மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.09

தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!
+++++++++++++++++++++++++++++++++++++

தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்றாலும்,
சாத்தப்பனின் மனதில் இன்றைக்கும் அது பசுமையாக இருக்கிறது.

பெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை மறக்க
முடியுமா என்ன?

பார்த்த முதல் பார்வையிலேயே, சாலாவைப் பிடித்துப் போய்விட,
தன் தாயாரின் எதிர்ப்பிற்கிடையே, பிடிவாதமாக இருந்து, அவளையே
மணந்து கொண்டான் சாத்தப்பன்.

“அப்பச்சி, பெண் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய
நட்சத்திரம்தான் எனக்கு இசைவாக இல்லை” என்று தன் தாயார்
விருப்பமில்லாமல் பேசியபோது, அவர்களைச் சம்மதிக்க வைத்தது
பெரும்பாடாகப் போய்விட்டது.

“பூராடம் நூலாடாது. அதாவது பெண்ணின் கழுத்தில் அதிக நாள்
தாலி தங்காது” என்று எந்தப் பாவி சொன்னானோ, அதை அவன் தாயார்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைக் கசக்கினார்கள்.

சாத்தப்பன் அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டான்.” ஆத்தா, அவள்
மகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள். அவளோடு ஒரு வாரம் வாழ்ந்தாலும்
போதும். அதுதான் வாழ்க்கை. எனக்கு அவளையே பேசி முடியுங்கள்.
மணம் செய்து வையுங்கள். மற்றதையெல்லாம் நீங்கள் வணங்கும்
குன்றக்குடி முருகன் பார்த்துக் கொள்வான்.”

அப்படியே நடந்தது. அதற்கு அவனுடைய அப்பச்சி சிங்காரம்
செட்டியாரும் உடந்தையாக இருந்தார்.

“இஞ்சே, நாட்டு நடப்புத் தெரியாம பேசாதே! நம்ம சமூகம் சின்ன சமூகம்,
அதுல உன் விருப்பத்துக்கும், அவன் விருப்பத்துக்கும் சேர்த்துப் பொண்ணு
பாக்கிறதுன்ன அது நடக்கிற காரியமா? அவன் நோக்கப்படியே விட்டுவிடு”
என்று சொல்லி , ஆச்சியைச் சம்மதிக்க வைத்தது அவர்தான்!

சாலாவின் கழுத்தில் இன்றுவரை நூல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
அதோடு மட்டுமல்ல, சாத்தப்பன் - சாலா தம்பதியருக்கு இன்று 23 வயதில்
ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் அதே நட்சத்திரம். அதுதான்
காலதேவனின் திருவிளையாடல்!

பேத்தி பிறந்த சமயத்தில், சாத்தப்பனின் தாயார்தான் அதிகம் கவலைப்
பட்டார்கள். பிறந்த பிள்ளையின் நட்சத்திரம் பூராடமாக இருக்கிறதே
என்று கண் கலங்கினார்கள்.

அப்போது சாத்தப்பன் தன் தாயாரிடம் இப்படிச் சொன்னான்.”ஆத்தா,
சாலாவின் அப்பச்சிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைப்போல,
பிற்காலத்தில் எனக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். அதற்கு நீ
இப்போதிருந்தே கவலைப்படாதே!”

சாத்தப்பன் மகள் மீனாட்சிக்குத் தகுந்த வரன் கிடைத்ததா?

தொடர்ந்து படியுங்கள்!

*****************************************************

சாத்தப்பனுக்குத் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ்
ரோட்டில் பெரிய வீடு. பூர்வீகச்சொத்து. சத்திரம் பேருந்து நிலையம்
அருகே பெரிய வணிக வளாகம். மாதம் நான்கு லட்ச ரூபாய் வாடகையாக
வந்து கொண்டிருக்கிறது. ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி அருகேயும்
ஒரு பெரிய கட்டடம். அதிலிருந்தும் பெரும் தொகை வாடகையாக வந்து
கொண்டிருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற்காகச் சாத்தப்பனும்
சும்மா இருக்காமல், இந்தியாவின் தலை சிறந்த, மருந்து உற்பத்தி
செய்யும் பத்துக் கம்பெனிகளுக்கு சி & எஃப் ஏஜென்ட்டாக
வணிகம் செய்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய பெற்றோர்களையும் கூடவே வைத்திருக்கிறான்.
வைத்திருக்கிறான் என்று சொல்வதைவிட, தனக்குத் திருமணமாகி
25 ஆண்டுகளாகியும், தனிக்குடித்தனம் போகாமல், பெற்றோர்கள்,
மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாகவே அவன் இருந்து
கொண்டிருக்கிறான். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

அவனுக்கு முன்பாகப் பிறந்த சகோதரிகள் மூவரின் குடும்பங்களும்,
மணப்பாறை, குளித்தலை, தொட்டியம் என்று திருச்சியைச் சுற்றியுள்ள
பகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் பத்து
நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று பெரிய
வீட்டிற்கு வந்து போவார்கள். உறவு முறைகள் எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் அன்பு மழையில் வளமாக இருந்தது.

ஆனால், அவர்கள் வீடுகளில் மீனாட்சிக்குத் தோதாக பையன்கள்
இல்லாததால், சாத்தப்பனுக்கு வெளியே வரன் தேடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது. அவனும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல், நல்ல
தோதில் ஒரு வரனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

உடனே கிடைத்தால்தானே? ஒன்றிருந்தால் ஒன்றில்லை. சொந்த
ஊரில் தேடி ஒன்றும் அமையவில்லை. வெளியூர் என்றாலும் பரவாயில்லை
என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,
கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி
கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,
சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய
ஆச்சி சொல்வார்கள்.

அப்போது சாத்தப்பன், இப்படிப் பதில் சொல்வான்: “ஆத்தா, செட்டி
நாட்டில் உள்ள 75 ஊர்களும் ஒன்றுதான். ஊரில் என்ன இருக்கிறது?
திருச்சி நகரத்தார், சென்னை நகரத்தார், கோவை நகரத்தார் என்று
இப்போது இருக்கும் ஊர்களை வைத்தும் நகரத்தார்கள் அறியப்
படுகிறார்கள். நமக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும்!”

அப்படியே தேடவும் செய்தான்.

****************************************************************

திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்களைப்
பொறுத்தவரை, முதல் நிபந்தனை, பெண் சிவந்த நிறமாக, அழகான
தோற்றத்துடன் இருக்க வேண்டும். மாநிறம் அல்லது கறுப்பாக
இருந்தாலும் களையான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக
இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கும் அதே நிபந்தனைதான்.

அடுத்து இருசாராரும் படித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுப்பார்கள். பொறியியல் படித்த பெண்கள், பொறியியல் படித்த
மாப்பிள்ளைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போல,
இரட்டை இஞ்சின் இழுக்கும் வாழ்க்கையை (அதாவது கணவன்,
மனைவி இருவரும் சம்பாதிக்கும் வாழ்க்கையை) விரும்பும் இளைஞர்கள்,
படித்து வேலைக்குச் செல்லும் பெண்களை விரும்புவார்கள்.

யாரும் குணத்திற்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கேட்டால்,
திருமணத்திற்குப் பிறகு அல்லவா அது தெரியவரும் என்பார்கள்.

தாய்மார்களைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணத்தின் மேல் ஆசை
இல்லை. ஆனாலும் ஊர்ப்பெருமைக்காக, நல்ல தோதுடன் வரும்
பெண்தான் வேண்டும் என்பார்கள்.

தந்தைமார்களைப் பொறுத்தவரை, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்
என்பார்கள். பாரம்பரியத்தில், பெயரில் சிறந்த குடும்பமாக இருக்க
வேண்டும் என்பார்கள். சொத்துள்ளவர்கள், சொத்துள்ள குடும்பமாகத்
தேடுவார்கள். கேட்டால் எங்கள் பெண்ணையும், நாங்கள் கொடுக்கும்
தோதையும் -அதாவது நகைகளையும் ஸ்ரீதனப் பணத்தையும் வைத்துக்
காப்பாற்றக் கூடிய குடும்பமாக வேண்டும் என்பார்கள்.

அப்படித்தான் சில நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு,
சாத்தப்பனும் தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம், அவனுடைய நண்பர் ஒருவர், இரண்டு வரன்களைப்
பற்றிய தகவல்களைக் கொடுத்ததோடு, உன் மனத்திருப்திக்கு,
அவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு ஒரு முடிவிற்கு வா’
வென்றார்.

எப்படி விசாரிப்பது என்று இவன் கேட்டபோது, அவர் நல்ல யோசனை
ஒன்றைச் சொன்னார்.

“நீ அவர்களுடைய செட்டிநாட்டுக் கிராமத்திற்குப் போ. அவர்கள்
வீடு இருக்கும் தெருவில், அக்கம் பக்கத்தில், எதிரில் இருக்கும்
வீடுகளில் அவர்களைப் பற்றி விசாரி. பெண்ணைப் பெற்றவன்
அக்கறையுடன் வந்து விசாரிக்கிறான் என்கின்ற அனுதாபத்தில்
அனைவரும் உதவி செய்வார்கள். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.”

அப்படியே செய்தான். ஆனால் அந்த இரண்டு இடங்களுமே
பிடிக்காமல் போய்விட்டது.

முகவரிகளைக் கொடுத்த நண்பர் கேட்டபோது, சாத்தப்பன்
இப்படிச் சொன்னான்.

”நீ கொடுத்த முதல் இடம் பிடிக்கவில்லை. அந்தப் பையனின்
அப்பச்சிக்குத் தொடுப்பு இருக்கிறதாம்.”

“அப்பச்சி சீட்டாடுவார் என்பதற்காகப் பையனும் ஆடுவான் என்று
சொல்ல முடியாது. அப்பச்சிக்குத் தொடுப்பு இருப்பதால், பையனும்,
அப்படியே ஆசா பாசங்களுடன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல
முடியாது.”

“இல்லை எனக்கு நெருடலாக இருந்தது. அதை விட்டு விட்டேன்”

“சரி, அடுத்தது என்ன ஆயிற்று?”

“அவர்கள் வீட்டின் கழிப்பறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
முகப்பு, பெட்டக சாலையில் இருக்கும் மின்சார ஸ்விட்ச் போர்டுகளுக்
கெல்லாம் மரப் பெட்டியடித்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.”

“சில வீடுகளில் அப்படி இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
கழிப்பறையை உபயோகிப்பவர்கள், வேண்டும் அளவு தண்ணீர் ஊற்றி
சுத்தம் செய்துவிட்டுப் போவதில்லை. உடையவர்கள் உபயோகிப்பதற்கு,
அது தகுதியில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால்
பூட்டி வைத்திருப்பார்கள். அதனால் ஒன்றும் தவறில்லை. அதுபோல
பவர் கட் ஆகும் சமயத்தில் அதைக் கவனத்தில் கொண்டு, மின்
சாதனங்களை உபயோகிப்பவர்கள், சுவிட்சை அணைத்து விட்டுச்
செல்வதில்லை. அவர்கள் போன பிறகு - கரண்ட் வந்தவுடன் அவைகள்
மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும். அதைத் தவிர்க்க உடையவர்கள்
பெட்டியடித்து, பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலும்
தவறில்லை. அதிலெல்லாம் குறை கண்டால் எப்படி சாத்தப்பா?”

“இல்லை. அதைக்கூட நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதைவிடப் பெரிய கரைச்சல் ஒன்று இருக்கிறது.

“என்ன அது?”

“பொது வீட்டில் அவர்களுடைய பங்குப் பகுதிகள் மட்டும் பராமரிக்
கப்படமல், பல்லை இளித்துக்கொண்டு இருக்கிறது. மற்ற பகுதிகள்
பராமரிக்கப்பட்டு, பளபளப்புடன் இருக்கின்றன. இவர்கள் ஒத்து வந்து
அவர்களுடன் சேர்ந்து பராமரிப்பதில்லையாம். அதோடு, ஊருக்கு
வந்து போனால், ஊருக்கு வெளியே இருக்கும், தங்கள் தனி
பங்களாவில் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம். பொது வீட்டிற்கு
வந்து போவதில்லையாம். யாருடனும் சுமூகமான உறவு இல்லையாம்.
அந்த வீட்டிற்குள்ளேயே போய், வளவில் எதிர்ப்பங்கில் இருக்கும் பெரிய
ஆச்சியைக் கேட்டு விட்டேன். அடுத்தடுத்த வீடுகளிலும் கேட்டுவிட்டேன்.
அவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் என்
பெண்ணைக் கொடுத்தால், என் பெண்ணிற்கு, கணவன் வழி சொத்துக்கள்
இருக்கும். ஆனால் சொந்தங்கள் இருக்காது. எது முக்கியம்
- நீயே சொல் - சொத்தா? சொந்தங்களா?”

"என்னைக் கேட்டால் இரண்டும் வேண்டும். சொத்தில்லாமல்
சொந்தங்களும் பயன்படாது. சொந்தங்களில்லா சொத்தும் பயன்படாது.
கவியரசர் அதைத்தான் இப்படிப் பாடிவைத்து விட்டுப்போனார்.
பானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா: சோதனையைப்
பங்கு வச்சா சொந்தமில்லலே, பந்தமில்லே!”

"இல்லை, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வில், எதை எதிர்கொள்ள
நேரிடும் என்பதற்காகக் கவியரசர், அதை எழுதினார். ஆனால் உண்மையில்
பெண்ணிற்கு என்ன வேண்டும் என்பதை இன்னொரு பாட்டில் எழுதிவைத்தார்.
தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால்
போதுமா? அது மான அபிமானங்களைக் காக்குமா? என்றார். பெண்ணிற்கு
அவளுடைய மான அபிமானங்களைக் காக்கக்கூடிய கணவனும்,
புகுந்த வீடும் அமைய வேண்டும். அதற்குத்தான் நானும் பாடுபட்டுத் தேடிக்
கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பழநிஅப்பன்
உதவி செய்வான்.”

” ஆகா, உன் நம்பிக்கை வாழ்க! வளர்க!” என்று சொல்லிவிட்டு நண்பர்
போய்விட்டார்.

*****************************************************************
நேரம் வந்து விட்டால், “நான் வாரேன் தடுக்குப் போட, எங்க ஆத்தா
வர்றா பிள்ளையை எடுக்கிக் கொள்ள” என்று எல்லாம் கூடி வரும்
என்பார்கள்.

அப்படி சாத்தப்பனுக்கு எல்லாமே ஒரே வாரத்தில் கூடி வந்தது. ஒரு நல்ல
மாப்பிள்ளை அமைந்தது. அடுத்து வந்த மாதத்திலேயே திருமணமும்
சிறப்பாக நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பங்காளிகள் 370 புள்ளிகள். அப்பச்சி வழி,
ஆத்தாவழித் தாயபிள்ளைகள் 200 புள்ளிகள். நட்பு வட்டத்தில் 100க்கும்
மேற்பட்ட குடும்பங்கள் என்று மொத்தம் 1,000 பேர்களுக்கு மேல்
திருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த
வாழ்த்தரங்கத்தில் பலரும் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள் குடும்பத்தின்
பாச உணர்வை எடுத்துக்கூறிப் பாராட்டிப் பேசினார்கள்.

மாப்பிள்ளையுடன் பிறந்த சகோதரிகள் மூவர், மாப்பிள்ளையின்
அப்பச்சியுடன் பிறந்த சகோதரிகள் மூவர். ஆக மொத்தம் ஆறு பேர்களுக்கும்,
மாப்பிள்ளையின் தந்தையார்தான் முன்னின்று அவர்கள் அனைவரின்
திருமணத்தை நடத்தி வைத்ததைச் சொன்னார்கள். பந்த பாசங்களுக்கு
அவர்களுடைய குடும்பம் ஒரு உதாரணக் குடும்பம் என்று புகழ்ந்து பேசினார்கள்.

கதையின் நடுவில் வந்தாரே சாத்தப்பனின் நண்பர், அவருக்கு மிகவும்
மகிழ்ச்சி. மாப்பிள்ளையும், பெண்ணும் கும்பிட்டுக் கட்டிக்கொள்ளும்போது,
சொந்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், மாலை, பெண் அழைப்பு
நிகழ்ச்சிக்குக் காரில் செல்லும்போது, சாத்தப்பனிடம் மெல்லிய குரலில்
சொன்னார்.

“உன் முயற்சி வீண் போகவில்லை, சாத்தப்பா, இறையருளால், அற்புதமான
குடும்பம் உனக்கு சம்பந்தப்புரமாக அமைந்துள்ளது! இத்தனை சொந்தங்களை
இதுவரை நான் பார்த்ததில்லை. அது ஒரு காரணத்திற்காகத்தான் இவர்களை
நீ தெரிவு செய்தாயா?”

”இல்லை. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது!” இது சாத்தப்பன்.

“என்ன அது?”

“கல்யாணம் பேசும்போது, என் மகளின் புகைப் படத்துடன், ஜாதகத்தையும்
கொடுத்தேன். படத்தை மட்டும் வாங்கிக் கொண்டவர்கள், ஜாதகத்தை வேண்டாம்
என்று சொல்லி விட்டார்கள். மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற
பொருத்தங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஜோதிடத்தைவிடப்
பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். இறைவனின் மேல் முழு
நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி
ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது? என்றார்கள். நான் அசந்து போய்
விட்டேன். அவர்களுடைய அசாத்திய இறை நம்பிக்கைக்குத் தலை
வணங்குவத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை எனக்கு. ஆகவே
என் மகளை அவர்கள் வீட்டில் கட்டுவதற்கு எந்தவிதத் தயக்கமுமின்றி
ஒப்புக்கொண்டேன்!”

தீவிர பக்தரான நண்பரின் கண்கள், உணர்ச்சிப் பிரவாகத்தில், பனித்துவிட்டன!

********************************************************************

நமது வகுப்பறை முதல் பெஞ்ச் மாணவர் ஆனந்த் அவர்களின் வேண்டுகோள்
ஏற்கப்பட்டு, வகுப்பறைக்கு 4 தினங்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அடுத்த வகுப்பு 21.10.2009 புதன் அன்று நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

112 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நாளை காலை திவ்யமான கங்காஸ்நானம் ஆகட்டும்.வாத்தியாருக்கு தீபாவளி
    வந்தனங்கள்.
    ""நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த‌
    கோள் என்செயும்...கொடுங்கூற்று என் செயும் குமரேசன் இரு
    தாளும் சில்ம்பும் தண்டையும்..... என் கண் முன்னே வந்து தோன்றிடினே!"
    தீ‌பாவளிக்கான கதை இதைத்தான் சொல்லுகிறது‍‍ இல்லையா அய்யா?

    ReplyDelete
  3. ////kmr.krishnan said...
    நாளை காலை திவ்யமான கங்காஸ்நானம் ஆகட்டும்.வாத்தியாருக்கு தீபாவளி
    வந்தனங்கள்.
    ""நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த‌ கோள் என்செயும்...
    கொடுங்கூற்று என் செயும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் தண்டையும்..... என் கண் முன்னே வந்து தோன்றிடினே!"
    தீ‌பாவளிக்கான கதை இதைத்தான் சொல்லுகிறது‍‍ இல்லையா அய்யா?/////

    ஆமாம் சார்! நன்றி!
    அதிகாலை நேரத்தில் (between 4:00 Am to 5:00AM) நான் பதிவு போட்டால், அதே சுறுசுறுப்புடன் பின்னூட்டம் போட உங்களால்தான் முடியும். வாழ்க, உங்கள் இளமை!:-)))))

    ReplyDelete
  4. ஆசானுக்கும், என் சக வகுப்பறை நண்பர்களுக்கும் தீ‌பாவளி நல்வாழ்த்துக்கள்.

    கதை அருமை.

    ReplyDelete
  5. அருமையான கதை. இறைவன் அருள் இருந்தால் நாள் என் செயும் கோள் என் செயும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள்.........

    கதை நடை அருமை ஐயா....

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியருக்கு காலை வணக்கங்கள்,

    தங்களின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி!

    தீபாவளி சிறப்புக்கதை "சொத்தும் சொந்தமும்"
    கதை பால்கோவாவைப் போல் இனிப்பாக இருந்தது,

    இதையே தீபாவளி இனிப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ////singaiSuri said...
    ஆசானுக்கும், என் சக வகுப்பறை நண்பர்களுக்கும் தீ‌பாவளி நல்வாழ்த்துக்கள்.
    கதை அருமை./////

    நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  10. /////krish said...
    அருமையான கதை. இறைவன் அருள் இருந்தால் நாள் என் செயும் கோள் என் செயும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  11. /////Priya said...
    இனிய தீபாவளி வாழ்த்துகள்.........
    கதை நடை அருமை ஐயா....////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு காலை வணக்கங்கள்,
    தங்களின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி!
    தீபாவளி சிறப்புக்கதை "சொத்தும் சொந்தமும்"
    கதை பால்கோவாவைப் போல் இனிப்பாக இருந்தது,
    இதையே தீபாவளி இனிப்பாக எடுத்துக் கொள்கிறோம்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ////

    ஆகா, அப்படியே செய்யுங்கள். உடம்பிற்கும் நல்லது!:-))))

    ReplyDelete
  13. அக இருள் நீங்க
    அனைவர்க்கும்இனிய தீபாஓளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஆசிரியருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  15. வாத்தியார் அய்யா இந்த கதை மூலம்
    என்ன சொல்ல வாறீக.
    ஜாதகத்தை தூக்கி மூலையிலெ போடு.
    மன பொருத்தம் இருந்தாபோதும்.
    கல்யாணத்தை முடிச்சிடுன்றீகளா?

    எல்லோருக்கும் இதயங்கனிந்த‌
    தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அன்பிற்கினிய அய்யா அவர்களுக்கு ,

    இனிய அனுபவத்தை இனிய திருநாள் நேரத்தில் இனிய காலை பொழுதில் இனிய எழுத்து நடையில் அளித்த ஆசிரியர் இல்லை பேராசிரியர் (இப்பொது மேல்நிலை பாடம் என்பதால்)அவர்களுக்கும் சக மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  17. கல்யாணம் பேசி முடிக்கும்போது எப்படியெல்லாம் கவனித்து ஆராய வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லும் அருமையான கதை. வாதிதியார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  18. ////Blogger DHANA said...
    அக இருள் நீங்க
    அனைவர்க்கும்இனிய தீபாஓளி நல்வாழ்த்துக்கள்////

    நன்றி தனா!

    ReplyDelete
  19. ஐயா... வணக்கம். சிறுகதை அருமை. என்னதான் ஜோதிடம், numerology எல்லாம் இருந்தாலும்... இறைவனை நம்புவதே சிறந்தது என்று கோடிட்டு காட்டி விட்டீர்கள்.

    வகுப்பறை-இல் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ஒரு குறிப்பு: முடிந்த அளவு பட்டாசு மற்றும் வெடிகள் வெடிப்பதை தவிர்ப்போம். சில காரணங்கள்:

    1. சிவகாசி மற்றும் அதை சுற்றி உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிறைய சிறார்கள் வேலைக்கு அமர்த்த பட்டுள்ளனர். மற்றும் ஒவ்வொரு வருடமும் நிறைய சிறுவர் & பெரியவர்கள் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் இறந்து போகின்றனர். நாம் வாங்குவதை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தபடுவதை தவிர்க்கலாம்.

    2. Global Warming - பூமி வெப்பமயமாதல்: புகை, Plastic கழிவு மற்றும் கரியமில வாயு வாரனமாக, பூமி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. எதோ நம்மால் முடிந்த அளவு பட்டாசு வெடிப்பதை தவிர்த்தால், நாமும் பூமி வெப்பமயமாதலை கொஞ்சம் கட்டு படுத்தலாம்
    3. எத்தனையோ பேர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து காயம், ஊனம், மற்றும் உயிர் துறக்கிறார்கள். இதையும் தவிர்க்கலாம்.

    நன்றி... அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. /////Blogger VA P RAJAGOPAL said...
    ஆசிரியருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்............/////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete
  21. /////Blogger thirunarayanan said...
    வாத்தியார் அய்யா இந்த கதை மூலம்
    என்ன சொல்ல வாறீக.
    ஜாதகத்தை தூக்கி மூலையிலே போடு.
    மன பொருத்தம் இருந்தாபோதும்.
    கல்யாணத்தை முடிச்சிடுன்றீகளா?
    எல்லோருக்கும் இதயங்கனிந்த‌
    தீபாவளி நல் வாழ்த்துக்கள்/////

    ஆமாம், இறையருளை விட ஜோதிடம் பெரிதல்ல. இறைவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, கிடைக்கின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். பொருத்தம் பார்த்தால் ஏதாவது ஒன்று இடிக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும்!

    ReplyDelete
  22. /////Blogger astroadhi said...
    அன்பிற்கினிய அய்யா அவர்களுக்கு ,
    இனிய அனுபவத்தை இனிய திருநாள் நேரத்தில் இனிய காலை பொழுதில் இனிய எழுத்து நடையில் அளித்த ஆசிரியர் இல்லை பேராசிரியர் (இப்பொது மேல்நிலை பாடம் என்பதால்)அவர்களுக்கும் சக மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
    நன்றி வணக்கம்./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ///Blogger subbu said...
    கல்யாணம் பேசி முடிக்கும்போது எப்படியெல்லாம் கவனித்து ஆராய வேண்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லும் அருமையான கதை. வாதிதியார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மதுரை சுப்பு////

    கதை ஓட்டத்தில் பலர் அதைக் கவனிக்க மாட்டார்கள். நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger Scorpion King said..
    ஐயா... வணக்கம். சிறுகதை அருமை. என்னதான் ஜோதிடம், numerology எல்லாம் இருந்தாலும்... இறைவனை நம்புவதே சிறந்தது என்று கோடிட்டு காட்டி விட்டீர்கள்.
    வகுப்பறை-இல் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    ஒரு குறிப்பு: முடிந்த அளவு பட்டாசு மற்றும் வெடிகள் வெடிப்பதை தவிர்ப்போம். சில காரணங்கள்:
    1. சிவகாசி மற்றும் அதை சுற்றி உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிறைய சிறார்கள் வேலைக்கு அமர்த்த பட்டுள்ளனர். மற்றும் ஒவ்வொரு வருடமும் நிறைய சிறுவர் & பெரியவர்கள் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் இறந்து போகின்றனர். நாம் வாங்குவதை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தபடுவதை தவிர்க்கலாம்.
    2. Global Warming - பூமி வெப்பமயமாதல்: புகை, Plastic கழிவு மற்றும் கரியமில வாயு வாரனமாக, பூமி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. எதோ நம்மால் முடிந்த அளவு பட்டாசு வெடிப்பதை தவிர்த்தால், நாமும் பூமி வெப்பமயமாதலை கொஞ்சம் கட்டு படுத்தலாம்
    3. எத்தனையோ பேர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து காயம், ஊனம், மற்றும் உயிர் துறக்கிறார்கள். இதையும் தவிர்க்கலாம்.
    நன்றி... அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல வாழ்த்துக்கள்.////////

    உங்கள் வேண்டுகோள்களை பலரும் படிக்கட்டும். நன்றி ராசா!

    ReplyDelete
  25. வகுப்பறையின் "பஞ்ச்" பதிவு.தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  26. இதைத்தானே அய்யா
    7ம் நுற்றாண்டு இளவல்
    திருஞானசம்பந்தர்
    கோளறு பதிகத்தில் . . .

    அடியார் அவர்க்கு நல்லனவே செய்யும்
    என ஆனை இட்டு உறுதி சொல்லி இருக்கிறார் . .

    அதை இடுகையில் சேர்த்துக் கொள்வோமே. . .

    ReplyDelete
  27. kadhai arumai.. "irai arulirku minjiyathu ethuvum illai" ena ore podaga pottu vitirgale... nandri ayya... :)

    Anaivarukkum Iniya deepa oli nal vazhlthukkakal..

    ReplyDelete
  28. கனிவான ஆசிரியருக்கு!!!

    தித்திக்கும் தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    அன்பன்,
    அருள்நிதி...

    ReplyDelete
  29. நல்ல கதை, நான் உங்கள் பழைய பாடங்களை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் க்ரஹ யுத்தம் பாடம் கிடைத்தது.

    ReplyDelete
  30. என் இனிய சக மாணவ தோழர்,தோழிகளுக்கு!!!

    மனமார்ந்த தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

    நண்பன்,
    அருள்நிதி

    ReplyDelete
  31. உள்ளேன் ஐயா.
    கதை மிக அருமை.
    -விஜயராகவன்

    ReplyDelete
  32. Dear Sir,

    அருமையான கதை, இறைவன் அருள் எப்பொழுதும் உயர்ந்தது உங்கள் ஒவ்வொரு சிறு கதையிலும் சுற்றிகாட்டுகிறிர்கள். நன்றி

    அனைவருக்கும் இனிய தீபாஓளி நல்வாழ்த்துக்கள்

    Rgds
    Nainar

    ReplyDelete
  33. அன்புள்ள ஆசிரியருக்கு

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    Vannamalar

    ReplyDelete
  34. ஐயா வணக்கம்

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.

    கதை மிக நன்று. சாத்தப்பன் போல நானும் எனக்கு மருமகள் தேட (இன்னும் 5~6 வருடம் கழித்து) நல்ல அறிவுரை. எல்லாம் அந்த பழனி ஆண்டவன் சித்தம்.

    நன்றி

    மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா.

    அப்படியே சகமாணாக்க நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. ////Blogger இராதா கிருஷ்ணன் said...
    வகுப்பறையின் "பஞ்ச்" பதிவு.தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் ஐயா.////

    நன்றி ராதாகிருஷ்ணன்!

    ReplyDelete
  37. ////Blogger iyer said...
    இதைத்தானே அய்யா 7ம் நுற்றாண்டு இளவல்
    திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் . . .
    அடியார் அவர்க்கு நல்லனவே செய்யும்
    என ஆனை இட்டு உறுதி சொல்லி இருக்கிறார் . .
    அதை இடுகையில் சேர்த்துக் கொள்வோமே. . ./////

    நன்றி ஐயர்!

    ReplyDelete
  38. Blogger Poornima said...
    kadhai arumai.. "irai arulirku minjiyathu ethuvum illai" ena ore podaga pottu vitirgale... nandri ayya... :)
    Anaivarukkum Iniya deepa oli nal vazhlthukkakal../////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  39. /////Blogger Arul said...
    கனிவான ஆசிரியருக்கு!!!
    தித்திக்கும் தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
    அன்பன்,
    அருள்நிதி...//////

    நன்றி அருள்!

    ReplyDelete
  40. ////Blogger Uma said..
    நல்ல கதை, நான் உங்கள் பழைய பாடங்களை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் க்ரஹ யுத்தம் பாடம் கிடைத்தது.////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. ////Blogger Arul said...
    என் இனிய சக மாணவ தோழர்,தோழிகளுக்கு!!!
    மனமார்ந்த தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்...
    நண்பன்,
    அருள்நிதி/////

    நன்றி அருள்

    ReplyDelete
  42. /////Blogger JS said...
    உள்ளேன் ஐயா.
    கதை மிக அருமை.
    -விஜயராகவன்//////

    நன்றி விஜயராகவன்!

    ReplyDelete
  43. /////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    அருமையான கதை, இறைவன் அருள் எப்பொழுதும் உயர்ந்தது உங்கள் ஒவ்வொரு சிறு கதையிலும் சுற்றிகாட்டுகிறிர்கள். நன்றி
    அனைவருக்கும் இனிய தீபாஓளி நல்வாழ்த்துக்கள்
    Rgds
    Nainar////

    நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  44. //////Blogger Vannamalar said...
    அன்புள்ள ஆசிரியருக்கு
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    Vannamalar/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  45. ////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.
    கதை மிக நன்று. சாத்தப்பன் போல நானும் எனக்கு மருமகள் தேட (இன்னும் 5~6 வருடம் கழித்து) நல்ல அறிவுரை. எல்லாம் அந்த பழனி ஆண்டவன் சித்தம்.
    நன்றி
    மீண்டும் வாழ்த்துக்கள்////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  46. /////Blogger புதுகைத் தென்றல் said...
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா.
    அப்படியே சகமாணாக்க நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  47. Vathiyar avargalukkum Saga Manavargalukkum Deepavali Nalvalthukkal !!!!!

    ReplyDelete
  48. vanakam sir,

    ”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,
    கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி
    கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,
    சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய
    ஆச்சி சொல்வார்கள்.

    entha vasanam romba nalla irrukuthu neega romba nala kathai write panni irrukiriga katha ennaku poruthama irrukuthu
    but i donot have final still thotaruthu ARUL ILLARUKU AYOULAGAM(MELOGAM) PORUL ILLARUKU ENTHA ULAGAM ILLAI ENTRA VARTHAI ENTHA KOTHAYIL PURINTHATHU.

    happy duiwali dear sir.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  49. அன்புள்ள ஆசானே

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  50. Dear friends( all the class mate friends)

    Happy deepavali to u dear friends.

    your lovingly friend
    sundari.p

    ReplyDelete
  51. Dear Sir

    Idha Alamadna Kadhai enakku migavum pidithirukku. nandri Sir.

    Idhu Kadhayalla Nijam Enbhadhu pola.. Indha Uravuthan vendum..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  52. ////Blogger sundaresan p said...
    WISH U A HAPPY DEEPAVALI////

    நன்றி சுந்தரேசன்!

    ReplyDelete
  53. ////Blogger YOGANANDAM M said...
    wish you all happy diwali////

    நன்றி யோகானந்தம்!

    ReplyDelete
  54. /////Blogger மிஸ்டர் அரட்டை said...
    Vathiyar avargalukkum Saga Manavargalukkum Deepavali Nalvalthukkal !!!!!////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. ////Blogger sundari said...
    vanakam sir,
    ”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,
    கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி
    கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,
    சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய
    ஆச்சி சொல்வார்கள்.
    entha vasanam romba nalla irrukuthu neega romba nala kathai write panni irrukiriga katha ennaku poruthama irrukuthu
    but i donot have final still thotaruthu ARUL ILLARUKU AYOULAGAM(MELOGAM) PORUL ILLARUKU ENTHA ULAGAM ILLAI ENTRA VARTHAI ENTHA KOTHAYIL PURINTHATHU.
    happy duiwali dear sir.
    your lovingly
    sundari.p/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  56. /////Blogger இராகவன் நைஜிரியா said...
    அன்புள்ள ஆசானே
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்./////

    நன்றி ராகவன்!

    ReplyDelete
  57. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Idha Alamadna Kadhai enakku migavum pidithirukku. nandri Sir.
    Idhu Kadhayalla Nijam Enbhadhu pola.. Indha Uravuthan vendum..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  58. Happy Deepawali to all Astro Stars***************************27

    ReplyDelete
  59. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜயா.

    ReplyDelete
  60. dear sir,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  61. மதிப்புக்குரிய வாத்தியாருக்கும் மற்றும் அணைத்து மாணவ, மாணவியருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    சரவணகுமார்

    ReplyDelete
  62. Dear Everyone,

    Diwali wishes to everyone.

    Regards,
    Srinath G

    ReplyDelete
  63. அய்யா வணக்கம் . தங்களுக்கும் ,சக மாணவ சகோதர ,சகோதரிகளுக்கும் என்னுடைய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக தீபாவளி சிறப்பு சிறு கதை அருமை, ..

    ReplyDelete
  64. வாத்தியாருக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  65. Vanakam sir and my classroom friends all,

    I ate idly and vada sir did u take. dear friends neengal ella sapitigala parthu patharamma patasu vetiunga yarukum patasu vipathu paarakudathu happy diwali.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  66. ////Blogger ceylonstar said...
    Happy Deepawali to all Astro Stars***************************27////

    நன்றி சிலோன் ஸ்டார்! (ஸ்டார் நம்பர் 28)

    ReplyDelete
  67. ////Blogger Karthi said...
    Inniya diwali nal valthukal!!!!!/////

    நன்றி கார்த்தி!

    ReplyDelete
  68. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜயா.////

    நன்றி இமானுவேல்!

    ReplyDelete
  69. ///Blogger sarupraba said...
    dear sir,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.////

    நன்றி சாருபிரபா!

    ReplyDelete
  70. /////Blogger Saravana said...
    மதிப்புக்குரிய வாத்தியாருக்கும் மற்றும் அணைத்து மாணவ, மாணவியருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    சரவணகுமார்/////

    நன்றி புது மாப்பிள்ளை!

    ReplyDelete
  71. /////Blogger Saravana said...
    மதிப்புக்குரிய வாத்தியாருக்கும் மற்றும் அணைத்து மாணவ, மாணவியருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    சரவணகுமார்/////

    நன்றி புது மாப்பிள்ளை!

    ReplyDelete
  72. /////Blogger Srinath said...
    Dear Everyone,
    Diwali wishes to everyone.
    Regards,
    Srinath G/////

    நன்றி ஸ்ரீநாத்!

    ReplyDelete
  73. /////Blogger Meena said...
    அய்யா வணக்கம் . தங்களுக்கும் ,சக மாணவ சகோதர ,சகோதரிகளுக்கும் என்னுடைய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக தீபாவளி சிறப்பு சிறு கதை அருமை, ../////

    நன்றி சகோதரி! நீங்களாவது கதையைப் படித்து ஒரு வரி பாராட்டியுள்ளீர்கள். பலர் படித்ததாகத் தெரியவில்லை!

    ReplyDelete
  74. /////Blogger chaks said...
    வாத்தியாருக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்/////

    நன்றி சக்கரவர்த்தி!

    ReplyDelete
  75. /////Blogger sundari said...
    Vanakam sir and my classroom friends all,
    I ate idly and vada sir did u take. dear friends neengal ella sapitigala parthu patharamma patasu vetiunga yarukum patasu vipathu paarakudathu happy diwali.
    your lovingly
    sundari.p/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  76. ////RVC said...
    wish u a happy diwali sir////

    நன்றி ஆர்.வி.சி!

    ReplyDelete
  77. sir,

    ungaluku puttu choka(shirt) puttu veti nalli silk house la irruthu eduuthuthanta neega vagipikala.
    ennaiku enaku rombo sad irruthathu nanu chennaila irrukuran neega coimbatore la irrukuruinga ungal home address enaku theriyathu
    pongaluku ennka vituku vanga sir illana ungal homeadrss kuduga sir.
    enaku therium neega thara matika
    ungala pakkanum ennu enaku romba asai thappa nenachikathiga.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  78. /////sundari said...
    sir,
    ungaluku puttu choka(shirt) puttu veti nalli silk house la irruthu eduuthuthanta neega vagipikala.
    ennaiku enaku rombo sad irruthathu nanu chennaila irrukuran neega coimbatore la irrukuruinga ungal home address enaku theriyathu
    pongaluku ennka vituku vanga sir illana ungal homeadrss kuduga sir.
    enaku therium neega thara matika
    ungala pakkanum ennu enaku romba asai thappa nenachikathiga.
    your lovingly
    sundari.p////

    உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி!
    பட்டுத்துணிகள் அணியும் பழக்கம் இல்லை!
    அதோடு நான் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன்!
    அடுத்தமுறை சென்னை வரும்போது, நமது மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் கொடுத்து, ஒரு இடத்தில், அனைவரையும் சந்திக்கும் எண்ணம் உள்ளது. அப்போது அக்கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம்!

    ReplyDelete
  79. சகோதரி சுந்தரி! வகுப்பரையிலேயே வலது ஓரத்தில் கடைசியாக தமிழ்
    எழுதி என்ற சுட்டி உள்ளது. அதனை முதலில் அழுத்துங்கள். http;//tamileditor.oர்க்/ திறக்கும். அதில் தற்போது தாங்க‌ள் பயன்படுத்தும் தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்து எல்லாவற்றையும் செலெக்ட்செய்து கொண்டு, வலதில் க்ளிக் செய்து காப்பி செய்து பேக் பட்டனை க்ளிக் செய்தால் மீண்டும் வ்குப்பரை பக்கம் வரும். அதில் க‌ம‌ன்ட்ஸ் க்ளிக் செய்து
    திறக்கும் பக்கத்தில் கட்டத்திற்குள் வலது க்ளிக் செய்து பேஸ்ட் செய்யவும்.publish comment செய்தால் தமிழிலேயே உங்கள் செய்தி வெளியாகும்

    ReplyDelete
  80. அய்யா,என்ககு சொத்தும் இல்லை சொந்தமும் இல்லை அப்ப திருமனம் கஷ்டம்தானா அய்யா :).கேதும் 5ல் இல்லை சனியாசியாக போகும் யோகம் இல்லை...

    ReplyDelete
  81. வனகம் சகொதர க்ரிஷ்னம்

    தஙல் சொல்லி தந்த டமில் அலுதிகு ரொம்ப நன்ரி அப்புரம் ஹப்ப்ய் டிநலி டொ உ அன்ட் உர் ஃபமில்ய் மெம்பெர்ச் அல்சொ.

    யொஉர் லொவிங்ல்ய்
    சுன்டரி.ப்

    ReplyDelete
  82. வனகம் சகொதர க்ரிஷ்னம்

    தஙல் சொல்லி தந்த டமில் அலுதிகு ரொம்ப நன்ரி அப்புரம் ஹப்ப்ய் டிநலி டொ உ அன்ட் உர் ஃபமில்ய் மெம்பெர்ச் அல்சொ.

    யொஉர் லொவிங்ல்ய்
    சுன்டரி.ப்

    ReplyDelete
  83. க்ரிஷ்னம் சகொதர‌

    இப்பொ மதியம் வந்தனம் எனக இப்பொ தம்ழிலல மைல் அனுப்ப தெரியும்
    நிகதன் சொல்லிதைந்திக‌
    ரொம்ப நாஇன்ரி

    உஙகல் சகொதரி.
    சுன்டரி.ப்

    ReplyDelete
  84. vj said,

    Dear brother vj I am sundari one of classroom student. Donot worry we donot want property and relation. we need kadayool karunai. Go and pray god sure god will help us then how much paral in ur 7th house tell me where is jupiter tell me donot worry about money we have brave mind and god grace if u like me i will be ur good sister i will help for ur marriage i cando it.
    your lovingly
    sundari.p

    ReplyDelete
  85. Good afternoon sir,

    Sure i will meet u in chennai if i get ur email sir. so much happy for meeting.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  86. ஒவ்வொரு நாளும்
    புலரும் பொழுதுகள்
    இனிமையாய் இருக்கும்.

    இனிய சில நாட்களில்
    புலர்வதில்
    பொழுதுக்கு
    இனிமையாய் இருக்கும்

    சுற்றி வந்த சொந்தங்களோடு
    பற்றிவரும் பட்டாசு நெருப்பில்
    தீமையெல்லாம் அழியட்டும்.
    தீப ஒளி பரவட்டும்.

    - லலித்

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. TO SUNDARI
    --------------
    "HAPPY DIWALI TO YOU AND FAMILY
    MEMBERS ALSO" -THIS IS WHAT YOU HAVE WRITTEN IN TRANSLITERATED TAMIL. IS IT NOT? THANK YOU. SAME TO YOU.TRY TO LEARN TO WRITE ERROR FREE TAMIL.

    ReplyDelete
  89. ஹலோ, v.j.என்னாய்யா இது,
    மன உறுதி இல்லாமே?அய்யா தான்
    சொல்லி இருக்காரில்லே 337.
    எல்லோருக்கும்னு.
    ஏதோ ஒன்னு குறைஞ்சா இன்னொன்னு
    கிடைக்கும்.அதுக்காக கவலை படாதீக.

    ReplyDelete
  90. அம்மா சுந்தரி அவர்களே
    நீங்கள் தமிழில் எழுதி
    நான் படிக்க மிகவும் ஆசை.
    அதை மிகவும் நன்றாக நிறை வேற்றி இருக்கிறீர்கள்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  91. வாத்தியார் அய்யா.
    அது பட்டு சொக்கா அல்ல.
    புது சொக்க.
    பாவம் சுந்தரி அம்மா.

    ReplyDelete
  92. அப்பா திரு நாராயாண் வண்ககம்

    நன்றீ நனு தழழ்ல மைல் அனுபுவன் இனிம‌

    சுந்தரி அம்ம‌

    ReplyDelete
  93. வண்கம் சாகோதரார் க்ரிருஷனணம்

    உங்கள் வாழத்துகு நன்றி

    சுந்தரி.

    ReplyDelete
  94. தீபாவளி சிறுகதை அருமை சார். எல்லோருக்கும் மேல் நம்மை படைத்தவன் இருக்கிறான். வெகு நாள் கழித்து இப்போதுதான் வகுப்பறைக்கு வருகிறேன். ஏனென்று தெரியவில்லை. உங்கள் பதிவைப் பார்வையிட்டால் தொடர்பு துண்டிக்கப் பட்டது. ரொம்பவும் தவித்துவிட்டேன். காணமல் போன அம்மாவை கண்டுபிடித்த குழந்தையின் மகிழ்ச்சி எனக்கு. தீபாவளி வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  95. சகோதரி சுந்தரிக்கு!அ=a;ஆ=aa;இ=i;ஈ=ii;உ=u;ஊ=uu;எ=e;ஏ=ee;ஐ=ai;ஒ=o;ஓ=oo;ஒள=o(caps
    on)l(caps lock)a;ஃ=q

    க்=k; ங்=ng; ச்=s; ஞ்=nj; ட்=t; ண்=(caps on)n; த்=th; ந்=w; ப்=p; ம்=m; ய்=y; ர்=r; ல்=l; வ்=v; ழ்=z; ள்=(caps on)l; ற்‍=(caps on)r; ன்=n;

    ReplyDelete
  96. Thanks for the Special.
    Wish you all the best

    ReplyDelete
  97. சகோதர கிரிஷ்ணம் வண்க்கம்

    தஙகள் எனக்கு தமிழ் சொல்லி தந்தர்துக்கு ரொம்ப ந்ன்றி நிங்க்ள் சர்ப்பிடிங்கள்ர்
    சொல்லுங்கர் எப்ப்டி இருக்கிறிஞ்க்ர் நல்ல் இருக்கிறிங்க்ள்ர்

    உஙக்ள் அன்பு ச்கோதரி
    சுந்தரி.

    ReplyDelete
  98. Present Sir,

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  99. /////Blogger kmr.krishnan said...
    சகோதரி சுந்தரி! வகுப்பறையிலேயே வலது ஓரத்தில் கடைசியாக தமிழ்
    எழுதி என்ற சுட்டி உள்ளது. அதனை முதலில் அழுத்துங்கள். http;//tamileditor.oர்க்/ திறக்கும். அதில் தற்போது தாங்க‌ள் பயன்படுத்தும் தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்து எல்லாவற்றையும் செலெக்ட்செய்து கொண்டு, வலதில் க்ளிக் செய்து காப்பி செய்து பேக் பட்டனை க்ளிக் செய்தால் மீண்டும் வ்குப்பரை பக்கம் வரும். அதில் க‌ம‌ன்ட்ஸ் க்ளிக் செய்து
    திறக்கும் பக்கத்தில் கட்டத்திற்குள் வலது க்ளிக் செய்து பேஸ்ட் செய்யவும்.publish comment செய்தால் தமிழிலேயே உங்கள் செய்தி வெளியாகும்////////

    உங்களுடைய உதவும் மனப்பான்மைக்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  100. ////Blogger vj said...
    அய்யா,எனக்கு சொத்தும் இல்லை சொந்தமும் இல்லை அப்ப திருமணம் கஷ்டம்தானா அய்யா :).கேதும் 5ல் இல்லை சனியாசியாக போகும் யோகம் இல்லை...////

    திருமணத்திற்கு, சொத்து எதற்கு? சொந்தம் எதற்கு? உங்கள் நேசிக்கும்/ விரும்பும் பெண் கிடைத்தால் போதுமே!

    ReplyDelete
  101. ////Blogger லலித் said...
    ஒவ்வொரு நாளும்
    புலரும் பொழுதுகள்
    இனிமையாய் இருக்கும்.
    இனிய சில நாட்களில்
    புலர்வதில்
    பொழுதுக்கு
    இனிமையாய் இருக்கும்
    சுற்றி வந்த சொந்தங்களோடு
    பற்றிவரும் பட்டாசு நெருப்பில்
    தீமையெல்லாம் அழியட்டும்.
    தீப ஒளி பரவட்டும்.
    - லலித்/////

    நன்றி!

    ReplyDelete
  102. /////Blogger thirunarayanan said...
    வாத்தியார் அய்யா.
    அது பட்டு சொக்கா அல்ல.
    புது சொக்க.
    பாவம் சுந்தரி அம்மா./////

    விளக்கத்திற்கு நன்றி நாராயணன்!

    ReplyDelete
  103. //////Blogger வாத்துக்கோழி said...
    தீபாவளி சிறுகதை அருமை சார். எல்லோருக்கும் மேல் நம்மை படைத்தவன் இருக்கிறான். வெகு நாள் கழித்து இப்போதுதான் வகுப்பறைக்கு வருகிறேன். ஏனென்று தெரியவில்லை. உங்கள் பதிவைப் பார்வையிட்டால் தொடர்பு துண்டிக்கப் பட்டது. ரொம்பவும் தவித்துவிட்டேன். காணமல் போன அம்மாவை கண்டுபிடித்த குழந்தையின் மகிழ்ச்சி எனக்கு. தீபாவளி வாழ்த்துக்கள் சார்.////

    எனது பதிவுகளின் மேல் வைத்திருக்கும் தாய்ப்பாசத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  104. ////Blogger Gobinat said...
    Thanks for the Special.
    Wish you all the best////

    நன்றி கோபினாத்!

    ReplyDelete
  105. /////Blogger Geekay said...
    Present Sir,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  106. Sir, நீங்க எங்க போனீங்க, கன நாலா காணவே இல்ல!!! kaathirukan eppo class start pannum endu....happy deepavali, Paravaailla take rest and give ur best:-)

    ReplyDelete
  107. ///Thanuja said...
    Sir, நீங்க எங்க போனீங்க, கன நாலா காணவே இல்ல!!! kaathirukan eppo class start pannum endu....happy deepavali, Paravaailla take rest and give ur best:-)////

    4 நாட்கள் வகுப்பறைக்கு விழாக்கால விடுமுறை என்று எழுதிவிட்டுத் தானே சென்றேன் அம்மணி!
    நீங்கள் பார்க்கவில்லையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com