மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.15

தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!


தினமும் ரசம் உடல் நலம் உங்கள் வசம்!       

ரசம் பற்றிய ஒரு அலசல்

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப்
பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம்,
புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி
முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும்  ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
புளிரசம்,
எலுமிச்சை
ரசம், மிளகு ரசம்,
அன்னாசிப் பழரசம்,
கொத்துமல்லி ரசம்
என்று பலவிதமான  சுவைகளில் ரசத்தைத்  தயாரித்தாலும் இந்தப்
பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
பல நோய்களைக் குணமாக்கும் மாற்று  மருந்து (Antidote) தான் இந்த
ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது
போக்கிவிடுகிறது. அயல்  நாட்டினர்  உணவு முறையில் சூப்புக்கு
முதலிடம் கொடுத்துள்ளனர்.

இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும்
பசியின்மை, செரியாமை,  வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு,
ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்
இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம்
பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக்
குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு,
ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள்
அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல்
தடுக்கிறது. மூளைக்கும்  உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
 நரம்புகள் சாந்தடைவதால்  நோய்கள் குணமாகின்றன.
அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும்  மாவுச்சத்தும்
 பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால்,காய்ச்சல்  தணிந்து
சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.  உடல்  சூடு, நாக்கு வறட்சி முதலியன
அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
மாதவிலக்கு  சம்பந்தமான கோளாறுகள்  வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள்  சிறப்பாகச்
செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும்,
நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக்
குணப்படுத்தவும், ரசத்தில் சேரும்  கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது.

கறிவேப்பிலையால்  ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து
 நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்
கோளாறு, குடல் பூச்சிகள்,  சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,
 கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.
 இதயத்திற்கு  இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள்
தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில்
புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும்,
‘சி’வைட்டமின்களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல்
கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி,தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை
ரசத்தில் சேரும்  இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில்
காசம்  முதலியவற்றையும் குணமாக்கி,  குளிர்காய்ச்சலையும்
தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை
முதலியவற்றை ரசத்தில்  சேரும் மிளகு, சக்தி  வாய்ந்த
உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும்,
மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல்
தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில்  குடைச்சல், தலை சுற்றல்
முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான  கோளாறுகளை
நீக்கி வயிற்றைச் சுத்தமாக  வைத்திருக்க  உதவுகிறது.  ரசத்தில்
புளியின்  அளவை மட்டும் மிகக்  குறைவாகச்  சேருங்கள்.

 மழைக்காலத்தில்  உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே
நோய்களைத் தடுத்துவிடுவதால்,  ரசத்தின் உதவியால்
ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக்  காப்பி, டீ
 முதலியவற்றால் வரும்  பித்தம் முதலிய  வற்றையும், தினசரி
 உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே,  ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும்
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

இணையத்தில் படித்தேன். உங்களுக்குப் பயன்படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம் குருவே
    இத்தனை வருடங்களாக நான் வெரும் சாப்பாட்டிற்காக மட்டும் தான் என்றிருந்தேன் ஐயா. ரசத்தில் இவ்லோ
    மருத்துவ குணம் உள்ளது என்று தங்கலுடைய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொன்டேன் ஐயா. எனது மனம் மார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மிகவும் *ரசமான* ரசத்தை பற்றி ரசமாக சொல்லிவிட்டீர்கள் .
    நன்றி .

    ReplyDelete
  3. ஐயா,
    வணக்கம். வீட்டில் தினமும் சாம்பார், ரசம், பொரிய்ல் முதலானவை சாப்பாட்டில் சேர்க்கப்பட்டாலும் எங்கள் குழந்தைகள் மற்றும் மாப்பிள்ளை முதலானோர் எதற்காக ரசம் சாப்பிடவேண்டும், அது வெறும் புளித்தண்ணீர் தானே, சத்துகரகள் ஒன்றும் இல்லையே? என்று கூறும்போது பல நாட்கள் மௌனமாக இருந்திருக்கிறேன்.
    இன்று, வாத்தியார் மூலம் ரசத்தின் மகத்துவம் அறிந்தேன். கூடவே, நம் முன்னோர்களின் உன்னதமான அறிவை நினைந்து வியக்கிறேன். அறிவு சார்ந்த பகிர்வுக்கு நன்றி, ஐயா!
    நேற்றைய பதிவில் வள்ளி மணாளனின் திருச்செந்தூர் பற்றிய தகவல்கள் மிகவும் ருசிகரம். படைவீடுகளில் இது எங்ஙணம் சிறப்பு வாய்ந்தது, தல வரலாறு மற்றும் பெயர்க் காரணம் என அனைத்துமே அமர்க்களம்.
    செந்தூர் வள்ளலுக்கு அரஹரோகரா!!

    ReplyDelete
  4. வணக்கம் குரு,

    ரசம்தான் கலவையானது என நினைக்கிறேன் நினைத்தால்...அதில் இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதே..பகிர்வுக்கு நன்றி... செல்வம்.

    ReplyDelete
  5. /////Blogger siva kumar said...
    வணக்கம் குருவே
    இத்தனை வருடங்களாக நான் வெரும் சாப்பாட்டிற்காக மட்டும் தான் என்றிருந்தேன் ஐயா. ரசத்தில் இவ்லோ
    மருத்துவ குணம் உள்ளது என்று தங்கலுடைய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொன்டேன் ஐயா. எனது மனம் மார்ந்த நன்றி ஐயா./////

    உங்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே வலையில் ஏற்றினேன் சிவமுமார்!

    ReplyDelete
  6. //////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மிகவும் *ரசமான* ரசத்தை பற்றி ரசமாக சொல்லிவிட்டீர்கள் .
    நன்றி .////

    நீங்களும் ரசித்துப் படித்துவிட்டீர்கள் கணபதியாரே!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    வணக்கம். வீட்டில் தினமும் சாம்பார், ரசம், பொரிய்ல் முதலானவை சாப்பாட்டில் சேர்க்கப்பட்டாலும் எங்கள் குழந்தைகள் மற்றும் மாப்பிள்ளை முதலானோர் எதற்காக ரசம் சாப்பிடவேண்டும், அது வெறும் புளித்தண்ணீர் தானே, சத்துகரகள் ஒன்றும் இல்லையே? என்று கூறும்போது பல நாட்கள் மௌனமாக இருந்திருக்கிறேன்.
    இன்று, வாத்தியார் மூலம் ரசத்தின் மகத்துவம் அறிந்தேன். கூடவே, நம் முன்னோர்களின் உன்னதமான அறிவை நினைந்து வியக்கிறேன். அறிவு சார்ந்த பகிர்வுக்கு நன்றி, ஐயா!
    நேற்றைய பதிவில் வள்ளி மணாளனின் திருச்செந்தூர் பற்றிய தகவல்கள் மிகவும் ருசிகரம். படைவீடுகளில் இது எங்ஙணம் சிறப்பு வாய்ந்தது, தல வரலாறு மற்றும் பெயர்க் காரணம் என அனைத்துமே அமர்க்களம்.
    செந்தூர் வள்ளலுக்கு அரஹரோகரா!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. ///Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    ரசம்தான் கலவையானது என நினைக்கிறேன் நினைத்தால்...அதில் இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதே..பகிர்வுக்கு நன்றி... செல்வம்./////

    உண்மைதான். நன்றி செல்வம்!

    ReplyDelete
  9. வணக்கம் குரு
    இவ்வளவு சத்துள்ளது ரசம் என்பது எனக்கு தெரியாது. என் கண்களை துறந்துவிட்டீர்கள்.
    நன்றி
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  10. /////Blogger Rajam Anand said...
    வணக்கம் குரு
    இவ்வளவு சத்துள்ளது ரசம் என்பது எனக்கு தெரியாது. என் கண்களை திறந்துவிட்டீர்கள்.
    நன்றி
    ராஜம் ஆனந்த்////

    அப்படியா. நல்லது சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com