மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.10.15

பூமியெங்கும் வாசம் வரும்!


மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன்
நன்றி தினமலர்
------------------------------------------------------------------------------------------------------------------------

பூமி எங்கும் வாசம் வரும்.

கவிஞர்கள் எதையும் சுருக்கமாக அழகுறச் சொல்வார்கள்.

கவியரசர் கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாள் ஆச்சி அவர்கள் அருமையாகச் சமையல் செய்வார்கள். அருகிருந்து பறிமாறுவார்கள். அதை 
கண்ணதாசன் அவர்கள் சிலாகித்து இப்படிச் சொல்வார்:

”பொன்னம்மா சமையல் செய்தால் 
பூமி எங்கும் வாசம் வரும்”

அதாவது சென்னை அம்பத்தூரில் அம்மையார் சமையல் செய்தால், சமையல் வாசம் நங்கநல்லூரிலும் அடிக்குமாம், வேளாச்சேரி, திருவான்மியூர் 
வரைக்கும் வருமாம். கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைதான். ஆனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது அப்படித்தான் அதீதமாக இருக்கும்.

மேலும் அவர் சொல்லுவார்:

“சர்க்கரைப் பொங்கல் வைத்தால்
சாமிக்கே ஆசை வரும்!”

எங்கள் பகுதியில் விநாயகர் கோவில் வாசலில் பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்குப் படைப்பார்கள். அதுபோல தன் மனைவி பொன்னம்மா 

பொங்கல் வைத்தால், அதன் வாசத்தில் விநாயகரே சந்நிதியை விட்டு வெளியே வந்து” பொன்னம்மா, ஒரு கரண்டி பொங்கல் கொடு” என்பாராம்!

எப்படி இருக்கிறது?
====================================
அப்படித்தான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது. ஆனால் நான் சொல்லாமல் உங்களிடமே அந்த வேலையை விட்டு விடுகிறேன்.

வகுப்பறை ஜோதிடம் நூலை சமீபத்தில், சிங்கப்பூர், மஸ்கட், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் மாணவக் கண்மணிகளுக்கு 
அஞ்சலில் (By registered post) அனுப்பிவைத்தேன். அவர்களிடமிருந்து வந்த பாராட்டுக்கடிதங்களில் சிலவற்றை உங்கள் பார்வைக்காக இன்று 
சமர்ப்பிக்கிறேன்.

பாராட்டு என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து ஆகும்! It is like tonic

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
1


----------------------------------------------------------------
2
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்...

பழனி அப்பன் அருளால் வகுப்பறை ஜோதிடம் தொகுதி -1 மிகவும் சிறப்பான முறையில் அச்சிடப்பட்டுள்ளது .

தாய் குழந்தையை பிரசவிக்க 10 மாதங்கள் ஆகும் . ஆனால் அய்யா அவர்கள் முதல் தொகுதியை உருவாக்க 2 ஆண்டு காலங்கள் எடுத்துக்கொண்டு மிக அழகான முறையில் ஜோதிட பொக்கிஷ த்தை தொகுத்து தந்தமைக்கு மனமார பாராட்டுகிறேன் .

கடந்து வந்த பாதையை மறக்காமல் கூகுள் ஆண்டவருக்கு நன்றி சொல்லியிருப்பது தங்களின் தன்னடக்கத்தை காட்டுகிறது .

உங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் நகைச்சுவை கலந்து ஜோதிடத்தை மிக எளிமையாக  அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் ஆக்கம் செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது .

அடுத்துவரவுள்ள ஜோதிட தொகுதிகளும் இன்னும் சிறப்பாக அமைய பழனி அப்பன் துணையிருப்பான் !!!

அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
Mob : +968 93675381
--------------------------------------------------------------------
3
வணக்கம் அய்யா,

புத்தகம் பதிவு தபாலில் கிடைத்தது, நன்றி.

அனைத்து பக்கங்களும் அருமையான தகவல்களும், அரிய செய்திகளும் நிறைந்ததாக உள்ளது. மலிவான விலையில் புத்தகத்தின் தரமும், பதிவேற்றமும் உயர்வாக உள்ளது. எழுத்துகளும், ஜாதக கட்டங்களும் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன. வழக்கமான தங்களது நகைச்சுவை பாணியில், எளிய நடையில் எல்லா ஜோதிட செய்திகளும் புத்தகத்தில் உள்ளது.

நிறைய விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய வகையில் அவசியமான செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள். அமிர்தயோகம், சித்தயோகம் பார்ப்பது பற்றி தெளிவாக எழுதி இருக்கின்றீர்கள். மூலத்திரிகோணம், நவாம்சம் போன்ற புதிய செய்திகளையும் தெரிந்துக்கொண்டோம், குறிப்பாக நவாம்சம் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமானது என்று அறிந்தோம். எல்லா தகவல்களும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக உதாரண ஜாதகம் மற்றும் பிரபலமானவர்களின் ஜாதகமும் இனணத்துள்ளீர்கள். தங்களின் நகைச்சுவை ததும்பும் ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்கின்றோம்.

இந்த புத்தகத்தில் ஒரு சில யோகங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அடுத்த புத்தகத்தில் நாங்கள் அனைத்து யோகங்களைப் பற்றிய செய்திகளையும் எதிர்ப்பார்க்கின்றோம். உங்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்குவதற்கு ஆவலாக உள்ளோம். புத்தகம் பற்றி எழுதிக்கொண்டே போவதற்கு நிறைய இருந்தாலும், நான் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

அன்புடன்,
சரளா, சிங்கப்பூர்.
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்

    உண்மைதான் .பாராட்டு மழை ஒரு மனிதரை ஊக்க படுத்தும் ..
    பழனி அப்பனை வாயார மனமுருக பாடினால்தான் அருள் புரிவான் ...அங்கே அவனை பாராட்டுகிறோம்.

    சலங்கை ஒலி படத்தில் கமலஹாசன் கடைசி யில் அரங்கம் கை தட்டும்போது.. கை உயர்த்தி இன்னும் இன்னும் என கூறுவது போல் .....

    வாத்தியாரின் மாணவர்கள் வாத்தியாரை ..,வாத்தியார் ...பாணியில் **சொல் அலங்காரமாக **பாரட்டுவது சிறப்பாக இருக்கிறது..
    வாத்தியார் அய்யாவுக்கு ..பணிவான வணக்கம் ..!!

    பாராட்டிய சக மாணவர்களுக்கு ..தோழமையான நன்றி .

    ReplyDelete
  2. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ஒரு பழமொழி “ ஊரறிந்த பார்ப்பானனுக்கு பூனூல் எதற்க்கு?” - வலைத்தள உல்கில் உலாவரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள ஒரு வலைத்தளம் உண்டெனில் அது “வகுப்பறை” மட்டுமே. இன்றைய மிகப் பெரிய அலப்பலில் உள்ள மற்ற தளங்களில் வகுப்பறை மட்டுமே ஆழம் மிகுந்த நடுக்கடலில் கப்பலில் பயனிக்கும் அனுபவத்தை தந்துள்ளது எனில் மிகையாகாது. இதற்க்கு மேலும் எழுதினால் ”ஏதோ மஸ்கா அடிக்கிறான்” என்ற கமெண்ட் பதிவில் வந்துவிடக் கூடும் என்பதாலும்- தங்கள் பணி சிறக்க வாழ்த்த வயதில்லாததால் தலை வணங்குகின்றோம்.
    தொகுப்பு-2 வெளியீடு மிக விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
    It has been prooved that " THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " ON YOUR FIRST POSTING ITSELF.
    WITH BEST REGARDS,
    - G C PONNUSAMY.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்,

    தங்களிடம் சிறு வேண்டுகோள்.

    தாங்கள் ஜோதிட பாடம் புத்தகத்தை கூகுள் புக் அல்லது, ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட முடியுமா?

    இதில் தொகையை பேபால் மூலமாக செலுத்தும் வசதி உள்ளது.பிழை இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. பொங்கல் என்று சொன்னாலே இனிக்குதே
    பொங்கி வேற சுவைக்கவா

    வாழ்த்துக்கள்
    வளமோடு நலம் பெற

    ReplyDelete
  5. ஏற்கனவே ஒரு ஆலோசனை வைத்துள்ளேன்
    ஏற்கப்படுமா தெரியாது

    மாணவர்களின் மதிப்புரை
    மற்றும் வாழ்த்துரை தனி பதிவாக

    வரவேண்டும் என்று... அது
    வரும் என்று தான் எழுதி வைத்த

    என் கருத்தை மதிப்புரையை
    எளிமையான வாழ்த்தை

    இதுவரை அனுப்பவில்லை
    இங்கு அதை குறிப்பிடவேண்டியதானது

    தனி பதிவு வரும் நாள் சொன்னால்
    தருகிறோம் எங்கள் எண்ணங்களை

    வண்ணங்களாக்கி ஒரு தனி பதிவை
    வழங்கிட காத்திருக்கிறோம்

    வலை உலக மாணவர் சந்திப்பை
    வாத்தி இப்படியாவது நடத்தட்டுமே

    மாணவர் மலர் மலராது போனாலும்
    மலராவது மணம் வீசட்டுமே

    ReplyDelete
  6. Respected Sir,

    Thanks a lot for your service.

    Can you please tell about the native's profession which you gave in last quiz. Because he has so many Yogam in his horo and very eager to know about his professional life.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  7. ஐயா,
    ஒருவருக்கு நாவடக்கம் கிட்டிவிட்டால், நாடே போற்றும் நல்மனம் வந்துவிடுமென்பர். தாங்கள் நாவடக்கம் உள்ளவர் ஆயிற்றே!

    ReplyDelete
  8. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
    உண்மைதான் .பாராட்டு மழை ஒரு மனிதரை ஊக்க படுத்தும் ..
    பழனி அப்பனை வாயார மனமுருக பாடினால்தான் அருள் புரிவான் ...அங்கே அவனை பாராட்டுகிறோம்.
    சலங்கை ஒலி படத்தில் கமலஹாசன் கடைசி யில் அரங்கம் கை தட்டும்போது.. கை உயர்த்தி இன்னும் இன்னும் என கூறுவது போல் .....
    வாத்தியாரின் மாணவர்கள் வாத்தியாரை ..,வாத்தியார் ...பாணியில் **சொல் அலங்காரமாக **பாரட்டுவது சிறப்பாக இருக்கிறது..
    வாத்தியார் அய்யாவுக்கு ..பணிவான வணக்கம் ..!!
    பாராட்டிய சக மாணவர்களுக்கு ..தோழமையான நன்றி .//////

    நல்லது. நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  9. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ஒரு பழமொழி “ ஊரறிந்த பார்ப்பானனுக்கு பூனூல் எதற்க்கு?” - வலைத்தள உல்கில் உலாவரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள ஒரு வலைத்தளம் உண்டெனில் அது “வகுப்பறை” மட்டுமே. இன்றைய மிகப் பெரிய அலப்பலில் உள்ள மற்ற தளங்களில் வகுப்பறை மட்டுமே ஆழம் மிகுந்த நடுக்கடலில் கப்பலில் பயனிக்கும் அனுபவத்தை தந்துள்ளது எனில் மிகையாகாது. இதற்க்கு மேலும் எழுதினால் ”ஏதோ மஸ்கா அடிக்கிறான்” என்ற கமெண்ட் பதிவில் வந்துவிடக் கூடும் என்பதாலும்- தங்கள் பணி சிறக்க வாழ்த்த வயதில்லாததால் தலை வணங்குகின்றோம்.
    தொகுப்பு-2 வெளியீடு மிக விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
    It has been prooved that " THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " ON YOUR FIRST POSTING ITSELF.
    WITH BEST REGARDS,
    - G C PONNUSAMY./////

    அப்படியா? நல்லது. உங்களின் தகவலுக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger shree said...
    ஐயா வணக்கம்,
    தங்களிடம் சிறு வேண்டுகோள்.
    தாங்கள் ஜோதிட பாடம் புத்தகத்தை கூகுள் புக் அல்லது, ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட முடியுமா?
    இதில் தொகையை பேபால் மூலமாக செலுத்தும் வசதி உள்ளது.பிழை இருந்தால் மன்னிக்கவும்./////

    அது பற்றிய விபரம் தெரியவில்லை. அறிந்து கொண்டு செய்ய முயற்சிக்கிறேன் சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger வேப்பிலை said...
    பொங்கல் என்று சொன்னாலே இனிக்குதே
    பொங்கி வேற சுவைக்கவா
    வாழ்த்துக்கள்
    வளமோடு நலம் பெற////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    ஏற்கனவே ஒரு ஆலோசனை வைத்துள்ளேன்
    ஏற்கப்படுமா தெரியாது
    மாணவர்களின் மதிப்புரை
    மற்றும் வாழ்த்துரை தனி பதிவாக
    வரவேண்டும் என்று... அது
    வரும் என்று தான் எழுதி வைத்த
    என் கருத்தை மதிப்புரையை
    எளிமையான வாழ்த்தை
    இதுவரை அனுப்பவில்லை
    இங்கு அதை குறிப்பிடவேண்டியதானது
    தனி பதிவு வரும் நாள் சொன்னால்
    தருகிறோம் எங்கள் எண்ணங்களை
    வண்ணங்களாக்கி ஒரு தனி பதிவை
    வழங்கிட காத்திருக்கிறோம்
    வலை உலக மாணவர் சந்திப்பை
    வாத்தி இப்படியாவது நடத்தட்டுமே
    மாணவர் மலர் மலராது போனாலும்
    மலராவது மணம் வீசட்டுமே////

    வழங்கிடுங்கள் வேப்பிலையாரே! நீங்கள் செய்தால் சரிதான் !

    ReplyDelete
  13. /////Blogger KJ said...
    Respected Sir,
    Thanks a lot for your service.
    Can you please tell about the native's profession which you gave in last quiz. Because he has so many Yogam in his horo and very eager to know about his professional life.
    Thanks,
    Sathishkumar GS//////

    ஜாதகங்களுக்கு உரியவர்களை வெளிப்படுத்தமுடியாது. மன்னிக்கவும்!

    ReplyDelete
  14. //////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    ஒருவருக்கு நாவடக்கம் கிட்டிவிட்டால், நாடே போற்றும் நல்மனம் வந்துவிடுமென்பர். தாங்கள் நாவடக்கம் உள்ளவர் ஆயிற்றே!////

    அப்படியா? நீங்கள் சொன்னால் சரிதான்.கேட்டுக்கொள்கிறேன். நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com