறவுகளைச் சொந்தமாக நினைப்பதும், விட்டுக் கொடுப்பதும் அவசியம் என்கிறது கதை. மனிதர்கள் உணர்ந்தால் சரி. நல்ல கதை ஐயா, வாழ்த்துக்கள்.

Prasanna Venkatesh said...

Very Nice ...

மகள் பிரசவம் - அம்மா போக யோசித்தல் ...
என்ன செய்வது, இது போல நடக்கவும் செய்கிறது ...(சில நேரங்களில்)

Like this Story - Family Tonic for NRI's

thanusu said...

சொந்த வேலைகள் காரனமாக என்னால் சில நாட்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.

ஒரு சின்ன சம்பவம் பலமான அர்தங்களுடன், இது வாத்தியாரின் ஸ்பெஷாலிடி அது இதிலும் இருக்கிறது.

"வயசான ஆச்சிமார்களுக்கு தர்மம் நியாயம் தனியாக இருக்கு"

"பொய்க்கெல்லாம் தெய்வம் துனைக்கு வராது" போன்றவை நடைமுறை வார்த்தைகளாக இருந்தாலும் பலமான பொருள் கொண்டவை.

"அடி வாங்க வாங்கத்தான் இரும்பு வளைந்து கொடுக்கும். வளையும் இரும்புதான் எல்ல வேலைக்கும் பயன்படும் வயது ஆக ஆக..........." இந்த வரிகள் கதையை மிக உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

பொதுவாக நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ,நம்மை குழப்பிவிட நம் பக்கத்திலேயே இருப்பார்கள். தேவையே இல்லாமல் ஒரு எதிர்மறை கருத்தை சொல்வார்கள்.நங்கு கவனித்து பார்த்தால் நம் வாழ்கையிலேயே இப்படி நடந்திருக்கும்.

நல்ல கதை. நன்றிகள் அய்யா.

eswari sekar said...

vannakam.sir story arumai..

Udhaya Kumar said...

Guruvirkku vnakkam
present iyya

Nandri

kmr.krishnan said...

நல்லதோர் கதை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! இன்றைய‌ய தேதியில் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்து அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.வாத்தியார் 'டச்'உள்ள ஒரு கதைதான். மொழிநடையில் மண் வாசனை இக்கதையில் ஏனோ 'மிஸ்ஸிங்'.

மாணவர்மலர், ஞாயிறு மலர் தொடர்ந்திருந்தால் இதே போன்ற ஒரு சுய அனுபவம் எழுதியிருப்பேன்.

மண்வாசனைக் கதைகள்4ம் தொகுதி இப்போதுதான் அஞ்சலலில் வந்தது.மிக்க நன்றி.தொகை இங்குள்ள ஐ ஓ பி வங்கியில் செலுத்திவிடுகிறேன்.

அய்யர் said...

வருகை

seenivasan said...

Dear sir,

Super Story and always your stories are simple and making us to read several times.
thanks

G.Seenivasan.
bharuch
Gujarat.

arul said...

arumayana pathivu

renga said...

vanakkam ayya,
nalla kadhai. vazhkaikku thevayana pakkuvam, vittu koduthal, sakippu thanmai pondravai kadhayil velippadukiradhu.

Rajaganesh said...

Good Story. Thanks for the same.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சரண் said...
நேசம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் தலை எடுக்காது. - சத்தியமான வார்த்தைகள்.
சாலையில் செல்லும்போது நம் வாகனத்தில் குறுக்கே யாராவது எக்குத்தப்பாக வந்துவிட்டால் அவர் மீது 'ஏன்யா...அறிவில்லை' என்று பாய முயல்கிறோம். அதுவே நம் உறவினர் அல்லது நண்பர் என்றால், என்ன மாப்ளே ரோட்ட ப்ளாக் பண்றீங்க என்று சிரித்துக்கொண்டே விலகிப்போகிறோம்.
உறவை மேம்பட வைக்கும் சிந்திக்கத்தூண்டும் சிறுகதை./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சரண்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
ஒரு பத்து ரீல் கொண்ட சிரிய படம் பார்த்தது போன்று இருந்தது...
மிகவும் அருமை.. விறுவிறு என்று போனது...
மனைவியின் குணம் அறிந்து அமைதியாகப் போகும் கிருஷ்ணன் செட்டியார்... அவரின் அமைதியின் அர்த்தத்தை அவரின் மனைவியைப் பற்றிய பிறப்பு வளர்ப்பு மற்றும் புகுந்த வீட்டு நிலை அனைத்தையும் மனதில் கொண்டு மனைவியின் இயல்பையும் மனதிலே கொண்டு அனுசரித்து போனவர்...
மிகவும் அழகாக கோபப் பட்டு ஆச்சிக்கு அறவுரை கூறியது அற்புதம்....
///“நமக்குள்ள வருத்தம் வந்தா உடனே போய்விடும். மாப்பிள்ளைகிட்டே அது வராம பார்த்துக்க..” ///
///சம்பந்தி ஆச்சியும் நம் வீட்டுப் பெண்தான். என் தங்கச்சி என்று வைத்துக்கொள். ///
///சாக்கிலேட் குப்பைகளை எல்லாம் அள்ளிக்கிட்டு
வராம, ஏதாவது உருப்படியா வாங்கிக்கிட்டுவா. ///
////எந்த மாப்பிள்ளைக்கும் மாமியாரையும், மாமனாரையும் ஆரம்பத்தில் பிடித்துப்போனதா சரித்திரம் கிடையாது. அதனால வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லது”/// ///வயசாக வயசாக
பக்குவம் வரவேண்டும். பக்குவம் வராத மனித வாழ்க்கை கடைசியில் பயன்படாது. உன் முடிவை மாற்றிக்கொள். புறப்பட்டுப்போகிற வழியைப் பார்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னவர் எழுந்து போய்விட்டார்.////
சிறு சிறு பனித்தூரல்களாய்...மிகவும் அழகாக; மிகவும் ஆழமான விசயங்களை அத்திப் பழத்தை தேனில் நனைத்தது போன்று அருமையாக வடித்துள்ளீர்கள்.
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

கதையை ஆழமாகப் படித்து சிறப்பான தொரு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
திருமண பந்தங்கள் இரு குடும்பங்களை ஒன்றிணைக்கின்றன. அப்படி இணையும் குடும்ப உறுப்பினர்கள் ஒரே மாதிரியான அலைவரிசையில் இருந்தால் மோசமில்லை. அப்படியில்லையென்றால் வம்புதான். ஒருவருக்கொருவர் தான் உயர்வா, சம்பந்தி உயர்வா எனும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், பெண்ணின் தாயாருக்குப் (பொதுவாக) "பொசசிவ்" உணர்வு மிகுந்து மாப்பிள்ளை வீட்டார் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொள்வார்கள். மாப்பிள்ளையின் தாய் தந்தையரும் மருமகள் என்றால் இளக்காரமாக நினைப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாமனார், மருமகள் ஏதாவது குடும்பப் பிரச்சினையில் தலையிட்டால், உடனே ஆங்கிலத்தில் "யூ ஹேவ் நோ ரைட்" என்பார். பின்னர் மருமகள் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை என்றும் புகார் படிப்பார். இது ஏன்? நியாயம் பேச உரிமையில்லாத மருமகள் இவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமா? இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள உலகில் ஆசிரியர் ஐயாவின் கதை ஒரு நல்ல வழியைக் காண்பிக்கிறது. உறவுகளைச் சொந்தமாக நினைப்பதும், விட்டுக் கொடுப்பதும் அவசியம் என்கிறது கதை. மனிதர்கள் உணர்ந்தால் சரி. நல்ல கதை ஐயா, வாழ்த்துக்கள்.////

உங்களுடைய மேன்மையான வாழ்த்துக்களுக்கு நன்றி கோபாலன் சார்! அத்துடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Prasanna Venkatesh said...
Very Nice ...
மகள் பிரசவம் - அம்மா போக யோசித்தல் ...
என்ன செய்வது, இது போல நடக்கவும் செய்கிறது ...(சில நேரங்களில்)
Like this Story - Family Tonic for NRI's////

கதை பிடித்துள்ளது என்று பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி வெங்கடேஷ்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
சொந்த வேலைகள் காரனமாக என்னால் சில நாட்கள் வகுப்புக்கு வரமுடியவில்லை.
ஒரு சின்ன சம்பவம் பலமான அர்தங்களுடன், இது வாத்தியாரின் ஸ்பெஷாலிடி அது இதிலும் இருக்கிறது.
"வயசான ஆச்சிமார்களுக்கு தர்மம் நியாயம் தனியாக இருக்கு"
"பொய்க்கெல்லாம் தெய்வம் துனைக்கு வராது" போன்றவை நடைமுறை வார்த்தைகளாக இருந்தாலும் பலமான பொருள் கொண்டவை.
"அடி வாங்க வாங்கத்தான் இரும்பு வளைந்து கொடுக்கும். வளையும் இரும்புதான் எல்ல வேலைக்கும் பயன்படும் வயது ஆக ஆக..........." இந்த வரிகள் கதையை மிக உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.
பொதுவாக நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ,நம்மை குழப்பிவிட நம் பக்கத்திலேயே இருப்பார்கள். தேவையே இல்லாமல் ஒரு எதிர்மறை கருத்தை சொல்வார்கள்.நங்கு கவனித்து பார்த்தால் நம் வாழ்கையிலேயே இப்படி நடந்திருக்கும்.
நல்ல கதை. நன்றிகள் அய்யா./////

கதையை விரும்பிப் படித்து நல்லதொரு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி தனுசு!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vannakam.sir story arumai../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
Guruvirkku vnakkam
present iyya
Nandri/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
நல்லதோர் கதை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! இன்றைய‌ய தேதியில் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்து அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.வாத்தியார் 'டச்'உள்ள ஒரு கதைதான். மொழிநடையில் மண் வாசனை இக்கதையில் ஏனோ 'மிஸ்ஸிங்'.
மாணவர்மலர், ஞாயிறு மலர் தொடர்ந்திருந்தால் இதே போன்ற ஒரு சுய அனுபவம் எழுதியிருப்பேன்.
மண்வாசனைக் கதைகள்4ம் தொகுதி இப்போதுதான் அஞ்சலலில் வந்தது.மிக்க நன்றி.தொகை இங்குள்ள ஐ ஓ பி வங்கியில் செலுத்திவிடுகிறேன்.//////

உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
வருகை/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger seenivasan said...
Dear sir,
Super Story and always your stories are simple and making us to read several times.
thanks
G.Seenivasan.
bharuch, Gujarat.//////

உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
arumayana pathivu////

நல்லது. நன்றி அருளாரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger renga said...
vanakkam ayya,
nalla kadhai. vazhkaikku thevayana pakkuvam, vittu koduthal, sakippu thanmai pondravai kadhayil velippadukiradhu./////

உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Rajaganesh said...
Good Story. Thanks for the same.//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Parvathy Ramachandran said...

நல்லதொரு கதை தந்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய இளைய தலைமுறைக்குத்தான் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அது வளர்ப்புமுறை சார்ந்தது என்பதை எடுத்துச் சொன்ன விதம் அருமை. எதார்த்தமான நடை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி.

ananth said...

நாம் எப்போதும் பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும். குறுகிய சிந்தனைக்குள் உழன்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை, மிகவும் நன்றாக இருக்கிறது.

Bhuvaneshwar said...

Athellaam andhakkaalam Sir.......

If anyone advises his wife like settiyaar dis he had better be prepared to face dowry harassment case today.........

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
நல்லதொரு கதை தந்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய இளைய தலைமுறைக்குத்தான் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அது வளர்ப்புமுறை சார்ந்தது என்பதை எடுத்துச் சொன்ன விதம் அருமை. எதார்த்தமான நடை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி.//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!இதுபோன்ற பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும். ஊக்கம் கொடுக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
நாம் எப்போதும் பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும். குறுகிய சிந்தனைக்குள் உழன்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை, மிகவும் நன்றாக இருக்கிறது.//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆனந்த்!!இதுபோன்ற பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தாகும்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Bhuvaneshwar said...
Athellaam andhakkaalam Sir.......
If anyone advises his wife like settiyaar dis he had better be prepared to face dowry harassment case today........./////

இல்லை! ஒட்டு மொத்தமாக அப்படி குறைத்து மதிப்பிடக் கூடாது! இன்றும் அந்தக் கதையின் நாயகியைப் போல சிலர் உள்ளார்கள். நான் அறிவேன்!