மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.9.09

நகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்?

ஒரே நிகழ்ச்சி. அது நடக்கின்ற ஊரில் நீங்கள் இருக்கின்ற
சூழ்நிலை. நடக்கும் காட்சியை வைத்து, நீங்கள் இருக்கும் ஊர்
எது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------------------------
எச்சரிக்கை: இது நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது.
உம்மன்னா’ மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.
------------------------------------------------------------
காட்சி ஒன்று!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார். அவரைத் தொடர்ந்து
இன்னொருவரும் வருகிறார். வந்தவர்கள் இருவரும் சண்டையில்
யார் பக்கம் நியாயம் உள்ளது என்று விவாதம் செய்ய ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது கொல்கத்தா!
----------------------------------------------------
காட்சி இரண்டு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர் இருவரையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது மும்பை!
-----------------------------------------------------
காட்சி மூன்று!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர் இருவரையும் சமாதனம் செய்ய முயல்கிறார்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் கோபம் அதிகமாகி,
ஒன்று சேர்ந்து சமாதானம் செய்ய முயன்றவரைத் தாக்க
ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது தில்லி!
-----------------------------------------------------
காட்சி நான்கு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர், ஓடிச்சென்று, தேநீர் கேன் மற்றும் பேப்பர்
கோப்பைகளுடன் திரும்பி வந்து, அங்கே சேரும் கூட்டத்திற்கு
டீ வியாபாரம் செய்யத்துவங்கினால்-
நீங்கள் இருப்பது அஹமதாபாத்!
------------------------------------------------------
காட்சி ஐந்து!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
ஐந்து நிமிடங்கள் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு,
இருவரும் தங்களது மொபைல் போனில், தங்கள்
நணபர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வந்தவுடன்
சண்டையை மீண்டும் துவக்குகிறார்களென்றால் -
அதாவது தற்சமயம் சண்டையிட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை
50ஐத் தாண்டிவிட்டது என்றால்-
நீங்கள் இருப்பது ஹரியானா!
-----------------------------------------------------
காட்சி ஆறு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர், தன் மடிக்கணியை உபயோகித்து, நெட்டில்,
அந்தச் சண்டைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா? என்று
தேடத்துவங்கினால்-
நீங்கள் இருப்பது பெங்களூரு!
------------------------------------------------------
காட்சி ஏழு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்
சண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்
துவங்கி விடுகிறது. அந்த இடத்திற்குக் கரை வேட்டி நபர்
ஒருவர் வருகிறார்.”டேய் கஸ்மாலங்களா, இதெல்லாம்
அண்ணனுக்குப் பிடிக்காது. நிறுத்துங்கடா சண்டையை”
என்று அதிரடியாகக் குரல் கொடுக்கிறார்.
சட்டென்று சண்டையும் முடிவிற்கு வந்து, நிற்கும்
அனைவரும் கலைந்து செல்லத் துவங்குகிறார்கள் என்றால்-
நீங்கள் இருப்பது சென்னை!
----------------------------------------------------------------
காட்சி எட்டு

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்
சண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்
துவங்கி விடுகிறது. வந்தவர்களில் ஒருவர் காவல்துறைக்குத்
தகவல் கொடுக்கிறார். காவல்துறையினர், அவ்விடத்திற்கு
வந்தவர்கள், கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்கிறார்கள்,
அவர்கள் மேல் கற்கள் வந்து விழுகின்றன. உடனே தடியடி
செய்து கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறார்கள்.
முடியவில்லை. கல்வீச்சு கலவரத்தில் முடிகிறது.
காவல்துறையினர் நிற்பவர்களில் சிலரைக் கைது செய்து
தங்களுடைய வாகனத்தில் ஏற்ற ஆரம்பிக்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கும் கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறன.
கலவரம் நகரம் முழுவதும் பரவி விடுகிறது.
அடுத்த நாள் ஹர்த்தால். போராட்டங்கள். அரசாங்கம்
விடுமுறையை அறிவிக்கிறது. இப்படியாக நிலைமை
மாறிவிட்டது என்றால் -
நீங்கள் இருப்பது திருவனந்தபுரம்!
----------------------------------------------------------------
இருப்பதில் எது மிகவும் சிறப்பாக உள்ளது?

விழாக்காலக் கொண்டாட்டப் பதிவுகளில், இது அடுத்த பதிவு!வாழ்க வளமுடன்!

52 comments:

hotcat said...

ஐயா,

உங்கள் நகைச்சுவை பதிவு மிகவும் அருமை. ஆனால் கோயம்புத்தூர் எப்படி?
:-)))

-சங்கர்

T.V.Radhakrishnan said...

:-)))

DHANA said...

காட்சி ஆறு!இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.வந்தவர், தன் மடிக்கணியை உபயோகித்து, நெட்டில்,அந்தச் சண்டைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா? என்றுதேடத்துவங்கினால்-நீங்கள் இருப்பது பெங்களூரு!///

இந்த காட்சி தான் ஐயா நகைச்சுவை.

ஐயா,
விழாக்கால பதிவில் சிறுகதை மற்றும் அனுபவம் போன்றவை பதிவிடலாமே.

Saravana said...

Present Sir!!!

பிரபாகர் said...

ரெண்டு பேரு சண்டை போடறாங்க, உடனே போலீஸ் வருது, அது சிங்கப்பூரு.. ஹி ஹி...

பிரபாகர்.

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்

சிரிப்பும் சித்தரிப்பும் அருமை
என்னை ஈர்த்தது கேந்திரத்தில்
(1,4 and 7) இருப்பவைகள்.

நன்றி.

ஆலாசியம் கோ.

SP.VR. SUBBIAH said...

//hotcat said...
ஐயா,
உங்கள் நகைச்சுவை பதிவு மிகவும் அருமை. ஆனால் கோயம்புத்தூர் எப்படி?
:-)))
-சங்கர்////

எங்கள் ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள். தெருவில் நின்று சண்டை போட மாட்டார்கள்.
தவறி இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும், ‘கிறுக்கனுங்க’ என்று முணுமுணுத்தவாறு தாண்டிச் சென்று விடுவார்கள். நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனநிலைமையும், நேரமும் இல்லாதவர்கள்!

SP.VR. SUBBIAH said...

////T.V.Radhakrishnan said...
:-)))/////

நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

///DHANA said...
காட்சி ஆறு!இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.வந்தவர், தன் மடிக்கணியை உபயோகித்து, நெட்டில்,அந்தச் சண்டைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா? என்றுதேடத்துவங்கினால்-நீங்கள் இருப்பது பெங்களூரு!///
இந்த காட்சி தான் ஐயா நகைச்சுவை.
ஐயா,
விழாக்கால பதிவில் சிறுகதை மற்றும் அனுபவம் போன்றவை பதிவிடலாமே.////

நன்றி தனா! நீங்கள் கேட்டுள்ளவைகள் பின்னால் வரும்!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
Present Sir!!!////

நன்றி சரவணன்!

chaks said...

:-))

SP.VR. SUBBIAH said...

/////பிரபாகர் said...
ரெண்டு பேரு சண்டை போடறாங்க, உடனே போலீஸ் வருது, அது சிங்கப்பூரு.. ஹி ஹி...
பிரபாகர்.//////

நன்றாக உள்ளது நண்பரே! நன்றி!

SP.VR. SUBBIAH said...

///Blogger Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்
சிரிப்பும் சித்தரிப்பும் அருமை
என்னை ஈர்த்தது கேந்திரத்தில்
(1,4 and 7) இருப்பவைகள்.
நன்றி.
ஆலாசியம் கோ.///

ஜோதிடத்தை மறந்து ஒரு வாரமாவது இருக்கலாம் என்றால் விடமாட்டீர்கள் போல இருக்கே சாமி!

SP.VR. SUBBIAH said...

////Blogger chaks said...
:-))////

நன்றி சக்கரவர்த்தி!

singaiSuri said...

உள்ளேன் ஐயா :-)

PowerPix365 said...

சிந்திக்கவும், சிரிக்கவும்:

3,4,6,7 காட்சிகள் அட்டகாசமான நகைச்சுவை.

Saravana said...

Sir,

I have a doubt in our lessons 111-120. Interesting reading all our lessons again and again.

Shall I ask the doubt on the 7th bouse?

Not specific to any horoscope. This Doubt is general.

Thanks
Saravana

வேலன். said...

ஒவ்வொரு ஊரையும் பற்றியவிளக்கம் அருமை அய்யா....ரசித்துபடித்தேன்..சிரித்தேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Priya said...

Nice...

New Student
Priya

SP.VR. SUBBIAH said...

////PowerPix365 said...
சிந்திக்கவும், சிரிக்கவும்:
3,4,6,7 காட்சிகள் அட்டகாசமான நகைச்சுவை./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///Blogger singaiSuri said...
உள்ளேன் ஐயா :-)///

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Saravana said...
Sir,
I have a doubt in our lessons 111-120. Interesting reading all our lessons again and again. Shall I ask the doubt on the 7th bouse?
Not specific to any horoscope. This Doubt is general.
Thanks
Saravana////

நீங்கள் உங்கள் திருமணத்திற்காகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நல்ல பெண்ணாகக் கிடைக்கவும். உங்கள் திருமணம் விரைவில் முடியவும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் திருமணம் முடியும்வரை வருகிற வரன்களின் ஜாதகத்தை வைத்து, அதுவும் 7ஆம் வீட்டை வைத்து தினமும் 10 கேள்விகள் கேட்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பதில் சொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை. என்னை விட்டு விடுங்கள். நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! ஆர்வக்கோளாறில் கடந்த நான்கு வருடங்களாகப் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆயிரம் பேர்களுக்கு மேல் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போல ஒருவரும் எனக்கு உபத்திரவம் தருவதில்லை.
நல்ல ஜோதிடராகப் பாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது!

முதலில் பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். அது புரிவதும் புரியாததும் நீங்கள் முழு மனதுடன் படிப்பதைப் பொறுத்து அமையும். சந்தேகம் வராது. அவ்வளவு எளிமையாக எழுதியுள்ளேன்.

வந்தால், உங்கள் மண்டையில் ஜோதிடம் ஏறாது என்று பொருள். ஜோதிடப் பாடங்களைப் படிப்பதை, கற்றுக்கொள்வதை, நிறுத்திவிட்டு, வேறு ஏதாவது உருப்படியான வேலையாகப் பாருங்கள்.

என்னைத் தினமும் தொந்தரவு செய்யாதீர்கள்!
Do not disturb me everyday!

இதை எனது வேண்டுகோளாக வைத்துக்கொள்ளுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

SP.VR. SUBBIAH said...

////வேலன். said...
ஒவ்வொரு ஊரையும் பற்றியவிளக்கம் அருமை அய்யா....ரசித்துபடித்தேன்..சிரித்தேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.///

நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

////Priya said...
Nice...
New Student
Priya/////

நன்றி சகோதரி!

iyer said...

வான் நிலவே . .

காசு கொடுக்காமல் . . .
டிக்கெட் வாங்காமல் . . .

இந்தியாவையே ஒரு சுற்று சுற்றிக் காண்பித்து வைத்தமைக்கு நன்றி . . .

நம்ம "கோட்டை"ய விட்டுட்டீங்களே அய்யா . ..

அது சரி சண்டை எது பற்றி . . .?

Uma said...

nanraga ullathu, jothida class eppothilirinthu re-start?

Saravana said...

Dear Sir,

Yes sir, You are right. I need to understand the importance for 7th & 8th house particularly.

sorry for the disturbance I gave you so far and no such intention to disturb you. with such a curiosity I asked so many doubts and all of my doubts were clarified.

Thanks
Saravana

karmegaraja said...

///எங்கள் ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள். தெருவில் நின்று சண்டை போட மாட்டார்கள்.
தவறி இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும், ‘கிறுக்கனுங்க’ என்று முணுமுணுத்தவாறு தாண்டிச் சென்று விடுவார்கள். நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனநிலைமையும், நேரமும் இல்லாதவர்கள்!///

100 சதவீத உண்மை ஐயா! தமிழ்கத்தின் முதுகெலும்பு என்று ஆனபிறகு சண்டைகளை வேடிக்கை பார்க்க எங்கே நேரம் இருக்கும்? இவனுங்க எப்பவுமே இப்படிதான் என்று சொல்லிக்கொண்டு நகர வேண்டியதுதான்.

:-)

SP.VR. SUBBIAH said...

/////iyer said...
வான் நிலவே . .
காசு கொடுக்காமல் . . .
டிக்கெட் வாங்காமல் . . .
இந்தியாவையே ஒரு சுற்று சுற்றிக் காண்பித்து வைத்தமைக்கு நன்றி . . .
நம்ம "கோட்டை"ய விட்டுட்டீங்களே அய்யா . ..
அது சரி சண்டை எது பற்றி . . .?////

ரெம்ப அவசியமா ஸ்வாமி?

SP.VR. SUBBIAH said...

////Uma said...
nanraga ullathu, jothida class eppothilirinthu re-start?//////

சனிக்கிழைமையன்று. சனிப்பெயர்ச்சிபற்றிய பதிவுடன்!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
Dear Sir,
Yes sir, You are right. I need to understand the importance for 7th & 8th house particularly.
sorry for the disturbance I gave you so far and no such intention to disturb you. with such a curiosity I asked so many doubts and all of my doubts were clarified.
Thanks
Saravana////

Try to keep it up!
>>>>>>>>>>>>>>>>>

SP.VR. SUBBIAH said...

/////karmegaraja said...
///எங்கள் ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள். தெருவில் நின்று சண்டை போட மாட்டார்கள். தவறி இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும், ‘கிறுக்கனுங்க’ என்று முணுமுணுத்தவாறு தாண்டிச் சென்று விடுவார்கள். நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனநிலைமையும், நேரமும் இல்லாதவர்கள்!//////
///// 100 சதவீத உண்மை ஐயா! தமிழகத்தின் முதுகெலும்பு என்று ஆனபிறகு சண்டைகளை வேடிக்கை பார்க்க எங்கே நேரம் இருக்கும்? இவனுங்க எப்பவுமே இப்படிதான் என்று சொல்லிக்கொண்டு நகர வேண்டியதுதான். :-)//////

நன்றி மிஸ்டர் கார்மேகம்!

sasi said...

காட்சி 6 ரொம்ப நகைச்சுவையாக இருnதது...

Prabhu said...

பெங்களூர் காட்சி சூப்பர் !

snkm said...

சென்னையே நன்றாக இருக்கிறது, என் கருத்து தவறாகவும் இருக்கலாம்!

vattukozhi said...

ஐயா, உங்கள் நகைச்சுவைப் பதிவுகளும் நன்ரக இருக்கிரது. சினிமாவில் காமெடிக்காட்சிகள்வைத்து இருக்கத்தைத் தளர்த்துவது பொல் ஜொதிடப்பாடங்கள் நடுவில் இவை கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகின்ரன.

vattukozhi said...

ஐ? நானும், பின்னூட்டம் பொடக் கட்ருக்கொன்டென்

Arulkumar Rajaraman said...

Dear Sir

Enakku Bangaloreyum Chennaiyum Kalandhu irundhal eppadi irukkum endru oru karpanai sir...


Thank you

Loving Student
Arulkumar Rajaraman

murugan said...

வணக்கம் ஐயா,

இங்கிலீஷ் சரவணனை என்னிடம் அனுப்புங்கள் இரண்டாவது இடமான சிம்மத்தில் ராகு, சந்திரன்
என் வார்த்தை நன்றாக பலிக்கும்.

நன்றி ஐயா.

SP.VR. SUBBIAH said...

///sasi said...
காட்சி 6 ரொம்ப நகைச்சுவையாக இருnதது...////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Prabhu said...
பெங்களூர் காட்சி சூப்பர் !////

நன்றி பிரபு!

SP.VR. SUBBIAH said...

////snkm said...
சென்னையே நன்றாக இருக்கிறது, என் கருத்து தவறாகவும் இருக்கலாம்!////

தவறில்லை. சென்னையைபற்றிய கலக்கல் நன்றாகவே அமைந்துள்ளது!

SP.VR. SUBBIAH said...

/////vattukozhi said...
ஐயா, உங்கள் நகைச்சுவைப் பதிவுகளும் நன்றாக இருக்கிறது. சினிமாவில் காமெடிக்காட்சிகள்வைத்து இருக்கத்தைத் தளர்த்துவது போல் ஜோதிடப்பாடங்கள் நடுவில் இவை கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகின்றன.///

உண்மை. எனக்கும் அவைகள் தளர்வைப் போக்கும். அதற்காகத்தான் இந்தத் தொடர் பதிவுகள்

SP.VR. SUBBIAH said...

////vattukozhi said...
ஐ? நானும், பின்னூட்டம் போடக் கற்றுக்கொண்டேன்////

ஆமாம், இப்படியே போடத்துவங்கினால் கணனித்தமிழ் கைவசப்படும்

SP.VR. SUBBIAH said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Enakku Bangaloreyum Chennaiyum Kalandhu irundhal eppadi irukkum endru oru karpanai sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

காற்றுக்கேது வேலி?
கற்பனைக்கு ஏது மூடி?

prabakar.l.n said...

ayya thaankal mattum ukkanthu yosipinkaloo nagasuvai nandru. athilumdhilliyai patriya comment miga nandru

SP.VR. SUBBIAH said...

////murugan said...
வணக்கம் ஐயா,
இங்கிலீஷ் சரவணனை என்னிடம் அனுப்புங்கள் இரண்டாவது இடமான சிம்மத்தில் ராகு, சந்திரன். என் வார்த்தை நன்றாக பலிக்கும்.
நன்றி ஐயா./////

இதைப் பார்த்தால் அவராகவே வரும் வாய்ப்பு உள்ளது. இருவரும் வாழ்க வளமுடன்!

SP.VR. SUBBIAH said...

////prabakar.l.n said...
ayya thaankal mattum ukkanthu yosipinkaloo nagasuvai nandru. athilumdhilliyai patriya comment miga nandru////

நன்றி பிரபாகர்!

அஹோரி said...

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக ஒருவர் வருகிறார் "மீத பர்ஸ்ட் " ன்னு ஒன்னும் சொல்லாம போயிடறார் ...

நான்காவதாக ஒருவர் வருகிறார் வந்தவர் ,எவருடைய கழுத்திலாவது பூணூல் இருக்கிறதா என்று எட்டி பார்க்கிறார் ...

ஐந்தாவதாக வருகிறார் கட்சி கரைவேட்டி இருக்குறவருக்கு சப்போர்ட் பண்ணலாம் ன்னு எட்டி பார்க்கிறார் ...

ஆறாவதா ஒருத்தர் வரார் நம்ம இமேஜ் கெட்டு போயிடும்னு வந்த சுவடு தெரியாம போயிடுறார் ...

இது மாதிரி நடந்தா நீங்க இருக்குறது ... பதிவுலகத்துல

SP.VR. SUBBIAH said...

///அஹோரி said...
இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக ஒருவர் வருகிறார் "மீத பர்ஸ்ட் " ன்னு ஒன்னும் சொல்லாம போயிடறார் ...
நான்காவதாக ஒருவர் வருகிறார் வந்தவர் ,எவருடைய கழுத்திலாவது பூணூல் இருக்கிறதா என்று எட்டி பார்க்கிறார் ...
ஐந்தாவதாக வருகிறார் கட்சி கரைவேட்டி இருக்குறவருக்கு சப்போர்ட் பண்ணலாம் ன்னு எட்டி பார்க்கிறார் ..
ஆறாவதா ஒருத்தர் வரார் நம்ம இமேஜ் கெட்டு போயிடும்னு வந்த சுவடு தெரியாம போயிடுறார் ...
இது மாதிரி நடந்தா நீங்க இருக்குறது ... பதிவுலகத்துல/////

நீங்கள் சொவது சரிதான். ஆனால் நினத்தால் வருத்தமாக இருக்கிறது!

kmr.krishnan said...

இரண்டு பேர் சண்டை போடும் போது மூன்றாவது நபர் வருகிறர். சண்டையை நிறுத்தி விட்டு மூன்றாம் நபரிடம்"நான் கொடுத்தா எப்படி இருக்கும்னு இவனிடம் சொல்லு" என்கிறார் ஒரு நபர்."என்னைப் பற்றி சொல்லு இந்த முட்டாளிடம்" என்கிறார் இன்னொருவர். இது எங்கள் சோழ‌நாடு==தஞ்சைத் தரணி!

(பி.கு.: புரியாதவர்களுக்காக. மூன்றாம் நபர் ஏற்கனவே இவர்களிடம் உதை
வாங்கிய‌வரா?)

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
இரண்டு பேர் சண்டை போடும் போது மூன்றாவது நபர் வருகிறர். சண்டையை நிறுத்தி விட்டு மூன்றாம் நபரிடம்"நான் கொடுத்தா எப்படி இருக்கும்னு இவனிடம் சொல்லு" என்கிறார் ஒரு நபர்."என்னைப் பற்றி சொல்லு இந்த முட்டாளிடம்" என்கிறார் இன்னொருவர். இது எங்கள் சோழ‌நாடு==தஞ்சைத் தரணி!
(பி.கு.: புரியாதவர்களுக்காக. மூன்றாம் நபர் ஏற்கனவே இவர்களிடம் உதை
வாங்கிய‌வரா?)/////

நன்றாக உள்ளது. நீங்கள் உள்ளூர்க்காரர். சொல்வதைக் கேட்டுக்கொள்கிறோம் சார்!
நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்!