மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.10.15

அடப்பாவிகளா, இப்படியும் ஏமாற்றுவீர்களா?


அடப்பாவிகளா, இப்படியும் ஏமாற்றுவீர்களா?

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தருக்கு நேர்ந்த கதி!!! 
உஷார் நண்பர்களே 👀 👀👂👂

சென்ற வாரம் ஒரு நபர் திருப்பதி திருமலைக்கு ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவுடன் முகம் தெரியாத ஒரு நபர் பதட்டத்துடன் சாமி தரிசனம் செய்தவரை அணுகி  "என்னுடைய மணிபர்ஸ்ஸை யாரோ திருடிட்டாங்க,ஊருக்கு செல்வதற்க்கு பணம் இல்லை,எனது வீட்டிற்க்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்,அவங்க என்னுடைய அக்கவுன்ட்ல பணம் போட்டுடுவாங்க,உங்க போனை கொஞ்சம் கொடுங்க"என்றான் பரிதாபமாக.

சாமிதரிசனம் செய்தவரும் தனது செல்போனை அந்த நபருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

செல்போனை வாங்கிய நபர் செல்போன் பேசியபடியே திடீரென மறைந்து விட்டான்.

சாமிதரிசனம் செய்தவரும் அவனை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.

இதனிடையே செல்போனை திருடிச் சென்ற நபர் எப்படியோ சாமிதரிசனம் செய்த நபரின் மனைவிக்கு போன் செய்து, "உங்கள் கணவர் திருப்பதியில்
வாகன விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் ஆபத்தாக சிகிச்சை பெற்று வருகிறார்,மருத்துவ செலவிற்கு அவசரமாக ரூ.40ஆயிரத்தை
ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும், உடனே நான் கூறும் பேங்க்
அக்கவுன்டிற்கு பணத்தினை செலுத்துங்கள் அவசரம்" என்று
கூறியுள்ளான்.

பிறகு செல்போனை திருடிய நபர் திருமலையில் இருந்து திருப்பதிக்கு
வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கேஷியரிடம் பில் கொடுக்கும் போது "தனது பர்ஸ்ஸை காணவில்லை"எனவும் அதில்
தனது பணம் மற்றும் ஏடிம் கார்டு இருந்தது எனவும் கூறியுள்ளான்.

பரிதாபத்துடன் ஓட்டல் மேனேஜரிடம் "உங்கள் பேங்க் அக்கவுன்ட்
நெம்பரை தாருங்கள்,எனது வீட்டிற்கு போன் செய்து பணம் போடச்
சொல்கிறேன்"என்று நைசாக பேசி நெம்பரை வாங்கி அதனை சாமி
தரிசனம் செய்து செல்போனை இழந்த நபரின் மனைவிக்கு தந்து
அவரும் அந்த பேங்க் அக்கவுன்டிற்க்கு ரூ40ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய விவரத்தினை திருட்டு பயலுக்கு சொல்லியுள்ளார் மனைவி. இதனை அறிந்த திருடன் ஓட்டல் மேனேஜரிடம் சென்று பணம் போடப்பட்ட விவரத்தினை கூறி அவர் மூலமாகவே ATM மூலம்
பணத்தினை எடுத்து சாப்பிட்ட தொகைக்கு பணம் கொடுத்துவிட்டு
நன்றி சொல்லிவிட்டு கம்பி நீட்டியுள்ளான்.

இதனிடையே சாமி தரிசனம் செய்த நபர் ஊருக்கு புறப்பட்டுவிட்டார்.
அவரது மனைவியோ தனது உறவினர்களுடன் பதட்டத்துடன்
திருமலைக்கு வந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்துள்ளார். அவரது கணவர் பெயரில் யாரும் மருத்துவமனையில்
இல்லை என்றவுடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த
விவரத்தினை போலிஸிடம் கூறியுள்ளனர்.

போலிஸாரும்  ஓட்டல் மேனேஜரை விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்துள்ளனர்.
போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனை தந்து உதவி, பணத்தினை இழந்து, பதட்டமாகி,மன உளச்சல் ஆகி நிம்மதி இழந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.

எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் .எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களே.😳😳😳

நன்றி:தி இந்து நாளிதழ்.
10/10/2015,
💥💥💥💥💥💥💥💥
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. எச்சரிக்கை அவசியம்

    ReplyDelete
  2. ஆனாலும் அந்த திருடனின் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பே நான் என் வீட்டில் எல்லோரிடமும் எச்சரித்திருக்கிறேன். எனக்கு விபத்து நேர்ந்து விட்டதாக நேரில் வந்து யாராவது சொன்னால் ( அப்போது செல்போன் புழக்கத்திற்கு வராத காலம்) பதட்டப்படாதீர்கள். அப்படிச்சொன்ன ஆளுடன் செல்லாதீர்கள். எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்ற விபரம் மட்டும் கேட்டு விட்டு அந்த ஆளை அனுப்பி விடுங்கள். பிறகு அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்தோ நேரில் சென்றோ ஆவன செய்யவும்.

    அப்படி வந்து சொன்ன ஆளை நம்பி அவன் கூடச் சென்றால் அவன் உங்களைக் கடத்திக்கொண்டு போய் நகைகளைப் பிடுங்கிக்கொண்டு ஆளில்லாத இடத்தில் விட்டு விடுவான் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

    இப்போது செல் போனில் அப்படி ஏதாவது தகவல் வந்தாலும் உடனே நம்பி விடவேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

    அந்தப் பார்ட்டி செல் போனைக் கொடுத்தது தவறு. பொது இடங்களில் பச்சாத்தாபம் இன்றைய சூழ்நிலையில் ஆபத்தைத்தான் வரவழைக்கும்.

    ReplyDelete
  3. ஐயா,
    இவ,வுலகத்தில் இந்நாளில் நாணயம் கெட்டுவிட்டது.எவரையும் நம்ப முடியாது எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காலம் கபடர்கள் கையில். நேர்மைக்கு விலையில்லை!? எந்நேரமும் நமக்கு சாதகமில்லை,?
    நடநது முடிந்த நிகழ்ச்சி மகிழ்ச்சிக்கு விடை கொடுத்து, நமபிக்கைக்கு சுழற்சியாக இகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இது காலக் கொடுமைதான்!?
    யாரைத்தான் நம்புவது, எப்படித்தான் வாழ்வது?
    காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  4. Anbudan vathiyaar ayya vanakkam

    Ulakam mikavum mosamana nilamaikku pokirathu. It hurts our padam

    Nanri

    ReplyDelete
  5. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்” -
    “ யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே! அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே, பேதம் தெரியலே!!!”
    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கின்றது. அது வெளிப்படும் சந்தர்ப்பமும் நேரமும் இடமும் மற்றவர்களுக்கு நன்மை/தீமையை விளைவிக்கின்றது.
    திறமை என்பது கத்தி போன்ற ஒரு ஆயுதம்.நல்லகாரியத்திற்கும் பயன் படுத்தலாம், தீமைக்கும் பயன் படுத்தலாம். இன்றைய கணிணி உலகில் கோலோச்சுபவர்களும் உள்ளனர். மற்றவர் கணக்கிலிருந்து பணம் திருடுபவர்களும் உள்ளனர். ஆயினும் ஒருவர் ஜாதகப்படி அவர் எப்படிப் பட்ட திறமை உடையவர் என்பதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்யவும் விளக்கவும் வாத்தியார் உதவுவார் என் நம்புகின்றேன்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  6. இதிலிருந்து திருப்பதி கோவிலுக்கு
    இனி மேல் போக கூடாது என்பது புரிகிறது

    எச்சரிக்கை தரும் பதிவை
    எங்களுக்கு தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  7. குருஜி அவர்களுக்கு வணக்கம். திருமலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது மனதுக்கு மிகவும் வருத்தம் தருகின்றது..அடியவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அவரைத்தான் சேரும். என்ன செய்வது.. இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. திருப்பதி செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்
    இதனால் நல்லவர்கள் பாதிக்க பட வேண்டிய து உள்ளது ஐயா.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  9. உபயோகமான பதிவு வாத்தியார் ஐயா.ஆங்கிலத்தில் இவர்களை Con Man என்பார்கள். புத்திசாலிகள் ஆனால் அதை தவறாக பயன்படுத்துபவர்கள்.புதன் வலுவாக சனியோடோ மற்ற பாபிகளோடோ சேர்ந்திருப்பாரோ இவர்களுக்கு???

    நன்றி

    ஸ்ரீராம்

    ReplyDelete
  10. /////Blogger Nagendra Bharathi said...
    எச்சரிக்கை அவசியம்////

    ஆமாம். ஆமாம்! நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger பழனி. கந்தசாமி said...
    ஆனாலும் அந்த திருடனின் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பே நான் என் வீட்டில் எல்லோரிடமும் எச்சரித்திருக்கிறேன். எனக்கு விபத்து நேர்ந்து விட்டதாக நேரில் வந்து யாராவது சொன்னால் ( அப்போது செல்போன் புழக்கத்திற்கு வராத காலம்) பதட்டப்படாதீர்கள். அப்படிச்சொன்ன ஆளுடன் செல்லாதீர்கள். எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்ற விபரம் மட்டும் கேட்டு விட்டு அந்த ஆளை அனுப்பி விடுங்கள். பிறகு அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்தோ நேரில் சென்றோ ஆவன செய்யவும்.
    அப்படி வந்து சொன்ன ஆளை நம்பி அவன் கூடச் சென்றால் அவன் உங்களைக் கடத்திக்கொண்டு போய் நகைகளைப் பிடுங்கிக்கொண்டு ஆளில்லாத இடத்தில் விட்டு விடுவான் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.
    இப்போது செல் போனில் அப்படி ஏதாவது தகவல் வந்தாலும் உடனே நம்பி விடவேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.
    அந்தப் பார்ட்டி செல் போனைக் கொடுத்தது தவறு. பொது இடங்களில் பச்சாத்தாபம் இன்றைய சூழ்நிலையில் ஆபத்தைத்தான் வரவழைக்கும்./////

    உண்மைதான் நீங்கள் சொல்கின்றபடி வீட்டில் சொல்லிவைத்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உங்களுடைய யோசைனைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி பழனி. கந்தசாமி அண்ணா!

    ReplyDelete
  12. //////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    இவ,வுலகத்தில் இந்நாளில் நாணயம் கெட்டுவிட்டது.எவரையும் நம்ப முடியாது எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காலம் கபடர்கள் கையில். நேர்மைக்கு விலையில்லை!? எந்நேரமும் நமக்கு சாதகமில்லை,?
    நடநது முடிந்த நிகழ்ச்சி மகிழ்ச்சிக்கு விடை கொடுத்து, நமபிக்கைக்கு சுழற்சியாக இகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இது காலக் கொடுமைதான்!?
    யாரைத்தான் நம்புவது, எப்படித்தான் வாழ்வது?
    காலம் தான் பதில் சொல்லவேண்டும்./////

    காலம் பதில் சொல்லும் - அனுபவங்களின் மூலம். நாம்தான் அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்

    ReplyDelete
  13. ////Blogger hamaragana said...
    Anbudan vathiyaar ayya vanakkam
    Ulakam mikavum mosamana nilamaikku pokirathu. It hurts our padam
    Nanri/////

    நல்லது. நன்றி உங்களுடைய பின்னூட்டத்திற்கு கணபதியாரே!

    ReplyDelete
  14. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்” -
    “ யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே! அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே, பேதம் தெரியலே!!!”
    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கின்றது. அது வெளிப்படும் சந்தர்ப்பமும் நேரமும் இடமும் மற்றவர்களுக்கு நன்மை/தீமையை விளைவிக்கின்றது.
    திறமை என்பது கத்தி போன்ற ஒரு ஆயுதம்.நல்லகாரியத்திற்கும் பயன் படுத்தலாம், தீமைக்கும் பயன் படுத்தலாம். இன்றைய கணிணி உலகில் கோலோச்சுபவர்களும் உள்ளனர். மற்றவர் கணக்கிலிருந்து பணம் திருடுபவர்களும் உள்ளனர். ஆயினும் ஒருவர் ஜாதகப்படி அவர் எப்படிப் பட்ட திறமை உடையவர் என்பதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்யவும் விளக்கவும் வாத்தியார் உதவுவார் என் நம்புகின்றேன்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.//////

    புத்திநாதனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் சம்பந்தப்படும்போது புத்தி இப்படித்தான் வேலை செய்யும்!
    Criminals என்ற தலைப்பில் குறிப்புக்களுடன் சில ஜாதகங்களை அலசுவோம். இங்கே அல்ல! புது வகுப்பில். தீபாவளி முதல் அது செயல்பட உள்ளது. yes it is closed classroom with limited members

    ReplyDelete
  15. //////Blogger வேப்பிலை said...
    இதிலிருந்து திருப்பதி கோவிலுக்கு
    இனி மேல் போக கூடாது என்பது புரிகிறது
    எச்சரிக்கை தரும் பதிவை
    எங்களுக்கு தந்தமைக்கு நன்றி../////

    பெருமாள் உம்மைச் சும்மா விட்டாலும். பெருமாளின் பக்தர்கள் உம்மைச் சும்மா விடமாட்டார்கள் சாமி. தெரிந்துதான் பேசுகிறீரா?:-)))))

    ReplyDelete
  16. //////Blogger C.P. Venkat said...
    குருஜி அவர்களுக்கு வணக்கம். திருமலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது மனதுக்கு மிகவும் வருத்தம் தருகின்றது..அடியவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அவரைத்தான் சேரும். என்ன செய்வது.. இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. திருப்பதி செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது./////

    குருவாயூர், பழநி, திருப்பதி போன்ற திருத்தலங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். வருகிறவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  17. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    இதனால் நல்லவர்கள் பாதிக்க பட வேண்டிய து உள்ளது ஐயா.
    நன்றி
    கண்ணன்/////

    உண்மைதான் நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger sriram1114 said...
    உபயோகமான பதிவு வாத்தியார் ஐயா.ஆங்கிலத்தில் இவர்களை Con Man என்பார்கள். புத்திசாலிகள் ஆனால் அதை தவறாக பயன்படுத்துபவர்கள்.புதன் வலுவாக சனியோடோ மற்ற பாபிகளோடோ சேர்ந்திருப்பாரோ இவர்களுக்கு???
    நன்றி
    ஸ்ரீராம்////

    ஜாதகத்தில் பல கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், புத்தி இப்படி வக்கிரமாகத்தான் இருக்கும்! நியாய, தர்மங்களை எண்ணிப்பார்க்கவே செய்யாது.

    ReplyDelete
  19. /////Blogger வடுவூர் குமார் said...
    ஊப்! என்ன டகாலடி வேலை!////

    வாருங்கள் வடுவூராரே. உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  20. ஐயா Closed classroomல் பங்கேற்க அனுமதிப்பீர்களா?வகுப்பறை மூலம் சோதிட ஆர்வம் உண்டாயிற்று.480 பாடங்களை படித்துள்ளேன்.மேலும் படித்து வருகிறேன்.Email id sriram.1114@gmail.com
    Sriram.K
    Basically from chennai
    Residing in Kuwait.தயவு செய்து பதில் தரவும்.நன்றி.

    ஸ்ரீராம்

    ReplyDelete
  21. if you pay money in an account the person is very easily traceable. Some how this story does not sound correct.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com