மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.11.17

கவியரசரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா!


கவியரசரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா!

கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பதில்:

உண்டு. “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது.. சில பொதுக்கூட்ட மேடைகளில்,
.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்!

(கற்றதும் பெற்றதும் கட்டுரை ஒன்றில் அவர் எழுதியது)

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு, என்ன ட்யூன் ?”

“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! “

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே
தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !”"அடுத்த அடி. ?”"தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே!”"தன்னானேக்கு பதில்
தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! “

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்!” “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “) உடனுக்குடன் உதிர்த்தத  கண்மணி சுப்பு அழகான கையெழுத்தில் எழுதித்தர,
சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? “

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ? சீதா — நேர் நேர்; ஜானகி —
நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் …. இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள்
போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும் அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும்,
பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”...

*ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப்
பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார் எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.

உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத
நேரமே இல்லை!..*

---------------------------------------
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Good morning sir very beautiful and happiest song by Kannadasan sir and MSV sir, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. No Words to Appreciate sir. Kaviyarasar The Legend. He was very strong in Basics it seems. Hard Work. Thanks for Sharing sir.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,கவிஞரின் சிறப்பிற்க்கு மற்றுமோர் மணிமகுடம்.நன்றி.

    ReplyDelete
  4. Respected sir,

    Good morning sir. There is no word to appreciate The Kaviarasu. Good composing by Mellisai Mannar. combination of both in Tamil Cinema is a gift. We enjoyed the songs of both legends. Thank you for your message on the legends.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. Dear sir, one general doubt for me,please clarify me sir, Jupiter is natural benefic,for tula lagna it is functional malefic what was the result when Jupiter is placed in tula lagna?,is it blessed horoscope due to Jupiter in lagna or not?

    ReplyDelete
  7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very beautiful and happiest song by Kannadasan sir and MSV sir, thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

  8. ////Blogger KJ said...
    No Words to Appreciate sir. Kaviyarasar The Legend. He was very strong in Basics it seems. Hard Work. Thanks for Sharing sir.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. //Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கவிஞரின் சிறப்பிற்கு மற்றுமோர் மணிமகுடம்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  10. ///Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. There is no word to appreciate The Kaviarasu. Good composing by Mellisai Mannar. combination of both in Tamil Cinema is a gift. We enjoyed the songs of both legends. Thank you for your message on the legends.
    regards,
    Visvanathan N////

    நல்லது. நன்றி விஸ்வநாதன்!!!!

    ReplyDelete
  11. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  12. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Dear sir, one general doubt for me,please clarify me sir, Jupiter is natural benefic,for tula lagna it is functional malefic what was the result when Jupiter is placed in tula lagna?,is it blessed horoscope due to Jupiter in lagna or not?/////

    குரு முதல் நிலை சுபக்கிரகம். ஆகவே நன்மைகளைச் செய்வார். துலா லக்கினத்திற்கு ஆவர் 6ம் இடத்திற்கு உரியவரும் ஆவார்.
    ஆகவே இயற்கையாகவே சில தாமதங்களும் தடைகளும் உண்டாகும். கலவையான பலன்கள். உங்கள் மொழியில் சொன்னால் mixed result

    ReplyDelete
    Replies
    1. Thanks for your valuable reply sir i understood,by lord palaniyappan blessings i got you as my best guru sir

      Delete
  13. வணக்கம் குருவே!
    கவிஞர் அவர்கள் இருந்தவரை அவருக்கு நிகர் அவராகவே இருந்தார்!
    அவருடன் பழகிய எவரும் கவிஞரிடம
    தனி மரியாதை கொண்டவராகவே
    இருந்துள்ளனர்! தனக்கென ஒரு தனி பாணியை வகுத்திருந்தார் என்பதை
    சொல்லத் தேவையில்லை!
    கவிஞர் ஒரு தனி அவதார புருஷன்
    என்றாலும் மிகையில்லை அல்லவா,
    வாத்தியாரையா!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com