மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.5.19

குட்டிக்கதை: கடைசி இலை!!!


குட்டிக்கதை: கடைசி இலை!!!

*“கடைசி இலை’*

என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு.

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப்  பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்தி  கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளை  தினமும் உதிர்த்து  கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக் காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையை தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான்.

சோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.

நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!

இதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளை விட்டது. அந்த ஒற்றை இலை போல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச்  செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையை  பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.

ஆம், நண்பர்களே,

சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும்.!
------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே,
    கதை மிகவும் அருமை.நம்பிக்கை என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை நினைவூட்டும் உயர்ந்த சுருக்க க்கதை!
    இதையொட்டி எனக்கு ஏற்கெனவே படித்த கதை ஞாபகத்துக்கு வருகிறது.
    இதய சிகிச்சையில் மிகவும் கைதேர்ந்த ஒரு மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த சிறு பெண்ணை பரிசோதனைக்குப்பின்
    ஆபரேஷன் செய்தால் இறந்து விடுவாள் என்று கூறியும், மனம் தளராது தாயார் ஆபரேஷன செய்யச் சொல்கிறார், மருத்துவரிடம்.
    ஆனால் ஆபரேஷன் நடக்கும் தினம் வரை குழந்நையிடம்" இதயத்தில்
    இறைவன் இருக்கிறார் அவர் உன்னை காப்பார் என்ற நம்பிக்கை வார்த்தைகளை இடைவிடாமல் சொல்லி வருகிறார்.
    இறுதியில் குழந்தை மருத்துவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உயிர் பிழைக்கிறாள்.
    (கதையை மிகவும் சுருக்கி எழுதியுள்ளேன்)
    நம்பிக்கை வாழ்வில் எல்லா தடைகளையும் தகர்க்கக் கூடும்
    என்பதை பல உண்மைச் சம்பவங்கள்
    நிரூபித்துள்ளன.
    இன்றைய பயனுள்ள பதிவு!👍👌💐

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... nice ...Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    தன்னம்பிக்கை பற்றிய பதிவு அருமை ஐயா

    கண்ணன்

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    கதை மிகவும் அருமை.நம்பிக்கை என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை நினைவூட்டும் உயர்ந்த சுருக்க க்கதை!
    இதையொட்டி எனக்கு ஏற்கெனவே படித்த கதை ஞாபகத்துக்கு வருகிறது.
    இதய சிகிச்சையில் மிகவும் கைதேர்ந்த ஒரு மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த சிறு பெண்ணை பரிசோதனைக்குப்பின்
    ஆபரேஷன் செய்தால் இறந்து விடுவாள் என்று கூறியும், மனம் தளராது தாயார் ஆபரேஷன செய்யச் சொல்கிறார், மருத்துவரிடம்.
    ஆனால் ஆபரேஷன் நடக்கும் தினம் வரை குழந்நையிடம்" இதயத்தில்
    இறைவன் இருக்கிறார் அவர் உன்னை காப்பார் என்ற நம்பிக்கை வார்த்தைகளை இடைவிடாமல் சொல்லி வருகிறார்.
    இறுதியில் குழந்தை மருத்துவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உயிர் பிழைக்கிறாள்.
    (கதையை மிகவும் சுருக்கி எழுதியுள்ளேன்)
    நம்பிக்கை வாழ்வில் எல்லா தடைகளையும் தகர்க்கக் கூடும்
    என்பதை பல உண்மைச் சம்பவங்கள்
    நிரூபித்துள்ளன.
    இன்றைய பயனுள்ள பதிவு!👍👌💐/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... nice ...Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  6. ////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    தன்னம்பிக்கை பற்றிய பதிவு அருமை ஐயா
    கண்ணன்//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Very encouraging////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com