மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.11.15

Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!


Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது மாணவக் கண்மணிகளின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத்தலங்களைப் பற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அந்த ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுக வரலாறுகளைக் கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

அவற்றையெல்லாம் விட முக்கியமான செய்தி - அந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றனவாம்.

அதற்கு ஆதாரம் கேட்டு மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களை நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.

செலவோடு செலவாக பணத்தைச் செலவழித்துக் கொண்டு, ஒரு முறை உங்களுக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும், அவைகள் அமைந்த இடங்களும்:

1.அஸ்வினி.
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

2.பரணி.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

3.கார்த்திகை.
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

4.ரோஹிணி.
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

5.மிருக சீரிஷம்.
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

6.திருவாதிரை.
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

7.புனர்பூசம்.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

8.பூசம்.
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

9.ஆயில்யம்.
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

10.மகம்.
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

11.பூரம்.
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

12.உத்திரம்.
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஹஸ்தம்.
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

14.சித்திரை.
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

15.சுவாதி.
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

16.விசாகம்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

17.அனுஷம்.
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

18.கேட்டை.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

19.மூலம்.
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து 22 கி.மீ. பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

20.பூராடம்.
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

22.திருவோணம்.
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

23.அவிட்டம்.
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

24.சதயம்.
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

25.பூரட்டாதி.
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

26.உத்திரட்டாதி.
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

27.ரேவதி.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்ற ஊரில் இக்கோயில் உள்ளது.
---------------------------------------------------------------------------------------
என்ன சரிதானா?
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

  1. Ayya Vanakkam,

    Muthana nalla seythigal.. Nandri.

    Anbudan, S.Kumanan

    ReplyDelete
  2. Vanakkam iyya,

    Mikka nandri intha pathivirku.... migavum payan ullavai.

    Nandri,
    Bala

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    நட்சத்திர கோவில் இருப்பிடத்தையும் அங்கே செல்லும் வழியையும் பதிய விட்டிருப்பதற்க்கு மிக்க நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  4. வணக்கம் குரு,

    பயனுள்ள ரத்தின சுருக்கமான பதிவு. முன்பே தனித்தனியாக நீங்கள் நட்சத்திர கோவில்கள் பட்டியல்கள் கொடுத்துள்ளீர்ள்.
    இது அனைத்தையும் கொண்டுள்ளது இன்னும் அருமை.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  5. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நட்சத்திர கோவில்கள் தலைப்பில் இன்றைய பதிவுக்கு மனம் கணிந்த பாராட்டுக்கள்!!!
    வகுப்பறையில் நட்சத்திர கோவில்கள் தலைப்பில் தாங்கள்கொடுத்த பதிவுகள் முழுமை பெறாமல் இருந்தது. ஆனால் இன்றைய பதிவில் யுவர் எக்ஸலன்சி வாத்தியார் அட் ஒன் ஸ்ட்ரோக்கில் 27 நட்சத்திரக் கோவில்களின் மகிமையை விளக்கத்துடன் கொடுத்து அசத்தி விட்டீர்கள்!!!.
    ஸ்டார்ஸ்2015 வகுப்பில் கேள்வி பதில் விளக்கமும் அருமை.சொந்தக் கதை சோகக்கதைகளை தவிர்க்கும் நாகரீகமான பதில்கள் பாராட்டுக்குரியவை.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  6. ஐயா,
    நட்சத்திர திருத்தலங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்தது தான். ஆனால் அதை அப்படியே
    தராமல், அதற்கு கொடுத்துள்ள விளக்கம் மிக அருமை. தங்களுக்கு அந்த ஆண்டவனின் பூரண அருள் கிடைக்கட்டும். கடவுளை நம்பி வழிபடுவோருக்கே கடவுள் தன் இருப்பை உணர வைப்பது.

    ReplyDelete
  7. Respected Sir,

    Happy morning... Old is gold... Very interesting...

    Have a happy day.

    With best regards,
    Ravi -avn

    ReplyDelete
  8. கோயில்ன்னு சொல்லிட்டீங்க
    கோபித்து கொள்ள முடியுமா..

    வருகை பதிவு...
    வணக்கங்களுடன்

    ReplyDelete
  9. வணக்கம் சார் .சூப்பர். நம்பிக்கைதானே வாழ்க்கை ரொம்ப கரெக்ட் .மனிதனால் நம்பமுடியததை கடவுள் மட்டுமே நடத்த முடியும் . நன்றி .ஆண்டாள்

    ReplyDelete
  10. Ayya vanakkam natchatthra kovilkal entru silar matra kovilkalai kurippedukirarkal. For example utthirathirku Moolanur vanjiammanaiyum Kettaikku palladam angalparamaswari amman koiliyum kurippittullakal. thankalin karutthu theryappadutthavum. anbudan kittuswamy

    ReplyDelete
  11. /////Blogger Kumanan Samidurai said...
    Ayya Vanakkam,
    Muthana nalla seythigal.. Nandri.
    Anbudan, S.Kumanan/////

    நல்லது. நன்றி குமணன்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    Useful information. Thank you Sir./////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. /////Blogger bala said...
    Vanakkam iyya,
    Mikka nandri intha pathivirku.... migavum payan ullavai.
    Nandri,
    Bala/////

    நல்லது. நன்றி பாலா!

    ReplyDelete
  14. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    நட்சத்திர கோவில் இருப்பிடத்தையும் அங்கே செல்லும் வழியையும் பதிய விட்டிருப்பதற்கு மிக்க நன்றி
    கண்ணன்/////

    நல்லது. உங்களுடைய நட்சத்திரக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்!!!

    ReplyDelete
  15. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    பயனுள்ள ரத்தின சுருக்கமான பதிவு. முன்பே தனித்தனியாக நீங்கள் நட்சத்திர கோவில்கள் பட்டியல்கள் கொடுத்துள்ளீர்ள்.
    இது அனைத்தையும் கொண்டுள்ளது இன்னும் அருமை.
    நன்றி
    செல்வம்/////

    எல்லாம் உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளுக்காத்தான். நன்றி செல்வம் வேலுச்சாமி!

    ReplyDelete
  16. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நட்சத்திர கோவில்கள் தலைப்பில் இன்றைய பதிவுக்கு மனம் கணிந்த பாராட்டுக்கள்!!!
    வகுப்பறையில் நட்சத்திர கோவில்கள் தலைப்பில் தாங்கள்கொடுத்த பதிவுகள் முழுமை பெறாமல் இருந்தது. ஆனால் இன்றைய பதிவில் யுவர் எக்ஸலன்சி வாத்தியார் அட் ஒன் ஸ்ட்ரோக்கில் 27 நட்சத்திரக் கோவில்களின் மகிமையை விளக்கத்துடன் கொடுத்து அசத்தி விட்டீர்கள்!!!.
    ஸ்டார்ஸ்2015 வகுப்பில் கேள்வி பதில் விளக்கமும் அருமை.சொந்தக் கதை சோகக்கதைகளை தவிர்க்கும் நாகரீகமான பதில்கள் பாராட்டுக்குரியவை.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    உங்களுடைய பாராட்டுக்கள் ஊக்க மருந்து போன்றது. நன்றி பொன்னுசாமி அண்ணா!!!

    ReplyDelete
  17. /////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    நட்சத்திர திருத்தலங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்தது தான். ஆனால் அதை அப்படியே
    தராமல், அதற்கு கொடுத்துள்ள விளக்கம் மிக அருமை. தங்களுக்கு அந்த ஆண்டவனின் பூரண அருள் கிடைக்கட்டும். கடவுளை நம்பி வழிபடுவோருக்கே கடவுள் தன் இருப்பை உணர வைப்பது.//////

    உண்மைதான் சகோதரி! நன்றி!

    ReplyDelete
  18. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Old is gold... Very interesting...
    Have a happy day.
    With best regards,
    Ravi -avn////

    நல்லது. நன்றி அவனாசித் தம்பி!

    ReplyDelete
  19. /////Blogger வேப்பிலை said...
    கோயில்ன்னு சொல்லிட்டீங்க
    கோபித்து கொள்ள முடியுமா..
    வருகை பதிவு...
    வணக்கங்களுடன்/////

    வருகைப் பதிவிற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  20. ////Blogger Unknown said...
    வணக்கம் சார் .சூப்பர். நம்பிக்கைதானே வாழ்க்கை ரொம்ப கரெக்ட் .மனிதனால் நம்பமுடியததை கடவுள் மட்டுமே நடத்த முடியும் . நன்றி .ஆண்டாள்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam natchatthra kovilkal entru silar matra kovilkalai kurippedukirarkal. For example utthirathirku Moolanur vanjiammanaiyum Kettaikku palladam angalparamaswari amman koiliyum kurippittullakal. thankalin karutthu theryappadutthavum. anbudan kittuswamy/////

    சனீஷ்வரனுக்கே இரண்டு தலங்கள் உள்ளது. ஏற்றுக்கொள்ளவில்லையா? அதுபோல சரி என்று சொல்லுங்கள். அவ்வளவுதான்!

    ReplyDelete
  22. குருவே வணக்கம்.
    எவ்வளவு முக்கியமான மற்றும் புராதன உண்மையுள்ள தகவல்!!
    நிச்சயம் எங்கள் குடும்பத்தாரின் நட்சத்திரக்கோவில்களுக்கு செல்ல முயற்சிப்பேன் என்பதும் அவர்களுடனேயே செல்வேன் என்பதும் உறுதி.
    மிகவும் சக்தியுள்ள இத்சகவல் தந்துள்ள எங்கள் குருவுக்கு வகுப்பறை மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் தரும் ஒருமித்த பாராட்டுதல்கள் தங்தளுக்கு உரித்தாகுக.

    ReplyDelete
  23. Ayya vannakkam, natcharathira kovilgal portri kappathavendiya seithigal nanri vazhaga valamudan

    ReplyDelete
  24. ////Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்.
    எவ்வளவு முக்கியமான மற்றும் புராதன உண்மையுள்ள தகவல்!!
    நிச்சயம் எங்கள் குடும்பத்தாரின் நட்சத்திரக்கோவில்களுக்கு செல்ல முயற்சிப்பேன் என்பதும் அவர்களுடனேயே செல்வேன் என்பதும் உறுதி.
    மிகவும் சக்தியுள்ள இத்தகவல் தந்துள்ள எங்கள் குருவுக்கு வகுப்பறை மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் தரும் ஒருமித்த பாராட்டுதல்கள் தங்தளுக்கு உரித்தாகுக.//////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  25. /////Blogger k mohan said...
    Thanks sir/////

    நல்லது. நன்றி மோகன்!

    ReplyDelete
  26. /////Blogger Gajapathi Sha said...
    Ayya vannakkam, natcharathira kovilgal portri kappathavendiya seithigal nanri vazhaga valamudan/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com