மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.9.09

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி என்ற சொல்லிற்கு ஒரு வசீகரம் உண்டு.
வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பப்படுவதால் மட்டுமல்ல, வெற்றிக்கு
ஒரு உள்ளடங்கிய பயன் இருப்பதால் அதற்கு ஒரு வசீகரிக்கும்
தன்மை வந்துவிடுகிறது.

அது என்ன உள்ளடங்கிய பயன்?

எடுத்து செய்யும் செயல்களுக்குக் கிடைக்கும் சாதகமான முடிவுதான் உள்ளடங்கிய பயன்!

எடுத்த செயல் எல்லாமே 'வெற்றி பெறுமா?' என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம்!

ஆனால் யோசிப்பதற்கே இடமில்லாமல் எடுத்த செயலைத் தன்முனைப்போடு செய்து வெற்றி பெற்றால், ஒரு உத்வேகம் ஏற்பட்டு அடுத்தடுத்து நாம் பல வெற்றிகளைக் காண முடியும். ஆகவே ஒரு வெற்றி, அடுத்த வெற்றிக்கு வழி வகுக்கும்.

சிலர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் பெறுவதில்லை!
என்ன காரணம்?

முன் பத்தியில் சொன்ன அந்த உத்வேகம்தான் காரணம். ஆங்கிலத்தில் அதைக் killing instinct என்பார்கள்.

வெற்றி பல வடிவங்களைக் கொண்டது. பல அர்த்தங்களைக் கொண்டது. வாழ்க்கையில் தேடுவது ஒருவகை வெற்றி. வியாபாரத்தில் தேடுவது
ஒருவகை வெற்றி. விளையாட்டு வீரனின் வெற்றி ஒரு வகை என்றால், இசைக்கலைஞன் தேடுவது ஒருவகை வெற்றி.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் தேடுவது தினசரி வெற்றி. ஆமாம் அவர் தினசரி செய்யும் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றால் தானே சிகிச்சைக்கு வந்தவன் மீண்டும் நடமாட முடியும்?

ஆகவே எப்படிப்பட்ட வெற்றி என்பது அவரவர் தேடலைப் பொறுத்தது!

அதுபோல வெற்றியின் தன்மையும் வித்தியாசப்படும்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் தேர்வு பெற்றால் அது செயல்.

அவனே நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினால் அது வெற்றி (success)

மாநில அளவில் முதல்மாணவனாக அவன் தேறினால் அது மிகப் பெரிய
வெற்றி! (Great Success)

'கரையை விட்டுப் பயணிக்காமல் நீங்கள் சமுத்திரங்களைப் பார்த்து வரமுடியாது' என்ற சொல்லடை உண்டு. அதுபோல இருக்கும் இடத்தை
விட்டு எழுந்து சிரமம் பார்க்காமல் செயல் பட்டால்தான் வெற்றியை
அடைய முடியும். எதுவும் நம்மைத் தேடி வராது. நாம் தான் தேடிப்போக
வேண்டும்

நம்மைத் தேடி எதுவுமே வராதா? சோம்பி இருந்தால் நம்மைத் தேடி
ஒன்றல்ல இரண்டு வரும். அவற்றின் பெயர்: நோய் மற்றும் கடன்

வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? வெகு இயல்பாகச் சொன்னால், சரியான நேரத்தில், சரியான வழியில், சரியான செயலைச் செய்வதுதான் வெற்றி!

Success is simple. Do what's right, the right way, at the right time.
- Arnold H. Glasow


உட்கார்ந்து யோசித்தோமென்றால், சரியான நேரத்தில் சரியான செயலைச் செய்யாததால் வாழ்க்கையில் எத்தனை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியவரும்.

வெற்றி என்பது போய்ச் சேர வேண்டிய இடமல்ல: வெற்றி என்பது பயணம் ஆகும். (Success is not a destination it is a journey)

கடவுள் நம் கண்முன்னே தோன்றி (ஒரு பேச்சுக்குத்தான்) "உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால் என்ன கேட்போம்?

ஒவ்வொருவரும் ஒருவிதமாகக் கேட்போம்.

முருகப்பெருமானின் தீவிர பக்தரான வீரபாகுவிடம், முருகன் நேரில் காட்சி கொடுத்துக் கேட்ட போது, வீரபாகு சொன்னாராம்: "அப்பனே! என் வாழ்நாள் முழுவதும் உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் வேண்டும்"

"அதைத் தந்தேன்; இன்னொன்றும் தருகிறேன், அடுத்ததைக் கேள்" என்று முருகப்பெருமான் சொன்னபோது, வீரபாகு அடுத்ததாக என்ன கேட்டார் தெரியுமா?

"உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத மனம் வேண்டும்!" என்றாராம்.

நாம் அப்படிக் கேட்டிருப்போமா என்றால் - நிச்சயம் கேட்டிருக்க மாட்டோம். இன்றைய 13% பணவீக்கத்திலும், விலவாசி ஏற்றத்திலும் இயல்பை மறந்து
வரம் கேட்பது சாத்தியமில்லாதது.

அரசு சொல்லும் பணவீக்கம் 13%. ஆனால் உண்மையில் 20% இருக்கும்
போல் உள்ளது!

சரி, விஷயத்திற்கு வருகிறேன். இக்காலத்து அன்பர் ஒருவரின் கண்முன்னே இறைவன் தோன்றி, அதே போன்று சொல்ல, அவர் என்ன வரம் கேட்டார் தெரியுமா?

"ஆண்டவனே, நான் என்னுடைய நூறாவது வயதில், அழகான என் மனைவியோடு, என்னுடைய ஆயிரம் ஏக்கர் பண்ணைத் தோட்டத்தில்
உள்ள, பத்து மாடி மாளிகையில், சுயமாக படிகளில் கடகட வென்று
நானே ஏறி உச்சி மாடத்திற்குச் சென்று, கண்ணாடி அணியாத என்
கண்களால், கீழே தோட்டத்தில் அமர்ந்து தங்கத்தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என்னுடைய கொள்ளுப் பேரனை,
மனங்குளிரப் பார்த்து மகிழும் பாக்கியம் வேண்டும்."

ஜாதகத்தின் 36 பாக்கியங்களும் இதில் அடங்கியிருக்கும் படியாக .
அப்படியொரு வரனைக் கேட்டார் அந்த அன்பர். அதைக்கேட்கும் போது அவருக்கு வயது இருபத்தைந்துதான்.

ஜாதகத்துடன் ஒரு கேள்வி கேளுங்கள் என்று வாத்தியார் நிபந்தனை
விதித்தால், நீங்கள் ஒரு கேள்விக்குள் 36 கேள்விகளை உள்ளடக்கி
சிலர் கேட்பார்களே அதுபோல இது!

இன்றைய மனிதர்களின் தேவைகளும், ஆசைகளும் நாளுக்கு நாள்
விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

ஆசைப்படுவதை விட்டு விட்டு, தேவைப்படும் அளவிற்கு வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும் என்றால் எடுத்துச் செய்யும் செயல்களின்
வெற்றி முக்கியம்.

தொடர் வெற்றியைப் பெறுவதற்கு நம்க்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்.

1. எதையும் விடாது செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மனது
2. ஆரோக்கியமான உடல் நிலை
3. அலையக்கூடிய தெம்பு
4. எவரிடமும் அன்பு பாராட்டக்கூடிய மனப்பான்மை
5. தட்டுப்பாடு இன்றி தேவைக்குச் செலவழிக்கும் அளவிற்குக் கையில் காசு
6. அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது, என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு அல்லது தன்னம்பிக்கை.

இந்த ஆறு தகுதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் செயல் பட்டால். நிச்சயம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிதான்.

பிறகு வெற்றி மீது வெற்றி வந்து என்னை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல, நம் எல்லோரையும் வந்து சேரும்

வெற்றி என்பது ஒரு அற்புதமான சொல்! அதற்குப் பன்முகங்கள் உண்டு. என்னென்ன முகங்கள் உள்ளன என்பதை பின் ஒரு சமயம் விவரமாகப் பார்ப்போம்.

அன்புடன்
வாத்தியார்

Lebel:
1.மனவளக் கட்டுரை
2.ரம்ஜான் கொண்டாட்ட சீரீஸ்! ==============================================


வாழ்க வளமுடன்!

55 comments:

hotcat said...

இந்த் பதிவு மிகவும் அருமை.

-ஷன்கர்

krish said...

Good post to start with for Ramzan and Navarathri festivals. Thanks.

வேலன். said...

ஆறு மனமே ஆறு அந்த ஆசிரியரின் கட்டளை ஆறு....

மாணவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றோம்.....

வாழ்க வளமுடன்,
வேலன்.

murugan said...

வணக்கம் ஐயா,
வெற்றியை பற்றியும் அந்த ஆறு கடை பிடிக்கவேண்டிய செயல்களை பற்றியும் நீங்கள ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிடுளதை அறிவேன் ஐயா
நன்றி முருகன்

thirunarayanan said...

வெற்றி வெற்றி வெற்றி
கட்டுரை சூப்பர்.
நன்றி அய்யா.

ceylonstar said...

Repeattu sir....

நிகழ்காலத்தில்... said...

\\அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது, என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு அல்லது தன்னம்பிக்கை.\\


சரியாகச் சொன்னீர்கள் வாத்தியாரே

நன்றிகள் பல

SP.VR. SUBBIAH said...

////hotcat said...
இந்த பதிவு மிகவும் அருமை.
-ஷங்கர்///

முதல்முறையாக உங்களிடமிருந்து தமிழில் பின்னூட்டம். நன்றி ஷங்கர்!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
Good post to start with for Ramzan and Navarathri festivals. Thanks.////

ஆமாம் க்ரீஷ். விடுமுறை நாட்களைக் கொண்டாடுவோம். ஜோதிடத்தை சற்று ஒதுக்கி வைப்போம்!

SP.VR. SUBBIAH said...

////வேலன். said...
ஆறு மனமே ஆறு அந்த ஆசிரியரின் கட்டளை ஆறு....
மாணவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றோம்.....
வாழ்க வளமுடன்,
வேலன்./////

கட்டளையென்றால் ஒருவரும் கேட்கமாட்டார்கள். இது பரிந்துரை. விருப்பமுள்ளவர்கள் கடைப்பிடிக்கலாம்!

SP.VR. SUBBIAH said...

/////murugan said...
வணக்கம் ஐயா,
வெற்றியை பற்றியும் அந்த ஆறு கடை பிடிக்கவேண்டிய செயல்களை பற்றியும் நீங்கள ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிடுளதை அறிவேன் ஐயா
நன்றி முருகன்/////

நினைவிலில்லை. இந்தக் கட்டுரைக்கு, அது பொருந்தி வந்தால் சரி!

SP.VR. SUBBIAH said...

///thirunarayanan said...
வெற்றி வெற்றி வெற்றி
கட்டுரை சூப்பர்.
நன்றி அய்யா.////

நன்றி நாராயணன்!

SP.VR. SUBBIAH said...

////ceylonstar said...
Repeattu sir..../////

ரிப்பீட்டா? எனது நன்றியும் ரிப்பீட்டு!

murugan said...

பழைய படங்களை கடந்த முன்று மாதங்களாக படிதுகொண்டிருகிறேன் ஐயா
கடக லக்கினர்த்திற்கு ஆறுக்குடயவனோடு எழுக்குடையவனும் ஆறில் இருந்து இரண்டுக்குடையவனும், சுக்கிரனும், பன்னிரண்டில்ருந்துகொண்டு ஆறாம் வீட்டை பார்ப்பதும் எட்டில் கேதும் இருப்பதால் ஏதேனும் யோகம் வருமா

Alasiam G said...

தமிழ்த்திருவே வணக்கம்!

சொல்பவர் சொல்லக்கேட்டால்
சொன்னக்கதை யாயினும் சொல்லும்
ஒவ்வொரு முறையும் சுவைமிகுமே நீங்கள்
சொல்லிய கதை மூலம் சொல்லின் சூட்சுமம்
அறிந்தேன்,
ஆமாம் உண்மையில் உணர்ந்தேன்
உழைப்பே உயர்வு என்பதன்
உன்னதம் உணர்ந்தேன்

உள்ளொளிப் பெற்றேன் ஆமாம் என் சிந்தையில்
வெள்ளொளி புக உணர்ந்தேன்

எரிமலை குழம்பாய் அர்ஜுனன் அம்பாய்
பார் கடல் அமுதமாய்
அன்னை பார்வதியின் கருணையாய்
உழைப்பின் முறைமையை

என் குருதி யணுக்களை
குளோனிங் செய்துப் பெருக்கி விட்டேன்.

ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையன் உலை - வள்ளுவன் சொன்னாது

என் ஆசான் நீர் உரைத்தது இன்னும் தெளிவோடு.

நன்றி அய்யா!
உங்கள் பொன்னான நேரம் போகும் தூரம்
என் மனதில் தமிழ் ஊரத் தூண்டுகிறது

ஊரணி நீர் நிறைந்த தற்றதாம்
என் குருவின் திரு (அறிவு).


ஆலாசியம் கோ.

suribaba said...

ஐயா
பாதிவு Super,Morning starts with வகுப்பு அறை :-)
நன்றி

இராதா கிருஷ்ணன் said...

அருமையான பாடம் ஐயா.வெற்றி என்பது பெறுவது மட்டுமல்ல.அதனைத் தக்க வைத்துக் கொள்ள்வும் பெரிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக வெற்றி என்பது ஒர் பயணம் எனச் சொல்லிவிட்டீர்கள் ஐயா.வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதில் வரும் வெற்றி தோல்விகளையும் நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.SUCCESS MEANS WINNING NOT EVERY BATTLE,WINNING THE WAR AT LAST.அதற்குரிய மனப்பக்குவத்தை வளர்ப்பதுதான் இறை நம்பிக்கை இல்லையா அய்யா?

SP.VR. SUBBIAH said...

murugan said...
பழைய படங்களை கடந்த முன்று மாதங்களாக படிதுகொண்டிருகிறேன் ஐயா
கடக லக்கினர்த்திற்கு ஆறுக்குடயவனோடு எழுக்குடையவனும் ஆறில் இருந்து இரண்டுக்குடையவனும், சுக்கிரனும், பன்னிரண்டில்ருந்துகொண்டு ஆறாம் வீட்டை பார்ப்பதும் எட்டில் கேதும் இருப்பதால் ஏதேனும் யோகம் வருமா?

6th and 12th houses are inimical places. There won't be any benefit from those houses!

SP.VR. SUBBIAH said...

///Alasiam G said...
உங்கள் பொன்னான நேரம் போகும் தூரம்
என் மனதில் தமிழ் ஊரத் தூண்டுகிறது
ஆலாசியம் கோ.////

ஊரும் நீரை போத்தலில் அடைத்து
பாரும் மெச்ச பலருக்கும் அளித்திடுக!

SP.VR. SUBBIAH said...

///suribaba said...
ஐயா
பாதிவு Super,Morning starts with வகுப்பு அறை :-)
நன்றி////

நன்றி சூரிபாபா!

SP.VR. SUBBIAH said...

///நிகழ்காலத்தில்... said...
\\அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது, என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு அல்லது தன்னம்பிக்கை.\\
சரியாகச் சொன்னீர்கள் வாத்தியாரே
நன்றிகள் பல///

புரிதலுக்கு நன்றி நண்பரே!

Alasiam G said...

ஆகட்டும் அய்யா,
அப்படியே செய்கிறேன்

பொத்தினேன் என் போத்தலில் அடங்கவில்லை
மனக்கதவின் சாத்தலில் அடங்கவில்லை

ஆமாம் இந்த தமிழ்மணம்
அணுவினும் சிறுதுளை யனாலும்
பொங்கி நுழைகிறது -எனினும்
தங்கள் அறிவுரைக்கு நன்றி

போத்தலில் அடைக்கிறேன்
தமிழ்ப் பால் பருக -உங்கள்
அனைவரையும் பிறிதொருமுறை அழைக்கிறேன்.

நன்றி!

ஆலாசியம் கோ

SP.VR. SUBBIAH said...

///இராதா கிருஷ்ணன் said...
அருமையான பாடம் ஐயா.வெற்றி என்பது பெறுவது மட்டுமல்ல.அதனைத் தக்க வைத்துக் கொள்ள்வும் பெரிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக வெற்றி என்பது ஒர் பயணம் எனச் சொல்லிவிட்டீர்கள் ஐயா.வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதில் வரும் வெற்றி தோல்விகளையும் நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.SUCCESS MEANS WINNING NOT EVERY BATTLE,WINNING THE WAR AT LAST.அதற்குரிய மனப்பக்குவத்தை வளர்ப்பதுதான் இறை நம்பிக்கை இல்லையா அய்யா?////

அனுபவம் மனப்பக்குவத்தைத் தரும். மனப் பக்குவம் நம்பிக்கையைத் தரும். நம்பிக்கை வெற்றியைத்தரும்
அனுபவமே இறைவன் அளிப்பதுதான்!

chaks said...

Very well written sir!

The problem is we tend to forget these golden words as we get along with our mundane madness. They seldom stay with us past the day we read them :-(

sundaresan p said...

vanakkam aiya

aiyya palaya padathil irundu oru santhegam thayavu seithu theerthu vaikavum.

yanaku chandiran 4 il kudave maandhi. 5 ill ragu 10 il yenda gragamum illai. yanaku kemathuruva yogam irukiratha?

RVC said...

உள்ளேன் அய்யா!
பாடம் வழக்கம்போல் அருமை!
இந்த வாரம் தத்துவ வாரம் போலிருக்கிறது..!

Sridhar Subramaniam said...

அய்யா,

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான ஒன்று. பண வீக்கம் இருபதைந்தை தண்டி இருக்கும் போல தெரிகிறது.

முன் சொன்னது போல், எல்லா நல்லது மற்றும் கெட்ட விளைவுகளுக்கம் மனது தான் காரணம்.

போதும் என்ற மனதே....

ஆனால் தற்போது இருக்கும் விலைவாசி உண்ணும் உணவுக்கு "போதும்" என சொல்லி இரண்டு வேலை உணவாக பல பேர்களின் வயிற்றிக்கும் மரண அடி கொடுத்து உள்ளது.

போன வகுப்பில் முட்டையை வைத்து சொன்ன தத்துவம் என் மனதை தொட்டது.

நன்றி,

ஸ்ரீதர்

SP.VR. SUBBIAH said...

///chaks said...
Very well written sir!
The problem is we tend to forget these golden words as we get along with our mundane madness. They seldom stay with us past the day we read them :-(////

We tend to forget these golden words, due to various commitments and pressures in day to day life

SP.VR. SUBBIAH said...

///sundaresan p said...
vanakkam aiya
aiyya palaya padathil irundu oru santhegam thayavu seithu theerthu vaikavum.
yanaku chandiran 4 il kudave maandhi. 5 ill ragu 10 il yenda gragamum illai. yanaku kemathuruva yogam irukiratha?////

ராகுவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது! உங்களுக்கு இந்த யோகம் உள்ளது. கவலைப் படாதீர்கள்.
நஷ்ட ஈடு வேறு இடத்தில் வழங்கப்பெற்றிருக்கும். அதனால்தான் அனைவருக்குமே சமமான மதிப்பெண்
magic number 337

SP.VR. SUBBIAH said...

////RVC said...
உள்ளேன் அய்யா!
பாடம் வழக்கம்போல் அருமை!
இந்த வாரம் தத்துவ வாரம் போலிருக்கிறது..!////

ரம்ஜான், சரஸ்வதிபூஜை, விழா/ விடுமுறை கொண்டாட்ட வாரம்!

SP.VR. SUBBIAH said...

/////Sridhar Subramaniam said...
அய்யா,
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான ஒன்று. பண வீக்கம் இருபதைந்தை தண்டி இருக்கும் போல தெரிகிறது.
முன் சொன்னது போல், எல்லா நல்லது மற்றும் கெட்ட விளைவுகளுக்கம் மனது தான் காரணம்.
போதும் என்ற மனதே....
ஆனால் தற்போது இருக்கும் விலைவாசி உண்ணும் உணவுக்கு "போதும்" என சொல்லி இரண்டு வேலை உணவாக பல பேர்களின் வயிற்றிக்கும் மரண அடி கொடுத்து உள்ளது.
போன வகுப்பில் முட்டையை வைத்து சொன்ன தத்துவம் என் மனதை தொட்டது.
நன்றி,
ஸ்ரீதர்///

உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீதர்

Arul said...

Dear Sir,

I remember,you have said that 6000 peoples are visiting your blog.Definitely at least one percentage of them like me will store your morals and motivation in good thinking in their memory and utilize them in their practical life...I think god blessed you with a good position of jupiter in your natal chart...In this modern competitive world the younger generation has very few chances to hear like this motivation and moral except us.We will take these thoughts and morals to our children for guiding them in proper way...Thanks a lot...With god's grace we are expecting this will continue...

Best Regards,
Arulnithi

arumuga nainar said...

Dear Sir,

உங்களுடைய வெற்றிக்கான மூல மந்திரத்தை வைத்து வாழ்க்கையில சாதித்து காட்டுயோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. (நம்பினோர் கெடுவதில்லை).

Rgds
Nainar

sasi said...

ஜயா ஒரு கேள்வி .. கோச்சார குரு என்றால் என்ன.. சற்று விளக்க முடியுமா?

kmr.krishnan said...

வீரபாகு போலவே மற்றோர் பக்தர் பற்றிய கதை. பக்தரின் பக்தியை மெச்சிபகவான் நேரில் வந்துவிட்டார். பக்தருக்கு வலதுகாலில் ஆனைக்கால் நோய்.சிரமத்துடன் சாஷ்டாஙக நமஸ்காரம் செய்தார்.பகவான்"வரம் கேள், கேள்!"என்று அவசரப்படுத்துகிறார்.பக்தர்,"தரிசனமே போதும் போதும்"என்கிறார்.
இரண்டு பேருக்கும் இழுபறி தொடர்கிறது.நீண்ட நேரப் போராட்டத்திர்க்குப்
பிறகு பக்தர் கேட்ட வரம்:"சரி, என் வலதுகாலில் உள்ள ஆனைக்கால் நோயை இடதுகாலுக்கு மாற்றி விட்டு விடும், பகவானே!"

கே எம் ஆர். க்ரிஷ்ணன்‌

SP.VR. SUBBIAH said...

/////Arul said...
Dear Sir,
I remember,you have said that 6000 peoples are visiting your blog.Definitely at least one percentage of them like me will store your morals and motivation in good thinking in their memory and utilize them in their practical life...I think god blessed you with a good position of jupiter in your natal chart...In this modern competitive world the younger generation has very few chances to hear like this motivation and moral except us.We will take these thoughts and morals to our children for guiding them in proper way...Thanks a lot...With god's grace we are expecting this will continue...
Best Regards,
Arulnithi////

பணி தொடரும். நிச்சயம் தொடரும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

////arumuga nainar said...
Dear Sir,
உங்களுடைய வெற்றிக்கான மூல மந்திரத்தை வைத்து வாழ்க்கையில சாதித்து காட்டுயோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. (நம்பினோர் கெடுவதில்லை).
Rgds
Nainar////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////sasi said...
ஜயா ஒரு கேள்வி .. கோச்சார குரு என்றால் என்ன.. சற்று விளக்க முடியுமா?/////

அது எல்.கே.ஜி பாடம். இப்போது நடத்திக்கொண்டிருப்பது ப்ளஸ் டூ லெவல். நீங்கள் முதலில் பழைய பாடங்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள். இல்லையென்றால் மிகவும் கஷ்டம். இப்போது நடத்தும் பாடம் எதுவுமே புரியாது!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
வீரபாகு போலவே மற்றோர் பக்தர் பற்றிய கதை. பக்தரின் பக்தியை மெச்சிபகவான் நேரில் வந்துவிட்டார். பக்தருக்கு வலதுகாலில் ஆனைக்கால் நோய்.சிரமத்துடன் சாஷ்டாஙக நமஸ்காரம் செய்தார்.பகவான்"வரம் கேள், கேள்!"என்று அவசரப்படுத்துகிறார்.பக்தர்,"தரிசனமே போதும் போதும்"என்கிறார்.
இரண்டு பேருக்கும் இழுபறி தொடர்கிறது.நீண்ட நேரப் போராட்டத்திர்க்குப்
பிறகு பக்தர் கேட்ட வரம்:"சரி, என் வலதுகாலில் உள்ள ஆனைக்கால் நோயை இடதுகாலுக்கு மாற்றி விட்டு விடும், பகவானே!"
கே எம் ஆர். க்ரிஷ்ணன்‌/////

அது கேரளாவின் நாராயண குரு பற்றிய பிரசித்தி பெற்ற கதை/சம்பவம்!

kmr.krishnan said...

சசி!வாதியாரின் வேலைப் பளு தெரிந்துமா அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறீர்கள்?சரி. நான் சொல்கிறேன்.கோசாரம் அல்லது கோள்சாரம் என்பது தற்சமயம்கோள்கள் இருக்கும் நிலை.உதாரணமாக இன்று குரு மகரத்தில் நீச நிலையில்15 12 09வரை இருப்பார். பினனர் கும்பத்திர்க்குப் பெயர்ச்சி ஆகி ஓர் ஆண்டு அங்கே இருப்பார். இவர்தான் கோச்சார குரு.புரிந்ததா?

‌நம் சோதிட குரு நல்ல 'மூடி'ல் இருக்கார். கோசார குரு பற்றி கேட்டு 'மூட்அவுட்" ஆக்காதீர்கள்
kmr.krishnan
http;//parppu.blogspot.com

Arulkumar Rajaraman said...

Dear Sir

Super Padhivu Sir..(3(moondru) thodar) ..vetri peruvom ...vetri adayum varai poraduvom.

Happy - Ramadan Kareem
Happy Ramadan Mubarak

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Super Ramadan and Saraswathi pooja Special treat. Vetri peruvom... vetri perum varai poraduvom.

Happy Ramadan Kareem
Happy Ramadan Mubarak

Thank you Sir

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBIAH said...

///kmr.krishnan said...
சசி!வாதியாரின் வேலைப் பளு தெரிந்துமா அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறீர்கள்?சரி. நான் சொல்கிறேன்.கோசாரம் அல்லது கோள்சாரம் என்பது தற்சமயம்கோள்கள் இருக்கும் நிலை.உதாரணமாக இன்று குரு மகரத்தில் நீச நிலையில்15 12 09வரை இருப்பார். பினனர் கும்பத்திர்க்குப் பெயர்ச்சி ஆகி ஓர் ஆண்டு அங்கே இருப்பார். இவர்தான் கோச்சார குரு.புரிந்ததா?
‌நம் சோதிட குரு நல்ல 'மூடி'ல் இருக்கார். கோசார குரு பற்றி கேட்டு 'மூட்அவுட்" ஆக்காதீர்கள்
kmr.krishnan
http;//parppu.blogspot.com////

மூட் அவுட் ஆகாது! ஆனால் சிக்கலைப் பாருங்கள். எல்.கே.ஜி யையும், ப்ளஸ் டூவையும் ஒன்றாக உட்காரவைத்துப் பாடம் எடுக்க வேண்டியதாக உள்ளது.

SP.VR. SUBBIAH said...

Arulkumar Rajaraman said...
Dear Sir
Super Padhivu Sir..(3(moondru) thodar) ..vetri peruvom ...vetri adayum varai poraduvom.
Happy - Ramadan Kareem Happy Ramadan Mubarak
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Super Ramadan and Saraswathi pooja Special treat. Vetri peruvom... vetri perum varai poraduvom.
Happy Ramadan Kareem
Happy Ramadan Mubarak
Thank you Sir
Loving Student
Arulkumar Rajaraman////

பூஜா வாழ்த்துக்கள் ராஜாராமன்!

கவிதை(கள்) said...

பணவீக்கம் எங்கு 13 சதவிகிதம் உள்ளது? இப்பொழுது தான் 0 விலிருந்து சற்று மேலே போய் உள்ளது.

PowerPix365 said...

நீங்கள் மேற்கூறிய 6 கட்டளைகளில் மிக முக்கியமானது,

1-வது கட்டளை. அதனை செய்தாலே 75% வெற்றி கிடைத்தாற் போல.

மீதமுள்ள 5 கட்டளைகளை செய்தால் மீதமுள்ள 25% வெற்றியையும் பெற்று விடலாம்.

தன்னம்பிக்கை மிக முக்கியம் ஆசிரியரே! (23-rd pulikesi dialog remix வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).

sasi said...

உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்கு மன்னித்து விடுங்கள் குரு...

thanks kmr krishanan to explain.. but, சாமி அருள் கொடுத்தாலும் பூஜாரி வழி விடாத கதையா போச்....

SP.VR. SUBBIAH said...

/////கவிதை(கள்) said...
பணவீக்கம் எங்கு 13 சதவிகிதம் உள்ளது? இப்பொழுது தான் 0 விலிருந்து சற்று மேலே போய் உள்ளது.///////

அரசு ஊழியர்களைக் கேட்டுப்பாருங்கள். சரியான விவரம் கிடைக்கும்!

SP.VR. SUBBIAH said...

PowerPix365 said...
நீங்கள் மேற்கூறிய 6 கட்டளைகளில் மிக முக்கியமானது,
1-வது கட்டளை. அதனை செய்தாலே 75% வெற்றி கிடைத்தாற் போல.
மீதமுள்ள 5 கட்டளைகளை செய்தால் மீதமுள்ள 25% வெற்றியையும் பெற்று விடலாம்.
தன்னம்பிக்கை மிக முக்கியம் ஆசிரியரே! (23-rd pulikesi dialog remix வரலாறு மிக முக்கியம் .////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///sasi said...
உங்களுக்கு சிரமம் கொடுத்த்திற்கு மன்னித்து விடுங்கள் குரு...
thanks kmr krishanan to explain.. but, சாமி அருள் கொடுத்தாலும் பூஜாரி வழி விடாத கதையா போச்சு/////

இல்லை பூசாரிதான் உங்களுக்குத் தீபம் காட்டி அனுப்பியிருக்கிறார். அதுவரை சந்தோஷப்படுங்கள்!

கவிதை(கள்) said...

நீங்கள் சொன்னது inflation. ஆனால் இப்போது consumer price index பார்க்க சொல்கிறீர்கள். ஜோதிடர் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்.

SP.VR. SUBBIAH said...

////கவிதை(கள்) said...
நீங்கள் சொன்னது inflation. ஆனால் இப்போது consumer price index பார்க்க சொல்கிறீர்கள். ஜோதிடர் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்./////

நான் ஜோதிடரா? யார் சொன்னது. முதலில் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் என்னைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள். ஒழுங்காகப் படியுங்கள். இல்லையென்றால் சனீஷ்வரனின் சாபத்திற்கு ஆளாவீர்கள்.

அதென்ன? கவிதை என்று போடாமல் - கவிதை(கள்)’கள்’ என்று சேர்த்திருக்கிறீர்கள்?
கள்’ளின் மீது அவ்வளவு விருப்பமா? ஒன்று கவிதை என்று போடுங்கள். அல்லது கள் என்று போடுங்கள்! இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள்!

கவிதை(கள்) said...

விராட் விஸ்வப்ரம்மத்தை வழிபடுகிறவன். ஆகவே சனி ஒன்றும் செய்ய மாட்டார்.

SP.VR. SUBBIAH said...

////கவிதை(கள்) said...
விராட் விஸ்வப்ரம்மத்தை வழிபடுகிறவன். ஆகவே சனி ஒன்றும் செய்ய மாட்டார்./////

மகிழ்ச்சி! நீங்கள் சொல்வது எனக்கு புதிய செய்தி. விராட் விஸ்வப்ரம்மத்தைப் பற்றி எழுதி அனுப்புங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்!