மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.10.09

ஆர்வக்கோளாறு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆர்வக்கோளாறு!

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை
அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது.
Astrology is a deep and complicated science.
(difficult to analyze or understand)

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று
தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான்.
அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல் அதாவது
பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்!

ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள்
ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை
மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை
ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று
தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக்
குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

இன்றைய மின்னஞ்சல் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின்
முடக்கடியைப் பற்றியது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிரக யுத்தத்தைப்
பற்றியும் அதில் எழுதியுள்ளேன். விரிவான பாடம் அது!

அது மேல்நிலைப் பாடம். ஆகவே மின்னஞ்சலில் அனுப்பபெற்றுள்ளது!

அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
499 பேர்களுக்கு இன்று மின்னஞ்சலில் பாடத்தை அனுப்பிவிட்டேன்.
இன்னும் சிலருக்கு ஒரு நாள் கழித்து - அதாவது நாளைதான் வரும்
கூகுள் சர்வர் பிரச்சினை. ஒரு நாள் கோட்டா 500 மின்னஞ்சல்கள்
மட்டுமே. அதைப் புரிந்து கொண்டு இன்று கிடைக்காதவர்கள் ஒரு நாள்
பொறுமை காக்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
செப்டம்பர் மாதம் - 29 இடுகைகள்
அக்டோபர் மாதம் 14 தேதிவரை - 13 இடுகைகள்
ஆக மொத்தம் தொடர்ந்து 42 இடுகைகள். அதற்கு வந்த பின்னூட்டங்கள்
அடியேன் எழுதிய பதில்கள். வகுப்பறை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதற்கு சந்தோஷப்படாமல், நிறைய கண்மணிகள் மின்னஞ்சல் பாடத்தைப்
பற்றிய கவலையிலேயே இருக்கிறார்கள். எங்கே? எங்கே? என்று எனக்கு
விடாது கேள்விக் கனைகள் - கடிதங்கள் மூலமாக!

பாடங்கள் விடுபட்டு விடக்கூடாதே என்பது அவர்களுடைய கவலை!

கவலைப் படாதீர்கள். அங்கே பாடத்தை அனுப்பினால், இங்கே வகுப்பறையில்
அறிவித்து விடுகிறேன்.

இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்க முடியாது.
அதைத்தான் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது
என்று எழுதுகிறேன்.

அதை உணருங்கள்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள் அனைத்தும் மேல்நிலைப் பாடங்கள்.
முதலில் அவற்றை மின்னஞ்சலில் நடத்தலாம் என்றிருந்தேன்.
வகுப்பறையில் நடத்தினால் பலரும் பயன்பெறுவார்கள் என்றுதான்
அதை மாற்றி, இங்கே எழுதுகிறேன்.

ஜோதிட நுட்பங்களும், அலசல்களும் மட்டுமே இனி மின்னஞ்சலில் வரும்!
மற்ற பாடங்கள் எல்லாம் இங்கேயே தொடரும்.

நான் முழு நேர எழுத்தாளனும் அல்ல!
முழு நேர ஜோதிடஆராய்ச்சியாலனும் அல்ல!
தொழில்முறை ஜோதிடனும் அல்ல!

பதிவுகளில் எழுதுவது ஒரு ஆர்வக்கோளாறில்!
அதையும் உணர வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

65 comments:

  1. கனிவோடு பாடம் நடத்தும் ஆசானே...
    உங்கள் கண்டிப்பும் புரிகிறது..

    இதனால் முன்னர் ஒரு பின்ஊட்டத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன் . . .
    சுவையான உணவு வீட்டில் இருந்தும் . . .
    எதற்கு இவர்கள் பொஃபே என்றதும்
    எச்சில் தட்டை எடுத்துக் கொண்டு முந்தியடித்து வரிசையில் நிற்கிறார்கள் என்று . . .

    பாவம் அவர்கள் ...

    அவர்களுக்கும் சேர்த்து . .

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் . .

    (நரகாசுரன் தான் செத்துட்டாரே நமக்கு எதுக்கு தீபாவளின்னு யாராவது கேட்டுடப்போறாங்க . . .

    நம்ம மனசுக்குள்ள இருக்கற நரகாசுரன் சாகறவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் இருக்கும். . .)

    ReplyDelete
  2. காலை வணக்கம் ஐயா!

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    தாங்கள் அனுப்பிய பாடங்கள் கிடைக்கப் பெற்றேன்,
    மிக்க நன்றி.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    அன்பான ஆசிரியருக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும், மற்றும் அனைத்து சக மாணக்கர்களுக்கும் எனது குடும்பம் சார்ந்த இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. மாணாக்கர்களின் ஆர்வம்.
    ஆசிரியரின் நேரமின்மை.மாணாக்கர்களாகிய‌
    நாம் தான் பொறுமை காக்க வேண்டும்.
    ரேசன் கடையில் பொருட்கள் குறைந்த‌
    விலையில் கிடைப்பதால் நாம் வரிசையில் பொருமையாக
    காத்திருக்கிறோமே.அதே போல் வாத்தியார்
    அய்யாவை தொந்திரவு செய்யாமல்
    பொறுமையாக காத்திருப்போம்.
    இன்னும் நிறைய நமக்கு நல்ல
    விஸயங்களை தரவிருக்கிறார்.
    நாம் காத்திருப்போம்.

    ReplyDelete
  6. அய்யா,

    மிக சிறந்த படம் அய்யா இது!!!

    சந்தேகம்?
    லக்னத்தில்(துலாமில்) லஞதிபதியே சண்டையில் தோற்று விட்டார் செவ்வாயுடன். வெற்றி பெற்ற செவ்வாய் 2 & 7 க்கு அதிபதி. என்ன பலன் அய்யா?

    நன்றி
    சரவணா

    ReplyDelete
  7. Hello,

    Can some one send yesterday's lesson (வாழ்க்கை எனும் சதிராட்டம்- posed on 14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's...

    Thank you.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா...

    இன்றைய பாடம் மிக அருமை. நீண்ட நாள் காத்திருந்த "கிரக யுத்தம்" பாடம் மிக சிறப்பாக உள்ளது.

    மற்றும், நீங்கள் கொடுத்த உதாரண ஜாதகத்தில் இன்னும் ஒரு முக்கியமான அமைப்பு உள்ளது. இது கல சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். நமது வாசகர்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

    என்னுடைய நண்பர் மனைவிக்கு நாளை (16/10/2009) பெங்களூர்-இல் cesesrion operation. நாளை காலை 6 மணிக்கு operation உள்ளது. அப்போது, சந்திரன் கன்னி ராசிக்கு வந்து விடும் (உத்திரம் 2-ம் பாதம்). கன்னி லக்னம். இது நல்ல அமைப்பா?

    என்னுடைய மாமா (ஒரு ஜோதிடர்). அவரிடம் கேட்ட பொழுது, துலாம் லக்னம் வேண்டம். ஏனென்றால், 11-க்கு அதிபதி சூரியன் 12-ல் உள்ளதால், அவ்வளவு சிறப்பாக இருக்காது என்கிறார். எனவே, கன்னி லக்னத்தில் நேரம் குறித்து கொடுத்துள்ளார்.

    தங்களுடைய கருத்தை எதிர் பார்கிறேன். இது ஒரு குழந்தை-யின் எதிர் காலம் பற்றியது, எனவே தயவு செய்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. dear sir, thanks for your lessons. i like to ask one doubt and dont mistake me i giving examples from my horoscope. For me (kadaga lagnam and magara rasi)in rasi chakram suriyan in "mithunam" with 8 parals and in pava chakram he is in "kadagam" with 3 parals. which one i have to take.

    ReplyDelete
  10. dear sir, thanks for your lessons. i like to ask one doubt and dont mistake me i giving examples from my horoscope. For me (kadaga lagnam and magara rasi)in rasi chakram suriyan in "mithunam" with 8 parals and in pava chakram he is in "kadagam" with 3 parals. which one i have to take.

    ReplyDelete
  11. ஐயா,

    அக்டோபர் 15 - மின்னஞ்ச்ல் பாடம் கிடைக்கபெறவில்லை...அனுப்பவும்...

    ஆவலுடன்...
    அருள்நிதி

    ReplyDelete
  12. ஐயா நான் இந்த வகுப்பறைக்கு புதியவன்...
    சற்று சுமாராக ஜோதிட சம்பந்தமான அறிவு இருக்கிறது...
    எனக்கும் மேல் நிலை பாடங்களை மின் அஞ்சலில் அனுப்புவீர்களா?

    தயவு செய்து மாட்டேன் என்று சொல்லி என் ஆர்வத்தை கெடுத்து விடாதீர்கள் ஐயா...

    நன்றி

    ReplyDelete
  13. ஐயா நான் இந்த வகுப்பறைக்கு புதியவன்...
    சற்று சுமாராக ஜோதிட சம்பந்தமான அறிவு இருக்கிறது...
    எனக்கும் மேல் நிலை பாடங்களை மின் அஞ்சலில் அனுப்புவீர்களா?

    தயவு செய்து மாட்டேன் என்று சொல்லி என் ஆர்வத்தை கெடுத்து விடாதீர்கள் ஐயா...

    நன்றி

    ReplyDelete
  14. ////iyer said...
    கனிவோடு பாடம் நடத்தும் ஆசானே...
    உங்கள் கண்டிப்பும் புரிகிறது..
    இதனால் முன்னர் ஒரு பின்ஊட்டத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன் . . .
    சுவையான உணவு வீட்டில் இருந்தும் . . .
    எதற்கு இவர்கள் பஃபே என்றதும்
    தட்டை எடுத்துக் கொண்டு முந்தியடித்து வரிசையில் நிற்கிறார்கள் என்று . . பாவம் அவர்கள் ...
    அவர்களுக்கும் சேர்த்து . .
    தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
    (நரகாசுரன் தான் செத்துட்டாரே நமக்கு எதுக்கு தீபாவளின்னு யாராவது கேட்டுடப்போறாங்க . . .
    நம்ம மனசுக்குள்ள இருக்கற நரகாசுரன் சாகறவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் இருக்கும். . .)/////

    நம்ம மனசுக்குள்ள இருக்கிற நரகாசுரன்தானே? அவன் சாக மாட்டான்.
    தாகசாந்தி பண்ணி வைத்தால் உபத்திரவம் இல்லாமல் படுத்துத் தூங்குவான்!

    ReplyDelete
  15. ////DHANA said...
    காலை வணக்கம் ஐயா!////

    நன்றி தனா!

    ReplyDelete
  16. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    தாங்கள் அனுப்பிய பாடங்கள் கிடைக்கப் பெற்றேன்,
    மிக்க நன்றி.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    It is all right.Thanks!

    ReplyDelete
  17. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    அன்பான ஆசிரியருக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும், மற்றும் அனைத்து சக மாணக்கர்களுக்கும் எனது குடும்பம் சார்ந்த இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////thirunarayanan said...
    மாணாக்கர்களின் ஆர்வம்.
    ஆசிரியரின் நேரமின்மை.மாணாக்கர்களாகிய‌
    நாம் தான் பொறுமை காக்க வேண்டும்.
    ரேசன் கடையில் பொருட்கள் குறைந்த‌
    விலையில் கிடைப்பதால் நாம் வரிசையில் பொருமையாக
    காத்திருக்கிறோமே.அதே போல் வாத்தியார்
    அய்யாவை தொந்திரவு செய்யாமல்
    பொறுமையாக காத்திருப்போம்.
    இன்னும் நிறைய நமக்கு நல்ல
    விஸயங்களை தரவிருக்கிறார்.
    நாம் காத்திருப்போம்./////

    நன்றி நாராயணன்!

    ReplyDelete
  19. /////Saravana said...
    அய்யா,
    மிக சிறந்த படம் அய்யா இது!!!
    சந்தேகம்?
    லக்னத்தில்(துலாமில்) லக்கினாதிபதியே சண்டையில் தோற்று விட்டார் செவ்வாயுடன். வெற்றி பெற்ற செவ்வாய் 2 & 7 க்கு அதிபதி. என்ன பலன் அய்யா?
    நன்றி
    சரவணா/////

    வெற்றி பெற்ற 7ஆம் இட அதிபதி, நல்ல பெண்ணாகப் பிடித்துக் கொண்டு வருவார்.
    அவரே 2ஆம் இட அதிபதியும் ஆனபடியால் உங்களை ஒரு தட்டுத் தட்டி ஒழுங்காகக் குடும்பம் நடத்தும்படி செய்வார். போதுமா?
    இந்த மாதக் கோட்டா ஓவர்.

    ReplyDelete
  20. ////Scorpion King said...
    Hello,
    Can some one send yesterday's lesson (வாழ்க்கை எனும் சதிராட்டம்- posed on 14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's...
    Thank you.

    பதிவைச் சரியாகப் படிக்க மாட்டீர்களா? சதிராட்டம்தான் பதிவிலேயே உள்ளதே!
    பின் எதற்கு மின்னஞ்சல்?

    ReplyDelete
  21. Scorpion King said...
    வணக்கம் ஐயா...
    இன்றைய பாடம் மிக அருமை. நீண்ட நாள் காத்திருந்த "கிரக யுத்தம்" பாடம் மிக சிறப்பாக உள்ளது.
    மற்றும், நீங்கள் கொடுத்த உதாரண ஜாதகத்தில் இன்னும் ஒரு முக்கியமான அமைப்பு உள்ளது. இது கல சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். நமது வாசகர்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை.
    என்னுடைய நண்பர் மனைவிக்கு நாளை (16/10/2009) பெங்களூர்-இல் cesesrion operation. நாளை காலை 6 மணிக்கு operation உள்ளது. அப்போது, சந்திரன் கன்னி ராசிக்கு வந்து விடும் (உத்திரம் 2-ம் பாதம்). கன்னி லக்னம். இது நல்ல அமைப்பா?
    என்னுடைய மாமா (ஒரு ஜோதிடர்). அவரிடம் கேட்ட பொழுது, துலாம் லக்னம் வேண்டம். ஏனென்றால், 11-க்கு அதிபதி சூரியன் 12-ல் உள்ளதால், அவ்வளவு சிறப்பாக இருக்காது என்கிறார். எனவே, கன்னி லக்னத்தில் நேரம் குறித்து கொடுத்துள்ளார்.
    தங்களுடைய கருத்தை எதிர் பார்கிறேன். இது ஒரு குழந்தை-யின் எதிர் காலம் பற்றியது, எனவே தயவு செய்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
    நன்றி ஐயா./////

    புரட்டாசி மாதம் 30ம் தேதி (16.10.2009) அன்று சூரிய உதயம் 6:04 கூட்டல் உதய லக்கினமான கன்னி லக்கினத்தில் மிச்சம் உள்ள பகுதி 0:08 நிமிடங்கள். ஆக 6:12 வரை மட்டுமே கன்னி லக்கினம். அதற்குப் பிறகு அடுத்த 2 மணி நேரத்திற்கு துலா லக்கினம்

    ReplyDelete
  22. ///jpmeera said...
    dear sir, thanks for your lessons. i like to ask one doubt and dont mistake me i giving examples from my horoscope. For me (kadaga lagnam and magara rasi)in rasi chakram suriyan in "mithunam" with 8 parals and in pava chakram he is in "kadagam" with 3 parals. which one i have to take./////

    இதை எடுத்துக்கொள்ளவும்: suriyan in "mithunam" with 8 parals

    ReplyDelete
  23. Arul said...
    ஐயா,
    அக்டோபர் 15 - மின்னஞ்சல் பாடம் கிடைக்கபெறவில்லை...அனுப்பவும்...
    ஆவலுடன்...
    அருள்நிதி////

    உங்களுக்கு கடைசியாகக் கிடைத்த பாடத்தின் தலைப்பு என்ன? எண் என்ன?
    இரண்டையும் தெரியப்படுத்துங்கள்

    ReplyDelete
  24. Respected Mr.Subbaiah,

    I would like to join the astrology classroom.Please let me know the procedure.My email is Balakumaran_ph@yahoo.com

    Thanks,
    Balakumaran.A.G.

    ReplyDelete
  25. மின்ஞ்சல் படம் கிடைத்தது மிக்க நன்றி.

    ReplyDelete
  26. ஐயா வணக்கம்

    அக் 15 மின்னஞ்சல் (இன்றைய) கிடைத்தது. அக் 14 ம் தேதியது (நேற்று) கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்ப முடியுமா ?? அல்லது சக மாணவர்கள் யாரேனும்
    அனுப்பி உதவினால் நன்றாக இருக்கும்.

    இன்றைய மின்னஞ்சல் பாடம் மிக அருமை. கிரக யுத்தம் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். மேலும் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்தும் யோகம் இல்லாமல் போவது பற்றி விளக்கம் சூப்பர்.

    இதே போல வரிசையில் கால் கடுக்க நின்று டிக்கெட் கவுண்டர் அருகில் செல்லும் போது டிக்கெட் இல்லை என்று கவுண்டர் மூடும் படியான நிலைக்கு எதாவது அமைப்பு இருக்கிறதா ? விளக்கம் ப்ளீஸ்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. ////Scorpion King said...
    Hello,
    Can some one send yesterday's lesson (வாழ்க்கை எனும் சதிராட்டம்- posed on 14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's...
    Thank you.

    பதிவைச் சரியாகப் படிக்க மாட்டீர்களா? சதிராட்டம்தான் பதிவிலேயே உள்ளதே!
    பின் எதற்கு மின்னஞ்சல்?/////

    ஐயா.... வாழ்க்கை எனும் சதிராட்டம்!" பாடத்தில் நீங்கள் கொடுத்த குறிப்பு...
    ---------------------------------------------
    ”என்ன சார், அவ்வளவுதானா? இன்று பாடம் இல்லையா?”

    “ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா?”

    ”ஜோதிடப்பாடம் இல்லையா?”

    ”இல்லாமலா? மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.
    இங்கே வெளியிட்டால், பலரும், தங்கள் ஜாதகத்தை வைத்து,
    அதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி
    எடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே!

    இந்த மின் அஞ்சல் பாடம் எனக்கு வரவில்லை.

    ஐயா... T K Arumugam அவர்களும் கூறி உள்ளார்...

    ReplyDelete
  28. vanakam sir,

    povam neega romba kasthapadiriga engalukaga(classroom student). schoola and collegla kuda vathiyaaruga nala padam ungalmathiri
    solitharamataga santagam keta pai ukkaru ennu solluvanga salary vakikuvangam anal ungala mathari ortharai nan parkavilai anal irrukurangala illaya ennu enaku thariyathu anal ippo na parthan negaa thaa nichayama tamilnadu nala malai(rain) parum (naalar oruvar ularal avar poritu paiyummam malai illa if i hurt you pl forgive me.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  29. அய்யா வணக்கம் ,
    அடியேன் கிரக யுத்தம் பாடத்தில் மூழ்கி இருந்தேன் அதனால் தாமதம் .கிரக யுத்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...அருமயான பதிவு அய்யா அவர்களின் அயராத தொண்ட்றிக்கு என்ன கைமாறு செய்ய போகிறோமோ ?

    நன்றி

    என்றும் தங்கள் கீழ்படி(த்)ந்த மாணவன்

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. ஐயா வணக்கம்,

    நான் புதிய மாணவன் இதுவரை மின்னஞ்சல் எதுவும் பெறவில்லை, தங்களின் கருனை கிடைக்குமா?

    நன்றி

    ReplyDelete
  32. மின்னஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி ஐயா. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. இருப்பதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான். சிலருக்கு யோகங்கள் இருப்பதில்லை. யோகம் இருப்பவர்கள் பலர் அது யோகம் என்று உணர்வதில்லை.

    நிற்க, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். வகுப்பறைக்கு விடுமுறை விடலாமே. நான் 1 வார விடுமுறையில் செல்கிறேன்.

    ReplyDelete
  33. நண்பர்களே,
    14ம் தேதி எந்த பாடமும்
    மின் அஞசலில் வாத்தியார் அவர்கள் யாருக்கும்
    அனுப்பவில்லை.இன்று கிரகயுத்தம்
    பற்றிய பாடம் தான் எல்லோருக்கும்
    அனுப்பி இருக்கிறார்.
    எல்லோரும் கிடைத்த பாடத்தை
    படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்றைய புதிர் போட்டி
    என்னவோ?

    ReplyDelete
  34. அன்புள்ள் ஐயா,
    மெல்நிலய பாடதில் ஒரு கெள்வி,
    குரு 6,9க்கு உடையவர் 8 ல் மரைவு, நவாம்சதில் 9ல் மீனதில் ஆட்சி, குரு சுயவர்கம் 5 பரல்கல்.குரு பலம் பெட்று உள்ளார் சரியா.

    செவ்வாய்(117.51.30) நீச்ச்பங்ம் பெட்ரு கடகதில்,ஆனல் வக்ரம்,+ ராகு(96.25.24pagai) அபப்டி என்ன்றால் நீச்ச்ப்ங்ம் பலன் கிடைகாது (செவ்வாய் சுயவர்கம் 4 பரல்கல் )
    இது சரியா?

    உங்களுகும் & குடும்பத்தார்களுக்கும் இனிய நல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    சக மாணக்கர்களுக்கும் இனிய நல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    அன்புடன்

    எழில்அரசன்

    ReplyDelete
  35. /////Blogger Kumares said...
    ஐயா நான் இந்த வகுப்பறைக்கு புதியவன்...
    சற்று சுமாராக ஜோதிட சம்பந்தமான அறிவு இருக்கிறது...
    எனக்கும் மேல் நிலை பாடங்களை மின் அஞ்சலில் அனுப்புவீர்களா?
    தயவு செய்து மாட்டேன் என்று சொல்லி என் ஆர்வத்தை கெடுத்து விடாதீர்கள் ஐயா...
    நன்றி///

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை, இந்த முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com

    ReplyDelete
  36. ////Blogger KUMARAN said...
    Respected Mr.Subbaiah,
    I would like to join the astrology classroom.Please let me know the procedure.My email is Balakumaran_ph@yahoo.com
    Thanks,
    Balakumaran.A.G./////

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை, இந்த முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com

    ReplyDelete
  37. ////Blogger மதி said...
    மின்னஞ்சல் படம் கிடைத்தது மிக்க நன்றி.////

    நன்றி முருகா!

    ReplyDelete
  38. /////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    அக் 15 மின்னஞ்சல் (இன்றைய) கிடைத்தது. அக் 14 ம் தேதியது (நேற்று) கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்ப முடியுமா ?? அல்லது சக மாணவர்கள் யாரேனும்
    அனுப்பி உதவினால் நன்றாக இருக்கும்.////

    அக் 14 ம் தேதியில் எதுவும் அனுப்பவில்லை. வெறும் முன் அறிவிப்பு மட்டும்தான் செய்தேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இன்றைய மின்னஞ்சல் பாடம் மிக அருமை. கிரக யுத்தம் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். மேலும் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்தும் யோகம் இல்லாமல் போவது பற்றி விளக்கம் சூப்பர்.
    இதே போல வரிசையில் கால் கடுக்க நின்று டிக்கெட் கவுண்டர் அருகில் செல்லும் போது டிக்கெட் இல்லை என்று கவுண்டர் மூடும் படியான நிலைக்கு எதாவது அமைப்பு இருக்கிறதா ? விளக்கம் ப்ளீஸ்
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    15 நாட்கள் கழித்துப் போங்கள். தியேட்டர் காற்று வாங்கும். அப்போது சுலபமாக டிக்கெட் கிடைக்கும். பொறுமை வேண்டும் அவ்வளவுதான்!

    ReplyDelete
  39. Blogger Scorpion King said...
    ////Scorpion King said...
    Hello,
    Can some one send yesterday's lesson (வாழ்க்கை எனும் சதிராட்டம்- posed on 14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's... Thank you.
    பதிவைச் சரியாகப் படிக்க மாட்டீர்களா? சதிராட்டம்தான் பதிவிலேயே உள்ளதே!
    பின் எதற்கு மின்னஞ்சல்?/////
    ஐயா.... வாழ்க்கை எனும் சதிராட்டம்!" பாடத்தில் நீங்கள் கொடுத்த குறிப்பு...
    ---------------------------------------------
    ”என்ன சார், அவ்வளவுதானா? இன்று பாடம் இல்லையா?”
    “ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா?”
    ”ஜோதிடப்பாடம் இல்லையா?”
    ”இல்லாமலா? மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.
    இங்கே வெளியிட்டால், பலரும், தங்கள் ஜாதகத்தை வைத்து,
    அதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி
    எடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே!
    இந்த மின் அஞ்சல் பாடம் எனக்கு வரவில்லை.
    ஐயா... T K Arumugam அவர்களும் கூறி உள்ளார்...//////

    அக் 14 ம் தேதியில் எதுவும் அனுப்பவில்லை. வெறும் முன் அறிவிப்பு மட்டும்தான் செய்தேன்!

    ReplyDelete
  40. ////Blogger paramasivam said...
    vanakam sir,
    povam neega romba kasthapadiriga engalukaga(classroom student). schoola and collegla kuda vathiyaaruga nala padam ungalmathiri
    solitharamataga santagam keta pai ukkaru ennu solluvanga salary vakikuvangam anal ungala mathari ortharai nan parkavilai anal irrukurangala illaya ennu enaku thariyathu anal ippo na parthan negaa thaa nichayama tamilnadu nala malai(rain) parum (naalar oruvar ularal avar poritu paiyummam malai illa if i hurt you pl forgive me.
    your lovingly
    sundari.p/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. ////Blogger astroadhi said...
    அய்யா வணக்கம் ,
    அடியேன் கிரக யுத்தம் பாடத்தில் மூழ்கி இருந்தேன் அதனால் தாமதம் .கிரக யுத்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...அருமயான பதிவு அய்யா அவர்களின் அயராத தொண்டிர்க்கு என்ன கைமாறு செய்ய போகிறோமோ ?
    நன்றி
    என்றும் தங்கள் கீழ்படி(த்)ந்த மாணவன்////

    ஒரு கைமாறும் வேண்டாம். ஆத்மதிருப்திக்காக எழுதுகிறேன். எதையும் எதிர்பார்த்து எழுதவில்லை!

    ReplyDelete
  42. ////Blogger raja said...
    ஐயா வணக்கம்,
    நான் புதிய மாணவன் இதுவரை மின்னஞ்சல் எதுவும் பெறவில்லை, தங்களின் கருணை கிடைக்குமா?
    நன்றி/////

    கருணைக்கு ஒருவர்தான். அவர் கண்ணூக்குத் தெரியமாட்டார். நான் வெறும் வாத்தியார். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை, இந்த முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com பாடங்கள் உங்கள் சேர்க்கைக்குப் பிறகு தன்னால் வரும்!

    ReplyDelete
  43. /////Blogger ananth said...
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி ஐயா. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. இருப்பதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான். சிலருக்கு யோகங்கள் இருப்பதில்லை. யோகம் இருப்பவர்கள் பலர் அது யோகம் என்று உணர்வதில்லை.
    நிற்க, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். வகுப்பறைக்கு விடுமுறை விடலாமே. நான் 1 வார விடுமுறையில் செல்கிறேன்.

    ஆமாம் எனக்கும் புத்தக வேலைகள் உள்ளன. 4 நாட்கள் விடுமுறை விட்டு விடுவதாக உள்ளேன். அறிவிப்பு நாளைக் காலை வெளியாகும்.

    ReplyDelete
  44. ////Blogger thirunarayanan said...
    நண்பர்களே,
    14ம் தேதி எந்த பாடமும்
    மின் அஞசலில் வாத்தியார் அவர்கள் யாருக்கும்
    அனுப்பவில்லை.இன்று கிரகயுத்தம்
    பற்றிய பாடம் தான் எல்லோருக்கும்
    அனுப்பி இருக்கிறார்.
    எல்லோரும் கிடைத்த பாடத்தை
    படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
    தீபாவளி அன்றைய புதிர் போட்டி
    என்னவோ?/////

    நன்றி நாராயணன்!
    தீபாவளி அன்றைக்காவது வகுப்பறையை மறந்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள்!

    ReplyDelete
  45. Ezhil said...
    அன்புள்ள ஐயா,
    மேல்நிலைப் பாடத்தில் ஒரு கேள்வி,
    குரு 6,9க்கு உடையவர் 8 ல் மறைவு, நவாம்சத்தில் 9ல் மீனத்தில் ஆட்சி, குரு சுயவர்கம் 5 பரல்கள்.குரு பலம் பெற்று உள்ளார் சரியா?

    சரிதான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    செவ்வாய்(117.51.30) நீசபங்கம் பெற்று கடகத்தில்,ஆனால் வக்ரம்,+ ராகு(96.25.24pagai) அப்படி என்றால் நீசபங்கம் பலன் கிடைகாது (செவ்வாய் சுயவர்கம் 4 பரல்கள் )
    இது சரியா?////

    நீங்கள் கடக லக்கினம்தானே. அதைச் சொல்லாமல் எதற்காக இத்தனை கேள்விகள்? கடக லக்கினத்திற்கு எட்டில் குரு மறைவு என்றால், நீசனான செவ்வாயுடன், குரு சேராமல் நீச பங்க ராஜ யோகக் கேள்வி எப்படி வரும்?
    நீங்கள் பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை என்று தெரிகிறது. முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள்!

    ReplyDelete
  46. Thank u for the lesson sir!! i got it.. and happy deepavali to u and all the readers.. :)

    ReplyDelete
  47. ஐயா பாடம் அருமை தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..என்னக்கு மின்னஞ்சல் பாடம் 8 வரை தான் வந்துள்ளது புதிய பாடம் ஏதும் வரவில்லை ஐயா..

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Alasiam G brother

    vannakam pl go and see valkai satathiraatam comment section i sent mail for u see and tell about my navamsa pl tell me about my navamsam u told good horscope. i want ur idea i will be waiting for ur mail. take care.

    your lovingly sister,
    sundari.p

    ReplyDelete
  50. Ayya i got the lesson through email.. the session is good.. Romba nandri ayya!!! En iniya diwali nalvathukal ayya!!!

    ReplyDelete
  51. sir,

    I got your lesson by e-mail.Thank you. Getting more interest to learn day by day.
    Happy Deepavali to you and all my friends in the class room.

    Chandrasekaran Surya

    ReplyDelete
  52. csekar2930 said:

    Good evening Dear friend,

    I am sundari one of ur classroom friends. Thanks for ur diwali valthugal. Happy deepavali to u and all ur family members.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  53. /////Blogger vennilavu said...
    Thank u for the lesson sir!! i got it.. and happy deepavali to u and all the readers.. :)////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. /////Blogger DD said...
    ஐயா பாடம் அருமை தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..என்னக்கு மின்னஞ்சல் பாடம் 8 வரை தான் வந்துள்ளது புதிய பாடம் ஏதும் வரவில்லை ஐயா..////

    நாளை வரும். கூகுள் சர்வர் பிரச்சினை. ஒரு நாள் கோட்டா 500 மின்னஞ்சல்கள் மட்டுமே!

    ReplyDelete
  55. /////Blogger Karthi said...
    Ayya i got the lesson through email.. the session is good.. Romba nandri ayya!!! En iniya diwali nalvathukal ayya!!!////

    நன்றி கார்த்தி!

    ReplyDelete
  56. /////Blogger csekar2930 said...
    sir,
    I got your lesson by e-mail.Thank you. Getting more interest to learn day by day.
    Happy Deepavali to you and all my friends in the class room.
    Chandrasekaran Surya/////

    நன்றி சந்திரசேகரன்!

    ReplyDelete
  57. நீங்கள் கடக லக்கினம்தானே. அதைச் சொல்லாமல் எதற்காக இத்தனை கேள்விகள்? கடக லக்கினத்திற்கு எட்டில் குரு மறைவு என்றால், நீசனான செவ்வாயுடன், குரு சேராமல் நீச பங்க ராஜ யோகக் கேள்வி எப்படி வரும்?
    நீங்கள் பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை என்று தெரிகிறது. முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள்!

    அய்யா நான் கடக லக்கின்ம் தான்,என் ஜாதகம் உங்களிடம் இருகிறது, என் ஜாதகதில் இந்த யொகம் இருபதக எழுதி இருகிறாகள் அதனால் தான் கெட்கிறென். நீச ப்ஙகதுக்கு ஒரெ ருல் தானா வெற இருகிற்தா? கிழெஉள்ள ருல்ஸ படி வருமா?

    Following are the conditions by which a debilitated planet attains the cancellation of debility.
    The conditions are -- [from "Three Hundred Combinations" by Dr. B.V.Raman]. If the lord of the sign occupied by the debilitated planet or the planet who would be exalted there, occupies a quadrant from the Ascendant or the Moon. Some also say that if the lord of the Rasi where the debilitated planet gets exaltation, placed in Kendras from Ascendant or the Moon causes Neechabhanga.

    The lord of the exaltation sign of the debilitated planet is posited in a Kendra from the Lagna or the Moon.

    If the lord of the Navamsa occupied by the debilitated planet should join a quadrant or a trine from the Moon, and the Moon and lagna happen to be in Chara or Movable signs or lagna navamsa happens to be movable.

    இது பட்றி விளக்கம் குடுங்க சார், இது படித்து விட்டுதான் குழப்பமக இருகிறது.

    In this case does neechabhangam occurs or not sir, why I ask this because in my horoscope it is written sevai neechabhanga rajayogam.( want to know how they wrote)

    Please don’t mistake me, I am new to astrology, in an eagerness to learn only I am asking this. I have already mailed my horoscope to you. Since you are busy with your schedules I don’t want to disturb you. So i am asking in the class room.

    When is your book publishing sir, how to pay, I am in Dubai shall I pay by credit card. Pls give me the payment modes. I have already booked 1st and 2nd part of your astrology book.

    WISH YOU AND YOUR FAMILY VERY HAPPY DEEPAVALI

    அன்புடன்
    எழில்

    ReplyDelete
  58. For analysing effects of planets in respective houses, we should go by Bhava chart only. Though in Rasi Chart Guru placed in 7th house, in Bhavam chart it is going to 6th house. Pls clarify, Regards, Sekhar

    ReplyDelete
  59. Sundari.P said..

    Dear Sister,

    alasiamg@yahoo.com
    this is my yahoo id and pl, give me your details there, if you would like to share.

    Tks and regards,
    Alasiam G

    ReplyDelete
  60. வணக்கம் ஆசிரியரே,

    எனக்கு இன்னும் மின்னஞ்சல் பாடம் வந்து சேரவில்லை...அனுப்பவும்...
    பழைய மின்னஞ்சல் பாடங்களை எப்படி பெறுவது எனவும் தெரியப்படுத்தவும்...

    ஆவலுடன்,
    அருள்ந்தி

    ReplyDelete
  61. Greetings...

    You are doing a great job,,I am not getting any lessons by mail. Kindly send it to me. Thank You.

    with regards.
    Prabhu

    ReplyDelete
  62. Ezhil said...
    நீங்கள் கடக லக்கினம்தானே. அதைச் சொல்லாமல் எதற்காக இத்தனை கேள்விகள்? கடக லக்கினத்திற்கு எட்டில் குரு மறைவு என்றால், நீசனான செவ்வாயுடன், குரு சேராமல் நீச பங்க ராஜ யோகக் கேள்வி எப்படி வரும்?
    நீங்கள் பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை என்று தெரிகிறது. முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள்!
    அய்யா நான் கடக லக்கின்ம் தான்,என் ஜாதகம் உங்களிடம் இருகிறது, என் ஜாதகத்தில் இந்த யோகம் இருப்பதாக எழுதி இருக்கிறார்கள் அதனால் தான் கேட்கிறேன். நீச பங்கத்திற்கு ஒரே ருல் தானா வேற இருக்கிறதா? கீழேஉள்ள ருல்ஸ் படி வருமா?

    Following are the conditions by which a debilitated planet attains the cancellation of debility.
    The conditions are -- [from "Three Hundred Combinations" by Dr. B.V.Raman]. If the lord of the sign occupied by the debilitated planet or the planet who would be exalted there, occupies a quadrant from the Ascendant or the Moon. Some also say that if the lord of the Rasi where the debilitated planet gets exaltation, placed in Kendras from Ascendant or the Moon causes Neechabhanga.
    The lord of the exaltation sign of the debilitated planet is posited in a Kendra from the Lagna or the Moon.
    If the lord of the Navamsa occupied by the debilitated planet should join a quadrant or a trine from the Moon, and the Moon and lagna happen to be in Chara or Movable signs or lagna navamsa happens to be movable.
    இது பட்றி விளக்கம் குடுங்க சார், இது படித்து விட்டுதான் குழப்பமக இருகிறது.

    In this case does neechabhangam occurs or not sir, why I ask this because in my horoscope it is written sevai neechabhanga rajayogam.( want to know how they wrote)
    Please don’t mistake me, I am new to astrology, in an eagerness to learn only I am asking this. I have already mailed my horoscope to you. Since you are busy with your schedules I don’t want to disturb you. So i am asking in the class room.
    When is your book publishing sir, how to pay, I am in Dubai shall I pay by credit card. Pls give me the payment modes. I have already booked 1st and 2nd part of your astrology book.
    WISH YOU AND YOUR FAMILY VERY HAPPY DEEPAVALI
    அன்புடன்
    எழில்/////

    ராமன் எழுதியுள்ளதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்! அதன்படியும் யோகம் கிடைக்கும்!

    ReplyDelete
  63. ///nc sekhar said...
    For analysing effects of planets in respective houses, we should go by Bhava chart only. Though in Rasi Chart Guru placed in 7th house, in Bhavam chart it is going to 6th house. Pls clarify, Regards, Sekhar/////

    Rasi chart is the primary chart. Bhava chart is also the magnified version of rasi chart to check up the correct position of the planets which are at the beginning or at the end of the house. In your case you can take the bhava chart

    ReplyDelete
  64. Arul said...
    வணக்கம் ஆசிரியரே,
    எனக்கு இன்னும் மின்னஞ்சல் பாடம் வந்து சேரவில்லை...அனுப்பவும்...
    பழைய மின்னஞ்சல் பாடங்களை எப்படி பெறுவது எனவும் தெரியப்படுத்தவும்...
    ஆவலுடன்,
    அருள்ந்தி//////

    please inform your mail ID: I will check up!

    ReplyDelete
  65. ////Success said...
    Greetings...
    You are doing a great job,,I am not getting any lessons by mail. Kindly send it to me. Thank You.
    with regards.
    Prabhu///////

    please inform your mail ID: I will check up!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com