மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.12.12

வருவது வரட்டும்!


வருவது வரட்டும்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானுக்காக இசைக்கப் பெற்ற ஒரு சிறந்த பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே!

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு
(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல்
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல்
(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே!
தருபவை தானே அதனாலே!

'பத்மஸ்ரீ' T.M. செளந்தரராஜன் அவ்ர்கள் பாடிய பாடல் இது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

kmr.krishnan said...

நல்ல பாடல்! நன்றி ஐயா!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நல்ல் பாடல்
நன்றி

ஜி ஆலாசியம் said...

வேலும் மயிலும் துணையுண்டு -மனம்
மேலும் கலங்கும் எதைக்கண்டு
நாலும் இரண்டும் நமக்குண்டு -அதை
நாளும் மறவாது வாழ்வதுண்டு
பாலும் துன்பப்பரவச இன்பம் -அதை
யாவும் சமமெனக் கொண்டு
வாழும் வகையை வழங்கும் -மனம்
தாழும் நின்திருவடிக் கண்டு
வேலும் மயிலும் கைக்கொண்டு -மூ
வேழுலகம் ஆளும் முருகா!

அருமையானப் பாடலுக்கு நன்றிகள் ஐயா!

raja said...

குருவுக்கு வணக்கம்,

நல்ல பாடல்......

மேலும்...கீழே உங்கள் பதிலை பார்தேன்....

please don't forgot to admit me...

மேலும் அந்த பதிவில் சனி சூரியன் பற்றி கேட்டுரிதேன்... அன்று அதற்கு பதில் கொடுக்கவில்லை....ஐயா.

இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9 க்கு உடைய சனி சூரியன் ....அம்சதில்....

அய்யர் said...

முருகா..
முருகா..

இராஜராஜேஸ்வரி said...

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே

வருவதை அவன் பிரசாதமாக ஏற்போம்...

M. Shanmugam said...

நல்ல பாடல் மிக்க நன்றி.

Tamil Portal

renga said...

அருமையான பாடல் நன்றி அய்யா.

Unknown said...

Dear Sir, Could you please give more examples for accident.

udaya kumar said...

Ayya please share audio like