மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.8.12

Greetings வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!

Greetings வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!

இன்று சுதந்திர தினம்.
நம் வகுப்பறை கண்மணிகள், வகுப்பறை நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------
வந்ததற்கு சும்மா போக வேண்டாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதைகளில் இரண்டை  என் சேகரிப்பு ஏடுகளில் இருந்து எடுத்து,
அவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
------------------------------------------------------------------------

1
சமர்ப்பணம்
கவிதையாக்கம்: கவிஞர். நா.காமராசன்
------------------------------
எனது கவிதை
சுதந்திரமாக இருக்கிறது.
ஆனால் -
எங்கள் சுதந்திரம்
கவிதையாக இல்லை!

ஒலிம்பிக் போட்டிகளில்
தங்கப் பதக்கம் பெறாமல்
அங்கே
அசோகச் சக்கரத்தை
அவமானப்படுத்தும்
விசித்திரமான
வீரர்கள் நாங்கள்....

அஸ்தமிக்காத
‘பிரிட்டிஷ் சூரியனை’
அஸ்தமிக்க வைத்தோம்
ஆனால்......
இப்போது எங்கள்
பெளர்ணமிகூட
அமாவாசை ஆகிவிட்டது!

எங்கள் தேசத்திற்கு
சுதந்திரம் வாங்குவதற்காகப்
பலபேர்
செத்துப் போனார்கள்!
சுதந்திரம் வந்தபிறகு
தேசமே
செத்துக் கொண்டிருக்கிறது!

ஒரு காவிய ஏடு.....
தேர்தல் காலங்களில் மட்டும்
விலாசம் எழுதப்படும்
வெள்ளைத் தாளாக
மாறிவிட்டது!

பல்கலைக்கழகங்கள்
வெறும் கனவுலகங்கள்!
படித்தவர்களுக்கு.....
சிறைச்சாலையில் மட்டுமே
மரியாதை கிடைக்கிறது!
அங்கே அவர்களுக்கு
’சிறப்பு வகுப்பு’ தரப்படுகிறது!

இருளிரவும் பனிமூட்டமும்
கனவுலக சஞ்சாரமும்
இங்கே சங்கமிக்கின்றன!
என்றாலும் எனது தேசத்தைநான் நேசிக்கிறேன்!

எத்தனையோ
முரண்பாடுகளுக்கு மேலாக
அசைக்க முடியாமல்
உறுதியாக நிற்கும்
எங்கள் தந்தையர் நாட்டிற்கு
கொடியில்லாமல்,
கொட்டு முரசில்லாமல்,
உணர்ச்சி வெறியின்றி
ஆழமான -
அமைதியான அன்பை
சமர்ப்பணம் செய்கிறேன்!
-- கவிஞர்.நா.சாமராசன்
----------------------------
2

கசக்கவில்லை!

அணைக்க ஒரு
அன்பில்லாத மனைவி,
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்,
வசிக்கச் சற்றும்
வசதியில்லாத வீடு,
உண்ண என்றும்
உருசியில்லா உணவு,
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்,
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை!
    - சண்முகசுப்பையா
குங்குமம் இதழ் 31.1.1982
++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. ஐயாவுக்கும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய சுதந்திரத்திரு நாள் வாழ்த்துக்கள்.

    சுதந்திரம் வந்ததாகவும் அதனை நாம் சரியாகப் பேணவில்லையென்றும் சுதந்திரம் வருவதற்கு முன்னரே 'தண்ணீர் விட்டோ வார்த்தோம் சர்வேசா' என்னும் பாடலில் மகாகவி பாரதியார் கூறிவிட்டார்.

    மஹாத்மா காந்திஜியும் 'பெற்ற சுதந்திரம் அரசியல் சுதந்திரம் மட்டுமே;நாம் பொருளாதார சுதந்திரமும், ஆன்ம சுதந்திரமும் பெறவேண்டும்' என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.சுதந்திரப் போராட்டத்தின் போதே மூன்று வகையான சுதந்திரங்களையும் ஒட்டியே தன் வேலைத்திட்டங்களை வகுத்தார்.
    கைத்தொழில், கைராட்டை ஆகியவை பொருளாதார சுதந்திரத்திற்கும், உண்மையான உற்பத்தித் திறனுக்கும் ஒரு குறியீடாக ஆக்கிவைத்தார்.

    அகிம்சை, சத்தியம்,பகவத் கீதை, உண்ணாநோன்பு, தினசரி பிரார்த்தனை ஆகியவைகளை ஆன்ம விடுதலைக்கான வழிகளாகக் காட்டினார்.

    உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகியவை அரசியல் இயக்கத்தினை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான படிப்பினையாகக் கொடுத்தார்.

    இன்றைய தேதியில் அகில உலகத்தையும் காந்திஜி திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டு இருக்கிறார். ஆம். உலக அளவில் மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டெலாவும், ஆங் சூயியும், தலாய் லாமாவும், காந்தியின் வழிமுறைகளை ஏற்று தங்கள் நாடுகளில் சிறிது மாற்றங்களைக்கொண்டு வந்து இருக்கிறார்கள்.

    http://aalosanai.blogspot.in/ என்ற தன் வலைப்பூவில் வகுப்பறை சகோதரி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தங்கள் இல்லத்து முன்னோர்களின் தியாகம் பற்றி எழுதியுள்ளார்கள். அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்.

    என் தந்தையார் பற்றி இங்கே படியுங்கள்.http://gandhiashramkrishnan.blogspot.in

    ReplyDelete
  2. vanakkam ayya,
    sudhandhira dhina nalvazhthukkal.
    kavidhaigal arumai. nanri

    ReplyDelete
  3. அய்யா காலை வணக்கம் . தங்களுக்கும் எங்களது சுதந்திர தின வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. வண்ணங்களால் இல்லை இத் தினம் நல்
    எண்ணங்களால்..(அமையவேண்டும்)

    சுதந்திரத்தை பற்றி பேசும் போது
    சுயமாக நாம் அடிமைதனத்தை நோக்கியே..(செல்கிறோம்)

    எல்லோரிடமும் ஏதேனும் ஒரு நல்விஷயமுண்டு
    ஏற்றுக் கொள்ள வேண்டும் நல் பண்பு கொண்டு

    வாழ்த்துக்கள் சொல்ல வரவில்லை
    வணக்கம் சொல்லியே மகிழ்கிறோம்

    ReplyDelete
  5. காலை வணக்கம் ஐயா.
    கவிதைகள் நன்று.
    இரண்டாவது கவிதை நீங்கள் எழுதியதா? சின்ன வயசில் இருந்தே இந்த கவிதை தெரியும்........ பிடிக்கும் கூட......
    கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்து காலத்தை ஒட்டி விட்டேன்...... இப்போ தான் நீங்கள் என தெரிகிறது...... அவ்வ்வ்வவ் (ஒரே ஃபீலிங்க்ஸ்)
    :)

    ReplyDelete
  6. Good Morning !! Happy independence day to you sir

    ReplyDelete
  7. மிகவும் அருமையான கவிதைகள்! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
    -‍ஜவஹர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  8. வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். நல்ல கவிதைகள் படிக்கத் தந்தமைக்கு நன்றி. நாளை நமதாகும் என்ற நம்பிக்கையோடு நிகழ்காலத் துன்பங்களைக் கடக்க வேண்டுவதன் அவசியத்தை இரு கவிதைகளும், குறிப்பாக இரண்டாம் கவிதை உணர்த்துவதாகப் பட்டது. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  10. Yes Sir!

    --
    Life is beautiful !!!

    ¨`•.•´¨) Always
    `•.¸(¨`•.•´¨) Keep
    (¨`•.•´¨)¸.•´ Smiling!
    `•.¸.•

    Thanks & Reg
    Kannan Seetharaman
    Qatar + 974 66762664

    ReplyDelete
  11. நான் தங்களுக்கு முகவரியை அனுப்புகிறேன்...
    அதைப் போலவே கரூர் முகவரிக்கே அனுப்பி விடுங்கள். நன்றிகள் ஐயா!

    இன்று தாமதமாக வந்து இருக்கிறேன்.
    அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    அருமையானக் கவிதைகளை!!!
    இல்லை ஆழமான ஆதங்கத்தை அழகாக சொல்லி இருக்கிறார் நா.காமராசர்.

    சுதந்திரம் அது எவ்வளவு அளவு இந்திடர்களுக்கு கிடைத்திருக்கிறது?!!
    அதை இந்தியாவை விட்டு வெளியே வந்து பார்த்தால் மிகவும் தெளிவாகப் புரியும்.

    என்னினும், இந்தியர்களின் அடிமனதில் புரையோடிக் கிடக்கும் அடிமைத்தனம் / அடிமைப் படுத்தும் தனம் தான் முழுமையான உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் செய்திருக்கிறது.

    ''என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்'' என்றார் கவியரசு!!!
    ஆம், எல்லாம் இருக்கிறது ஆனால் அவைகள் சீரமைக்கப் படுவதில்லை.

    மலேசியா ஒலிம்பிக்கில் தங்கம் ஒன்றை கூட வாங்கவில்லை என்று அந்த நாட்டு மந்திரி மன்னிப்பு கோருகிறார். மக்களிடம்!
    காமன்வெல்த் போட்டியினை நடத்தி --------??!!

    மகாகவி... சுதந்திரத்தை மூன்றாக வகைப் படுத்தினார்.....
    முதலில் நாட்டுக்கு சுதந்திரம்!
    அதன் பின்பு... பெண்களுக்கு சுதந்திரம்,
    அடுத்ததாக ஆன்ம சுதந்திரம் என்று.

    முதலாவது கொடுக்கப் பட்டுவிட்டது..
    இரண்டாவது இன்னும் எடுத்துக் கொள்ளப் படவில்லை.??!!
    அப்படி இரண்டாவது உண்மையில் கிடைக்கும் போது
    மூன்றாவதைப் பெற தானாக வழி பிறக்கும்!!!

    சுதந்திரக் காற்றை நமக்கு அளித்து தனது உடல் பொருள் ஆவிகளை துறந்த பெருமக்களான தியாயிகள் யாவரையும் நன்றியோடு நினைத்து அவர் தாம் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  12. Blogger kmr.krishnan said...
    ஐயாவுக்கும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய சுதந்திரத்திரு நாள் வாழ்த்துக்கள்.
    சுதந்திரம் வந்ததாகவும் அதனை நாம் சரியாகப் பேணவில்லையென்றும் சுதந்திரம் வருவதற்கு முன்னரே 'தண்ணீர் விட்டோ வார்த்தோம் சர்வேசா' என்னும் பாடலில் மகாகவி பாரதியார் கூறிவிட்டார்.
    மஹாத்மா காந்திஜியும் 'பெற்ற சுதந்திரம் அரசியல் சுதந்திரம் மட்டுமே;நாம் பொருளாதார சுதந்திரமும், ஆன்ம சுதந்திரமும் பெறவேண்டும்' என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.சுதந்திரப் போராட்டத்தின் போதே மூன்று வகையான சுதந்திரங்களையும் ஒட்டியே தன் வேலைத்திட்டங்களை வகுத்தார்.
    கைத்தொழில், கைராட்டை ஆகியவை பொருளாதார சுதந்திரத்திற்கும், உண்மையான உற்பத்தித் திறனுக்கும் ஒரு குறியீடாக ஆக்கிவைத்தார்.
    அகிம்சை, சத்தியம்,பகவத் கீதை, உண்ணாநோன்பு, தினசரி பிரார்த்தனை ஆகியவைகளை ஆன்ம விடுதலைக்கான வழிகளாகக் காட்டினார்.
    உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகியவை அரசியல் இயக்கத்தினை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான படிப்பினையாகக் கொடுத்தார்.
    இன்றைய தேதியில் அகில உலகத்தையும் காந்திஜி திரும்பிப்பார்க்க வைத்துக்கொண்டு இருக்கிறார். ஆம். உலக அளவில் மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டெலாவும், ஆங் சூயியும், தலாய் லாமாவும், காந்தியின் வழிமுறைகளை ஏற்று தங்கள் நாடுகளில் சிறிது மாற்றங்களைக்கொண்டு வந்து இருக்கிறார்கள்.
    http://aalosanai.blogspot.in/ என்ற தன் வலைப்பூவில் வகுப்பறை சகோதரி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தங்கள் இல்லத்து முன்னோர்களின் தியாகம் பற்றி எழுதியுள்ளார்கள். அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்.
    என் தந்தையார் பற்றி இங்கே படியுங்கள்.http://gandhiashramkrishnan.blogspot.in/////

    இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் மக்களெல்லாம் பணத் தேடலில் உள்ளார்கள். காந்தியைப் பற்றி நினைப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நெரமில்லை. அது வருந்துவதற்கு உரியதுதான். என்ன செய்வது?

    ReplyDelete
  13. /////Blogger renga said...
    vanakkam ayya,
    sudhandhira dhina nalvazhthukkal.
    kavidhaigal arumai. nanri/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம் . தங்களுக்கும் எங்களது சுதந்திர தின வாழ்த்துக்கள் .////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////Blogger அய்யர் said...
    வண்ணங்களால் இல்லை இத் தினம் நல்
    எண்ணங்களால்..(அமையவேண்டும்)
    சுதந்திரத்தை பற்றி பேசும் போது
    சுயமாக நாம் அடிமைதனத்தை நோக்கியே..(செல்கிறோம்)
    எல்லோரிடமும் ஏதேனும் ஒரு நல்விஷயமுண்டு
    ஏற்றுக் கொள்ள வேண்டும் நல் பண்பு கொண்டு
    வாழ்த்துக்கள் சொல்ல வரவில்லை
    வணக்கம் சொல்லியே மகிழ்கிறோம்/////

    நீங்கள் என்ன சொன்னாலும் நல்லதுதான். நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  16. /////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம் ஐயா.
    கவிதைகள் நன்று.
    இரண்டாவது கவிதை நீங்கள் எழுதியதா? சின்ன வயசில் இருந்தே இந்த கவிதை தெரியும்........ பிடிக்கும் கூட......
    கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்து காலத்தை ஒட்டி விட்டேன்...... இப்போ தான் நீங்கள் என தெரிகிறது...... அவ்வ்வ்வவ் (ஒரே ஃபீலிங்க்ஸ்) :)/////

    எழுதியவர் தனது பெயரை சண்முக சுப்பையா என்று குறிப்பிட்டிருக்காரே சுவாமி - பார்க்கவில்லையா நீங்கள்?

    ReplyDelete
  17. /////Blogger Balaji said...
    Good Morning !! Happy independence day to you sir/////

    நல்லது. நன்றி பாலாஜி!

    ReplyDelete
  18. /////Blogger Jawahar Govindaraj said...
    மிகவும் அருமையான கவிதைகள்! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
    -‍ஜவஹர் கோவிந்தராஜ்/////

    தங்களுடைய பாராட்டுக்கள் எழுதியவர்களையே சேரும்!

    ReplyDelete
  19. //////Blogger Parvathy Ramachandran said...
    வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். நல்ல கவிதைகள் படிக்கத் தந்தமைக்கு நன்றி. நாளை நமதாகும் என்ற நம்பிக்கையோடு நிகழ்காலத் துன்பங்களைக் கடக்க வேண்டுவதன் அவசியத்தை இரு கவிதைகளும், குறிப்பாக இரண்டாம் கவிதை உணர்த்துவதாகப் பட்டது. மிக்க நன்றி.//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...
    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  21. /////Blogger Maaya kanna said...
    Yes Sir!
    --
    Life is beautiful !!!
    Thanks & Reg
    Kannan Seetharaman/////

    நம் மனது அழகாக இருந்தால், வாழ்க்கையும் அழகாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  22. //////Blogger ஜி ஆலாசியம் said...
    நான் தங்களுக்கு முகவரியை அனுப்புகிறேன்...
    அதைப் போலவே கரூர் முகவரிக்கே அனுப்பி விடுங்கள். நன்றிகள் ஐயா!
    இன்று தாமதமாக வந்து இருக்கிறேன்.
    அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்!
    அருமையானக் கவிதைகளை!!!
    இல்லை ஆழமான ஆதங்கத்தை அழகாக சொல்லி இருக்கிறார் நா.காமராசர்.
    சுதந்திரம் அது எவ்வளவு அளவு இந்திடர்களுக்கு கிடைத்திருக்கிறது?!!
    அதை இந்தியாவை விட்டு வெளியே வந்து பார்த்தால் மிகவும் தெளிவாகப் புரியும்.
    என்னினும், இந்தியர்களின் அடிமனதில் புரையோடிக் கிடக்கும் அடிமைத்தனம் / அடிமைப் படுத்தும் தனம் தான் முழுமையான உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் செய்திருக்கிறது.
    ''என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்'' என்றார் கவியரசு!!!
    ஆம், எல்லாம் இருக்கிறது ஆனால் அவைகள் சீரமைக்கப் படுவதில்லை.
    மலேசியா ஒலிம்பிக்கில் தங்கம் ஒன்றை கூட வாங்கவில்லை என்று அந்த நாட்டு மந்திரி மன்னிப்பு கோருகிறார். மக்களிடம்!
    காமன்வெல்த் போட்டியினை நடத்தி --------??!!
    மகாகவி... சுதந்திரத்தை மூன்றாக வகைப் படுத்தினார்.....
    முதலில் நாட்டுக்கு சுதந்திரம்!
    அதன் பின்பு... பெண்களுக்கு சுதந்திரம்,
    அடுத்ததாக ஆன்ம சுதந்திரம் என்று.
    முதலாவது கொடுக்கப் பட்டுவிட்டது..
    இரண்டாவது இன்னும் எடுத்துக் கொள்ளப் படவில்லை.??!!
    அப்படி இரண்டாவது உண்மையில் கிடைக்கும் போது
    மூன்றாவதைப் பெற தானாக வழி பிறக்கும்!!!
    சுதந்திரக் காற்றை நமக்கு அளித்து தனது உடல் பொருள் ஆவிகளை துறந்த பெருமக்களான தியாயிகள் யாவரையும் நன்றியோடு நினைத்து அவர் தாம் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.
    நன்றிகள் ஐயா!/////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com