மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.12.12

Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

அந்தக்காலத்தில், அதாவது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பால்ய விவாகம் நிலவியது. ஒவ்வொரு வீட்டிலும் நிறையக் குழந்தைகள். குடும்பக்கட்டுபாடு என்றால் என்ன என்பதே தெரியாத அல்லது கவலைப் படாத காலம் அது.

தங்கள் குழந்தைகளுக்கு பத்து முதல் 13 வயதிற்குள் திருமணத்தை செய்து வைத்தார்கள். ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் அப்போது கிடையாது. உறவுகளுக்குள்தான் திருமணங்கள். அதனால் கோளாறான ஜாதகங்களை உடைய பெண் குழந்தைகள், பதினைந்து வயது அல்லது பதினாறு வயதிலேயே விதைவையான அவலங்கள் (கதைகள், சம்பவங்கள் எல்லாம்) நிறைய உண்டு. அனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் திருமணங்கள் நடந்தன. வரதட்சினைக் கொடுமைகள் எல்லாம் அப்போது இல்லை.

என் தந்தைக்கு, அவருடைய பதினோறாவது வயதில் திருமணம் ஆனது! அதனால் பால்ய விவாகங்களைப் பற்றி, அவர் சொல்ல கேட்டு, எனக்குப் பலகதைகள் தெரியும்!

பவுன் விலை ( Price of 8 grams of Gold) பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம் அது! மாதம் ஆறு ரூபாயில் ஒரு தம்பதியர் தங்கள் குடும்பத்தை நடத்தலாம்.

இன்று முடியுமா? நினைத்துப் பாருங்கள்! கோவையில் ஒரு நல்ல ஃபில்டர் காப்பியின் விலை இருபது ரூபாய். ஒரு எலட்ரீஷியன் அல்லது ஒரு கார்பெண்ட்டரின் ஒரு நாள் கூலி 500 முதல் 650 ரூபாய் வரை உள்ளது.

அதற்குப் பிற்கு (அதாவது 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு) பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும் பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

இப்போது தலைகீழ் மாற்றம். படிப்பு, வேலை வாய்ப்பு, தோது (வரதட்சினை) குடும்பத்தின் சமூக அந்தஸ்து (Status) என்று பல காரணங்களால் திரும்ணங்கள் தள்ளிக்கொண்டே போகின்றன. தாமதமாகிக் கொண்டே போகின்றன. இரு பாலருக்கும் அது பொருந்தும். சராசரியாக 28 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் இப்போது  நடைபெறுகின்றன. சிலருக்கு 30 அல்லது 32 வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கிறது.

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சில, 36 வயதாகியும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் அதே எண்ணிக்கை உடைய பெண்களிடம் இருந்து வரும். 36 வயது என்னும் போது, பெண்ணின் வசந்தகாலத்தில் 23 வருடங்கள் காலியாகியிருக்கும். 13 வருடங்களே பாக்கியிருக்கும். ஆண்களும் 18 வயதிற்கு மேல் 36 வ்யதிற்கு மேல், இடையில் சென்ற 18 வருடங்களில் தங்களது வாலிப சேட்டைகளால், பல தீய பழக்கங்களுக்கு (என்ன பழக்கங்கள் என்று எழுத்தில் எழுத முடியாது)  ஆளாகியிருப்பார்கள். சிலர் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுடைய ஒழுக்கத்திற்குத் தலை வண்க்கிவிட்டு மேலே தொடர்வோம்!.

மிகவும் தாமதமான திருமணம் என்பதெல்லாம் ஒரு திரைப்படத்தை இடைவேளைக்குப் (interval) பிற்கு சென்று பார்ப்பதைப் போன்றது

ஆகவே, வேலை, கிடைக்கின்ற சம்பளம், ஸ்ரீதனம் என்று எந்தக் கருமத்தையும் பார்க்காமல் உரிய காலத்தில், அட்லீஸ்ட் 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் உத்தமம்

இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்!
-----------------------------------------------------
பெரும்பாலும் இன்று அனைவரும் ஜாதகம் பார்த்துத்தான் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது, தங்கள் பெண்ணிற்கு அல்லது பையனுக்கு பத்துப் பொருத்தங்கள், தோஷம், தசா சந்திப்பு போன்ற விஷ்யங்களை மட்டுமே பார்ப்பார்கள். பொருந்தவில்லை என்றால் பொருத்தமான வரனைத் தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். அப்படி அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

ஆனால் ஒன்றை மட்டும் பார்க்க மறந்து விடுவார்கள். அதாவது தங்கள் பையனுக்கோ அல்லது பெண்ணிற்கோ திருமண யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை மட்டும் பார்க்கத் தவறிவிடுவார்கள்.

திருமண பாக்கியம் இல்லாத (Horoscope with denial of marriage) ஜாதகத்திற்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து முயன்றாலும், திருமணம் ஆகாது. திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் பலர் உள்ளார்கள். வாலிபம் காலாவதியாகி, தலை முடியெல்லாம் கொட்டிப்பொய் 50ஐத் தொடும் வயதில் உள்ள முதிர் இளைஞர்களையும் எனக்குத் தெரியும்!

அதுபோன்று, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் 1940ஆம் ஆண்டு பிறந்தவர். கடைசிவரை திருமணமே ஆகவில்லை. ஜாதகரும் தற்சம்யம் உலகில் இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஜாதகருக்கு திருமணத்திற்கான டிக்கெட் கிடைக்கவில்லை! களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான். டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!

கீழே ஜாதகம் உள்ளது: பாருங்கள்:


கன்னி லக்கின ஜாதகர். மிருகசீரிஷ நட்சத்திரம். லக்கினத்திற்கு ஏழில் அந்த வீட்டின் அதிபதி இருக்கிறார். உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் இருக்கிறார். அத்துடன் அவர் களத்திரகாரகர். காரகர் வீட்டில் இருந்தால் பாவநாசம் என்பார்கள். அதை எல்லாம் விட முக்கியமாக கேது அங்கே காண்ட்ராக்ட் போட்டு குடியிருக்கிறார். அவர் அந்த வீட்டின் பாக்கியங்களைக் கெடுத்து வைத்தார். உடன் இருந்தே கெடுத்து வைத்தார்

நாம் நமது அஷ்டகவர்க்கப் பாடத்திற்கு வருவோம்.

ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்

சராசரி எண்ணான 28ல் பாதி மதிப்பெண்தான் பெற்றுள்ளார்கள். அதாவது பாதிக்கிணற்றை மட்டும் தாண்டினால் என்ன ஆகுமோ அது நடந்துள்ளது

இது அஷ்டகவர்க்கப் பாட வகுப்பில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இங்கே வலை ஏற்றியுள்ளேன். இன்னும் 5 அல்லது 6 மாத காலத்தில் அஷ்டகவர்க்கப்பாடங்கள் புத்தக வடிவில் வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

34 comments:

அய்யர் said...

SONIA is turns to 66 today..
SONA(இந்தியில் sona என்றால் gold) is also like to take a turn today

இன்னமும் தங்கம் விலை கூடப் போகிறது
இந்தியாவில் மட்டும் தங்கத்தின் மோகம் குறையவில்லை

பதிவில் குறிப்பிட்ட தங்கத்தின் விலையை
படித்தவுடன் பகிர்ந்து கொண்ட செய்தி

ஆவலுடன் எதிர்நோக்கிறோம்
அஷ்ட வர்க்க புத்தகத்தை

முன்னர் பதிவு செய்த புத்தகம்
முறையாக வெளியாகும் காலம் சொன்னால் நன்று

தயாராக இருக்கிறோம் எங்களை
தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்

இன்றைய பதிவிற்கேற்ப சுழலவிடும்
இந்த பாடல் இதோ..

கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி

பொருத்தம் தானா நீ யோசி அது
பொருந்தாவிட்டால் சன்னியாசி


இராஜராஜேஸ்வரி said...

களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான். டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!

யனுள்ள தகவல் ஐயா..

KJ said...

Good morning sir.

Very useful lesson with good example. Maanthi in second place is also not good position. Also 2nd place owner again sukran here who is with kethu.

And I don't understand this sentence sir. 'kaaragar veetil irupathu paavanasam'. What it means. Pl explain.

Thanks,
Sathishkumar GS

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றி

அய்யர் said...

Freezerல் வைத்த ஐஸ்கீரிம்
எப்படி உருகும் தெரியவில்லை..

Freezerலே வைத்திருந்தால்
எப்படி சுவைக்கும்..

பதிவில் கலந்தமைக்கு நன்றி
படமும் கருத்தும் காலத்திற்கு ஏற்றதல்ல

மனமுவந்து ஆனந்த முருகன்
மாற்றம் செய்(வீரா) ??

வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்

eswari sekar said...

vanakam sir inrya padam arumai ...

Ravindranath said...

Sir,
what will be the result when karagar planet see his own place.
i.e., venus seen his 7 house

Ravindranath said...

Sir,
What will be the result when karaga planet seen his own place.
i.e., venus see his own place.

kmr.krishnan said...

களத்திரகாரகனும், கேதுவும் களத்திர ஸ்தானத்த்லேயே நின்றதால் திருமணம் ஆகவில்லை என்பது சரிதான். ஆனால் கூடவே ஆட்சி பெற்ற குரு நின்றதும் பயன் அளிக்கவில்லை என்பது சோகம்தான்.

குடும்ப ஸ்தானத்தில் மாந்தி! சந்திரன் தனித்து விடப்பட்டது!களத்திர ஸ்தனத்திற்கு இருபுறமும் சூரியன், செவ்வாய், சனி ஆகியவர்களுடைய முற்றுகை! லக்கினத்திலேயே ராகு!

இவையனைத்தும் சேர்ந்து திருமணம் ,குடும்பம் அமையாமல் செய்துவிட்டனர்.
பதிவுக்கு நன்றி ஐயா!

ananth said...

//ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்//

குடும்பஸ்தாதிபதி மீண்டும் அதே சுக்கிரன். அதே 15 பரல்கள். இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அஷ்டக வர்கம் எப்படியோ போகிறது, வேறு அம்சமாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், குடும்ப ஸ்தானத்தில் மாந்தி, அவர்களை 7ம் பார்வையாக சனியும், செவ்வாயும் பார்க்கிறார்கள். குடும்பம் எப்படி அமையும். இந்த மூவரும் அமையதான் விடுவார்களா.

arul said...

we are waiting eagerly for your books sir

KJ said...

Sir, as our krishnan sir said, seventh place is surrounded by baapa karthari yogam. Suriyan, sevvai, sani on both sides. All three planets locked in that. Guru , sukran, kethu, That's major reason i guess.

thanusu said...

நல்ல பாடம் அய்யா இன்று . இந்த ஜாதகத்தில் செய்வாய் தோஷம், குருவின் கேந்திராதிபத்ய தோஷம் இவையும் சேர்ந்துக்கொண்டு வகையாக அமர்ந்து விட்டார்கள்.

இதற்கு நேர்மாறாக சில கல்யாணராமன்கள் மூச்சுமுட்ட பல கல்யாணம் சர்வ சாதரனமாக செய்கிறார்கள் அந்த மாதிரி ஜாதகத்தையும் அலசினால் நன்றாக இருக்கும்.

sundari said...

good evening sir
present sir

Virichigam said...

Respected Guruji.Excellent lessons.Its very much true people never ask the the question,whether one is destined for married life, if, so when.Everbody taking it for granted that if, one has money and status one will get settled in marital life.But, its NOT TRUE is the fact. In your example 5th lord is Saturn [lord of Puthra sthanam] is Neecha with 8th lord Mars and in 8th and aspects the 5th house too, also shows difficulty inget marital life.Vrichigam

SP.VR. SUBBAIYA said...

//////Blogger அய்யர் said...
SONIA is turns to 66 today..
SONA(இந்தியில் sona என்றால் gold) is also like to take a turn today
இன்னமும் தங்கம் விலை கூடப் போகிறது
இந்தியாவில் மட்டும் தங்கத்தின் மோகம் குறையவில்லை
பதிவில் குறிப்பிட்ட தங்கத்தின் விலையை
படித்தவுடன் பகிர்ந்து கொண்ட செய்தி
ஆவலுடன் எதிர்நோக்கிறோம்
அஷ்ட வர்க்க புத்தகத்தை
முன்னர் பதிவு செய்த புத்தகம்
முறையாக வெளியாகும் காலம் சொன்னால் நன்று
தயாராக இருக்கிறோம் எங்களை
தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்
இன்றைய பதிவிற்கேற்ப சுழலவிடும்
இந்த பாடல் இதோ..
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி அது
பொருந்தாவிட்டால் சன்னியாசி/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger இராஜராஜேஸ்வரி said...
களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான்.

டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!
பயனுள்ள தகவல் ஐயா../////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...


////Blogger KJ said...
Good morning sir.
Very useful lesson with good example. Maanthi in second place is also not good position. Also 2nd place owner again sukran

here who is with kethu.
And I don't understand this sentence sir. 'kaaragar veetil irupathu paavanasam'. What it means. Pl explain.
Thanks,
Sathishkumar GS/////

அந்தச் செய்தி பண்டைய நூல்களில் உள்ளது. அதை விளக்க எழுதிய முனியைத்தான் பிடித்து இழுத்துக்கொண்டு வரவேண்டும்! சாத்தியமுள்ளதா சொல்லுங்கள்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...


////Blogger அய்யர் said...
Freezerல் வைத்த ஐஸ்கீரிம்
எப்படி உருகும் தெரியவில்லை..
Freezerலே வைத்திருந்தால்
எப்படி சுவைக்கும்..
பதிவில் கலந்தமைக்கு நன்றி
படமும் கருத்தும் காலத்திற்கு ஏற்றதல்ல
மனமுவந்து ஆனந்த முருகன்
மாற்றம் செய்(வீரா) ??
வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்/////

அது அவருடையதல்ல. மாற்றம் செய்தாகிவிட்டது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vanakam sir inrya padam arumai .../////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ravindranath said...
Sir,
what will be the result when karagar planet see his own place.
i.e., venus seen his 7 house/////

ஏன் உங்களுக்கு அப்படி உள்ளதா? அது நன்மையானது. உரிய காலத்தில் ஜாதகனுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
களத்திரகாரகனும், கேதுவும் களத்திர ஸ்தானத்த்லேயே நின்றதால் திருமணம் ஆகவில்லை என்பது சரிதான். ஆனால் கூடவே ஆட்சி பெற்ற குரு நின்றதும் பயன்

அளிக்கவில்லை என்பது சோகம்தான்.
குடும்ப ஸ்தானத்தில் மாந்தி! சந்திரன் தனித்து விடப்பட்டது!களத்திர ஸ்தனத்திற்கு இருபுறமும் சூரியன், செவ்வாய், சனி ஆகியவர்களுடைய முற்றுகை!
லக்கினத்திலேயே ராகு!
இவையனைத்தும் சேர்ந்து திருமணம் ,குடும்பம் அமையாமல் செய்துவிட்டனர்.
பதிவுக்கு நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ananth said...
//ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்//
குடும்பஸ்தாதிபதி மீண்டும் அதே சுக்கிரன். அதே 15 பரல்கள். இதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அஷ்டக வர்கம் எப்படியோ போகிறது, வேறு அம்சமாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், குடும்ப ஸ்தானத்தில் மாந்தி, அவர்களை 7ம் பார்வையாக சனியும், செவ்வாயும் பார்க்கிறார்கள். குடும்பம் எப்படி அமையும். இந்த மூவரும் அமையத்தான் விடுவார்களா./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
we are waiting eagerly for your books sir/////

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! புத்தகம் விரைவில் வெளிவரும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Sir, as our krishnan sir said, seventh place is surrounded by baapa karthari yogam. Suriyan, sevvai, sani on both sides. All

three planets locked in that. Guru , sukran, kethu, That's major reason i guess./////

இப்படித் தோண்டத் தோண்ட நிறையக் கிடைக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
நல்ல பாடம் அய்யா இன்று . இந்த ஜாதகத்தில் செய்வாய் தோஷம், குருவின் கேந்திராதிபத்ய தோஷம் இவையும் சேர்ந்துக்கொண்டு வகையாக அமர்ந்து விட்டார்கள்.
இதற்கு நேர்மாறாக சில கல்யாணராமன்கள் மூச்சுமுட்ட பல கல்யாணம் சர்வ சாதரனமாக செய்கிறார்கள் அந்த மாதிரி ஜாதகத்தையும் அலசினால் நன்றாக
இருக்கும்////.

அலசுவோம். அதற்கான ஜாதகம் உள்ளதா என்று பார்க்கிறேன். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger sundari said...
good evening sir
present sir////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Virichigam said...
Respected Guruji.Excellent lessons.Its very much true people never ask the the question,whether one is destined for married
life, if, so when.Everbody taking it for granted that if, one has money and status one will get settled in marital life.But, its NOT TRUE is the fact. In your example 5th lord is Saturn [lord of Puthra sthanam] is Neecha with 8th lord Mars and in 8th and aspects the 5th house too, also shows difficulty inget marital life.Vrichigam/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Bhuvaneshwar said...

Strong Poorva Punyam also did not help! Sad.

Murugan said...

Sir,
How to purchase the books written by you...

manikandaprakash said...

காலத்திறகாரகர், காரகர் விட்டில் இருந்தால் பாபா நாசம் ? அர்த்தம் புரிய
வில்லையே அய்யா? கேதுவை போல ராகுவிற்கும் அது பொருந்துமா? காரகர் விடு வேறு வீடாக இருந்தாலும் பொருந்துமா? எ.கா தனுசு?

manikandaprakash said...

மற்றும் ஒரு சந்தேகம் பாபகர்ததிபதி தோஷத்தில் சூரியனை கணக்கில் கொள்ள வேண்டுமா ?

trmprakaash@gmail.com said...

ayya, indha paadathil yaarume laknadhibadhi 6il 12m veettu adhibadhiyudan iruppadhai kurippidaathu perum kurai, ungalaiyum sethu. thanks. mu.prakaash