மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.11.15

பெயர்க் காரணத்தைப் பார்ப்போம் வாருங்கள்!

தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கும் முருகப்பெருமான்

திருப்பரங்குன்றத்துக் கோயிலின் நுழைவாயில்

பெயர்க் காரணத்தைப் பார்ப்போம் வாருங்கள்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

பக்தி மலர்

3.11.2015 செவ்வாய்க்கிழமை

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது.
மதுரைக்கு  தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள
இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட
நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில்
முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கட்டடக்கலை வடிவமைப்பு: பாண்டியர் மற்றும் நாயக்கர் கால
குடைவரைக் கோயில்

சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன்
(765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன்,
சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில்
வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706) திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன.

கோயில் அமைப்பு

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக்
குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்
கனிவாய்ப்  பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து
சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை
அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும்
புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள
10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.

கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி
சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும்
சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை.

சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றத்தின்
உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்) உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது. மலையின் வடமேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ள
ஒரு குகை உள்ளது.

தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின்
உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப்
பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர
உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே
அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல்
முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், உலக நியதிக்கு ஒட்டாத,
சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்
குன்றத்திற்கு வந்து  தவம் செய்தார்.

இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி,
முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்.
சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது
ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக்
கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து
நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும்,
அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை
அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய,
சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர்
பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை
வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம்
செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

பெயர்க்காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப்
பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான்
குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை
உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என
ஆயிற்று.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு
வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை
நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

சங்க இலக்கியங்களில்

அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல்
போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று,
பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை
என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்புகள்

முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில்
அளவில் பெரியதாகும்.லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி
சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர்  இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து
பதிகங்கள் பல பாடியுள்ளனர்.சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

பயண வசதி

தமிழ்நாட்டின் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம்
கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில்
பாதையில் திருப்பரங்குன்றத்தின் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

Source: Wikipedia
=========================================================
அப்பனின் படை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றத்தைப் பற்றி நீங்கள் (இளைஞர்கள்) அறிந்து கொள்ள இன்று பதிவு
செய்துள்ளேன்.
அன்புடன்,
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. வணக்கம் ஐயா
    இன்றைய பக்தி மலரில் முருகப்பெருமானின் முதல் வீடான திருப்பறங்குன்ற தரிசனத்தை நேரில் கான வைத்தது ஐயா உங்களின் இன்றைய பக்தி மலர்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி .
    சென்றமுறை இந்தியாவிற்கு வந்து இருந்த பொழுது (2011) திருப்பரங்குன்றம் சென்றுருந்தேன் .
    அந்த கோவிலில் வேத பாராயணம் செய்தேன் . மிகவும் அழகான இடம்..
    எனக்கு பிடித்த அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் இதோ.....

    சந்ததம் பந்தத் ...... தொடராலே
    சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

    கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
    கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

    தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
    சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

    செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
    தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

    ......... சொல் விளக்கம் .........

    சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே

    சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,

    கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும்

    கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,

    அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?

    தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை

    புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,

    சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய்,

    செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,

    தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.

    ...(நன்றி: கொளமாரம் )

    ReplyDelete
  3. அய்யா,
    திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முதலாவது பிரகார சுற்றில் உள்ள விநாயகர் சந்நிதியில் காணப்படும் அவ்வை பாட்டியின் விநாயகர் அகவலில், அவ்வையின் இறை தரிசன அனுபவத்தை மானுடர்களுக்கு புரியும் வகையில் கடப்பா கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இறை தரிசன அனுபவ விளக்கத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை(அதற்கான பாக்கியம் இல்லை)

    ReplyDelete
  4. Respected Sir,

    When I read your lines, I feel that I am there...

    Thanks for your sharing...

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    அருமையான பதிவு எம் அப்பன் முருகன் திருமணகோலம் கண் கொள்ளா காட்சி ..இதே போல் எங்கள் ஊருக்கு அருகே 19 km கிழக்கே கழுகுமலை கோவிலில் முருகன் மலையை ஒட்டி எழுந்தருளி உள்ளார் குடவரை கோவில் மலை மேல் உண்டு .சமணர் படுகையும் உண்டு ..
    கழுகு மலை கோவில் தெப்பம் அந்த ஊருக்கு குடி தண்ணீர் தேவை பூர்த்தி செய்கிறது [இப்போ தாமிர பரணி நீர் ]தெப்பத்தில் மீன் கிடையாது பாசி பிடிக்காது தெளிந்த பால் போன்று இருக்கும் நீர் .மலையில் இருந்து வடிகிற நீர் சில மூலிகைகளின் சாரம்பெற்று அருமையாக இருக்கிறது..

    ReplyDelete
  6. Hello Sir,

    Excellent, this is one of the best blog from you...

    Thank you... Ellam Sivamayam..

    ReplyDelete
  7. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    இன்றைய பக்தி மலரில் முருகப்பெருமானின் முதல் வீடான திருப்பறங்குன்ற தரிசனத்தை நேரில் கான வைத்தது ஐயா உங்களின் இன்றைய பக்தி மலர்./////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  8. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    மிக்க நன்றி .
    சென்றமுறை இந்தியாவிற்கு வந்து இருந்த பொழுது (2011) திருப்பரங்குன்றம் சென்றுருந்தேன் .
    அந்த கோவிலில் வேத பாராயணம் செய்தேன் . மிகவும் அழகான இடம்..
    எனக்கு பிடித்த அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் இதோ.....
    சந்ததம் பந்தத் ...... தொடராலே
    சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
    கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
    கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
    தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
    சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
    செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
    தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே
    சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
    கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும்
    கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
    அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
    தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை
    புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
    சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய்,
    செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
    தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
    ...(நன்றி: கொளமாரம் )//////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், அருணகியாரின் பாடல் மூலம் எங்களைப் பரவசப் படுத்தியமைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger slmsanuma said...
    அய்யா,
    திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முதலாவது பிரகார சுற்றில் உள்ள விநாயகர் சந்நிதியில் காணப்படும் அவ்வை பாட்டியின் விநாயகர் அகவலில், அவ்வையின் இறை தரிசன அனுபவத்தை மானுடர்களுக்கு புரியும் வகையில் கடப்பா கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இறை தரிசன அனுபவ விளக்கத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை(அதற்கான பாக்கியம் இல்லை)/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    When I read your lines, I feel that I am there...
    Thanks for your sharing...
    With kind regards,
    Ravichandran M////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    அருமையான பதிவு எம் அப்பன் முருகன் திருமணக்கோலம் கண் கொள்ளாக் காட்சி ..இதே போல் எங்கள் ஊருக்கு அருகே 19 km கிழக்கே கழுகுமலை கோவிலில் முருகன் மலையை ஒட்டி எழுந்தருளி உள்ளார் குடவரை கோவில் மலை மேல் உண்டு .சமணர் படுகையும் உண்டு ..
    கழுகு மலை கோவில் தெப்பம் அந்த ஊருக்கு குடி தண்ணீர் தேவை பூர்த்தி செய்கிறது [இப்போ தாமிர பரணி நீர் ]தெப்பத்தில் மீன் கிடையாது பாசி பிடிக்காது தெளிந்த பால் போன்று இருக்கும் நீர் .மலையில் இருந்து வடிகிற நீர் சில மூலிகைகளின் சாரம்பெற்று அருமையாக இருக்கிறது..////

    தகவலுக்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  12. /////Blogger Prakash Kumar said...
    Hello Sir,
    Excellent, this is one of the best blog from you...
    Thank you... Ellam Sivamayam..//////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. திருப்பரங்குன்றம் [பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி. பல ஆண்டுகளுக்கு முன் சென்றது.மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்.





    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com