Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!
அலசல் பாடம்
தலைப்பு: பங்கு வணிகம்
பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.
ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?
வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அத்ற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.
பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.
இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.
சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.
ஒரு ஜாதகத்தை வைத்து இன்று அதை அலசுவோம்!
-------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள
மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.
பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி
இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.
அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.
உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!
இது மேல் நிலை வகுப்பிற்கான பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஹா..!மிகவும் தேவையான பாடம்..!பங்குச்சந்தை என்பது ஒரு கவர்ச்சி.!விட்டில் பூச்சிகளே அதிகம்..!நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு தந்த வாத்தியார் ஐயாவிற்கு நன்றிகள்!
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteஎச்சரிக்கை பாடம் அருமை. நன்றிகள்.
பங்கு சந்தை பற்றி ஊதிய
ReplyDeleteசங்கு எத்தனை பேர் காதில் விழும்
பங்கு சந்தை மட்டுமல்ல
கமாடிட்டி மற்றும் ஃபாரெக்ஸ் என
நாள் முழுதும் சம்பாதிக்கும் வாய்ப்பு
நமக்கு இருந்தும் நமக்கென இருப்பது எது?
அறிவுரை பாடம் தான்
அத்தனையும் அருமை..
அத்தோடு இந்த பாடலினை
அப்படியே சுழலவிட அனுமதியுங்கள்
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கி கொண்டாயோ
கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன்
சாமிகள் அடிதனில் சரண் புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
இறக்கம் உள்ளவரிடம் இருக்காத பணம்தானே
எங்கே தேடுவேன்
Sir, very useful lesson.
ReplyDeleteSome other aspects abt this horo:
1.budhan sukran-neesa bangam raja yogam
2.suriyan ucham(8 th place owner)
3.guru in his own house
4.sani seeing his own house(2nd)
basically this is a baapa-karthari yoga horo(lagnam locked)
Pl correct me sir if i analysed anything wrong.
Thank you for the lesson Sir.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteஅருமையான பாடம்
குரு ஆறில் இரண்டாம் அதிபதி 12ல்
நன்றி
நல்ல அறிவுரை ஐயா!நன்றிகள்
ReplyDeleteபாடத்திற்கு நன்றிகள் சார் !
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteவணக்கம், அருமையான் பாடம்.
அனைவருக்கும் தற்காலத்தில் தேவையான
பாடம்.
மிக்க நன்றி.
உங்கள் மாணவி
வணக்கம் ஐயா,
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு......பெரும்பாலோனோர் இதில் தன் வாழ்கையை தொலைத்திருகிரார்கள்....
2ம் அதிபதி 12ல்....தனகாரகன் குரு லக்னத்தில் மேலும் 2ம் அதிபதி சாரம் வாங்கிய கிரகம் லக்னத்தில் குருவுடன்.........
இவர்களுக்கும் இத்த பங்கு சந்தை வணிகம் பொருந்தும ஐயா....
அய்யா,
ReplyDeleteவணக்கம், அருமையான் பாடம்.
அனைவருக்கும் தற்காலத்தில் தேவையான
பாடம்.
மிக்க நன்றி.
உங்கள் மாணவி
சனி இரண்டில்(பரல் 1),இரண்டாம் அதிபதி குரு 9-ல் உச்சம்(பரல் 6) அம்சத்திலும் உச்சம்.சனியும், குருவும் வர்கோத்தமம்.
ReplyDelete2-ல் 28 பரல்கள்.ஆனால் குரு அமர்ந்த 9-ல் 23 பரல்கள்.பங்கு மார்க்கெட்டா அப்படின்னா?
பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன்.
ReplyDeleteநிறைய பேரின் வாக்குமூலம் இதுதான் ..
Yes. You are true...
Deleteவண்க்கம் ஐயா,உதாரண ஜாதகத்தில் 10ம் அதிபதி சுக்கிரன் 3ல் உச்சம், நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்,அவர் தொழில் சம்பாதித்துக்கொடுத்தால் 12லிருக்கும் சனியும்,குருவும் காலி பண்ணிவிடுவார்கள்,எனவே அவர் சம்பாதனையில் குறை இருக்காது,பணம் சேர்த்திவைப்பதில் ஜாக்கிறதையாக இருந்தால் போதும். என் கணிப்பு சரீங்களா? நன்றி ஐயா.
ReplyDelete////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஆஹா..!மிகவும் தேவையான பாடம்..!பங்குச்சந்தை என்பது ஒரு கவர்ச்சி.!விட்டில் பூச்சிகளே அதிகம்..!நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு தந்த வாத்தியார் ஐயாவிற்கு நன்றிகள்!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger renga said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்,
எச்சரிக்கை பாடம் அருமை. நன்றிகள்.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger அய்யர் said...
ReplyDeleteபங்கு சந்தை பற்றி ஊதிய
சங்கு எத்தனை பேர் காதில் விழும்
பங்கு சந்தை மட்டுமல்ல
கமாடிட்டி மற்றும் ஃபாரெக்ஸ் என
நாள் முழுதும் சம்பாதிக்கும் வாய்ப்பு
நமக்கு இருந்தும் நமக்கென இருப்பது எது?
அறிவுரை பாடம் தான்
அத்தனையும் அருமை..
அத்தோடு இந்த பாடலினை
அப்படியே சுழலவிட அனுமதியுங்கள்
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கி கொண்டாயோ
கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன்
சாமிகள் அடிதனில் சரண் புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
இறக்கம் உள்ளவரிடம் இருக்காத பணம்தானே
எங்கே தேடுவேன்////
எங்கேயும் தேட வேண்டாம். வர வேண்டிய அமைப்பு இருந்தால், அது தானாகவே வந்து சேரும்!
////Blogger KJ said...
ReplyDeleteSir, very useful lesson.
Some other aspects abt this horo:
1.budhan sukran-neesa bangam raja yogam
2.suriyan ucham(8 th place owner)
3.guru in his own house
4.sani seeing his own house(2nd)
basically this is a baapa-karthari yoga horo(lagnam locked)
Pl correct me sir if i analysed anything wrong./////
லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது முக்கியமான குறை!
Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteThank you for the lesson Sir./////
நல்லது. நன்றி ஆலாசியம்!
ReplyDelete////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
அருமையான பாடம்
குரு ஆறில் இரண்டாம் அதிபதி 12ல்
நன்றி/////
உங்கள் ஜாதகத்தில் அப்படி உள்ளதா? அவ்வாறு இருந்தால் பங்கு வணிகம் வேண்டாம்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல அறிவுரை ஐயா!நன்றிகள்/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Uma said...
பாடத்திற்கு நன்றிகள் சார் !////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உமாஜி!
////Blogger Lakhsmi Nagaraj said...
ReplyDeleteஅய்யா,
வணக்கம், அருமையான் பாடம்.
அனைவருக்கும் தற்காலத்தில் தேவையான
பாடம்.
மிக்க நன்றி.
உங்கள் மாணவி/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger raja said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
மிகவும் அருமையான பதிவு......பெரும்பாலோனோர் இதில் தன் வாழ்கையை தொலைத்திருகிரார்கள்....
2ம் அதிபதி 12ல்....தனகாரகன் குரு லக்னத்தில் மேலும் 2ம் அதிபதி சாரம் வாங்கிய கிரகம் லக்னத்தில் குருவுடன்.........
இவர்களுக்கும் இத்த பங்கு சந்தை வணிகம் பொருந்தும ஐயா...////.
இப்படி உதிரியான கிரக நிலைகளைக் கொண்டு பலனைப் பார்க்கக்கூடாது!
Blogger அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteசனி இரண்டில்(பரல் 1),இரண்டாம் அதிபதி குரு 9-ல் உச்சம்(பரல் 6) அம்சத்திலும் உச்சம்.சனியும், குருவும் வர்கோத்தமம்.
2-ல் 28 பரல்கள்.ஆனால் குரு அமர்ந்த 9-ல் 23 பரல்கள்.பங்கு மார்க்கெட்டா அப்படின்னா?//////
பங்கு மார்க்கெட் என்றால் ஷேர் மார்க்கெட்!
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteபங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன்.
நிறைய பேரின் வாக்குமூலம் இதுதான் //////..
உண்மைதான். பட்டுத் திருந்துபவர்கள்தான் அதிகம்! நன்றி சகோதரி!
////Blogger geetha lakshmi said...
ReplyDeleteவண்க்கம் ஐயா,உதாரண ஜாதகத்தில் 10ம் அதிபதி சுக்கிரன் 3ல் உச்சம், நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்,அவர் தொழில் சம்பாதித்துக்கொடுத்தால் 12லிருக்கும் சனியும்,குருவும் காலி பண்ணிவிடுவார்கள்,எனவே அவர் சம்பாதனையில் குறை இருக்காது,பணம் சேர்த்திவைப்பதில் ஜாக்கிரதையாக இருந்தால் போதும். என் கணிப்பு சரீங்களா? நன்றி ஐயா.////
பத்தாம் அதிபதி உச்சமாகி என்ன பயன். தன் வீட்டில் இருந்து ஆறாம் இடத்தில் உள்ளாரே?
////Blogger Sundarajan Nardarajan said...
ReplyDeleteYes. You are true...////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
பங்கு வணிகம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். ஓரளவுக்கு சம்பாதித்து விட்டால் போதும் என்று நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உள்ளதும் போய் விடும் வாய்ப்பு உள்ளது.
ReplyDelete/////Blogger Ak Ananth said...
ReplyDeleteபங்கு வணிகம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். ஓரளவுக்கு சம்பாதித்து விட்டால் போதும் என்று நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உள்ளதும் போய் விடும் வாய்ப்பு உள்ளது.////
போதும் என்று நிறுத்த மாட்டார்கள். சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதுதான் சிக்கல்! பட்டுத் திருந்தட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்!
////Lakhsmi Nagaraj has left a new comment on your post "Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!":
ReplyDeleteஅய்யா,
வணக்கம், அருமையான் பாடம்.
அனைவருக்கும் தற்காலத்தில் தேவையான பாடம்.
மிக்க நன்றி.
உங்கள் மாணவி /////
நல்லது. நன்றி சகோதரி!