மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.8.12

Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)! Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடியாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அது விரிவான பாடம். இப்போது நேரமில்லை. இன்னொரு நாள எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

ஒரே ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்லி, இன்றைய பாடத்தை நிறைவு செய்கிறேன்.

ஜாதகத்தில் லக்கினாதிபதியும், மனகாரகனும் வலுவாக இருப்பது முக்கியமாகும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

40 comments:

kmr.krishnan said...

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனா அங்கேயும் ஒரு கொடுமை கொடி பிடித்துக் கொண்டு வந்து வரவேற்றதாம்"என்பது ஒரு சொல்லடைதான்.

துன்பம் எப்போதும் தொட்ர்கதைதான்; முடிவே இல்லாதது.

லக்னதிபதியும் மனோகாரகனுமான சந்திரன் லக்னத்திலேயே அமர்ந்தார். ஆட்சியில் இருப்பதால் அவர் வலுவாக இருப்பதாக நினைக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.அதாவது தன் வீட்டிலேயே இருப்பதும் ஆகாதாமே?!
சுய வர்கத்தில் 4 தான் வாங்குகிறார் சந்திரன்.2 முறை மனநல மருத்துவரைக் காண வைத்தார்.

"இந்த தசா முடியும் வரை இந்தக் கஷ்டம் இருக்கும்" என்றாராம் சோதிடர்.
"அப்புறம் சரியாகிவிடுமா?"என்று கேட்டார் அம்மாஞ்சி.
"அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் உங்களுக்கு கஷ்டம் பழகிப் போய் இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விடுவீர்கள்"என்றாராம் சோதிடர்.
இந்தக் கருத்தை அழகாக விரித்து எழுதியுள்ளீர்கள்.நன்றாக உள்ளது.

எழுத்து என்பது படிப்பவரை துவக்கத்திலிருந்து இறுதிவரை படிக்கத் தூண்ட வேண்டும். நடுவிலேயே பக்கத்தைப் புரட்டும் படி இருக்கக் கூடாது.உங்கள் நடையின் வெற்றியே அது இறுதிவரை வாசகனை இட்டுச் செல்கிறது.சுவாரஸ்யம் குன்றாமல் வெற்றி நடை போடுகிறது.
kmr.krishnan said...

http://ezhuththuppizhai.blogspot.in/2012/08/blog-post.html?spref=fb

மேற்கண்ட கட்டுரையைப் படித்துப் பாருங்கள் துன்பம் என்றால் என்ன என்று புரியும்

சரண் said...

ஒருவனுக்கு அளவுக்கு அதிகமாக கஷ்டம் வந்து அதை தாங்க முடியாத அளவுக்கு மிக பலவீனமாக இருக்கிறான் என்றால் முன் ஜென்மத்தின் பாவக்கணக்கில் மீதம் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உண்டு. மற்றபடி அதை சமாளிக்க ஏதாவது வழி காட்டப்பட்டிருக்கும் என்பது இறைவனின் நியதி. இதை நிச்சயம் அஷ்டகவர்க்கத்தில் கண்டு பிடித்துவிடலாம் என்று புரிகிறது ஐயா.

thanusu said...

இன்றைய பதிவு ஜோதிட சம்பந்தமாக இருந்தாலும் பதிவின் முக்கால் பகுதி வரை ஒருமன வளர் கட்டுரைப்போலவே இருந்தது. கஷ்டம், பிரச்சினை தீராது.அதனை எதிர் கொன்டே ஆக வேண்டும் அதுதான் வாழ்க்கை. ரத்த ஓட்டமும் சுவாசமும் போல என சொன்னது அருமை.

thanusu said...

ஆனந்த முருகன் எங்கிருந்துதான் சேகரிக்கிறாரோ, தொடருங்கள்.


Bhuvaneshwar said...

காலை வணக்கம் ஐயா.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஒரு ஆன்றோர் வாக்கினை எனக்கு நினைவு படுத்திய பதிவு. நல்ல பாடம்.


I know it's extremely hard to accept, but I think it's true: When your peers are seemingly doing well in life and you think you are struggling, don't worry - you are earning that valuable experience that they are missing out on, and that experience will be handy tomorrow! They may be richer now, but you would be wiser tomorrow!

நன்றிகள்,
புவனேஷ்

ஜி ஆலாசியம் said...

பிரச்சனை! பிரச்சனை! பிரச்சனை!
பிரச்னைக்கு மட்டுமே இல்லைப் பிரச்சனை
பிரச்சனையில்லாவர் தான் யாருண்டு கூறதனை!
படைத்தவனே அனைத்தையும் அறிவான் -இங்கே
விடைத் தெரிந்தவர் வேறுயாரும் உண்டோ?

கடைத்தெருவில் விற்கிறதா காசுகொடுத்து
வாங்கிடுவோம் மனித வாழ்வின்; வரும்
பிரச்சனை என்னும் பிறவி நோயதுதீர
மருந்தொன்றை தேடியலைந்தே!

பிரச்சனை என்பது முன்வினை என்போம்
ஒருத்தனை வந்துருத்தும் பிரச்சனை யாவும்
பொறுத்ததனை சமாளித்து சிறப்புடன் வாழ;
பிரச்சனை போக, பிராத்தனை செய்வோம்.

''தீதும் நன்றும் பிறர் தர வாரா'' - வரும்
தீமை எனும் விதையில் முளைத்த எந்தத்
தீமைக்குள்ளும் ஒருப்பாடம் உண்டு பாராய்!
தீவினை விதைத்தால் நல்வினை முளைக்குமா?
தீதில்லா வாழைக்கு கருவேலா விதையாமோ?

எனக்கும் மட்டுமே ஏனிப்படி? என்றே
வருந்த வேண்டாம் தோழா! இவையாவும்
வாங்கி வந்த வரமென்றே உணர் என்று
வாத்தியாரின் பாடமதை கூறுகிறது நல்லா!

பாடத்திற்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!

Uma said...

மனகாரகன் சந்திரன் நீசம், கூட உச்ச ராகு இருந்தும் சுயபரல் ஆறு. லக்ன சந்திப்பில் பிறந்திருந்தாலும் வர்கொத்தம லக்னம். லக் அதி ராசியில் ஆறிலும், நவாம்சத்தில் லக்னத்திலும் இருக்கிறார். இதுவரை பிரச்சனைகளைப் பார்த்து பயந்து ஓடியதில்லை. உனக்கா எனக்கா என்று பார்த்துவிடும் குணம் இருக்கிறது. கடைசி முயற்சி வரை செய்துபார்த்துவிட்டுதான் கைவிடுவேன். ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும் குணமும் இருக்கிறது. லக்னத்திலிருந்து முதல் நான்கு வீடுகள் வரை மற்றும் பதினொன்றாம் வீட்டில் முப்பது பரலுக்கும் மேல். மற்றபடி இருப்பதை வைத்து திருப்தியடையும் மனம் இருப்பதால் அடி விழுந்தாலும் குறைவாகவே விழுகிறது.

john said...

அருமையான ஒரு பதிவு ஐயா, இன்றைய சூழலில் எல்லா மனிதனும் புலம்ப கூடிய விஷயம் கஷ்டம்.. அத்தியாவசிய தேவைகள் முதற்கொண்டு எல்லா வற்றிலும் மனிதன் தன வாழ்நாளில் பிரச்சனைகளை சந்திக்கிறான்.. அவற்றில் இருந்து விடு பட நாம் இறைவனை உள்ளம் உருகி வேண்டினால் , அதை தாங்கி கொள்ள கூடிய தைரியத்தையும், அதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு போக்கையும் தருவார்..
அன்புடன்,
ஜான்

krishnar said...

The Link For Meditation in the Digital age
ishttp://www.tamilunity.com/index.php?option=com_kunena&func=view&catid=15&id=4623&lang=en&Itemid=159

Thanks

Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்

கஷ்டம் பற்றிய பாடம் அற்ப்புதம்
மிகவும் அருமை
நன்றி

மகேஸ்வரன் said...

ஐயா,

நீங்கள் குறிப்பிட்ட விதியின்படி எனது ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு இல்லை... ஆனால் இறைவன் கருணை மிக்கவன்.

3ம்,6ம்,11ம் வீட்டிற்கும் பரல்கள் 30க்கும் மேல். 3ம் வீட்டின் அதிபதியாகிய முழுச்சுபர் 6 பரல்களுடன் கேந்திரத்தில் இருக்கிறார். மனக்காரகனும் 5 பரல்களுடன் இருக்கிறார்.

தொடர் தோல்விகள் என்னை துரத்தினாலும், வெற்றி இன்னும் கைக்கெட்டும் தூரம்தான் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.

எனது ஜாதகத்தையும், வாழ்க்கையையும் திரும்(ப்)பி பார்த்தால், ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது. "ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன்."

அய்யர் said...

///பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.///

நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதினால் அவரை உங்களுக்கு காட்ட விரும்பவில்லை..

இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்க இடும்பை படாஅதவர்

இந்த குறளினை தந்து வரு "கை" பதிவு தருகிறோம்..

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனா அங்கேயும் ஒரு கொடுமை கொடி பிடித்துக் கொண்டு வந்து வரவேற்றதாம்"என்பது ஒரு சொல்லடைதான்.
துன்பம் எப்போதும் தொடர்கதைதான்; முடிவே இல்லாதது.
லக்னதிபதியும் மனோகாரகனுமான சந்திரன் லக்னத்திலேயே அமர்ந்தார். ஆட்சியில் இருப்பதால் அவர் வலுவாக இருப்பதாக நினைக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.அதாவது தன் வீட்டிலேயே இருப்பதும் ஆகாதாமே?!
சுய வர்கத்தில் 4 தான் வாங்குகிறார் சந்திரன்.2 முறை மனநல மருத்துவரைக் காண வைத்தார்.
"இந்த தசா முடியும் வரை இந்தக் கஷ்டம் இருக்கும்" என்றாராம் சோதிடர்.
"அப்புறம் சரியாகிவிடுமா?"என்று கேட்டார் அம்மாஞ்சி.
"அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் உங்களுக்கு கஷ்டம் பழகிப் போய் இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விடுவீர்கள்"என்றாராம் சோதிடர்.
இந்தக் கருத்தை அழகாக விரித்து எழுதியுள்ளீர்கள்.நன்றாக உள்ளது.
எழுத்து என்பது படிப்பவரை துவக்கத்திலிருந்து இறுதிவரை படிக்கத் தூண்ட வேண்டும். நடுவிலேயே பக்கத்தைப் புரட்டும் படி இருக்கக் கூடாது.உங்கள் நடையின் வெற்றியே அது இறுதிவரை வாசகனை இட்டுச் செல்கிறது.சுவாரஸ்யம் குன்றாமல் வெற்றி நடை போடுகிறது./////

நான் ஒரு தீவிர வாசகன். சுவாரசியம் இல்லாத எதையும் படிக்கமாட்டேன். அதே பழக்கம் என் எழுத்திலும் தொற்றிக்கொண்டு விட்டது. என் எழுத்தின் ரகசியம் அதுதான். உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்! Jeffery Archerன் Twist in the tale" என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் கிடைத்தால் தேடிப் பிடித்துப் படியுங்கள். அருமையான நூல் அது! எனது மானசீகக் குரு அவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said... http://ezhuththuppizhai.blogspot.in/2012/08/blog-post.html?spref=fb
மேற்கண்ட கட்டுரையைப் படித்துப் பாருங்கள் துன்பம் என்றால் என்ன என்று புரியும்/////

தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சரண் said...
ஒருவனுக்கு அளவுக்கு அதிகமாக கஷ்டம் வந்து அதை தாங்க முடியாத அளவுக்கு மிக பலவீனமாக இருக்கிறான் என்றால் முன் ஜென்மத்தின் பாவக்கணக்கில் மீதம் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உண்டு. மற்றபடி அதை சமாளிக்க ஏதாவது வழி காட்டப்பட்டிருக்கும் என்பது இறைவனின் நியதி. இதை நிச்சயம் அஷ்டகவர்க்கத்தில் கண்டு பிடித்துவிடலாம் என்று புரிகிறது ஐயா./////

உங்களின் புரிதலுக்கு நன்றி சரண்!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
இன்றைய பதிவு ஜோதிட சம்பந்தமாக இருந்தாலும் பதிவின் முக்கால் பகுதி வரை ஒருமன வளர் கட்டுரைப்போலவே இருந்தது. கஷ்டம், பிரச்சினை தீராது.அதனை எதிர் கொன்டே ஆக வேண்டும் அதுதான் வாழ்க்கை. ரத்த ஓட்டமும் சுவாசமும் போல என சொன்னது அருமை.////

ஆமாம் மனவளக்கட்டுரையுடன் ஜோதிடத்தையும் blend செய்து கொடுத்துள்ளேன். இன்னொரு பெக் வேண்டுமென்றால், மீண்டும் ஒருமுறை படியுங்கள் தனுசு!:-)))))

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
ஆனந்த முருகன் எங்கிருந்துதான் சேகரிக்கிறாரோ, தொடருங்கள்.////

நாளொன்றுக்கு சராசரியாக 5ற்குக் குறையாமல் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்! வாழ்க அவர்! வாழ்க அவருடைய தொண்டுள்ளம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
காலை வணக்கம் ஐயா.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஒரு ஆன்றோர் வாக்கினை எனக்கு நினைவு படுத்திய பதிவு. நல்ல பாடம்.
I know it's extremely hard to accept, but I think it's true: When your peers are seemingly doing well in life and you think you are struggling, don't worry - you are earning that valuable experience that they are missing out on, and that experience will be handy tomorrow! They may be richer now, but you would be wiser tomorrow!
நன்றிகள்,
புவனேஷ்////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
பிரச்சனை! பிரச்சனை! பிரச்சனை!
பிரச்னைக்கு மட்டுமே இல்லைப் பிரச்சனை
பிரச்சனையில்லாவர் தான் யாருண்டு கூறதனை!
படைத்தவனே அனைத்தையும் அறிவான் -இங்கே
விடைத் தெரிந்தவர் வேறுயாரும் உண்டோ?
கடைத்தெருவில் விற்கிறதா காசுகொடுத்து
வாங்கிடுவோம் மனித வாழ்வின்; வரும்
பிரச்சனை என்னும் பிறவி நோயதுதீர
மருந்தொன்றை தேடியலைந்தே!
பிரச்சனை என்பது முன்வினை என்போம்
ஒருத்தனை வந்துருத்தும் பிரச்சனை யாவும்
பொறுத்ததனை சமாளித்து சிறப்புடன் வாழ;
பிரச்சனை போக, பிராத்தனை செய்வோம்.
''தீதும் நன்றும் பிறர் தர வாரா'' - வரும்
தீமை எனும் விதையில் முளைத்த எந்தத்
தீமைக்குள்ளும் ஒருப்பாடம் உண்டு பாராய்!
தீவினை விதைத்தால் நல்வினை முளைக்குமா?
தீதில்லா வாழைக்கு கருவேலா விதையாமோ?
எனக்கும் மட்டுமே ஏனிப்படி? என்றே
வருந்த வேண்டாம் தோழா! இவையாவும்
வாங்கி வந்த வரமென்றே உணர் என்று
வாத்தியாரின் பாடமதை கூறுகிறது நல்லா!
பாடத்திற்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!////

நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
மனகாரகன் சந்திரன் நீசம், கூட உச்ச ராகு இருந்தும் சுயபரல் ஆறு. லக்ன சந்திப்பில் பிறந்திருந்தாலும் வர்கொத்தம லக்னம். லக் அதி ராசியில் ஆறிலும், நவாம்சத்தில் லக்னத்திலும் இருக்கிறார். இதுவரை பிரச்சனைகளைப் பார்த்து பயந்து ஓடியதில்லை. உனக்கா எனக்கா என்று பார்த்துவிடும் குணம் இருக்கிறது. கடைசி முயற்சி வரை செய்துபார்த்துவிட்டுதான் கைவிடுவேன். ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும் குணமும் இருக்கிறது. லக்னத்திலிருந்து முதல் நான்கு வீடுகள் வரை மற்றும் பதினொன்றாம் வீட்டில் முப்பது பரலுக்கும் மேல். மற்றபடி இருப்பதை வைத்து திருப்தியடையும் மனம் இருப்பதால் அடி விழுந்தாலும் குறைவாகவே விழுகிறது.////

நீங்கள் இருக்கும் ஊரை நினைத்தால் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த ஊரின் வரலாறும், ராசியும் அப்படி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger john said...
அருமையான ஒரு பதிவு ஐயா, இன்றைய சூழலில் எல்லா மனிதனும் புலம்ப கூடிய விஷயம் கஷ்டம்.. அத்தியாவசிய தேவைகள் முதற்கொண்டு எல்லா வற்றிலும் மனிதன் தன வாழ்நாளில் பிரச்சனைகளை சந்திக்கிறான்.. அவற்றில் இருந்து விடு பட நாம் இறைவனை உள்ளம் உருகி வேண்டினால் , அதை தாங்கி கொள்ள கூடிய தைரியத்தையும், அதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு போக்கையும் தருவார்..
அன்புடன்,
ஜான்/////

உங்களின் புரிதலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger krishnar said...
The Link For Meditation in the Digital age
ishttp://www.tamilunity.com/index.php?option=com_kunena&func=view&catid=15&id=4623&lang=en&Itemid=159
Thanks////

தகவலுக்கு நன்றி அன்பரே!!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலை வணக்கம்////

உங்களின் வணக்கத்திற்கும், வருகைப் பதிவிற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
கஷ்டம் பற்றிய பாடம் அற்புதம்
மிகவும் அருமை
நன்றி////

உங்களைக் கஷ்டப்படுத்தாத பாடம் இல்லையா? நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger மகேஸ்வரன் said...
ஐயா,
நீங்கள் குறிப்பிட்ட விதியின்படி எனது ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு இல்லை... ஆனால் இறைவன் கருணை மிக்கவன்.
3ம்,6ம்,11ம் வீட்டிற்கும் பரல்கள் 30க்கும் மேல். 3ம் வீட்டின் அதிபதியாகிய முழுச்சுபர் 6 பரல்களுடன் கேந்திரத்தில் இருக்கிறார். மனக்காரகனும் 5 பரல்களுடன் இருக்கிறார்.
தொடர் தோல்விகள் என்னை துரத்தினாலும், வெற்றி இன்னும் கைக்கெட்டும் தூரம்தான் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எனது ஜாதகத்தையும், வாழ்க்கையையும் திரும்(ப்)பி பார்த்தால், ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது. "ஒரு வாசல் மூடி மறு வாசல் திறப்பான் இறைவன்."////

இன்னொரு வாசல் திறந்திருக்கும் என்ற மனப் பக்குவம் வந்துவிட்டால், அதை விட வேறு என்ன வேண்டும் நண்பரே!நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
///பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.///
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதினால் அவரை உங்களுக்கு காட்ட விரும்பவில்லை..////
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்க இடும்பை படாஅதவர்
இந்த குறளினை தந்து வரு "கை" பதிவு தருகிறோம்../////

பழநியப்பனைக் காட்டுவீர்களா? அல்லது (காசி) விஸ்வநாதனைக் காட்டுவீர்களா?
சும்மா காட்டுங்கள்! அவருடைய ஜாதகத்தையும் கேட்டு வாங்கி அனுப்புங்கள்! பார்த்துவிடுவோம்!

eswari sekar said...

vanakam sir .. chandrian palamega illai enral enna seivathu sir .. chanrian .suya ..3 .than

eswari sekar said...

sir .lagnaatipathi .4 point ullar kumba lagnam lagnatipathi 11 th house

Maaya kanna said...

ஐயா வணக்கம்.

இன்றையை பாடத்தினை தாங்கள் முடித்து இருப்பது மிகவும் அபூர்வமாக உள்ளது ஐயா!

நானும் பல நேரத்தில் எனது மனதில் பட்டத்தை நேரம் இன்மை, தவிர்க்க முடியாத காலங்கள், கோர்வையான வாக்குகள் கிடையாமல் , தக்க வார்த்தை கிடைக்காமல் கூகிள் நாதரின் அசட்டு தனமான மொழி பெயர்ப்பு சக்தி என்று இன்னும் நிறைய கூறலாம் அந்த அளவிற்கு வந்து சேரும் பிரச்சனைகள் வாத்தியார் ஆகிய தாங்களாவது புரிந்து கொண்டால் நல்லது இல்லது உள்ளது போல எல்லாமும் அமையட்டும் என்று இருந்து விடுவேன் அத போல வகுப்பறையையும் கூடை தாங்கள் இன்று பிரித்து உள்ளீர்கள் ஐயா! மேற் கூறியது போல மிக்க நன்று ஐயா :-)))

ananth said...

//அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.//

கவியரசு கண்ணதாசனின் செப்பு மொழிகள் என்ற நூலில் படித்ததாக நினைவு. 'கவலையில்லாதர்கள் இரண்டு பேர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொருவர் இன்னும் பிறக்கவே இல்லை.'

உண்மை நிலவரமும் இதுதான். ஆகையால் தாங்கள் எழுதுவதை நிறுத்தும் அவசியம் இருக்காது.

என் ஜாதகத்தில் லக்கினாதிபதிக்கு சுய பரல்கள் 7ம், மனகாரகனுக்கு 6ம் என்று இருக்கிறார்கள். மற்ற கிரகங்களுக்கு இதைவிட குறைந்த பரல்கள்தான்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
vanakam sir .. chandrian palamega illai enral enna seivathu sir .. chanrian .suya ..3 .than//////

எது பலமாக இல்லை என்றாலும், இறைவனின் கருணை இருந்தால் போதாதா? இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

///Blogger eswari sekar said...
sir .lagnaatipathi .4 point ullar kumba lagnam lagnatipathi 11 th house/////

லக்கினாதிபதி 11 ல் (லாப ஸ்தானத்தில் ) இருப்பது மிகவும் நன்மையானது. குறைந்த முயற்சி, அதிக பலன் உடைய ஜாதகர் நீங்கள். Minimum efforts and maximum benefits!!!!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Maaya kanna said...
ஐயா வணக்கம்.
இன்றையை பாடத்தினை தாங்கள் முடித்து இருப்பது மிகவும் அபூர்வமாக உள்ளது ஐயா!
நானும் பல நேரத்தில் எனது மனதில் பட்டத்தை நேரம் இன்மை, தவிர்க்க முடியாத காலங்கள், கோர்வையான வாக்குகள் கிடையாமல் , தக்க வார்த்தை கிடைக்காமல் கூகிள் நாதரின் அசட்டு தனமான மொழி பெயர்ப்பு சக்தி என்று இன்னும் நிறைய கூறலாம் அந்த அளவிற்கு வந்து சேரும் பிரச்சனைகள் வாத்தியார் ஆகிய தாங்களாவது புரிந்து கொண்டால் நல்லது இல்லது உள்ளது போல எல்லாமும் அமையட்டும் என்று இருந்து விடுவேன் அத போல வகுப்பறையையும் கூடை தாங்கள் இன்று பிரித்து உள்ளீர்கள் ஐயா! மேற் கூறியது போல மிக்க நன்று ஐயா :-)))////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger ananth said...
//அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.//
கவியரசு கண்ணதாசனின் செப்பு மொழிகள் என்ற நூலில் படித்ததாக நினைவு. 'கவலையில்லாதர்கள் இரண்டு பேர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொருவர் இன்னும் பிறக்கவே இல்லை.'
உண்மை நிலவரமும் இதுதான். ஆகையால் தாங்கள் எழுதுவதை நிறுத்தும் அவசியம் இருக்காது.
என் ஜாதகத்தில் லக்கினாதிபதிக்கு சுய பரல்கள் 7ம், மனகாரகனுக்கு 6ம் என்று இருக்கிறார்கள். மற்ற கிரகங்களுக்கு இதைவிட குறைந்த பரல்கள்தான். //////

தாக்குப் பிடிக்கும் சக்திதான் முக்கியம். அது உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள்!

kmr.krishnan said...

//நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதினால் அவரை உங்களுக்கு காட்ட விரும்பவில்லை.//

சரிதான் ஆண்டவரே! வாத்தியாரை எழுத அனுமதித்த ஐயருக்கு நன்றி!

Rajan said...

Dear Sir,

This is a timely article for me. Ten days before my laptop crashed, washing machine at home needed a huge electronic replacement, and the refrigerator's compressor was burnt.

Last week when I was driving on a highway a dog smashed on my side door of the car and caused a huge dent.

I was waiting for a clearance from a govt. office and officer who was sitting on that file for more than a month got transferred, a week ago, and I have to start the process again from scratch.

Apart from my regular business problems,including harassment from officials,labor problems, a lot of other problems always creeps into my day-to-day affairs.

Because of the problems I experience on continuous basis, Sometimes I get tensed when I face no problems.

I got used to it and I face one by one by keeping my energy level high.

In my Ashtkaavarga chart, the lagna lord has 6 points and moon has 6 points.

Lets see how it goes.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Rajan said...
Dear Sir,
This is a timely article for me. Ten days before my laptop crashed, washing machine at home needed a huge electronic replacement, and the refrigerator's compressor was burnt.
Last week when I was driving on a highway a dog smashed on my side door of the car and caused a huge dent.
I was waiting for a clearance from a govt. office and officer who was sitting on that file for more than a month got transferred, a week ago, and I have to start the process again from scratch.
Apart from my regular business problems,including harassment from officials,labor problems, a lot of other problems always creeps into my day-to-day affairs.
Because of the problems I experience on continuous basis, Sometimes I get tensed when I face no problems.
I got used to it and I face one by one by keeping my energy level high.
In my Ashtkaavarga chart, the lagna lord has 6 points and moon has 6 points.
Lets see how it goes.////

உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!

நடராஜன் said...

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!

ஐயா, வீட்டில் தொடர்ந்த கதை முடிந்துவிட்டால் மனிதன் திருந்த வழி இல்லை . இறைவன் ஆட்சியில் முடிந்த கதை தொடராது . காரணம் கொண்டு வந்ததை நாம் உண்டு முடித்து விடுகிறோம். இதைதான் கொன்றால் பாவம் தின்றால் தீரும்
என நம் பெரியோர்கள் சொல்லுகிறார்கள். கொன்ற பாவத்தை அனுபவித்தால் தீர்ந்து விடும் என்பதுதான் பொருள். பாவம் தீரும்வரை கதை தொடரத்தானே செய்யும்