மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.3.12

Humour கலாய்ப்பது எப்படி?

மாணவர் மலர்

இன்றைய மலரை 6 பேர்களின் 8 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன.
படித்து, பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------------



1
நகைச்சுவை: 
ஆக்கியவர் கொடுத்த தலைப்பு: கவலை தீர்ந்தால் வாழ முடியுமா?
வாத்தியார் கொடுக்கும் தலைப்பு இதைவிட கலாய்க்க முடியுமா என்ன?
ஆக்கம்: தேமொழி

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தொடரவும். மற்றவர்கள் ஒரே தாவலாகத் தாவி அடுத்த ஆக்கத்திற்குச் சென்றுவிடலாம்!
---------------------------
கவலை தீர்ந்தால் வாழ முடியுமா?

'வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் 
ஆசையிருந்தால் நீந்தி வா.....
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் 
பார்த்து நடந்தால்  பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் 
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்" 
என்ற கண்ணதாசன் பாடலை மேற்கோள் காட்டி, "வாழ்க்கை"யின் ஏற்ற தாழ்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வாழ்க்கை நன்றாக இருக்க
வேண்டுமென்றால் ஒருவருடைய ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கி வாத்தியார் ஒரு பாடத்தை கரும்பலகையில் போட்டுவிட்டு, அதற்கு துணையாக ஒரு படத்தையும் போட்டுவிட்டு சற்று தள்ளி நின்று மீண்டும் ஒருமுறை படித்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

KMR கிருஷ்ணன்:  நல்ல பதிவு ஐயா! பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.

வாத்தியார்: (ஆச்சரியத்துடன் திரும்பி ) அது எப்படி கிருஷ்ணன் சார், விடிகாலையில வகுப்பு ஆரம்பிச்சாலும் உங்களால வர முடிகிறது.?

KMR கிருஷ்ணன்:  நான் சீக்கிரமே தூங்க போறதால காலையில சீக்கிரமே எழுந்துவிடுவேனாக்கும்

தொடர்ந்து வகுப்பிற்கு ஆனந்தமுருகன், தனுசு, ஆலாசியம், உமா, சரவணா என ஒவ்வொருவராக வந்து இருக்கையில் அமர்ந்து கரும்பலகையில் உள்ள
பாடத்தை படிக்க ஆரம்பிகிறார்கள்.  

அப்பொழுது கழுத்தில் துண்டும் கூப்பிய கையுமாக எல்லோரையும் வணங்கியவாறு மைனர் உள்ளே வருகிறார்.

மைனர்: தேர்தல் வேலையில் மும்முரமா இருக்கிறதால இரண்டு மூணு வகுப்பு மிஸ்ஸாயிடுச்சி.  தவறாம எல்லோரும் என்னை ஆதரித்து வாக்கு
போடணும்னு கேட்டுக்கிறேன்.  அப்படியே எதிர் கட்சி தலைவிய தலை எடுக்க விடாம திட்டமும் போட்டு  கூட்டணியும் போடணும்னு எல்லோருக்கும் சொல்லிடறேன்.

முன் வரிசையில் அமர்ந்திருக்கும் உமா முறைத்துப் பார்க்கிறார்.

உமா:  வரவர இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்க முடியல, என்ன கொடுமை சரவணா இது ? ...(சந்திரமுகி படத்தில் பிரபு ரஜினியிடம் சொல்லும்
'என்ன கொடுமை சரவணா இது ?' என்ற வசனத்தை சொல்லுகிறார்)

சரவணா: என்ன உமா சொல்றீங்க?  நான் கொடுமை செஞ்சேனா? இப்பதான் பாப்பாவுக்கு வைக்க தேர்ந்தெடுத்த ஆயிரம் பெயர் பட்டியலை ஒருவழியா
சுருக்கி ஐந்து பெயருக்கு கொண்டு வந்திருக்கேன்.  அதுசரி உமா, மோனிக்கா அப்படிங்கிறது ஹிந்தி பெயரா?

மைனர்: உமாவுக்கு ஹிந்தி தெரியும்..ஆனா நல்லாத் தெரியாது.

உமா: எல்லாம் ஜப்பான் மொழிய சுலபமா கத்துக்கிட்டோம்கிற நினைப்பில் பேசும் ஆணவப் பேச்சு இது, தில்லி வாழ்க்கையின் சிரமத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

KMR கிருஷ்ணன்:  வாழ்கையைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், ராஜாஜியும் சொல்லாததா? சொல்லடைகள் வாழ்க்கையைப் பற்றி என்ன
சொல்கிறதென்றால், உடலெல்லாம் அம்மாஞ்சி எண்ணெய் பூசிண்டு அக்ராஹார வீதியில் உருண்டு அங்கப் பிரதட்ஷனை செஞ்சானாலும், அவன் உடல்ல  என்ன ஒட்டுதோ அதுவே எதேஷ்டம் அப்படிங்கிற மனநிலை அவனுக்கு வேணும்.

மைனர்:  ஏன்?  அப்ப எண்ணைக்கு பதில் ஃபெவிக்கால தடவிகிட்டு ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே?

KMR கிருஷ்ணன்:  வாழ்க்கையின் நிலையாமையைப் பத்தி மைனருக்கு மிகவும் பிடித்த கமெண்ட் ஒன்னு இருக்கு, அதை மைனருக்கு தனியா மின்னஞ்சல்ல

அனுப்புவேன்.  ஆனா உமாஜிதான் ஏனோ என்னோட ஆக்கத்தை எல்லாம் படிக்கிற 'மாதுரி' தெரியல

உமா:  என்ன கிருஷ்ணன் சார் நான் படிக்கிறதில்லன்னு 'எப்புடி' இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறீங்க, ஆனால் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா

ஆலாசியம்: (கரும்பலகையில் உள்ள பாடத்தைப் படித்து விட்டு தன் கருத்தை கவிதையாக சொல்கிறார்)  ஐயா சிறந்த வாழ்க்கை வாழும் முறை பற்றிய ஆற்றுபடுத்துதலுக்கு நன்றிகள்

"வஞ்சியவள் வந்தால் வாழ்வில் இனிமை 
வசந்தம் வந்தால் வாழ்வில் இனிமை 
வசதி வந்தால் வாழ்வில்  இனிமை 
வண்ணமலர் மலர்ந்தால் வாழ்வில் இனிமை 
வருத்தங்கள் நீங்கினால் வாழ்வில் இனிமை 
வஞ்சமில்லா நெஞ்சமது கொண்டால் வாழ்வினிலே என்றுமே இனிமை" 

வாத்தியார்:  நல்லது, நன்றி ஆலாசியம், வ ...வ வென்று தொடர்ந்து வரும் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

KMR கிருஷ்ணன்:  வஞ்சியவள் வந்தால் வாழ்வில் இனிமைதான், அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

மைனர்:  மாமி இப்பெல்லாம் வகுப்புக்கு வர்ரதில்லன்னு உங்களுக்கு தகிரியம் துளிர் விட்டு போச்சி, நடத்துங்க.... நடத்துங்க....

KMR கிருஷ்ணன்:  (அவசர அவசரமாக) நான் வஞ்சியவள்னு சொன்னது மாமியத்தான்

உமா:  சரி... நாங்க நம்பிட்டோம்

தனுசு: (கரும்பலகையில் உள்ள பாடத்தைப் படித்து விட்டு அவரும் தன் கருத்தை கவிதையாக சொல்கிறார்)
நாம் தாழ்ந்தால் வாழ்க்கையில் திண்டாட்டம்
நாம் வீழ்ந்தால் பலருக்கு கொண்டாட்டம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வாழ்க்கை என்பது ஒரு வெள்ளோட்டம்

வாத்தியார்: உண்மைதான் தனுசு. சரி...எல்லோரும் நான் சொன்ன வீட்டு பாடத்த எழுதிட்டு வந்தீங்களா? உங்க பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட மாத்தி
கொடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் திருத்திக்கங்க

ஆலாசியம் பக்கத்தில் உமாவுடன் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தவராக பாய்ந்து ஓடி தனக்கு வலது பக்கத்து பெஞ்சில் இருக்கும் மைனருடன் போய் உட்கார்ந்து கொள்கிறார்.

உமாவிடம் தான் மாட்டிக் கொண்டதை அறிந்து திகைத்துப் போன தனுசு, இடதுபுறம் குதித்து அந்த பக்கத்து பெஞ்சில் உள்ள ஆனந்தமுருகனுடன் உட்கார ஓடுகிறார்

தனுசு:  இன்ஷா அல்லா... நான் ஆனந்தமுருகன் பக்கமே உட்கார்ந்து கொள்கிறேன்

உமா: ஏன் தனுசு அங்க போயிட்டீங்க?

தனுசு: எனக்கு அழகின்னா பிடிக்காது

உமா: ஹி.ஹீ..நன்றி தனுசு. தில்லில எல்லோரும் அப்படிதான் பேசிக்கிறாங்க.

தனுசு: (பதட்டத்துடன்) நீங்க அழகிதான், ஆனா இப்ப நான் சொன்னது உங்கள இல்ல ... என் தமிழ் எழுதியைச் சொன்னேன். அதில் எழுதினா எனக்கு
நிறைய தப்பு வரும்.  வாத்தியார் கண்டுக்க மாட்டாரு.  நீங்க திருத்தினா எனக்கு நெகடிவ் மார்க் போடுவீங்க

வாத்தியார்: தில்லி உமாக்கான்னா எல்லோருக்குமே ஒரு பயம்தான்

உமா:  ஆமாம், அந்த பயம் இருக்கட்டும் எல்லோருக்கும்

ஆனந்தமுருகன்: வாங்க தனுசு வாங்க ... வந்து உட்காருங்க...நானும் கூட உங்கள மாதிரி கவிதை எழுதுவேன்

வாத்தியார்: அட அப்படியா...நீங்க தினம் மூணு இமெயில் மட்டும்தான் அனுப்புவீங்கன்னு நெனைச்சேன்

ஆனந்தமுருகன்:  (பாடுகிறார்) கவிதைகள் சொல்லவா, உன்பெயர் சொல்லவா, இரண்டுமே மொக்கைதான் ஓஹ்ஹோ ....

மைனர்: இப்ப யார் பேர மொக்கைங்கிறீங்க நீங்க...

ஆலாசியம்:  ஹ. ஹ. ஹா...உங்க பக்கத்தில இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம் ஆனந்தமுருகன் ஹ. ஹ. ஹா...

வாத்தியார்: (அவசர அவசரமாக) சரி..சரி.. இந்த கவிதையை எல்லாம்  மாணவர் மலருக்கு அனுப்பிடுங்க நண்பரே

ஆலாசியம்: நீங்களும் கவிதை எழுதணும் மைனர்

மைனர்: எனக்கு கவிதாவ பிடிக்காது, கவிதா புரியாததால நான் கவிதா பக்கம் போறதில்ல.  நீங்க கொடுத்த ஊக்கத்தில் நானும் கவிதா எழுதினேன்.  ஆனா
அந்த சமயம், என் ராஜியத்த தேடி நெடிதுயர்ந்த யூகாலிப்டஸ் மரக் காட்டின் வழியே, என் அரசியுடன் ஒரு மாலை வேலையில் கவிதை எழுத குதிரையில்
சென்ற பொழுது ஏற்பட்ட மயக்கம் இன்னமும் தீரவில்லை.  அந்த அனுபவத்தை கவிதையா எழுதனும்னு நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது.  இதோ கோடை காலம் வந்துதுன்னா நிறைய அழகிகள் கடற்கரை பக்கம் நீராட வருவாங்க அவர்களைப் பார்த்து ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன்.

அப்பொழுது பார்வதி ராமச்சந்திரன் வகுப்புக்குள் வருகிறார்.  உமா அருகில் காலியாக இருக்கும் இடத்தில உட்கார்ந்துகொண்டவாறு நான் அறிவாளியுடன் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆமாம்  இன்னொரு அறிவாளி எங்கே என்று கேட்கிறார்.

உமா: யார தேமொழிய சொல்றீங்களா? இப்பதான் அடுத்த வகுப்பு பக்கம் வந்துகிட்டே இருக்காங்க.

பார்வதி:  அதெப்படி உங்களுக்குத் தெரியும் உமா?

உமா: நல்லா கேளுங்க ...அதான் ஹி. ஹி. ஹீன்னு  சத்தம் எட்டு ஊருக்கு கேக்குதே.  உங்களுக்கு கேக்கல

தேமொழி வாகுப்பு வாசலில் கட்டியிருக்கும் நாயைப் பார்த்தவாரே உமாவின் மறு பக்கத்தில் வந்து உட்காருகிறார்.

தேமொழி:  ஐயா வணக்கம்,  அச்சச்சோ ...  என்ன ஐயா இது வாசல்ல நாயெல்லாம் கட்டி வச்சிருக்கீங்க ...ஹி. ஹி. ஹீ

வாத்தியார்: அது ஆனந்தமுருகன் ஜாகிங் போறப்ப அழச்சிகிட்டு போறது, வழியில வகுப்புக்கு வந்ததும் கட்டி வச்சிட்டாரு சகோதரி

தேமொழி: அட... நாயோட ஜாகிங் போறவங்க கூட வகுப்புக்கு வராங்களா?

ஆனந்தமுருகன்: ஏன் பேயோட வாக்கிங் போறவங்க வகுப்புக்கு வரலாம், நாயோட ஜாகிங் போறவங்க வரக்கூடாதா?

தேமொழி:  யார் பேயோட வாக்கிங் போனாங்க?

மைனர்: என் ரத்தத்தின் ரத்தத்திற்கு தன்னடக்கம் அதிகம்.  பல சமயங்களில் தன் பெருமை என்னவென்பது உணராதவர்கள்.  நாம்தான் அவர் பெருமையை
அவருக்கு புரிய வைக்க வேண்டும். அது நீங்கதான் தேமொழி ..ஆனந்த முருகன் சிகரட் லைட்டர் தாத்தா பேய சொல்றாரு.

தேமொழி:  ஒ ...ஹி. ஹி ...  நன்றி மாண்புமிகு மைனர்

அந்த சமயத்தில் தஞ்சாவூர் கோபாலன், கண்ணன், ரெட்ஃபோர்ட், சதீஷ், சுந்தரி, விசுவநாதன் அய்யர், கலை, தக்ஷிணாமூர்த்தி, ஆனந்த், ராமுடு,
ராஜாராம், வசந்த், ஜெயராம், ஜகன்நாத், பிரதீஷ், தினேஷ், அருள் முருகன், முருகராஜன்,  சி. சேகர், காயத்திரி, சஞ்சய், ஸ்ரீகணேஷ், கிருஷ்ணர்,
ரவிச்சந்திரன், ஈஸ்வரி சேகர், ஆறுமுக நாயனார், சுந்தர்ராஜ், பாலா, சிவா, பாமா,  நரேன், உமாபதி, அன்பு, அருள், ஜோசஃபின், ஓம் தத் சத், சக்தி
கணேஷ், ஸ்ரீவித்யா, சுதாகர், ரவி,  புதுகை தென்றல், ஸ்ரீனிவாசன், வெங்கடேச குருக்கள், நாராயணா, கோவிந்தசாமி, துபாய் சரவணன், வடுவூர் குமார்,
சுதன், நாதன், மகேஸ்வரன், சுந்தரச் செல்வன் ,எஸ். பி. ஜி. ஆர்.,   காலிங்கன், பாலமுருகன், தரண், சுந்தர், பிரசன்னகுமார், ரமேஷ் வெங்கடபதி,
சித்ரா காமராஜ், சபரி நாராயணன், ஏ. எல். நடராஜன்,  சமிக்க்ஷா   என இன்னும் பலரும் ஒரே கூட்டமாக ஒரு அறுபது எழுபது பேர் திபு திபு என்று
வகுப்புக்குள் நுழைகிறார்கள். அனைவரும் இருக்கையில் அமர்ந்து கரும்பலகையில் உள்ள பாடத்தை ஆவலுடன் படிக்கிறார்கள்.

கண்ணன்: ஐயா வணக்கம் (என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசாமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)

வாத்தியார்: என்ன கண்ணன் வணக்கம் மட்டும்தானா? பாடம் புரிந்தததா? என்ன கருத்து ஒன்றும் கிடையாதா?

கண்ணன்:  ஐயா, இப்படி மனதை உருக்கும்படி பாடத்தை சொல்லிவிட்டீர்களே ஐயா. வாழ்க்கையைப் பற்றி தாங்கள் கூறுவது புரியாமல் மக்கள் மாக்களாக
உள்ளார்களே ஐயா.   மனிதனை மனிதனாக மதிக்காமல், பச்சோந்தி போல் தினம் தினம் மனம் மாறுகிறார்களே ஐயா, எனக்கு அது வேதனையாக உள்ளது
ஐயா.  எப்பொழுது இந்த பாழாய்ப்போன மக்களுக்கு புத்தி வரும் என்று தெரியவில்லையே ஐயா.

வாத்தியார்: என்ன கண்ணன் இது அந்தக் கால நடிகை கண்ணாம்பா மாதிரி உணர்ச்சி வசப்படுகிறீர்கள்,  கவலைப் படாதீர்கள், காலம் மாறும் மக்களும்
திருந்துவார்கள், எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டாமா?

சுந்தரி:  வணக்கம் சார், சார் உங்க ஜாதக புத்தகம் எப்போ வரும்...மேலும் வகுப்பில் சகோதர சகோதரிகள் நல்லா எழுதுறாங்க.
மைனர் சகோதரா நீங்கள் நன்றாக எழுதுங்கள், நான் நிறைய படிக்க வேணும். வாழ்க்கைய பத்தி நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் சார்.

வாத்தியார்:  விரைவில் வெளிவரும் சகோதரி, உங்கள் பாராட்டிற்கு நன்றி.

பார்வதி:  'மாற்றங்கள்தான் வாழ்வில் மாறாதது, உயர்வும் தாழ்வும் மாறி மாறி வருவதே வாழ்க்கை' என்பதை உணர்த்தும் அழகான கருத்துள்ள பாடம்.
இக்காலத்திற்குத் தேவையானது. நன்றி

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்..."
என்று பகவத் கீதையில் ஸ்ரீமன் கிருஷ்ண பகவான் சொல்லவதை நாம் உணர்ந்தால் போதும்

வாத்தியார்:  தாய்க்குலம் நீங்கள் சொன்னால் சரிதான்!

KMR கிருஷ்ணன்:   பார்வதி அவர்கள் சமஸ்கிருதத்தில் நிறைய ஞானமுள்ளவராக இருக்கிறார்கள், அவரும் சி. சேகரும் வேதங்களையும்
உபநிடதங்களையும் பற்றி நிறைய விஷய தானம் செய்யும் வகையில் இந்த வகுப்பில் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறேன்.

redfort: Sir, whatever you said about life's absolutely positively true

வாத்தியார்:  நல்லது நன்றி நண்பரே!

தேமொழி:  வழக்கம்போல் தகவல் நிறைந்த பாடம் நன்றி ஐயா.
"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் 
வையகம் இது தானடா வையகம் இது தானடா 
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்"
என்ற டி.எம். எஸ் பாட்டும் இதே கருத்தில் வரும்

வாத்தியார்:  உண்மைதான் சகோதரி, உங்கள் கருத்திற்கு நன்றி

"வணக்கம் ஐயா, இன்று மின்சாரம் போனதினால் தகராறு, நேரத்திற்கு வரமுடியவில்லை" என்றவாரே ஸ்ரீஷோபனா உள்ளே வருகிறார்.

வாத்தியார்: வணக்கம், வாருங்கள் சகோதரி

உடனே பின்பக்கமாக நடந்து வாசலுக்கே போகிறார்.

வாத்தியார்: (திகைத்துப் போய்) ஏன் பின்னாலேயே போறீங்க?

ஸ்ரீஷோபனா: ஹி. ஹி. இல்லை ஐயா, மைக்கேல் ஜாக்சன் மாதிரி "மூன் வாக்" செய்து பார்த்தேன்

மைனர்: அப்ப ஒன்னு பண்ணுங்க திரும்பி நின்னு "மூன் வாக்" செய்யுங்க, வகுப்புக்குள்ள வந்திடலாம்

ஸ்ரீஷோபனா: (கரும்பலகையைப் பார்த்தவாறு) என்ன மைனர் ஓரே உற்சாகமா இருக்காரு? ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்ட பாடமா?  ஐயா பாடத்துக்கு துணையாக போட்டிருக்கும் படத்தில் உள்ள இந்த பெண் யார்? குழந்தை முகத்துடன் இருக்கும் இந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

தேமொழி: (வழக்கம் போல் முந்திரிகொட்டை போல் முந்திக் கொண்டு)  "வாழ்க்கை" அப்படின்னு 1949 ஆண்டு வெளிவந்த ஒரு பழைய தமிழ் படம், அதுல நடிச்ச வைஜயந்திமாலாவோட படம்.  அந்தப் படத்தில நடிச்சப்ப அவங்களுக்கு பதின்மூன்று வயதுதான், அதான் குழந்தை முகத்தோட இருக்காங்க.  கூகிள் காமாட்சி இந்த விவரத்த சொன்னாங்க.

கலை:  அன்பின் அண்ணா நல்ல பாடம், எனக்கு டில்லியில் நிலநடுக்கம் வந்ததில் இருந்து, நம் நாட்டுக்கு அடுத்து என்ன என்ன சோதனைகள்
வரப்போகிறதோ என்று ஒரே கவலையாய் இருக்கிறது.

வாத்தியார்: கவலைப் படாதீர்கள் சகோதரி, எல்லாம் ஏற்கனவே எழுதப் பட்டு விட்டது.  நடப்பது நடந்தே தீரும்.  உங்கள் கவலைக்கு மருந்து ஃபார்முலா
337 அதை மறந்து விடாதீர்கள்

வி.  தட்சணாமூர்த்தி: வழக்கம்போல் சிறப்பாக பாடத்தை கொடுத்துள்ளீர்கள் நன்றி!!

வாத்தியார்:  உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

ஆனந்த்: ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் கணக்கு வேலை அதிகம்.  எல்லாம் தொழில் கொடுக்கும் நிர்ப்பந்தம்.  வகுப்பிற்கு அடிக்கடி வந்து
சென்றாலும் உரையாடலில் கலந்து கொள்வதில்லை.  வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால் 1, 5, 9, 11 இடங்களின் அதிபதிகள் சிறப்பாக
இருக்கவேண்டும், இருந்துவிட்டால் யாராலும் அசைக்க முடியாது.  அப்படி இல்லாவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.  விதி வலியது.

வாத்தியார்:  உண்மை ஆனந்த், அது வாங்கி வந்த வரம். உங்கள் கருத்துக்கு நன்றி.  1, 9, 10, 11 ஆகிய இடங்களின் அஷ்டவர்கப் பரல்கள் 30 க்கு
மேலிருந்தால் வாழ்க்கை  நன்றாக இருக்கும், அப்படி இருந்தால் ஜாதகத்தை பார்க்காமல் மூடி வைத்துவிடலாம்

சதீஷ் கே: வாழ்க்கைப் பாடம், அதனுடன் நீங்கள் கூறும் ஜோதிட பாடம், உங்களைவிட சிறப்பாக யாரலும் இதை சொல்ல முடியாது.

வாத்தியார்: உங்கள் பாராட்டிற்கு நன்றி

அய்யர்: வாழ்வில் பல உண்மைகள் புரிவதில்லை, அதிலும் வாழ்க்கையே சிலருக்கு புரிவதில்லை.  இதை அழகாக சொல்லிய ஐயாவின் பதிவு சிறப்பு என  பாராட்டுகிறோம்.

KMR கிருஷ்ணன்: நீங்கள் சொல்வதை விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் புரிந்துவிட்டுப் போகிறது.  நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று  முன்பு நான் போட்ட பட்டியலுக்கே இன்னமும் விளக்கம்  இல்லை.

அய்யர்:
புரிந்தாலும் புரியாதென்பார்
புரியாவிட்டாலும் புரியாதென்பார்

புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்
புரியாதவர்களுக்கு புரிந்தாலும் ஆகப்போவதுதான் என்ன?

புரியாதவர்களுக்குப் புரிய வைக்க பின் வரும்
பாடலை சுழல விட்டு அமைதி கொள்கிறோம் ....

"புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது முடிந்த பின் உலகம் நமக்கேது?
முடிந்ததை நினைத்தால் பயனேது?"

வணக்கமும் வாழ்த்துக்களும்

வாத்தியார்: உங்கள் வாழ்த்துக்கு நன்றி, எப்படி இவ்வளவு பாடல்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் விஸ்வநாதன், நீங்கள் சொல்ல வந்ததை இரண்டு  இரண்டு வாக்கியமாக இல்லாமல் தொடர்ந்து சொல்லிவிட்டீர்கள் என்றால் எல்லோருக்கும் புரிந்துவிடும்

KMR கிருஷ்ணன்:  புரியாது புரியாதுன்னு திருப்பி திருப்பி சொன்னா புரிஞ்சிடுமா?  யாருக்கு புரியாதுன்னு சொன்னாதானே புரியும்

மைனர்:  ஏன்? நீங்களே இப்ப கொஞ்ச நேரமா திருப்பி திருப்பி புரியாது புரியாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கவங்க யாருன்னு யோசிச்சு பாருங்க
உங்களுக்கே அது யாருங்கற உண்மை புரியும்

KMR கிருஷ்ணன்: ஐயா பெரும்பாலான மாணவர்கள்... கோவி கண்ணன், நாமக்கல் சிபி, நந்தகோபால், கைகாட்டி, துளசி டீச்சர், சுமதி என பலர்
வகுப்புக்கு இப்பொழுதெல்லாம் வருவதில்லையே

வாத்தியார்: (மனதிற்குள் சொல்லிக்கொள்கிறார் ..... நீங்க எல்லோரும் செய்யற ராவடிய இங்க யாரால தாங்க முடியுது.  அவங்க எல்லோரும் கொடுத்து வச்சவங்க...  தாங்க முடியலன்னு ஓடிப்போயிட்டாங்க, நானும் ஓடிப்போக நினைச்சாலும் முடியுமா?  வகுப்பு வாத்தியாராச்சே, என்ன
செய்யிறது?....ஆனால் வெளிப்படையாக பெருந்தன்மையுடன் அவருடைய மாணவர்களை விட்டுக் கொடுக்காமல்.) எல்லோரும் வந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் கிருஷ்ணன் சார், வகுப்பில் கலந்துரையாடலில் கலந்து கொள்ளத்தான் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

வாத்தியார்: உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, என்னப்பன் பழனி முருகன் கோவிலுக்கும், அத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக
போவதாலும் வகுப்பிற்கு வரும் இரண்டு நாட்கள் விடுமுறை

தஞ்சாவூர் கோபாலன்:  அது வாத்தியாருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆசிரியர் ஐயா
நினைப்பது சரியில்லை

வாத்தியார்:  ஒரு பேச்சுக்காக சொன்னேன் சார்.  நீங்கள் வகுப்புக்கு முடிந்தபோதெல்லாம் வருவதே எங்களுக்குப் பெருமை.

KMR கிருஷ்ணன்:  நகரத்தார் வீட்டு கல்யாண விருந்து சிறப்பாக இருக்குமே.  திரும்பி வந்தவுடன் ஐயா எங்களுக்கு அந்த விருந்தைப் பற்றி சொல்ல
வேண்டும்.

வாத்தியார்:  உங்கள் வீட்டிற்கு வந்தால் நீங்கள் அன்புடன் பரிமாறும் மோர்க்குழம்பு, உருளைக்கிழங்கு காரக் கறியைவிடவா சிறப்பாக இருக்கப் போகிறது ? சரி நான் திரும்பி வரும் வரை அனைவரும் பழைய பாடங்களை திருப்பிப் பாருங்கள். மீண்டும் இரண்டு நாள் கழித்து சந்திப்போம்

ஆக்கம்: தேமொழி     
----------------------------------------------
2
வரைபடம்
வரைந்தவர்: தேமொழி

கதகளி நடனக் கலைஞர். ஓவிய ஆக்கம் தேமொழி
                
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3




அழைக்கிறது தொட்டி!
ஆக்கம்: தனுசு

யாரது யாரது அங்கே?
என்னைக் கவனிப்பவர் எங்கே ?
அய்யனே
அப்பனே
அழகனே - நான்
அப்போதிலிருந்தே அழைக்கிறேனே!


உங்களுக்காக
காத்திருக்கிறேன் .
உங்களை எதிர்ப் பார்த்துப் பூத்திருக்கிறேன்..
என்னைப் பார்த்த புதிதில்
புன்னகையோடு வந்ததென்ன
அள்ளி அள்ளித் தந்ததென்ன
இரவிலும் பகலிலும்
இடைவிடாமல் வயிறு முட்ட வைத்ததென்ன !
இன்று பளபளப்பு போனதால்
பத்தடி தூரத்தில் விலகிப் போவதென்ன !
.
பசியோடு இருக்கும் என்னை
பசியாற்ற வாருங்கள்
வந்தென்னைப் பயன் படுத்துங்கள்
உங்களுக்கு நோய் வராது தோழர்களே.


யாரங்கே யாரங்கே -என்னை
திரும்பிப் பார்ப்பவர் எங்கே?
அம்மையே
அன்னையே
நங்கையே
நான் காலியாய் இருப்பது இங்கே              


நானும் உங்கள் ஜாதிதான்
உங்களைப் போல் தியாகிதான்
பொட்டிச்சாவி கேட்கவில்லை
பொன்னும் பட்டும் கேட்கவில்லை
பொது இடத்தில் நிற்பதால்
புரிந்து கொள்ள மறுப்பதேன்
அருவருப்பை அறுத்துவிட்டு
கைகொடுங்கள் தோழிகளே
உங்களுக்கும் நோய் வராது .


யார் என்று தெரிகிறதா?
நான் யாரென்று தெரிகிறதா?
அய்யகோ.... அய்யகோ.....
நல்லதோர் வீணையாய்
நடுத்தெருவில் நிற்கிறேன்
நான்தான் குப்பைத்தொட்டி !
கேட்பது உங்களின் குப்பைகளை !
-தனுசு -

குறிப்பு; குப்பையை குப்பை தொட்டியில் போடாமல் அதன் அருகிலேயே தூக்கி வீசுபவர்களைப் பற்றி ; குப்பை தொட்டியே அவர்களை அழைத்து கேட்பது போல் எழுதி உள்ளேன். இங்கு புருனையின் தலைமை மருத்துவ மனையில் குப்பை தொட்டியின் மீது "என்னை பயன் படுத்துங்கள் உங்களுக்கு நோய் வராது" என்ற வாசகம் எப்பொழுதும் எழுதப் பட்டு இருக்கும். பலமுறை  அதனை பார்த்திருந்தும் அதன் மீது கவனம் செல்லவில்லை இந்த முறை அதனை பார்க்கும் பொது ஒரு கவனம் வந்தது. அதனால் இதை எழுதியுள்ளேன்!

--------------------------------------------------
4



அவளும் இவளும் -2
ஆக்கம்: தனுசு
-----------------------
அவள்
என்முன்னே இருக்கும் முச்சுவை
இவள்
என்கண்ணே படும் தீஞ்சுவை


அவள்
முப்பொழுதும் இனித்திடும் இளமை
இவள்
எப்பொழுதும் இருந்திடும் இனிமை


அவள்
ஏழேழு ஜென்மத்திலும் நான் தேடும் பந்தம்
இவள்
நான் ஈரேழு லோகத்திலும் தேடும் சொந்தம்


அவள்
என் இனிமைக்கு நேரில் வந்த பிறப்பு
இவள்
என் இனிமைக்கு உருவம் தந்த பிறப்பு


அவள்
என்னை மயக்கும் பொன்மாலை
இவள்
நான் மயங்கும் பூமாலை


அவள்
இந்த ராஜாவுக்கு ஏற்ற ராணி
இவள்
இந்த ராஜனுக்கு உற்ற ரோஜா


அவள்
திகட்டாத தேனமுது
இவள்
தீராத பாலமுது


அவள்
நான்பாடும் சங்கீத ராகம்
இவள்
நான்தேடும் சந்தோச கீதம்


அவள்
என் புகழ் பாடும் கவிக்குயில்
இவள்
என் மொழிபேசும் பச்சைக்கிளி


அவள்
என்னைப் பிரியாத குழந்தை
இவள்
என்நலம் நாடும் பெரியமனுஷி


அவள்
எனக்கு திருமதியாய் கிடைத்த வெகுமதி
இவள்
எனக்கு வெகுமதியாய் வந்த திருமகள்.
-தனுசு-
---------------------------------------------------
5



கட்டுப்பாடுகள் விதித்தால் அது எப்படி குழந்தைப் பாடல் ஆகும்?
சர்ச்சையைத் துவக்குபவர்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி


மஹாகவி பாரதியைப் பற்றி எழுதியுள்ளேன். சர்ச்சைக்கு உரிய விஷயமாகத் தோன்றலாம். மறுப்புத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம்

தஞ்சாவூராரும், அவருடைய அணுக்கச் சீடர் சிங்கைக்காரரும் தங்களின் கருத்தைப் பதிவு செய்யலாம். வரவேற்கிறேன்

'பாரதி மஹாகவியா, இல்லையா?' என்று பேராசிரியர் கல்கி காலத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்தது. இரண்டு கட்சிகளாகப் பிரிந்து மஹாகவி ஆவதற்கான இலக்கண, இலக்கிய கூறுகளெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசப்பட்டன.


மீண்டும் சில மாதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயமோஹன் அதே சர்ச்சையைத் துவங்கி ஒரு சுற்று நடத்தினார். அது விமர்சனக் கலை என்பது என்ன என்ற போதனைக்கு ஒரு எடுத்துக் காட்டாக முடிவுற்றது என்று அவதானிக்கிறேன்.

இப்போது நான் சொல்ல வருவது பாரதி ஒரு குழந்தைக் கவிஞர் அல்ல என்பதுவே ஆகும்.

"பாப்பா பாட்டு' பாடிய பாரதியை குழந்தைக் கவிஞர் இல்லை எப்படி சொல்லப் போச்சுது?" என்று கேட்பீர்களாயின், அது பெயருக்குத்தான் 'பாப்பா பாட்'டே தவிர, உண்மையில் அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளெல்லாம் எல்லா வயதின‌ற்கும் பொதுவாகவே உள்ளன.

மேலும்,அது மஹாகவியின் பெண்ணின் செல்லப் பெயர் பாப்பா! அவருக்குச் சொல்லப்பட்ட பாடலே தவிர, குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது அல்ல.

குழந்தைக்கான பாட்டு என்றால் என்ன?

'நர்சரி ரைம்ஸ்'தான் குழந்தைப்பாட்டுக்கள். (பாருங்கள் தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் சொல்லி விளக்க வேண்டிய துர்பாக்கிய நிலை நமக்கு.)

உண்மையில் ஆதியிலிருந்து நம்மிடையே நல்ல‌ குழந்தைப் பாடல்கள் உண்டு.

குழந்தை தவழத் துவங்கும் முன்னர் நாலுகாலில் தன்னை உறுதியாக நிறுத்திக்கொண்டு முன்னும் பின்னுமாக யானைபோல் ஆடும் போது

" ஆனை ஆனை அழகர் ஆனை
    அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
  கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை
    காவேரி நீரைக் கலக்கும் ஆனை
 குட்டி ஆனைக்கு கொம்பு முளைச்சுதாம்
    பட்டண‌ம் எல்லாம் பார்க்க வாங்கோ!"
என்று பாடுவார்கள்.

குழந்தை அமர்ந்து கொண்டு கை வீசும்போது

   "கை வீசம்மா கை வீசு
        கடைக்குபோகலாம் கை வீசு
    மிட்டாய் வாங்கலாம் கைவீசு
        மெதுவாய்த் திங்கலாம் கைவீசு"

என்று கை வீசுவதை உற்சாகப்படுத்த பாட்டுச் சொல்வார்கள். இது பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம் எனலாம்.

குழந்தைப் பாடல்கள் ஓசை நயத்துடன், ஒரே சொல் பலமுறை வரும்படியும் எளிமையாக இருக்க வேண்டும். பாடலில் நிகழ்வுகள்
சொல்லப்படலாம்.அறிவுரை இருக்கக் கூடாது.

'பொய் சொல்லக்கூடாது, புறஞ்சொல்லலாகாது' என்பது ஒரு கருத்துரு. இன்னும் மொழியின் ஆளுமை கைவரப் பெறாத குழந்தைக்கு கருத்துருக்களைச் சொன்னால், அது குழந்தைப் பாடல் ஆகாது.

"சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்..."

இது குழந்தைப் பாடல்.

"பாதக‌ம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

இதில் பாதகம், பயம், எதிர்ப்பு ஆகியவை உணர்வுகள். அவற்றை விளக்குவதற்கு கண்ணால் காண்பிக்கக் கூடிய பொருட்கள் எதுவும் இல்லை.
எனவே அச்சொற்கள் குழந்தைப் பாடல் அல்ல.

குழந்தைப்பாடல்கள் என்று சொன்னால், நான் சொந்தமாகப் படிக்கத் துவங்கிய போது 'கண்ணன்' பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் லெமன் என்ற புனைப்பெயரில் லெட்சுமணன் என்ற எழுத்தாளர் எழுதிய ராமயணப்பாடல் நினைவுக்கு வருகிறது அதில் ஒரு சில வரிகள் மறக்கவில்லை.

"அனுமாருக்கும் வால் அதிகம்      
அணிலாருக்கும் வால் அதிகம்


அத‌னாலேதான் இருவருக்கும்
ராமாயணத்தில் பேர் அதிகம்
         
அனுமார் அரிய பணி செய்தார்
அணிலார் ஆன பணி செய்தார்
       
ஆனால் ராமர் இருவரையும்
அகிலம் புகழும் படிசெய்தார்"

இது சிறார்களுக்கு ராமயணக்கதை சொல்வதுடன் மொழியையும், இசையையும், கவிதயையும் அறிமுகப் படுத்துகிறது. ஆனால் அறிவுரை சொல்லவில்லை.எனவே இதை குழந்தைப் பாடல் எனலாம்.

   "காலை எழுந்தஉடன் படிப்பு பின்பு கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு.."
என்று கட்டுப்பாடுகள் விதித்தால் அது குழந்தைப் பாடல் ஆகாது.

குழந்தைப்பாடல்களின் முடிசூடா மன்னர் மறைந்த அழ. வள்ளியப்பா!

பெயரில்தான் 'அழ' என்று வருகிறதே தவிர அவர் என்றுமே 'சிரி' வள்ளியப்பாதான்.அவர் பாடல்களைப் பாடி மகிழாத‌  குழந்தைகள், சிறார்கள்
தமிழகத்தில் இல்லை எனலாம்.

இந்தப் பாடலைப் பாருங்கள்:

"வெங்கு வெங்கு வெங்கு
வெங்கு ஊதினான் சங்கு
நுங்கு நுங்கு நுங்கு
நுங்கில் என்க்குப் பங்கு


வள்ளி வள்ளி வள்ளி
வள்ளி கொலுசு வெள்ளி
பள்ளி பள்ளி பள்ளி
பள்ளி செல்வோம் துள்ளி


பட்டு பட்டு பட்டு
பட்டு வாயில் பிட்டு
துட்டு துட்டு துட்டு
துட்டு தந்தால் லட்டு"

இக் குழந்தைப் பாடலின் நோக்கம் குழந்தைகளைக் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டே நாக்கைச் சுழற்றி மொழியைக் கற்க, பேச‌ வைப்பதாகும்.இதில் எந்த அறிவுரைக்கும் வேலை இல்லை.இது வள்ளியப்பாவின் பாடல். 'நர்சரி ரைம்ஸ்'க்கு நல்ல உதாரணம்.

"தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை


அப்பவுக்கு நான்கு,
அம்மாவுக்கு மூன்று,
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு  ஒன்று


திங்கத் திங்க‌ ஆசை
இன்னும் கேட்டா பூசை"

இந்தப் பாடலில் தோசைக்கு அரைப்பது போலவும், தோசை வார்ப்பது போலவும், தோசைகளின் எண்ணிக்கையும் நடித்துக் காட்டிக் கற்பிக்கலாம்.
இது நல்ல குழந்தைப்பாடல்.

இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு இப்போது வலைதளத்தில் முழுமையாகக் கிடைக்கிறது.

மஹாகவி பாரதி மஹாகவிதான் அதில் ஐயமில்லை. ஆனால் அவர் பாப்பா பாட்டு எழுதியதால் குழந்தைக் கவிஞர் அல்ல. பாப்பா பாட்டும் குழந்தைப் பாடல் அல்ல.

குழந்தைக் கவிஞர் என்றால் அது அழ.வள்ளியப்பாதான். அவர் எழுதியதுதான் குழந்தைப் பாடல்கள்.

இப்போது உங்களுடைய அன்பான அம்புகளைத் தொடுக்கலாம். எதிர் கொள்ளக் காத்துக் கொண்டு இருக்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்(இலால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


சக்தியவளை அமர்த்து மனமே - சாகாவரமதை
சத்தியமாக அருள்வாளொரு கணமே.
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி

அன்னை அபிராமியின் தெய்வீக அழகையும், அன்னை அவளின் அருள் தரும் பேரின்பத்தையும், அன்னை அவளின் கருணை தரும் ஞான அமுதத்தையும் பற்றியெல்லாம் பாடி அதை படிக்கும் போதே நமக்கு கிடைக்கும் பேரானந்தத்தையும் சிந்தையிலே கொண்டு...

அபிராமி அந்தாதியில், அபிராமப் பட்டரின் கவிநயத்தில் பொதிந்து இருக்கும் அற்புதக் கருத்துக்களை சரியான புரிந்துணர்வோடு உங்களுடன் பகிர அன்னை அவள் எனக்கு அருள வேண்டி அவள் பொற்பாதம் பணிந்து தொடங்குகிறேன்.  

சிறியோன் யான், அறியாது செய்யும் பெரும் தவற்றையும்; பெரியோய்! நீ, பொறுத்தாள்வாய் அபிராமித் தாயே!

அபிராமி அந்தாதியில் அபிராம பட்டரின் மூவா மருந்தென திரண்டு பெருகும் பேரின்ப கவிவெள்ளத்தில் அமுதகவியில் வரும் வருணனைகள், உவமைகள், உவமேயங்கள் நம்மை இன்பத்தில் ஆழ்த்துகின்றன. சில நேரங்களில் சில வற்றிற்கு சரியான பொருள் புரியாது, சற்று மயங்கவும் செய்கின்றன. இது அபிராமி அந்தாதி என்று மட்டும் அல்லாமல், பக்தி இலக்கியங்கள் எங்கும் இந்நிலையைக் காணலாம். அதற்கு பல சான்றுகளையும் நாம் ஆங்காங்கே காணலாம்.

என்னைப் போல பலரும் சாதாரண தமிழைப் படித்து இது போன்ற உயர்ந்த தத்துவ கருத்துக்களை புரிந்துக் கொள்வதில் இருக்கும் சிரமத்தை கவனத்தில் கொண்டே இவ்வாரமும் ஒரு சிறு முயற்சி...

அம்மையின் ஞானத்தை தரும் அமுதக் குடங்களுக்கு உவமேயமாக கூறப் பட்டதாகவே அவளின் திருமுலைகள் என்பதை நாம் அர்த்தப் படுத்திக் கொண்டோம். அதுவும் ஞானம் என்னும் பசிகொண்டு அதனைத் தீர்க்க; அன்னையவளிடம் அந்த ஞானம் பெற குழந்தையாய் நின்று மன்றாடுகிறார் என்று அபிராம பட்டரைப் பற்றி கூறி இருந்தேன்.

இப்போது அடுத்த சிலப் பாடல்களையும் பார்ப்போம்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமல அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும் எட்டுத் 
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

இப்போது இங்கு இந்தப் பாடலுக்கு அன்னையவளின் அருளால், நான் எனது விளக்க உரையை எழுதி சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்...

என் அன்னையே! அபிராமித் தாயே! நினதுத் திருக்கரங்களுக்கு அணிவது இனியக் கரும்பும், தேன்சுமந்த நறுமணம் வீசும் கவின்மிகு பூவும், நினது தாமரை மலரின் இதழ் போன்ற மேனியில் அணிவது வெண்முத்து மாலை. விடம் தனை தன்னகத்தே கொண்ட பாம்பைப் போன்ற அங்கம் தனக்கோ அணிவது; வைரம், வைடூரியம், பவளம், மரகதம் போன்ற பல மணிகளையெல்லாம் கோர்த்து செய்யப் பட்ட மேகலையும், பட்டும். அன்னையே எட்டு திசைகளை அணிந்துக் கொண்டவனும், மேன்மைகளுக்கெல்லாம் மேன்மையான அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற அந்தப் பெருமானை சேர்பவளே!...

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலியநெஞ்சை 
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல்அரவின் 
வடம் கொண்ட அல்குல் பணிமொழி - வேதப் பரிபுரையே.

அழகிய இரு பொன்மலைகள் போல் நன்கு பெருத்தும் (அன்புக் கருணையால் பெருத்தது), மகர்ந்தும் (ஞானம் பொங்கி மகர்ந்தது); இவை இரண்டிற்கும் இடையிலே இடைவெளி இல்லாதும், மிகவும் இளகிய, மென்மையான திருமுலைகளின் மேல் சிறந்த முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்தவளே!

இத்தனை மென்மையான, அழகுள்ள கொங்கைகளால் இறைவனின் வலிய நெஞ்சினையே ஆட்கொண்டு (முப்புரங்களையும் எரித்தவன், காமனையே எரித்தவன், வலிய நெஞ்சினன்) அவனின் இடப் பாகம் அமர்ந்து பிரபஞ்ச நாயகியானவளே! நல்ல பாம்பு ஓன்று படம் எடுத்ததைப் போன்று அழகான அல்குலை கொண்ட; இனிமையான பண்புமிகுந்த அமுதமான மொழிகளைப் உதிர்கின்றவளே, மேன்மையான வேதங்களை தனது பொற் பாதங்களில் சிலம்பாக அணிந்தவளே! (ஞானிகள் தொழும் அவளின் பாதங்களிலே வேதமாம், ஆம், அங்கு தானே ஞானிகள் சர்வ சதாக் காலமும் களிக்கின்றனர். அவளின் திருப்பாதம் அது அருளும் வேத விளக்கம் எனவும் கொள்ளத் தகும்) 

(ஈசனும் மயங்கும் அழகிய இருப் பொன் மலைகள் போல்ஆம், அவன் மயங்கும், அவன் விரும்பி உறையும் அந்த இரு மலைகள் தாம் இவை... மேருவும் கயிலையுமாக இது தான் ஈசன் மயங்கும் இரு பொன்மலை போன்றக் கொங்கைகள் என்பதன் உட்பொருள். அதற்கு இன்னும் பலக் காரணமும் சொல்லலாம், அதை பிறகு பேசலாம்.)

இங்கே மேலும் தொடரும் முன்.
திருப்பாவையிலே ஆண்டாளின் பாடல் ஒன்றையும் கூறி அங்கே பரந்தாமன் கிருஷ்ணன் நப்பின்னையோடிருக்கும் அழகையும் காண்போம்...

"குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்" 

இங்கே பரந்தாமன் விரும்பும் அந்த நப்பின்னையின் கொங்கைகள் தாம் யாவை?...

சுருக்கமாக, இங்கே வேதாந்தம் போதிந்தப் பொருள் யாதெனின். பகவான் இங்கே மயங்கிய கொங்கைகள் இரண்டு.

அன்னை ஸ்ரீ தேவியின் தீராத அன்பாகிய பக்தியும் வைராக்கியமும் தான் அவைகள். சிரத்தையும், வைராக்கியமும் கொண்ட பக்தனிடம் இறைவன் மயங்கிக் கிடப்பான் என்பது தான் அதன் வேதாந்த அர்த்தம். சரி இப்போது தொடருவோம்.

பராசக்தி, ஆதியவள், ஜோதிவடிவானவள், கருணையின் ஊற்று, அன்புக் கடல், ஞானக் கேணி, அழகின் இலக்கணம்; அவள் தாம் நமது அன்னை அபிராமி.

அவளைத் தவிர வேறெதையும் காணாத ஞானி அபிராம பட்டர் அருளிய பாடல்களில் இருந்து, மேற்கண்ட இருப் பாடல்களின் கருத்துக் களை எல்லாம் அறிந்து இன்புற்றோம்.

இருந்தும் அங்கே அகம் சார்ந்த விஷயத்தை காட்டி இருப்பதாகவே நம்மில் பலருக்கும் தோன்றும். அதைப் பற்றிய சிந்தனைக்கே போகிறோம்.

"விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும்" 
"நல்அரவின் வடம் கொண்ட அல்குல்"

இங்கே இந்த மகான் என்ன பொருளில் அன்னையின் இந்த அங்கத்தைப் பற்றிக் கூறுகிறார். அவர் ஞானி, மகான்... அவர் தெளிந்த மனத்துடன்; ஒருக் குழந்தையாய் நின்றுப் பணிந்தே இந்த அமுதக்கவியை அருள்கிறார் என்பதை மீண்டும் இங்கே நினைவில் கொள்வோம். இருந்தும் இந்தக் குழந்தை, வளர்ந்து, எல்லா கல்வி கேள்விகளையும் பெற்ற ஞானக் குழந்தையும் கூட..

நவரெத்தினங்களும், பட்டும் அணிந்த அழகிய அல்குல், அது பார்ப்பதற்கு நல்ல பாம்பு ஒன்றுப் படம் எடுத்தது போன்று இருக்கிறது, அதுவும் விஷம் தனை தன்னகத்தே கொண்ட நல்ல பாப்மைப் போல் என்கிறார்.

எங்கும், எல்லாமும் ஆகி, எல்லாவற்றிலும் பரவி வியாபித்து இருக்கும் அன்னை அவள் என்றால் அவள் அனைத்திலும் இருப்பவள்... இன்பம், துன்பம், ஆண், பெண், தொடக்கம், முடிவு, நல்லது கெட்டது என்று அனைத்துமானவள்.  

இங்கே இறைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறை சக்தி. சக்தி அவள் இல்லா இடமேதும் இல்லை. அப்படி இருக்க எதைக் குறிப்பிட்டாலும் அங்கே சக்தி அவள் இருப்பதாகவேத் தான் அர்த்தம். "தீயிற்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!" தீயினுள் விரல் விடும் போது துன்பம் எனாது இன்பம் என்கிறான் பாரதி. 

தனி ஒருப் பொருளாக காண்பதல்ல இறைவியை. அப்படிக் காணும் போது இதைப் போன்ற வார்த்தைகளை கையாளும் பக்தி இலக்கியங்களை சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

குறுகிய வட்டத்தில் இருப்பதாக எண்ணாமல், மிகப் பரந்த வெளியில் இருப்பதாக, விசாலமானப் பார்வை கொண்டவர்களாக, நாம் சற்று உயரமான இடத்திலே பறந்துக் கொண்டு நின்று இந்த புவியை, அதன் தத்துவத்தின் சாரத்தை பற்றி யோசித்தால் அதன் தார்ப்பரியம் அணு பிசகாது விளங்கும்.

அப்படி இல்லாது நாம் புவியிலே காணும் சாதாரண சக பொருளோடு, ஒப்பிடும் போது,  இந்த உவமானங்களும், உவமேயங்களும் அப்படி ஒரு தோற்றத்தை நமக்கும் தோற்றுவிக்கலாம்.

அனைத்துமாகியும்... அதற்கு அப்பாற் பாட்டுமாக இருப்பவள் அன்னை அபிராமி என்கிறார் அபிராம பட்டர்.

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் 
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - என்றன்நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார் -
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

என்பார்...  நாம் எதையும் விடுவதற்கில்லை.

(இந்த ஒருப்பாடல் தான் பிரபஞ்சத் தத்துவம். இதில் பிரஞ்ஞை அற்ற நிலையில் தொடங்கி, படைப்பின் தொடக்கம், ஊழி என அனைத்தும் அடக்கம்... இதை விரித்தால் பிரபஞ்சமே விரியும்)

சரி விசயத்திற்கு போவோம்.

அதனாலே, அவளிடமும்!. அந்த அழகிய விஷம் பொருந்திய அரவு போன்ற அல்குல் என்கிறார்.

எல்லாவுயிர்களுக்கும் இறைவனின் படைப்பிலே மிகவும் கீழான நிலையிலே, இடத்திலே இருக்கும் அந்த அங்கம்.

அழகானது, அவசியமானது, இகலோக இன்ப துன்பத்திற்கு காரணமானது, உலக இயக்கத்திற்கு முக்கியக் கூறானது (கூரானது), வாழ்வின் முதன்மையானது, அதாவது முதலில் வருவது..... சிற்றின்ப தேரது. ஆனால் அது கீழான நிலையிலே இருக்கும் கீழானது.

கீழான நிலையிலே இருக்கும் அழகான விஷயமானது... அதுவே விசமும் தன் வசமானது.  

இந்த அழகான ஒன்றில் மயங்கி, இரவல் வாங்கி வந்த உடல் அழிந்து போகும் நாள் வரை, வந்த காரணத்தை மறந்து, அடுத்து செய்ய வேண்டிய காரியத்தையும் மறந்து; கீழான, விஷம் நிறைந்த இந்த அழகான சிற்றின்பத் தேரிலே ஏறி வாழ் நாளெல்லாம் உலா வந்து கழித்து, அந்த அற்ப சுகத்தை அனுபவிக்க, அதிலே திளைக்கத்தான்;

எத்தனை எத்தனை பொய், கவலை, வருத்தம், கோபம், பொறாமை, துரோகம், நடிப்பு, தீங்கு இளைத்தல் என்று உலக துன்பமெல்லாம் மேற்கொண்டு; கடைசியில் இம்மையில் இருந்த நல் கர்மத்தையும் செலவழித்து இருள் சூழும் மறுமைக்கு போக பயணச் சீட்டை வாங்கவே காத்து இருந்து விடுவது. இதைதான் மனிதர்கள் பெரும்பாலும் செய்கிறோம்.

இப்போது புரிந்திருக்கும், அந்த மகான் அழகான, நல்ல பாம்பென்று ஏன்?அதைச் சொன்னாரென்று. அதையும், அவளும் அங்கமாக கொண்டவள். ஆம், அவள் எங்கும் எதிலும் எல்லாமுமாகி இருப்பவள். இச்சாசக்தியும் அவளே, கிரியா சக்தியும் அவளே, ஞான சக்தியும் அவளே.   

************************************************************************************

பக்தி இலக்கியங்களிலே பெரும்பாலும் தீமையை, முக்திக்கு, பிறவியில்லாப் பெருநிலைக்கு தடையான துன்பங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக குறிக்கும் சொல் ஒன்று உண்டு என்றால் பெரும்பாலும் அது தான் இந்த அரவம் என்ற சொல் குறிப்பு.

(உலக சுகாதார அமைவுஇன்றைய சூழலில் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளியின் சின்னமும் கூட இது தான்

இன்னொரு உதாரணமும் பக்தி இலக்கியத்தில் இருந்து..
ஈசனின் திருமார்பிலே, ஏன்? அவனின் மேனியெல்லாம்; கொன்றை மலர் மாலையும் உண்டு, இந்த அரவமும் உண்டு.....

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


"அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும்." என்கிறது திருமுறை 1 -ல் வரும் பாடல் ஒன்று.

இங்கே காணும் அரவம் வேண்டாமையை குறிக்கிறது, இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவன், இருந்தும் இரண்டும் அவனுள் தான் அடக்கம் இன்னும் சொன்னால் அதனிற்கு அப்பார்ப்பட்டவன் தான் அவன். அவன் மேனி என்னும் பிரபஞ்சத்தில் இவை இரண்டும் கலந்தே தான் இருக்கிறது என்ற வேதாந்தக் கருத்தையும் கொள்ளத் தகும்.

இது வரை நாம் பக்தி இலக்கியத்தில் வரும், திருமுலைகளின், அல்குலின் உவம, உவமேயங்களைப் பற்றி பார்த்தோம். 

சரி, இப்போது நான் இன்னொரு முக்கிய பொருளைப்பற்றியும் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

என்ன அது? இதோ இந்தப் பாடல்களைப் பாருங்கள்....

"கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே 
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்"

"மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே"

இங்கே வரும் இந்த மயில் என்றப் பதத்தின் உட்பொருள் வேதாந்த அர்த்தம் தான் என்ன

அதற்கு முன்பு நாம் நாம் நமது அப்பன் சுப்ரமணிய சிவத்தினை தரிசித்து விட்டு வருவோம்.
                                                
அப்பன் முருகன், ஆறுமுகக் கடவுள் வள்ளி என்னும் இச்சாசக்தியினையும், தெய்வயானை என்னும் கிரியா சக்தியையும் வல, இடப் புறமாக கொண்டு ஞான சக்தியாக நடுவிலே இருக்கும்; இந்த சுப்ரமணிய சிவம் அமர்ந்திருப்பதோ மயிலின் மீதே.

இதன் உண்மையான் தார்ப்பரியம், அதாவது இது தான் இந்தத் திருக்கோலம் தான் வேதாந்தம் கூறும் பிரபஞ்சக் கோலம்.

இங்கே மயில் என்பது மனமாக பொருள்படுகிறது. 
ஆம், மயில் தாம் மனம். மனம் தான் அந்த மயில்....
(மனமே முருகனின் மயில் வாகனம் என்றப் பாடலைக் கூட கேட்டிருப்போம்).... 

மேலேக் காணும் இருப் பாடல்களிலும் அன்னை அவள் மயிலாக; அதாவது இறைவனை தனது ஆத்மாவில் தாங்குபவள், இறைவனை மனதிலே அமர்த்தி பூஜிப்பவள் அதனால் அவள் அழகு மயிலாகிறாள். 

அப்படி என்றால் மனமென்னும் மயில் எப்போதும் தாங்க வேண்டியது, அதன்மீது அமர்த்த வேண்டியது இறைவனைத் தான் என்பது தான் அந்த தார்ப்பரியம்.

சரி, இறைவனை மனதிலே இருத்துவோம். ஆனால் இந்த இகலோக சுகம் வந்து படுத்துகிறதே!. அதில்லாமல் இந்த உலகமும் இயக்கம் பெறுமா?.

அது அழகான; இருந்தும் விஷம் கொண்ட கீழான அரவமே என்று கேட்குமின்.

மீண்டும் அந்த சுப்ரமணிய சிவத்தை, பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் அந்த மயிலின் காலைப் பாருங்கள் அங்கே அந்த அரவம் அமைதியாக (இறந்து விடாமல் / மறைத்தும் விடாமல்) அமைதியாக அந்த மயிலின் பாதத்திற்கு கீழே படுத்து இருக்கிறது. படமெடுத்து இருந்தாலும், அதென்னவோ அந்த மனத்திற்கு கட்டுப் பட்டு தான் இருக்கிறது.

இப்போது அபிராம பட்டரின் பாடல்களுக்கு தனியாக நான் ஏதும் விளக்கம் கூறும் முன் அனைத்தும் உங்களுக்கு விளங்கி இருக்கும்.

மயிலென்று அல்ல, வேறெந்த வாகனமாக இருந்தாலும் அது மனம் அதன் மேலே ஏற்ற வேண்டிய ஒன்று இறைவன் மாத்திரமே. மனம் இந்த அழகிய கீழான விசத்தன்மை வாய்ந்த அரவத்தை அடக்கியே வைத்திருக்க வேண்டும்.

கடைசியாக ஒரே ஒரு விஷயம் எது சிற்றின்பம்? எது பேரின்பம்? என்று மீண்டும் பார்ப்போம். ஆத்மாவிற்கு அணுக்கமான, நெருக்கமான, அதன் சொரூபமான யாவும் பேரின்பம்.

அதற்கு அன்னியப் பட்ட யாவும் சிற்றின்பம். இதுவே தமிழ் இலக்கணமும் கூட; இதைத் தான் நச்சினார்கினியரும் அகம் பற்றிய தொல்காப்பிய விளக்கமாகக் கூறுகிறார். 

எந்த செயலும் ஆத்மார்த்தமாக செய்தால் அது இந்தப் பேரின்பச் செயலின் சாயலில் இருக்கலாம் இருந்தும். எந்தப் பேரின்பக் கடலின் ஒருத் துளியாக நாம் வந்தோமோ அந்தப் பேரின்பக் கடலில் சேர்வதே, பேரின்ப அகம் என்பதே, உண்மை. அது தான் ஆத்மாவின் லட்சியம் என்கிறது மறைகள் யாவும்.

ஆத்மா என்றால், நாம் கொண்டுள்ள ஜீவாத்மா அதாவது நான், எனது குடும்பம் என்றதும், மற்றொன்று மகான்களிடம் இருப்பது அந்தராத்மா ( அதாவது மகாத்மா காந்தியைப் போல் குடும்பம், கடமை என்று யாவும் இருந்தும் பற்று எல்லாம் இறைவனின் மீதே... இக லோக வாழ்க்கை என்பது தாமரை இலைமேல் தண்ணீர் போல்), அதன்பிறகு ஜீவன் முக்தர்களின் பரசிவ வெள்ளத்திலே கலந்த ஆத்மா அது தான் பரமாத்மா.

இனி, பக்தி இலக்கியங்களை என்னை போன்றதொரு சாதாரணன் படிக்கையிலே, ஒரு சிரமமும் இருக்காது என்பது எனது எண்ணம்
நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலேஇங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

அன்னை அபிராமியின் திருப்பாதம் தொட்டு வணங்கி முடிக்கின்றேன். நம் அனைவருக்கும் அன்னை அவளின் கடைக்கண் பார்வையாது கிடைக்கவேண்டும் என்று அவளைப் பணிவோம்.

நன்றி வணக்கம்,

கோ. ஆலாசியம்,
சிங்கப்பூர்.
++++++++++++++++++++++++++++++++++++++
7
பாதைகள்
படங்களை அனுப்பியவர்.ஜி.அனந்தமுருகன்


Photo 1
Photo 2
Photo 3
Photo 4
Photo 5

Photo 6
Photo 7
Photo 8

Photo 9
Photo 10
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
பதில்கள் சரியாக இருந்தும் பையன் ஃபெயில்! ஏன்? நீங்களே பாருங்கள்
சுட்டிக் காட்டுபவர்: சபரி நாராயணன், சென்னை



THIS STUDENT GOT  0% ON THIS EXAM
I would have given him 100%

Q 1. In which battle did Napoleon die?
A - his last battle

Q 2. Where was the Declaration of Independence signed?
A - at the bottom of the page

Q 3. River Ravi flows in which state?
A - liquid

Q 4. What is the main reason for divorce?
A - marriage

Q 5. What is the main reason for failure?
A - exams

Q 6. What can you never eat for breakfast?
A - lunch & dinner

Q 7. What looks like half an apple?
A - the other half

Q 8. If you throw a red stone into the blue sea
what it will become?
A - wet

Q 9. How can a man go eight days without sleeping ?
A - No problem - he sleeps at night

Q 10. How can you lift an elephant with one hand?
A - You'll never find an elephant with one hand.

Q 11. If you had three apples and four oranges in one hand
and four apples and three oranges in other hand,
what would you have?
A - very large hands

Q 12. If it took eight men ten hours to build a wall,
how long would it take four men to build it?
A - No time at all - the wall is already built.

Q 13. How can you drop a raw egg onto a concrete floor
without cracking it?
A - Any way you want.
Concrete floors are very hard to crack.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

142 comments:

  1. புரியாததை புரிய வைத்த பொக்கிஷமே
    புரிந்து கொள்ள சொன்னதை

    புரிந்தும் புரியாதது போல் பேசினால்
    புதிதாக சொல்ல என்ன இருக்கிறது..

    புரட்டி புரட்டி தேர்ந்தெடுத்த
    புதிய முயற்சி பின் ஊட்ட கிளர்ச்சி

    அய்யரையும் விட்டு வைக்கவில்லை
    அசத்தலா(?!) உங்கள் (நகை) சுவை

    நீங்கள் விரும்பும் அந்த பாடல்
    உங்களுக்காக சுழல விடுகிறோம்


    மாறாதய்யா
    மாறாதய்யா மாறாது!

    மனமும் குணமும் மாறாது!
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்

    தூயதங்கம் தீயில் வெந்தாலும்...
    மாறாதய்யா மாறது!
    மனமும் குணமும் மாறாது!

    காட்டுப்புலியை வீட்டில் வச்சு
    கறியும் சோறும் கலந்து வச்சாலும்

    குரங்கு கையில் மாலை கொடுத்து
    கோபுரத்து மேல் நிக்க வச்சாலும்..
    மாறாதய்யா மாறது!
    மனமும் குணமும் மாறாது!

    வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது
    மனசரியாமல் காதலிச்சாலும் பலிக்காது

    காலமில்லாமல் விதைவிதைச்சாலும் முளைக்காது!
    காத்துல விளக்கை ஏத்தி வச்சாலூம் எரியாது!

    திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
    திருடும் கையைக் கட்டி வச்சாலும்

    தேடும் காதைத் திருகி வச்சாலும்
    ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்…

    மாறாதய்யா மாறது!
    மனமும் குணமும் மாறாது!

    படம்: குடும்பத்தலைவன்.
    பாடல்: கவியரசர்.
    குரல்: TMS

    ReplyDelete
  2. அசலைவிட நகல் சில சமயம் நன்கு அமைந்துவிடும். இன்று தேமொழியின் நகைச்சுவை ஆக்கம் அப்படித்தான் அமைந்துவிட்டது. மிமிக்கிரி செய்பவர்கள்
    பெரும்பாலும் சுலபமாகக் கைதட்டல் பெற்றுவிடுவார்கள். சிரமப்பட்டு நடிப்பதை விட நடிகர்களை இமிடேட் செய்வது அதிகப் பாராட்டுக்களைப் பெறும்.

    உமாவை கொஞ்சம் 'ஸ்பேர்' பண்ணிவிட்டார்கள். உமாவை இன்னும் கொஞ்சம் கலாய்த்திருக்கலாம்.அப்போது சுவை கூடியிருக்கும்.

    நான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றி எழுதுவதை கை விட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்டன.ராஜாஜி பற்றி ஒரு கட்டுரையும், ஒரு நீண்ட பின்னூட்டம் மட்டுமே இட்டுள்ளேன்.பாரதி,மஹாத்மாஜி, வினோபாஜி, சத்திய‌மூர்த்தி, ஜிட்டுகிருஷ்ணமூர்த்தி, என்று பலரைப் பற்றி எழுதியுள்ளேன். என் சொந்தக் கதை எழுதியதே அதிகம். லண்டன் அநுபவம் 6 கட்டுரைகள் எழுதியுள்ளேன்.இதுவரை என் ஆக்கங்கள் 85 ஐத் தாண்டக்கூடும்.ஆனால் நான் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பதுபோல கட்டுரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்த ஆக்கம் நகைச்சுவை என்ற அளவில் பாராட்டினைப் பெறுகிறது.இது மைனர்வாளுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். ஒரு வேளை மைனரின் ஆலோசனையின் பேரிலேயே இது எழுதப் பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  3. மாணவர் சந்திப்பிற்கு அழைத்தவர்
    மதிப்பிற்குரிய லால்குடி சகோதரர்

    மாறாமல் வந்ததோ அந்த சிந்தனை
    மறுவடிவில் இந்த வகுப்பில்..

    படத்தில் இருப்பவர் மைனரே என
    பாடத்தில் அவரை மெதுவாக விட்டது

    பாசம் தானே.. நிச்சயம்
    பயம் இல்லை தானே...

    பேயை பற்றி சொன்னதும்
    பேய் கதை தரும் சகோஉமாவேவென

    பார்த்துக் கொண்டிருந்தோம்,,,
    பயப்பட வேண்டாம் அது நானே

    என்றதும்..நீங்களுமா
    என்று கேட்டு அமைதி கொண்டோம்..

    மற்ற பதிவுகளுக்கு பின்ஊட்டம்
    மவுனம்.. மறுபடியும் சந்திப்போம்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  4. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தேமொழி அடி பின்னிஎடுத்து கலக்கிட்டிங்க .

    M.G.R.சிவாஜி கணேசன் ,ரஜினி, லூஸ் மோகன் ,வினு சக்ரவர்த்தி என்று திரையில் நாம் பார்க்கும் படங்களில் இவர்கள் வசனம் பேசுவார்கள் அவைகள் நம்மிடம் பெரிதாக ஒன்றும் ரீச் ஆகாது. அந்த ஒன்னும் இல்லாத வசனங்கள் மேடைகளில் யாராவது மிமிக்கிரி செய்தால் அவை நம்மைஅடைந்து நாம் மிகவும் ரசிப்போம் கைதட்டி மகிழ்வோம்.

    அதைப் போல்தான் இன்றைக்கு உங்களின் ஆக்கம்.ஏற்கனவே பின்னூட்டங்களில் வந்த கலாட்டவை கலக்கல் காமெடி பண்ணி வகுப்பறையை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள் .

    வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு வரிக்கு வரி வயிறு வலிப்பு.

    நேற்றைக்கு பின்னூட்டத்தில் KMRK என்னை கேட்டார் "தனுசு ரூம் போட்டு யோசிப்பிங்களோ"
    இப்போது நான் உங்களை அதைத்தான் கேட்கிறேன் "ரூம் போட்டு யோசிச்சிங்களோ"

    எந்த வரிய உதாரணத்திற்கு எடுக்கிறது , எடுத்தால் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியதை முழுமையாக எழுதும்படி ஆகி விடும் போலிருக்கிறது.

    "எண்ணைக்கு பதிலா பெபிகால் தடவிக்கிட்டு பார்க்கிறதுதானே "

    "நான் வஞ்சியவள் ன்னு சொன்னது மாமியைத்தான் "

    "அப்ப ஒன்னு பண்ணுங்க திரும்பி நின்னு மூன் வாக் பண்ணுங்க "

    "வாத்தியார் மனதுக்குல்ம் சொல்லிக் கொள்கிறார் (.......நீங்க எல்லாரும் செய்யுற ராவடிய யாரால தாங்க முடியுது...................)""

    வாத்தியார் ;நீங்கள் உங்கள் வீட்டுக்கு வந்தால் அன்புடன் பரிமாறும் மோர்க் குழம்பு உருளை கிழங்கு ,காரா.................."

    இந்த சைடு வசனங்கள் அனைத்தும் அனைவரும் குறிப்பிடுவார்கள் பாருங்கள்

    இந்த ஹிட்டு வகுப்பில் என்றைக்கும் மறையாது -மாறாது .

    ReplyDelete
  5. தேமொழியின் கதகளி நடன ஓவியம், கையை உயர்த்தி அதில் கட்டை விரலையும் உயர்த்தி காட்டுவது அவருடைய கலாட்ட காமெடி அருமை என்று காட்டுவது போல் உள்ளது .

    ReplyDelete
  6. எனது கவிதைகளை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    offshore பணியில் இருப்பதால் என் போன்றோருக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை முழுமையான கட்டாய மருத்தவ பரிசோதனை நடை முறையில் உள்ளது.அந்த வகையில் அடிக்கடி பரிசோதனைக்கு செல்ல வேண்டி வரும் .அப்படி சென்ற வாரத்தில் ஒருநாள் பரிசோதனை முடித்து திரும்பும் போது , கையில் ரத்தம் எடுத்த இடத்தில் வைத்த பஞ்சியை தூக்கி போட போனபோது எப்போதும் கவனத்தை ஈர்க்காத அந்த வாசகம் என்னை இந்த முறை ஈர்த்தது.

    இரண்டாவது கவிதை தோழி அவர்களின் "நேயர் விருப்பத்திற்காக"

    ReplyDelete
  7. மீதி ஆக்கங்கள் நாளை படித்துவிட்டு

    ReplyDelete
  8. thanmozi gallipathu super . class ullathu polava erunthu photo mekavum arumai....

    ReplyDelete
  9. யப்பா அடி பின்னிடிங்க, நான் கடந்த 4 மாதமாக வகுப்புக்கு வருகிறேன். அதுலயும் ஒழுங்காக பின்னூட்டமும் இடுவது இல்லை. ஆனால் நீங்கள் கலாய்த்த பெரும்பாலோருடைய பின்னூட்டங்களை படித்து இருக்கிறேன். அதனால் என்னால் ரசிக்க முடிந்தது. ரொம்ப நேரம் சிரித்து கொண்டு இருந்தேன் (நீண்ட பதிவும் கூட ). தாங்கள் அசாத்திய நகைச்சுவை உணர்வு பெற்றவர்கள். நன்றி நன்றி.

    ReplyDelete
  10. தேமொழி சகோதரிக்கு நீங்க ரொம்ப நல்லாத வசனம் எழுதியிருக்கிறீங்க தமிழ் பட்டபடிப்பா ரொம்ப நல்லாயிருக்குது

    ReplyDelete
  11. வாத்தியார் ஐயா வணக்கம்.

    சொல்லுவதற்கு வாக்கும் இல்லை , எழுதுவதற்கு வார்த்தையும் இல்லை .

    உலகிலையே மிகவும் உயரமான " எவரஸ்ட் " மலை போல அக்கா " தேமொழி", யின் படைப்பு இருக்கின்றது . இதனில் மிகவும் மிகை படுத்தி கூறுவது என்றால் அக்கா அவர்களின் " பாசம் ", தான் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது . சும்மாவா ஐயா வகுப்பறைக்கு வரும் அனைவரின் பெயர்களையும் மனதில் கொண்டு மிகவும் அற்புதமாக " கதை & வசனம்". எழுதுவது என்றால் சும்மாவா ஐயா!

    தனக்கு வரும் இ- மைல்லையே பார்பதற்கு நேரம் இல்லை என்று " யிசலை", போல அனலாய் பறக்கும் இந்த உலகத்தில் இவ்வளவு அருமையாக ஒரு மாபெரும் படைப்பை தருவது என்றால் சாதாரண பட்ட காரியம்மா ஐயா!

    இன்னும் கூறுவது என்றால் ஒவ்வொருவரின் குணம் மற்றும் நலத்தை மனதில் கொண்டு எழுதுவது என்பது மிகவும் கடினம். என்னுடைய பார்வையில் எனக்கு பட்டத்தை கூறிவிட்டேன் இதனில் மற்ற சக மாணவர்களின் மற்றும் பெருசுகளின் கருத்துக்கு அடியவன் பொறுப்பு அல்ல.

    தேமொழி அக்கா! எமக்கு திரைப்பட துறையில் எவரும் அறிமுகம் இல்லாமல் போகி விட்டது . ஒருவேளை எமக்கு தெரிந்து இருக்கும் எனில் தங்களுடைய இன்றைய ஆக்கத்தை திரைப்பட துறையில் உள்ளவர்களிடம் காண்பித்து உண்மையிலே கதை மற்றும் வசனம் எழுதும் வாய்ப்பை தங்களுக்கு வாங்கி தந்து இருப்பேன் அக்கா!.

    என்றும் அன்புடன் தம்பி கண்ணா.

    இயற்க்கை வளம் நிறைந்த படம்கள் மிகவும் அற்புதம்.

    ReplyDelete
  12. கதகளி ஆட்டக்காரர்கள் உடையில், இடையில் கூடை போல் வைத்து உப்ப வைத்துஇருப்பார்கள். தேமொழி அதனைத் தவிர்த்து விட்டதால் கதகளி ஆட்டக்காரார் குடுகுடுப்பாண்டி போல ஆகிவிட்டார். கதகளிக்குரிய நிறம் அமைந்துள்ளது. 50% மதிப்பெண்தான்.

    ReplyDelete
  13. தனுசுவின் குப்பைத் தொட்டிக் கவிதை குப்பைத் தொட்டிக்கு உரியதல்ல.
    கோபுரத்திற்கு உரியது. கவிதை என்பது வெறும் காதல் பிதற்றலுக்காக மட்டும் என்பது போய், சமூக நன்மைகளுக்காக என்பது ஓர் உயர் பரிமாணம்.

    'அவளும் இவளும்' என்று சீரியலாக எழுதப்போகிறாரா தனுசு? அடுத்தது மாமியாரும் மனைவியும், அத்தையும் அக்காவும் என்று சீரியல் தொடருமா?
    கவித்துவமான சொற்கள் இயல்பாக அவருக்கு வருகின்றன‌. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. சிங்கைக்காரர் சரியான இலக்கிய வாதிதான். பதார்த்தம்(சொற்களுக்கான பொருள்) மட்டுமே பார்க்கத் தெரிந்த என் போன்ற அஞ்ஞானிகளுக்கு குஹ்யார்த்தம்(குகைக்குள் மறைந்து இருப்பது போன்ற பொருள்) அதாவது உட்பொருள் உணர்த்தும் அவருடைய முயற்சி வெல்லட்டும்.

    தஞ்சாவூரார், அய்யர், பார்வதி ராமச்சந்திரன், ஓம்தத்சத் ஆகியவர்கள் கூறும் விமர்சனம், மேலதிகத் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.நண்பர் ஹாலாஸ்யம்ஜியின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. கோடு போட்டுக்கொடுத்தால் ரோடு போடுகிறாரே அனந்த முருகன்.
    Fun on the net
    என்ற வலைதளம் இதைப்போல பல படங்களை அடிக்கடி வெளியிடுகின்றது.
    படங்களில் எனக்குப்பிடித்த சாலைகள், திரிகோணம்தான். அதாவது படங்கள் 1,5,9

    ReplyDelete
  16. சபரியின் வினாவிடை I A S நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி பதிலாகும். இக்கேள்விகளுக்கு இப்படிப்பட்ட பதில்களே எதிர்பார்க்கப் படுகின்றன.

    கே:"உங்கள் பர்ஸ் தொலைந்துவிட்டது. தேடுகிறீர்கள். தேடிக்கிடைத்துவிட்டது. அப்புறம் என்ன செய்வீர்கள்?"
    ப:"தேடுவதை நிறுத்துவேன்"

    சாதாரணமாக 'பர்ஸில் உள்ள பணத்தை சரிபார்ப்பேன்' என்று பதில் சொல்வார்கள். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வித்தியாசமான பதில் "தேடுவதை நிறுத்துவேன்".

    சபரி இவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் இறங்கலாம்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. தேமொழி அவர்கள் வரைந்துள்ள
    கதகளி நடனக் கலைஞர். ஓவியம்
    நன்றாக உள்ளது.
    *****************

    ////// இதைவிட கலாய்க்க முடியுமா என்ன?//////
    வாத்தியார் கொடுத்துள்ள தலைப்பு
    மிகவும் பொருத்தமான தலைப்பு..
    தேமொழி அவர்கள்,வகுப்பறையில்
    இதுவரையில் வந்துள்ள பின்னூட்டங்களில்
    இருந்து கருத்துக்களை கையாண்டு சிறப்பாக
    அவரின் ஆக்கத்தினை நகைச்சுவை உணர்வுடன்
    கொடுத்துள்ளார்கள்.
    படிக்க ஆரம்பித்தது முதல் இறுதி வரையில்
    ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  18. தனுசு அவர்கள் கொடுத்துள்ள,
    குப்பைத்தொட்டியினை பயன் படுத்துவதற்கு
    குப்பை தொட்டியே அவர்களை அழைத்து கேட்பது போல் ---
    உள்ள ஆக்கம் மற்றும்,
    அவளும் இவளும் என்ற ஆக்கமும்
    நன்றாக உள்ளது

    ReplyDelete
  19. மாணவர் மலர் ஆக்கங்கள் அருமை..வாத்தியாருக்கு வணக்கம்..தேமொழி போன்ற ஒரு நல்ல படைப்பாளியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

    வாசகர்களின் தனித்தன்மை, ஸ்பெஷாலிட்டி குறையாமல் அவரவர் பயன்படுத்தும் வாசகம்,நடை, ஸ்டைல் என்று சமீப காலங்களில் வகுப்பறையில் நடந்து வந்திருந்த விதத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தேமொழி..

    மிகுந்த ஆர்வமும் சலிப்பில்லாத ஊக்கமும் தொடர்ந்த ஆழமான கவனிப்பும் ஈடுபாடும் இருந்து சக வாசகர்களின் எண்ணஅலைகளில் நீந்த முடிந்தவர் மட்டுமே இப்படி படைப்பை அளிக்க முடியும்..

    வரிக்கு வரி நகைச்சுவை..வம்பு இழுத்தாலும் எல்லை மீறல் இல்லை..

    புரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவருக்குப் புரியாததும் எளிதில் புரியும் என்று சொல்லியிருக்கிறார்..

    உமாவின் பக்கத்திலிருந்து ஆளுக்கொரு பக்கமாய்த் தாவும் ஆலாசியம்,தனுசு என்று எழுத்துப் பிழை டாப்பிக்,
    தனுசு அழகியைப் பற்றி சொல்ல டெல்லி அம்மையாரின் ரியாக்ஷன், அய்யர் KMRK குடுமிப்புடி,
    டெல்லிக்காரரின் கிராஸ்டாக்,
    ஷோபனா மூன்வாக் பற்றி மைனரின் கமென்ட்,
    பேயோடு வாக்கிங் போன அறிவாளி ரத்தத்தின் ரத்தம்,
    டெய்லி மூணு மெயில் மட்டுமே அனுப்புவார் ஆனந்தமுருகன் என்று ஒரு காட்டல்,
    அடிக்கடி தத்துவத்தில் திளைத்துவிடும் கண்ணன்,
    சோதிட டிப்ஸ் சின்ன வாத்தியார்,
    விஷயதானம்(?) சி.சேகர், பார்வதி அம்மையார் என்று நீளும் பட்டியலில் சுந்தரியையும் விடாமல் அவர் வழக்கமாக எழுதும் வசனத்தை வைத்துத் தாக்கியிருந்ததுதான் ஹைலைட்..

    கமென்ட் அடிப்பதற்காக இரண்டு முறை படித்தேன்..தனுசு சொல்லியிருப்பது போலே எந்த வரியையும் விட முடியவில்லை..

    வாத்தியார், KMRK, அய்யர்,மைனர்,டெல்லி மாமி,ஷோபனா என்று எல்லோர் மீதும் தாக்குதல் தொடுத்தவர் தன்மீதும் பந்தை சமாகவே வீசி மனஸ்தாபம் வராமல் சுவாரஸ்யமாய்க் கொண்டு போயிருக்கிறார்..
    கிட்டத்தட்ட சமீபகால ஆக்டிவ் வாசகர்கள் அனைவரையுமே அவரவர் வசனங்களுடன் எழுத்தில் இழுத்துவிட அவருக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கிறது..மைனரின் கவிதை ஈடுபாடு பற்றி ரொம்ப நாட்களுக்கு முன் நடந்ததை, மாலைநாடகம் எழுத மைனருக்கு வந்த மயக்கத்தை தூண்டியவர் என்ற அடிப்படையில் அவருக்கு ஞாபகத்தில் நின்றிருக்கலாம்..வாரமலர் உண்மையிலேயே பொழுதுபோக்கு குடும்ப மலராக அமைந்திருக்கிற காரணத்தால்தான் இது சாத்தியப்பட்டிருக்கிறது..
    வழக்கம் போலே முந்திரிக்கொட்டை தேமோழியின் ஆக்கமே முந்தியிருக்கிறது..அவருக்கு
    வணக்கம் கலந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. KMRKபெர்சனல் இ-மெயில் விவகாரம், தனுசு-வாத்தியாரின் offshore ஜப்பான் காரர்களைப் பற்றிய கமென்ட்,அரசியல்வியாதி என்ற டெல்லிக்காரவுகளின் கமென்ட், கைம்பெண் பற்றிய பேச்சு பற்றிய மைனரின் தனக்குப் பிடித்த நிலைப்பாடு என்று தேமொழி சொல்லியதில் என்று சமீபத்து கமெண்ட்டுகள்,வாத்தியாரின் சிறுகதை(வருத்தம்..இன்னும் படிக்கவில்லை) என்று எதற்குமே பதில் சொல்ல முடியாத அளவுக்கு வேலைப் பளு..இன்று சிரத்தையுடன் மலருக்காக நேரம் ஒதுக்கி செயல்படவேண்டிய கட்டாயமாக உணர்கிறேன்..பொழுதுபோக்காகவே நல்லதோர் குடும்பத்தைக் கட்டிஎழுப்பியிருக்கும் வாத்தியாரின் கூட்டை விட்டு விலகிப் போய்விடாமல்(நேரமின்மை காரணத்தால்) இன்றைய தேமொழியின் ஆக்கத்தைப் போன்றே அனைவரையும் ஈர்க்கும் விதத்திலே இனிவரும் ஆக்கங்களும் இருக்கவேண்டும் என்று அனைவைரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. ///// அய்யர் said... மாணவர் சந்திப்பிற்கு அழைத்தவர்
    மதிப்பிற்குரிய லால்குடி சகோதரர் ///
    இந்த அழைப்பிற்கு சரியான ரெஸ்பான்ஸ் யாரும் பண்ணவில்லை என்றது எனக்கு நினைவில் இருந்தாலும்
    அய்யருக்கு நினைவிலே நின்றிருக்கும் KMRK வின் அழைப்புதான் அவரின் கருத்துவேறுபாடுகளைக்கடந்த நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
    /////// அய்யர் said...படத்தில் இருப்பவர் மைனரே என
    பாடத்தில் அவரை மெதுவாக விட்டது ////////
    காவி வேட்டி,சொந்த சமையல் என்று மைனருக்கு சம்பந்தமில்லாத அடையாளங்களை
    மறந்துவிட்டு மைனரின் படம் என்று அய்யர் சொன்னது ஏனோ?

    ReplyDelete
  22. அனந்தமுருகன் அவர்கள் அனுப்பியுள்ள பாதைகள்
    படங்கள் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  23. என் ஆக்கங்களை வெளியிட்ட ஐயாவிற்கு அன்பு நிறைந்த நன்றிகள். படித்தவர்களுக்கும், கருத்து சொல்லியவர்களுக்கும் நன்றிகள். நையாண்டியை மையக் கருத்தாகக் கொண்ட இந்தப் படைப்பு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

    கதகளி நடனக் கலைஞர் படம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு பெயிண்ட் கம்பெனி விளம்பரப் படத்தினைப் பார்த்து வரைந்தது. நேரோலாக்(?....நேரோலாக் பூசிட ஒளிவண்ணம் வீசுமே...நேரோலாக்...நேரோலாக்...நேரோலாக்..) என நினைக்கிறேன். அந்த வரிசையில் ஒடிஸ்ஸி , மணிப்புரிநடனக் கலைஞர் படங்களும் வந்தது, அவற்றையும் வரைந்துள்ளேன்.

    ReplyDelete
  24. "இவள் என்கண்ணே படும் தீஞ்சுவை" ஆஹா... பாசம் சொட்டோ சொட்டுன்னு சொட்டுது போங்க. நல்ல அருமையான கவிதை நன்றி தனுசு.
    "வீராப்பு விதண்டாவாதம் எல்லாம் என்னிடம் மட்டும்தான், மகள் சொன்னால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் அப்பா" என்று மாணவி , அதாவது மனைவி நிறைய பொய்க்கோபத்துடன் கடிந்து கொள்ளும் அப்பா போல இருக்கிறீர்கள். எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் நாங்களும்.

    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்னு கேள்வி, இப்பொழுது தனுசு நாட்டு குப்பைதொட்டியும் அல்லவா கவி பாடுகிறது. இந்த முயற்சியும் நன்றாக இருக்கிறது. நானெல்லாம் "ரயில் தன் வரலாறு கூறுதல்" போன்ற கட்டுரைகளை தேர்வில் எழுத தடுமாறிய காலம் நினைவு வருகிறது.

    ReplyDelete
  25. ///குழந்தைப் பாடல்கள் ஓசை நயத்துடன், ஒரே சொல் பலமுறை வரும்படியும் எளிமையாக இருக்க வேண்டும். பாடலில் நிகழ்வுகள்
    சொல்லப்படலாம்.அறிவுரை இருக்கக் கூடாது///

    அடடா .....புத்திலிருந்து பாம்பு கிளம்புவது போல் இது என்ன ஒவ்வொன்றாக வருகிறது. ஒபாமா இஸ்லாமியர் என்பது போல், பாரதி குழந்தை கவிஞர் இல்லை என்ற விவாதம்...
    பாரதியார் இருக்கட்டும், அப்படியென்றால் பட்டுக்கோட்டையாரும் குழந்தைக் கவிஞர் இல்லையா?
    "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா ";
    "தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!"
    "திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே "
    "அழாதே பாப்பா அழாதே! அழாதே பாப்பா அழாதே! அம்மா இருந்தால் பால் தருவாங்க! அனாதை அழுதா யார் வருவாங்க?"
    "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே"
    என்று அறிவுரைகளாக ஆரம்பித்து "குழந்தைக் கவிஞர்" பட்டதை கோட்டை விட்டவரா நம் பட்டுக்கோட்டையார்.
    என் மனசு ஆறலியே. :(((

    ReplyDelete
  26. மனமென்னும் மயில் எப்போதும் தாங்க வேண்டியது... அதன்மீது அமர்த்த வேண்டியது இறைவனைத்தான்/முருகனைத்தான், இவ்வுலக சுகம் அழகான நச்சுப் பாம்பு போல இருந்தாலும் மனமென்னும் மயிலுக்கு கட்டுப் பட்டு அதன் காலடியில் உள்ள பாம்பைப் போல அமைதியாக இருக்க வேண்டும். இது நல்ல விளக்கம். இதை எடுத்துச் சொன்ன சகோதரர் ஆலாசியத்திற்கு நன்றி.

    ReplyDelete
  27. எந்த பாதை எங்கே பயணம்?
    ஆனந்தமுருகனின் படங்கள் வாத்தியாரின் உவமைகளை நினைவுக்கு கொண்டு வந்தது.
    வாழ்க்கை என்பது ஒரு பயணம், அந்தப் பயணத்திற்குப் பயன்படும் வாகனம் ஜாதகம், பயணிக்கும் சாலை தசாபுக்தி, வாகன ஓட்டுனர்தான் கோள் சாரம்.
    படங்களில் ஒவ்வொரு சாலையும் சனிதசை போல இருக்கிறது.

    ReplyDelete
  28. உள்ளதை உள்ளபடியே உண்மையைச் சொல்லும் புத்திசாலிகளுக்கு (தேர்வின்) முடிவில் கிடைப்பது தோல்விதான். சபரி நாராயணனின் இந்த நகைச்சுவை தொகுப்பை முன்பே ஒரு முறை வகுப்பறை பதிவில் படித்தும் உள்ளேன். ஆனால் நகைச்சுவைகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை.

    ReplyDelete
  29. /////////kmr.krishnan said...
    சபரியின் வினாவிடை I A S நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி பதிலாகும். இக்கேள்விகளுக்கு இப்படிப்பட்ட பதில்களே எதிர்பார்க்கப் படுகின்றன.///////////

    நாட்டை ஆள இப்படிமுறையிலே இப்படியான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதால்தான் இவர்களை பத்தாவது வரை படித்த /இல்லையென்றால் அதுவும் இல்லாதவர்கள் கூட ஆளமுடிகிறது..

    ReplyDelete
  30. ////// kmr.krishnan said...
    இந்த ஆக்கம் நகைச்சுவை என்ற அளவில் பாராட்டினைப் பெறுகிறது.இது மைனர்வாளுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். ஒரு வேளை மைனரின் ஆலோசனையின் பேரிலேயே இது எழுதப் பட்டிருக்கலாம்.////////

    வரவர வகுப்புக்கே மட்டம் போடும் மைனரின் ஆலோசனையா????இன்றைய மலரின் இனிமையான காமெடி இது..

    இதுகுறித்து மேல்ஆலோசனை செய்ய கட்டுரையாசிரியரின் மெயில் ஐடி தேவை..KMRK அவர்கள் தந்துதவலாம்..

    ReplyDelete
  31. /////நான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றி எழுதுவதை கை விட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்டன.ராஜாஜி பற்றி ஒரு கட்டுரையும், ஒரு நீண்ட பின்னூட்டம் மட்டுமே இட்டுள்ளேன்.பாரதி,மஹாத்மாஜி, வினோபாஜி, சத்திய‌மூர்த்தி, ஜிட்டுகிருஷ்ணமூர்த்தி, என்று பலரைப் பற்றி எழுதியுள்ளேன். என் சொந்தக் கதை எழுதியதே அதிகம். லண்டன் அநுபவம் 6 கட்டுரைகள் எழுதியுள்ளேன்.இதுவரை என் ஆக்கங்கள் 85 ஐத் தாண்டக்கூடும்.ஆனால் நான் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பதுபோல கட்டுரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.///////

    நாம் நம்மைப் பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறோம் என்பது ஒன்று..நம்முடன் அளவளாவும் மற்றவர்நம்மைப் பற்றி என்ன நினைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது வேறொன்று..உங்களுக்கு இப்படி ஒரு விமர்சகர் கிடைத்திருப்பதால் இந்த வித்தியாசத்தை உணர முடிகிறது..விமர்சனங்கள் வாசகர் மனதினுள்ளே மட்டுறுத்தப் படுத்தப்பட்டுவிடுவதால் மற்ற எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை..

    ReplyDelete
  32. சபரியின் துணுக்குகள்..ஏற்கனவே மெயிலில் உலா வந்தவைதான் என்றபோதிலும் இங்கே வகுப்பிலே அகிர்ந்துகொன்டதன் மூலம் கலந்துரையாட வழிபிறக்கிறது..நன்றி..

    ReplyDelete
  33. அழ வள்ளியப்பாவின் பாடலை எடுத்துக் கொண்டு பாரதியின் பாட்டு குழந்தைப் பாடல் அல்ல என்று விவாதப் பொருளை முன்வைப்பதன் மூலம் பின்னூட்டங்கள் குவியும் என்று KMRKஎதிர்பார்த்தால் நோ சான்ஸ்.இங்கே பதில் சொல்ல தஞ்சாவூர் பெரியவர் ஒருவர் மட்டுமே வருவார் பாருங்களேன்..ஆலாசியம் அப்ஸ்கான்ட்..நேரடி எதிர்த் தாக்குதலைத் தவிர்ப்பார் என்பதே என் ஊகம்..வேண்டுமென்றால் தனிக் கட்டுரையாக வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்..

    ReplyDelete
  34. தனுசுவின் 'குப்பைத் தொட்டி..அவளும் இவளும் தொடர்ச்சி' என்று தொடர்கவிதை தொடரட்டும்..வாழ்க..

    ReplyDelete
  35. அபிராமி அந்தாதிப் புலவர் சிங்கைக் கவிஞர் பால்மணம் மாறாமல் தொடர்கிறார்..ஏதோ சொல்லனுமேன்னு சொல்லி வெச்சேன்..
    இலக்கியத்துலேயே நமக்கெல்லாம் நாட்டம் இல்லை..
    அதிலும் பக்தி இலக்கியம்..
    வேற்று வண்ணத்தால் ஹைலைட் பண்ணப்பட்ட காமசூத்திராவிலே காணக்கிடைக்கும் வார்த்தைகளின் விளக்கத்தை பக்தி இலக்கியத்திலே தேடித் படித்து..கமென்ட் அடித்து..ம்ஹூம்.. நோ ச்சான்ஸ்..

    ReplyDelete
  36. அனந்த முருகன் அனுப்பிய படங்கள் அருமை..
    குறிப்பாக 2 ,8 ,10 ரோட்டோரப் படங்கள்..ச்சே.. ஓர ரோட்டுப் படம் என்பதுதான் பொருந்தும்..
    9பதாவது படத்தை ரஜினி கண்ணில் காட்டாமல் இருப்பது நல்லது..இல்லையென்றால் படையப்பா ஸ்டைலில் எடுத்து ரெண்டு சுற்று சுற்றி தோளில் போட்டுக் கொண்டு போய்விடுவார்..

    ReplyDelete
  37. கதக்களியாட்ட ஓவியம்..கலரிங் அருமை..skirt wrapகுடம்போன்று இருந்திருந்தால் அது ஓவியத்தின் அழகினைக் குறைத்திருக்கலாம்..தவிர்த்து வரைந்திருப்பது புதுமையைப் புகுத்தி ரி-மிக்ஸ்ங்கியிருப்பது அழகு...

    ReplyDelete
  38. சகோதரி தேமொழிக்கு மனமார்ந்த பாராட்டுகள். நல்ல சடயர். யார் மனதையும் புண்படுத்தாமல் அவரவர் வசனங்களைப் போட்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டார். இந்த பாணியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள். தனுசு நாளுக்கு நாள் மெருகேறிய கவிஞராக உருவாகிவிட்டார். தொடரட்டும் தங்கள் கவிதைப் பணி. கே.எம்.ஆர். பாரதியை அனாவசியமாக விமர்சனத்துக்கு ஆளாக்குகிறார். பாரதியார் பன்முக ஆளுமை கொண்ட கவி. அவனைக் கூறுபோட்டுப் பார்க்கக் கூடாது. அவன் காலத்தின் கண்ணாடி. அவன் வாழ்ந்த காலத்தைப் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறான். குழந்தை முதல் கிழவன் வரை அனைவரும் அவனைப் படிக்கலாம். புரிந்து கொள்ள வேண்டும், அதுதான் அவசியம். ஆலாசியம் அபிராமியிடம் ஒன்றிப்போயிருப்பது தெரிய வருகிறது. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. அன்னை அபிராமிக்கு அப்படிப்பட்ட சக்தி உண்டு. அவளைச் சரணடைவோரை அவள் முழுமையாக ஆட்கொண்டுவிடுவாள். அவள் அருள் ஆலாசியத்துக்குக் கண்டிப்பாக உண்டு. சாலைகளில்தான் எத்தனை வகை. வாழ்க்கைப் பாதை பலருக்கு பலவிதமாக அமைவதைப் போல. அத்தனை சாலைகளிலும் ஒருவன் பயணம் செய்து முடித்தால் தலை சுற்றிக் கீழே விழுந்து விடுவான். நல்ல ஒப்பீடு. வாழ்க்கையும் ‍ பாதையும். நல்ல பதிவுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பு வாழ்த்து "சடயர் எழுதுதுலக நாயகி" தேமொழிக்கு.

    ReplyDelete
  39. ஹா... ஹா... ஹா.... அருமை அசத்திட்டீங்க சகோதிரியாரே... கிரேசி மோகனின் திரைக் கதையில் வந்த படம் பார்த்த மாதிரியே இருந்தது.... நெடுக சிரித்தாலும்,... நான் பெரிதும் குலுங்கி சிரித்த இடனகள் இவைகளே..

    ////ஆலாசியம் பக்கத்தில் உமாவுடன் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தவராக பாய்ந்து ஓடி தனக்கு வலது பக்கத்து பெஞ்சில் இருக்கும் மைனருடன் போய் உட்கார்ந்து கொள்கிறார்.///
    ///உமா: நல்லா கேளுங்க ...அதான் ஹி. ஹி. ஹீன்னு சத்தம் எட்டு ஊருக்கு கேக்குதே. உங்களுக்கு கேக்கல///

    ///ஆனந்தமுருகன்: ஏன் பேயோட வாக்கிங் போறவங்க வகுப்புக்கு வரலாம், நாயோட ஜாகிங் போறவங்க வரக்கூடாதா?////

    ///கண்ணன்: ஐயா, இப்படி மனதை உருக்கும்படி பாடத்தை சொல்லிவிட்டீர்களே ஐயா. வாழ்க்கையைப் பற்றி தாங்கள் கூறுவது புரியாமல் மக்கள் மாக்களாக
    உள்ளார்களே ஐயா. மனிதனை மனிதனாக மதிக்காமல், பச்சோந்தி போல் தினம் தினம் மனம் மாறுகிறார்களே ஐயா, எனக்கு அது வேதனையாக உள்ளது
    ஐயா. எப்பொழுது இந்த பாழாய்ப்போன மக்களுக்கு புத்தி வரும் என்று தெரியவில்லையே ஐயா. ////

    ////ஸ்ரீஷோபனா: ஹி. ஹி. இல்லை ஐயா, மைக்கேல் ஜாக்சன் மாதிரி "மூன் வாக்" செய்து பார்த்தேன் ///

    ///மைனர்: அப்ப ஒன்னு பண்ணுங்க திரும்பி நின்னு "மூன் வாக்" செய்யுங்க, வகுப்புக்குள்ள வந்திடலாம்///

    ///ஸ்ரீஷோபனா: (கரும்பலகையைப் பார்த்தவாறு) என்ன மைனர் ஓரே உற்சாகமா இருக்காரு? ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்ட பாடமா? ஐயா பாடத்துக்கு துணையாக போட்டிருக்கும் படத்தில் உள்ள இந்த பெண் யார்? குழந்தை முகத்துடன் இருக்கும் இந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.///

    ///தேமொழி: (வழக்கம் போல் முந்திரிகொட்டை போல் முந்திக் கொண்டு) "வாழ்க்கை" அப்படின்னு 1949 ஆண்டு வெளிவந்த ஒரு பழைய தமிழ் படம், அதுல நடிச்ச வைஜயந்திமாலாவோட படம். அந்தப் படத்தில நடிச்சப்ப அவங்களுக்கு பதின்மூன்று வயதுதான், அதான் குழந்தை முகத்தோட இருக்காங்க. கூகிள் காமாட்சி இந்த விவரத்த சொன்னாங்க.////

    ////வாத்தியார்: கவலைப் படாதீர்கள் சகோதரி, எல்லாம் ஏற்கனவே எழுதப் பட்டு விட்டது. நடப்பது நடந்தே தீரும். உங்கள் கவலைக்கு மருந்து ஃபார்முலா
    337 அதை மறந்து விடாதீர்கள் //////

    அய்யர், கே எம் ஆர் கே, மைனர் தொடர்பான வைகளும் அருமை... நண்பர் ஆனந்த், மற்றும் கோபாலன் ஐயாவைப் பற்றிய வரிகளும் அருமை.

    உண்மையில் சிரித்துக் கொண்டே வாசித்தேன்... அனைவரையும் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். சுவாரஸ்யமான ஆக்கம்.

    கதக்களி படம் நன்று...

    ReplyDelete
  40. கவிஞரின் கவிதை நன்று....

    ///அருவருப்பை அறுத்துவிட்டு
    கைகொடுங்கள் தோழிகளே
    உங்களுக்கும் நோய் வராது ./////

    இவ்வரிகளைப் பார்த்துவிட்டு புரட்சிப் பெண்கள் யாரும் சண்டைக்கும் வராமல் இருக்கணும்.. கவிஞர் பொதுவாக சொல்லி இருக்கிறார்.


    ///அவள்
    என்னைப் பிரியாத குழந்தை
    இவள்
    என்நலம் நாடும் பெரியமனுஷி////

    அருமையான வரிகள் இந்த கவிதையைத் தாங்கி நிற்கும் வரிகள்...

    ReplyDelete
  41. கிருஷ்ணன் சார் ஆக்கம் நன்று...

    ////"பாப்பா பாட்டு' பாடிய பாரதியை குழந்தைக் கவிஞர் இல்லை எப்படி சொல்லப் போச்சுது?" என்று கேட்பீர்களாயின், அது பெயருக்குத்தான் 'பாப்பா பாட்'டே தவிர, உண்மையில் அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளெல்லாம் எல்லா வயதின‌ற்கும் பொதுவாகவே உள்ளன.////

    பாரதியின் பாடல்கள் இது வரைக்கும் பாடிய பெரும்பாலான கவிஞர்களின் அவர்காலத்து நிகழ்வுகளின் வரலாற்றுக் குறிப்புப் போன்றது மட்டும் அல்ல...
    "கவிஞன் ஞானோர் காலக் கணிதம் / கண்ணாடி" என்பார் கண்ணதாசனார்.

    பாரதியின் பாடல்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் பேசப் படத் தகுதியானவை... அதை அவனே கூறி இருக்கிறான். அவைகள் ஒருபுறம் இருக்கட்டும்.

    பாரதியின் பார்வை இந்த மூட நம்பிக்கைகளும், சாதீயமும் சமூகக் கேடுகளும் நிறைந்த சமூகத்தின் அழிவின் காரணத்தை கண்டு, பொங்கி, வெதும்பி, நொந்து, நோயுற்று இந்த கொடுமையெல்லாம் எங்கே இருந்து வருகின்றன... அதன் மூலக் காரணம் என்ன? (இந்த ஆய்வுகள் செய்வது தான் அவனின் இயல்பு) என்று ஆய்ந்து.. ஆக, இவைகளை களைய இந்தக் கொடுமைகளை வேரோடு பிடுங்கி நல்ல தொரு சமூகத்தை உருவாக்க நல்லன யாவும் பெருக. என்ன செய்ய வேண்டும் சிந்தித்து தான் இவைகளை அவை செய்ய துணிந்து இருக்கிறான் அதானாலே அவன் வீதியிலும் நிறுத்தப் பட்டும் இருக்கிறான்.

    எந்த சமூக மாற்றமும் குழந்தையிலிருந்து ஆரம்பிக்கப் படவேண்டும் இது தான் சமூக அரசியல் சார்ந்த பேரறிஞர்களின் தெளிவு... அதை கையில் தானாக கொண்டான் பாரதி...
    பிஞ்சுக் குழந்தைகள் சுத்தமான வெள்ளைக் காகிதம் அதில் என்ன எழுதப் படுகிறதோ அதுவே அதனின் வேதம்.... அவைகள் குழந்தைகளின் ஆளுமைக்கு வரவில்லை என்பதற்காகவோ (வரவில்லையா என்பதே கேள்வி?!!) நல்லன, அவசியமான விசயங்களை சொல்லாமல் இருக்க முடியாது.... சோறு உண்க முடியா விட்டாலும் ஒருத் தட்டிலே போட்டு கீழ் பாதி, மேலேப் பாதி சிந்தி பத்துப் பருக்கை விழுந்து ஓரிரு பருக்கை தான் வாயுக்குள் போகும் இருந்தும் குழந்தையை தானாக சாப்பிட அனுமதிக்கிறோம்... சில நேரங்களில் நாமே வைத்து ஓடியும் விடுகிறோம்...

    பாரதி "ரஜோகுணம்" கொண்டவன் பெரிதினும் பெரிது கேட்பவன், பெரிய கடவுள் காக்கவே விரும்புவான்... அவனி சிந்தனை எல்லையில்லா வியப்பிற்கு குரியது.. விஆளப் பார்வை கொண்டவன்.. அவனின் போக்கு அப்போதே புரிந்துக் கொள்ள முடியாதது...

    பெரியவர்களின் செயல் நமக்கு புரியவில்லை என்பதால் அதை சரியில்லை என்று கூறுவது போல் இருக்கிறது... பாரதி கட்டுப் பாடுகள் விதிப்பதாக சொல்வது சரியாகாது... கட்டுப் பாடில்லாமல் போனால் என்ன நிகழும் என்பதையும் அவன் சொல்ல தவறவில்லை...

    தொடரும்...

    ReplyDelete
  42. அவன் சாதாரண மகா கவி மாத்திரம் மட்டும் அல்ல... அவனும் ஒரு அவதார புருஷன். அவனின் ஒவ்வொருப் பாடலும் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியவைகளே இல்லை.

    "எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களே மண்ணில் பிறக்கையிலே அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பிலே" கவியரசு... குழந்தைகளின் ஆளுமையை அளக்க கருவி ஏதும் இல்லை.... கருவில் இருக்கும் குழந்தைக்கும் பேரறிவு உண்டு..(பத்மவியூகம் உடைத்தான் அர்ஜுனனின் மகன்)... ஜப்பானில் ஆராய்ந்து அதற்கு ஏது உண்டென்று விஞ்ஞானம் முடிவுக்கு வந்துள்ளது... அது தெய்வீகக் குழந்தையாக இருக்கும் என்பீர்கள் என்றால் நம் வீட்டுக் குழந்தையும் அப்படி இருக்கலாம் என்ற ரஜோகுணமும் வேண்டும்.

    வளர்ந்தும் குழந்தையாய் இருக்கும் பெரியவர்களுக்கு பாரதியின் பாடல்கள் உயரிய பொதிந்தக் கருத்துக்கள் பொதிந்து இருப்பதாக தெரியும்.. அதனாலே இவைகள் அதிகப் படியான வயதுக்கு மீறிய விசயங்களை அடக்கியதாக உணர்கிறோம்... அதுவும் அறியாதவரை தான் பெரிய விஷயம் அரித்த பிறகு அது சாதாரண விஷயம்... ஆகவே அவைகளை சொல்லித் தரப் பட வேண்டுமே தவிர உனக்கு அறிவு பத்தாது என்பது... சொல்லித் தரத் தகுதி இல்லை என்பதையே குறிக்கும் என்பதையும் உணரவேண்டும்.... எவ்வளவு முட்டாளாக இருந்தாலும் அவன் பரிந்துக் கொள்ளும் படி சொல்லும் திறம் இருந்தால் அவன் அதை புரிந்துக் கொள்வான்....

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.... என்னும் பழமொழி போல்... அந்த வயதில் இவைகளை ஆரம்பிக்காவிட்டால் எந்த வயதில் ஆரம்பிப்பது...
    தாங்கள் சொல்வது போல் நர்சரி ரைம்ஸ் என்பவைகள் ஒரு சுவாரஷ்யத்திர்காகவும், தமிழ் எழுத்துக்களை அறிந்திடும் முன்னும் மழலைகளுக்கு, மழலைப் பள்ளிகளிலோ. போக்குவரத்திலோ. தூங்கும் முன்னமோ பாடி, பாடச் சொல்லி பார்க்கலாமே தவிர இவைகள் ஆரம்பப் பள்ளிப் பாடமாகுமாயின் சிரமம் தான்.

    வருங்காலத்தில் இந்திய விஞ்ஞானிகள் நமது மூதாதையரின் படைப்புகளில் இருந்து அதிலே உள்ள அறிவியலை ஆராய்ந்து நிறையப் படைக்க வேண்டுமானால்... இந்த இலக்கிய அறிவு போதாது...

    ---தொடரும்..

    ReplyDelete
  43. என்ன இருக்கிறது என்று கேட்க வேண்டாம் என்ன இல்லை என்று கேட்க வேண்டும்...

    ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
    நாழி முகவாது நால்வாழி -தோழி
    நிதியுங் கணவனும் நேர்படினும் தத்தம்
    விதியின் பயனே பயன்.

    இந்த பாடலின் மேலானப் பொருள் ஓன்று உண்டு யாவரும் அறிந்தது... இங்கே இந்த ஞானக் கிழவி கூறும் ஒரு உயரிய அறிவியல் கருத்தும் ஓன்று இருக்கிறது பாருங்கள்.

    "water can not be compressed" என்பது தான் அது... இதை ஆங்கில? / அமெரிக்க? விஞ்ஞானிகள் எப்போது கண்டு பிடித்தார்கள்!/? நம்ம ஒளவைக்கு எப்போது தெரிந்தது... இது போன்ற விஷயங்கள் ஆராயப் பட வேண்டும் என்றால்.... பாரதியின் ஆளுமையைவிட இன்னும் சற்று அதிகமான ஆளுமையே வேண்டும்.... நமது மெஞ்ஞானிகளின் அறிவியலை அறிய. ஆராய....

    தோசை, ஆசை என்பவைகள் பொழுது போகப் படிக்கலாம்... அதிலும் அந்தக் கவிதைகள் அகர வரிசைகள் அறியும் முன்னமே பச்சிளங் குழந்தைகளுக்கானதே... குழந்தை பிறக்கும் முன்னமே தாயானவள் தனது வயிற்றைத் தடவிக் கொண்டே குழந்தைக்கு நல்லப் பாடம் சொல்லித்தர முயற்சி செய்யும் காலம் இது.... அறிவுசார்ந்த விஷயங்கள் என்று எதையும் தள்ளிப் போட வேண்டாம் என்பதும்... எந்த மாற்றமும் பிஞ்சிலே இளம் பிராயத்திலே ஆரம்பம் ஆக வேண்டும் என்பதும். இந்தியக் குழந்தைகள் அமரர்களாக வர வளர வேண்டிய முறைகளை ஆராய்ந்தே பாரதி இவைகளை செய்துள்ளான்.... அப்படி வளர்ந்து அமரர்களாகி அதை இந்த உலகிற்கே அறிவிக்க வேண்டும் என்றும் ஆசையும் ஆணையும் இட்டு இருக்கிறான்!!!...

    அவன் ஒரு யுக புருஷன்.... அவனை முழுவதும் பார்த்தால் அவனின் விஸ்ப ரூபம் தெரியும்... கால் விரலை மட்டும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வர முடியாது, கூடாது என்பது எனது முடிபு... நிறைய எழுத முடியவில்லை.. தட்டுச்சுப் பயிற்சி இல்லை அப்படி வளர்க்கப் படாததும் வளர்த்துக் கொள்ளாததும் ஒரு குறையே...

    எழுத்துப் பிழை சரிபார்க்க வில்லை.... தட்டச்சு செய்வதே சிரமமாக இருக்கிறது,,, தமில்விரும்பியின் தவற்றை நக்கீரர்கள்:):):) பொறுப்பீர்களாக... முக்கியமாக எனது சகோதிரி உமா.....

    நன்றிகள் சார்.. உங்களின் ஆக்கம், எனது எண்ணத்தை உரசியது...

    ReplyDelete
  44. //// minorwall said...
    அழ வள்ளியப்பாவின் பாடலை எடுத்துக் கொண்டு பாரதியின் பாட்டு குழந்தைப் பாடல் அல்ல என்று விவாதப் பொருளை முன்வைப்பதன் மூலம் பின்னூட்டங்கள் குவியும் என்று KMRKஎதிர்பார்த்தால் நோ சான்ஸ்.இங்கே பதில் சொல்ல தஞ்சாவூர் பெரியவர் ஒருவர் மட்டுமே வருவார் பாருங்களேன்..ஆலாசியம் அப்ஸ்கான்ட்..நேரடி எதிர்த் தாக்குதலைத் தவிர்ப்பார் என்பதே என் ஊகம்..வேண்டுமென்றால் தனிக் கட்டுரையாக வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்..../////

    :):)... மைனர் உங்களை பின்னூட்டம் பார்க்கும் முன்னமே அனுபிட்டேன்... கிருஷ்ணன் சாரும் ஆக்கப் பூர்வமான பின்னூட்டத்திற்கு காத்து இருப்பதாக கூறி இருந்தார்.. பாரதிப் பயிலக எமது ஆசிரியர் / குரு திரு வெ. கோபாலன் ஐயாவே அப்படி ஒரு தனிக் கட்டுரையைத் தருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன்...

    ReplyDelete
  45. எனதாக்கத்தை வெளியிட்ட ஐயா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  46. ////அய்யர் said...

    மற்ற பதிவுகளுக்கு பின்ஊட்டம்
    மவுனம்.. மறுபடியும் சந்திப்போம்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்////



    சரி நானே தேடித் படித்துக் கற்றுக் கொள்கிறேன்....

    தங்களின் மெளனமான மோனத்திற்கு நன்றிகள் ஐயர் அவர்களே...

    ReplyDelete
  47. பாதைகள் பலவானது இருந்தும் பயணம் என்பது நிலையானது

    பாதையில் தான் எத்தனை வகை; இருந்தும் பயணிக்க வேண்டியது!

    ஏற்ற இறக்கமும் அது தரும் களைப்பை எண்ணிப் பயணிக்காமல் போனால்

    ஊர் வந்தே சேராது.....



    இதிலே இந்திய சாலை ஏதாவது இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..

    அருமையானப் படங்கள் பகிர்வுக்கு நன்றிகள் அனந்த முருகன் சார்.

    ReplyDelete
  48. திருவாளர் சபரி நாராயணன் அவர்களின் கேள்வி பதில் துணுக்குகள் அருமை.

    உண்மையில் சில பல, நேரங்களில் பாடம் படிக்காமல் பரீட்ச்சை எழுதிய கடந்தகால ஞாபகங்களைக் கொண்டு வந்தது..

    நன்றி சார்.

    ReplyDelete
  49. ///// Thanjavooraan said...
    ஆலாசியம் அபிராமியிடம் ஒன்றிப்போயிருப்பது தெரிய வருகிறது. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. அன்னை அபிராமிக்கு அப்படிப்பட்ட சக்தி உண்டு. அவளைச் சரணடைவோரை அவள் முழுமையாக ஆட்கொண்டுவிடுவாள். அவள் அருள் ஆலாசியத்துக்குக் கண்டிப்பாக உண்டு.///

    மிக்க நன்றிகள் ஐயா! தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும்; என்னை அன்னை அவளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் / சேர்க்கும்.....

    ReplyDelete
  50. //// kmr.krishnan said...
    சிங்கைக்காரர் சரியான இலக்கிய வாதிதான். பதார்த்தம்(சொற்களுக்கான பொருள்) மட்டுமே பார்க்கத் தெரிந்த என் போன்ற அஞ்ஞானிகளுக்கு குஹ்யார்த்தம்(குகைக்குள் மறைந்து இருப்பது போன்ற பொருள்) அதாவது உட்பொருள் உணர்த்தும் அவருடைய முயற்சி வெல்லட்டும்.

    தஞ்சாவூரார், அய்யர், பார்வதி ராமச்சந்திரன், ஓம்தத்சத் ஆகியவர்கள் கூறும் விமர்சனம், மேலதிகத் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.நண்பர் ஹாலாஸ்யம்ஜியின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்./////



    சார்... தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
  51. ராசா.................
    செய்முறையை கேட்டுக் கொண்டே
    சமைகிறாயா
    அல்லது
    செவிக்குணவு கொடுக்கும்போதே
    வயிற்ருக்கும் உணவு செய்கிறாயா.
    நீ
    கலா ரசிகனா
    நள அரசனா .

    ReplyDelete
  52. பாரதி அனைவருக்கும் உரியவன்.எல்லா காலத்திற்கும் ஏற்றவன்.அதேபோல் அவனுடைய பாடலை யாருக்காகவும் நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்.

    எத்தனை காலமானாலும் இவனின் பாடல் நிலைத்து நிற்கும்.பாரதியின் பாடலில் வீரம், தைரியம், மிகுந்து காணப் படும்

    என்னுடைய புடவை நன்றாக இருக்கு என்றால் எதிர் புடவை நன்றாக இல்லை என்று பொருள் கொள்ள முடியுமா?

    வள்ளியப்பா குழந்தைகளுக்காக எழுதி உளார் என்றால் ,பாரதி எழுதவில்லை என்று கொள்ள முடியுமா? கோபாலன் அய்யா தான் இதற்க்கு சொல்லவேண்டும் .

    அவர்வேறு இவர்வேறு.

    அவரும் இவரும்.... வேண்டாம் எனக்கு கவிதை வருகிறது

    ReplyDelete
  53. valthukkal themozi,thanusu,kmrk,alasiyam,sabari

    ReplyDelete
  54. படங்களை பார்வைக்கு தரும்
    படையப்பா
    நீ
    வகுப்புக்கு
    ஒரு கொடையப்பா.

    ஒன்பதும் பத்தும் (தர்ம கர்ம )ஓவியம் போல் தெரிகிறது.

    ReplyDelete
  55. sundari said...
    தேமொழி சகோதரிக்கு நீங்க ரொம்ப நல்லாத வசனம் எழுதியிருக்கிறீங்க தமிழ் பட்டபடிப்பா ரொம்ப நல்லாயிருக்குது

    அதுசரி தமிழ் எழுத படிக்க பட்டப் படிப்பு முடிச்சிருக்கனுமா?

    ReplyDelete
  56. I feel great after reading this
    blog ..

    Is there any way to find marriage compatability using astavarga

    Please mail me to myastrostudies@gmail.com

    ReplyDelete
  57. அம்மாடியோவ்வ்வ்வ்வ்............ என்ன ஒரு அப்சர்வேஷன் பவர் எங்க 'அறிவாளி' தேமொழிக்கு. நிஜமாவே சூப்பர். பதிவை மட்டுமல்லாமல் அனைவருடைய பின்னூட்டமும் படித்து, ஞாபகமும் வைத்திருக்கிறார்கள்.
    இவர் இவர் இப்படி இப்படி எழுதுவார் என்ற கணிப்பதற்கே தனித் திறமை வேண்டும். பாதி வரை படித்து விட்டு, 'சரி, நியூ அட்மிஷனை ஆட்டைக்கு சேர்க்கவில்லை' என நினைத்தால் (அதிலும்) லேட்டாதான் என்ட்ரி எனக்கு.
    வாய்விட்டு, மனம் விட்டு, சிரித்தேன். மனம் புண்பட எதுவுமில்லை, நகைச்சுவையை, நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால். என்னைவிட, என் கணவர் மிகவும் ரசித்துச் சிரித்தார். 'அதுக்குள்ளே உன்னைப்பத்தி, க்ளியரா ஜட்ஜ்
    பண்ணிட்டாங்களே' என்ற கமெண்ட் வேறு. தேமொழிக்கு தேங்க்ஸ். அப்புறம், விஷயதானம் என்பதற்குப் பக்கத்தில் கேள்விக்குறி போட்டு, உருப்படியா நான் எதுவும் விஷயதானம் பண்ணவில்லை என்பதை அறிவுறுத்திய, பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு மைனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  58. த‌னுசு சாரின் குப்பைத்தொட்டிக்கவிதை அருமை. பல பெரிய ஹோட்டல்களில் கூட, குப்பைத்தொட்டியை அருவருக்கும் நிலையில் தான் வைத்திருக்கிறார்கள். அதுகூட, அதற்குள் குப்பை போட, பலரைத் தயங்க வைக்கும்.

    அவளும் இவளும் கவிதையின் ஒவ்வொரு வரியும், ஒரு கணவனின் காதலைவிட தகப்பனின் பாசத்தையே முன்னிறுத்துவதாக எனக்குப் பட்டது. அதுவும், மகளைத் திருமகளாக்கும் கடைசி வரி, மிக அருமை.

    திரு. கே.எம். ஆர். அவர்களின் வாதம் சரியே. ஆனால், பாரதியின் பாப்பா பாட்டு, மிகச் சிறு குழந்தைகளை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டதல்ல. சற்று வளர்ந்த, எட்டு முதல் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளையும் நினைத்து எழுதப்பட்டது. சொல்லப் போனால், விளையாட்டு வயது கடந்தும் கடக்காமலும் உள்ள அந்தப் பருவம், அறிவுரை சொன்னால் கேட்கக் கூடியதே.

    ReplyDelete
  59. எனது குப்பையையும் ரசித்த தஞ்சாவூர் அய்யா, kmrk,மைனர், தேமொழி ,ஆலாசியம் ,தக்ஷனாமூர்த்தி மற்றும் படிப்போருக்கும் படித்தோருக்கும் நன்றிகள்.

    அடுத்த முறை சின்ன பேப்பரை கூட சாலையிலோ வீதியிலோ வீசாமல்
    கீழே போடாமல் குப்பைதொட்டியில் போட்டால் அதுவே நம் வகுப்பறையின் வெற்றி .குப்பையை கண்ட இடத்தில் போடும் போது வகுப்பறையோ இந்த கவிதையோ நினைவுக்கு வந்தால் போதுமானது

    சுத்தம் சோறும் போடும் சுகமும் தரும்

    ReplyDelete
  60. வணக்கம் ஐயா,
    தவறாக எண்ண வேண்டாம்,இணையம் கோளாறால் தொடர்ந்து வகுப்பறைக்கு வர இயலவில்லை...
    வகுப்பறைக்கு வராமல் சற்று கவலையாகயிருந்தது,இங்கு வந்து பார்த்தால் தேமொழி சிரிப்பு மழையை பொழியும் "வருண" பகவானாய் மாணவர் மலரை நனைத்துவிட்டார்...இது தான் "கோடை மழை" என்பதோ...தங்களின் நகைச்சுவை உணர்வு உச்சத்தில் பிரகாசிப்பதை இன்றைய ஆக்கம் காட்டுகிறது...

    //"வணக்கம் ஐயா, இன்று மின்சாரம் போனதினால் தகராறு, நேரத்திற்கு வரமுடியவில்லை" என்றவாரே ஸ்ரீஷோபனா உள்ளே வருகிறார்.//
    நான் ப‌ள்ளியில் கூட‌ எப்ப‌வும் தாம‌த‌மாக‌வே செல்வேன்;ஏதோ கொஞ்சம் நல்லா படிச்ச‌‌தால த‌ண்ட‌னையிலிருந்து த‌ப்பிவ‌டுவேன்...ஹிஹிஹி...உண்மையில் சென்னையில் மின்வெட்டு பிரச்சனையை விட இணையம் வெட்டு தான் அதிகம்;இதற்கு என்று தான் தீர்வு கிடைக்குமோ?...நான் ம‌ற‌ந்தாலும் "எம்ஜே"வை நீங்க‌ள் ம‌ற‌க்க‌மாட்டீர்க‌ள் போலிருக்கே...ஹிஹிஹி
    வ‌குப்ப‌றை மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரையும் க‌லாய்க்க‌ எண்ணி இன்று வ‌குப்ப‌றையை "ஜ‌மாய்"த்து விட்டீர்கள்,போங்கள்...மூன்று முறை ப‌டித்துப் பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தேன்...

    ReplyDelete
  61. ' சாகாவரம்' அதாவது, மோட்ச நிலையை அருளும் சக்தியின் ஆற்றலைப் பற்றிய‌ திரு. ஆலாசியம் அவர்களது கட்டுரையின் தமிழ் அழகும், சொல்ல வந்த கருத்தை தெளிவாகச் சொல்லும் திறமும் பிரமிக்க வைத்த அதே வேளையில் சில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    மனிதப் பிறவியின் நோக்கமே ' தெய்வநிலை அடைதல்'. அபிராமி பட்டர், ஆதிசங்கர பகவத் பாதர் ஆகியோர் மிகச்சிறந்த தேவி உபாசகர்கள். பிறவிப் பெருங்கடலில் அமிழ்ந்தி வாடும் மானிடர்கள் தேவியை உபாசிப்பது, அதன் முறைகள் இவற்றை அறிந்து கொள்ளுவது கடினம். ஆகவே குறிப்பால் உணர்த்துதல் என்ற முறையில் அவர்கள் தங்களின் பாடல்களில் இவற்றைக் குறித்து பல செய்திகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்

    நமக்குத் தெய்வநிலையை அருளும் வல்லமை உள்ள 'குண்டலினி சக்தி' நாக ரூபமாக, நம் எல்லார் உடலிலும், இடுப்பிற்குக் கீழ் உள்ளது. அது ' மூலாதாரச் சக்ரம்' எனப்படுகிறது. அம்பிகை அங்கே 'ப்ரஹ்மக்கிரந்தி' யாக, அதாவது, சிருஷ்டிக்கு ஆதார முடிச்சாக இருக்கிறாள். அந்தக் குண்டலினி சக்தியை, ஸ்ரீவித்யா உபாசனையின் படி, மந்திர ஜபங்கள் மூலம் எழுப்பி, படிப்படியாக, நம் உடலின் ஒவ்வொரு சக்கரங்களாக மேலேற்றி, சஹஸ்ராரம் வரை கொண்டு சென்றால், நாம் பிறவிப் பயன் பெறலாம். குண்டலினி சக்தியை எழுப்பும் முயற்சியை ஒரு பிறவியிலாவது மேற்கொண்டால்தான்
    அடுத்தடுத்த பிறவிகளில் அந்த சாதனை முயற்சியில் வெற்றி காண இயலும்.
    தேவியின் 'அல்குல்' நாக ரூபமாக கூறப்படுவதன் தத்துவம் இதுவே. எல்லா கடவுளர் உருவங்களிலும், மனிதர்களுக்கு இதை ஞாபகப்படுத்துவதற்காகவே
    நாக உருவங்கள் குறியீடுகளாக உள்ளன.

    ReplyDelete
  62. அடுத்த வாரம் "அவரும் இவரும்" என்று எழுதலாம் என்று மனதுக்குள் எண்ணி இருந்தேன் .ஆனால் இன்றைய பின்னூட்டத்தில்

    kmr.krishnan said.'அவளும் இவளும்' என்று சீரியலாக எழுதப்போகிறாரா தனுசு? அடுத்தது மாமியாரும் மனைவியும், அத்தையும் அக்காவும் என்று சீரியல் தொடருமா?

    ஆகையால் எனது என்னத்தை கை விட்டு விட்டேன் . அவர் யார் இவர் யார் என்கிறீர்களா? சரி கவிதையின் கடைசி இரண்டு வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

    அவர்
    திரையுலகை வென்ற தமிழகத்தின் வாத்தியார்
    இவர்
    இணையத்தை வென்ற வகுப்பறையின் வாத்தியார்

    ReplyDelete
  63. குண்டல என்ற வார்த்தைக்கு, சுருள் என்றொரு பொருளும் உண்டு. குண்டலினி சக்தி, மூன்றரை சுருளாக, சுருண்டு தன் வாலை வாயில் கவ்விக் கொண்டு தூங்கும் நாகமாகக் கருதப்படுகிறது. இது, மூலாதாரச்சக்ரத்தில், பிறப்புறுப்பிற்கு சற்றுக் கீழாக இருக்கிறது. இதன் மூன்று சுழல்கள்,நம் மனதின் மூன்று நிலைகளை, அதாவது, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம், கனவு நிலையைக் குறிக்கும். அரை சுருள், சமாதி (துரியா) நிலையைக் குறிக்கும்.
    இதிலிருந்து, இந்த சக்தி ஸ்வாதிஷ்டானச்சக்ரத்தினை அடையும் போது, வியாதிகளிலிருந்து விடுபடுதல் கிட்டும். மணிபூரகச்சக்ரத்தை அடையும் பொழுது, என்ன நேர்ந்தாலும் அமைதியுடனிருக்க முடியும். அனாஹதச் சக்ரம் சற்றே கடக்கக் கடினமானது. அது, நம் உடலையும் ஆன்மாவையும் இணைக்கும் நெஞ்சுப் பகுதியில் உள்ளது. ஆகவே கொங்கைகள் குறியீடாக்கப்பட்டன. மூலாதாரத்திலிருந்து, சக்தியை எழுப்புவது மிகக் கடினம். அதைப் போலவே, அனாஹதச் சக்ரமும் கடப்பது முக்கியம். இவை இரண்டும் நடந்தாலே மற்ற சக்ரங்களைக் கடப்பது சிரமம்ல்ல. எனவே இவ்விரண்டும் மறை பொருளாக உபயோகிக்கப் பட்டன. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியிலும் தேவியின் ஸ்தனத்தைப் பற்றிய ஸ்லோகங்கள் உண்டு.

    லலிதா சஹஸ்ரநாமத்தில் இவை அனைத்துமே தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆகவே, சஹஸ்ரநாமத்தை பொருளுணர்ந்து சொன்னால், நமது சஹஸ்ராரக் கமலத்தில், ஒரு துளி அமிழ்தம் விழுவதாகச் சொல்லப் படுகிறது. பிறவியிலேயே, கலைகள் கைவரப்பெற்றோர் அனைவருக்குமே குண்டலினி சக்தி விழிப்புடனிருக்கிறது. ஆகவே, அவர்கள் அதை அறிந்து ஜப முறைகளை மேற்கொண்டால்,மிக நல்லது. மற்றபடி, ஆலாசியம் அவர்களின், அனைத்திலும் தெய்வத்தன்மையைக் காணவேண்டும் என்ற கருத்து உன்னதமானது.

    ReplyDelete
  64. "கதகளி" நடனம் என்றால் எனக்கு கொஞ்சம் பயம்...இன்றும் அந்த நடனக் கலைஞர்கள் தோன்றும் பாடல்களைப் பார்க்க மாட்டேன்...தங்களின் கதையில் வருவது போல்,பேயைப் பார்த்து போல் பயப்படுவேன்...தங்களி வரைப்பத்தில் அக்கலைஞர் யோகாசனத்தில் நிலைகளில் ஒன்றான 'விர்க்சாசனா'வில் நின்றபடி உள்ளார்...தங்களது கலைவண்ணம்,இன்றும் வண்ணமயமாய் அமைந்திருந்தது...நன்றி சகோதரி...

    தனுசு அவர்களின் கவிதை,குப்பைகளை 'குப்பைத்தொட்டி'யில் போடாமல் கீழே 'கொட்டு'பவர்களின் தலையில் 'குட்டு' விழும்படி தந்திருக்கிறார்...இந்திய மக்கள் குப்பைத் தொட்டிகளை பசியாற செய்தாலும்,துப்புறவு பணியாளர்கள் நாட்கள் பலவானாலும் உறங்கும்படி செய்தால் என்ன செய்வது?...அனைவரும் ஒருங்கினைந்து நமது தேசத்தையும்,வீட்டையும் தூய்மையாக்க நினைத்தால் மட்டுமே,குப்பைத் தொட்டிகளின் புலம்பல்கள் தீரும் நாளாக அமையும்...நன்றி த‌னுசு அவர்களே...
    தேமொழி சகோதரியின் ஆவலைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்...சென்ற கவிதையை போல் இக்கவிதையும் மிக அருமை...எளிய நடையில் "நச்"சென்று இருந்தது...

    ReplyDelete
  65. kmrk அவர்களின் கட்டுரையில் அவரது கருத்துக்களை நானும் அமோதிக்கின்றேன்.பாரதியாரை 'எழுச்சி'கவிஞர் என்று கொள்வது தான் சரியானதாகும்;மாறாக 'பாப்பா பாட்டை'தந்ததால் அவரை 'குழந்தை கவிஞர்' என்று கொள்வது நெருடலாகவே எனக்கும் தோன்றுகிறது...பாரதியார் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,காரணம் எளிய மொழியில் உணர்வுபூர்வமான கவிதைகளாய் அமைந்திருக்கும்...
    // "கை வீசம்மா கை வீசு
    கடைக்குபோகலாம் கை வீசு
    மிட்டாய் வாங்கலாம் கைவீசு
    மெதுவாய்த் திங்கலாம் கைவீசு"

    பட்டு பட்டு பட்டு
    பட்டு வாயில் பிட்டு
    துட்டு துட்டு துட்டு
    துட்டு தந்தால் லட்டு//

    நீங்கள் கூறியுள்ளதைப் போன்று குழந்தைகளை "ஈர்க்கும்"படி இரட்டைக்கிழவி நடையிலோ அல்லது சொற்களாலோ அமைந்து எளிமையான அல்லது பெரிய கருத்தாழங்கள் இல்லாமல் அமைந்திருக்கும் குழந்தைகளின் பாடல்களில்...ஆகையால் நிச்சயம் "பாப்பா பாட்டு"தந்த பாரதியாரை 'குழந்தை கவிஞர்' என்று சர்ச்சை பாடியவர்களின் 'தாளம்'தவறாகத் தான் அமையும் என்பது என் கருத்து...என்னுடைய ஓட்டு நிச்சயம் உங்களுக்கே...வாக்களித்துவிட்டேன்...ஹிஹிஹி...நன்றி

    ReplyDelete
  66. ///// Parvathy Ramachandran said...

    அப்புறம், விஷயதானம் என்பதற்குப் பக்கத்தில் கேள்விக்குறி போட்டு, உருப்படியா நான் எதுவும் விஷயதானம் பண்ணவில்லை என்பதை அறிவுறுத்திய, பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு மைனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி./////
    தானம், யாசகம் குறித்து எனக்கு கொள்கை அளவிலே கருத்துவேறுபாடு உண்டு..
    அது இடறியதால் இப்படி கேள்விக்குறியை இட நேர்ந்தது..உங்களைக் குறித்ததல்ல.இந்த வார்த்தையைப் பிரயோகித்தவரையே குறித்தது.. எளிதாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி..

    ReplyDelete
  67. ஆலாசியம் அவர்களின் ஆக்கம் அருமை...ஆன்மிக சொற்பொழிவு போன்று அமைந்திருந்தது...எனக்கு மிகவும் கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் ஆன்மிகத்தில் பெரிய ஞானம் கிடையாது...அதனால் கேட்பதற்கும்,படிப்பதற்கும் மிகவும் விரும்புவேன்,அதை வகுப்பறையில் மாணவர் மலரில் தருகிறீர்கள்...நன்றி...கட்டுரையின் நிறைவுரையில் கூறிய அனைத்தும் மிகவும் அருமை...அரிய அறிந்திடாத ஆன்மிகச் சிந்தனைகளை உள்ளடக்கிய கருத்துக்களை விளக்கி தந்து பகிர்ந்துகொண்டமைக்கு மீண்டும் நன்றிகள்...

    "பாதைகள்" பலவகைகளானாலும் பயணங்கள் முடிவதில்லை என்ற அனந்தமுருகனின் படங்கள் மிகவும் அருமை...எனக்கு அனைத்து படங்களும் பிடித்திருந்தது...கயிலை,திருப்பதி மலைகளின் படங்களை தேடும் ஆவலை தூண்டிவிட்டது இப்படங்கள்...நன்றி...

    சபரி அவர்களின் நகைச்சுவை அனைத்தும் அருமை...உண்மையில் இது போன்று கேள்வித்தாள்களை தயார் செய்பவர்களுக்கு தான் "பாராட்டு விழா" எடுக்க வேண்டும்...'எப்படி...இப்படி'?!!!...


    நான் என் பின்னூட்டங்களை எழுதுவதற்குள் பலமுறை இணையத் தடைகள்...இதை " narrow band" என்று சொல்வதே பொருந்தும்...வேறொன்றிருக்கு மாற மனம் வரவில்லை;தேசப்பற்று தடுக்கின்றது!!!என்ன கொடுமை முருகா இது?!!!...ஒரு சேஞ்சுக்காக தான்....ஹிஹிஹி...

    ReplyDelete
  68. //Parvathy Ramachandran said...
    குண்டல என்ற வார்த்தைக்கு, சுருள் என்றொரு பொருளும் உண்டு. குண்டலினி சக்தி, மூன்றரை சுருளாக, சுருண்டு தன் வாலை வாயில் கவ்விக் கொண்டு தூங்கும் நாகமாகக் கருதப்படுகிறது. இது, மூலாதாரச்சக்ரத்தில், பிறப்புறுப்பிற்கு சற்றுக் கீழாக இருக்கிறது. இதன் மூன்று சுழல்கள்,நம் மனதின் மூன்று நிலைகளை, அதாவது, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம், கனவு நிலையைக் குறிக்கும். அரை சுருள், சமாதி (துரியா) நிலையைக் குறிக்கும்.
    இதிலிருந்து, இந்த சக்தி ஸ்வாதிஷ்டானச்சக்ரத்தினை அடையும் போது, வியாதிகளிலிருந்து விடுபடுதல் கிட்டும். மணிபூரகச்சக்ரத்தை அடையும் பொழுது, என்ன நேர்ந்தாலும் அமைதியுடனிருக்க முடியும். அனாஹதச் சக்ரம் சற்றே கடக்கக் கடினமானது. அது, நம் உடலையும் ஆன்மாவையும் இணைக்கும் நெஞ்சுப் பகுதியில் உள்ளது. ஆகவே கொங்கைகள் குறியீடாக்கப்பட்டன. மூலாதாரத்திலிருந்து, சக்தியை எழுப்புவது மிகக் கடினம். அதைப் போலவே, அனாஹதச் சக்ரமும் கடப்பது முக்கியம். இவை இரண்டும் நடந்தாலே மற்ற சக்ரங்களைக் கடப்பது சிரமம்ல்ல. எனவே இவ்விரண்டும் மறை பொருளாக உபயோகிக்கப் பட்டன. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியிலும் தேவியின் ஸ்தனத்தைப் பற்றிய ஸ்லோகங்கள் உண்டு.//

    பார்வதி அவர்களின் பின்னூட்டங்கள் மூலம் நல்ல பயனுள்ள தகவல்களை அறியமுடிகின்றது...தங்களுக்கு யோகக் கலையிலும் ஆழ்ந்த ஞானம் இருப்பது நன்றாக விளங்கின்றது...நானும் ஒரு யோகக் கலையில் மாணவி தான்;தங்களிடம் இருந்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்...தங்களது வலைப்பதிவில் இதுக் குறித்து பதிவிட்டால் மகிழ்வேன்...நன்றி

    ReplyDelete
  69. என் கருத்தை ஆதரித்த ஸ்ரீ ஷோபனாவுக்கு நன்றி.

    நர்சரி ரைம்ஸ் எழுதுவது சுலபமல்ல. அதனை சிறப்பாகச்செய்தவர்
    அழ‌. வள்ளியப்பா அவர்கள்.

    பாரதியில் இல்லாதது ஏதுமில்லை என்று சொல்வார்கள். பாரதியின் நோக்கம் முழுதும் நாட்டு விடுதலையில் இருந்தது. பாஞ்சாலி சபதம் எழுதினாலும், கண்ணன் பாட்டு எழுதினாலும் இறுதிய்ல் வருவது சுதந்திர தாகம்தான். எனவே குழந்தைகளுக்கான எளியபாடலை அவ‌ர் சிந்தித்தும் பார்க்கவில்லை. அவருக்கு இருந்த மொழி ஆற்றலுக்கு அவர் இத் துறையிலும் சாதனைகள் செய்திருக்கலாம். செய்ய அன்றைய சூழல் அனுமதிக்கவில்லை.

    பின்னூட்டம் வந்து குவியும் என்று எதிர்பார்க்கிறேனா? நானா? ஹி ஹி ஹி....!

    ReplyDelete
  70. அட போங்க தேமொழி எத்தனை தடவை படித்தாலும் சிரிப்பை மட்டும் அடக்க முடியவில்லை. ஓய்வாக இருந்ததால் இப்போது ஒருமுறை படித்து பார்த்தேன் அதில்,

    உமா; ஏன் தனுசு அங்கே போய்ட்டிங்க?
    தனுசு; எனக்கு அழகின்ன பிடிக்காது
    உமா; டெல்லில எல்லாரும் அப்படித்தான் பேசிகிறாங்க
    தனுசு;(பதட்டத்துடன்) நீங்க அழகிதான் இப்போ நான் சொன்னது என் எழுதி அழகியை சொன்னேன்


    என்னைக்கிமனைவியை மாணவி ஆக்கி காலை வாரி விட்டுச்சோ அன்னைக்கே
    அழகிஅம்சவல்லிய கை கழுவி விட்டு கூகுள் காமாச்சியை தான் இப்போ வைச்சிருக்கிறேன்.

    ReplyDelete
  71. ///// Parvathy Ramachandran said...
    ' சாகாவரம்' அதாவது, மோட்ச நிலையை அருளும் சக்தியின் ஆற்றலைப் பற்றிய‌ திரு. ஆலாசியம் அவர்களது கட்டுரையின் தமிழ் அழகும், சொல்ல வந்த கருத்தை தெளிவாகச் சொல்லும் திறமும் பிரமிக்க வைத்த அதே வேளையில் சில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    மனிதப் பிறவியின் நோக்கமே ' தெய்வநிலை அடைதல்'. அபிராமி பட்டர், ஆதிசங்கர பகவத் பாதர் ஆகியோர் மிகச்சிறந்த தேவி உபாசகர்கள். பிறவிப் பெருங்கடலில் அமிழ்ந்தி வாடும் மானிடர்கள் தேவியை உபாசிப்பது, அதன் முறைகள் இவற்றை அறிந்து கொள்ளுவது கடினம். ஆகவே குறிப்பால் உணர்த்துதல் என்ற முறையில் அவர்கள் தங்களின் பாடல்களில் இவற்றைக் குறித்து பல செய்திகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்////



    தங்களின் பாராட்டிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதிரியாரே...

    குண்டளியிநியைப் பற்றிய தங்களின் கருத்துக்களை ஓசோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் என்ற நூலில் வாசித்திருக்கிறேன்... இருந்தும் தங்களின் இந்த விளக்கம் அருமை. மிக்க நன்றி.

    அன்னையவளின் அருமைகளைஎல்லாம் பாடிய அபிராமபட்டர் விட அரவம் என்ற விகுதி யோடு கூறியதாலும், நான் கூறியது போல் திருமறையிலே ஈசனின் திருமேனியில் காணும் அரவத்திர்கான விளக்கமும்... திருமுருகனின் தரிசன விளக்கத்திலேக் கூறப்பட்ட கருத்தும்... திருப்பாவையிலே ஆண்டாளின் பாசுரங்களில் விளக்கம் தருகையிலே சாண்டில்யனின் விளக்கத்தில்(வானதிப் பதிப்பகம் திருப்பாவை சாண்டில்யன் விளக்க உரை பதிப்பு 1990 . பக்கம் 50 .) அவர் வேதாந்தக் கருத்தாக கூறிய அரவத்தினைப் பற்றிய புரிந்துணர்விலும் தான் நானும் இப்படி ஒரு கருத்துப் பகிர்வுக்கு வந்தேன். அந்த ஆக்கத்திலே முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சித் தருவதையும், அதைவிட மிக அருமையான ஒருப் படத்தையும், அதாவது கிருஷ்ண பரமாத்மா கருட வாகனத்திலே பறப்பார் அப்போது அந்தக் கருடன் தனது திருக் கரங்களிலே ஒரு நாகத்தை வைத்தும் இருக்கும்... இருந்தும் தாங்கள் கூறியது போல் இந்த அன்னையின் அல்குல் பற்றியக் கருத்தும் மேற்கூறிய நாகங்களைப் பற்றிய கருத்தும் வேறாக இருக்கலாம்...

    இருந்தும் தங்களின் கருத்தைப் பற்றிய எண்ணவோட்டம் அதை எழுதும் போது ஒரு ஓரத்தில் வந்தாலும் மேற்கூரியக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தே இதை எழுதினேன். தங்களின் கருத்திற்கு நான் மிகவும் மரியாதையும், புரிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.:):) மாற்றுக் கருத்து என்பதால் தான் இத்தனை சான்றுகளைக் கூறுகிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதாவது நான் கூறியது சரியென்று நிரூபிக்க செய்வதாக.... நாம் யாவரும் படித்த, கேட்டவைகளைக் கொண்டே பேசுகிறோம் என்பதை நான் நம்புகிறேன்.

    தங்களின் கருத்து பற்றிய தேடுதலையும் செய்ய விரும்புகிறேன்... வேறெங்கிலும் காணினும் அதை நான் இங்கே பகிர்ந்தும் கொள்வேன் தாங்களும் குண்டலினிப் பற்றிய முழு விளக்கத்துடன் கட்டுரைகளை இங்கே பகிர்ந்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

    தங்களின் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி... அதிலும் தாங்கள் மறுத்துக் கூறப் போகும் முன் எனக்கு மாலைகளைப் போட்டு கொஞ்சம் குசிப் படுத்தி விட்டுட்டு வந்தது தான் மிகவும் அருமை :):):) சும்மா சொன்னேன்... தங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  72. //// தேமொழி said...

    மனமென்னும் மயில் எப்போதும் தாங்க வேண்டியது... அதன்மீது அமர்த்த வேண்டியது இறைவனைத்தான்/முருகனைத்தான், இவ்வுலக சுகம் அழகான நச்சுப் பாம்பு போல இருந்தாலும் மனமென்னும் மயிலுக்கு கட்டுப் பட்டு அதன் காலடியில் உள்ள பாம்பைப் போல அமைதியாக இருக்க வேண்டும். இது நல்ல விளக்கம். இதை எடுத்துச் சொன்ன சகோதரர் ஆலாசியத்திற்கு நன்றி./////

    நன்றிகள் சகோதிரியாரே! காலையிலே கொஞ்சம் அவசரமாக வெளியில் சென்றதால் பின்னூட்டம் இடாமல் தாமதம் உண்மையில் தங்களின் ஆக்கம் (தங்களின் கிரகிப்பை நான் முன்பே அறித்தவனாயினும்) மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது.. பெரும்பாலும் குழந்தைகள் தான் இது போன்று வீட்டில் கலைத்து எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள்... தங்களின் குழந்தைத் தனம் ரசிக்கவே செய்தது..

    ReplyDelete
  73. ///// minorwall said...

    அபிராமி அந்தாதிப் புலவர் சிங்கைக் கவிஞர் பால்மணம் மாறாமல் தொடர்கிறார்..ஏதோ சொல்லனுமேன்னு சொல்லி வெச்சேன்..
    இலக்கியத்துலேயே நமக்கெல்லாம் நாட்டம் இல்லை..
    அதிலும் பக்தி இலக்கியம்..
    வேற்று வண்ணத்தால் ஹைலைட் பண்ணப்பட்ட காமசூத்திராவிலே காணக்கிடைக்கும் வார்த்தைகளின் விளக்கத்தை பக்தி இலக்கியத்திலே தேடித் படித்து..கமென்ட் அடித்து..ம்ஹூம்.. நோ ச்சான்ஸ்..////

    தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் சகோதரரே!

    ReplyDelete
  74. //// R.Srishobana said...
    ஆலாசியம் அவர்களின் ஆக்கம் அருமை...ஆன்மிக சொற்பொழிவு போன்று அமைந்திருந்தது...எனக்கு மிகவும் கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் ஆன்மிகத்தில் பெரிய ஞானம் கிடையாது...அதனால் கேட்பதற்கும்,படிப்பதற்கும் மிகவும் விரும்புவேன்,அதை வகுப்பறையில் மாணவர் மலரில் தருகிறீர்கள்...நன்றி...கட்டுரையின் நிறைவுரையில் கூறிய அனைத்தும் மிகவும் அருமை...அரிய அறிந்திடாத ஆன்மிகச் சிந்தனைகளை உள்ளடக்கிய கருத்துக்களை விளக்கி தந்து பகிர்ந்துகொண்டமைக்கு மீண்டும் நன்றிகள்...////

    நன்றி நன்றி சகோதிரியாரே!

    ReplyDelete
  75. /////kmr.krishnan said...
    என் கருத்தை ஆதரித்த ஸ்ரீ ஷோபனாவுக்கு நன்றி.

    நர்சரி ரைம்ஸ் எழுதுவது சுலபமல்ல. அதனை சிறப்பாகச்செய்தவர்
    அழ‌. வள்ளியப்பா அவர்கள்.

    பாரதியில் இல்லாதது ஏதுமில்லை என்று சொல்வார்கள். பாரதியின் நோக்கம் முழுதும் நாட்டு விடுதலையில் இருந்தது. பாஞ்சாலி சபதம் எழுதினாலும், கண்ணன் பாட்டு எழுதினாலும் இறுதிய்ல் வருவது சுதந்திர தாகம்தான்.///

    ஆம், அவரின் அனைத்துப் பாடல்களிலும் "ஆன்ம சுதந்திர தாகம்" இருப்பதுவும் உண்மைதான் சார்.

    ////எனவே குழந்தைகளுக்கான எளியபாடலை அவ‌ர் சிந்தித்தும் பார்க்கவில்லை. அவருக்கு இருந்த மொழி ஆற்றலுக்கு அவர் இத் துறையிலும் சாதனைகள் செய்திருக்கலாம். செய்ய அன்றைய சூழல் அனுமதிக்கவில்லை.////

    செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது... இருந்தும் தங்களின் கருத்திற்கும் மதிப்பளிக்கிறேன்:):)

    நன்றிகள் சார்.

    ReplyDelete
  76. எனது ஆக்கத்தை படித்து என்னைப் பாராட்டிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  77. ////thanusu said...
    ...அழகிஅம்சவல்லிய கை கழுவி விட்டு கூகுள் காமாச்சியை தான் இப்போ வைச்சிருக்கிறேன்.////

    அடடா... தனுசு இப்படியா யோசிக்காம சின்ன பிள்ளைத்தனமா எழுதுவீங்க ....சீக்கிரம் ...சீக்கிரம்... மைனர் வந்து வாரிவிடுவதற்குள் நீங்கள் உண்மையில் சொல்லவந்தது என்னன்னு விவரிச்சு ஏதாவது மறுப்பு தெரிவிச்சு அறிக்கை விடுங்கள்.

    ReplyDelete
  78. இங்கு பிளாட்டை போடமுடியாது
    ஆகவே பாட்டை போடுகிறேன்.

    புதிய வானம்
    புதிய பூமி
    எங்கும் பனிமழை பொழிகிறது
    நான் வருகையிலே
    என்னை வரவேற்க
    வண்ண பூமழை பொழிகிறது.
    (தலைவர் படப் பாடல்தான்)

    ReplyDelete
  79. தேமொழி said...அடடா... தனுசு இப்படியா யோசிக்காம சின்ன பிள்ளைத்தனமா எழுதுவீங்க ....சீக்கிரம் ...சீக்கிரம்... மைனர் வந்து வாரிவிடுவதற்குள் நீங்கள் உண்மையில் சொல்லவந்தது என்னன்னு விவரிச்சு ஏதாவது மறுப்பு தெரிவிச்சு அறிக்கை விடுங்கள்

    என்னடா என்று ஒரு நிமிடம் யோசித்தேன் .

    இது அந்த வச்சிருக்கிறேன் அல்லா ,என் மடிக் கணினியில் வைத்துள்ளேன் பயன் படுத்துகிறேன் என்று அர்த்தம்.

    மைனரை சமாளிப்பது ஒன்னும் கடினம் அல்லா ,வேறு யாரை என்கிறீர்களா? பாருங்க காமாட்சியும் கவுக்கிறார்

    அது
    அல்லா அல்லா
    அல்லஅல்ல-இந்த
    அல்ல அல்ல தான்

    இவருக்குத்தான் நான் ரொம்பவும் பயப்படுவேன் ,புரிந்ததா? புரிய வில்லை என்றால் வகுப்பை விட்டு வெளியே போகவும்.

    ReplyDelete
  80. பிரமாதம்.. பிரமாதம்.

    உண்மையிலேயே வியந்து போய்விட்டேன். Humour, characterisation, picturisation எல்லாமே அற்புதம். உண்மையிலேயே தேமொழி ஒரு நல்ல எழுத்தாளர்தான். நான் வகுப்பறைக்கு regular ஆக வரும் மாணவன் என்பதால் அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து மிக மிக ரசித்தேன்.

    மைனர், kmr, கண்ணன், ஆனந்த் , வாத்தியார் இன்னும் மற்றவர்களது உரையாடல்கள் அப்படியே அவர்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.

    வாழ்க வளமுடன்.

    பதிவிற்கு நன்றிகள். தேமொழிக்கு இரட்டிப்பு நன்றிகள். இத்தனை நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் வாழ்வில் நிச்சயம் தோற்பதில்லை.

    இந்தப் பதிவு வாத்தியாரின் 337 வைத்தியத்திற்கும் மேலே..

    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  81. எப்புடி இப்படி தேமொழி? செமையா கலாய்த்திருக்கிறீர்கள். நல்ல creativity , நகைச்சுவை உணர்வு.

    நானும் வகுப்பறை மாணவர்களைத் தனித்தனியாக அவர்களின் பின்னூட்டத்தைக்கொண்டே கலாய்த்து
    (முதல் அடி யாருக்குன்னு ஊகம் செய்திருப்பீர்களே!!!) ஒரு ஆக்கம் எழுத ஆரம்பித்து ட்ராப்டில் இருக்கிறது. இருந்தும் என்னோட அதீத சுறுசுறுப்பால் இன்னும் தொடரவில்லை. அதற்குள் 'முந்திரிக்கொட்டை' போல் நீங்கள் எழுதிவிட்டதால் நான் சற்று இடைவெளிவிட்டு தொடர்கிறேன்.

    ReplyDelete
  82. இப்போது குற்றம் கண்டுபிடிக்கும் வேலை / வேளை (தனுசு, கீப் கொயட்!):

    ஏற்ற தாழ்வுகளை - ஏற்றத்தாழ்வுகளை

    பாடத்தை படிக்க - நடுவில் ப் வரவேண்டும்

    எதிர் கட்சி - க்

    வசனத்தை சொல்லுகிறார் - ச்

    எண்ணைக்கு பதில் - ப்

    வாழ்கையில - க்

    (இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு)

    ஒரு மாலை வேலையில் - இது எப்படிப்பட்ட பிழைன்னு மக்களே நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  83. நீங்கள் முதலில் குறிப்பிட்ட சரவணாவும், துபாய் சரவணாவும் ஒருவர்தான். என்ன கொடுமை சரவணா இது?

    ReplyDelete
  84. தவறாம எல்லோரும் என்னை ஆதரித்து வாக்கு
    போடணும்னு கேட்டுக்கிறேன்//

    அவரோட பேரே வாக்காளர் பட்டியலில் இல்லையாம், அதனால கிடைக்கவேண்டிய மூன்று வாக்குகளில் ஒண்ணு அவுட். டெபொசிட் காலியான துக்கத்திலிருந்து மீள நீங்க வழக்கமா அடிக்கும் பிராண்டில் ஒரு 'லார்ஜ்' அடிங்க, ஹி ஹி.

    உமாவுக்கு ஹிந்தி தெரியும்..ஆனா நல்லாத் தெரியாது.//

    மைனருக்கு சுத்தமாவே தெரியாது, நான் தில்லியில் இருக்கிறேன் என்று சொன்னபின்பும், ஹிந்தி தெரியுமான்னு கேட்கற 'அதிபுத்திசாலி' அவரு.

    அப்ப எண்ணைக்கு பதில் ஃபெவிக்கால தடவிகிட்டு ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே? //

    ஷ்ஷு எல்லாரும் அமைதியா உட்கார்ந்து கேளுங்கப்பா, அனுபவம் பேசுது.

    வஞ்சியவள் வந்தால் வாழ்வில் இனிமை
    வசந்தம் வந்தால் வாழ்வில் இனிமை /

    நாம் தாழ்ந்தால் வாழ்க்கையில் திண்டாட்டம்
    நாம் வீழ்ந்தால் பலருக்கு கொண்டாட்டம்//

    இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையாப்போச்சு. அலுவலகத்துல குடுக்கற காசுக்கு என்னைய மாதிரி உண்மையா வேலையைக் கவனிங்கப்பா!

    நீ எப்படி இவ்ளோ பின்னூட்டம் போடறேன்னு யாரும் கேள்வி கேட்கக்கூடாது. பாஸ் ரெண்டு பெரும் தென் ஆப்பிரிக்கா போயிருப்பதால், சற்றே ப்ரீயாக இருக்கிறேன் (பேசாம நிரந்தரமா அவங்களை அனுப்பிட்டா என்ன, தென் அப்பிரிக்காவுக்கு???)

    ReplyDelete
  85. தில்லி உமாக்கான்னா எல்லோருக்குமே ஒரு பயம்தான்//

    அது!!!!!

    கவிதைகள் சொல்லவா, உன்பெயர் சொல்லவா, இரண்டுமே மொக்கைதான் ஓஹ்ஹோ ....//

    ஹா ஹா

    நான் அறிவாளியுடன் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆமாம் //

    அவ், இது ரொம்ப ஓவர் டேமேஜா இருக்கே!!!!

    பேயோட வாக்கிங் போறவங்க வகுப்புக்கு வரலாம்//

    அவங்களாவது வாக்கிங் தான் போனாங்க, அவங்களோட கணவரைக்கேட்டா அவர் பங்குக்கு ஏதாவது சொல்வாரு.

    ஏன்? நீங்களே இப்ப கொஞ்ச நேரமா திருப்பி திருப்பி புரியாது புரியாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கவங்க யாருன்னு யோசிச்சு பாருங்க
    உங்களுக்கே அது யாருங்கற உண்மை புரியும்//

    ஹா ஹா

    ReplyDelete
  86. உங்கள் ஓவியம் வழக்கம்போல் நன்றாக இருந்தது.

    தனுசுவின் இரண்டு கவிதைகளும் அருமை. அடுத்து உங்கள் தாயாரையும், மாமியாரையும் வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் தனுசு! (இப்ப என்ன செய்யறார்னு பார்ப்போம், நம்மகிட்டயேவா??)

    ReplyDelete
  87. கிருஷ்ணன் சாரின் கட்டுரை பற்றி: மீ எஸ்கேப்பு!

    ReplyDelete
  88. ஆலாசியத்தின் ஆக்கம் மிகவும் அருமை, உண்மையில் பக்திப்பாடல்கள் படிக்கும்போது இந்த வார்த்தைகள் நெருடலை ஏற்படுத்தியதுண்டு. இருந்தும் அதில் ஏதாவது மறைபொருள் இருக்கும் என்று நம்பியதுண்டு. உங்களின் இந்த ஆக்கம் தெளிவான விளக்கத்தைத் தந்தது. சொல்ல வந்ததை அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  89. ஆனந்தமுருகன் அனுப்பிய படங்களும், சபரியின் ஜோக்கும் நன்று!

    ReplyDelete
  90. உமாவை கொஞ்சம் 'ஸ்பேர்' பண்ணிவிட்டார்கள். உமாவை இன்னும் கொஞ்சம் கலாய்த்திருக்கலாம்.அப்போது சுவை கூடியிருக்கும்//

    ஓஹோ!

    ReplyDelete
  91. பேயை பற்றி சொன்னதும்
    பேய் கதை தரும் சகோஉமாவேவென//

    ஹி ஹி, நல்லவேளை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  92. டெல்லி மாமி,//

    அவ்!!

    ReplyDelete
  93. எழுத்துப் பிழை சரிபார்க்க வில்லை.... தட்டச்சு செய்வதே சிரமமாக இருக்கிறது,,, தமில்விரும்பியின் தவற்றை நக்கீரர்கள்:):):) பொறுப்பீர்களாக... முக்கியமாக எனது சகோதிரி உமா.....//

    ஹையோ ஹையோ! தமிழையே தமிலாக்கினதுக்கு அப்புறம் சொல்றதுக்கு என்னா இருக்கு???

    ReplyDelete
  94. அடுத்த முறை சின்ன பேப்பரை கூட சாலையிலோ வீதியிலோ வீசாமல்
    கீழே போடாமல் குப்பைதொட்டியில் போட்டால் அதுவே நம் வகுப்பறையின் வெற்றி .//

    நாங்க எல்லாம் ரொம்ப பாலிசியோட இருக்கிற ஆளு! நீண்டதூரப்பயனத்தில் கூட வழியில் குப்பையைத் தூக்கி எறியாமல் பையிலேயே வைத்திருந்து இறங்கியதும் குப்பைக்கூடையில்தான் போடுவேன்.

    ReplyDelete
  95. அவர்
    திரையுலகை வென்ற தமிழகத்தின் வாத்தியார்
    இவர்
    இணையத்தை வென்ற வகுப்பறையின் வாத்தியார்//

    கவிதையை முழுமையாக எழுதி அனுப்புங்கள் தனுசு! படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  96. இரட்டைக்கிழவி நடையிலோ //

    ஒரு கிழவி நடந்தாலே மெதுவாதான் நடக்கும், இரட்டைக்கிழவின்னா? அது 'இரட்டைக்கிளவி'

    ReplyDelete
  97. அழகிஅம்சவல்லிய கை கழுவி விட்டு கூகுள் காமாச்சியை தான் இப்போ வைச்சிருக்கிறேன்//

    'பெண் பாவம்' பொல்லாது!

    ReplyDelete
  98. செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது... இருந்தும் தங்களின் கருத்திற்கும் மதிப்பளிக்கிறேன்:):) //

    ஏழிலே தலைவர் சனிபகவான் வந்ததுமே எவ்வளவு பக்குவப்படுத்தியிருக்கிறார்!!!!!!!!

    ReplyDelete
  99. ////Uma said...
    ஆலாசியத்தின் ஆக்கம் மிகவும் அருமை, உண்மையில் பக்திப்பாடல்கள் படிக்கும்போது இந்த வார்த்தைகள் நெருடலை ஏற்படுத்தியதுண்டு. இருந்தும் அதில் ஏதாவது மறைபொருள் இருக்கும் என்று நம்பியதுண்டு. உங்களின் இந்த ஆக்கம் தெளிவான விளக்கத்தைத் தந்தது. சொல்ல வந்ததை அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!////



    நன்றி உமா...

    இருந்தும் சகோதிரியார் சொன்னது போல் செளந்திரிய லஹரியையும், (வாசிக்க ஆரம்பித்து விட்டேன்) லலிதா சஹஸ்ரநாமம் தேடிக் கொண்டும் இருக்கிறேன் நல்ல வலைப் பூ இருந்தால் கூறவும்.

    ReplyDelete
  100. ////Uma said...
    எழுத்துப் பிழை சரிபார்க்க வில்லை.... தட்டச்சு செய்வதே சிரமமாக இருக்கிறது,,, தமில்விரும்பியின் தவற்றை நக்கீரர்கள்:):):) பொறுப்பீர்களாக... முக்கியமாக எனது சகோதிரி உமா.....//

    ஹையோ ஹையோ! தமிழையே தமிலாக்கினதுக்கு அப்புறம் சொல்றதுக்கு என்னா இருக்கு???////

    அச்சோ! அச்சோ!!.... உமா டீச்சர் என்னுடைய கணனியில் ஏதோ கோளாறு! அது கீ போர்டிலோன்னு நினைக்கிறேன்:):)

    ReplyDelete
  101. ஞாயிறு வந்தால் மாணவர் மலர்
    திங்கள் வந்தால் உமா மலர்

    பதினெட்டு பின்னூட்டம் அதும் தொடர்ந்து , சச்சினுக்கு முன்னாடியே உமா 100 ல் 100 போடுவாங்க போலிருக்கு

    Uma said...
    இப்போது குற்றம் கண்டுபிடிக்கும் வேலை / வேளை (தனுசு, கீப் கொயட்!):


    இதுதான் எனக்கு புரிய வில்லை

    ReplyDelete
  102. //// Uma said...
    செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது... இருந்தும் தங்களின் கருத்திற்கும் மதிப்பளிக்கிறேன்:):) //

    ஏழிலே தலைவர் சனிபகவான் வந்ததுமே எவ்வளவு பக்குவப்படுத்தியிருக்கிறார்!!!!!!!!////

    இருக்குமோ?!!!!

    "பின்ன ஆலாசியத்திற்கு நாற்பது தாண்டி இரண்டு வருடம் ஆயிருச்சுல சகோதிரி" அப்படின்னு, வாத்தியார் சொல்ல நினைத்திருப்பார்?!:)

    என்ன இவ்வளவு தைரியமா சொல்லிட்டேன்னு பார்க்கிறீங்களா...

    எல்லோரையும் விட நான் இளையவன் அந்தத் தைரியம் தான்.

    எனக்கு பின்னாடி இரு சகோதிரிகள் மாத்திரம் இருக்கிறார்கள்!? இல்லையா!:)

    இன்னொருத்தர் தென்கிழக்கிலே இருந்து வேகமாக வருவாரு பாருங்களேன்!

    ReplyDelete
  103. //Uma said...
    இரட்டைக்கிழவி நடையிலோ //

    ஒரு கிழவி நடந்தாலே மெதுவாதான் நடக்கும், இரட்டைக்கிழவின்னா? அது 'இரட்டைக்கிளவி//

    நானும் எழுதும் அவசரத்தில் செய்த தட்டச்சு பிழை...ஹாஹா...எனது தவறை சுட்டிக் காட்டிய வகுப்பறை 'தமிழ் ஆசிரியை'க்கு என் நன்றிகள்...இந்த முறை நான் மாட்டிக் கொண்டேனா?!!!...

    ReplyDelete
  104. //R.Srishobana said..//
    //பார்வதி அவர்களின் பின்னூட்டங்கள் மூலம் நல்ல பயனுள்ள தகவல்களை அறியமுடிகின்றது...தங்களுக்கு யோகக் கலையிலும் ஆழ்ந்த ஞானம் இருப்பது நன்றாக விளங்கின்றது...நானும் ஒரு யோகக் கலையில் மாணவி தான்;தங்களிடம் இருந்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்...தங்களது வலைப்பதிவில் இதுக் குறித்து பதிவிட்டால் மகிழ்வேன்..//

    தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. விரைவிலேயே தங்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன். யோகக்கலையில் சிறிதளவே பயிற்சி எனக்கு. இருப்பினும், ஆர்வம் காரணமாகவே நிறைய விஷயங்களைப் பற்றிப் படிக்கிறேன். பயிற்சியில் ஈடுபடுபவர்களோடு தொடர்பு கொண்டு விவாதிக்கிறேன்.
    உங்களைப் போன்ற சிறந்த நண்பர்களோடு பகிர்ந்தும் கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  105. Uma said...
    தவறாம எல்லோரும் என்னை ஆதரித்து வாக்கு
    போடணும்னு கேட்டுக்கிறேன்//

    அவரோட பேரே வாக்காளர் பட்டியலில் இல்லையாம், அதனால கிடைக்கவேண்டிய மூன்று வாக்குகளில் ஒண்ணு அவுட். டெபொசிட் காலியான துக்கத்திலிருந்து மீள நீங்க வழக்கமா அடிக்கும் பிராண்டில் ஒரு 'லார்ஜ்' அடிங்க, ஹி ஹி.

    ///////எந்த தேர்தல் பத்தின்னும் நீங்களே சொல்லிட்டா நல்லது..இல்லைன்னா படைப்பாளி தேமொழியைத்தான் கேட்கணும்..//////


    ////உமாவுக்கு ஹிந்தி தெரியும்..ஆனா நல்லாத் தெரியாது.//

    மைனருக்கு சுத்தமாவே தெரியாது, நான் தில்லியில் இருக்கிறேன் என்று சொன்னபின்பும், ஹிந்தி தெரியுமான்னு கேட்கற 'அதிபுத்திசாலி' அவரு./////////

    நல்லதாப் போச்சு..எதிர்க்கட்சிக் காரங்களே இப்படி எங்களை இந்தி எதிர்ப்பாளராக் காட்டி பிரச்சாரத்தை துவங்கி வெக்குறதுவும் நல்லதுதானே?

    ஹிந்தியிலேயே பேசி தமிழ்நாட்டுலே அரசியல் பண்ணறதுதானே?நல்ல எதிர்காலம் இருக்கும்..(அதுவும் இப்போ இருக்குற நிலைமையிலே..)

    \\\\\\\\\\////அப்ப எண்ணைக்கு பதில் ஃபெவிக்கால தடவிகிட்டு ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே? //

    ஷ்ஷு எல்லாரும் அமைதியா உட்கார்ந்து கேளுங்கப்பா, அனுபவம் பேசுது. ////

    பாம்பின் கால் பாம்பறியும் ன்னு ஒரு சொல்லடை கேட்டுருக்கேன்..

    விளக்கம் என்னன்னு KMRK அடுத்த முறை லிஸ்ட்டிலே விளக்குவார்..

    ////////நீ எப்படி இவ்ளோ பின்னூட்டம் போடறேன்னு யாரும் கேள்வி கேட்கக்கூடாது. பாஸ் ரெண்டு பெரும் தென் ஆப்பிரிக்கா போயிருப்பதால், சற்றே ப்ரீயாக இருக்கிறேன் (பேசாம நிரந்தரமா அவங்களை அனுப்பிட்டா என்ன, தென் அப்பிரிக்காவுக்கு???)///////

    அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?

    ReplyDelete
  106. // தமிழ் விரும்பி ஆலாசியம் said.... //

    //இருந்தும் தங்களின் கருத்தைப் பற்றிய எண்ணவோட்டம் அதை எழுதும் போது ஒரு ஓரத்தில் வந்தாலும் மேற்கூரியக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தே இதை எழுதினேன். தங்களின் கருத்திற்கு நான் மிகவும் மரியாதையும், புரிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.:):) மாற்றுக் கருத்து என்பதால் தான் இத்தனை சான்றுகளைக் கூறுகிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதாவது நான் கூறியது சரியென்று நிரூபிக்க செய்வதாக.... நாம் யாவரும் படித்த, கேட்டவைகளைக் கொண்டே பேசுகிறோம் என்பதை நான் நம்புகிறேன். //

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற வரியின் பொருளை தங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் நிரூபித்தன . எதிராளியின் கருத்துக்கு மதிப்பளிப்பது என்பது எளிதான செயல் அல்ல. அந்தாதியின் வரிகளுக்குப் பொருள் கூறுவது என்பதும் சாதாரணமான செயல் அல்ல. நான் அறிந்தவற்றை விளக்கினேனே அன்றி தங்களின் கருத்தை மறுத்துரைப்பது அல்ல என் நோக்கம்.
    தங்களின் மேலான புரிந்துகொள்ளுதலுக்கு என் நன்றி.

    ReplyDelete
  107. //இருந்தும் சகோதிரியார் சொன்னது போல் செளந்திரிய லஹரியையும், (வாசிக்க ஆரம்பித்து விட்டேன்) லலிதா சஹஸ்ரநாமம் தேடிக் கொண்டும் இருக்கிறேன் நல்ல வலைப் பூ இருந்தால் கூறவும்.//

    http://temple.dinamalar.com/slogan.php
    மேற்கண்ட வலைத்தளத்தில் சௌந்தர்ய லஹரியைப் பொருளுடன் தாங்கள் வாசிக்கலாம் (10ம் பக்கத்தில் உள்ள லிஸ்டில் சுட்டி உள்ளது). சொற்களுக்கு மட்டுமே பொருள் கூறப்பட்டிருக்கிறது. மறை பொருளுடன் அல்ல.தங்களின் வசதிக்காக, ஸ்லோகம் எண்:72ல் இருந்து பார்க்கவும்.

    லலிதா சஹஸ்ரநாமம்: http://www.tamilhindu.com/2010/10/lallita-sahasrama-absolute-as-beauty/

    இந்த வலைத்தளத்தில் லலிதாசஹஸ்ரநாமத்தைப் பற்றியும் அதில் கூறியுள்ள விவரங்களைப் பற்றியும் சற்றுத் தெளிவாக அறியலாம்.ஸ்லோகங்களை அறிய‌
    http://tamilslogam.wordpress.com/2011/04/09/ஸ்ரீ-லலிதா-சஹஸ்ரநாமம்/
    க்குச் செல்லவும்.

    //எல்லோரையும் விட நான் இளையவன் அந்தத் தைரியம் தான்.

    எனக்கு பின்னாடி இரு சகோதிரிகள் மாத்திரம் இருக்கிறார்கள்!? இல்லையா!:)//

    (ஆலாசியம் அண்ணாவே வயசைச் சொல்லிட்டதால) அந்த இரண்டு பேரோடு நானும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  108. /////Parvathy Ramachandran said...
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற வரியின் பொருளை தங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் நிரூபித்தன . எதிராளியின் கருத்துக்கு மதிப்பளிப்பது என்பது எளிதான செயல் அல்ல. அந்தாதியின் வரிகளுக்குப் பொருள் கூறுவது என்பதும் சாதாரணமான செயல் அல்ல. நான் அறிந்தவற்றை விளக்கினேனே அன்றி தங்களின் கருத்தை மறுத்துரைப்பது அல்ல என் நோக்கம்.
    தங்களின் மேலான புரிந்துகொள்ளுதலுக்கு என் நன்றி.////

    /////தங்களின் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி... அதிலும் தாங்கள் மறுத்துக் கூறப் போகும் முன் எனக்கு மாலைகளைப் போட்டு கொஞ்சம் குசிப் படுத்தி விட்டுட்டு வந்தது தான் மிகவும் அருமை :):):) சும்மா சொன்னேன்... தங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.////

    இந்த வரிகள் தாம் உங்களின் பின்னூட்டத்திற்கு முதற் புள்ளியாக இருந்திருக்கும்:):) தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    நான் உண்மையில் நீங்கள் கருத்துக் கூறும் முன் எங்கே அதனால் நான் சங்கடப் பட்டு விடுவேனோ என்று தாங்கள் காட்டிய அக்கறை தங்களின் இளகிய மனத்தைக் காட்டுவதை நான் புரிந்துக் கொண்டேன் என்பதை காட்டவே அந்த வரிகளை எழுதினேன்:):)

    நன்றிகள் சகோதிரியாரே!

    சகோதிரி ஷோபனாவிற்காக மாத்திரம் தானா?

    நானும் எழுதக் கேட்டிருந்தேனே!:):)

    ReplyDelete
  109. //////////நீ எப்படி இவ்ளோ பின்னூட்டம் போடறேன்னு யாரும் கேள்வி கேட்கக்கூடாது. பாஸ் ரெண்டு பெரும் தென் ஆப்பிரிக்கா போயிருப்பதால், சற்றே ப்ரீயாக இருக்கிறேன் (பேசாம நிரந்தரமா அவங்களை அனுப்பிட்டா என்ன, தென் அப்பிரிக்காவுக்கு???)///////

    அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?//

    ஆஹா...இந்த முறை மைனர் அவர்கள் உமாஜியை சிக்க வைத்துவிட்டார்...தொண்டர்களை(?!!!) காத்து ஆதரித்த "தலைவருக்கு" நன்றி...எங்கள் ஓட்டு உங்களுக்கே!!!...ஹிஹிஹி...

    ReplyDelete
  110. @uma,
    //நாங்க எல்லாம் ரொம்ப பாலிசியோட இருக்கிற ஆளு! நீண்டதூரப்பயனத்தில் கூட வழியில் //
    தவறு ‍- பயனத்தில்
    சரி - பயணத்தில்

    //'பெண் பாவம்' பொல்லாது!//
    தவறு - ‍ பொல்லாது
    சரி - பொல்லாதது

    @alasiyam
    சௌந்தர்யலஹரி -க்கு விரிவுரைகள் நிறைய இருந்தாலும், குறிப்பிட்டு
    சொல்ல வேண்டுமெனில் தமிழில் மஹாபெரியவாள் ட்ரஸ்ட், பெங்களூரூ வெளியீடு மிகவும் அருமை. தாங்கள் டவுன்லோட் செய்து கொள்ள லிங்க்
    http://srimahaperiavaltrust.com/welcome_files/Page621.html

    லலிதா சஹஸ்ரநாமாவிற்கும் நிறைய விரிவுரைகள் இருந்தாலும், என் அளவில் சுவாமி சித்பவானந்தர் அருளிய விரிவுரை மிகவும் எளிமையானது.
    சென்னையில் உள்ள
    http://reocities.com/Athens/thebes/2257/LifeHistoryofSriBhaskararaya.htm
    விலாசத்தில் பாஸ்கர ராயர் எழுதிய விரிவுரை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
    மற்றபடி வடமொழியில் ருத்ரதேவ் திரிபாதி அவர்களின் செளந்தர்ய லஹரி ஹிந்தி விரிவுரை படிக்கலாம்.

    @alasiyam and @parvathi avl,
    ganesha, krishna and lalitha are three stages of progression. first is vishistadvaita, second is dvaita and ultimate is advaita
    Now dont jump on to me...myself born into dvaita following family but personally taken over by mother srilalitha from birth and hence she is my mother.
    on the lighter note, if you add sri with ganesha, krishna, and lalitha, it gives all round prosperity which is essential for inner prosperity also..
    am not an exponent, so what i have written is based on my experience...may or may not be acceptable..

    sri

    ReplyDelete
  111. ///// Parvathy Ramachandran said...
    //இருந்தும் சகோதிரியார் சொன்னது போல் செளந்திரிய லஹரியையும், (வாசிக்க ஆரம்பித்து விட்டேன்) லலிதா சஹஸ்ரநாமம் தேடிக் கொண்டும் இருக்கிறேன் நல்ல வலைப் பூ இருந்தால் கூறவும்.//

    http://temple.dinamalar.com/slogan.php
    மேற்கண்ட வலைத்தளத்தில் சௌந்தர்ய லஹரியைப் பொருளுடன் தாங்கள் வாசிக்கலாம் (10ம் பக்கத்தில் உள்ள லிஸ்டில் சுட்டி உள்ளது). சொற்களுக்கு மட்டுமே பொருள் கூறப்பட்டிருக்கிறது. மறை பொருளுடன் அல்ல.தங்களின் வசதிக்காக, ஸ்லோகம் எண்:72ல் இருந்து பார்க்கவும்.

    லலிதா சஹஸ்ரநாமம்: http://www.tamilhindu.com/2010/10/lallita-sahasrama-absolute-as-beauty/

    இந்த வலைத்தளத்தில் லலிதாசஹஸ்ரநாமத்தைப் பற்றியும் அதில் கூறியுள்ள விவரங்களைப் பற்றியும் சற்றுத் தெளிவாக அறியலாம்.ஸ்லோகங்களை அறிய‌
    http://tamilslogam.wordpress.com/2011/04/09/ஸ்ரீ-லலிதா-சஹஸ்ரநாமம்/
    க்குச் செல்லவும்.

    //எல்லோரையும் விட நான் இளையவன் அந்தத் தைரியம் தான்.

    எனக்கு பின்னாடி இரு சகோதிரிகள் மாத்திரம் இருக்கிறார்கள்!? இல்லையா!:)//

    (ஆலாசியம் அண்ணாவே வயசைச் சொல்லிட்டதால) அந்த இரண்டு பேரோடு நானும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.////



    அப்படியானால் நீங்கள் மூன்றாவது தங்கையாகிறீர்கள்.... என்னுடன் பிறந்தவர்கள் நால்வர் முதலாமவருக்கு அறுபத்து இரண்டு வயது...

    தனியாக பிறந்தவனுக்கு மைனர் மட்டுமே சகோதரராக இருக்கிறார்... இப்போது சகோதிரிகள் நிறைய பேர்...

    தங்களின் வலைத் தள அறிமுகத்திற்கு நட்ரிகள் சகோதிரி...



    உண்மையில் நான் செளந்திரிய லஹரியைப் படித்து சிலக் குறிப்புகளை எடுத்த போதே வாசிப்பதாக பின்னூட்டமிட்டேன்...

    தாங்கள் கூறும் வலைத் தளத்தில் தான் முதலில் படித்தேன்...

    மதுரையம்பதி என்றொரு தளத்தில் இன்னும் விரிவாக சொல்லப் பட்டுள்ளது...

    அதிலே கீழ்காணும், 9,19,34,35--41,73,75,80,82,93

    இந்தப் பாடல்களே நாம் பேசிய விஷயங்கள் அடங்கிய பாசுரங்கள் அடங்கியன...

    லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்... வலைப்பதிவை அறிமுகம் செய்ததிற்கு நன்றிகள்.

    நிறையப் பாடல்கள் அபிராமி அந்தாதியின் பாடலின் அம்சத்தையே அப்படியே தாங்கி நிற்கிறது.. இன்னொரு பாட்டைப் பார்த்து அசந்தே போய்விட்டேன்.. அப்படியே ஆண்டாளின் பாசுரத்தில் உள்ள ஒருப் பாடலை அப்படியே காணக் கிடக்கிறது...

    உண்மை யாவருக்கும் எப்போதும் ஒன்று தானே!

    அதே போல் மறைகளின் முடிபு படி...இவர்கள் யாவரும் ஒன்று தானே!

    மிக்க நன்றி சகோதிரியாரே!

    ReplyDelete
  112. அறுபதை தாண்டிய
    அண்ணாச்சி இளைஞராம்...

    நாற்பதை தாண்டிய நம்ம
    நைனா கிழவராம்..

    எண்ணிக்கையில் இல்லை வயது
    எண்ணங்களில் தான் உள்ளது..

    இளமையில் முயலாமையும்
    முதுமையில் இயலாமையும்

    முன்னுற்று முப்பத்தேழுதரும்
    முத்தான பாடமன்றோ..

    இளசுக்கு இரண்டே கை(வலது இடது)
    பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை)

    ReplyDelete
  113. @parvathy ramachandran avl,

    நான் நெடு நாட்களாக "சௌபாக்கிய ரத்னாகர" நூலை தேடிக்கொண்டு இருக்கிறேன். இது கன்னட மொழியில் எழுதப்பட்டது. தேவி லலிதாம்பிகையின் ஆராதனை நூலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் தேவி தனக்கு மிகவும் பிரியமான ஹயக்கீரிவருக்கு உபதேசித்து அருளிய (சஹஸ்ர நாமா, த்ரிசதி தவிர) தந்த்ரோக்தமான ஸ்தோத்ரம் உள்ளது என்று அறிகிறேன்.
    தங்களுக்கு மேல் விவரம் தெரிந்தால் சொல்லவும். நன்றி

    ReplyDelete
  114. ஆம் எழுபத்து இரண்டாம் பாடல் தாம் தவறுதலாக 73 -என்று குறித்து வைத்திருந்தேன்.

    ReplyDelete
  115. ///Uma said... பேயோட வாக்கிங் போறவங்க வகுப்புக்கு வரலாம்//

    அவங்களாவது வாக்கிங் தான் போனாங்க, அவங்களோட கணவரைக்கேட்டா அவர் பங்குக்கு ஏதாவது சொல்வாரு.///

    ஆமாம் உண்மைதான்...தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் அவர்.

    எப்படியோ சிறு வயதில் தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி தீர்க்க தரிசனத்தில் கண்டு கொண்டு புளியமரம் ஏறிப் பழகியதில் ஒரு முறை கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்ட கதை கூட உண்டு.

    ReplyDelete
  116. பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்னு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்காப்பல இருக்கு. எதிர்க்கட்சி தலைவிக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகிற மாதிரி இருக்கு. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.

    சந்தடி சாக்கில இதனால மைனரோட வாக்குப் பெட்டியும் நிறையுது. உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும் அது மைனரின் தேர்தலே. நாட்டின் குடிமகன் என்ற தகுதி தேவையே இல்லை.

    ReplyDelete
  117. ///thanusu said...
    ஞாயிறு வந்தால் மாணவர் மலர்
    திங்கள் வந்தால் உமா மலர்///

    கவிதை திங்களோடவே ஏனோ நின்னு போச்சு.
    வேலை / வேளை என்று அடி எடுத்து கொடுத்தாகி விட்டது.
    இனிமே தனுசு கவிதை எழுதி தூள் கிளப்பிட மாட்டாரா என்ன?
    எனக்கும் வாத்தியார் கவிதை படிக்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  118. ///அய்யர் said...
    இளசுக்கு இரண்டே கை(வலது இடது)
    பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை) ///

    ஹ..ஹ..ஹா.. ஆனால் இளசுக்கும் வழுக்கை (இளநீர் வழுக்கை) இருக்கே

    ReplyDelete
  119. @alasiyam and @parvathi avl,
    ganesha, krishna and lalitha are three stages of progression. first is vishistadvaita, second is dvaita and ultimate is advaita
    Now dont jump on to me...myself born into dvaita following family but personally taken over by mother srilalitha from birth and hence she is my mother.
    on the lighter note, if you add sri with ganesha, krishna, and lalitha, it gives all round prosperity which is essential for inner prosperity also..
    am not an exponent, so what i have written is based on my experience...may or may not be acceptable..

    ஸ்ரீ

    கோவில்களின் வாயில்கள் பெரும்பாலும் மூன்றாவது இருக்கும் அப்படி இருக்க பரமனை அடைய எத்தனை வாயில்கள் இருக்கும்.....
    தங்களின் தன்னடக்கம் உயரிய குணத்தைக் காண்பிக்கிறது.. இருந்தும் இங்கே ஒருசிலரைத் தவிர...யாவரும் தங்களின் அனுபவத்தையும், கற்றதையும் கேட்டதையும் தான் கருத்துப் பகிர்ந்துக் கொள்கிறார்கள் அதனால் தயங்காமல் தாங்களும் உரையாடவும்.... ஒருத்தர் முறைத்தால் இன்னொருவர் ஆறுதல் சொல்வார் நாளைக்கு அவரே முறைத்தால் இவர் ஆறுதல் சொல்வார் வகுப்பறை என்பதால் இதெல்லாம் சகஜம் தானே... சும்மா எழுதுங்க ஸ்ரீகணேஷ்.... உங்களின் ஆக்கமும் வர வேண்டும் என்றேக் காத்திருக்கிறோம்...
    தங்களின் மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  120. /// அய்யர் said...
    அறுபதை தாண்டிய
    அண்ணாச்சி இளைஞராம்...

    நாற்பதை தாண்டிய நம்ம
    நைனா கிழவராம்..

    எண்ணிக்கையில் இல்லை வயது
    எண்ணங்களில் தான் உள்ளது..

    இளமையில் முயலாமையும்
    முதுமையில் இயலாமையும்

    முன்னுற்று முப்பத்தேழுதரும்
    முத்தான பாடமன்றோ..

    இளசுக்கு இரண்டே கை(வலது இடது)
    பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை)////

    சத்தும் சித்தும் இருந்தால் ஆனந்தமும் இருக்கணுமே

    சுழல விடாமல் விட்டு விட்டீர்களே...:):)

    வலதும் இடத்தும் இருக்கிறது கரங்களாக

    மூன்றாவது கை தான் நம்பிக்கையாகவே இருக்கிறது...

    அது நான்கு மறைத் தீர்ப்பு அல்லவா!

    எந்த கோர்ட்டுக் போனாலும் மாற்றமுடியாது இல்லையா!

    ReplyDelete
  121. /// தேமொழி said...
    பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்னு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்காப்பல இருக்கு. எதிர்க்கட்சி தலைவிக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகிற மாதிரி இருக்கு. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.

    சந்தடி சாக்கில இதனால மைனரோட வாக்குப் பெட்டியும் நிறையுது. உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும் அது மைனரின் தேர்தலே. நாட்டின் குடிமகன் என்ற தகுதி தேவையே இல்லை.////



    எங்க அம்மா குறை சொல்ற மாதிரி சொல்வாங்க

    அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?...

    "சொன்னாப் புரியாது சொல்லச் சொல்ல விளங்காது
    அவங்க எங்கமேல வச்சப் பிள்ளைப் பாசம்"

    எங்கள் ஓட்டு உமாவிற்கே!

    ReplyDelete
  122. //////தேமொழி said...
    ///அய்யர் said...
    இளசுக்கு இரண்டே கை(வலது இடது)
    பெரிசுக்கு நாலு கை (வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை) ///

    ஹ..ஹ..ஹா.. ஆனால் இளசுக்கும் வழுக்கை (இளநீர் வழுக்கை) இருக்கே////

    அட்ரா சக்கை...:):)

    ReplyDelete
  123. இப்போது குற்றம் கண்டுபிடிக்கும் வேலை / வேளை (தனுசு, கீப் கொயட்!):
    இதுதான் எனக்கு புரிய வில்லை //

    ம்ம் நீங்கதான் போன தடவையே குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் அப்படின்னு சொன்னதால இந்த தடவை முன்னெச்செரிக்கையாக கீப் கொயட்டுன்னு சொன்னேன். ரொம்ப பயந்துட்டீங்க போல!!!!!

    ReplyDelete
  124. ///////எந்த தேர்தல் பத்தின்னும் நீங்களே சொல்லிட்டா நல்லது..//

    இதப்பார்றா! சங்கரன்கோயில் தேர்தல்ல பிசியா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு கேள்வியப்பாரு!

    அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?//

    (ஆஹா, யானைக்கும் அடி சறுக்கிடுச்சே!) பீ கேர்புல் (என்னைத்தான்)

    ReplyDelete
  125. இந்த முறை மைனர் அவர்கள் உமாஜியை சிக்க வைத்துவிட்டார்...தொண்டர்களை(?!!!) காத்து ஆதரித்த "தலைவருக்கு" நன்றி...எங்கள் ஓட்டு உங்களுக்கே!!!...ஹிஹிஹி//

    தவறு ‍- பயனத்தில்
    சரி - பயணத்தில்//

    'ஹிட் லிஸ்ட்'இல் உங்க ரெண்டு பேரையும் சேர்த்தாச்சு!!!!

    தவறு - ‍ பொல்லாது
    சரி - பொல்லாதது//

    இதை நான் ஏற்கமாட்டேன், 'ஆண்பாவம் பொல்லாது பொல்லாது' அப்படின்னு ஒரு பாட்டே இருக்கு, அப்படியிருக்க தவறு கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக கண்டுபிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  126. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.//

    நம்ம ரேஞ்ச் என்னன்னு சரியா புரிந்து வைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  127. எங்கள் ஓட்டு உமாவிற்கே!//

    நல்லா ஜப்பான் வரைக்கும் கேட்கிற மாதிரி சத்தமா சொல்லுங்க!

    ReplyDelete
  128. //தேமொழி said...

    பாவம் உமா ...எப்ப மாட்டுவாங்கன்னு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்காப்பல இருக்கு. எதிர்க்கட்சி தலைவிக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகிற மாதிரி இருக்கு. ஆனாலும் மிசா, தடா இப்படின்னு எவ்வளவோ இருக்கு உமாகிட்ட.//

    தமிழகத்தை விட்டு ஹிந்தி பேசும் மாநிலங்களில் வாழும் போது தமிழை மறக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய சாதனை, அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.

    ReplyDelete
  129. //' sriganeshh said...
    @parvathy ramachandran avl,

    நான் நெடு நாட்களாக "சௌபாக்கிய ரத்னாகர" நூலை தேடிக்கொண்டு இருக்கிறேன். இது கன்னட மொழியில் எழுதப்பட்டது. தேவி லலிதாம்பிகையின் ஆராதனை நூலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் தேவி தனக்கு மிகவும் பிரியமான ஹயக்கீரிவருக்கு உபதேசித்து அருளிய (சஹஸ்ர நாமா, த்ரிசதி தவிர) தந்த்ரோக்தமான ஸ்தோத்ரம் உள்ளது என்று அறிகிறேன்.
    தங்களுக்கு மேல் விவரம் தெரிந்தால் சொல்லவும். நன்றி//
    ஸ்ரீ

    இந்த நூலைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பாஸ்கர ராயரின்'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூல், லலிதாசஹஸ்ரநாமத்தின்
    மிகச் சிறந்த விளக்கவுரை என்பதை அறிவேன். இருப்பினும், கன்னடம் தெரிந்தவர்களிடம் இது பற்றி விசாரித்து, தங்களுக்குச் சொல்கிறேன். ' வகுப்பறை'யின் பின்னூட்டப் பகுதி, தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்த விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளவும் உதவும் ஒரு கருவி. தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தாங்கள் எங்களுக்குப் பெரிய உதவி செய்ய முடியும். விவாதங்கள் ஆரோக்கியமானவையே. அவற்றை சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள என்று
    கொண்டால் எந்த மனவருத்தமும் வராது.எதிர்க் கருத்துக்கள் இன்னும் இன்னும் ஆராய்ந்து தெளிவு படுத்திக் கொள்ளவே உதவும். உங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  130. அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//

    ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்.

    ReplyDelete
  131. @uma didi,

    why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)

    @aalisiyam and parvathy ramachandran avl,
    am very young in lalitha upasana...as it just happened...nothing more.
    I have problem in writing things in tamil because of various reasons.
    1. not so well versed in tamil as my mother tongue is marathi
    2. studied tamil only in school upto tenth afterwards totally english
    3. further it is been 17 years since i left tamilnadu and only fluent in English and little bit in Hindi..
    whatever i know is through my own yahoo group on srilalitha wherein many have contributed.the link is http://groups.yahoo.com/group/srilalitha
    on other matters, definitely will write whenever occasion demands.
    Thanks to both for your feedbacks.

    ReplyDelete
  132. //////// Uma said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!//
    நல்லா ஜப்பான் வரைக்கும் கேட்கிற மாதிரி சத்தமா சொல்லுங்க!////////
    பனங்காட்டு நரிகள் நாங்கள்..சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்..

    'தமில்'விரும்பியின் தடாலடி வேலைகள் கட்சி மேலிடத்துக்கு ஏற்கனவே கவனத்திற்கு வந்ததுதான்.
    எதிர்க்கட்சித் தலைமைக்கு இவ்வளவு நேரம் கழித்துத் தெரியவந்திருப்பதுதான் ஆச்சரியம்..

    ReplyDelete
  133. ////////// தேமொழி said...
    நாட்டின் குடிமகன் என்ற தகுதி தேவையே இல்லை./////////

    குடிக்கின்ற உரிமையை பிறப்புரிமையாக்கி

    அதனையும் உலகமெங்கிலும் செல்லுபடியாக்கி

    குடிமகன்களை கவுரவித்து
    அறிவித்த

    தேமொழிஅம்மையார் அவர்களை வாழ்த்துகிறோம்...

    ReplyDelete
  134. / Uma said..
    அப்பிரிக்காவுக்கு??? அது எங்க இருக்கு?//
    (ஆஹா, யானைக்கும் அடி சறுக்கிடுச்சே!) பீ கேர்புல் (என்னைத்தான்)

    ஏற்கனவே உங்க படம் சின்னதா இருக்குன்னு யாரோ கம்ப்ளைன்ட் பண்ணினதா ஞாபகம்..
    அதுனாலே நீங்க சறுக்காமல் ஸ்டெடியா நின்று தும்பிக்கையைத் தூக்கி ஆசீர்வதிக்குறமாதிரி
    உங்களின் ஒரு படத்தை அப்லோட் பண்ணி வைக்கக் கோருகிறோம்..

    ReplyDelete
  135. தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    //////அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?.../////
    ஏன் மரியாதையில்லாம 'போடா வாடா'ன்னு பேசுறீங்க?
    போடா -தவறு
    போட-சரி

    இடத்தும்-தவறு
    இடதும்-சரி

    ////// இப்போது சகோதிரிகள் நிறைய பேர்...

    தங்களின் வலைத் தள அறிமுகத்திற்கு நட்ரிகள் சகோதிரி... /////
    ஏன் இந்த திரி திரிக்குரீங்கோ?
    சகோதிரிகள்-தவறு
    சகோதரி -சரி

    நட்ரிகள் -தவறு
    நன்றிகள் -சரி

    கணனியில்-தவறு
    கணினியில் -சரி

    குண்டளியிநியைப்-தவறு
    குண்டலினி -சரி

    இடனகள்-தவறு
    இடங்கள்- சரி

    அரவத்திர்கான-தவறு
    அரவத்திற்கான-சரி

    //மேற்கூரியக்// ரொம்பக் கூர்மையா இருக்கே..
    மேற்கூரியக்-தவறு
    மேற்கூறியக்-சரி

    யப்பப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..

    ஓட்டை மாத்திப் போடாம இருந்திருக்கலாம்..

    தவறு கண்டு திருத்துகிறவருக்குத்தான் உங்கள் ஒட்டு என்று தீர்மானத்தை அறிவித்திருப்பதால் அந்த ஓட்டைக் கவரும் ஒரு சின்ன முயற்சி ..
    அவ்வளவுதான்..

    நன்றி..'தமில்'விரும்பி..

    ReplyDelete
  136. ////sriganeshh said...
    @uma didi,

    why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)

    @aalisiyam and parvathy ramachandran avl,
    am very young in lalitha upasana...as it just happened...nothing more.
    I have problem in writing things in tamil because of various reasons.
    1. not so well versed in tamil as my mother tongue is marathi
    2. studied tamil only in school upto tenth afterwards totally english
    3. further it is been 17 years since i left tamilnadu and only fluent in English and little bit in Hindi..
    whatever i know is through my own yahoo group on srilalitha wherein many have contributed.the link is http://groups.yahoo.com/group/srilalitha
    on other matters, definitely will write whenever occasion demands.
    Thanks to both for your feedbacks.////

    ஸ்ரீகணேஷ்,

    தங்களின் சிரமம் அறியப் பெற்றேன் (தெரிந்துக் கொண்டேன்)
    இதை ஒரு வாய்ப்பாக எண்ணி மெதுவாக சிறுக, சிறுக, ஆங்கிலம் கலந்து மீண்டும் தமிழில் எழுதிப் பழகுங்கள்.
    'சித்திரமும் கை பழக்கம்
    செந்தமிழும் நா பழக்கம்' என்பார்கள்... அதைப் போலவே மெதுவாக எழுதிப் பழகுங்கள்...
    சிரமமான நேரங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள்.

    பத்தாம் வகுப்பு வரை படித்து இருப்பதால் உங்களால் நிச்சயம் முடியும்.
    அதோடு எழுத்து வரிப் பிழை பற்றிய கவலை வேண்டாம்...
    வேறு மொழி கற்பிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    என்னைப் போன்றவர்களுக்கு இந்தியும், சீனமும், ஜப்பான் மொழியும் ஒன்று தான்.

    தமிழறிவு வளர வகுப்பறை தளமைத்துக் கொடுக்கும்...
    உங்களின் தமிழ் கவிதையை நாங்கள் வாசிக்க வேண்டும்..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  137. ////minorwall said...
    தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    //////அதுக்காக அவங்களுக்கு எதிரா ஓட்டுப் போடா முடியுமா?.../////
    ஏன் மரியாதையில்லாம 'போடா வாடா'ன்னு பேசுறீங்க?
    போடா -தவறு
    போட-சரி

    இடத்தும்-தவறு
    இடதும்-சரி

    ////// இப்போது சகோதிரிகள் நிறைய பேர்...

    தங்களின் வலைத் தள அறிமுகத்திற்கு நட்ரிகள் சகோதிரி... /////
    ஏன் இந்த திரி திரிக்குரீங்கோ?
    சகோதிரிகள்-தவறு
    சகோதரி -சரி

    நட்ரிகள் -தவறு
    நன்றிகள் -சரி

    கணனியில்-தவறு
    கணினியில் -சரி

    குண்டளியிநியைப்-தவறு
    குண்டலினி -சரி

    இடனகள்-தவறு
    இடங்கள்- சரி

    அரவத்திர்கான-தவறு
    அரவத்திற்கான-சரி

    //மேற்கூரியக்// ரொம்பக் கூர்மையா இருக்கே..
    மேற்கூரியக்-தவறு
    மேற்கூறியக்-சரி

    யப்பப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே..

    ஓட்டை மாத்திப் போடாம இருந்திருக்கலாம்..

    தவறு கண்டு திருத்துகிறவருக்குத்தான் உங்கள் ஒட்டு என்று தீர்மானத்தை அறிவித்திருப்பதால் அந்த ஓட்டைக் கவரும் ஒரு சின்ன முயற்சி ..
    அவ்வளவுதான்..

    நன்றி..'தமில்'விரும்பி..///

    இரவென்றும் பகலென்றும் பாராது
    இன்னுயிரே பெரிதென்றும் கருதாது
    சுருக்கிய இமையை விரிக்காது
    சுடராய் எரிந்தேன் சுனையாய் நிறைந்தேன்
    கனலாய் உழைத்தேன் களங்கப் படுத்தப் பட்டே
    அனுப்பும் முன்னமே வெளியேறத் துணிந்தேன்.

    ஐயகோ!
    நான் என்ன செய்வேன் என் நாவும் நடுங்குகிறதே
    நல்ல தமிழ் நலிந்ததே.... பிழையாய்ப் போன
    கழகத் தலைவர்கள் பிழைகூற விதியும் சதி செய்ததே!
    அன்னைத்தமிழே என்னை இனியும் வஞ்சிப்பாயோ?

    ReplyDelete
  138. //Uma said...
    அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//

    ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்//

    "இந்திய அர‌சியல்" என்ற‌ வார்த்தை என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை;அப்ப‌டி இருக்கும் நான் ஓட்டு போட்டால் என் 'கொள்கை' என்ன‌வாவ‌து..."ஹிட்லிஸ்ட்" என்று 'தமிழ் ஆசிரியை' பயம் காட்டியதில் இருந்து இரண்டு முறை படித்து விட்டு தான் பின்னூட்டம் எழுதுகின்றேன்...ஹிஹிஹி...

    ReplyDelete
  139. //Uma said...
    அப்பேர்ப்பட்ட சாதனையாளர் உமா அவர்கள்.//

    ஆஹா, இதைப்படிப்பதற்குள் அவசரப்பட்டு உங்களையும் 'ஹிட் லிஸ்ட்'இல் சேர்த்துவிட்டேனே, சரி ஷோபனா மட்டும் இருக்கட்டும் அந்த லிஸ்டில்//

    ஆஹா..."த‌மிழ் ஆசிரியை",'ஹிட்லிஸ்ட்' என்றெல்லாம் ப‌ய‌ம் காட்டிய‌தில் இருந்து இர‌ண்டு முறை ப‌டித்து விட்டுத் தான் பின்னூட்ட‌ம் எழுதுகின்றேன்...என் மீது ம‌ட்டும் ஏன் இந்த‌ 'கொலைவெறி' சகோத‌ரி?...ச‌ரி என்(நம்) ஓட்டு வாத்தியார் ஐயாவுக்கே,ச‌ரிதானே!!!...வெள்ளை கொடி காட்டிவிட்டேன், இல‌ங்கை 'ராஜ‌ப‌க்சே' போல‌ 'ஹிட்லிஸ்ட்'இல் வைத்து சுட்டுவிடாதீர்க‌ள்...ஹிஹிஹி...

    ReplyDelete
  140. why this 'hit' veri ..? take my comments in sportive spirit my dear didi...as i am one of your fan..(hope you dont mistake me for calling you as didi...)//

    தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. sportive ஆகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  141. பனங்காட்டு நரிகள் நாங்கள்..சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்..//

    ஐ ஸீ!

    குடிக்கின்ற உரிமையை பிறப்புரிமையாக்கி //

    !!!!!!!!!!!!!!!!!

    அதுனாலே நீங்க சறுக்காமல் ஸ்டெடியா நின்று தும்பிக்கையைத் தூக்கி ஆசீர்வதிக்குறமாதிரி
    உங்களின் ஒரு படத்தை அப்லோட் பண்ணி வைக்கக் கோருகிறோம்..//

    நான் என்ன ஆசிரமமா திறக்கப்போறேன்? (கூடிய விரைவில் (???!!!) அப்லோட் செய்யப்படும்)

    ?...ச‌ரி என்(நம்) ஓட்டு வாத்தியார் ஐயாவுக்கே,ச‌ரிதானே!!!...வெள்ளை கொடி காட்டிவிட்டேன், //

    அது!!!!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com