மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.17

Short Story: சிறுகதை: மெல்லத் திறந்தது கதவு!


Short Story: சிறுகதை: மெல்லத் திறந்தது கதவு!                

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய கதை. அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
                                      மெல்லத் திறந்தது கதவு!                           

      “எனக்கு சன்’னும் இல்லை: பென்சன்’னும் இல்லை. வயதான காலத்தில் கலக்கமாக இருக்கிறது” என்று சின்னைய்யா செட்டியார் சொன்னவுடன், அவருடைய நண்பர் இராமசாமி செட்டியார் பொறுமையாகக் கேட்டார்:

      “என்னண்ணே சொல்றீங்க? சொல்றதைத் தெளிவாகப் புரியும்படியாகச் சொல்லுங்கள்”

      “எங்க பெரியப்பச்சி மகன் மாணிக்கம் செட்டியாருக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரும் மாதா மாதம் அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை நங்கநல்லூரில் பெரிய மகன் வாங்கி வைத்திருக்கும் வீட்டில் அவர் தன் மனைவியுடன் குடியிருக்கிறார். வாடகை இல்லை. வருகிற பணத்தில் செளகரியமாகச் சாப்பிட்டுக் கொண்டு சுகமாக இருக்கிறார். அவருடைய தம்பி சுந்தரம் செட்டியாருக்கு பையன்கள் இல்லை. இரண்டுமே பெண் குழந்தைகள்தான். நல்ல இடங்களில்  கட்டிக் கொடுத்து விட்டார். வங்கியில் சீனியர் மேனஜராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். வங்கியில் இருந்து கணிசமான தொகை மாதாமாதம் பென்சனாக - அதாவது ஓய்வு ஊதியமாக வருகிறது, அவரும் சென்னை வில்லிவாக்கத்தில் அந்தக் காலத்தில் கட்டிய தன்னுடைய வீட்டில் செளகரியமாக இருக்கிறார். ஆனால் என் நிலைமை அப்படியா இருக்கிறது?”

      “ஏன் நீங்களும் அம்பத்தூர் வீட்டில் கடந்த முப்பது வருடங்களாக செளகரியமாகத்தானே இருந்தீர்கள்?”

      “இருந்தேன். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக ஏழரைச் சனி புரட்டிப் போட்டு விட்டது. வியாபாரத்தில் நஷ்டம். சரக்குக் கொடுக்த இடத்தில் எல்லாம் பணம் வரவில்லை. எனக்குப் பணம் கொடுத்தவர்களெல்லாம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். கடை வாடகை, கடைப் பையன் சம்பளம் வீட்டு வாடகை, வீட்டுச் செலவு என்று மாதா மாதம் பணத் தேடலில் நொந்து நூலாகப் போய் விட்டேன். எல்லாவற்றையும் ஊற்றிக் கழுவி விட்டு, ஊற்றி மூடி விட்டு சொந்த ஊருக்கே வந்து விட்டேன்.”

      “நல்லதுதானே! இந்த வீட்டில் - இவ்வளவு பெரிய வீட்டில் உங்களுக்குப் பாதிப் பங்காயிற்றே - அதற்காக சந்தோஷப் படுங்கள்.”

      “பங்கென்னவோ பாதிதான். ஆனால் பராமரிப்புச் செலவென்றால் பாதிப் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறதே. அதை நினைத்துப்  பார்த்தாயா?”

      "ஒரு ப்ளஸ் என்றால் கூடவே ஒரு மைனசும் இருக்கத்தான் செய்யும். நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை. பகல் இரவைப்போல!!”

      “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மனது என்று ஒன்று இருக்கிறதே. கையில் காசு இருந்தால், எல்லாவற்றையும் சரி பண்ணிக் கொண்டு போய் விடலாம். பணம் இல்லாதபோதுதான் பிரச்சினைகளெல்லாம் பூதாகரமாகத் தெரிகிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் எனக்குப் பாதிப் பங்கு 32 செண்ட் இடத்தில் என் பங்கு 16 செண்ட். தெருவை ஒட்டி இருப்பதால் எங்கள் ஊரில் இருக்கும் பணக்காரர் ஒருவர் விலைக்குக் கேட்டார். பதினாறு லெட்சம் பணமும் தருகிறேன் என்றார். அவருக்கு விற்று விட்டேன். சென்னையைக் காலி பண்ணிக் கொண்டு வரும்போது, வாங்கிய கடன்களை எல்லாம் நேர் செய்துவிட்டு வந்ததில் பதினான்கு லெட்சம் பணாலாகிவிட்டது. மிச்சம் கையில் இருந்த இரண்டு லெட்சத்தோடுதான் இங்கே வந்தேன். வந்து நான்கு மாதமாகிறது. வீட்டு செலவு, மருந்து, மாத்திரை செலவு என்று மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் செல்வாகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தப் பணம் வருமோ தெரியவில்லை. அதுதான் கவலையாக இருக்கிறது!”

      "அதெல்லாம் கவலைப் படதீர்கள். ஒரு கதவு சாத்திக் கொண்டால், இறைவன் இன்னொரு கதவைத் திறந்து விடுவான். ஆகவே எந்தக் கதவு திறந்திருக்கிறதென்று பாருங்கள். அதன் வழியே செல்லுங்கள். வாழ்க்கை மீண்டும் வளமாகி விடும்!”
நீங்கள் நினைப்பது போல் உங்கள் பெரியப்பச்சி மகன்களெல்லாம் ஆனந்தமாக இல்லை. பத்து நாட்களுக்கு முன்புதான் உங்கள் பெரியப்பச்சி மகன் மாணிக்கம் செட்டியாரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அழாத குறையாக எல்லாக் கஷ்டங்களையும் சொன்னார். கையில் இருந்தால் வாயில் போட்டுக் கொள்ளலாம் - அடுத்தவர்கள் கொடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் நிலைமை அவலமானது என்று சொன்னார், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றுதான் பேர். ஆனால் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தாராளமாகச் செலவழித்து ஆளாக்குவதைப் போல, வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு அவர்கள் தாராளமாகச் செலவழிப்பதில்லை. அளந்துதான் கொடுக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் அதுதான் நடக்கிறது என்றார்.”

      “........................................”

      “சென்னையில் இருந்து ஊரில் நடக்கும் விசேடங்களுக்குப் போய் வந்தால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், ஊருக்கெல்லாம் போகாதீர்கள். நீங்கள் வரவில்லை என்று யார் அழுகிறார்கள்? மேலும் நீங்கள் ஊரில் விழுந்து அடிபட்டால் யார் வைத்தியம் பார்ப்பது என்கிறார்களாம். இதையும் அவரேதான் சொல்லி வருத்தப்பட்டார். அவருடைய தம்பி நிலைமை இன்னும் மோசமாம். இரண்டாவது மகளுக்குப் பிரசவம் பார்த்து, சீர் செய்து அவளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் மூன்று லெட்ச ரூபாய்களும், தன் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறுக்காக வைத்தியம் பார்த்ததில், இரண்டு லெட்ச ரூபாய்களும் ஆக மொத்தம் ஒரே மாதத்தில் ஒரு வருட பென்சன் பணம் காலியாகிவிட்டதாம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. மொத்தத்தில் சன்’ வைத்திருப்பவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை, பென்சன் பணத்தில் வாழ்பவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்”

      தொடர்ந்து இவ்வாறு பலவாறாக இராமசாமி செட்டியார் சொன்னவுடன், சின்னய்யா செட்டியார் அவற்றை மறுத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மெளனமாகி விட்டார்.

     அவர்களுடைய உரையாடலும் அத்துடன் நிறைவிற்கு வந்தது!

********************************************************************************

      இராமசாமி செட்டியார் புறப்பட்டுச் சென்றவுடன், அதுவரை பெட்டகசாலையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னைய்யா செட்டியாரின் மனைவி சாரதா ஆச்சி  முகப்பிற்கு வந்தவர், அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் கணவரை சொற்களால் விளாசு விளாசென்று வீசி விட்டார்:

      “ எதற்காக  வருகிறவர்களிடமெல்லாம் எனக்கு சன்’னும்
இல்லை: பென்சன்’னும் இல்லை என்ற பாட்டைப்  பாடிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பிரச்சினை என்ன? கையில் பணம் இல்லை. வயதான காலத்தில் சம்பாதிக்கவும் வழியில்லை என்பதுதானே? எங்கள் ஆத்தா வீடு போட்ட கெட்டிக் கழுத்தீர் நூறு பவுனும் உபரி நகைகள் நூறு பவுனும் ஆக மொத்தம் 200 பவுன் நகைகள் கடந்த 40 வருடங்களாக வங்கி லாக்கரில்தான் இருக்கிறது. அவற்றை எடுத்துத் தருகிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு அவற்றை வைத்துப் பாதுகாப்பது.? எங்கள் ஆத்தா வீடு அவற்றை பவுன் 140 ரூபாய் விற்கும் காலத்தில் வாங்கினார்கள். இப்போது பவுன் 23 ஆயிரம் விற்கிறது. அவற்றை எடுத்து விற்றால் சுமார் 44 லெட்ச ரூபாய்கள் கையில் கிடைக்கும். வாங்கி வங்கியில் சேமிப்புக் கணக்கில் போட்டு விட்டு நிம்மதியாக இருங்கள். வட்டியில் சாப்பிட வேண்டாம். அசலிலேயே சாப்பிடுவோம். மாதாமாதம் வேண்டிய பணத்தை வாங்கிச் செலவழிப்போம். நிம்மதியாக இருப்போம்.”

      சின்னையா செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

      “உண்மையாகத்தான் சொல்கிறாயா?”
 
      “உண்மையாகத்தான் சொல்கிறேன். எதற்கு இந்த சந்தேகம்?”

      “ எந்தப் பெண்ணும் நன் நகைகளை விற்றுச் செலவழிக்க ஒப்புக்கொள்ள மாட்டாளே? அதனால்தான் கேட்கிறேன்.”

      “உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். எந்தக் கெட்ட செலவும் செய்யாதவர். நமது தாம்பத்திய வாழ்க்கையில் ஒரே ஒரு குறைதான். நமக்குப் பிள்ளை இல்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. அதற்கு நீங்கள் காரணம் இல்லை. முன்று முறை கருத்தரித்தும் குழந்தை என் வயிற்றில் தங்கவில்லை. கர்ப்பப்பை வீக்காக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது அதை எல்லாம் நினைத்து வருத்தப் படுவதில் பயனில்லை. உங்களுக்கு நான் குழந்தை, எனக்கு நீங்கள் குழந்தை என்றுதான் இத்தனை நாட்களாகப் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நமக்கு சன்’ இல்லாததைப்போல பெண்’னும் இல்லை. நமக்குப் பின்னால் அந்த நகைகளுக்கெல்லாம் ஒரு விடிவு வேண்டாமா? நம் காலத்திலேயே அதைச் செய்துவிடுவோம் என்றுதான் இதைச் சொல்கிறேன்!”

      “ஒரு கதவு சாத்திக் கொண்டால், கடவுள் இன்னொரு கதவைத் திறந்து விடுவார் என்பார்கள். கடவுள் நல்ல மனைவி என்ற கதவைத் திறந்து விட்டிருக்கிறார். உன்னுடைய நல்ல மனம் வாழ்க. உன்னுடைய நகைகளை விற்று, அந்தப் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நீ சொல்வதைப் போல அந்த நகைகளை எல்லாம் விற்று விட்டு, வருகிற பணத்தை நம் ஊர் மீனட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குக் கொடுத்துவிடுவோம். இறைப் பணிக்கு அந்தப் பணம் பயன் படட்டும். நம் நடப்புச் செலவிற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி நான் யோசித்து ஒரு முடிவு செய்து வைத்திருக்கிறேன்.”

      “என்ன முடிவு?”

      “இவ்வளவு பெரிய வீடு நமக்குத் தேவையில்லை. நம் பங்கில் சரி பாதி வீட்டை விற்று விடலாம் என்று இருக்கிறேன். நம் தோட்டத்தை விலைக்கு வாங்கினாரே சண்முகம் செட்டியார், அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஐம்பது லெட்ச ரூபாய்கள் தருகிறேன் என்கிறார். அவருடைய பூர்வீகப் பங்கு வீடு சிதிலமாகி இடிந்து தரை மட்டமாகிவிட்டது. அவருக்கு இரண்டு மகன்கள். நன்றாகப் படித்து, சென்னை ஐ.டி கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்கள். ஊரில் சொந்த வீடு இல்லை என்பதனால் அவர் வீட்டில் பெண்களைச் செய்வதற்குப் பலரும் தயங்குகிறார்கள். அதனால் நம் வீட்டின் பாதிப் பங்கை வாங்குவதற்கு அவர் தயாராக இருக்கிறார். அதனால் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன். அவருடைய பிரச்சினையும் தீர்ந்து விடும். நம் பிரச்சினையும் தீர்ந்து விடும். நீ என்ன சொல்கிறாய்?”

     “நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்கும் அதில் சம்மதம்தான். பழநியாண்டவருக்கு 101 ரூபாய்கள் எடுத்து முடிந்து வைக்கிறேன். நமது இருவரின் கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி வைப்பார்.”

      அடுத்து வந்த ஆவணி மாதத்திலேயே அந்த இரண்டு செயல்களும் பழநியாண்டவர் அருளால் செவ்வனே நிறைவேறின.

      அடுத்து, பழநியாண்டவரின் அருளால்  சின்னைய்யா தம்பதியருக்கு 15 வயதில் அழகான ஆண் மகனொன்று செலவில்லாமல் சுவீகாரமாகக் கிடைத்தது. ஆமாம் சின்னய்யா செட்டியாரின் பங்காளி வீட்டு ஆச்சியொன்று தன் இரண்டு மகன்களில் இரண்டாவது மகனை நீங்கள் சுவீகாரமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பணம் தர வேண்டாம். நீங்கள் அவனை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்குங்கள் என்று சுவீகாரமாகக் கொடுத்து விட்டார். எளிய நிகழ்ச்சியொன்றில் அதுவும் நிறைவேறியது.

      சுவீகார தினத்தன்று சுவீகாரம் வந்த பையன், “அப்பச்சி’ - ஆத்தா” என்று அன்பொழுக அழைத்தவாறு சின்னய்யா செட்டியார் - சாரதா ஆச்சி ஆகிய இருவரின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தான். பண்பான, பணிவான பையன்.

      இறைவனின் அருள் அது. தாமதமாக பிள்ளைச் செல்வம் கிடைத்தாலும் உரிய நேரத்தில் அது கிடைத்தது. மெல்லத் திறந்தது கதவு என்றாலும் உள்ளத்தை நெகிழ்த்தியது அந்தக் கதவு.

      இறைவனின் அருளை நினைத்து இருவரின் கண்களும் பனித்து விட்டன!!!!
             ******************************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26 comments:

  1. மண் வாசனைக் கதைகளுக்கு மகுடம் வைத்த கதை.

    ReplyDelete
  2. Good morning sir very excellent story, what a blessing of lord palaniyappan,now I remember your valuable words All are prewrittens nothing can be re writtened so live the best and leave the rest to the almighty thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. அய்யா
    அவர்க்கு ஆதரவாக பேச ஒரு ஆள் கிடைத்த மாதிரி பலர்க்கும் கிடைப்பதில்லை.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,சிறுகதை சிறப்பு.நன்றி.

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Very interesting story....

    Thanks for sharing...

    Have a great day...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்
    மிக அருமை சிறப்பாக மன நிறைவாக உள்ளது
    . நன்றி

    ReplyDelete
  7. வணக்கம் குருவே!
    இன்றைய வாழ்க்கையில் நடைபெற்றுக்
    கொண்டிருக்கும் யதார்த்தமான நிகழ்வை கருவாகக் கொண்டு, மிக நேர்த்தியாக பின்னப்பட்ட தங்களின்
    இச்சிறு கதையில் ஜோதிடம் மற்றும் இறையருள் இரணடையும் மிதமாகக்
    கலந்த, உணர்ச்சிப் பெருக்குடன்
    முடிக்கப் பெற்றிருக்கும் பாணி அலாதியானது! அழகான முடிவு ஆனந்தத்தைதயும்.தந்து,எங்கள்
    கண்களையும் பனிக்க வைத்தது
    என்றால் மிகையாகாது!
    சபாஷ் வாத்தியாரையா!!

    ReplyDelete
  8. ஐயா,

    அருமை! அருமை!!........
    ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும். ஆனால், எப்போது எப்படி என்பது தான் இறைவனின் சித்தம்.

    ReplyDelete
  9. When is Sani Peyarchi? I heard that Sani moved on October 25/26 but some saying November 2 and December 17. What is the correct date?

    ReplyDelete
  10. Sir, You have got excellent narrative style in your writings.
    your stories smell very much native.
    I like it sir ��

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    மண் வாசனைக் கதைகளுக்கு மகுடம் வைத்த கதை.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தைப் போன்றது. It is like a tonic உங்களுடைய நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  12. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story, what a blessing of lord palaniyappan,now I remember your valuable words All are prewrittens nothing can be re writtened so live the best and leave the rest to the almighty thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  13. ///Blogger Kalai Rajan said...
    அய்யா
    அவர்க்கு ஆதரவாக பேச ஒரு ஆள் கிடைத்த மாதிரி பலர்க்கும் கிடைப்பதில்லை./////

    இல்லை. உங்களுக்கும் ஒருவராவது இருப்பார். முதலில் அவரை அடையாளம் காணுங்கள் நண்பரே!!!!!

    ReplyDelete
  14. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிறுகதை சிறப்பு.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  15. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very interesting story....
    Thanks for sharing...
    Have a great day...
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  16. ////Blogger moorthy krishnan said...
    ஐயா வணக்கம்
    மிக அருமை சிறப்பாக மன நிறைவாக உள்ளது
    . நன்றி/////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  17. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இன்றைய வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தமான நிகழ்வை கருவாகக் கொண்டு, மிக நேர்த்தியாக பின்னப்பட்ட தங்களின் இச்சிறு கதையில் ஜோதிடம் மற்றும் இறையருள் இரணடையும் மிதமாகக் கலந்த, உணர்ச்சிப் பெருக்குடன்
    முடிக்கப் பெற்றிருக்கும் பாணி அலாதியானது! அழகான முடிவு ஆனந்தத்தைதயும்.தந்து,எங்கள் கண்களையும் பனிக்க வைத்தது
    என்றால் மிகையாகாது!
    சபாஷ் வாத்தியாரையா!!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தைப் போன்றது. It is like a tonic உங்களுடைய நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  18. /////Blogger umajana said...
    ஐயா,
    அருமை! அருமை!!........
    ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும். ஆனால், எப்போது எப்படி என்பது தான் இறைவனின் சித்தம்./////

    உண்மைதான். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  19. ////Blogger ஜீவன்சிவம் said...
    அருமை////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  20. //////Blogger Deiva said...
    When is Sani Peyarchi? I heard that Sani moved on October 25/26 but some saying November 2 and December 17. What is the correct date?/////

    நம் தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கத்தைத்தான் பயன் படுத்துகிறார்கள். சனீஷ்வரனின் ஆலயமான திருநள்ளாறில் டிஸம்பர் 19ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி. ஆகவே அதுவரை பொறுத்திருங்கள்!!!!

    ReplyDelete
  21. ///Blogger M RAMSUDARSAN said...
    Sir, You have got excellent narrative style in your writings.
    your stories smell very much native.
    I like it sir ��////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தைப் போன்றது. It is like a tonic உங்களுடைய நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete
  22. Nice Story Sir. Well Narrated one. Thank you.

    ReplyDelete
  23. வாழ்வியல் நுட்பங்களை கதையாக செதுக்கிய பாங்கு அருமை அய்யா...

    ReplyDelete
  24. ///Blogger KJ said...
    Nice Story Sir. Well Narrated one. Thank you./////

    நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  25. /////Blogger J Murugan said...
    வாழ்வியல் நுட்பங்களை கதையாக செதுக்கிய பாங்கு அருமை அய்யா...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தைப் போன்றது. It is like a tonic உங்களுடைய நல்ல மனம் வாழ்க!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com