மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.9.09

Loneliness yoga: கேமதுருமா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Loneliness yoga: கேமதுருமா யோகம்!

"இளமைவரும் முதுமைவரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும்வரும் பயணம் ஒன்றுதான்
விழியிரண்டு இருந்தபோதும் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"
-கவியரசர் கண்ணதாசன்
--------------------------------------------------------
வாழ்க்கையில் இரண்டு நிலைப்பாடுகள் எப்போதும் உண்டு.
இரவுபகல் போல துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை

அதுபோல சுபயோகமும், அவயோகமும் கலந்ததுதான் ஜாதகம்
ஆகவே அவை இரண்டையுமே சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்
பக்குவம் நமக்கு வேண்டும்!
-----------------------------------------------------------------
Loneliness yoga: கேமதுருமா யோகம்!

இது ஒரு அவயோகம்!

ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு
எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய
கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில்
எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்!

If moon is alone, doesn't have any planet before and after
and also in front then it is Kemadruma.
For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty.
Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga
if they are in the above mentioned houses
----------------------------------------------------------------------
பலன் என்ன?


சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப்
பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும்
இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம்
பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.

Kemdruma gives trouble to mind.
Since moon is mind and is alone it can be destructive.
Many of the serial killers from the history have this yoga.
It also makes the person very poor, mentally instable,
gives inner fears, phobias, takes away happiness.
It makes one do crimes

இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில்
தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும்
நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட
நேரிடும்

உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு.

இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து
மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த
யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும்

If there is a planet in house opposite (7th house from moon), it not only
cancels Kemadruma, but gives kalpadruma yoga
(similar to neecha bhanga raja yoga.)

குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த
அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்!

ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால்
ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும்

இந்த அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை
அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை
உள்ளவர்கள் சொல்லலாம்.

மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்!
--------------------------------------------------------------
திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra)

அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்!

ஓம் திரிபுரசுந்தரி போற்றி!
ஓம் திரிபுரசுந்தரி போற்றி!

இதே மந்திரம் வடமொழியில்:
க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"
க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"

Kleem Tripurasundarimoorthaye Namah
Kleem Tripurasundarimoorthaye Namah
+++++++++++++++++++++++++++++++++++++++++++

பாடத்தை சரியாகப் படித்து உள்வாங்கிக்கொள்ளாமல், யாரும், சார்,
எனக்கு இந்த யோகம் இல்லையே என்று வருத்தப் படவேண்டாம்!

அடுத்த பாடம் நாளை

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

125 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. உள்ளேன் அய்யா. இந்த யோகம் (அவயோகம்) சத்யம் ராஜுவுக்கு இருப்பதால செய்தி.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. /**. கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால்
  ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் **/

  அப்படி என்றால் சந்திர கிரகம் கேந்திர வீட்டில் கேமதுருமா அமைப்போடு இருந்தால் நிலைமை மோசம் என்று அர்த்தமா ? மிக்க நன்றி

  ReplyDelete
 5. ////மதி said...
  உள்ளேன் ஐயா..////

  வருகைப் பதிவிற்கு நன்றி மதி!

  ReplyDelete
 6. ////Sivasubramanian said...
  Present sir....////

  வருகைப் பதிவிற்கு நன்றி சிவா!

  ReplyDelete
 7. ////அமர பாரதி said...
  உள்ளேன் அய்யா. இந்த யோகம் (அவயோகம்) சத்யம் ராஜுவுக்கு இருப்பதால செய்தி.////

  நானும் கேள்விப்பட்டேன். மேலும் ப்ளாக் ஒன்றில் எழுதியிருந்தார்கள் படித்தேன்.

  ReplyDelete
 8. /////Shyam Prasad said...
  /**. கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால்
  ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் **/
  அப்படி என்றால் சந்திர கிரகம் கேந்திர வீட்டில் கேமதுருமா அமைப்போடு இருந்தால் நிலைமை மோசம் என்று அர்த்தமா ? மிக்க நன்றி///

  ஆமாம் நண்பரே!

  ReplyDelete
 9. உள்ளேன் அய்யா.
  நல்லது, எனக்கு இந்த யோகம் இல்லை. சந்திரனுக்கு அடுத்தது குரு கடகத்தில்!!!
  இன்று நான் கடைசி பெஞ்ச்.


  அன்பு மாணவன்
  சரவணகுமார்

  ReplyDelete
 10. ///Blogger Alasiam G said...
  Ullean Ayya.///

  வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. ////Blogger Saravana said...
  உள்ளேன் அய்யா.
  நல்லது, எனக்கு இந்த யோகம் இல்லை. சந்திரனுக்கு அடுத்தது குரு கடகத்தில்!!!
  இன்று நான் கடைசி பெஞ்ச்.
  அன்பு மாணவன்
  சரவணகுமார்////

  நன்றி சரவணன்! கடைசி பெஞ்சில் இருப்பவர்களின் மேல் எனக்கு எப்பவும் எனக்குத் தனிக் கவனம் உண்டு!

  ReplyDelete
 12. அய்யா இன்று ஒரு கேள்வி மட்டும், படத்திற்கு சம்பந்தம் இல்லாதது!!!
  கேட்கலாமா? ஏன் என்றால் இன்றைய படம் சுலபமாக உள்ளது அல்லவா.
  நீங்கள் சரி என்றால், என் கேள்வி அடுத்த வினாடியில்...
  சரி என்று சொல்லுங்கள். என்னால் ஒரு மதம் பொருத்து இருக்க முடியாது தலைவரே!!!

  நன்றி
  சரவணகுமார்

  ReplyDelete
 13. என் மனைவிக்கு 2ல் சந்திரன். இரண்டு பக்கமும் கிரகங்கள் இல்லை. ஆனால் குரு 7ளிலும், 8ல் புதன், சுக்கிரன் இருக்கிறர்கள். இந்த யோகம் cancel என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த cancel பலன் 30 வயதிற்கு மேல்தான் வேலை செய்யும் என்று முன்பு ஒரு புத்தகத்தில் படித்தேன். எது எப்படியோ cancel ஆனால் சரிதான்.

  ReplyDelete
 14. ஐயா,
  ”கேமதுருமா” என்றால் அற்தம் என்ன?

  ReplyDelete
 15. நமது மாணவக்கண்மணிகளை நினைத்தால் வியப்பாக உள்ளது. காலையில் 5.16 க்கே வகுப்புக்கு வந்துவிடுகின்றார்கள். அதற்கு முன் ஆசிரியர் வந்து விடுகின்றார்.

  சந்திரன் ராகுவுடன் கூட்டணி.மேலும் குரு லக்கினத்தில்....நான் எஸ்கேப்.
  படம் அருமையாக உள்ளது அய்யா..அதற்கேற்ற பாடலும் அருமை...

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 16. ////Saravana said...
  அய்யா இன்று ஒரு கேள்வி மட்டும், படத்திற்கு சம்பந்தம் இல்லாதது!!!
  கேட்கலாமா? ஏன் என்றால் இன்றைய படம் சுலபமாக உள்ளது அல்லவா.
  நீங்கள் சரி என்றால், என் கேள்வி அடுத்த வினாடியில்...
  சரி என்று சொல்லுங்கள். என்னால் ஒரு மதம் பொருத்து இருக்க முடியாது தலைவரே!!!
  நன்றி
  சரவணகுமார்////

  பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளுக்குப் பதிவில் இடமில்லை தொண்டரே!
  சொந்தக் கேள்விகளையெல்லாம் மின்னஞ்சலில் கேளுங்கள்
  email address: classroom2007@gmail.com

  சொந்தக் கேள்விகளிலும், எதிர்காலத்தைச் சொல்லுங்கள் என்னும் கசமுசா கேள்விகளுக்கெல்லாம்
  பதில் கிடைக்காது. எனக்கு நேரமில்லை. வகுப்பறைக்குத் தினமும் 1,500 முதல் 2,000 பேர்கள் வரை வந்து செல்கிறார்கள். அத்தனை பேர்களும் எதிர்காலம் எனும் பொதுக் கேள்வியை வைத்தால் நான் என்ன செய்யமுடியும்? எதிர்காலம் என்பது என்ன ஒரு வரியில் பதில் சொல்லக்கூடிய விஷயமா? ஆகவே அவற்றிற்கு அனுமதியில்லை!

  பிரச்சினையில் சிக்கித் தவ்ப்பவர்கள், தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, விடிவு எப்போது என்று கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கிடைக்கும்.

  ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். ஒன்றிற்குள் ஒன்று என்று ஆறு அல்லது எட்டுக் கேள்விகளை
  உள்ளடக்கிய ‘குழாய்க்’ கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை.

  So, be specific and ask only one specific question, giving full birth details and the nature of the problem!

  அர்த்தம் ஆனதா தொண்டரே?

  ReplyDelete
 17. நன்றி அய்யா!

  கேட்டு இருக்கிறேன் ஒரே ஒரு கேள்வியை மின்னஞ்சலில்!

  தக்க பதில் சொல்லுங்கள்!!!

  ReplyDelete
 18. ananth said...
  என் மனைவிக்கு 2ல் சந்திரன். இரண்டு பக்கமும் கிரகங்கள் இல்லை. ஆனால் குரு 7ளிலும், 8ல் புதன், சுக்கிரன் இருக்கிறர்கள். இந்த யோகம் cancel என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த cancel பலன் 30 வயதிற்கு மேல்தான் வேலை செய்யும் என்று முன்பு ஒரு புத்தகத்தில் படித்தேன். எது எப்படியோ cancel ஆனால் சரிதான்.////

  நீங்கள் சொல்வது சரிதான் ஆனந்த்! முதல் சுற்றில் இருந்த கஷ்டங்கள், இரண்டாவது சுற்றில் நீங்கி விடும். ஒரு சுற்று என்பது 30 ஆண்டுகள்

  ReplyDelete
 19. ////Blogger singaiSuri said...
  ஐயா,
  ”கேமதுருமா” என்றால் அர்த்தம் என்ன?////

  அது வடமொழிச் சொல். அர்த்தம் தெரியவில்லை. அதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் சூரி!

  ReplyDelete
 20. ///Blogger பித்தன் said...
  oh good i am lucky enakku illai,////

  சித்தர்களுக்கும், பித்தர்களுக்கும் கஷ்டங்கள் வராது. வந்தாலும் அவர்களைக் கண்டு ஓடிவிடும்!:-))))

  ReplyDelete
 21. ////Blogger DHANA said...
  உள்ளேன் ஐயா/////

  வருகைப்பதிவிற்கு நன்றி தனா!

  ReplyDelete
 22. ////Blogger mano said...
  உள்ளேன் ஐயா..////

  நன்றி மனோ!

  ReplyDelete
 23. /////Blogger வேலன். said...
  நமது மாணவக்கண்மணிகளை நினைத்தால் வியப்பாக உள்ளது. காலையில் 5.16 க்கே வகுப்புக்கு வந்துவிடுகின்றார்கள். அதற்கு முன் ஆசிரியர் வந்து விடுகின்றார்.
  சந்திரன் ராகுவுடன் கூட்டணி.மேலும் குரு லக்கினத்தில்....நான் எஸ்கேப்.
  படம் அருமையாக உள்ளது அய்யா..அதற்கேற்ற பாடலும் அருமை...
  வாழ்க வளமுடன்,
  வேலன்./////

  இது இணைய வகுப்பு. வெளி நாட்டில் இருக்கும் கண்மணிகள், உதாரணத்திற்கு யுஎஸ், மலேசியா & சிங்கை
  ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் காலை 5:00 மணிக்கு வருவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவர்கள் ஆர்வத்திற்கு மட்டும் வியப்படையலாம்!

  ReplyDelete
 24. ///Saravana said...
  நன்றி அய்யா!
  கேட்டு இருக்கிறேன் ஒரே ஒரு கேள்வியை மின்னஞ்சலில்!
  தக்க பதில் சொல்லுங்கள்!!!////

  தக்கபதில் சொல்லிவிட்டேன் சரவணன்!

  ReplyDelete
 25. ////chaks said...
  Present Sir!/////

  வருகைப் பதிவிற்கு நன்றி சக்ஸ்!

  ReplyDelete
 26. ///Saravana said...
  நன்றி அய்யா!
  கேட்டு இருக்கிறேன் ஒரே ஒரு கேள்வியை மின்னஞ்சலில்!
  தக்க பதில் சொல்லுங்கள்!!!////

  தக்கபதில் சொல்லிவிட்டேன் சரவணன்!
  +++++++++++++++++++++++++++++++++++
  அய்யா நானும் தங்களுக்கு தெளிவு செய்துள்ளேன் மின்னஞ்சலில்!!!

  துரித பதிலுக்கு மிக்க மிக்க நன்றி.

  கீழ்படிந்த மாணவன்
  சரவணகுமார்

  ReplyDelete
 27. வணக்கம் ஐயா,

  என் நண்பனின் ஜாதகம்:
  தனுசு லக்னம், லக்னத்தில் சந்திரன், 3-ல் குருவும் கேது,5-ல் சனி, 9-ல் செவ்வாயும்,ராகும், 11-ல் சூரியன்,சுக்கிரன், புதன்.

  இது கேமதுருமா அமைப்பா, வாழ்க்கையை எங்கனம் பாதிக்கும்.

  தயை கூர்ந்து விளக்கம் கூறுங்கள்.

  அன்புடன்,
  செந்தில் முருகன்.

  ReplyDelete
 28. செம shot சார். படம் அப்டியே உணர்வு பூர்வமா பொருந்தி வந்திருக்கு.
  செம மூட்-அவுட் லே ஒரு பார்ட்டி ஏதோ விவகாரமான போதை போட்டுட்டு முடங்கிப்போய் இருட்டட்டடிச்சு (கேமதுருமா யோகம் perfectடா வேலையக் காமிச்சிடுச்சுபோலே) உட்கார்ந்துட்டு.. really great selection சார்.

  ReplyDelete
 29. Present sir! Really I am surprised at the matching photos for the titles. Superb sir! ஒரு கேள்வி நான் கேகொனும், this yoga is applied to the navamsa also? And what if சந்திரனும் அதோடு சேந்து மற்ற கிரங்கள் ஓரை வீட்டில் இருந்தால் இந்த யோகா கான்செல் ஆகி விடுமா சார் ?

  ReplyDelete
 30. //குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால் இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்.


  ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும்.//


  ஆர்வத்துடன் வகுப்பிற்கு வந்தால் இப்படி அதிர்ச்சி அளித்துவிட்டீர்களே அய்யா!எனக்கு 7ம் வீட்டில் சந்திரன்,முன்,பின், எந்த ஆதரவும் இல்லை.லக்கினமும் காலி.இன்னொரு கேந்திர வீடான 10 வீட்டில் குரு வக்கிரத்துடன் இருப்பதால் எந்த விதிவிலக்கும் இல்லை என நினைக்கிறேன்.இது வயதான காலத்தில்தான் என்றீர்கள்.ஆனால் முப்பது வயதிற்குள்ளாகவே மனைவி,குழந்தை,வேலை எல்லாவற்றையும் காலி செய்து புலம்ப வைத்துவிட்டது.இனியாவது ஒர் நல்ல வாழ்க்கை காத்திருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். இனி வயதான காலத்திலுமா? அதிர்ச்சிதான்.‌பரவாயில்லை அதான் பரிகார மந்திரமும் அளித்து உள்ளீர்களே.நன்றி.

  ReplyDelete
 31. உள்ளேன் அய்யா!!!

  இதுவரைக்கும் நீங்க சொன்ன யோகம் ஒன்னும் இல்லே... நேத்து லக்ஷ்மி யோகம் இருக்கு அப்படின்னு பார்த்தா, 5-இல (விருச்சிகம்) சந்திரன் நீசம்-னு சொல்லி ஒரு பெரிய பிட்ட போட்டிங்க. சரி... இன்னிக்கு காலைல முதல் வேலையா போயி பாடத்த படிச்சுட்டு இந்த யோகம் நமக்கு இருக்கான்னு பார்த்திடலாம்னு வகுப்புக்கு வந்தா..... நல்ல வேலை இந்த யோகம் இல்ல.. தப்பிச்சுட்டன்... அப்படின்னு சொல்லி பெரு மூச்சு உட வச்சிட்டிங்க....

  இந்த வகுப்பறை twist & turn நிறைஞ்ச thriller movie மாதிரி போகுது. Really Superb Sir...

  ReplyDelete
 32. அய்யா . .
  நல்லாத் தானே இருக்கோம். . .
  ஆனா ஏன்
  எனக்கு இந்த யோகம் இருக்கான்னு
  கேட்டு கிட்டே . . .இருக்காங்க . . அல்லது பாத்துக்கிட்டு இருக்காங்க . .

  வீடு நிறைய சாப்பாடு இருந்தும் ஃபோஃபேவை பாத்ததும் தட்டு எடுத்துக்கிட்டு ஓடற மாதிரி . . .

  கேமதுருமா 7 ம் வீட்டிடல் உள்ள கிரகத்தால் இல்லாமற் போகும் என்ற செய்தி சிறப்பாக உள்ளது.
  ஆனால் அந்த நிலையில் கூட அவர்கள் தனிமையிலே இனிமை காண விரும்புகிறார்களே . . .

  ReplyDelete
 33. அய்யா . .
  சனிப்பெயர்ச்சி பலன்கள்ன்னு ஏதாவது நம்ம பள்ளியிலே சிறப்பு வகுப்பு உண்டா. . .?
  ஒரு online conference வைச்சுக்குவோமா . .

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. Vanakkam Aiyya,

  Enakku kadaga lagnam. Lagnadhipathi Chandran in 2nd house (Simmam), Saneeswaran - 4th House, Guru-5th house, Kethu-6th House, Sun,Mercury, Mars-9th house, Sukran-10th house, Rahu-12th house.

  It looks like I have Kemadruma yogam. Is there any exception due to Guru in 4th house?

  Kindly enlighten me.

  Regards,
  Srinath G

  ReplyDelete
 36. i am able to learn lot of things from ur classes, thanks. You r really doing a good service.

  ReplyDelete
 37. சந்திரனுக்கு இருபுறமும் கிரகங்கள் இல்லை. ஆனால் சந்திரனுக்கு அடுத்து லக்னம். அதாவது 12 ம வீட்டில் சந்திரன் இருந்தால் இந்த யோகம் அடிபடுமா?

  ReplyDelete
 38. உள்ளேன் ஐயா..!தாமதமான வருகைப் பதிவு. பாடம் அருமை..! உங்கள் ஜோதிட புத்தகங்கள் எனக்கு ஒரு காப்பி கேட்டு ஏற்கனவே மின்னஞ்சல் செய்துள்ளேன். டிசம்பர் மாதம் எதிர்பார்க்கலாமா அய்யா?

  ReplyDelete
 39. Sir,
  Thank God , I do not have the kemadhruma yogam in my horoscope.

  Regards,
  Prem Anand

  ReplyDelete
 40. ////Saravana said...
  ///Saravana said...
  நன்றி அய்யா!
  கேட்டு இருக்கிறேன் ஒரே ஒரு கேள்வியை மின்னஞ்சலில்!
  தக்க பதில் சொல்லுங்கள்!!!////
  தக்கபதில் சொல்லிவிட்டேன் சரவணன்!
  +++++++++++++++++++++++++++++++++++
  அய்யா நானும் தங்களுக்கு தெளிவு செய்துள்ளேன் மின்னஞ்சலில்!!!
  துரித பதிலுக்கு மிக்க மிக்க நன்றி.
  கீழ்படிந்த மாணவன்
  சரவணகுமார்/////

  நானும் தெளிவு செய்து பதில் அனுப்பிட்டேன்!

  ReplyDelete
 41. ////senthil said...
  வணக்கம் ஐயா,
  என் நண்பனின் ஜாதகம்:
  தனுசு லக்னம், லக்னத்தில் சந்திரன், 3-ல் குருவும் கேது,5-ல் சனி, 9-ல் செவ்வாயும்,ராகும், 11-ல் சூரியன்,சுக்கிரன், புதன்.
  இது கேமதுருமா அமைப்பா, வாழ்க்கையை எங்கனம் பாதிக்கும்.
  தயை கூர்ந்து விளக்கம் கூறுங்கள்.
  அன்புடன்,
  செந்தில் முருகன்./////

  நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால், 7ல் யாரும் இல்லாதிருப்பதால், கேமதுருமா உள்ளது. கவலை எதற்கு? மந்திரத்தைச் சொல்லித் தேவியை தினமும் வழிபடுங்கள்

  ReplyDelete
 42. ////minorwall said...
  செம shot சார். படம் அப்படியே உணர்வு பூர்வமா பொருந்தி வந்திருக்கு.
  செம மூட்-அவுட் லே ஒரு பார்ட்டி ஏதோ விவகாரமான போதை போட்டுட்டு முடங்கிப்போய் இருட்டட்டடிச்சு (கேமதுருமா யோகம் perfectடா வேலையக் காமிச்சிடுச்சுபோலே) உட்கார்ந்துட்டு.. really great selection சார்./////

  எல்லாம் உங்களைப் போன்று ரசிப்பவர்களுக்காகத்தான் மைனர்!

  ReplyDelete
 43. ////Thanuja said...
  Present sir! Really I am surprised at the matching photos for the titles. Superb sir! ஒரு கேள்வி நான் கேட்க்கொனும், this yoga is applied to the navamsa also? And what if சந்திரனும் அதோடு சேந்து மற்ற கிரங்கள் ஓரை வீட்டில் இருந்தால் இந்த யோகா கான்செல் ஆகி விடுமா சார் ?/////

  நவாம்சத்திலும் இதே அமைப்புள்ளதா என்று பாருங்கள் சகோதரி!
  ஓரை வீடு என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரே வீடு என்பதைத்தான் ஓரை வீடு என்று தட்டச்சு செய்து விட்டீர்களா?

  ReplyDelete
 44. ///பொட்டல் said...
  //குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால் இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும். ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும்.//
  ஆர்வத்துடன் வகுப்பிற்கு வந்தால் இப்படி அதிர்ச்சி அளித்துவிட்டீர்களே அய்யா!எனக்கு 7ம் வீட்டில் சந்திரன்,முன்,பின், எந்த ஆதரவும் இல்லை.லக்கினமும் காலி.இன்னொரு கேந்திர வீடான 10 வீட்டில் குரு வக்கிரத்துடன் இருப்பதால் எந்த விதிவிலக்கும் இல்லை என நினைக்கிறேன்.இது வயதான காலத்தில்தான் என்றீர்கள்.ஆனால் முப்பது வயதிற்குள்ளாகவே மனைவி,குழந்தை,வேலை எல்லாவற்றையும் காலி செய்து புலம்ப வைத்துவிட்டது.இனியாவது ஒர் நல்ல வாழ்க்கை காத்திருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். இனி வயதான காலத்திலுமா? அதிர்ச்சிதான்.‌பரவாயில்லை அதான் பரிகார மந்திரமும் அளித்து உள்ளீர்களே.நன்றி.////

  பொட்டல் என்றாலே காலி இடம் என்றுதான் பொருள். எதற்காக இந்தப் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? முதலில் அதை மாற்றுங்கள் நண்பரே!

  ReplyDelete
 45. /////Scorpion King said...
  உள்ளேன் அய்யா!!!
  இதுவரைக்கும் நீங்க சொன்ன யோகம் ஒன்னும் இல்லே... நேத்து லக்ஷ்மி யோகம் இருக்கு அப்படின்னு பார்த்தா, 5-இல (விருச்சிகம்) சந்திரன் நீசம்-னு சொல்லி ஒரு பெரிய பிட்ட போட்டிங்க. சரி... இன்னிக்கு காலைல முதல் வேலையா போயி பாடத்த படிச்சுட்டு இந்த யோகம் நமக்கு இருக்கான்னு பார்த்திடலாம்னு வகுப்புக்கு வந்தா..... நல்ல வேலை இந்த யோகம் இல்ல.. தப்பிச்சுட்டன்... அப்படின்னு சொல்லி பெரு மூச்சு உட வச்சிட்டிங்க....
  இந்த வகுப்பறை twist & turn நிறைஞ்ச thriller movie மாதிரி போகுது. Really Superb Sir.../////

  கிங் என்று பெயரைவைத்துக் கொண்டு எதற்காகப் பெருமூச்சு? நான் James Hadley Chaseன் ரசிகன். அதானால்தான் என்னவோ அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது! அந்தத் தாக்கம் என் எழுத்துக்களிலும் இருக்கும் அல்லவா?

  ReplyDelete
 46. ////iyer said...
  அய்யா . .
  நல்லாத் தானே இருக்கோம். . .
  ஆனா ஏன்
  எனக்கு இந்த யோகம் இருக்கான்னு
  கேட்டு கிட்டே . . .இருக்காங்க . . அல்லது பாத்துக்கிட்டு இருக்காங்க . .
  வீடு நிறைய சாப்பாடு இருந்தும் ஃபோஃபேவை பாத்ததும் தட்டு எடுத்துக்கிட்டு ஓடற மாதிரி . . .
  கேமதுருமா 7 ம் வீட்டிடல் உள்ள கிரகத்தால் இல்லாமற் போகும் என்ற செய்தி சிறப்பாக உள்ளது.
  ஆனால் அந்த நிலையில் கூட அவர்கள் தனிமையிலே இனிமை காண விரும்புகிறார்களே . . .////

  வணக்கம் அய்யர். இனிமை கிடைக்கிறது அல்லவா? போகட்டும், விடுங்கள்!

  ReplyDelete
 47. ///iyer said...
  அய்யா . .
  சனிப்பெயர்ச்சி பலன்கள்ன்னு ஏதாவது நம்ம பள்ளியிலே சிறப்பு வகுப்பு உண்டா. . .?
  ஒரு online conference வைச்சுக்குவோமா . .////

  சனீஷ்வரன் வாத்தியாருக்கு நண்பன். வாத்தியார் மகர ராசிக்காரர். வாத்தியாருக்கு நண்பன் எனும் போது வாத்தியாரின் மாணவர்களுக்கும் நண்பன்தான். ஆகவே கவலையை விடுங்கள் சனி நம்மை ஒன்றும் செய்யாது.
  இருந்தாலும் பெயர்ச்சி பலன்களைப் பற்றி எழுத உள்ளேன். அது அடுத்தவாரம் வரும்

  ReplyDelete
 48. ////Srinath said...
  Vanakkam Aiyya,
  Enakku kadaga lagnam. Lagnadhipathi Chandran in 2nd house (Simmam), Saneeswaran - 4th House, Guru-5th house, Kethu-6th House, Sun,Mercury, Mars-9th house, Sukran-10th house, Rahu-12th house.
  It looks like I have Kemadruma yogam. Is there any exception due to Guru in 4th house?
  Kindly enlighten me.
  Regards,
  Srinath G////

  இந்த அமைப்பு உங்களுக்கு உள்ளது. கேந்திரத்தில் உள்ள குரு உங்களுக்குக் கைகொடுத்துக் காக்கும்!

  ReplyDelete
 49. ////Uma said...
  i am able to learn lot of things from ur classes, thanks. You r really doing a good service.////

  உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 50. அய்யா நானும் தங்களுக்கு தெளிவு செய்துள்ளேன் மின்னஞ்சலில்!!!
  துரித பதிலுக்கு மிக்க மிக்க நன்றி.
  கீழ்படிந்த மாணவன்
  சரவணகுமார்/////

  நானும் தெளிவு செய்து பதில் அனுப்பிட்டேன்!
  +++++++++++++++++++++++++++++++++++
  உங்கள் பதிலுக்கும், அதைவிட உங்கள் விலை மதிப்பில்லாத நேரத்துக்கும் மிக மிக நன்றி சார்.

  இதோடு இன்றைக்கு உங்களை விட்டுவிடுகிறேன். நாளை மீண்டும்!!!

  அன்பு மாணவன்
  சரவணகுமார்

  ReplyDelete
 51. /////தங்ஸ் said...
  சந்திரனுக்கு இருபுறமும் கிரகங்கள் இல்லை. ஆனால் சந்திரனுக்கு அடுத்து லக்னம். அதாவது 12 ம வீட்டில் சந்திரன் இருந்தால் இந்த யோகம் அடிபடுமா?////

  பதிவை மீண்டும் இரண்டுமுறை படியுங்கள்!

  ReplyDelete
 52. ////Arul said...
  Present Sir...////

  நன்றி அருள்!

  ReplyDelete
 53. /////RVC said...
  உள்ளேன் ஐயா..!தாமதமான வருகைப் பதிவு. பாடம் அருமை..! உங்கள் ஜோதிட புத்தகங்கள் எனக்கு ஒரு காப்பி கேட்டு ஏற்கனவே மின்னஞ்சல் செய்துள்ளேன். டிசம்பர் மாதம் எதிர்பார்க்கலாமா அய்யா?////

  ஆகா, எதிர்பார்க்கலாம்!

  ReplyDelete
 54. /////Prem said...
  Sir,
  Thank God , I do not have the kemadhruma yogam in my horoscope.
  Regards,
  Prem Anand/////

  தகவலுக்கு நன்றி பிரேம்!

  ReplyDelete
 55. அப்பாடா இந்த யோகம் நமக்கு இல்லை.சந்திரனுக்கு
  பண்ணிரண்டில் ராகு இருக்கார்.
  குரு ஏழில் கேந்திரத்தில் இருக்கார்.

  முதன்முதலாக இந்த யோகம் பற்றி
  கேள்விப்படுகிறேன்
  நன்றி அய்யா.

  ReplyDelete
 56. Ayya Thanimai patriya yogam enbathal ketkiren.

  Oru Jathagail oruvar avar Pilaikalodu Sernthu valvara illaiya enbathai arinthu kola mudiyuma?(or) Oruvar avarudaya Thai,Thanthaiyar odu kadasi varai irupara enbathai koora mudiyuma?

  ReplyDelete
 57. hi ,

  I think this yoga is aplicable for this combo

  1 st house - moon + kethu
  2 nd house - no plant
  12 th house- no plant
  7 th house - ketu

  Kindly tell me sir is it applicable this yoga?

  ReplyDelete
 58. Dear Sir,
  Present sir,
  வகுப்பறையில் கேள்விகளும், பதிலும் மாறி, மாறி வருவதால், தத்பொழுது only viewer

  Rgds
  Nainar

  ReplyDelete
 59. ////Blogger Saravana said...
  அய்யா நானும் தங்களுக்கு தெளிவு செய்துள்ளேன் மின்னஞ்சலில்!!!
  துரித பதிலுக்கு மிக்க மிக்க நன்றி.
  கீழ்படிந்த மாணவன்
  சரவணகுமார்/////
  நானும் தெளிவு செய்து பதில் அனுப்பிட்டேன்!
  +++++++++++++++++++++++++++++++++++
  உங்கள் பதிலுக்கும், அதைவிட உங்கள் விலை மதிப்பில்லாத நேரத்துக்கும் மிக மிக நன்றி சார்.
  இதோடு இன்றைக்கு உங்களை விட்டுவிடுகிறேன். நாளை மீண்டும்!!!
  அன்பு மாணவன்
  சரவணகுமார்////////

  என்ன மீண்டும் நாளைக்கா? கூத்தாக இருக்கிறதே?
  ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டீர்கள். அத்தனைக்கும் பதில் சொல்லிவிட்டேன்!
  உங்கள் கோட்டா மொத்தமும் தீர்ந்து, இப்போது கணக்கு மைனஸில் உள்ளது.
  அடுத்த சந்திப்பு பொங்கலன்று! அட்வான்ஸாக ‘பொங்கல் வழ்த்துக்கள்”!

  அதுவரை இந்தப் பக்கம் தலையைக் காட்டாதீர்கள், அதுவும் கையில் உங்கள் ஜாதகத்துடன்~!
  எத்தனை ப்ளீஸ் போட்டாலும் ஒன்றும் நடக்காது! சம்ஜே க்யா?

  ReplyDelete
 60. //பொட்டல் என்றாலே காலி இடம் என்றுதான் பொருள். எதற்காக இந்தப் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? முதலில் அதை மாற்றுங்கள் நண்பரே!//

  //இயற்பெயருக்கே மாறி விட்டேன் ஐயா.தங்கள் பரிந்துரைக்கு நன்றி.//

  ReplyDelete
 61. ////Blogger thirunarayanan said...
  அப்பாடா இந்த யோகம் நமக்கு இல்லை.சந்திரனுக்கு
  பண்ணிரண்டில் ராகு இருக்கார்.
  குரு ஏழில் கேந்திரத்தில் இருக்கார்.
  முதன்முதலாக இந்த யோகம் பற்றி
  கேள்விப்படுகிறேன்
  நன்றி அய்யா.////////

  தகவலுக்கு நன்றி நாராயணன்!

  ReplyDelete
 62. /////Blogger Strider said...
  Ayya Thanimai patriya yogam enbathal ketkiren.
  Oru Jathagail oruvar avar Pilaikalodu Sernthu valvara illaiya enbathai arinthu kola mudiyuma?(or) Oruvar avarudaya Thai,Thanthaiyar odu kadasi varai irupara enbathai koora mudiyuma?/////

  அதைத் தெரிந்துகொள்வதற்குத்தானே, இந்த யோகம் அம்மணி! இந்த யோகம் உள்ள முதியவர்களை, அவர்கள் பெற்ற பிள்ளைகள், வயதான காலத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பணம் அனுப்புவார்கள். வேலைக்கு ஆள் வைத்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள நேரிடும். அல்லது முதியோர் இல்லம். அவ்வளவுதான்.

  சூரியனுடன் சனி கூட்டாக இருந்தால் தந்தையுடனும், சந்திரனுடன் சனி கூட்டாக இருந்தால் தாயுடனும், ஒரு ஜாதகனுக்குத் தன் பெற்றோர்களுடன் நல்ல உறவு இருக்காது. அந்த ஜாதகர்கனின் பெற்றோர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்பு இல்லை என்றாலும் இதே நிலைமைதான்!

  ReplyDelete
 63. ///Blogger YOGANANDAM M said...
  hi ,
  I think this yoga is aplicable for this combo
  1 st house - moon + kethu
  2 nd house - no plant
  12 th house- no plant
  7 th house - ketu/////

  கணிப்பு சரிதான்! மந்திரத்தைச் சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!

  ReplyDelete
 64. ////Blogger arumuga nainar said...
  Dear Sir,
  Present sir,
  வகுப்பறையில் கேள்விகளும், பதிலும் மாறி, மாறி வருவதால், தற்பொழுது only viewer
  Rgds
  Nainar////

  நன்றி நைனா(ர்)!

  ReplyDelete
 65. ////Blogger இராதா கிருஷ்ணன் said...
  //பொட்டல் என்றாலே காலி இடம் என்றுதான் பொருள். எதற்காக இந்தப் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? முதலில் அதை மாற்றுங்கள் நண்பரே!//
  //இயற்பெயருக்கே மாறி விட்டேன் ஐயா.தங்கள் பரிந்துரைக்கு நன்றி.//

  வாத்தியார் சொன்னவுடன் கேட்ட முதல் மாணவர் நீங்கள்தான்!
  நன்றி ராதாகிருஷ்ணன். வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 66. உங்கள் கோட்டா மொத்தமும் தீர்ந்து, இப்போது கணக்கு மைனஸில் உள்ளது.
  அடுத்த சந்திப்பு பொங்கலன்று! அட்வான்ஸாக ‘பொங்கல் வழ்த்துக்கள்”!

  அதுவரை இந்தப் பக்கம் தலையைக் காட்டாதீர்கள், அதுவும் கையில் உங்கள் ஜாதகத்துடன்~!
  எத்தனை ப்ளீஸ் போட்டாலும் ஒன்றும் நடக்காது! சம்ஜே க்யா?
  ===================================
  பொங்கல் வரை தங்காது வைத்தியரே!!!

  தயவு செய்து மனது வையுங்கள். நிறைய பணம் செலவு செய்து உள்ளேன், அச்டவர்கதை பற்றி யாரும் சொன்னது இல்லை அய்யா. உங்களிடம் இருந்து பல செய்திகள் எனக்கு கிடைத்து உள்ளது. நன் எனக்கு மட்டும் கேள்விகள் கேட்க வில்லை, சற்றே குடும்ப உறுபினர்கள் கட்டத்தை ஆராய்கிறேன். சந்தேகமில்லை, உங்கள் உதவி மற்றும் நேரம் விலைமதிப்பு அற்றது. முகத்துதி படவில்லை, மனதில் இருந்து சொல்கிறேன்.

  நன்றியுடன்
  சரவணகுமார்

  ReplyDelete
 67. ayya,

  Paadangalum atharkuriya padangalum super...!

  - Kathiravan

  ReplyDelete
 68. இந்த யோகம் உள்ள முதியவர்களை, அவர்கள் பெற்ற பிள்ளைகள், வயதான காலத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பணம் அனுப்புவார்கள். வேலைக்கு ஆள் வைத்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள நேரிடும். அல்லது முதியோர் இல்லம். அவ்வளவுதான்.

  சூரியனுடன் சனி கூட்டாக இருந்தால் தந்தையுடனும், சந்திரனுடன் சனி கூட்டாக இருந்தால் தாயுடனும், ஒரு ஜாதகனுக்குத் தன் பெற்றோர்களுடன் நல்ல உறவு இருக்காது.

  sir, oru doubt, enakku makara lagnam, 5-in lord in 4th place (sukran), i.e. malava yogam?? in 5th, sun+ketu, 9th lord in 6th place with sani. someone saw my hand and said u will be away from ur son, is it so according to my horo, guru in 2nd place, moon+rahu in 11th.

  ReplyDelete
 69. /////Saravana said...
  உங்கள் கோட்டா மொத்தமும் தீர்ந்து, இப்போது கணக்கு மைனஸில் உள்ளது.
  அடுத்த சந்திப்பு பொங்கலன்று! அட்வான்ஸாக ‘பொங்கல் வழ்த்துக்கள்”!
  அதுவரை இந்தப் பக்கம் தலையைக் காட்டாதீர்கள், அதுவும் கையில் உங்கள் ஜாதகத்துடன்~!
  எத்தனை ப்ளீஸ் போட்டாலும் ஒன்றும் நடக்காது! சம்ஜே க்யா?
  ===================================
  பொங்கல் வரை தாங்காது வைத்தியரே!!!
  தயவு செய்து மனது வையுங்கள். நிறைய பணம் செலவு செய்து உள்ளேன், அஷ்டவர்க்கத்தைப் பற்றி யாரும் சொன்னது இல்லை அய்யா. உங்களிடம் இருந்து பல செய்திகள் எனக்கு கிடைத்து உள்ளது. நான் எனக்கு மட்டும் கேள்விகள் கேட்க வில்லை, சற்றே குடும்ப உறுபினர்கள் கட்டத்தை ஆராய்கிறேன். சந்தேகமில்லை, உங்கள் உதவி மற்றும் நேரம் விலைமதிப்பு அற்றது. முகத்துதி படவில்லை, மனதில் இருந்து சொல்கிறேன்.
  நன்றியுடன்
  சரவணகுமார்/////

  நம்ம ரஜினி அண்ணா சொல்வதைப்போல, நான் ஒருமுறை சொன்னால் அது நூறுமுறை சொன்னதற்குச் சமம்!

  நினைத்துப்பாருங்கள் எனக்கு இன்றையத்தேதியில், வகுப்பறை பதிவேட்டின்படி உள்ள மாணவர்கள் 797 + பதிவு செய்யாமல் வந்து போகிறவர்களையும் சேர்த்து சுமார் 1,500 மாணவர்கள் உள்ளார்கள். நான் உங்கள் ஒருவருக்காக பதிவில் எழுதவில்லை. உங்களைப் போலவே அவர்கள் அனைவரும் எனக்கு முக்கியம்.

  ஆகவே நச்சரிக்காமல் பொறுமையாக இருங்கள். பாடங்களை ஒழுங்காகப் படித்து, தேர்ச்சி பெறும் வழியைப் பாருங்கள். தேர்ச்சி பெற்றுவிட்டால்,குடும்ப உறுபினர்கள் என்று இல்லை, வேலையில் உடன் இருப்பவர்கள்,
  மற்றும் மாலை நேரங்களில் உங்களுடன் லால் பார்க்கில் உலாத்துபவர்கள் என்று அனைவருக்கும் நீங்களே அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லலாம். நானும் மனதிலிருந்துதான் சொல்கிறேன்!

  ReplyDelete
 70. ///SUNRAYS said...
  ayya,
  Paadangalum atharkuriya padangalum super...!
  - Kathiravan////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 71. Blogger Uma said...
  ////இந்த யோகம் உள்ள முதியவர்களை, அவர்கள் பெற்ற பிள்ளைகள், வயதான காலத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பணம் அனுப்புவார்கள். வேலைக்கு ஆள் வைத்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள நேரிடும். அல்லது முதியோர் இல்லம். அவ்வளவுதான்.
  சூரியனுடன் சனி கூட்டாக இருந்தால் தந்தையுடனும், சந்திரனுடன் சனி கூட்டாக இருந்தால் தாயுடனும், ஒரு ஜாதகனுக்குத் தன் பெற்றோர்களுடன் நல்ல உறவு இருக்காது.////
  ///sir, oru doubt, enakku makara lagnam, 5-in lord in 4th place (sukran), i.e. malava yogam?? in 5th, sun+ketu, 9th lord in 6th place with sani. someone saw my hand and said u will be away from ur son, is it so according to my horo, guru in 2nd place, moon+rahu in 11th.///

  Particulars are not sufficient to give you a suitable reply. Please send your birth details with only one specific question! My mail ID classroom2007@gmail.com

  ReplyDelete
 72. ////surusha said...
  Present sir,////

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 73. ஐயா.. சந்திரன் உடன் கேது, 12 & 2 - காலி. 7-இல் சூரியனுடன் ராகு. இது கேமதுருமா யோகம் ஆகுமா?

  ReplyDelete
 74. ////Scorpion King said...
  ஐயா.. சந்திரன் உடன் கேது, 12 & 2 - காலி. 7-இல் சூரியனுடன் ராகு. இது கேமதுருமா யோகம் ஆகுமா?////

  பதிவை சரியாகப் படிக்கமாட்டீர்களா?
  7ல் கிரகம் இல்லாமல் இருந்தால் அல்லவா இந்த அவயோகம்
  உங்களுக்குதான் 7ல் சூரியன் உள்ளதே!
  அதனால் கேமதுருமா யோகம்இல்லை! கேமதுருமா யோகம்இல்லை! கேமதுருமா யோகம்இல்லை!

  ReplyDelete
 75. Iyaa,

  chandranukku 12,2,7 il grahangal illatha nilyil sani,guru ,sevvai aaghiya grahangal paarthaalum kemadruma yogam amayuma?

  Mikka Nanri

  ReplyDelete
 76. நல்ல வேளையாக இந்த யோகம் எனக்கு இல்லை அய்யா!
  அப்புறம் அந்த மந்திரம்,"க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" என்று இருக்க‌ வேண்டும்.மிகுந்த தயக்கத்துடன் எழுதுகிறேன். மன்னிக்கவும்
  kmr.krishnan
  http;//parppu.blogspot.com

  ReplyDelete
 77. Dear sir,

  I have one natal chart...
  Lagna - Makaram(27paral) -Mandi
  3rd - Rahu & Chandiran(3)
  7th(20)-Sun(2),Sani(2),Pudhan(3),Sukiran(4)
  8th -Chevvai(3)
  9th -Kethu
  10th-Guru(4)

  Kemadruma yogam is present.Guru is not in kendra to moon...7th house having four planets with 20 parals...Will his marriage life pleasant???

  ReplyDelete
 78. கேமதுருமா யோகம் கேந்திரத்தில்(9th house) இருந்தாலும் மற்றொரு கேந்திரத்திலிருந்து(5th house) குரு பார்க்கிறார். குரு பார்வையில் கேமதுருமா cancel கிடையாதா?

  ReplyDelete
 79. ////Thanuja said...
  Present sir! Really I am surprised at the matching photos for the titles. Superb sir! ஒரு கேள்வி நான் கேட்க்கொனும், this yoga is applied to the navamsa also? And what if சந்திரனும் அதோடு சேந்து மற்ற கிரங்கள் ஓரை வீட்டில் இருந்தால் இந்த யோகா கான்செல் ஆகி விடுமா சார் ?/////

  நவாம்சத்திலும் இதே அமைப்புள்ளதா என்று பாருங்கள் சகோதரி!
  ஓரை வீடு என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரே வீடு என்பதைத்தான் ஓரை வீடு என்று தட்டச்சு செய்து விட்டீர்களா?


  நான் சொல்ல வந்தனான் ஒரே வீடு, small mistake and i don't know what is ஓரை.

  ReplyDelete
 80. Kandhiah said...
  Iyaa,
  chandranukku 12,2,7 il grahangal illatha nilayil sani,guru ,sevvai aaghiya grahangal paarthaalum kemadruma yogam amayuma?
  Mikka Nanri//////

  அமையும். நமக்கு வேண்டியபடி கிரகங்களை வைத்துப் புதிவிதிகளை உண்டாக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

  ReplyDelete
 81. kmr.krishnan said...
  நல்ல வேளையாக இந்த யோகம் எனக்கு இல்லை அய்யா!
  அப்புறம் அந்த மந்திரம்,"க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" என்று இருக்க‌ வேண்டும்.மிகுந்த தயக்கத்துடன் எழுதுகிறேன். மன்னிக்கவும்
  kmr.krishnan
  http;//parppu.blogspot.com

  தவறைச் சுட்டிக் காட்டுவதற்கு தயக்கம் எதற்கு கிருஷ்ணன் சார்!
  பதிவில் நீங்கள் சொல்லியபடி உடனே திருத்தி விட்டேன்!
  எனக்கு வடமொழி தெரியாது. ஒரு குறிப்பில் இருந்து எடுத்துப் பதிவிட்டேன்
  குறிப்பில் இருந்த வாசகம்
  Kleem Tripurasundarimoorthaye Namah

  நீங்கள் சொல்வதுபோல் என்றால் அந்த வாசகம் இப்படி இருந்திருக்க வேண்டும் எனக்கும் தவறு நேர்ந்திருக்காது.

  க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ
  kaleem Tripurasundari moorththaye Namaha
  ஒரு a யும் ஒரு th எனும் சொல் இல்லாததால் நேரடி மொழிபெயர்ப்பில் குழப்பம்
  அதனால்தான் நானே தமிழில் இப்படி எழுதி வைத்தேன்

  ஓம் திரிபுரசுந்தரி போற்றி!
  ஓம் திரிபுரசுந்தரி போற்றி!

  நன்றி சார்!

  ReplyDelete
 82. Arul said...
  Dear sir,
  I have one natal chart...
  Lagna - Makaram(27paral) -Mandi
  3rd - Rahu & Chandiran(3)
  7th(20)-Sun(2),Sani(2),Pudhan(3),Sukiran(4)
  8th -Chevvai(3)
  9th -Kethu
  10th-Guru(4)
  Kemadruma yogam is present.Guru is not in kendra to moon...7th house having four planets with 20 parals...Will his marriage life pleasant???

  லக்கினத்திற்கு 3ஆம் இடத்தையும், அதற்கு 7ஆம் இடமான 10 ஆம் வீட்டையும் பாருங்கள். அங்கேதான் குரு இருக்கிறாரே! இந்த அவயோகம் இல்லை!
  ஆசாமி/அல்லது அம்மணி தப்பித்தார்கள்

  ReplyDelete
 83. Bharath said...
  கேமதுருமா யோகம் கேந்திரத்தில்(9th house) இருந்தாலும் மற்றொரு கேந்திரத்திலிருந்து(5th house) குரு பார்க்கிறார். குரு பார்வையில் கேமதுருமா cancel கிடையாதா?

  கேன்சல் கிடையாது. நமக்கு வேண்டியபடி கிரகங்களை வைத்துப் புதிய விதிகளை உண்டாக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் - இல்லையா?

  ReplyDelete
 84. Thanuja said...
  ////Thanuja said...
  Present sir! Really I am surprised at the matching photos for the titles. Superb sir! ஒரு கேள்வி நான் கேட்க்கொனும், this yoga is applied to the navamsa also? And what if சந்திரனும் அதோடு சேர்ந்து மற்ற கிரங்கள் ஓரை வீட்டில் இருந்தால் இந்த யோகா கான்செல் ஆகி விடுமா சார் ?/////
  நவாம்சத்திலும் இதே அமைப்புள்ளதா என்று பாருங்கள் சகோதரி!
  ஓரை வீடு என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரே வீடு என்பதைத்தான் ஓரை வீடு என்று தட்டச்சு செய்து விட்டீர்களா?
  நான் சொல்ல வந்தது ஒரே வீடு, small mistake and i don't know what is ஓரை./////

  Navamsa is nothing but the magnified version of rasi. Even if a single planet other than ragu/ketu is with moon, the yoga is cancelled

  ReplyDelete
 85. /* குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த
  அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! */


  இந்த வரியில் "கேந்திர வீடு" என்பது ஜாதகனுடைய லக்னதில்லிருந்தா அல்லது சந்திரன் வீட்டில் இருந்தா ?

  ReplyDelete
 86. please give more details about thiripura sundari sthotharam.

  ReplyDelete
 87. please give more details about thiripurasundari sthotharam.

  ReplyDelete
 88. ////Shyam Prasad said...
  /* குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த
  அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! */
  இந்த வரியில் "கேந்திர வீடு" என்பது ஜாதகனுடைய லக்னதில்லிருந்தா அல்லது சந்திரன் வீட்டில் இருந்தா ?////

  ஜாதகனின் லக்கினத்தில் இருந்து!

  ReplyDelete
 89. ////T.SHANMUGANANDAN said...
  please give more details about thiripura sundari sthotharam./////

  அது ஒருவரி ஸ்லோகம். அதை காலை அல்லது மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி, அதன் அமர்ந்து 108 முறைகள் சொல்லுங்கள். முடிந்த நாட்களில், உங்களால முடியும்வரை சொல்லுங்கள்

  ReplyDelete
 90. கேமதுருமா வார மாதிரி இருந்து தப்பி விட்டேன். ராசியில் இருந்து 7ம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.....

  ReplyDelete
 91. அய்யா
  ஒரு கேமதுருமா யோகம் அமைந்த ஜாதகனுக்கு, கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி அமைந்தாள், கேமதுருமா யோகம் அவனிற்கு நீங்குமா? நீங்கும் எனின் எவ்வாறு?

  ReplyDelete
 92. //RaaKul said...
  அய்யா
  ஒரு கேமதுருமா யோகம் அமைந்த ஜாதகனுக்கு, கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி அமைந்தாள், கேமதுருமா யோகம் அவனிற்கு நீங்குமா? நீங்கும் எனின் எவ்வாறு?//


  இவர் கேள்விக்கு நகைசுவை பதில்....கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி வள வளன்னு பேசிட்டே இருந்த எப்படி தான் தனியாக இருப்பது???

  ReplyDelete
 93. அய்யா....

  "இவர் கேள்விக்கு நகைசுவை பதில்....கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி வள வளன்னு பேசிட்டே இருந்த எப்படி தான் தனியாக இருப்பது??? "

  நான் இவ்வாறு கேள்விப்பட்டேன்.
  நான் நகைசுவையா கேக்கவில்ளை. தாயவுசெய்து கூறுங்கள்?

  நான்னும் உங்ள் மானவந்தான்;;

  ReplyDelete
 94. Padam super...this yoga is scary! I have seen this yoga in 3 horoscopes so far.

  Lets leave it hands of God!

  Shankar

  ReplyDelete
 95. What if Moon is in rishaba lagna without any planets in mesham and miduna and 7th house also doesnot have planet?

  Moon gets ucham in risham? Will that work?

  -Shankar

  ReplyDelete
 96. வாத்தியாரே!!!

  இன்றைய வகுப்புக்கு ஆஜர்.

  அனால் ஏன் இன்று பாடம் இதுவரை இல்லை.

  கலை வணக்கத்துடன்
  சரவணகுமார்

  ReplyDelete
 97. ///ceylonstar said...
  கேமதுருமா வார மாதிரி இருந்து தப்பி விட்டேன். ராசியில் இருந்து 7ம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.....////

  நீங்கள் ஸ்டார். அதனால் தப்பித்துவிட்டீர்கள்!

  ReplyDelete
 98. ////RaaKul said...
  அய்யா
  ஒரு கேமதுருமா யோகம் அமைந்த ஜாதகனுக்கு, கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி அமைந்தால், கேமதுருமா யோகம் அவனிற்கு நீங்குமா? நீங்கும் எனின் எவ்வாறு?//////

  அவருடைய யோகங்கள் அவருக்கு மட்டுமே பயன்படும்.
  அவர் நன்றாகச் சாப்பிட்டால் உங்களுக்குப் பசியடங்கிவிடுமா?
  உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டும்!
  ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தவை!

  ReplyDelete
 99. ///RaaKul said...
  அய்யா....
  "இவர் கேள்விக்கு நகைசுவை பதில்....கஜகேசரி யோகம்! அமைந்த மனைவி வள வளன்னு பேசிட்டே இருந்த எப்படி தான் தனியாக இருப்பது??? "
  நான் இவ்வாறு கேள்விப்பட்டேன்.
  நான் நகைசுவையாகக் கேக்கவில்லை. தயவுசெய்து கூறுங்கள்?
  நான்னும் உங்ள் மானவன்தான்;;////

  கூறிவிட்டேன் சாமி!

  ReplyDelete
 100. ///hotcat said...
  Padam super...this yoga is scary! I have seen this yoga in 3 horoscopes so far. Lets leave it hands of God!
  Shankar///

  நன்றி சங்கர்!

  ReplyDelete
 101. ////hotcat said...
  What if Moon is in rishaba lagna without any planets in mesham and miduna and 7th house also doesnot have planet?
  Moon gets ucham in risham? Will that work?
  -Shankar/////

  உச்சம் தனியாக வேலை செய்யும். இந்த அவ யோகமும் தனியாக வேலை செய்யும்
  விமானத்தில் எகனாமி வகுப்பில் போகாமல் ஜாதகன் தனி விமானத்தில் செல்வான். ஆனால் தனியாகத்தான் செல்வான்

  ReplyDelete
 102. ///Saravana said...
  வாத்தியாரே!!!
  இன்றைய வகுப்புக்கு ஆஜர்.
  அனால் ஏன் இன்று பாடம் இதுவரை இல்லை.
  கலை வணக்கத்துடன்
  சரவணகுமார்////

  பாடம் வந்துவிட்டது. போய்ப் பார் ராஜா!

  ReplyDelete
 103. Hello Sir,

  ராசியில் கேமதுருமா அமைப்பு இல்லாமல் நவாம்சத்தில் இருந்தால் இந்த யோக அமைப்பு செயல்படுமா?

  Ragards,
  Vannamalar

  ReplyDelete
 104. Daer sir,

  I want to know whether I have this dosa or not.

  Mine is a tula lagnam and moon is in 10th postion katagam alone and the 9th postion is empty.Guru is seeing moon from vricigam as 9 the parvai and sani is seeing moon from tula as 10 the parvai.maanthy is in 11 th place that is next to moon.

  how is chandra dosa for me.

  ReplyDelete
 105. ஐயா,

  //இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில்
  தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும்
  நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட
  நேரிடும்//


  இந்த யோகத்திர்க்கும் திருமணத்திற்கும் எதேனும் தொடர்பு உண்டா?

  சுந்தர்

  ReplyDelete
 106. //Vannamalar said...
  Hello Sir,
  ராசியில் கேமதுருமா அமைப்பு இல்லாமல் நவாம்சத்தில் இருந்தால் இந்த யோக அமைப்பு செயல்படுமா?
  Ragards,
  Vannamalar////

  Navansam is nothing but the magnified version of rasi. So, It will work!

  ReplyDelete
 107. Murali said...
  Daer sir,
  I want to know whether I have this dosa or not.
  Mine is a tula lagnam and moon is in 10th postion katagam alone and the 9th postion is empty.Guru is seeing moon from vricigam as 9 the parvai and sani is seeing moon from tula as 10 the parvai.maanthy is in 11 th place that is next to moon.
  how is chandra dosa for me.

  ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு
  எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய
  கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில்
  எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதுதான் கேமதுருமாயோகம்!

  நீங்கள் இதன்படி உள்ளதா என்று பாருங்கள்!

  ReplyDelete
 108. ////sundara said...
  ஐயா,
  //இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில்
  தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும்
  நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட
  நேரிடும்//
  இந்த யோகத்திர்க்கும் திருமணத்திற்கும் எதேனும் தொடர்பு உண்டா?
  சுந்தர்////

  இல்லை. யோகங்கள் தனித்து இயங்கக்கூடியவை!

  ReplyDelete
 109. sir enaku mesa laknam (1.- 2.sukiran,3.budan,ragu,suriyan, 4.-,5.-,6.sani,sevai,7.guru,8.-,9.kethu, 10.-,11.moon,12.-)
  -,this symbol is showing no planet, enaku inda yogam ulladho endru bayamaga irukiradu. konjam vilakungal.

  ReplyDelete
 110. ///பிரகாஷ் துரைசாமி said...
  sir enaku mesa laknam (1.- 2.sukiran,3.budan,ragu,suriyan, 4.-,5.-,6.sani,sevai,7.guru,8.-,9.kethu, 10.-,11.moon,12.-)
  -,this symbol is showing no planet, enaku inda yogam ulladho endru bayamaga irukiradu. konjam vilakungal.////

  எதற்கு பயம்? பயமாக இருந்தால் வகுப்பறைக்கே வராதீர்கள். பல பாடங்கள் பயமுறுத்துவதாக இருக்கும். பயமுறுத்துவதற்காக நான் பாடங்களை நடத்தவில்லை!. பயத்தைப் போக்குவதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்

  அனைவருக்கும் மதிப்பெண் 337. அனைவரும் சமம் என்று எத்தனை தடவை எழுதியிருக்கிறேன்? ஒரு தடவையாவது அது உங்கள் கண்ணில் பட்டதா?

  ReplyDelete
 111. அன்பு அய்யா தங்களின் இந்த இலவச சேவைக்கு, உங்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், நானும் உங்கள் வகுப்பறையில் புதிய மாணவனாக சேர்ந்து பாடம் படிக்க போகிறேன், படிக்கலாமா?
  அன்புடன் ஜீவா

  ReplyDelete
 112. ////ஜீவா said...
  அன்பு அய்யா தங்களின் இந்த இலவச சேவைக்கு, உங்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், நானும் உங்கள் வகுப்பறையில் புதிய மாணவனாக சேர்ந்து பாடம் படிக்க போகிறேன், படிக்கலாமா?
  அன்புடன் ஜீவா////

  இதில் கேட்டுப் படிப்பதற்கு ஒன்றுமில்லை!
  இணைய வகுப்பு. திறந்த வெளி வகுப்பு. தினமும் சுமார் 2,000 பேர்கள் வந்து போகிறார்கள்.
  யாரும் கேட்டுக்கொண்டு வரவில்லை. எந்த நிபந்தனையும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். தங்கள் ஜாதகப் பலனை பலவிதமான கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் வருபவர்களுக்கு இங்கே இடமில்லை. அதற்கு எனக்கு நேரம் இல்லை! மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சோம்பேறியாக உட்கார்ந்து தினமும் மீனை. என்னைப் பிடித்துத் தரச்சொல்லி சாப்பிட நினைக்கிறவர்களுக்கு இங்கே இடமில்லை!

  ReplyDelete
 113. ஐய நடிகர் கமல் காசனுக்கு இந்த கேமதுருமா யோகம் உள்ளது... சரியா எனது கணிப்பு?

  ReplyDelete
 114. /////Kumares said...
  ஐய நடிகர் கமல் காசனுக்கு இந்த கேமதுருமா யோகம் உள்ளது... சரியா எனது கணிப்பு?////

  7.11.1954ல் அவர் பிறந்துள்ளார். சிம்ம லக்கினம். 8ல் சந்திரன் தனித்து உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று அவருக்கு இந்த கேமதுருமா யோகம் உள்ளது.

  ReplyDelete
 115. மிகவும் நன்றி ஐயா....

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com