மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.12.12

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே
எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே
இணையத்தின் விதியதை உணரட்டுமே
என்னாளும் கலக்கம் கொள்ளட்டுமே!


(புரட்சித்தலைவரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்னும் பாடலை கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்)

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமமானது. ஒரு இளம் பெண், அதுவும் அழகான இளம் பெண் திறந்த வெளியில்தினமும் குளித்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதை விவரிக்க வேண்டியதில்லை.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வகுப்பறையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆறு ஆண்டுகளில் இதுவரை 1277 பதிவுகள வெளிவந்துள்ளன

3,654 தொடர்பாளர்களும், கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களுமாக சுமார்  
5, 000 வாசகர்கள் எனக்குக் கிடைத்துள்ளார்கள். அது மகிழ்ச்சி தரும் விஷ்யம். அதே நேரத்தில் என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் திருட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. அது மகிழ்ச்சி தரும் விஷயமல்ல. திருடுகிறவர்கள் அவற்றைத் தாங்கள் எழுதியதைப் போன்று தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான், என் அரிய நேரத்தைச் செலவழித்து இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலான நேரத்தில்
எழுதுவதை, திருடர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று 2 நிமிடங்களில் copy & paste முறையில் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் என்ன ஆதாயம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

நமது வகுப்பறைக் கண்மணிகள் பலர் எனக்குத் திருட்டுக்களைச் சுட்டிக் காட்டினார்கள் (முன்பு வந்த, அவர்களுடைய கடிதங்களில் சிலவற்றை, உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.)

Right side click செய்து பிரதி எடுப்பதைச் சாத்தியமில்லாதபடி செய்து வைத்திருக்கிறேன். ஆனால் திருடர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. அந்த வழியாக வந்துதிருடிக்கொண்டு போய் விடுகிறார்கள். நமது வலைப் பதிவை, உறுப்பினர்களுக்கு மட்டும் என்று வரையறுத்துவிடலாம். ஆனால் நூறு பேர்களை மட்டும் தான் உறுப்பினர் ஆக்க முடியும். கூகுள் ஆண்டவர் அதற்கு மட்டும்தான் அனுமதியளிப்பார்.

நம்து வகுப்பறை நண்பர் சித்தூர் முருகேசன் அவர்கள் பூட்டுப் போட்டு வையுங்கள் என்று அறிவுறுத்தினார். வலைத்தளங்களுக்கு எப்படிப் பூட்டுப் போடுவது? ஆகவே மேல்நிலைப் பாடங்களையும், அஷ்டகவர்கப் பாடங்களையும் தனி இணைய தளங்களில் (My own websites) எழுதி வருகிறேன். அங்கேயும் திருடர்கள் நுழைய முடியாதபடி எச்சரிக்கையாக இருக்கிறேன்.
------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி வந்த வாசகர் கடிதங்களில் சில:

1  
Rajaramarunagiri <...............@gmail.com>
  
12 Apr’ 2012
      
to spvrsubbiah, me
பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர்,
                           அவர்களுக்கு தங்களது வகுப்பறையிலிருந்து சில ஆக்கங்களை ஒரு உத்தமர் திருடிக்கொண்டுபோய் அவரது வலைத்தளத்தில் தான்
உருவாக்கியது போல் மேக்கப் போட்டுள்ளார்.அந்தத் தளத்தின்  முகவரி http://jothidamkarka.blogspot.com/2012/01/blog-post.html இது தாங்களும் சென்று
பாருங்கள்.எல்லாமே பகல்கொள்ளையாக இருக்கிறது. அடுத்தவர் உழைப்பைத் திருடி வெறும் cut&Paste மட்டுமே செய்துள்ளார்.வேண்டுமானாலும் ஒன்று செய்யலாம்
select  செய்யாதவாறு செய்தால் copy யும் செய்யமுடியாது.

Yours Friendly,
Rajaram.AR
-----------------------------------------------------------
2
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடு போகின்றன
திருட்டுக்கள்
    x
Bhuvaneshwar ||| Dharmalingam <.................................@gmail.com>  
11 May’ 2012
      
to me
அன்பரே, வணக்கம்,
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடுபோவதாக நான் எண்ணுகிறேன்.இதோ, உதாரணமாக:  http://www.amanushyam.com/2012/05/blog-post_3461.html .... யதிர்சையாக பார்த்தேன்...... சொல்ல வேண்டும் யென
தோன்றியது......எதையாவது பண்ணி, copy paste பண்ணுவதை தடுங்கள். சில blog களில் இந்த வசதியை நான் பார்த்து இருக்கிறேன். எப்படி என தெரியாது எனக்கு. தெரிந்தால் சொல்லி விடுவேனே........

Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
------------------------------------------------------------------
3
srinivasan  <........................@yahoo.com>
12/09/2011      
to me
Dear sir,

Today  I had some free time & I am aware that  our classroom lesson is closed for one week. But with Google help  just I was roaming in the web World & observed your lessons are copied by one blog named after AKGUPTA. I have observed even the words are also same Dito of our classroom lessons.Please take care about this fellow.

Thanks & Regards
G.Seenivasan
-------------------------------------------------------------
4
S.Prabhu Navaneethakrishnan <..................................@gmail.com>  
20/04/2011      

Hello Sir,

Hope all is well. I'm one of the student who is following your blog from 2008 and dormant for a while due to work. I happened come across this site in which he copied some of our articles. Though he has some articles of his own, I feel its my responsibility to let you know this. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6484

God Bless you.
S.Prabhu Navaneethakrishnan <................................@gmail.com>
--------------------------------------------------------------  
நான் அவ்வாறு வந்த கடிதங்களுக்கு இப்படிப் பதில் எழுதினேன்:

இணையத்தில் பாதிப்பேர் அடுத்தவர்களுடைய எழுத்துக்களைத் திருடித் தங்களுடையதைப்போலப் பதிவிட்டுக்கொள்கிறார்கள். அற்பர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எல்லாம் சாத்தியமில்லை. இணையத்தில் எழுதுவது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம். ஒருவர் மட்டுமல்ல. நிறையப் பேர்கள் திருடிப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் துணையோடு போராடலாம். தற்சமயம் அதற்கு நேரமில்லை.நமது மண்ணில் அது சாத்தியமுமில்லை. உங்களின் தகவலுக்கு நன்றி!
-----------------------------------------------------------------
இதுவரை 622 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் படிப்பதற்கும் கிடைக்கும், திருடிக்கொண்டு போவதற்கும் கிடைக்கும்.

ஜோதிடம் பொதுவானதுதான். எனக்கு மட்டும் சொந்தமானதில்லை. ஒவ்வொருவரும் பழைய ஜோதிட நூல்களைப் படித்து, தங்கள் சொந்த நடையில் எழுதினால் அல்லது கற்பித்தால் தவறில்லை. அடுத்தவனுடைய ஆக்கத்தை, எழுத்தைக் கூசாமல் திருடுவது எப்படி நியாயம் ஆகும்?

ஜோதிடம் பெரிய கடல். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாமல் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுதலாம். ஆனால் இப்படி அநியாயமாகத் திருடிக் கொண்டுபோனால் என்ன செய்வது?

தனி இணையதளங்களான classroom2012 & classroom337 ஆகிய இரண்டிலும், பாடங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த 3 இடங்களிலும் எழுதுவதைச்
சிரமாகக் கருதுகிறேன். நேரம் இனமை, மின்வெட்டு ஆகியவை முக்கியமான காரணங்கள். அத்துடன் எனது வியாபார மற்றும் சொந்த அலுவல்கள் எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன

புத்தாண்டில் ஒரு இடத்தில் மட்டுமே எழுத முடியும் என்னும் நிலைமை!
இன்னும் 5 தினங்களில் புது ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டில் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதலாமா? அல்லது வேண்டாமா?

வகுப்பறையை மூடிவிடலாமா?

அல்லது வகுப்பறையில் ஜோதிடத்தைத் தவிர்த்து வேறு எதையாவது எழுதலாமா?

உங்களுடைய மேலான ஆலோசனை வரவேற்கப்படுகிறது?

எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com.

அக்கறை, ஆர்வம்  உள்ளவர்கள் அனைவரும் உங்களுடைய மேலான கருத்துக்களை எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30 comments:

Bhuvaneshwar said...

அன்பிற்குரிய ஐயா,

காலை வணக்கம்.

தங்களுக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு அத்துணை அறிவு உடையவனல்லன் யான்.

நாம் சிரமப்பட்டு எழுதுவதை இன்னொருத்தர் நோகாமல் தூக்கிக்கொண்டு பதிவிடுவது பல பதிவர்களுக்கு உள்ள தலை வலி.

இது வரை யாரும் செய்யாத ஒரு செயலை தாங்கள் செய்கிறீர்கள். ஜோதிடத்தில் இவ்வளவு எளிமையாக அதே சமயம் கண்ணியமாக அதே சமயம் ஆழத்தை விட்டுக்கொடுக்காமல் இன்னொருத்தர் எழுதியதாக நான் அறியவில்லை. திருடு போகத்தான் செய்யும். ஒரு நூலாக வந்து விட்டால் போதும். அது வரை மின்னஞ்சலில் பாடம் நடத்துங்கள். யார் யார் திருட மாட்டார்கள் என உங்களுக்கே தெரியும் அல்லவா? அவர்களுக்கு முன்பு போல மின்னஞ்சலில் நடத்துங்கள். நூலாக வெளி வந்ததும் வாங்கி படித்து கொள்ளட்டும் பிறர். அதுவரை நான் மதுரை புது மண்டபத்தை நோட்டம் விட்டு நோண்டுகிறேன்.

இப்படி ஏன் சொல்லுகிறேன் எனில், நாளை நூல் வரும் போது திருடன்/திருடி யாராவது வந்து இது என்னுடையது என சொல்லி வம்பு பண்ணினால் தேவை இல்லாமல் கால விளம்பம் ஆகும். Feed Burner மூலமாக இந்த பதிவை வலையில் முதலில் ஏற்றியது நீங்கள் தான் என நிரூபிக்க இயலும். ஆனால் அலைய வேண்டி வரலாம். இந்த வயதில் உங்களுக்கு அது தேவையா? பிரபல இளம்பதிவர் லாவண்யா அவர்கள், இது போல தனது பதிவுகள் திருடப்பட்ட போழ்து, தனது என நிரூபிக்க இதை செய்தார் எனபது இங்குள்ள சிலருக்கு தெரியலாம். ஆனால் அவர் விஷயம் வழக்கு வரை போகாமல் சுமுகமாக முடிந்தது.

உங்கள் தொடர்கள் பல தனி நூலாக வர தகுதி உடையவை. உதாரணம் யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர். இது தனி நூலாக வரின், திறமான பொருத்தம் பார்க்க மட்டுமே ஆசை உள்ளவர் வாங்கி படிப்பார். அதாவது ஜோதிட நூலை முழுதாக இரண்டாயிரம் ரூபாய் தந்து வாங்க மாட்டார் ஆனால் இதை மட்டும் கொடுத்தால் வாங்குவார், ஏன் எனில் அவர் தேவை அப்படி. அதனால் அந்த தொடரில், சில பல ஜாதக அம்சங்களையும் போடுங்கள். நக்ஷத்திரம் பொருத்தம் மட்டும் இல்லாமல், வதுக்களின் ஜாதகத்திலும் இன்னின்னதை பார்க்கணும் என்றும் போட்டு வைக்கலாம். சரி இதெல்லாம் இந்த பதிவின் எல்லையை மீறும் கலந்துரையாடல்.

IPR – Intellectual Property rights உங்களுடையவை. யார் எதை தனது அறிவால் படைத்தாலும் காப்புரிமை தானாக வந்து விழும் என்கிறது சட்டம். நீங்கள் free copyrights லோகோ எல்லாம் போட்டது மூடர்களுக்கான அறிவிப்பு. அது போடாவிட்டாலும், நீங்கள் எழுதிய படைப்பு உங்களுடையது தான். நான் எழுதுவது என்னுடையது தான். சட்டம் சொல்வது. நம் நாட்டுள் சட்டப்புலி எத்தனை அடி பாயும்? என்ன வேகத்தில் பாயும்? அய்யே, காலங்காத்தால நான் வேற காமெடி பண்றேனே.........

+++++

வகுப்பறையில் மாணவர் மலர் மீண்டும் தொடங்கலாமா?

+++++

இந்த நாள் மிக்க பயன் உள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

+++++

அன்புடன்
புவனேஷ்
ஸ்கூல் பையன் said...

பாடங்களை படங்களாகப் போடுங்கள். அதாவது எழுதியதை picture format _ இல் வெளியிடுங்கள். அந்தப்படத்தில் வாட்டர்மார்க் இணைத்திடுங்கள். கண்டிப்பாக அந்தப் பதிவர்கள் அதைப் பார்த்து தட்டச்சு செய்ய சோம்பேறித்தனப்பட்டு நிறுத்திவிடுவார்கள்... ஒரே ஒரு பிரச்சனை, தேடுபொறிகளில் வார்த்தை கொண்டு தேட முடியாது....

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்'
உங்களுக்கு எது நல்லது என்று நினைகின்றிக்ளோ!
அதுவே பழனியப்பன் செயல்,
நல்லது நடக்கவேண்டும் என்று
பழனியப்பனை வேண்டிக்கொள்கிறேன்.
முருகா!முருகா!
நன்றி

kmr.krishnan said...

கட்டண வலைதளமாக மாற்றி தனியான வலைதளத்தில் முறையான பயிற்சியை அளிக்கலாம்.

வகுப்பறை 2007ல் சோதிடச் செய்திகள் முற்றிலும் நிறுத்தப்படுமாயின் வருகை குறைந்துவிடும்.

'சோதிடம் கற்க' வலைதளத்தில் ஒரு நூதனமான 'டிஸ்கிளைமர்' கொடுத்துள்ளார்கள். அதாவ‌து அவர்கள் வலைப்பூவில் வருவது வேறு யாரோ பெரியவர்கள் எழுதியதைத்தான் வெளியிடுகிறார்களாம். அதனை அவர்களது வாசகர்கள் அனுப்பி வைப்பதைத்தான் வெளியிடுகிறார்களாம். அதனால் அவர்கள்
எவ்வகையிலும் இந்தத் திருட்டுக்குப் பொறுப்பு இல்லையாம்.!!!!

eswari sekar said...

vanakam sir jothidam ezuthuvathi . muttum .nirruthrigal ..please..

redfort said...

ஐயா வணக்கம்,
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், ஏதாவது ஒரு தளத்தில் எழுதுங்கள்.
அதை எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.

உங்களின் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்கள் அதனால் தான் திருடர்கள் அதை திருடுகிறார்கள்.

எனவே நீங்கள் தொடர்ந்து எழுங்கள் ஐயா திருடமுடியாதபடி.

இப்படிக்கு,
செங்கோட்டையன்.
திருப்பூர்.

redfort said...

ஐயா வணக்கம்,
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், ஏதாவது ஒரு தளத்தில் எழுதுங்கள்.
அதை எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.

உங்களின் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்கள் அதனால் தான் திருடர்கள் அதை திருடுகிறார்கள்.

எனவே நீங்கள் தொடர்ந்து எழுங்கள் ஐயா திருடமுடியாதபடி.

இப்படிக்கு,
செங்கோட்டையன்.
திருப்பூர்.

சரண் said...

Copy & Paste தடை செய்தால் உண்மையில் பாடம் கற்க மட்டும் பாடத்தை எடுத்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் வேறு வழியில்லை. வகுப்பறை மாணவர்கள் Print Command கொடுத்து பி டி எஃப் ஆக சேவ் செய்து படித்துக்கொள்ளட்டும் என்று select செய்யும் Optionஐ Disable செய்து விடலாமா என்று பாருங்கள் ஐயா.

Ak Ananth said...

ஜோதிடத்தைப் பற்றி ஏதாவது எழுதினால் இங்கு இருப்பதைப் போன்று 3000 பேருக்கும் மேல் பின் தொடர்வார்கள் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால் ஜோதிடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்படி திருடிச் சென்று தங்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு கூட்டம் சேர்த்து ஏதாவது கல்லா கட்டலாம் என்று எதிர் பார்க்கிறார்களோ. இல்லாவிட்டால் ஜோதிடம் தெரியாத தன்னை ஜோதிட மேதை என்று பலர் புகழ வேண்டும் என்ற ஆசை. அல்லது தாங்களும் வாத்தியாராகி விடலாம் என்று நினைக்கிறார்களோ. நோக்கம் எதுவாயினும் இது ஒரு குற்றம்தான்.

Sallaba Kumar said...

Sir, I am regularly visiting and reading your classroom2007. I am not a member of your other blogs. Because of your blog only, i got very much interested in astrology. Not only for my benefit. But also to understand astrology in a systematic manner, because of your blog. There may be many readers of your blog like me. But, i do not have any rights to request you to please write in this blog. But, one thing i would say that we are benefited because of your blog.

Thanks and Regards.

Mu.Prakaash

Megalabala said...

மதிப்பிற்குரிய குருவே!
வணக்கம். இணையத்தில் படைப்பு திருட்டு போகிற பிரச்சினையில் தாங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதற்கு கட்டுப்பட்டவர்கள்தாம் மாணவர்கள் நாங்கள் எல்லோரும்! ஆனால் வகுப்பறையில் நீங்கள் எழுதிய ஜோதிடக்கட்டுரைகளூக்காக உறுப்பினர்களாக ஆனவர்கள்தான் அதிகமாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். நகல் எடுக்க முடியாத படி பாடங்களை நடத்தலாம், அல்லது கட்டண வகுப்பாகவும் மாற்றலாம். எதுவும் எங்களுக்கு சம்மதமே! தொடர்ந்து குருவாக இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதுவே நாங்கள் வேண்டுவது! நன்றி!

ravichandran said...

Respected Sir,

Very sad to hear this... I wish to suggest that u may post general articles in this block and all important articles must post in own website...

This is be in safe..

With kind regards,
Ravi

Sundarajan Nardarajan said...

Please do something . But don't stop writing. Pls.this is my humble request .

Thanjavooraan said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
எனக்கு ஜோதிடம் பழக்கமில்லாததால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தங்கள் வலைத்தளத்தில் ஜோதிடம் தவிர மற்ற எல்லாவற்றையும், குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் போன்றவற்றை ரசிக்கிறேன். ஜோதிடம் என்பது ஓர் அரிய கலை. அதில் மூழ்கி எழுந்து முத்தெடுத்துக் கொடுக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி ஈடுபாடு கொள்ளமுடியாதவர்கள் அதனை அப்படியே எடுத்து பதிவிட்டுக் கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்யும்போது நன்றி என்று எழுதி தங்கள் பெயர், வலைத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம். அப்படிச் செய்யாதது குற்றமே. வகுப்பறையின் ஜீவநாடி தங்களது ஜோதிடப் பாடங்கள்தான். தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்திலும், வேறு சில கல்வித் தாபனங்களிலும் ஜோதிடம் பாடமாக வைக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் கணிப்புகள், பாடங்கள் பயனுடையதாக இருக்கும். ஆகவே தாங்கள் எழுதியவற்றை பாதுகாக்கும் முறைகளை கணினி உலக ஜாம்பவான்களிடமிருந்து அறிந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மூடிவிடுவது என்பது கொடுமை. பலருக்கு அந்த நிலைமை வெறுமையாகப் போய்விடும். வேறு விஷயங்களை எழுத எத்தனையோ வலைத்தளங்கள் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் கல்லூரியாக உயரலாம். கல்லூரிகள் பள்ளிகளாகக் குறைவதோ அல்லது மூடப்படுவதோ கூடாது. தங்கள் பணி உயரிய பணி. எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்கொண்டு போராடி உங்கள் வழி சரியென்று உணர்ந்தால் மேற்கொண்டு துணிந்து செயல்படுங்கள். ஜோதிடமே தங்களது உயிர்மூச்சு. அதை விட்டுவிட வேண்டாம். இது என்னுடைய கருத்து ஐயா! ஏற்பதும், மறுப்பதும் தங்கள் உரிமை. நன்றி.

Parvathy Ramachandran said...

இணைய தளங்களில் எழுதுவது குறித்த தங்களது கருத்து உண்மையே. நானும் என் வலைப்பூவில் எக்கச்சக்க பாதுகாப்பு செய்து வைத்திருந்தும், ஒரு உத்தமர், எப்படியோ திருடி, தான் எழுதியதைப் போல் பிரசுரித்து விட்டார். பலமுறை எச்சரித்தும், காதில் வாங்கவில்லை. ஆகவே, 'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' தான் இந்த விஷயத்தில் பொருந்துகிறது.

என் அபிப்பிராயத்தில், தாங்கள் ஜோதிடத்தை கட்டண வகுப்புகளிலேயே தொடரலாம். வகுப்பறைக்கு மூடு விழா நடத்த வேண்டியதில்லை. தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர். ஆகவே தங்கள் படைப்புகளையோ அல்லது வேறு விஷயங்களையோ சௌகரியப்படி வெளியிடலாம். இது என் தாழ்மையான அபிப்பிராயம்.

Rajaram said...

ஆசிரியருக்கு,

////பாடங்களை படங்களாகப் போடுங்கள். அதாவது எழுதியதை picture format _ இல் வெளியிடுங்கள். அந்தப்படத்தில் வாட்டர்மார்க் இணைத்திடுங்கள். கண்டிப்பாக அந்தப் பதிவர்கள் அதைப் பார்த்து தட்டச்சு செய்ய சோம்பேறித்தனப்பட்டு நிறுத்திவிடுவார்கள்... ஒரே ஒரு பிரச்சனை, தேடுபொறிகளில் வார்த்தை கொண்டு தேட முடியாது....////.

இது நல்ல யோசனை அதையே நானும் வழிமொழிகிறேன்.திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

arul said...

sir,

If you stop writing in classroom 2007 people who dont have money like me will suffer. already due to unavailability of money i missed advanced classes.i am waiting for your books to be printed next year.

KJ said...

Sir, as krishnan sir said, you can make this as secured page by using payment. That is one option we have. In some of bank sites, they disabled keyboard facility except that user id and pw field. So that they can't select and copy. We can try that also. However if they decided to take, they can take in any way even we keep more protection. (thirudarai paarthu thirunthaa vittal thirutai olika mudiyathu)

md sivakumar said...

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு.

மற்ற வெப்சைட்டில் உங்கள் மேட்டர் வரக்கூடாது. அதற்கு ஒரே வழி பிக்சர் பார்மேட். பேக்ரவுண்டில் வாட்டர்மார்க் எப்போதும் தெரிந்திருக்க உங்கள் எழுத்து மேலே தெரியும்படி செய்யவேண்டியது. நீங்கள் ஏதேனும் சாப்ட்வேரில் தமிழை யுனிகோடாக மாற்றித்தானே வரவேண்டும். இங்கு அந்த தொல்லை இல்லை. ஆனால் உங்களுக்கு முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். வாசகர்கள் அப்படியே பிக்சர் பார்மேட்டை காப்பி செய்து கொள்வார்கள். ஆனால் யாரும் தங்களுடைய வெப்சைட்டில் தங்களுடையது எனப் பெருமை பீற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் ஆரம்பத்திலே அப்படி செய்து வந்திருக்கலாம். காலம் இப்போதும் கடந்துவிடவில்லை. நீங்கள் கிளாஸ் ரூமை மூடி விடலாமா? என கேட்பது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போலாகும். வாசகர்களிடம் ஜாடை காட்டி விட்டு நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள். இப்படி வாசகர்களாகிய நாங்கள் காப்பியடிக்கும் வெப்சைட்டிற்கு பாடம் சொல்லித் தருவோம். இன்னொரு யோசனை இலவச ஜாதக ஆலோசனை இப்படி ஏதாவது நம் கிளாஸ் ரூமில் ஆரம்பித்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன். இல்லையென்றால் ஏதாவது வித்தியாசமா செய்தால் என்ன? நீங்கள் இவ்வளவு பிரயாசைப்பட்டு சொல்லிக் கொடுப்பது , கதைகள். கவிதைகள் பதிவிடுவது எல்லாம் பணத்திற்காக அல்ல. புண்ணியத்திற்காத்தானே. இன்னும் கிளாஸ் ரூமில் இலவச ஜாதக ஆலோசனை, இதுபோல் வேறு ஏதேனும் செய்தால் என்ன?

geetha lakshmi said...

வணக்கம் ஐயா, தினமும் நீங்கள் எழுதுவதை எதிபார்த்து காத்திருக்கும் நாங்கள் ஏமாந்து விடுவோம நீங்கள் எழுதுவதை நிறுத்தாமல் கட்டணம் கட்டி படிக்கும் முறைக்கு மாற்றிவிடுங்கள்,யாரும் பிரின்ட் எடுக்கமுடியாத வகையில் மாற்றி விடுங்கள்,வேண்டியவர்கள் பார்த்து எழுதிவைத்துக் கொள்ளட்டும். உங்களுக்கு இறைவன் கொடுத்த வரத்தை இந்த கயுவர்களுக்காக இழக்க வேண்டுமா?தயவு செய்து இப்பகுதியை மூடும் எண்ணம் வேண்டாம் ஐயா,உங்களின் உண்மையுள்ள மாணவர்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள். நன்றி ஐயா

சங்கர் said...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆனால் என்ன திருடினாலும் திருட முடியாதது அறிவு.

எனவே தங்களின் பதிவுகளை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.

நீங்கள் கூறுவது போன்று தானாக அந்த ஜோதிட பேய் அனுமதி அளிக்கும் வரை எதை பற்றியும் கவலையின்றி தொடர்ந்து எழுதுங்கள்.

மாணவர் தேவை அறிந்த ஆசான் நீங்கள் எனவே தங்களின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அவ்வகையில் காப்புரிமையை காப்பாகக் கொண்டு பதிவுகளை புத்தகமாக பதிவிடப்போவதால் இணையத்திருட்டை கண்டு கொள்ள வேண்டாம். கடவுள் அவர்களை பார்த்துக் கொள்வார்.

அகத்தியம் நிலைக்கவில்லை ஆனால் அதை பின்தொடர்ந்த தொல்காப்பியம் நிலைத்தது போல். ஜோதிடம் பற்றி ஆயிரம் நூல் இருந்தாலும் தங்களின் ஆக்கங்கள் எங்களுக்கு தொல்காப்பியம் போன்றது.

அய்யர் said...

பதிவின்
எண்ணிக்கை ஓடிய பின்னரும்
பதிப்பித்த உங்கள்
எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாக இருப்பது

இறைவன் எங்களுக்கு தந்த பரிசு
இதை விட வேறென்ன சொல்ல..

வகுப்பறையில் சோதிட பாடத்தின் GIST தந்து விட்டு சுட்டியை தரலாம்

வருபவர்கள் அந்த சுட்டியை தட்டினால் நமது கட்டண வகுப்பறைக்கு அழைத்துச் செல்லும்

இப்போ (கேமிரா)
பயனர் பெயர் குறியீடு
ஏற்கனவே பதிந்தவருக்கும்
புதியவருக்கு signupம் வரும்

நுழைந்தால் கிடைக்கும் பொக்கிஷம்
நுழைய உங்கள் அனுமதி அவசியமே

கட்டண பதிவிலிருந்தும்
கட்டணம் செலுத்தியும்
திருடமாட்டார்கள் என எந்த உறுதியும் இல்லையே..

சரி இந்த பாடலினை
சுழல விடுகிறோம்..

காலம் ஒருனாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

GAYATHRI said...

Sir,

Discontinuing the classes is not a good idea. Then your objective will not get fulfilled. Each student can be provided with an user. Portions can be uploaded with picture format with full watermark in the background 'Copyrights Vathiyar'. No body can copy. but only possibility is typing the portions and publishing. If it is user id based means it is not possible. each student can be charges a nominal amount

Prasanna Venkatesh said...

உங்களின் முடிவு எதுவானாலும் ஏற்று கொள்கிறோம்
அணைத்தும் இறைவன் முடிவு

மனிதன் என்பவன் மனிதனாக நெறி பட நல்ல கட்டுரைகள் தொடருங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம்...

Poo seelan said...

ஐயா அவர்கட்கு !

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " திருட்டு இப்போது இறைவனை போன்றது ... "எங்கும் நிறைந்தது " .. குளத்தோடு கோபித்துகொண்டு............ மனிக்கவும் நல்ல வார்த்தைகளை பாவிப்போம் சாப்பாட்டோடு கோபித்துகொண்டு சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆவது .. எனவே உங்களை போலஇந்த ஜோதிடத்தை இவளவு அழகாக எவனாலும் விளங்கச் சொல்லிவிட முடியாது. அதேபோல இவளவு ஜோதிட நூல்கள் இருக்கு என்ற விபரம் கிடைத்தும் அதை கற்றறிந்து புரிந்து கொள்ளவும் எங்களால் முடியாது ..எனவே உங்கள் சேவையை எங்களால் இழக்க முடியாது ... இவளவு நேசமுள்ள , கீழ்படிவான மாணவ மனிகளுக்காக சிலவற்றை பொறுத்துக்கொண்டு உங்கள் சேவையை தொடர வேண்டும் என்பதே எங்கள் அவா ....
உங்கள் எழுத்தையும் சேவையையும் தொடருங்கள் .. கட்டண சேவையாக அமைத்து தொடர்ந்தால் பாதுகாப்பு அதிகம் என்று நினைத்தால் அதையே செய்யுங்கள் ...
இவளவு நாளும் பதிந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு விட்டு (எங்களுக்கும் கிடைக்கும்படி செய்து விட்டு ) வலை பதிவில் பூட்டி வைத்து விடுங்கள் ...

எது எப்படியாயினும் உங்கள் ஆக்கங்கள் எங்களை சேருவதை தடுத்துவிடாதீர்கள் (பதிந்த பதிவாயினும் சரி ..புதியதாயினும் சரி.. ) ..
நன்றி ஐயா

SP.VR. SUBBAIYA said...

நிறைய எண்ணிக்கையில் நமது வகுப்பறைக் கண்மணிகள் மின்னஞ்சல் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். சிலர் பரிந்துரை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அதுபோல பின்னூட்டம் மூலம் கருத்துக்களைச் சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி. ஆலோசனை செய்து நல்ல முடிவாக எடுக்கிறேன்.
உங்கள் அன்பிற்கும், வாத்தியாரின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் மதிப்பிற்கும் மிக்க நன்றி

அன்புடன்
வாத்தியார்

vprasana kumar said...

Dear Sir,

you should not stop writing, since persons like me, will not able to join in higher classes, but at least we can read it in the vaguparai class.
but whatever suits you best, you can do it sir

Ellam murugan seyal.

Thanks sir.

Senthil Kumar L said...

Dear Sir,

My small Suggestion: Please convert your text content into image format and post the image so that no one can select and copy.

Kavitha said...

Please keep on posting Astrology lessons. I think lot of people here in this class is interested in reading your astrology lessons.

Thanks
Kavitha

திருநெல்வேலி கார்த்திக் said...

ஜோதிடப் பதிவுகளை கட்டண‌ப் பதிவாய் மாற்றுவது சாலச் சிறந்தது.