மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.10.09

நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

இது நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது!
சீரியஸ் பேர்வழிகளும், உம்மன்னா மூஞ்சி ஆசாமிகளும்
பதிவை விட்டு விலகவும்!
------------------------------------------------------------

1
கணவன்: மனைவி என்பதற்காக அர்த்தம் தெரியுமா உனக்கு?
Do you know the meaning of W I F E? It means,
Without Information, Fighting Everytime!

மனைவி: இல்லை, கண்ணாளா! அதன் அர்த்தம் -
With Idiot For Ever
---------------------------------------------
2
செய்தித்தாளை, விழுந்து விழுந்து படிக்கும் கணவனிடம் மனைவி
சொன்னாள்:

மனைவி: நான் ஒரு செய்தித்தாளாக இருந்திருக்க வேண்டும்.
உங்கள் கரங்களில் தவழும் பாக்கியம் தினமும் கிடைக்கும்.

கணவன்: நானும் அதைத்தான் விரும்புகிறேன். எனக்கும் ஒவ்வொரு
நாளும் புதிது புதிதாக செய்தித்தாள்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்!
---------------------------------------------
3
மருத்துவர்:” அம்மணி, உங்கள் கணவருக்கு மன அமைதியும் ஓய்வும்
தேவை. ஆகவே இந்தாருங்கள் தூக்க மாத்திரைகள்

மனைவி: இவற்றை, அவருக்கு நான் எப்போது கொடுக்க வேண்டும்?

மருத்துவர்: மாத்திரைகள் அவருக்கல்ல: உங்களுக்கு!
--------------------------------------------------------
4
மனைவி: நீங்கள் இப்படியொரு ஏமாளி என்று தெரிந்துகொள்ள
உங்களை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிருந்திருக்கிறது!

கணவன்: ’என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?’ என்று நான்
உன்னைக் கேட்ட மறுநிமிடமே அதை நீ உணர்ந்திருக்க வேண்டும்!
-------------------------------------------------------
5
கணவன்: இன்று ஞாயிற்றுக்கிழமை. அதை நான் கொண்டாட வேண்டும்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்காக மூன்று டிக்கெட்டுகளை
வாங்கிக் கொண்டு வந்துள்ளேன்.

மனைவி: இரண்டு போதுமே? மூன்று எதற்கு?

கணவன்: ஒன்று உனக்கு, இரண்டு, உன் பெற்றோர்களுக்கு!
-------------------------------------------------------------
6

“என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,
மறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா?

“ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ
வாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்!
-------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது.

இருக்கும் ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரத்தின் கடைசி நாள். ஜோதிடத்தை மறந்துவிட்டு, மகிழ்ச்சியுடன்
இருப்பதற்காக இந்தப் பதிவு

அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

63 comments:

  1. புதிய மானவர்களும் புரியும் படியாக் யோகங்கள் மிகவும் இலகுவாக கற்பிக்கிறீர்கள். குறிப்பாக பாடமும் அதற்கான படங்களையும் கூட மிகவும் போறுத்தமாக தேரிவு செய்கிறீர்கள். குருவே தங்களின் பாடங்கள் அனத்தும் கற்க கற்க மிகவும் அருமையக உள்ளது. தங்களின் சேவை, தங்களின் உளைப்பு !!!!! குறிப்பாக அனைத்து மானவர்களின் கேள்விக்கான பதில்கள் உங்களை மிகவும் வியப்பக உள்ளது. வழ்த்துக்கள் !!!!
    • அன்பு மானவன் ராகுள்……

    ReplyDelete
  2. 6 வது நகைச்சுவை ;
    நிஜத்தில் எனதது நன்பருக்கு நிகள்ந்தது…….
    ராகுல்

    ReplyDelete
  3. அனைத்துமே நன்றாக இருப்பினும் என் முதல் மதிப்பெண் 5 க்குதான்.

    இதைப்படித்தபோது அந்த்க் காலத்தில் ஏர் இந்தியா ஒரு போட்டி வைத்தது நினைவுக்கு வந்தது. மஹாராஜா தேனீர் பருகிக்கொண்டு காலை செய்தித்தாள்
    வாசித்துக்கொண்டு இருப்பார்.அருகில் அவருடைய பெண் குழந்தை கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கேள்விக்குறி முகத்தில் தெரிய அமர்ந்திருக்கும்.இதற்குத் தலைப்பு அல்லது கமெண்ட்ஸ் எழுத வேண்டும்.
    முதல் பரிசு பெற்ற கமெண்ட்ஸ்: "A Jumbo brought you dear!"
    இந்த கமெண்ட்ஸ் மஹாராஜா சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது.
    குழந்தை கேட்ட கேள்வி என்ன என்பதையும், ஜம்போ என்பதிற்கான பொருளையும் வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  4. வாத்தியாரே! எனக்கு 1ம் 6ம் பிடிச்சிருக்கு. தமிழ் டைப்பிங் சரியா வராததால, குட்டி கமண்ட்தான்.

    அன்புடன்,
    லாஸ்ட் பென்ச் குருப்

    ReplyDelete
  5. 3ம் 5ம் நல்ல நகைச்சுவை.
    பொதுவாக எல்லாமே
    நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. /////Blogger RaaKul said...
    புதிய மாணவர்களுக்கும் புரியும் படியாக யோகங்களை மிகவும் இலகுவாகக் கற்பிக்கிறீர்கள். குறிப்பாகப் பாடமும் அதற்கான படங்களையும் கூட மிகவும் பொருத்தமாகத் தெரிவு செய்கிறீர்கள். குருவே தங்களின் பாடங்கள் அனத்தும் கற்கக் கற்க மிகவும் அருமையாக உள்ளது. தங்களின் சேவை, தங்களின் உழைப்பு !!!!! குறிப்பாக அனைத்து மாணவர்களின் கேள்விக்கான பதில்கள் ஆகியவை உங்களை மிகவும் வியப்பிற்குரியவராக்குக்கிறது. வாழ்த்துக்கள் !!!!
    • அன்பு மாணவன் ராகுல்……///////

    நன்றி ராகுல்!
    எழுத்துப்பிழைகள் அதிகமாக உள்ளது. பின்னூட்டத்தை வெளியிடும் முன்பாக ஒருமுறை படித்துப் பார்த்தால், அவற்றை நீங்கள் தவிர்க்கலாம்!

    ReplyDelete
  7. ////RaaKul said...
    6 வது நகைச்சுவை ;
    நிஜத்தில் நினைத்தது நண்பருக்கு நிகழ்ந்தது…….
    ராகுல்////

    நன்றி!

    ReplyDelete
  8. ///kmr.krishnan said...
    அனைத்துமே நன்றாக இருப்பினும் என் முதல் மதிப்பெண் 5 க்குதான்.
    இதைப்படித்தபோது அந்த்க் காலத்தில் ஏர் இந்தியா ஒரு போட்டி வைத்தது நினைவுக்கு வந்தது. மஹாராஜா தேனீர் பருகிக்கொண்டு காலை செய்தித்தாள்
    வாசித்துக்கொண்டு இருப்பார்.அருகில் அவருடைய பெண் குழந்தை கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கேள்விக்குறி முகத்தில் தெரிய அமர்ந்திருக்கும்.இதற்குத் தலைப்பு அல்லது கமெண்ட்ஸ் எழுத வேண்டும்.
    முதல் பரிசு பெற்ற கமெண்ட்ஸ்: "A Jumbo brought you dear!"
    இந்த கமெண்ட்ஸ் மஹாராஜா சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது.
    குழந்தை கேட்ட கேள்வி என்ன என்பதையும், ஜம்போ என்பதிற்கான பொருளையும் வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.////

    உங்கள் அனுபவப் பகிற்விற்கு நன்றி சார்!
    என்னைப் போலவே அதிகாலையில் எழுந்து விடும், உங்கள் சுறுசுறுப்பிற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. ///Blogger dudlee said...
    வாத்தியாரே! எனக்கு 1ம் 6ம் பிடிச்சிருக்கு. தமிழ் டைப்பிங் சரியா வராததால, குட்டி கமண்ட்தான்.
    அன்புடன்,
    லாஸ்ட் பென்ச் குருப்////

    நன்றி டட்லி!

    ReplyDelete
  10. ////Blogger thirunarayanan said...
    3ம் 5ம் நல்ல நகைச்சுவை.
    பொதுவாக எல்லாமே
    நன்றாக இருந்தது.////

    நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  11. எல்லாம் அருமை . ஒரு நிமிடம் நன்றாக சிரித்தேன்.
    1 மனைவி சொல்வது உண்மை ...he he....

    ReplyDelete
  12. வாத்தியாரே வணக்கம்

    என்னுடைய வாக்கு இலக்கம் 6 இற்கு

    நன்றி


    வரவா???

    “என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,
    மறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா?

    “ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ
    வாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்!

    ReplyDelete
  13. "நகைச்சுவை,,,,நகைச்சுவையாகவே......

    உங்களை என்ன சொல்வது??? எல்லா நகைச்சுவைகளையும் நன்றாக கொடுத்துவிட்டு....இப்படியெல்லாம் Question கேட்கபிடாது...

    ReplyDelete
  14. ////Priya said...
    எல்லாம் அருமை . ஒரு நிமிடம் நன்றாக சிரித்தேன்.
    1 மனைவி சொல்வது உண்மை ...he he....////

    எல்லா பெண்களுக்கும் பிடித்தது அதுவாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  15. /////Suman said...
    வாத்தியாரே வணக்கம்
    என்னுடைய வாக்கு இலக்கம் 6 இற்கு
    நன்றி
    வரவா???
    “என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,
    மறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா?
    “ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ
    வாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்!////

    நன்றி சுமன்!

    ReplyDelete
  16. /////Success said...
    "நகைச்சுவை,,,,நகைச்சுவையாகவே......
    உங்களை என்ன சொல்வது??? எல்லா நகைச்சுவைகளையும் நன்றாக கொடுத்துவிட்டு....இப்படியெல்லாம் Question கேட்கப்பிடாது...////

    சரி...கண்ணா!

    ReplyDelete
  17. அய்யா காலை வணக்கம். எல்லா நகைச்சுவைகளும் நன்றாக உள்ளது. ஆறாம் நகைச்சுவையை தான் நான் மிகவும் ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
  18. அய்யா வணக்கம் ,
    சனி கிழமை காலை அருமயான நகைசுவை அனைத்தும் தங்கள் கை வண்ணத்தில் அருமை ,,,,,,இருந்தாலும் 1,2 வதும் மிக அருமை

    அன்புடன்
    உங்கள் மாணவன்.

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு வணக்கங்கள்,

    கண்மணி/ கண்ணாளன் -------- மதுரையிலே,
    கண்ணாளன் / கண்மணி ------ சிதம்பரத்தில்,

    இதக் கூட மாத்திடக்கூடாது இல்லேனா எழரைத்தான்!
    ஆமா சொல்லிபுட்டேன்!

    ஆத்தி! நா என்னத்தச் சொல்ல அல்லாமே சரியாத்தானே இருக்கு,

    1.காந்தமா கந்தகமா இப்படி பத்துது,
    2.இவளின் பசி அவனுக்குத் தெரியல,
    3.உரிமையின் ஓவர்டோஸ் (படுத்தி வைக்கிறது),
    4.இப்பயும் நானே புத்திசாலி (நானே ஜெயிச்சேன்),
    5.இது கொஞ்சம் ஓவர் குடும்பமவே படுத்துவது?
    (சந்தோஷ சூரியன் ஞாயிறு இன்றாது உதிக்காதா ம்ம் ம்ம்...........)
    6.எல்லாமே இப்படி இருக்க இதுமட்டும் எப்படி ஞாபகமிருக்கும்.

    விதி விட்ட வழி அய்யா! விதி விட்ட வழி!

    படத்தில் கூட அந்த சிவந்த வத்தலான சின்னக்குருவிதான கண்மணின்னு நினைக்கிறேன்.

    நல்லவேள நான் தப்பிச்சேன் அய்யா,
    பேருமட்டும் தான் (மதுரை அழகன் (ஆலாசியசுந்தரம்))
    எங்க வீட்டில நிதியைத் தவிர எல்லாத்திலேயும் சிதம்பரம் தான் ஆட்சி.

    என்னது? அது ஒன்னே போதும்கிறேன்களா,
    நவாசத்தில் புதன் கன்னியில உட்சம்னாலும்,
    ராசியில் செவ்வாயும் மகரத்துல உட்சமில்ல!
    அதனாலத் தான் அந்த துறையைக் கொடுத்துட்டேன்.
    கடைசிகலத்துல காசு இருக்கவேணாமா, என்னாத்தான் லக்னாதிபதி பதிநோன்னுல அதுவும் வர்கோத்தமம் ஆனாலும் ஒருப் பாதுகாப்புத் தான்.

    (பாடங்களை நினைவுக்கொள்ளத் தான் இவைகள் எல்லாம் சக தோழர்களே தம்பட்டம் அல்ல)

    நன்றிகள் குருவே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  20. அனுபவமும் இல்லை . .
    அதை ரசிக்கும் மனமும் இல்லை . .

    அதனால் . . .

    எது நன்றாக இருக்கிறது
    என்பதற்கு பதிலும் இல்லை . .


    ஆனாலும்
    வாத்தியார் அய்யா
    எது சொன்னாலும் நன்றாகவே இருக்கும்

    இறக்குமதி - இறக்கினாலும் "மதி" வாத்தியாருடயைது தானே

    ReplyDelete
  21. எல்லாமே நல்லாருக்கு. என்னோட ஓட்டு 4 & 6 :)

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. குருவிகளின் வாழ்வியலை அருகில் இருந்து கண்டுள்ளேன். ஆண் குருவிக்குத்
    தான் கழுத்தில் நீலகண்டனைப்போல கறுப்புப் பொட்டு உண்டு.கூடு கட்டுவது
    ஆண் குருவிதான்.பெண் வந்து மேற்பார்வையிட்டு இடம் சரியில்லையெனில்
    கூட்டைக் கலைத்துவிடும். சரியாகக் கூடு கட்டத்தெரிந்த ஆணுடந்தான் சேர்ந்து வாழ்ந்து முட்டையிடும். காலத்தின் கோலத்தினால், செல் ஃபோன் டவர், டி.வி டவர்,கேபிள் இணைப்பு டவர், ஏசி,ஃப்ரிட்ஜ் போன்ற‌ சாதனங்கள்
    வெளியிடும் வெப்பம் ஆகியவற்றால் குருவிகள் நகர்ப்புரத்தைவிட்டு நகர்ந்து
    சென்று நீண்டநாட்கள் ஆகிவிட்டன.
    மஹாகவி பாரதியாரின்"விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போலே..."என்ற‌ பாடலை எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன்.

    ReplyDelete
  24. குரு வணக்கம்,

    நகைச்சுவை அருமை

    நன்றி குருவே

    ReplyDelete
  25. அய்யா,
    நகைசுவை அனைத்தும் தங்கள் கை வண்ணத்தில் அருமை.இருந்தாலும் 1,2 வதும் மிக அருமையாக இருந்தது.
    Happy Weekend.
    அன்புடன்
    எழில்

    ReplyDelete
  26. வண்க்கம் ஐயா,

    எல்லர்மே நல்ல இருந்தது இது நல்ல இருக்குது அது நல்ல இல்ல என் சொல்வதற்கு ஒன்ரொம் இல்ல் எனக்கு சரியா தமிழலர் தட்டச்சி அடிக்க முடியவில்லை பிழைலல்ர்மல் அடிக்க முயற்சி செய்கிறேன்

    உங்கள் மர்ணவி
    சுந்தரி

    ReplyDelete
  27. Good evening dear brother kmr.krishnan,

    i donot know that how will i have to type tamil. "endru" ethai eppadi typing tamil la adikaruthu solithanga pl i will be waiting for ur mail.

    your lovingly sister,
    sundari.p

    ReplyDelete
  28. ////Blogger Meena said...
    அய்யா காலை வணக்கம். எல்லா நகைச்சுவைகளும் நன்றாக உள்ளது. ஆறாம் நகைச்சுவையை தான் நான் மிகவும் ரசித்து சிரித்தேன்./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. ////Blogger astroadhi said...
    அய்யா வணக்கம் ,
    சனி கிழமை காலை அருமயான நகைச்சுவை அனைத்தும் தங்கள் கை வண்ணத்தில் அருமை ,,,,,,இருந்தாலும் 1,2 வதும் மிக அருமை
    அன்புடன்
    உங்கள் மாணவன்.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. /////Blogger Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கங்கள்,
    கண்மணி/ கண்ணாளன் -------- மதுரையிலே,
    கண்ணாளன் / கண்மணி ------ சிதம்பரத்தில்,
    இதக் கூட மாத்திடக்கூடாது இல்லேனா எழரைத்தான்!
    ஆமா சொல்லிபுட்டேன்!
    ஆத்தி! நா என்னத்தச் சொல்ல அல்லாமே சரியாத்தானே இருக்கு,
    1.காந்தமா கந்தகமா இப்படி பத்துது,
    2.இவளின் பசி அவனுக்குத் தெரியல,
    3.உரிமையின் ஓவர்டோஸ் (படுத்தி வைக்கிறது),
    4.இப்பயும் நானே புத்திசாலி (நானே ஜெயிச்சேன்),
    5.இது கொஞ்சம் ஓவர் குடும்பமவே படுத்துவது?
    (சந்தோஷ சூரியன் ஞாயிறு இன்றாது உதிக்காதா ம்ம் ம்ம்...........)
    6.எல்லாமே இப்படி இருக்க இதுமட்டும் எப்படி ஞாபகமிருக்கும்.
    விதி விட்ட வழி அய்யா! விதி விட்ட வழி!
    படத்தில் கூட அந்த சிவந்த வத்தலான சின்னக்குருவிதான கண்மணின்னு நினைக்கிறேன்.
    நல்லவேள நான் தப்பிச்சேன் அய்யா,
    பேருமட்டும் தான் (மதுரை அழகன் (ஆலாசியசுந்தரம்))
    எங்க வீட்டில நிதியைத் தவிர எல்லாத்திலேயும் சிதம்பரம் தான் ஆட்சி.
    என்னது? அது ஒன்னே போதும்கிறேன்களா,
    நவாசத்தில் புதன் கன்னியில உட்சம்னாலும்,
    ராசியில் செவ்வாயும் மகரத்துல உட்சமில்ல!
    அதனாலத் தான் அந்த துறையைக் கொடுத்துட்டேன்.
    கடைசிகலத்துல காசு இருக்கவேணாமா, என்னாத்தான் லக்னாதிபதி பதிநோன்னுல அதுவும் வர்கோத்தமம் ஆனாலும் ஒருப் பாதுகாப்புத்தான்.
    (பாடங்களை நினைவுக்கொள்ளத் தான் இவைகள் எல்லாம் சக தோழர்களே தம்பட்டம் அல்ல)
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    ஜோதிடத்தை ஒரு நாள் மறந்திருக்கத்தான் இந்தப் பதிவை வலையில் ஏற்றினேன்.
    அதிலும் ஜோதிடமா?

    ReplyDelete
  31. /////Blogger புலவன் புலிகேசி said...
    நல்லா இருக்கு...///

    நன்றி புலிகேசியாரே!

    ReplyDelete
  32. /////Blogger iyer said...
    அனுபவமும் இல்லை . .
    அதை ரசிக்கும் மனமும் இல்லை . .
    அதனால் . . .
    எது நன்றாக இருக்கிறது
    என்பதற்கு பதிலும் இல்லை . .
    ஆனாலும்
    வாத்தியார் அய்யா
    எது சொன்னாலும் நன்றாகவே இருக்கும்
    இறக்குமதி - இறக்கினாலும் "மதி" வாத்தியாருடயைது தானே?/////

    நன்றி அய்யர்!

    ReplyDelete
  33. /////Blogger RVC said...
    எல்லாமே நல்லாருக்கு. என்னோட ஓட்டு 4 & 6 :)////

    நன்றி ஆர்.வி.சி!

    ReplyDelete
  34. /////Blogger kmr.krishnan said...
    குருவிகளின் வாழ்வியலை அருகில் இருந்து கண்டுள்ளேன். ஆண் குருவிக்குத்
    தான் கழுத்தில் நீலகண்டனைப்போல கறுப்புப் பொட்டு உண்டு.கூடு கட்டுவது
    ஆண் குருவிதான்.பெண் வந்து மேற்பார்வையிட்டு இடம் சரியில்லையெனில்
    கூட்டைக் கலைத்துவிடும். சரியாகக் கூடு கட்டத்தெரிந்த ஆணுடந்தான் சேர்ந்து வாழ்ந்து முட்டையிடும். காலத்தின் கோலத்தினால், செல் ஃபோன் டவர், டி.வி டவர்,கேபிள் இணைப்பு டவர், ஏசி,ஃப்ரிட்ஜ் போன்ற‌ சாதனங்கள்
    வெளியிடும் வெப்பம் ஆகியவற்றால் குருவிகள் நகர்ப்புரத்தைவிட்டு நகர்ந்து
    சென்று நீண்டநாட்கள் ஆகிவிட்டன.
    மஹாகவி பாரதியாரின்"விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போலே..."என்ற‌ பாடலை எப்போதும் பாடிக்கொண்டு இருப்பேன்./////

    ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கேது சொந்த வீடு”
    எனும் கவியரசரின் பாடல் அடிக்கடி என் நினைவிற்கு வரும்!

    ReplyDelete
  35. /////Blogger Rama said...
    it is very nice////

    நன்றி ராமா!

    ReplyDelete
  36. ////Blogger raja said...
    குரு வணக்கம்,
    நகைச்சுவை அருமை
    நன்றி குருவே////

    நன்றி ராஜா!

    ReplyDelete
  37. ////Blogger Ezhil said...
    அய்யா,
    நகைச்சுவை அனைத்தும் தங்கள் கை வண்ணத்தில் அருமை.இருந்தாலும் 1,2 வதும் மிக அருமையாக இருந்தது.
    Happy Weekend.
    அன்புடன்
    எழில்////

    நன்றி எழில்!

    ReplyDelete
  38. ////Blogger sundari said...
    வணக்கம் ஐயா,
    எல்லாமே நல்லா இருந்தது இது நல்லா இருக்குது அது நல்லா இலலை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை! எனக்கு சரியா தமிழில் தட்டச்சு அடிக்க முடியவில்லை பிழையில்லாமல் அடிக்க முயற்சி செய்கிறேன்
    உங்கள் மாணவி
    சுந்தரி/////

    முயற்சி செய்யுங்கள்! நன்றி

    ReplyDelete
  39. Dear Sir

    Ella Pointsyum Nalla Irukkudhu.
    I like very much 2 point.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  40. Dear Sir

    Ella Pointsyum Nalla Irukkudhu.
    I like very much 2 point.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  41. To Sundari
    ----------- I think your Tamil typing is now much improved.If you want more instructions write to my mail id:

    kmrk1949@gmail.com

    ReplyDelete
  42. vanakkam saar.
    varkkoththamam, paapakarththaary, elimaiyaana
    vilakkam.6,8,12 el kirakam varkkoththamaaka erunthaal rempa paduththi edukkumaa?.varkkoththamam "vak"kirakamakam nalla palan undaa?.
    thankal pathilukkaaka nantriyudan
    aryboy. valkavalamudan.

    ReplyDelete
  43. Good evening krishnam brother,
    Thanks for ur mail i will send mail to u in ur personal email id.
    Thanks for ur help. Happy week end dear brother. Take care ur health.
    your lovingly
    sundari.p

    ReplyDelete
  44. பொதுவாக எல்லா நகைச்சுவையும் அருமை ஐயா... முன்பதிவில் தங்கள் விலக்கமான பின்னுட்ட பதிலுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தேன் மிக்க நன்றி ஐயா......

    ReplyDelete
  45. சகோதிரி சுந்தரிக்கு
    நீங்க google transliteration try பண்ணுங்களேன் .நானும் முதலில் ரொம்ப கஷ்ட பட்டேன் .இப்போம் feel better
    Priya

    ReplyDelete
  46. வாத்தியாரே..

    எனக்கு கடைசி ஜோக் மிகவும் பிடித்திருக்கிறது..!

    ReplyDelete
  47. Good evening sister Priya,
    Thanks for ur mail and inform.
    Ok, I will try for google trans literation Donot worry about job
    God always will be with us. Did u take dinner. Goodnight I got nice mail from u. Thanking u once again dear sister.
    your lovingly
    sundari.p

    ReplyDelete
  48. vanakam sir,
    out of all i really liked the first one...it is becoz the wife equally gave a good counter answer!!!

    ReplyDelete
  49. /////Blogger Krushna Cumaar said...
    I like 2 and 6////

    நன்றி கிருஷ்ணகுமார்!

    ReplyDelete
  50. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ella Pointsyum Nalla Irukkudhu. I like very much 2 point.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்

    ReplyDelete
  51. //////Blogger Ariyappan said...
    vanakkam saar.
    varkkoththamam, paapakarththaary, elimaiyaana
    vilakkam.6,8,12 el kirakam varkkoththamaaka erunthaal rempa paduththi edukkumaa?.varkkoththamam "vak"kirakamakam nalla palan undaa?.
    thankal pathilukkaaka nantriyudan
    aryboy. valkavalamudan./////

    ஜாதகத்தில் வேறு இடங்களில் நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதையெல்லாம் பார்க்காமல்
    நீங்களாக ஒரு முடிவிற்கு வரக்கூடாது! மாஜிக் எண் 337 ஐ மனதில் நிறுத்திவையுங்கள்!

    ReplyDelete
  52. ////Blogger VA P RAJAGOPAL said.../////
    பொதுவாக எல்லா நகைச்சுவையும் அருமை ஐயா... முன்பதிவில் தங்கள் விலக்கமான பின்னுட்ட பதிலுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தேன் மிக்க நன்றி ஐயா....../////

    ஆறுதலாக இருப்பது முக்கியம். நன்றி!

    ReplyDelete
  53. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    எனக்கு கடைசி ஜோக் மிகவும் பிடித்திருக்கிறது..!////

    நன்றி உனா, தானா!

    ReplyDelete
  54. //////Blogger Thanuja said...
    vanakam sir,
    out of all i really liked the first one...it is becoz the wife equally gave a good counter answer!!!/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  55. அன்புள்ள ஆசானே,
    நகைச்சுவையொடு சோதிடம் இணயதில் இவ்விடதில் மட்டுமே கிடைகிறது.
    Thanks for your wonderful service
    பொதுவாக எல்லாமே நன்று.

    ReplyDelete
  56. ஜோக்குகள் எல்லாத்துக்கும் ஜே.

    அது சரி. ஒருவன் நகைச்சுவை உணர்வு கூடியவனாக இருக்கவேண்டின் அவனது ஜாதகத்தில் எந்த கிருஹம்
    பலம் பெற்றிருக்கவேண்டும் ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  57. Dear brother sury,

    sukuran avanthan nagasuvaiku uriyavan namba vaathiyar ku sukuran meenathil ucham then mercury in 7th house that is why he writes lot of comedy story, books jokes and horoscope. SUKURAN IS COMEDY GRAGAM.

    YOUR LOVINGLY
    SUNDARI.P

    ReplyDelete
  58. ////Blogger singaiSuri said...
    அன்புள்ள ஆசானே,
    நகைச்சுவையொடு சோதிடம் இணயத்தில் இவ்விடத்தில் மட்டுமே கிடைகிறது.
    Thanks for your wonderful service
    பொதுவாக எல்லாமே நன்று.////

    நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  59. ////Blogger sury said...
    ஜோக்குகள் எல்லாத்துக்கும் ஜே.
    அது சரி. ஒருவன் நகைச்சுவை உணர்வு கூடியவனாக இருக்கவேண்டின் அவனது ஜாதகத்தில் எந்த கிருஹம்
    பலம் பெற்றிருக்கவேண்டும் ?
    சுப்பு ரத்தினம்.////

    ரசனைக்கு உரிய கிரகம் சுக்கிரன். அவர் ஜாதகத்தில் நன்றாக இருந்தால், நகைச்சுவை மட்டுமல்ல எல்லாச் சுவைகளும் நிறைவாக இருக்கும்

    ReplyDelete
  60. ////Blogger sundari said...
    Dear brother sury,
    sukuran avanthan nagasuvaiku uriyavan namba vaathiyar ku sukuran meenathil ucham then mercury in 7th house that is why he writes lot of comedy story, books jokes and horoscope. SUKURAN IS COMEDY GRAGAM.
    YOUR LOVINGLY
    SUNDARI.P////

    நீங்கள் சொல்வது சரிதான். நன்றி சகோதரி!
    Sukkiran is the planet for sense of humour!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com