மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7
ஜோதிடத் தொடர் - பகுதி 7

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள் மட்டும் - 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
7. பூசம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. விசாகம்
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. உத்திராடம்
17. திருவோணம்
18. சதயம்
19. பூரட்டாதி
20. உத்திரட்டாதி
21. ரேவதி
ஆகிய 21 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3,4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (12/2 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம்
( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

ஆயில்யம், மகம், பூரம், ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பொருந்தாது!
அதுபோல அதுபோல புனர்பூசம் 4ஆம் பாதமும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
விளக்கங்கள் அருமை. பதிவிற்கு நன்றிகள்.

KJ said...

Good morning sir. Useful posts.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றி

அய்யர் said...

///சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்///

முகரத்திற்கு பிறகு தான்
முகூர்த்தம் வைப்போம் என

தொடர்ந்து வரும் மாப்பிள்ளையை
தொடர்ந்து வந்த படியே

வருகை பதிவுடன்
வலமாக சுழலவிடுகிறோம் இப்பாடலை

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்

கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?

சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?

வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா?

மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா?

சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா?

தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா?

சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா?

தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா?

அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா?

அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா?

RAMADU Family said...

Guru Vanakkam,

Thanks for the Y.M.Y Series. Very informative.

RAMADU.

Ak Ananth said...

நான் பிறந்தது மிருகசீரிஷ நட்சத்திரம் 4ம் பாதத்தில். என் மனைவி பூர நட்சத்திரம். நான் பொருத்தம் பார்ப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. அதனால் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல எந்த பொருத்தத்தையும் பார்க்கவில்லை. இருப்பினும் 8 பொருத்தம் இருந்ததாக என் மனைவி வீட்டார் பார்த்துவிட்டு சொன்னார்கள்.

Ashwin Thiagarajan said...

வணக்கம் ஐயா,ஒரு வாரமாக அலுவலக காரணமாக கோவை வந்ததால் வகுப்பறைக்கு வரமுடியவில்லை,பாடங்கள் அனைத்தையும் படித்து விட்டு கருத்துரைக்கு வருகிறேன், நன்றி ஐயா

SP.VR. SUBBAIYA said...

////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள்,
விளக்கங்கள் அருமை. பதிவிற்கு நன்றிகள்./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
Good morning sir. Useful posts.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
///சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்///
முகரத்திற்கு பிறகு தான்
முகூர்த்தம் வைப்போம் என
தொடர்ந்து வரும் மாப்பிள்ளையை
தொடர்ந்து வந்த படியே
வருகை பதிவுடன்
வலமாக சுழலவிடுகிறோம் இப்பாடலை

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா?
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா?
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா?
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா?
சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா?
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா?
அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா?
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா?/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RAMADU Family said...
Guru Vanakkam,
Thanks for the Y.M.Y Series. Very informative.
RAMADU./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ராமுடுகாரு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
நான் பிறந்தது மிருகசீரிஷ நட்சத்திரம் 4ம் பாதத்தில். என் மனைவி பூர நட்சத்திரம். நான் பொருத்தம் பார்ப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. அதனால் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல எந்த பொருத்தத்தையும் பார்க்கவில்லை. இருப்பினும் 8 பொருத்தம் இருந்ததாக என் மனைவி வீட்டார் பார்த்துவிட்டு சொன்னார்கள்.////

உங்களின் நல்ல மனதிற்கு எல்லாம் தானாகப் பொருந்தும். நீங்கள் பார்க்கவே வேண்டாம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ashwin Thiagarajan said...
வணக்கம் ஐயா,ஒரு வாரமாக அலுவலக காரணமாக கோவை வந்ததால் வகுப்பறைக்கு வரமுடியவில்லை,பாடங்கள் அனைத்தையும் படித்து விட்டு கருத்துரைக்கு வருகிறேன், நன்றி ஐயா////

நல்லது. நன்றி நண்பரே! நேரம் கிடைக்கும்போது படியுங்கள். அவசரம் ஒன்றும் இல்லை!