மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.9.09

Lakshmi Yoga: லக்ஷ்மியோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lakshmi Yoga: லக்ஷ்மியோகம்

எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன்
ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன?

லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி
சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக
அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும்
இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து
இருக்கலாம்

If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own
or exaltation sign identical with a Kendra or Thrikona,
Lakshmi Yoga is caused.
-----------------------------------------------------------------
பலன் என்ன?

பலன் 1
ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும்
அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான்.
பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத்
திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப்
பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக்
கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும்
உதாரணமாகச் சொல்லவில்லை)

2
ஜாதகன் செல்வத்தோடு இருப்பான்.
உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான்.
நன்கு கற்றவனாக இருப்பான்.
மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான்.
நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான்.
வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான்.
அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான்.
பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு!

The person will be wealthy, noble, learned, a man of high integrity and
reputation, handsome appearance, a good ruler, and enjoying all the
pleasures and comforts of life.
-----------------------------------------------------------------
பலன் எப்போது?

லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக்
காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும்

மேலதிகத்தகவல்கள்:

Different definitions of the Lakshmi Yoga.
Lakshmi Yoga will arise by the mutual association of lords of
Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra,
Thrikona, or exaltation and the lord of Lagna being disposed
powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited
in own or exaltation places which should be Kendras or Trikonas.

Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna,
Venus, and the lord of the 9th.

Lakshmi has predominantly to do with wealth and one born in this
combination will be wealthy, the degree of wealth varying with
regard to the degree of strength or weakness of the planets causing
the Yoga.

The most powerful type of Lakshmi Yoga will give immense wealth,

while the mutual association of or aspect between the lords of Lagna
and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an
ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence
of other Dhana Yogas

அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது
டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது!

பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம்.
பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்
பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்

ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்
வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள்
எதுவும் கேட்க வேண்டாம்

லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்
என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337
மட்டுமே. அதை மனதில் வையுங்கள்

லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார்
அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத்
தெரியும். பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

84 comments:

  1. தமிழில் தட்டச்சுவது எப்படி என்று நிறையப் பேர்கள் கேட்டு எழுதுகிறார்கள். இணையத்தில் NHM Writer எனும் மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. அதைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளூங்கள்.

    You can download NHM writer from the net and install it in your computer.The URL of that site is: http://software.nhm.in/

    கீ போர்டு பயிற்சி எதுவும் தேவையில்லை. ammaa என்று அடித்தீர்கள் என்றால் அம்மா என்னும் சொல்லைக் கொடுக்கும். அதுபோல appaa என்று அடித்தீர்கள் என்றால் அப்பா என்னும் சொல்லைக் கொடுக்கும்
    அவ்வளவு ஸிம்ப்பிள். முயன்று பாருங்கள்.

    ReplyDelete
  2. என் மனைவிக்கு 9 சுக்கிரன் ஆட்சி,லக்கனதிபதி புதனுடன்,ஆனால் சுக்கிரதிசை முடிந்து விட்டதே.... :|

    தற்போது 8 உச்சபெற்ற சூரியன் திசை இருந்தும் புத்திர பாக்கியத்திர்க்கு வழி கிட்ட இல்லை(2 வருடம் ஆகியும்)

    ReplyDelete
  3. எனக்கு 1,9ற்கு உரிய புதனும் சுக்கிரனும், 8ல் இருக்கிறார்கள். புதன் எனக்கு 10ம் அதிபதியும் ஆவதால் தர்மகர்மாதிபதி யோகமும் கூட. எனக்கு எவ்வளவு இருக்கிறதோ அது வரைக்கும் போதும். ஏனென்றால் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இல்லாதவற்றைப் பற்றி கவலையில்லை.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. குருவும் சுக்ரனும் நீசம். லக்ஷ்மி யோகமாவது ஒன்றாவது!!
    இங்கேயே தமிழ் எழுதி உள்ளதே!

    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  6. கடைசி பெஞ்சின் முதல் மாணவன்.

    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  7. கடைசி பெஞ்சின் முதல் மாணவன்.

    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  8. Dear Sir,
    Please note the birth deatails,
    For me
    ------
    Date: 22-10-1978
    place: Gobichettipalayam
    Time: 6:37 AM
    For Bride
    ---------
    Date: 12-10-1987
    place: Coimbatore
    Time: 18:23 PM
    Thanks for spending your valuable time for me.
    Thanks
    Saravana//////

    இருவரின் ஜாதகத்தையும் மேட்ச் செய்து பார்த்துவிட்டேன். விடையைச் சொல்வதற்கு முன்பாக
    இன்னும் ஒரு கேள்வி பாக்கியுள்ளது.
    அந்தப் பெண் உங்கள் காதலியா? காதலி இல்லையென்றால் அவருடைய ஜாதகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
    ===================================
    Dear Sir,

    Sathiyamaga Aval en Kathali Illai!!! (Promising you that she is not my lover). Got this horoscope from her family member saying the my horoscope is matching. I know that the birth details are important to cast the chart, so I have noted. I did not even see her? she is no way related to me. My father is no more(Since last Nov) and I have to decide everything. I don't want to be misguided in this matter eventhough Iam completed 31. Please guide me sir.

    ReplyDelete
  9. ////ananth said...
    எனக்கு 1,9ற்கு உரிய புதனும் சுக்கிரனும், 8ல் இருக்கிறார்கள். புதன் எனக்கு 10ம் அதிபதியும் ஆவதால் தர்மகர்மாதிபதி யோகமும் கூட. எனக்கு எவ்வளவு இருக்கிறதோ அது வரைக்கும் போதும். ஏனென்றால் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இல்லாதவற்றைப் பற்றி கவலையில்லை.////

    உங்கள் பெயரிலேயே ஆனந்தம் இருக்கிறது. வேறென்ன கவலை?

    ReplyDelete
  10. ///kmr.krishnan said...
    குருவும் சுக்ரனும் நீசம். லக்ஷ்மி யோகமாவது ஒன்றாவது!!
    இங்கேயே தமிழ் எழுதி உள்ளதே!
    kmr.krishnan
    http://parppu.blogspot.com/////

    offlineல் தமிழ் எழுதி வேண்டுவோருக்காக அதைக் கொடுத்துள்ளேன் சார்!

    ReplyDelete
  11. ////DHANA said...
    கடைசி பெஞ்சின் முதல் மாணவன்.
    உள்ளேன் ஐயா////

    எப்போது முதல் பெஞ்ச்?

    ReplyDelete
  12. Saravana said...
    இருவரின் ஜாதகத்தையும் மேட்ச் செய்து பார்த்துவிட்டேன். விடையைச் சொல்வதற்கு முன்பாக
    இன்னும் ஒரு கேள்வி பாக்கியுள்ளது.
    அந்தப் பெண் உங்கள் காதலியா? காதலி இல்லையென்றால் அவருடைய ஜாதகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
    ===================================
    Dear Sir,
    Sathiyamaga Aval en Kathali Illai!!! (Promising you that she is not my lover). Got this horoscope from her family member saying the my horoscope is matching. I know that the birth details are important to cast the chart, so I have noted. I did not even see her? she is no way related to me. My father is no more(Since last Nov) and I have to decide everything. I don't want to be misguided in this matter eventhough Iam completed 31. Please guide me sir.///////

    இருவரும் அடுதத்டுத்த நட்சத்திரம். கோச்சாரசனி இருவரையும் தொடர்ந்து படுத்தும். அதோடு பெண்ணிற்கு தோஷம் அதிகம் இருப்பதாக மேட்சிங் மென்பொருள் சொல்கிறது.

    அதன் விவரம் கீழே உள்ளது. நீங்களூம் அந்த தளத்தில் விவரங்களை உள்ளிட்டு வரும் விடையைப் பார்த்துக் கொள்ளலாம்

    ------
    Saravanan
    Date: 22-10-1978
    place: Gobichettipalayam
    Time: 6:37 AM
    For Bride
    Lattitude 11° 28' 0 N Longitude (DMS): 77° 27' 0 E
    ---------
    Bride
    Date: 12-10-1987
    place: Coimbatore
    Time: 18:23 PM
    Lattitude 11.00 N Longitude : 78.00 E.

    http://www.astrosage.com/freechart/matchMaking.asp
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Total Guna Milan 36 33
    Ashtakoot Matching between male and female is 33.
    Mr. Saravanan has 'Medium Mangal Dosha' and Bride has 'High Mangal Dosha'.
    அந்த தளத்தின் முகவரி:
    http://www.astrosage.com/freechart/MatchMakingOutput.asp
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  13. Dear sir,

    Thanks for thr results.

    and about Lakhmi Yogam, I have sukran in Thulam and Budhan also in thulam which the owner of 9th place. DO I have this yogam?

    Thanks
    Saravana

    ReplyDelete
  14. ஐயா,
    பாடம் Super. என் Circle யாருக்கும் இந்த யோகம் இல்லை :-)

    எனக்கு mail பாடம்- சகடயோகம், லக்ஷ்மியோகம் வரவில்லை ?
    கிடைதால் helps read while offline.

    ReplyDelete
  15. ஐயா,
    பாடம் Super. என் Circle யாருக்கும் இந்த யோகம் இல்லை :-)

    எனக்கு mail பாடம்- சகடயோகம், லக்ஷ்மியோகம் வரவில்லை ?
    கிடைதால் helps read while offline.

    ReplyDelete
  16. //Saravana said...
    Dear sir,
    Thanks for thr results.
    and about Lakhmi Yogam, I have sukran in Thulam and Budhan also in thulam which the owner of 9th place. DO I have this yogam?
    Thanks
    Saravana////

    ஒன்பதாம் அதிபதி புதன் தன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும். உங்கள் கேஸில் அவர் சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். ஆகவே யோகம் லேதண்டி!

    ReplyDelete
  17. ////singaiSuri said...
    ஐயா,
    பாடம் Super. என் Circle யாருக்கும் இந்த யோகம் இல்லை :-)
    எனக்கு mail பாடம்- சகடயோகம், லக்ஷ்மியோகம் வரவில்லை ?
    கிடைதால் helps read while offline.////

    இங்கே பதிவிடப்படும் பாடங்கள் மின்னஞ்சலில் வராது. எதற்கு இரட்டிப்பு வேலை?

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.

    கடக லக்கணம், லக்கிணாதிபதி சந்திரன் ஐந்தில், 9-க்கு உதாயவனாகிய குரு 9 இல். இந்த ஜாதகர்க்கு லக்ஷ்மி யோகம் இருக்கிறது அல்லவா?

    ReplyDelete
  19. ///Blogger Scorpion King said...
    வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.
    கடக லக்கினம், லக்கினாதிபதி சந்திரன் ஐந்தில், 9-க்கு உதாயவனாகிய குரு 9 இல். இந்த ஜாதகர்க்கு லக்ஷ்மி யோகம் இருக்கிறது அல்லவா?////

    கடக லக்கினத்திற்கு 5ஆம் இடம் விருச்சிகம். அங்கே சந்திரன் நீசமாகிவிடுவார்.
    லக்கினாதிபதி நீசமான பிற்கு யோகம் ஏது சாமி?

    ReplyDelete
  20. /// ஐயா. வகுப்பில் ஆஜர்.
    கடக லக்கணம், லக்கினாதிபதி சந்திரன் ஐந்தில், 9-க்கு உதாயவனாகிய குரு 9 இல். இந்த ஜாதகர்க்கு லக்ஷ்மி யோகம் இருக்கிறது அல்லவா?////

    ////இருக்கிறது!!!!!!!!
    லக்கினாதிபதி சந்திரன் செவ்வாயின் வீட்டில் எத்தனை பரல்களுடன் இருக்கிறார்? பரல்களின் அளவை வைத்து யோகத்தின் அளவும் மாறும்!
    காசுக்குத் தகுந்த பணியாரம்!////

    ஐயா, சந்திரன் செவ்வாய் வீட்டில் 4 பரல் களுடன் உள்ளார். தற்சமயம், சுக்கிர தசை-இல் சனி புக்தி நடை பெறுகிறது. எப்பொழுது நல்ல பலன் கிடைக்கும்?

    லக்னத்தில் சனி உட்கார்ந்து உள்ளார். என்னுடய பிறந்த தேதி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது, கொஞ்சம் பார்த்து சொல்லவும்.

    ReplyDelete
  21. உள்ளேன் அய்யா.
    உங்கள் பொறுமை வியக்க வைக்கிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  22. Dear Sir,

    My cousin is having this yoga...
    Ascentant(Thanusu)-Jupiter(vakiram),3rd-Moon,4-Sani/kethu,5th-Sun(exalt)and mars,6th-Mercury(vakiram),7th-venus,10th Rahu...

    Lagna lord in own house,Ninth lord in exaltation,Fifth lord in own house with sun...This native is not studying well because of Sani in 4th and Rahu dasa is going on...Shall we expect this yoga on Guru thasa(after 2016)???


    Regards,
    Arulnithi

    ReplyDelete
  23. Dear Sir,

    While interestingly studying about parals in our lessons, I got a doubt.

    9,10,11,12 house parals are 28,31,44,16 for me. in 11th I have Sani and right now sani dhsai. Sani suya paralgal 6. I feel this is good sign in my horoscope? please clarify sir?

    Thanks
    Saravana

    ReplyDelete
  24. ////கடக லக்கினத்திற்கு 5ஆம் இடம் விருச்சிகம். அங்கே சந்திரன் நீசமாகிவிடுவார்.
    லக்கினாதிபதி நீசமான பிற்கு யோகம் ஏது சாமி?///

    மன்னிக்கவும்... இந்த பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன். புஸ்ஸ் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete
  25. ரொம்ப நன்றி sir.. தமிழ தட்டச்சு எப்படினு சொன்னதற்கு...

    ReplyDelete
  26. மிக்க நன்றி.
    தமிழில் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil

    ReplyDelete
  27. மிக்க நன்றி சியம் பிரசாத்!!!

    கூகிள் தமிழ் மிக நன்றாக உள்ளது.

    நன்றி
    சரவணா

    ReplyDelete
  28. //தமிழில் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil//

    Shyam Prasad,
    ஐயா பரிந்துரைகும் NHM Writer அருமை, Better than Google transliterate for following reasons
    1. NHM Keymap has better
    2. Allows to use Tamil Phonetic unicode
    3. is Fat client Program (Need to be installed in your PC)No need have internet connection all the time.
    4. NHM Can be used even cross application eg i can type in tamil directly in MSN Chat,word, Notepad.
    5. In google need to type first and cut and paste in another application.

    I dont deny google trans is also good,i use to use it before after i found NHM its my cool.

    :-)

    ReplyDelete
  29. சிங்கைசூரி அவர்களே ,

    இதை தான் உபய படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை .

    ஒரு தகவலுக்காக தெரிவித்தேன் .

    நன்றி.

    ReplyDelete
  30. ///Scorpion King said...
    /// ஐயா. வகுப்பில் ஆஜர்.
    கடக லக்கணம், லக்கினாதிபதி சந்திரன் ஐந்தில், 9-க்கு உதாயவனாகிய குரு 9 இல். இந்த ஜாதகர்க்கு லக்ஷ்மி யோகம் இருக்கிறது அல்லவா?////
    ////இருக்கிறது!!!!!!!!
    லக்கினாதிபதி சந்திரன் செவ்வாயின் வீட்டில் எத்தனை பரல்களுடன் இருக்கிறார்? பரல்களின் அளவை வைத்து யோகத்தின் அளவும் மாறும்!
    காசுக்குத் தகுந்த பணியாரம்!////
    ஐயா, சந்திரன் செவ்வாய் வீட்டில் 4 பரல் களுடன் உள்ளார். தற்சமயம், சுக்கிர தசை-இல் சனி புக்தி நடை பெறுகிறது. எப்பொழுது நல்ல பலன் கிடைக்கும்?
    லக்னத்தில் சனி உட்கார்ந்து உள்ளார். என்னுடய பிறந்த தேதி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது, கொஞ்சம் பார்த்து சொல்லவும்.////

    எனது பதில் அடுத்து உள்ளது!

    ReplyDelete
  31. ////RVC said...
    உள்ளேன் அய்யா.
    உங்கள் பொறுமை வியக்க வைக்கிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்./////

    எனது பதிவிற்கு அனைத்து வயதினரும் வருகிறார்கள். 22 வயது இளைஞர்களும் உண்டு. 68 வயது மூத்த குடிமக்களும் உண்டு.ஆகவே பொறுமைதான் பிரதானம்.

    ReplyDelete
  32. ////Arul said... Dear Sir,
    My cousin is having this yoga...
    Ascentant(Thanusu)-Jupiter(vakiram),3rd-Moon,4-Sani/kethu,5th-Sun(exalt)and mars,6th-Mercury(vakiram),7th-venus,10th Rahu...
    Lagna lord in own house,Ninth lord in exaltation,Fifth lord in own house with sun...This native is not studying well because of Sani in 4th and Rahu dasa is going on...Shall we expect this yoga on Guru thasa(after 2016)???
    Regards,
    Arulnithi//////

    குரு தசையில் பலன் இருக்கும்!

    ReplyDelete
  33. ////Saravana said...
    Dear Sir,
    While interestingly studying about parals in our lessons, I got a doubt.
    9,10,11,12 house parals are 28,31,44,16 for me. in 11th I have Sani and right now sani dhsai. Sani suya paralgal 6. I feel this is good sign in my horoscope? please clarify sir?
    Thanks
    Saravana///

    Daily you are asking more than 2 questions, giving some deatils of your horoscope! Your quota is over. Next personal question is allowed after a month!
    பாடங்களைப் படியுங்கள். மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீனை நீங்களே பிடிக்கலாம்!

    ReplyDelete
  34. ////Scorpion King said...
    ////கடக லக்கினத்திற்கு 5ஆம் இடம் விருச்சிகம். அங்கே சந்திரன் நீசமாகிவிடுவார்.
    லக்கினாதிபதி நீசமான பிற்கு யோகம் ஏது சாமி?///
    மன்னிக்கவும்... இந்த பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன். புஸ்ஸ் என்று ஆகிவிட்டது./////

    பார்த்ததற்கு நன்றி! புஸ்ஸெல்லாம் ஆக வேண்டாம்! Take it easy!

    ReplyDelete
  35. ////sasi said...
    ரொம்ப நன்றி sir.. தமிழில் தட்டச்சு எப்படினு சொன்னதற்கு...//////

    ஆதனால் என்ன? பரவாயில்லை!

    ReplyDelete
  36. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி.
    தமிழில் டைப் செய்ய http://www.google.com/transliterate/indic/Tamil/////

    That is useful only in online!
    In off line you can use NHM writer

    ReplyDelete
  37. //சிங்கைசூரி அவர்களே ,
    இதை தான் உபய படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை .
    ஒரு தகவலுக்காக தெரிவித்தேன் .
    நன்றி.//


    சியாம் அவர்களே,
    நல்ல தகவல் Thanks for sharing here, நானும் அதே போல் ஒரு Info
    Share பண்ண try.., அதிகபிரசங்கியாய் தோன்றினால் என்னை மனிக்கவும் :->

    ReplyDelete
  38. Daily you are asking more than 2 questions, giving some deatils of your horoscope! Your quota is over. Next personal question is allowed after a month!
    பாடங்களைப் படியுங்கள். மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீனை நீங்களே பிடிக்கலாம்!


    +++++++++++++++++++++++++++++++++++

    மதிப்புக்குரிய வாத்தியார் அய்யா!

    பெரும்பாலும் நான் ஆம் அல்லது இல்லை போன்ற கேள்விகளை மட்டுமே கேட்கிறேன்.

    பதில் இல்லை மற்றும் ஒரு மதம் கலித்து கேள் என்றால் என் மனது வாடுகிறது அய்யா. பெரிய மனசு வ்யுங்கள்.

    நம்பிக்கையுடன்
    சரவணன் கொயம்முத்துரில் இருந்து.

    ReplyDelete
  39. எனக்கு லக்கின அதிபதி செவ்வாய். மேஷ லக்கினம். செவ்வாய் 8-ஆம் வீட்டில் ஆட்சி. 9-ஆம் அதிபதி குரு. 9-ஆம் வீட்டில் ஆட்சி.

    எனக்கு இந்த யோகம் உண்டா. இல்லை 8-ஆம் வீட்டில் அஸ்தமனமா ஐயா?

    ReplyDelete
  40. எனக்கு கன்னி லக்னம் லக்கினத்தில் சூரியன்
    ஒன்பதாம் (ரிஷபம்) வீட்டில் ஒருவரும் இல்லை. ஆனால்
    இரண்டில் (துலாம்) புதனும் சுக்கிரனும் உள்ளனர்.
    சுக்கிரன் ஆட்சி. தோற்றத்தில் லக்ஷ்மி யோகம் இல்லை.
    மற்றபடி நீங்கள் தான் கூற வேண்டும்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. ஐயா,
    எனக்கு மின்னஞ்சல் பாடம் வரவில்லையே!

    ReplyDelete
  42. ஆக லஷிமி யோகமும் நமக்கு தேறாது
    போல இருக்கே சாமி.
    துலா லக்னத்திலே சுக்ரன்.
    கன்னியிலே புதன்.
    என்ன பண்ண, 337ன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்
    மற்றவங்களுக்காவது இருக்கான்னு பார்ப்போம்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  43. Dear Sir,

    In my son's Jathagam. Lord of Lagna Leo is in Kumbam (7th place with Mercury) at the same time 9th house Lord Mars is in the Viruchigam (4th place from Lagna).

    Is he having this Yogam because the Sun is in the enemy house but its 7th place as well.

    Please explain....

    Thanks,
    Alasiam G

    ReplyDelete
  44. dear sir, for me 9 th house woner guru neesa vagram with lagnathipathi chandran. guru dasa starting next year can i get lakshmi yogam

    ReplyDelete
  45. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    உள்ளேன் ஐயா..!/////

    வருகைப் பதிவிற்கு நன்றி உனா தானா!

    ReplyDelete
  46. Saravana said...
    Daily you are asking more than 2 questions, giving some deatils of your horoscope! Your quota is over. Next personal question is allowed after a month!
    பாடங்களைப் படியுங்கள். மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீனை நீங்களே பிடிக்கலாம்!
    +++++++++++++++++++++++++++++++++++
    மதிப்புக்குரிய வாத்தியார் அய்யா!
    பெரும்பாலும் நான் ஆம் அல்லது இல்லை போன்ற கேள்விகளை மட்டுமே கேட்கிறேன்.
    பதில் இல்லை மற்றும் ஒரு மதம் கலித்து கேள் என்றால் என் மனது வாடுகிறது அய்யா. பெரிய மனசு வையுங்கள்.
    நம்பிக்கையுடன்
    சரவணன் கோயமுத்துரில் இருந்து./////
    -----------------------------------
    மதிப்பிற்குரிய மாணவர் திலகத்திற்கு,
    அந்தந்தப் பதிவில் எழுதப்பட்டிருக்கும் பாடத்தில் எழும் சந்தேகங்களைக் கேளுங்கள்
    மற்றபடி நோ பெர்சனல் கேள்விகள்!
    வாத்தியாரும் கோவையில் இருந்து!

    ReplyDelete
  47. ////VIKNESHWARAN said...
    எனக்கு லக்கின அதிபதி செவ்வாய். மேஷ லக்கினம். செவ்வாய் 8-ஆம் வீட்டில் ஆட்சி. 9-ஆம் அதிபதி குரு. 9-ஆம் வீட்டில் ஆட்சி.
    எனக்கு இந்த யோகம் உண்டா. இல்லை 8-ஆம் வீட்டில் அஸ்தமனமா ஐயா?////

    லக்கினாதிபதி எட்டில் இருந்தால் வலுவாக இல்லை! ஆகவே இந்த யோகம் இல்லை!

    ReplyDelete
  48. ////T K Arumugam said...
    எனக்கு கன்னி லக்னம் லக்கினத்தில் சூரியன்
    ஒன்பதாம் (ரிஷபம்) வீட்டில் ஒருவரும் இல்லை. ஆனால்
    இரண்டில் (துலாம்) புதனும் சுக்கிரனும் உள்ளனர்.
    சுக்கிரன் ஆட்சி. தோற்றத்தில் லக்ஷ்மி யோகம் இல்லை.
    மற்றபடி நீங்கள் தான் கூற வேண்டும்
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி
    சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக
    அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும்.)

    இரண்டாவது விதிப்படி அமைப்பு இல்லை. ஆகவே யோகம் இல்லை!

    ReplyDelete
  49. ///Blogger PowerPix365 said...
    ஐயா,
    எனக்கு மின்னஞ்சல் பாடம் வரவில்லையே!/////

    எப்படி வரும்? உங்கள் மின்னஞ்சல் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?
    தெரியப்படுத்துங்கள்
    வாத்தியாரின் மின்naஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  50. /////Blogger thirunarayanan said..
    ஆக லக்ஷிமி யோகமும் நமக்கு தேறாது
    போல இருக்கே சாமி.
    துலா லக்னத்திலே சுக்ரன்.
    கன்னியிலே புதன்.
    என்ன பண்ண, 337ன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்
    மற்றவங்களுக்காவது இருக்கான்னு பார்ப்போம்.
    நன்றி அய்யா.////

    நல்லது நாராயண(ன்)

    ReplyDelete
  51. ////Blogger Alasiam G said...
    Dear Sir,
    In my son's Jathagam. Lord of Lagna Leo is in Kumbam (7th place with Mercury) at the same time 9th house Lord Mars is in the Viruchigam (4th place from Lagna).
    Is he having this Yogam because the Sun is in the enemy house but its 7th place as well.
    Please explain....
    Thanks,
    Alasiam G/////

    லக்கின அதிபதி வலுவாக இல்லை. ஆகவே யோகம் இல்லை!

    ReplyDelete
  52. ////Blogger jpmeera said...
    dear sir, for me 9 th house owner guru neesa vagram with lagnathipathi chandran. guru dasa starting next year can i get lakshmi yogam/////

    ஒன்பதாம் அதிபதி நீசமாகிவிட்டதாக நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். யோகம் இல்லை!

    ReplyDelete
  53. வருகை பதிவு : உள்ளேன் அய்யா.
    கீழ் காணும் தொடர்பியை பயன்படுத்தி எளிதாக தமிழ் டைப் செய்யலாம்.
    நன்றி !
    http://www.google.com/transliterate/indic/Tamil

    ReplyDelete
  54. some astrology books telling "neesa vagram" equal to uuchha palan so i asked any mistake sorry sir.

    ReplyDelete
  55. Dear sir,
    IN navamsa, kadaga lagnam, chandran in 7th ( magaram) guru in 9th (meenam)chandran suya paral 3, Guru suya paral 5. does this constellation poess lakshmi yogam.
    if means how much %. bks chandran has got only 3 prals.guru with mars & mercury.

    ReplyDelete
  56. sir, my lagnam is makaram, lagna lord saturn & 9th lord mercury are in 6th place i.e. in mithunam, mercury in its own house and sat also in friend's house, is it called lakshmi yoga or since lagna lord is in 6th place, is it cancelled? this is the 1st doubt i am asking, so please reply

    ReplyDelete
  57. லக்கினாதிபதி 33பரல், சுய வர்க்கத்தில் 5பரல்,லக்கினத்துக்கு 7ஆம் வீட்டில் 9ஆம் ஆதி உச்சம்.ஜாத்கத்திலே இந்த யோகமும் confirm ஆகிடுச்சு.
    ராஜலச்சுமி வரவுக்காக வாசக்கதவை திறந்தே வெச்சுருக்கேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  58. Dear Sir

    Lesson is very nice.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  59. ////Blogger லலித் said...
    வருகை பதிவு : உள்ளேன் அய்யா.
    கீழ் காணும் தொடர்பியை பயன்படுத்தி எளிதாக தமிழ் டைப் செய்யலாம்.
    நன்றி !
    http://www.google.com/transliterate/indic/Tamil////

    நெட்’டில் இருக்கும்போது மட்டும்தான் நீங்கள் சொல்வது பயன்படும்
    NHM writer கணினியில் உள்ளிறங்கி எல்லாப் பயன்பாட்டிற்கும் உதவும்
    you can type tamil in MSword, word pad, excel, power point....etc!

    ReplyDelete
  60. /////Blogger jpmeera said...
    some astrology books telling "neesa vagram" equal to uuchha palan so i asked any mistake sorry sir.////

    நீசமும் பெற்று வக்கிரமும் பெற்றிருந்தால், இரண்டு கோளாறுகள். பலன் இருக்காது!

    ReplyDelete
  61. ////Blogger marutham said...
    Dear sir,
    IN navamsa, kadaga lagnam, chandran in 7th ( magaram) guru in 9th (meenam)chandran suya paral 3, Guru suya paral 5. does this constellation poess lakshmi yogam.
    if means how much %. bks chandran has got only 3 prals.guru with mars & mercury.

    லக்கினநாதன் வலுவாக இருக்க வேண்டும் என்பதுதானே முதல் விதி! அவர் வீக்’காக இருப்பதால் இந்த யோகம் இல்லை! குரு மூவருடன் என்றால் அது அடிதடி, யுத்தக் கணக்கில் வரும்!

    ReplyDelete
  62. //////Blogger Uma said...
    sir, my lagnam is makaram, lagna lord saturn & 9th lord mercury are in 6th place i.e. in mithunam, mercury in its own house and sat also in friend's house, is it called lakshmi yoga or since lagna lord is in 6th place, is it cancelled? this is the 1st doubt i am asking, so please reply////

    6,8,12ஆம் வீடுகளில் அமர்ந்தால் 3rd umpire போன்று யாரையும் கேட்க வேண்டாம். அவுட், அவுட்தான்!

    ReplyDelete
  63. ///Blogger minorwall said...
    லக்கினாதிபதி 33பரல், சுய வர்க்கத்தில் 5பரல்,லக்கினத்துக்கு 7ஆம் வீட்டில் 9ஆம் ஆதி உச்சம்.ஜாத்கத்திலே இந்த யோகமும் confirm ஆகிடுச்சு.
    ராஜலச்சுமி வரவுக்காக வாசக்கதவை திறந்தே வெச்சுருக்கேன்.
    மிக்க நன்றி.////

    ஜப்பானுக்கு அனுப்பிவைத்ததே ராஜலக்‌ஷ்மிதான் மைனர்!

    ReplyDelete
  64. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Lesson is very nice.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  65. சார்,
    உங்க மூலமா ராஜலக்ஷ்மிக்கு நன்றி.
    இந்தியாவிலேருந்து ஜப்பான் வந்தது ஒரு விதத்திலே மகிழ்ச்சிதான் என்றாலும் ஜப்பான்லே இருக்குற எல்லோருக்குமே basic living standardடை இந்த govt. அமைச்சுக்கொடுத்துருக்குரதை compare பண்ணிப்பார்க்கும்போது நம்ம govt. நல்லா perform பண்ணிருந்தால் எல்லோருமே இதை அனுபவிக்கலாமேன்னு வருத்தமாத்தான் இருக்கு.
    நாடு கடந்துதான் இந்த நிலையை அனுபவிக்க்கணுமான்னு நம்ம நாட்டு அரசியல் மேலேயே ஒரு வெறுப்பு தட்டுதே.
    இதுக்கெல்லாம் ராசி பலன் எப்பிடி மேட்ச் ஆகுதுன்னு ஒண்ணுமே புரியலை.

    ReplyDelete
  66. ////Geekay said...
    உள்ளேன் ஐயா..!////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  67. ///minorwall said...
    சார்,
    உங்க மூலமா ராஜலக்ஷ்மிக்கு நன்றி.
    இந்தியாவிலேருந்து ஜப்பான் வந்தது ஒரு விதத்திலே மகிழ்ச்சிதான் என்றாலும் ஜப்பான்லே இருக்குற எல்லோருக்குமே basic living standardடை இந்த govt. அமைச்சுக்கொடுத்துருக்குரதை compare பண்ணிப்பார்க்கும்போது நம்ம govt. நல்லா perform பண்ணிருந்தால் எல்லோருமே இதை அனுபவிக்கலாமேன்னு வருத்தமாத்தான் இருக்கு.
    நாடு கடந்துதான் இந்த நிலையை அனுபவிக்க்கணுமான்னு நம்ம நாட்டு அரசியல் மேலேயே ஒரு வெறுப்பு தட்டுதே.
    இதுக்கெல்லாம் ராசி பலன் எப்பிடி மேட்ச் ஆகுதுன்னு ஒண்ணுமே புரியலை./////

    நாடுகளுக்கும் 337தான் மைனர். கடவுள் இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கு வேறு நஷ்ட ஈடுகளை வழங்கியுள்ளார். உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள் தெரியவரும்!

    ReplyDelete
  68. dear sir, now start to collecting my relatives and friends birth data. so please send your birth data to me thanks

    ReplyDelete
  69. ////jpmeera said...
    dear sir, now start to collecting my relatives and friends birth data. so please send your birth data to me thanks////

    வாங்கிய வரத்தை பரிசோதிக்க, வரத்தைக் கொடுத்த சிவன் தலையிலே கைவக்க முயன்றவன் கதை தெரியுமா உங்களுக்கு?

    என்னிடம், நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் உள்ளன. அதெல்லாம் என்னைத் தேடி வந்தவர்கள் கொடுத்தது. அதுபோல நானும் உங்களைத் தேடிவரும் காலம் வரலாம்
    அப்போது தருகிறேன். அதுவரை உங்களைத் தேடிவருபவர்களிடம் மட்டும் சேகரியுங்கள் போதும்! மொத்தத்தில் பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனென்றால் தீவிர ஜோதிட ஆர்வம் பைத்தியத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்! Do not become mad!

    ReplyDelete
  70. Dear Vathiyar,

    I am of kumba lagna native.

    Saturn in 4th bhava and sukra is in lagna.

    lagna - budhan and sukran
    4th bhava - my lagnathipathy, saturn.
    this is parivarthnai yoga.

    Request you to Please tell my mark for this yoga.

    thanks and warm regards,
    Ramalingam

    ReplyDelete
  71. Dear Vathiyar,

    if 4th and 9th are in lagna then its called Asta lakshmi yoga.is it true.

    I am of kumba lagna native.

    Saturn in 4th bhava and sukra is in lagna.

    Request you to Please tell my mark for lakshmi yoga.



    thanks and warm regards,
    Ramalingam

    ReplyDelete
  72. பாடம் அருமை.
    சங்கர்

    ReplyDelete
  73. ////Ram said...
    Dear Vathiyar,
    I am of kumba lagna native.
    Saturn in 4th bhava and sukra is in lagna.
    lagna - budhan and sukran
    4th bhava - my lagnathipathy, saturn.
    this is parivarthnai yoga.
    Request you to Please tell my mark for this yoga.
    thanks and warm regards,
    Ramalingam////

    மூவருமே ஒருவருக்கொருவர் நட்புக் கிரகங்கள்தன். நல்லதுதான்
    மார்க்கை, அவர்களுடைய சுயவர்க்கப்பரல்களை வைத்து நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  74. /////Ram said...
    Dear Vathiyar,
    if 4th and 9th are in lagna then its called Asta lakshmi yoga.is it true.//////

    நீங்கள் சொல்வது தவறு. அடுத்த பாடம் அதுதான் பொறுத்திருந்து படியுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    I am of kumba lagna native.
    Saturn in 4th bhava and sukra is in lagna.
    Request you to Please tell my mark for lakshmi yoga.
    thanks and warm regards,
    Ramalingam/////

    லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி
    சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக
    அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும்.)

    உங்களுடைய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் இருப்பதால்
    இந்த யோகம் உங்களுக்கு உண்டு! உண்டு! உண்டு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  75. ////hotcat said...
    பாடம் அருமை.
    சங்கர்////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  76. இத கேட்ட உடனே எனக்கு தோணுற நஷ்ட ஈடு முட்டை லாப்பாவும் மட்டன் குருமாவும்தான்.இங்கே சுட்டுப்போட்டாலும் அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

    ReplyDelete
  77. ////minorwall said...
    இத கேட்ட உடனே எனக்கு தோணுற நஷ்ட ஈடு முட்டை லாப்பாவும் மட்டன் குருமாவும்தான்.இங்கே சுட்டுப்போட்டாலும் அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.///

    கரெக்ட் மைனர்! அதைத்தான் நம்ம இசைஞானியும் சொன்னார்:
    ”சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரைப் போலாகுமா?”

    ReplyDelete
  78. ஐயா
    எனது லக்னம் கும்பம் . லக்னாதிபதி சனி 9 வீட்டில் உச்சம் . அனால் அவர் வக்கிரம். ஒன்பதாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் உள்ளார். இந்த அமைப்பு லக்ஷ்மி யோதமா

    ReplyDelete
  79. ////indianm12 said...
    ஐயா
    எனது லக்னம் கும்பம் . லக்னாதிபதி சனி 9 வீட்டில் உச்சம் . அனால் அவர் வக்கிரம். ஒன்பதாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் உள்ளார். இந்த அமைப்பு லக்ஷ்மி யோகமா?///

    சனி வக்கிரம் பெற்றதால் இந்த யோகம் கிடைக்காது!

    ReplyDelete
  80. my lagnam is mesh. jupiter in 5 th place. how is jupiter dasa.and how is my future. rasi also mesh. lagnathipathi in 10th place(magaram)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com