மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

ஜோதிடத் தொடர் - பகுதி 5

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
5. ரோஹிணி நட்சத்திரம் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் இங்கே (ரிஷபத்தில்) உச்சம் அடைவார். இந்த நடசத்திரத்திற்குப் பெரும்பாலான நட்சத்திரங்கள் பொருந்தும். விவரம் கீழே தந்துள்ளேன்!

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. ஆயில்யம்
7. உத்திரம்
8. சித்திரை
9. விசாகம்
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. உத்திராடம்
15. அவிட்டம்
16. பூரட்டாதி
17. உத்திரட்டாதி
18. ரேவதி
ஆகிய 18 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராட நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரோஹிணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு உத்தமமான பொருத்தம் ஆகும்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பூசம் (இது மட்டும் மத்திம பொருத்தம்) அதாவது சராசரி - average . சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது 

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

பத்து=தச விதப் பொருத்தம் என்பார்கள் ஆனால் அதில் 11 பொருத்தம் பார்க்க வேண்டும்!
நட்சத்திரப் பொருத்தம் என்பது ஏதொ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்தான் என்றும், மற்ற மற்ற சமூகத்தவர்களுக்கு எந்தஎந்த‌ப் பொருத்தம் கட்டாயம் என்பதாகவும் இன்றளவும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டு வருகிறார்கள்.ரஜ்ஜுப் பொருத்தம்தான் அனைத்து சமூகத்தவருக்கும் பொது.

அடிக்கடி பொருந்தக்கூடிய நட்சத்திரம் கேட்டு நண்பர்கள் வருவார்கள். உங்க‌ள் தொடர் பதிவுகள் அவர்களுக்குப் பதில் சொல்ல நல்ல உபயோகம்.மிக்க நன்றி அய்யா!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்.
நன்றி.

Bhuvaneshwar said...

Dear Sir, I have a doubt. Why is 6/8 position avoided? It would be nice if you could expound upon that.
Thanks.
Bhuvanesh

Bhuvaneshwar said...

Dear Sir,
When you mentioned about Rohini and the Moon getting exalted, it may also be remembered that Chandra incurred the curse of Daksha Prajaapathi (the father of 27 stars given in marriage to Chandra), because he had partiality (special love) for Rohini. It is quite fitting that the moon would be exalted in Rohini!

Bhuvaneshwar said...

One more thing: Related to Rohini.

Pandavas set out from Hastinapuram to Varanavatham (arakku maaligai)in phalguni/panguni month Rohini star day! This is from Vyasa Bharatham! I am saying this, as it is related to Rohini star.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said..
பத்து=தச விதப் பொருத்தம் என்பார்கள் ஆனால் அதில் 11 பொருத்தம் பார்க்க வேண்டும்!
நட்சத்திரப் பொருத்தம் என்பது ஏதொ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்தான் என்றும், மற்ற மற்ற சமூகத்தவர்களுக்கு எந்தஎந்த‌ப் பொருத்தம் கட்டாயம் என்பதாகவும் இன்றளவும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டு வருகிறார்கள்.ரஜ்ஜுப் பொருத்தம்தான் அனைத்து சமூகத்தவருக்கும் பொது.
அடிக்கடி பொருந்தக்கூடிய நட்சத்திரம் கேட்டு நண்பர்கள் வருவார்கள். உங்க‌ள் தொடர் பதிவுகள் அவர்களுக்குப் பதில் சொல்ல நல்ல உபயோகம்.மிக்க நன்றி அய்யா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்.
நன்றி./////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

அய்யர் said...

சுழலவிட இன்று பதிவிற்கேற்ற இந்த பாடல்
சுவைத்து மகிழ ரசித்து மணக்க..

....
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்

இரவில் சோளதட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்

நொண்டி காலு நண்டு பொண்ணு நாட்டியமாம்
நொற தவளை மேளதாள வாத்தியமாம்

நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம்
நட்டாங்கூட்டு தண்ணீரே பன்னீராம்

புஞ்சை காட்டு குருவித்தலை போட்டுக்கொள்ள வெத்தலையாம்

வ‌ந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்

(MSRன் இனிய குரலை கேட்டு .. சோத்துக்கு எங்க வீட்டுக்கு வாங்கன்னு யாராவது கூப்பிட போறங்க.. :) :))