மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.09

நகைச்சுவை: கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்!

பாதி அளவு தண்ணீருடன் இருக்கும் கண்ணாடி தம்ளர்.
அதைப் பார்த்துவிட்டு, சமுதாயத்தின் வெவ்வேறு நிலையில்
இருப்பவர்கள் சொன்ன கருத்துக்கள் கோர்வையாகக்
கொடுக்கப்பட்டுள்ளது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1
எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனிதன்:
தம்ளரில் பாதி அளவு தண்ணீர் என்றாலும் ததும்பி நிற்கிறது.
இந்த அளவாவது தண்ணீர் கிடைதததை எண்ணி மகிழ்வோம்!
2
எதையும் குறை சொல்லிப் பேசும் மனிதன்:
பாதி அளவு தம்ளர் காலியாக உள்ளது வருத்தமான விஷயம்
3
வங்கி அதிகாரி: The glass has just under 50% of its net worth in liquid assets.
4
அரசு: கண்ணாடி தம்ளரில் இருக்கும் தண்ணீர், எதிர்கட்சி ஆட்சி
செய்த காலத்தில் இருந்ததைவிட அதிகமாக உள்ளது. அதுதான்
கவனிக்கப்பட வேண்டியதும் கூட!
5
எதிர்கட்சி: இது கோளாறான அறிவிப்பு. உண்மையான புள்ளி
விவரங்களை மறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பேசுகிறார்கள்
பதவியில் இருப்பவர்கள்.
6
பொருளாதார மேதை: உண்மையைச் சொன்னால், சென்ற ஆண்டு
இதே கண்ணாடி தம்ளரில் இருந்ததைவிடத் தண்ணீர் இப்போது 25%
சதவிகிதம் அதிகமாக உள்ளது!
7
தத்துவமேதை: இதே கண்ணாடி தம்ளர் ஒரு அத்துவானக் காட்டில்
இருந்தால், அதோடு யாருடைய பார்வையிலும் படாத இடத்தில்
இருந்தால், இதில் தண்ணீர் எந்த அளவு இருந்தாலும் அது ஒன்றுதான்!
8
மனோ தத்துவ மருத்துவர்: உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள்.
அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்!
9
பெளதீக விஞ்ஞானி: The volume of this cylinder is divided into
two equal parts; one a colorless, odorless liquid,
the other a colorless, odorless gas.
Thus the cylinder is neither full nor empty. Rather, each half of
the cylinder is full, one with a gas, one with a liquid.
10
குடிமகன்: தண்ணீருக்குப் பதிலாக, இந்த அளவிற்கு, சரக்கை
ஊற்றி, கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் தம்ளர்
நிறைவாகத் தெரியும்!

இது புதுச் சேர்க்கை:
11
வகுப்பறை வாத்தியார்: இருக்கிற தண்ணியைக் குடிச்சிட்டு,
பாடத்தைக் கவனிங்கடா கண்மணிகளா!
+++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் கருத்து என்ன?
அதாவது எது நன்றாக உள்ளது?

வாரத்தில் ஐந்து நாள் பாடம்
சனிக்கிழமை week end கலக்கல்!

அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

48 comments:

  1. ஐயா,
    நமது மாணவக்கண்மணிகள் இருக்கின்ற எல்லா தண்ணியையும் குடித்துவிடபோகின்றார்கள். வெறும் தண்ணியைமட்டும் குடித்துவிட்டு செல்ல சொல்லுங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. Greetings....

    பொருளாதார மேதை Comment is Nice One...

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    ஒரு பொருள் பலப் பார்வை
    அதில் ஓன்று, இரண்டு, ஏழு மற்றும்
    பதி நீங்கள் கூறிய பதினொன்று
    என்னை கவர்ந்தவைகள் என கொள்வேன்.

    நன்றி,
    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..அரசு அதிகாரி சொன்னதுதான் ஹைலைட்...



    அன்புடன்

    அம்மு.

    ReplyDelete
  5. 1 தான் என்னக்கு பிடித்து ஆனால் குடிமகன் சொன்னது கலக்கலா இருக்கு.

    ReplyDelete
  6. நேத்து காந்தி ஜெயந்தின்னதும் இன்னிக்கு கண்ணாடி கிளாஸா?

    மதுக் கிண்ணத்தை ஏந்துகிறேன்! ஏன் ஏன் ஏன்?

    ReplyDelete
  7. I Second mathi, குடிமகன் is my pick.
    இந்த படத்தை பார்ததும், என் நினைவுக்கு வந்த கண்ணதாசனின் வைர வரிகள்
    ”எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
    சித்திர கிண்ணத்தில் பேதமில்லை உன் சிந்தையிலே தான் பேதமட”

    ReplyDelete
  8. சென்னைவாசியான குடும்பப்பெண்மணி:"கொட்டிவிடாதே!அதன் விலை ரூபா
    ஒன்று!"

    கே.எம்.ஆர்.க்ருஷ்ணன்

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,

    H2O, இயற்கை இலவசமாக அளிக்க முன்வருகிறது, ஆனால்
    மனிதன் எண்ணத்தாலும், உடலாலும் அதை செமித்து பிறருக்கு அளிக்க முடியவில்லை, 2. எல்லோருக்கும் கண்ணாடி பிடிக்கும், காரணம், அவன் மனம். மது+மனது
    அவரவர் எண்ணத்தை பொருத்து.
    முருகன் bsnl

    ReplyDelete
  10. எனக்கு 1,4,5,10, இந்த‌
    நான்கும் நன்றாக உள்ளதாக‌
    தெரிகிறது.மற்ற எல்லா கருத்துக்களுமே
    இந்த நான்கிற்குள் அடங்கிவிடுகிறதே சாமி.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  11. Good morning Sir,
    I have one important question that I really want to ask you for long time,many times you wrote that navamsa is 9fold times zooming in to see planets strenths,positions,aspects, yogas? or why is exactly navamsa is used? and what will be the effect if navamsa lagna and rasi lagna is different? I know this is a lot of question, I really wish that you can write more about navamsa. This is a kind request sir!Thank you!!!

    ReplyDelete
  12. வெற்றிடம் இருக்கும்போதுதான அதில் எதையாவது ஊற்ற முடியும்! அதனால் என்னிடம் வரும்போது காலி கோப்பையுடம் வாருங்கள்!
    - ஒரு ஜென் குரு சொன்னது!

    (நானும் உங்ககிட்டே வரும்போது அப்படித்தான் வருகிறேன்! எதையாவது ஊத்தி அனுப்புங்க சாமி)

    ReplyDelete
  13. ////வேலன். said...
    ஐயா,
    நமது மாணவக்கண்மணிகள் இருக்கின்ற எல்லா தண்ணியையும் குடித்துவிடபோகின்றார்கள். வெறும் தண்ணியைமட்டும் குடித்துவிட்டு செல்ல சொல்லுங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    பதிவு சுத்தமான தண்ணீரை வைத்துத்தான்!

    ReplyDelete
  14. ////Success said...
    Greetings....
    பொருளாதார மேதை Comment is Nice One...////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    ஒரு பொருள் பலப் பார்வை
    அதில் ஓன்று, இரண்டு, ஏழு மற்றும்
    பதி நீங்கள் கூறிய பதினொன்று
    என்னை கவர்ந்தவைகள் என கொள்வேன்.
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Ammu Madhu said...
    ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..அரசு அதிகாரி சொன்னதுதான் ஹைலைட்...
    அன்புடன்
    அம்மு.////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////மதி said...
    1 தான் என்னக்கு பிடித்து ஆனால் குடிமகன் சொன்னது கலக்கலா இருக்கு.////

    நன்றி மது!

    ReplyDelete
  18. /////நாமக்கல் சிபி said...
    நேத்து காந்தி ஜெயந்தின்னதும் இன்னிக்கு கண்ணாடி கிளாஸா?
    மதுக் கிண்ணத்தை ஏந்துகிறேன்! ஏன் ஏன் ஏன்?////

    கண்ணாடி தம்ளர் தண்ணீருடன் (க்ளாஸ் வித் ஃபியூர் வாட்டர்!)

    ReplyDelete
  19. /////Priya said...
    All are good.////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////singaiSuri said...
    I Second mathi, குடிமகன் is my pick.
    இந்த படத்தை பார்ததும், என் நினைவுக்கு வந்த கண்ணதாசனின் வைர வரிகள்
    ”எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
    சித்திர கிண்ணத்தில் பேதமில்லை உன் சிந்தையிலே தான் பேதமடா”//////

    நன்றி சூரி!

    ReplyDelete
  21. /////kmr.krishnan said...
    சென்னைவாசியான குடும்பப்பெண்மணி:"கொட்டிவிடாதே!அதன் விலை ரூபா
    ஒன்று!"
    கே.எம்.ஆர்.க்ருஷ்ணன்/////////

    200 மி.லி வாட்டர் பாக்கெட் இரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள்

    ReplyDelete
  22. /////murugan said...
    வணக்கம் ஐயா,
    H2O, இயற்கை இலவசமாக அளிக்க முன்வருகிறது, ஆனால்
    மனிதன் எண்ணத்தாலும், உடலாலும் அதை சேமித்து பிறருக்கு அளிக்க முடியவில்லை, 2. எல்லோருக்கும் கண்ணாடி பிடிக்கும், காரணம், அவன் மனம். மது+மனது
    அவரவர் எண்ணத்தை பொருத்து.
    முருகன் bsnl/////

    நன்றி முருகன்!

    ReplyDelete
  23. ///thirunarayanan said...
    எனக்கு 1,4,5,10, இந்த‌
    நான்கும் நன்றாக உள்ளதாக‌
    தெரிகிறது.மற்ற எல்லா கருத்துக்களுமே
    இந்த நான்கிற்குள் அடங்கிவிடுகிறதே சாமி.
    நன்றி அய்யா.////

    நன்றி நாராயணன்!

    ReplyDelete
  24. /////Thanuja said...
    Good morning Sir,
    I have one important question that I really want to ask you for long time,many times you wrote that navamsa is 9fold times zooming in to see planets strenths,positions,aspects, yogas? or why is exactly navamsa is used? and what will be the effect if navamsa lagna and rasi lagna is different? I know this is a lot of question, I really wish that you can write more about navamsa. This is a kind request sir!Thank you!!!///////

    பழைய பாடங்களில் எழுதியுள்ளேன் சகோதரி. பழைய பாடங்களைப் படியுங்கள்

    ReplyDelete
  25. /////நாமக்கல் சிபி said...
    வெற்றிடம் இருக்கும்போதுதான அதில் எதையாவது ஊற்ற முடியும்! அதனால் என்னிடம் வரும்போது காலி கோப்பையுடம் வாருங்கள்!
    - ஒரு ஜென் குரு சொன்னது!
    (நானும் உங்ககிட்டே வரும்போது அப்படித்தான் வருகிறேன்! எதையாவது ஊத்தி அனுப்புங்க சாமி)//////

    உங்கள் சட்டைப் பையையும் சேர்த்து, உங்களிடம் வெற்றிடம் எதுவும் இல்லையே!

    ReplyDelete
  26. வழக்கம் போல் present sir .சனி கிழமை அதுவும் early morning தரிசனம் super sir

    ReplyDelete
  27. அனைத்தும் அருமை.

    வங்கி அதிகாரி.. நச்.

    ReplyDelete
  28. Present Sir,...

    Koppaigalum avatraipatriya paarvaigalum arumai ayya...
    week end endral koppaithana...!!!

    -kathiravan

    ReplyDelete
  29. சுயநலவாதி : Someone has left it for me
    பொதுநலவாதி : It has been kept for someone
    Pessimist : Something wrong with this half glass Liquid
    Optimist : Half Glass left with few sips taken as formal

    just tried to mk some more fun... :P

    ReplyDelete
  30. உங்கள் கருத்து என்ன
    அதற்கு பதில் . .

    காலி இடம்
    தண்ணீர் இருப்பதற்கு
    இடம் கொடுத்திருக்கிறது . .

    நன்றி சொல்லுங்கள்
    அந்த இறைவனுக்கு . .

    ReplyDelete
  31. வாத்தியாரே..

    ஏன் இப்படி? கிடைக்கிற தண்ணியை வைச்சு வாழ்க்கையை ஓட்டணும்னு நினைச்சுத்தான் அல்லா கூட்டமும் காலைல ஏழு மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடை வாசல்ல நிக்குது..!

    ReplyDelete
  32. வாத்தியாரே..

    நம்ம 'பட்டர்பிளை சூர்யா' செட்டி நாட்டுக் கதைகள் பாகம்-1 புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.

    அது இங்கே.. படித்துப் பாருங்கள்..

    http://mynandavanam.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  33. ////astroadhi said...
    வழக்கம் போல் present sir சனி கிழமை அதுவும் early morning தரிசனம் super sir////

    ஒகோ தரிசனம் லெவலுக்குப் போய்விட்டீர்களா?
    கலியுகம் - மனிதர்கள் அனைத்திலும் இறைவனைக் காண ஆரம்பித்துவிட்டார்கள்

    ReplyDelete
  34. butterfly Surya said...
    அனைத்தும் அருமை.
    வங்கி அதிகாரி.. நச்.////

    ஆமாம் வங்கியின் கண்ணோட்டத்தில் அது உள்ளது! நன்றி1

    ReplyDelete
  35. /////SUNRAYS said...
    Present Sir,...
    Koppaigalum avatraipatriya paarvaigalum arumai ayya...
    week end endral koppaithana...!!!
    -kathiravan/////

    இது வெறும் காலி கோப்பை சாமி!

    ReplyDelete
  36. /////Bharath said...
    சுயநலவாதி : Someone has left it for me
    பொதுநலவாதி : It has been kept for someone
    Pessimist : Something wrong with this half glass Liquid
    Optimist : Half Glass left with few sips taken as formal
    just tried to mk some more fun... :P/////

    நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  37. ////visuiyer said...
    உங்கள் கருத்து என்ன
    அதற்கு பதில் . .
    காலி இடம்
    தண்ணீர் இருப்பதற்கு
    இடம் கொடுத்திருக்கிறது . .
    நன்றி சொல்லுங்கள்
    அந்த இறைவனுக்கு . ./////

    இறைவா நன்றி!

    ReplyDelete
  38. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    ஏன் இப்படி? கிடைக்கிற தண்ணியை வைச்சு வாழ்க்கையை ஓட்டணும்னு நினைச்சுத்தான் எல்லாக் கூட்டமும் காலைல ஏழு மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடை வாசல்ல நிக்குது..!/////

    காலை 7 மணிக்கேவா? அக்கிரமமாக இருக்கிறது உனா தானா?
    இந்தியா எப்படி சூப்பர்பவர் ஆகும்?

    ReplyDelete
  39. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    நம்ம 'பட்டர்பிளை சூர்யா' செட்டி நாட்டுக் கதைகள் பாகம்-1 புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.
    அது இங்கே.. படித்துப் பாருங்கள்..
    http://mynandavanam.blogspot.com/2009/10/blog-post.html////

    பார்த்துவிட்டேன் உனா தானா! சிறப்பாக எழுதியுள்ளார்.
    அவருக்கு நன்றி சொல்லி, பின்னூட்டம் ஒன்றையும் போட்டுவிட்டேன்!

    ReplyDelete
  40. vannakam sir,

    ippotha nanu classku vanthan sir. i went to hanuman temple at nanganallur. i read nagasuvai romba
    thathuvamma irrukuthu. ella nala irrukuthu sir. thanks for ur lesson sir.
    your lovingly
    lakshmi

    ReplyDelete
  41. Dear Sir

    Unmai Than parkum parvaiyum adhan moolam think pannuvadhum avaravar mana nilayai poruthathu.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  42. ////மாயாவி said...
    my choice is 10!!!!!!!!/////

    நன்றி மாயாவி!

    ReplyDelete
  43. ////sundari said...
    vannakam sir,
    ippotha nanu classku vanthan sir. i went to hanuman temple at nanganallur. i read nagasuvai romba
    thathuvamma irrukuthu. ella nala irrukuthu sir. thanks for ur lesson sir.
    your lovingly
    lakshmi////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  44. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Unmai Than parkum parvaiyum adhan moolam think pannuvadhum avaravar mana nilayai poruthathu.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  45. முதல் முறை உங்ளுக்கு repலய் செய்கிறென்.

    your service is very good.

    உங்கள் வகுப்பறை தவறாமல் படித்து வருகிறேன்.



    காத‌லை ப‌ற்றியும் எழுதுங்க‌ள்.



    bharathiraja

    ReplyDelete
  46. ///bharathi said...
    முதல் முறை உங்ளுக்கு repலய் செய்கிறேன்.
    your service is very good.
    உங்கள் வகுப்பறை தவறாமல் படித்து வருகிறேன்.
    காத‌லை ப‌ற்றியும் எழுதுங்க‌ள்.
    bharathiraja/////

    காதலைப்பற்றியா? ஜோராக எழுதலாம். ஆனால் வகுப்பறையில் எப்படி எழுதுவது?
    என் வாத்தியார் வேலைக்கு உலை வைத்துவிடுவீர் போலிருக்கிறதே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com