மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.9.09

சிறுகதை: கொழுக்கட்டை

+++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை: கொழுக்கட்டை

கொழுக்கட்டையால் வரப்போகும் பிரச்னையைப் பற்றித் தெரியாமல்
வைக்கவைக்க கொழுக்கட்டையை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்
முருகப்பன். அவர்களும் மாப்பிள்ளையென்று தாங்கித் தடுக்குப்போட்டு
உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன இருந்தாலும் அது சின்ன மாமியார் வீடு. மூன்றாவது தட்டில்
வெட்கமாகிவிட்டது. போதுமென்று சொல்லி விட்டான்.

அவனுக்கும் பதினெட்டு வயது முடிந்துவிட்டது. இத்தனை வருட
வாழ்க்கையில் இவ்வளவு சூடான, ருசியான பலகாரத்தை அவன்
சாப்பிட்டதே இல்லை.

இதன் பெயர் என்னவென்று வேறு கேட்டுவிட்டான். அவர்களும்
மனதிற்குள் சிரித்துவிட்டார்கள். கொழுக்கட்டை என்றார்கள்.

சாலி, அதாவது அவன் மனைவி விசாலாட்சி நன்றாகச் செய்வாள்
என்றார்கள். அவன் அப்போதே மனதில் நினைத்துக் கொண்டுவிட்டான்
- இன்னும் ஓருவாரம் அல்லது பத்து நாட்களுக்காவது தினமும்
சாயங்கால வேளைகளில் இதைச் செய்யச்சொல்லி சாப்பிட
வேண்டுமென்று.

ஆதனால் கொழுக்கட்டை என்ற பெயரை மூன்று அல்லது நான்கு
முறைகள் தொடர்ந்து சொல்லி, மனதில் பதியவைத்துக் கொண்டான்.

எல்லாம் அவன் அப்பச்சி சாத்தப்பசெட்டியார் செய்தவேலை.
அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவனையும் தன்னோடு
செய்கோனுக்குக் (Vietnam) கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து அங்கேயே அவன்
இருக்கும்படியாகிவிட்டது.

நடுவில் அவர் இந்தியாவிற்கு வந்துபோனபோது கூட, அவனுடைய
படிப்பைக் காரணம் காட்டி அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவார்.

அவன் படித்ததெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில்.
அதனால் பிரெஞ்சு மொழியில் நன்றாகப் பேசுவான்

ஆங்கிலம் அறைகுறை. தமிழில் தடுமாற்றம். எழுத வராது. பேச
மட்டும் வரும். முருகப்பன் என்று தமிழ்க்கடவுளின் பெயரை வைத்ததற்கு
மாறாக அவனுடைய தமிழ் அறிவு இருந்தது.

இட்லியை யார் புட்டுப்போட்டது என்பதற்குப் பதிலாக இட்லியை யார்
கிழித்துப் போட்டது என்பான். சாம்பாரின் மணம் நல்ல வாசமாக
இருக்கிறது என்பதற்குப் பதிலாக சாம்பாரின் மணம் வரும்போதே
கேட்கிறது என்பான்.

பிரெஞ்சு, மற்றும் வீயட்நாம் சிறுவர்களோடு சேர்ந்து, கால்பந்து
விளையாட்டைத்தான் தினமும் விளையாடுவான். அதனால் முரட்டுத்தனம்
மட்டுமே அவனிடம் எஞ்சி நின்றது. பதினைந்து வயதில் இருந்து
குத்துச்சண்டை வகுப்பிற்கு வேறு போய் வந்தான்.

அதையெல்லாம் பார்த்த சாத்தப்ப செட்டியார் அப்படியே விட்டால்
தாங்காது என்ற முடிவிற்கு வந்து - இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பித்த
சமயம், செய்கோனை விட்டு இந்தியாவிற்குத் திரும்பியவர் - திரும்பிய
கையோடு அவனுக்கு ஓரு பெண்ணைப் பார்த்துத் திருமணத்தையும் நடத்தி
முடித்துவிட்டார்.

பெண்ணிற்குப் பதினாறு வயதுதான்.

கதை நடந்த காலம் 1941ம் வருடம்.

அவள் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தாள். அருமையாகச் சமையல்
செய்வாள். அவள் வீட்டில் நன்றாகப் பயிற்சி கொடுத்திருந்தார்கள்.
கருணைக்கிழங்கு கெட்டிக்குழம்பு ஓன்றுபோதும். சாத்தப்ப செட்டியாருக்கு
மிக்க மகிழ்ச்சி - தன்னுடைய முரட்டு மகனுக்கு நல்ல மனைவி கிடைத்து
விட்டாளென்று!

தங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
காரைக்குடிக்குத் தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ
சென்றுவிட்டுத் திரும்புவான் முருகப்பன்.

இல்லையென்றால் பொழுது எப்படிப்போகும்?

யுத்தத்தின் போக்கைப் பார்த்துக்கொண்டு, பிறகு ஏதாவது செய்யலாம்
என்று சாத்தப்ப செட்டியாரும் சும்மாதானிருந்தார். பணம் நிறைய
இருந்தது. சுக ஜீவனம். கவலை ஏதுமில்லை. அப்படி ஓருநாள்
காரைக்குடிக்கு வந்தவனைத்தான் கல்லுக்கட்டியில் மடக்கிய சின்ன
மாமனார் வீட்டினர் கொழுக்கட்டை, டிகிரி காப்பி கொடுத்து
வழியனுப்பி வைத்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++

வாடகை சைக்கிளைக் கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, வீட்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தான் முருகப்பன்.

சபாபதி படத்தில் வரும் காளி. என். ரத்தினத்தைப் போல தன் கன்னங்களை
உப்பலாக வைத்து - சேட்டை செய்தவாறு ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.
இன்னும் அரைக்காத தூரம் போகவேண்டும். வழியில் ஓரு பெரிய சாக்கடை
குறுக்கிட்டது.

அவனுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஓரு இஸ்லாமிய இளைஞன்,
”ஹைத்திரிபாச்சா” என்று உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டே ஓரே தாவலில்
அந்த சாக்கடையைத் தாண்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

நம்ம ஆளும் அதேபோல், ”ஹைத்திரிபாச்சா” என்று சொல்லிக் கொண்டே
தாண்டியவன் சாக்கடையின் மறுபக்கம் பத்திரமாக வந்துவிட்டான்.

வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மனம் அசை போட்டது.
”ஹைத்திரிபாச்சா” என்று ஆரேழு முறை உள்மனது சொல்லிக்கொண்டது.
அங்கேதான் வந்தது வினை. ”கொழுக்கட்டை” என்ற வார்த்தை மனதில்
இருந்து விலகி அந்த இடத்தில், ”ஹைத்திரிபாச்சா” வந்து ஓட்டிக் கொண்டு
விட்டது.

விட்டிற்குள் நுழைந்ததுமே முதல் வேலையாக அவன் கண்கள் சாலியைத்
தேடின. நல்ல வேளை அவள் முகப்பு அறை வாயிலில்தான் நின்று
கொண்டிருந்தாள்.

அவன் பரபரப்போடு அவள் அருகில் சென்றவன் வேகவேகமாகச்
சொன்னான்.”ஏய், உங்க சின்னத்தா விட்டில ”ஹைத்திரிபாச்சா”
செஞ்சு கொடுத்தாங்கடி. மூன்று பிளேட் சாப்பிட்டேன். சூப்பரா
இருந்துச்சுடி...!”

அவள் சிரிக்காமல் பதிலுக்குக் கேட்டாள், ”உப்புப் போட்டதா?
இல்லை இனிப்புப் போட்டதா?”

”உப்புப் போட்டதுதான். உனக்குச் செய்யத்தெரியும் என்றார்களே...
உனக்குத் தெரியுமா? தெரியாதா?”

அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“”ஹைத்திரிபாச்சா” சைத்தரிபாச்சா’க்களை எல்லாம் நாங்கள்
வீட்டில் செய்யமாட்டோம். கடையில்தான் வாங்குவோம்!”

சுரீர் எனறது அவனுக்கு. அவள் விளையாடுகிறாள். பொய் சொல்கிறாள்
என்றுணர்ந்தான். கோபம்மேலிட பளார் என்று அவளை ஓங்கி அறைந்து
விட்டான்.

அதை எதிர்பார்க்காத அவள் ’ஐயோ’ வென்று சத்தமிட - சத்தத்தை
நிறுத்த சரமாரியாக மூன்று நான்கு குத்துகளை வேறு அவள் முகத்தில்
இறக்கிவிட்டான்.

பெரிய ரகளையாகிவிட்டது.

சத்தம்கேட்டு உள்வீட்டில் இருந்து ஓடிவந்த, அவனுடைய பெரியத்தா
அன்னபூரணி ஆச்சிதான் கலவரத்தைத் தடுத்தார்கள்.

”அப்பச்சி, பொம்பளப்பிள்ளையைக் கைநீட்டி அடிக்கலாமா?
பார்க்க நல்லாவா இருக்கு?” என்று கோபமாகக் கேட்டார்கள்
அவன் சாந்தமடைந்து, பதில் சொன்னான்.

”இல்லை, பெரியத்தா! பலகாரம் செய்யறதைப்பத்திக் கேட்கும் போது
கேலி செய்தாள். அதனால்தான் சண்டை வந்துவிட்டது!”

”பலகாரத்திற்காக யாராவது முகத்தில் இப்படி அடிப்பார்களா?
பார் - அவளுடைய முகம் என்னமா வீங்கிவிட்டது - கொழுக்கட்டை
மாதிரி!”

பெரிய ஆச்சி இதைச் சொல்லவும், முருகப்பன் மனதில் மின்னல்
வெட்டியது.

”கொழுக்கட்டை” என்ற சொல்லைக் கேட்டவுடன், முருகப்பன்
தன்தவறை உணர்ந்தான். இருவரிடமும் நடந்ததைச் சொன்னான்.
சாலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

அடுத்த கணமே எல்லாம் சரியாகிவிட்டது.

அதற்குப் பிறகு முருகப்பன் சாலியைக் கைநிட்டி அடிப்பது கிடையாது.
தன் ஞாபக மறதியாலும் அறைகுறைத் தமிழாலும் வரும் குழப்பங்களைப்
போக்க அல்லது தீர்க்க யார் எது சொன்னாலும் உடனே தாளில் குறித்து
வாங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டான்.

(செட்டிநாட்டிலுள்ள பெரிசுகள் தங்கள் பேரக்குழந்தைகளுக்குச்
சொல்லும் குட்டிக்கதைகளில் ஒன்று இது. அதை நான், ஊதிப் பெரிதாக்கி,
1941ம் ஆண்டு, உலக யுத்தம், பிரெஞ்சுப் பள்ளிக்கூடம், இளம் மனைவி,
உரையாடல்கள் போன்ற மசாலாக்களைச் சேர்த்து, எனது வழக்கமான
நடையில் எழுதி, உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்.)
வாழ்க வளமுடன்!

40 comments:

singaiSuri said...

எளிமையான கதை நன்றாக இருந்தது,கதையை விட உங்கள் கதை சொல்லும்விதம் எப்பொதும் அபாரம்,needless to say :-)

krish said...

இவ்வளவு சுவையாக இந்த கதையை எழுதிய நீங்கள் குழந்தைகள் கதை எழுதுங்கள். இப்போது குழந்தைகள் கதை எழுதுபவர்கள் குறைவு,கடல் கடந்தவர்கள் எல்லோருக்கும் தம் குழந்தைகள் தமிழ் கற்கவில்லை என்ற மனகுறை உண்டு.எளிய சுவையன கதைகள் தமிழறிவை குழந்தைகள் பெற உதவும்.

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு,

கதையும், காத தூரமும், அதைப்
பறையும் முறையும்,
ஹைத்திரிப்பாச்சா கொழுக்கட்டையும் நன்று,
நவரசத்தில் இதுவும் ஒன்று;
எனினும் மிக்க நன்று.

காரைக்குடி கல்லுக்கட்டி என்றவுடன்,
கொப்பாத்தாவும் தெப்பத் திருவிழாவும்
நினைவுக்கு வந்திட்டுவிட்டது.

நன்றி,
அன்புடன்,

ஆலாசியம் கோ.

murugan said...

வணக்கம் ஐயா,
நேற்றுதான் பெங்களூரிருந்து வந்தேன்,
கொழுகட்டை கதை பிரமாதம்
நேரம் போதவில்லை அரைகுறை வகுப்புக்கு மன்னிக்கவும்
நன்றி முருகன் bsnl

SUNRAYS said...

superb
:-)))

Saravana said...

Dear sir,

Story is simply supereb!!!

Thanks
Saravana

நாமக்கல் சிபி said...

இந்த ஹைத்திரிபாச்சா கதை என் தந்தையாரும் எனக்கு சொல்லி இருக்கிறார்!

இருப்பினும் ஹைத்திரிபாச்சா போலவே மன்னிக்கவும் கொழுக்கட்டை போலவே சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

RVC said...

கொழுக்கட்டை கதை ஏற்கனவே நமது ஊரில் கேட்டதாக இருந்தாலும் உங்கள் நடை அருமை..!
ஊருக்கு போயிட்டேன் அய்யா, லீவ் லெட்டர் போயிட்டு வந்து கொடுக்கறதுக்கு மன்னிக்கனும் :-)
எல்லா பதிவையும் படிச்சுட்டு வர்றேன்.

SP.VR. SUBBIAH said...

////singaiSuri said...
எளிமையான கதை நன்றாக இருந்தது,கதையை விட உங்கள் கதை சொல்லும்விதம் எப்பொதும் அபாரம்,needless to say :-)////

உங்கள் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் சூரி!

SP.VR. SUBBIAH said...

////krish said...
இவ்வளவு சுவையாக இந்த கதையை எழுதிய நீங்கள் குழந்தைகள் கதை எழுதுங்கள். இப்போது குழந்தைகள் கதை எழுதுபவர்கள் குறைவு,கடல் கடந்தவர்கள் எல்லோருக்கும் தம் குழந்தைகள் தமிழ் கற்கவில்லை என்ற மனகுறை உண்டு.எளிய சுவையன கதைகள் தமிழறிவை குழந்தைகள் பெற உதவும்.////

குழந்தைகளுக்கான கதைகள், சிங்கம், புலி, குரங்குகளை வைத்தும் ஆன்மிகமாகவும் என்னிடம் நிறைய கதைகள்/செய்திகள் உள்ளன. அவைகள் அனைத்தையும் சுவையான கதைகளாக்கும் எண்ணம் உள்ளது. சுலபமாக 50 கதைகள் வரும். எழுதலாம் என்று உள்ளேன். இப்போது நேரம் இல்லை. ஜோதிட நூல் வேலை உள்ளது. பிறகு பார்க்கலாம் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு,
கதையும், காத தூரமும், அதைப்
பறையும் முறையும்,
ஹைத்திரிப்பாச்சா கொழுக்கட்டையும் நன்று,
நவரசத்தில் இதுவும் ஒன்று;
எனினும் மிக்க நன்று.
காரைக்குடி கல்லுக்கட்டி என்றவுடன்,
கொப்பாத்தாவும் தெப்பத் திருவிழாவும்
நினைவுக்கு வந்திட்டுவிட்டது.
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

கொப்புடையம்மன் கோவில் திருவிழா! நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///murugan said...
வணக்கம் ஐயா,
நேற்றுதான் பெங்களூரிருந்து வந்தேன்,
கொழுகட்டை கதை பிரமாதம்
நேரம் போதவில்லை அரைகுறை வகுப்புக்கு மன்னிக்கவும்
நன்றி முருகன் bsnl////

அதனாலென்ன பரவாயில்லை. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////SUNRAYS said...
superb :-)))/////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
Dear sir,
Story is simply supereb!!!
Thanks
Saravana/////

நன்றி சரவணன்!

SP.VR. SUBBIAH said...

////நாமக்கல் சிபி said...
இந்த ஹைத்திரிபாச்சா கதை என் தந்தையாரும் எனக்கு சொல்லி இருக்கிறார்!
இருப்பினும் ஹைத்திரிபாச்சா போலவே மன்னிக்கவும் கொழுக்கட்டை போலவே சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள்!/////

சரி, கொழுக்கட்டை ஒரு ப்ளேட் வாத்தியாருக்கு அனுப்பிவையுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////RVC said...
கொழுக்கட்டை கதை ஏற்கனவே நமது ஊரில் கேட்டதாக இருந்தாலும் உங்கள் நடை அருமை..! ஊருக்கு போயிட்டேன் அய்யா, லீவ் லெட்டர் போயிட்டு வந்து கொடுக்கறதுக்கு மன்னிக்கனும் :-) எல்லா பதிவையும் படிச்சுட்டு வர்றேன்.///

மெதுவாக வாருங்கள். ஒன்றும் அவசரமில்லை!

thirunarayanan said...

நானும் சிறு பிள்ளையாக இருந்தபோது
கேட்ட கதைதான் என்றாலும்
உங்கள் நடையில் சொன்னபோது
புதிதாக கேட்டது போல்
இருந்தது.
நன்றி அய்யா.

பித்தன் said...

எங்க அப்பா அம்மாவும் இந்த கதைகளை எங்களுக்கு முட்டாள் முனியன் என்ற பெயரில் சொல்லிக்கொடுத்தார்கள்.
தாங்களும் நல்ல முறையில் சொல்லியிருக்கிர்கள். நல்ல கற்பனை, நல்ல நடை.

PowerPix365 said...

தலைப்பை கண்டவுடனே புரிந்து விட்டது. பழைய கதையை REMAKE செய்ததற்கு நன்றி.

kmr.krishnan said...

மறக்காமல் கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு பரிமாறி விட்டீர்கள், அய்யா!
உப்புக் கொழுக்கட்டைக்கு நல்ல இசைவான "சைட் டிஷ்"தான்!
இன்னொரு கொழுக்கட்டை கதை உண்டே, தெரியுமோ! ஆங்..அதான்..!
"அம்மா..! அம்மா..! கொழுக்கட்டைக்கு கண்ணும் உண்டோடி?...காலும் உண்டோடி..?"

SP.VR. SUBBIAH said...

////thirunarayanan said...
நானும் சிறு பிள்ளையாக இருந்தபோது
கேட்ட கதைதான் என்றாலும்
உங்கள் நடையில் சொன்னபோது
புதிதாக கேட்டது போல்
இருந்தது.
நன்றி அய்யா.////

ஆமாம் திருநாராயணன். அதனால்தான் எனது நடையில் கதைக்கு அலங்காரம் செய்து வலையில் ஏற்றினேன்!

SP.VR. SUBBIAH said...

///பித்தன் said...
எங்க அப்பா அம்மாவும் இந்த கதைகளை எங்களுக்கு முட்டாள் முனியன் என்ற பெயரில் சொல்லிக்கொடுத்தார்கள்.
தாங்களும் நல்ல முறையில் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கற்பனை, நல்ல நடை./////

கள்ளு பழசுதான். புது மொந்தையில் சைடு டிஷ்களோடு கொடுத்திருக்கிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////PowerPix365 said...
தலைப்பை கண்டவுடனே புரிந்து விட்டது. பழைய கதையை REMAKE செய்ததற்கு நன்றி.////

ரிமேக் மட்டுமில்லை. ரீமிக்ஸ் செய்தும், பின்னணி இசை சேர்த்தும் கொடுத்திருக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
மறக்காமல் கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு பரிமாறி விட்டீர்கள், அய்யா!
உப்புக் கொழுக்கட்டைக்கு நல்ல இசைவான "சைட் டிஷ்"தான்!
இன்னொரு கொழுக்கட்டை கதை உண்டே, தெரியுமோ! ஆங்..அதான்..!
"அம்மா..! அம்மா..! கொழுக்கட்டைக்கு கண்ணும் உண்டோடி?...காலும் உண்டோடி..?"/////

கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு, பருப்புருண்டை கெட்டிக் குழம்பு, மெர்க்கரோனி கெட்டிக் குழம்பு, என்று பலவகைக் கெட்டி குழம்புகள் இருந்தாலும், எனது பேஃவரிட் குழம்பு, கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்புதான் கிருஷ்ணன் சார். அதுவும் பச்சரிசி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெரிதும் வேண்டேன் என்று சொல்லிவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவும் எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் நெடுங்குடி சமையல் மேஸ்திரிகளின் கைவண்ணத்தில் சாப்பிட்டால், எல்லா ஐயிட்டங்களுமே அமிர்தமாக இருக்கும்!

ananth said...

நானும் சிறு வயதில் இந்த கதையைப் படித்திருக்கிறேன். ஆயினும் தாங்கள் இந்த கதையை சொன்ன விதம் நன்று. சமயங்களில் நேரமின்மை காரணமாக பாடம் படித்து வருகிறேன். பின்னுட்டம் இடுவதில்லை.

sundari said...

vannakam sir,
kolukata picture nalla irruguthu sir.
ennku antha kolujataya sapidunum enru
thonuthu. kolukata vadivam romba beautiful sir. so so nice picture sir.
your lovingly,
sundari.p

sundari said...

vannakam sir,
kolukata picture nalla irruguthu sir.
ennku antha kolujataya sapidunum enru
thonuthu. kolukata vadivam romba beautiful sir. so so nice picture sir.
your lovingly,
sundari.p

SP.VR. SUBBIAH said...

///ananth said...
நானும் சிறு வயதில் இந்த கதையைப் படித்திருக்கிறேன். ஆயினும் தாங்கள் இந்த கதையை சொன்ன விதம் நன்று. சமயங்களில் நேரமின்மை காரணமாக பாடம் படித்து வருகிறேன். பின்னுட்டம் இடுவதில்லை.////

பின்னூட்டம் முக்கியமில்லை. வகுப்பறைக் கண்மணிகள் அனைவரும் படித்தால் போதும். எழுது நோக்கம் அதுதான் ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

///sundari said...
vannakam sir,
kolukata picture nalla irruguthu sir.
ennku antha kolujataya sapidunum enru
thonuthu. kolukata vadivam romba beautiful sir. so so nice picture sir.
your lovingly,
sundari.p///

படத்தை மட்டும் பார்த்துவிட்டுப் போய்விட்டீர்கள் போலிருக்கிறதே? மொத்த இடுகையையும் படிக்கவில்லையா நீங்கள்?

sundari said...

vannakam sir,

illa sir nanu elthayum padichi parthen sir. appo kuta en kannu antha kolukata mela irrukuthu sir because nalla design. promise nanu ella kathayum padichivitan
sir yogam lesson venum sir.
nanu 10 years horoscope patikiran but i did not read like ur lessons nega romba nalla solitharika
many many thanks sir. ippo jathagam naala puriuthu.
your lovingly
sundari.p

iyer said...

கொழுக்கட்டைக்கு இத்தனை ருசிக்கான காரணத்தை
நீங்கள் சொன்ன கதையில் இருந்தே தெரிந்து கொண்டேன் . .

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா . .
நான் கொழுக்கட்டை சாப்பிட்டு சுமார் 10வருடங்களுக்கு மேல் ஆச்சு . . {எனக்கும் செய்யத் தெரியாது..(}

பழைய மலரும் நினைவுகள் . .
சுவையை கூட்டித் தந்தது . .

நன்றி . .

Sakthi Ganesh said...

Sir,
This comment is from Junior Sakthi Ganesh: "Kathai supero... super, Gnabaka marathikku oru eduthukkaattu.please write more stories like this and also write more puzzles and comedy stories. Thanks."- Junior Sakthi Ganesh.

Sakthi Ganesh said...
This comment has been removed by a blog administrator.
SP.VR. SUBBIAH said...

///sundari said...
vannakam sir,
illa sir nanu elthayum padichi parthen sir. appo kuta en kannu antha kolukata mela irrukuthu sir because nalla design. promise nanu ella kathayum padichivitan//////

படித்திருப்பீர்கள் என்று தெரியாதா என்ன? நகைச்சுவைக்காக அப்படிக் கேட்டிருந்தேன்!

SP.VR. SUBBIAH said...

/////iyer said...
கொழுக்கட்டைக்கு இத்தனை ருசிக்கான காரணத்தை
நீங்கள் சொன்ன கதையில் இருந்தே தெரிந்து கொண்டேன் . .
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா . .
நான் கொழுக்கட்டை சாப்பிட்டு சுமார் 10வருடங்களுக்கு மேல் ஆச்சு . . {எனக்கும் செய்யத் தெரியாது..(}
பழைய மலரும் நினைவுகள் . .
சுவையை கூட்டித் தந்தது . .
நன்றி.//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Sakthi Ganesh said...
Sir,
This comment is from Junior Sakthi Ganesh: "Kathai supero... super, Gnabaka marathikku oru eduthukkaattu.please write more stories like this and also write more puzzles and comedy stories. Thanks."- Junior Sakthi Ganesh.////

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!

minorwall said...

அத்திரிப்பாச்சா கொழுக்கட்டை என்கிற வார்த்தை மட்டும் மனதில் நிழலாடுகிறது.அதற்க்கு கண்ணு,காத்து மூக்கு வெச்சு ஊருக்கேள்ளே பேச்சு எழும்படி செய்ததற்கு ஆசிரியருக்கு மீண்டும் வணக்கங்கள் .
சித்ரா மெஸ்,அலங்கார்-பை-நைட்,அன்னபூர்ணா, குறிஞ்சி பெர்மிட் ரூம் என்று காரைக்குடியின் சுவை நாக்கில் ஊறுகிறது..அது ஒரு கனாக்காலம்.

Sas said...

எங்க ஊரில அரிசி மாவில் தான் கொழுக்கட்டை செய்வார்கள். இது என்ன சார் வெள்ளையா இருக்கு?

SP.VR. SUBBIAH said...

///minorwall said...
அத்திரிப்பாச்சா கொழுக்கட்டை என்கிற வார்த்தை மட்டும் மனதில் நிழலாடுகிறது.அதற்கு கண்ணு,காத்து மூக்கு வெச்சு ஊருக்கேள்ளே பேச்சு எழும்படி செய்ததற்கு ஆசிரியருக்கு மீண்டும் வணக்கங்கள் .
சித்ரா மெஸ்,அலங்கார்-பை-நைட்,அன்னபூர்ணா, குறிஞ்சி பெர்மிட் ரூம் என்று காரைக்குடியின் சுவை நாக்கில் ஊறுகிறது..அது ஒரு கனாக்காலம்.////

குறிஞ்சி பெர்மிட் ரூமா? நான் பார்த்ததில்லை!
மற்றபடி காரைக்குடியை நினைத்தால் சுவை நாக்கில் ஊறுகிறது!
எங்களுக்கு கையில் உள்ள காலம்!
நினைத்தால் உடனே போய்வரமுடியும்!

SP.VR. SUBBIAH said...

/////Sas said...
எங்க ஊரில அரிசி மாவில் தான் கொழுக்கட்டை செய்வார்கள். இது என்ன சார் வெள்ளையா இருக்கு?//////

படம் கூகுள் இமேஜ் உபயம். படத்தில் உள்ள கொழுக்கட்டை, வெல்லம், கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்பெற்ற இனிப்புக் கொழுக்கட்டை போல இருக்கிறது. அதனால்தான் நிறம் வித்தியாசமாக உள்ளது!