மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.3.12

Astorology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்



Astrology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்

அலசல் பாடம்
1.3.2012

சுவாமி விவேகானந்தா அவர்கள் spiritual gaint of India என்ற பெரும் புகழைப் பெற்றவர்  இந்தியாவில் எத்தனையோ மகான்கள் தோன்றி/அவதரித்து, வாழ்ந்து, இறையடி சேர்ந்துள்ளார்கள். யாருக்கும் அந்தப் புகழ் கிடைக்கவில்லை. உலக மக்களால் நன்கு அறியப்பெற்றவர் ஒருவர் உண்டு என்றால், அது விவேகானந்தர் மட்டுமே!

1893 ஆம் ஆண்டு மதங்களுக்காக நடைபெற்ற மாபெரும் உலக மாநாட்டில் கலந்துகொண்டு, இந்து மதத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் அவர்.

அவரைப் பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவல்ல!

இன்று அந்த மகானின் ஜாதகத்தை அலசுவோம்!

விவேகானந்தரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் விக்கி காமாட்சி அக்காவிடம் உள்ளது. கேட்டு வாங்கிப் படியுங்கள். அதற்கான தொடர்பு சுட்டி
http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
-----------------------------------
பிறப்பு விவரம்
12.1.1863ல் காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்
தனுசு லக்கினம்
ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசிக்காரர்
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 4 வருடம் 5 மாதங்கள் 1 நாள்

இயற்பெயர்: நரேந்திரநாத த்த்தா
ராமகிருஷ்ண மடங்களின் நிறுவனர்
ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் , ஜனன யோகம் என்று பல தலைப்புக்களில் அரிய நூல்களை எழுதியுள்ளார்.
1902ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் தேதி - தனது 39ஆம் வயதில் அவர் முக்தியடைந்தார்
-----------------------------------------------------------------------


தனுசு லக்கினம் + லக்கினத்தில் சூரியன்
2ல் புதன் + சுக்கிரன்
5ல் செவ்வாய்
6ல் கேது
10ல் சனி & சந்திரன்
11ல் குரு
12ல் ராகு

ல்க்கினாதிபதி குரு 11ல்
பாக்கியஸ்தான அதிபதி சூரியன் 1ல் (திரிகோணத்தில்)
பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் தன் ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டில் கொடிபிடித்துக்கொண்டு உள்ளார்


1
லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் (11ல் அமர்ந்தால்) செய்யும் முயற்சிகளுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.If lagna lord is placed in the eleventh, the native will get maximum benefits for all his efforts பதினொன்றில் அமர்ந்த லக்கினாதிபதியால், தான் பிறந்த நோக்கத்தை அவர் சர்வ சாதாரணமாக நிறைவேற்றி விட்டுப்போனார் fulfillment of his mission towards his birth. 

2
பாக்கிய ஸ்தான (9ஆம் வீட்டு அதிபதி) லக்கினத்தில் அமர்ந்தால் எல்லா பாக்கியங்களும், பெருமைகளும், புகழும் ஜாதகனைத் தேடி வரும். If the lord of gains is in the lagna, the native will get all the gains in his life

3
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகன் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவான். சாதனைகள் செய்வான்.செயல்களை முடிக்கும் உத்வேகம் (killing instinct) இருக்கும்

4
லக்கினத்தில் சூரியன் அமர்ந்ததால், நல்ல உடற்கட்டையும், தோற்றத்தையும், உடல் வலிமையையும் கொடுத்தான். சூரியன் அரசகிரகம், லக்கினத்தில் அமர்ந்த அவன் சுவாமிஜிக்கு மதிப்பு, மரியாதை, புகழ் என்று அனைத்தையும் வழங்கினான். Sun in lagna blessed him with good physical vitality, will-power, honour & dignity.

5.
கரமகாரகன் சனி பத்தில் அமர்ந்தால், ஜாதகனை ஒரு நாளாவது சிறையில் இருக்கும்படி செய்துவிடுவான் என்பார்கள். சாதாரண பிறவிகளுக்கு வேண்டு மென்றால் அது மெய்ப்படலாம். ஆனால் 10 ஆம் இடத்து சனி, ஜாதகனை அவன் நுழையும் துறையில் உச்சத்திற்குக் கொண்டுபோய் விடுவார். விவேகானந்தர் வாழ்க்கையில் அதைச் செயல் படுத்திக்காட்டினான் சனீஷ்வரன். ஆன்மீகத்தில் நுழைந்து உலகப் புகழ்பெறும்படி செய்ததில் சனீஷ்வரனுக்கும் பங்கு உண்டு!

6.
சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு& கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். சுவாமிஜிக்கு சூரியனுக்கு இரண்டில், சுக்கிரனும், புதனும் உள்ளார்கள். அந்த யோகத்தினால் அவர் அனைவரையும் நேசிக்கும் மனதைப் பெற்றார். உண்மைக்கு மட்டும் துணை போனார். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார்.

7.
அதுபோல சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு & கேதுவைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.சுவாமிஜியின் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் குரு பகவான் உள்ளார். அதன் காரணமாக அதீத புத்திசாலித்தனம், புகழ், செல்வம் எல்லாம் அவருக்குக் கிடைத்தது அல்லது அமைந்தது. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

8.
குருவும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழில் அமர்ந்து இருந்தாலும் அதற்குப் பெயர் - அந்த மைப்பிற்குப் பெயர் குரு மங்கள யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய். அவருக்கு ஏழில் துலாமில் குரு பகவான். அந்த அமைப்பு ஜாதகருக்கு தர்ம சிந்தனை, அற்ச் செயல்கள், எதையும் முனைப்போடு செய்யும் ஆற்றல் ஆகியவற்றைக் கொடுத்தன

9.
தவ யோகம் அல்லது தவ வாழ்க்கை: சுக்கிரன், கேது, சனி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் இருக்கும் அமைப்பிற்குப் பெயர் தவ யோகம். சுவாமிஜியின் ஜாதகத்தில் அநத அமைப்பு உள்ளது. அதானல் சுவாமிஜியின் வாழ்க்கை சுய நலமில்லாத தியாக வாழ்க்கையாக அமைந்த்து. மக்களின் மேன்மைக்காக - அவர்களை நல் வ்ழியில் செலுத்துவதற்காக பாடுபட்டார். இறைப் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்டார்.

10.
பத்தாம் வீட்டிற்குரிய புதன் இரண்டில் வந்து அமர்ந்தது. இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம். வந்தமர்ந்த புதன் அவருக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுத்தான். எவரையும் கிறங்க அடிக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்த்து.

11.
பன்னிரெண்டில் அமர்ந்த ராகுவால் அவர் தேசம் முழுவதும் பயணித்தார். பல உலக நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பை ராகு வழங்கினான்.

12.
இரண்டாம் வீட்டுக்காரன் சனி பத்தில் அமர்ந்தான். அது இரண்டிற்கு ஒன்பதாம் வீடு. அவருடைய வாழ்க்கை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் படியாக அமைந்த்து. இறைப்பணியுடன், மனித நேய சேவையையும் அவர் செய்தார்.

13.
சாது யோகம் என்ற சந்நியாச யோகம். மாந்திக்கு மூன்றிலும் ஆறிலும் சுபக்கிரக்ங்கள் இருக்கும் அமைப்பு. இங்கே மாந்திக்கு மூன்றில் குருவும், ஆறில் சுக்கிரனும் இருப்பதைப் பாருங்கள். ஜாதகன் துறவறம் பூணும் அமைப்பு. சுவாமிஜியும் முழுத் துறவியாக வாழ்ந்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.

14.
ராஜ யோகம். கேந்திர அல்லது கோண அதிபதிகள் இருவர், சேர்க்கை, அல்லது பரிவர்த்தனை அல்லது பார்வையால் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் அப்படி உள்ளனர். குரு ஒன்று மற்றும் நான்காம் வீடுகளுக்கு அதிபதி. செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில். ராஜ யோகத்தைக் கொடுத்தார்கள்

ராஜ யோகம் என்றால் பென்ஸ் காரில் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவதா? இல்லை! எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது. சாதனைகளைச் செய்வது. அதுதான் ராஜ யோகம்

15. ராஜ சம்பந்த யோகம். ஆத்ம் காரகன் சூரியனும், மனகாரகன் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருக்கும் அமைப்பு. சுவாமிஜியின் ஜாதகத்தில் சூரியனுக்குப் பத்தில் சந்திரன். சந்திரனுக்கு நான்கில் சூரியன். பலன்: பல அரசர்களின் நட்புக் கிடைக்கும் அமைப்பு. சுவாமிஜிக்கு பரோடா மன்னர், ராமநாதபுரம் ராஜா போன்றவர்களின் நட்பு தேடி வந்த்து.

சுவாமிஜி முக்தி அடைந்தார் என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டேன். அவதார புருஷர்களுக்கெல்லாம் மரணம் கிடையாது. ஆகவே அவருடைய ஆயுள் ஸ்தானத்தைப் பற்றி நான் எழுதவில்லை.ஆனால் உங்களுடைய குறுகுறுப்பைப் போக்குவத்ற்காக அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தியை இப்ப்திவின் கடைசியில் கொடுத்துள்ளேன்
-----------------------------------------
சுவாமி ஜாதகத்தைப் பற்றி அஷ்டகவர்க்கம் என்ன சொல்கிறது.
(நமக்குப் பிடித்த, நாம் புகுந்து விளையாடக்கூடிய பகுதி)
அதையும் பார்ப்போம்!



கிரகங்களின் சுயவர்க்கம்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சனி - 5 பரல்கள்

சூரியன் 5 பரல்களுடன் உள்ளார். சந்திரனும் 5 பரல்களுடன் உள்ளார். இந்த அரச கிரகங்கள் இரண்டுமே வலுவாக உள்ளன. சுவாமிஜிக்கு நல்ல தாய் தந்தையர் கிடைத்தனர். செல்வந்த்ர் வீட்டில் பிறந்தார். அன்பான் தாய். சிறுவயது வாழ்க்கை அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது. நல்ல உடற்கட்டையும், தெளிவான மனதையும் அந்த இரண்டு கிரகங்களும் வழங்கின. Sun is the authority for body and Moon is the authority for Mind

அது போல அதி முக்கிய கிரகங்களான குரு 7 பரல்களுடனும், சனி 5 பரல்கள் உள்ளார்கள். புதன், சுக்கிரன், இருவரும் 4 பரல்களுடன் சராசரியாக் உள்ளார்கள். செவ்வாயைத் தவிர மற்ற அத்த்னை கிரகங்களும் நல்ல நிலைமையில் உள்ளன.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளின் மொத்த பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 1,5,9,4,7,10 = 24+21+21+27+27+31 = 151
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 2 = 169
18 பரல்கள் குறைவாக உள்ளன
--------------------------------
மறைவிடங்களில் (தீய விடுகள்) உள்ள பரல்கள்:
இருக்கும் பரல்கள்: 3,6,8,12 = 30+35+32+31 = 128
இருக்க வேண்டிய பரல்கள் = 337 வகுத்தல் 3 = 112
16 பரல்கள் அதிகமாக உள்ளன

தீய வீடுகளில் பரல்கள் அதிகமாக இருந்தால், சாதாரணப் பிறவியாக இருந்தால், சரக்கடித்துவிட்டு டாஸ்மாக் கடை வாசலில் விழுந்து கிடப்பான்.
உயர் பிறவிகள் ஞானிகளாகி விடுவார்கள். துறவிகளாகி விடுவார்கள். சுவாமிஜி துறவியானார்.
-----------------------------------
சராசரி எண்ணான 28 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகள்:
3ல் - 30 பரல்கள்
6ல் - 35 பரல்கள்
8ல் - 32 பரல்கள்
12ல் - 31 பரல்கள்

10ல் - 31 பரல்கள்
11ல் - 33 பரல்கள்

குடும்ப வாழ்க்கைக்கு உரிய 2, 5, 9 ஆம் வீடுகளில் 25, 21, 21 (மூன்றுமே பரல்கள் குறைவாக உள்ளன) மனைவி எப்படியிருந்தாலும் பரவாயில்லை. வ்ருகிறவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் குடும்ப வாழ்க்கை. அதனால் 7ஆம் வீட்டை இக்கண்க்கில் சேர்க்கவில்லை.

அவரை மகான் ஆக்க வேண்டிய, துறவியாக்க வேண்டிய கட்டாயம் காலதேவனுக்கு இருந்ததால், ஜாதகமும் அவ்வாறே ஆமைந்தது. லெளகீக வாழ்க்கைக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடிபட்டுப்போய் விட்டன, ஞான வாழ்க்கைக்கு, யோக வாழ்க்கைக்கு, சந்நியாச வாழ்க்கைக்கு உரிய அம்சங்களே ஜாதகத்தில் மேலோங்கி இருக்கிறது / இருந்திருக்கின்றது.

அவரும் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டுப் போயிருக்கின்றார்.

தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.
----------------------------------------------------
குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்

நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி முக்தி கிடைக்கும்?

சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

கற்றுக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்

Death of Swamiji


His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac.
(பஞ்சாங்கம்) Three days before his death he pointed out the spot for this cremation—the one at which a temple in his memory stands today. He had remarked to several persons that he would not live to be forty.


On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda, a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math.


Vivekananda died at ten minutes past nine p.m. on 4 July 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi. Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes.The doctors remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra — the aperture in the crown of the head — must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had fulfilled his own prophecy of not living to be forty years old.
---------------------------------------------

வாழ்க வளமுடன்!

52 comments:

  1. முன்பே ஒரு முறை கூறியிருந்தாலும் இப்போது மேலும் விரிவு படுத்தியுள்ளீர்கள். நன்றாக உள்ளது.

    வேசி யோகம்: தந்தை மறைந்த பின்னர் நரேந்திரர் வேலை தேடி அலைந்தார். அப்போது அவருக்கு ஒரு செல்வ சீமாட்டியிடமிருந்து 'அப்படி'ப்பட்ட சேவைக்கான அழைப்புக் கிடைத்தது. அவளைத் 'தாயே' என்று அழைத்து வணங்கிவிட்டு வந்தாராம். அப்போது அவருடைய வயது 20.

    ஓயாத பயணத்தாலும், அடிக்கடி மாறிய உணவு முறைகளாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.லக்னாதிபதி குரு சர ராசியில். எனவே சதாசஞ்சார யோகம்.

    ReplyDelete
  2. பிரபஞ்சத்தையே ஒரேப் பார்வையில் பார்த்த பிதாமகன்...
    வெள்ளையர்களின் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட ஆன்மீக குரு....

    மனித இனத்தின் விடியலுக்கும், ஆத்ம சுதந்திரம் ஒவ்வொருவரின்
    பிறப்புரிமை அதை இன்றேத் தொடங்குவாய், விழித்தெழுவாய் என்றும்
    அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து சரியானப் பாதையையும் காட்டி
    அவரும் அந்தப் பாதையிலே சென்று சுதந்திரம் பெற்று சுடரோடு இணைந்தவர்...

    எல்லோரும் அமரநிலை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று
    எண்ணில்லாப் பயணம் கொண்டே எல்லோரையும் எழுப்பிய வீரத் துறவி...
    இந்தியத் தாயின் தவப் புதல்வன் நமக்கு மிகவும் அணுக்கமான உறவுக் காரன்
    அப்படிப் பட்ட விவேகானந்தரின் அவதார அமைப்பை அழகாக விளக்கிய
    அற்புதப் பதிவு...

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. உதயத்தில் ஆதவனே அழகு
    உத்திதவரில் விவேகானந்தரே அழகு .

    ReplyDelete
  4. விளக்கங்கள் மிகவும் அழகு மற்றும் தெளிவாக இருந்தது. சிறு பிராயத்திலேயே ஞானம் அடைய மகா புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். இங்கே ஞானம் பாவம் பற்றியெல்லாம் பேசினால் 'சாமியார் மாதிரி மொக்க போடாத மச்சி' என்று ஏச்சு தான் கிடைக்கிறது. தடம் புரள இருந்த தருணத்தில் பாலகுமாரன் புத்தகங்கள் காப்பாற்றின. தற்போது உங்களைப் போன்றவர்கள் உள்ளனர்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம் .முன்பே படித்திருந்தாலும் மீண்டும் அலசும் போது புதிதாகவே தெரிகிறது, பல கேள்விகள் முளைக்கிறது . விரிவாக தந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

    இந்த அவதார புருஷன் விவேகானந்தரின் பெயரை போடாமல் நேரத்தையும் தேதியையும் வைத்து ஜாதகம் கணித்து பலன் சொன்னால் .பலன்கள் முரண் பட வாய்ப்பு இருக்குமா அய்யா (நான் கத்துக்குட்டி ) .

    ReplyDelete
  6. ayya vannkam enrya lessan nanrga ullathu jathka alasalil ungali yarum minga mutiyathu.

    ReplyDelete
  7. நங்கனல்ல்லூர் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர அர்ச்சகரின்தட்டில் பத்துரூபாய் போட தர்மசிந்தனை இருக்காது. நான்காயிரம் கொடுத்து சரக்கு வாங்கி அடிப்பார்கள் கோயில் உண்டியலில் நூறுரூபாய் போடமாட்டார்கள் .குடும்பத்தோடு சரவனபவனுக்கு சென்று ஒரு வேளைக்கு ஆயிரம்
    செலவு செய்வார்கள்.ஆணால் ஒருஏழைக்கு பசியை தீர்க்க ஐம்பது ரூபாய் தரமாட்டார்கள். மனம் இருக்காது.

    நெத்தி அடியாக எழுதினீர்கள் அய்யா. ஆசானிடம் பிடித்த பலவைகளிள் ,இந்த நெத்தி அடி கருத்துகளும் அவைகளை தாங்கி வரும் இந்த எழுத்துகளுக்கும் தனி இடமுண்டு.
    தாங்களின் இந்த எழுத்தாற்றல் தான் பலரையும் இங்கே கட்டிப்போட்டிருக்கிறது.

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு.
    நிறைய யோகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. திரு.கே.எம்.ஆர் அவர்களின் பதிவு மூலம் மேலும் இரு யோகங்களைப் பற்றி அறிய முடிந்தது. தகவலுக்கு நன்றி.சிலர் பிறருக்காகவே பிறந்து வாழ்கிறார்கள்.
    அப்படிப்பட்ட ஒரு மகானின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும், நர,நாராயண அம்சம் என்று ஒரு கருத்து உண்டு. பூர்வ ஜென்மத்தில், ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனுமே,மக்களை வாழ்விக்க தங்கள் அம்சங்களை இக்கலியுகத்தில்,ஸ்ரீஇராமகிருஷ்ணராகவும் ஸ்ரீவிவேகனந்தராகவும் பிறப்பித்தார்கள்.
    இந்து தர்மத்தை,உலகெங்கும் முழங்கியதில் இருந்து,ஆன்மிகத்தில் இளைஞர்களையும் ஈடுபடுத்தியது வரை, ஸ்வாமிஜியின் சாதனைகளைச் சொல்ல வார்த்தைகளில்லை. அவரது,சிகாகோ மாநாட்டு உரை,வீழ்ந்து கிடப்போரையும் வீறு கொண்டு எழச் செய்யும்.
    தன்னைத் தான் தாழ்த்திக் கொள்வது பெரிய பாவம், 'அஹம் ப்ரம்மாஸ்மி'என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதை அவர் ஒவ்வொரு உரையிலும் குறிப்பிடத்தவற வில்லை. ஆனால்,மிகப்பெரிய மகான்களில் பலர் குறைந்த காலமே வாழ்ந்ததன் அர்த்தம் புரியவில்லை. ஸ்ரீஆதிசங்கரரில் இருந்து, பல மகான்களின் வாழ்க்கை ஏன் இவ்வாறே அமைந்தது?

    ReplyDelete
  9. வேலைக்கு டும்மாதான் .சும்மா கடலைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் கப்பலின் winch (காரில் உள்ள கிளர்ச் போன்றது ) நன்கூரத்தை கடலின் தரையில் பதிய வைப்பது. ராட்சச சைஸ் , சரிவர ஒத்துழைப்பு இல்லை .மைனரின் ஊரிலிருந்துதான் மூவர் வந்து சரி செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.சரிசெய்த பின் தான் பனிதுவங்கும் .

    ReplyDelete
  10. Sir,Present.Excellent article about Vivekanandar
    By Umapathy.k

    ReplyDelete
  11. miga miga arumayana jathagam arumayana vilakkam niraya puthiya visayangalai kattru kolla mudinthathu
    asiriyarukku nandri

    ReplyDelete
  12. அய்யா, பாடம் வழக்கம் போலவே தனிச்சுவையுடன் இருந்தது. நன்றிகள்.

    ஒரு சந்தேகம்.

    சூரியனும் சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால் ராஜ சம்பந்த யோகம் என்பது இவை இரண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..? அதாவது அமாவாசையில் பிறந்தவர்களுக்கும் ராஜசம்பந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..?

    தயை செய்து விளக்கவும்.

    மறுபடி நன்றிகள்.

    ReplyDelete
  13. எனக்குப் பிடித்த ஜதாக அலசல் பதிவு. சனியும் புதனும் பரிவர்த்தனை ... அஷ்டவர்க்கம் விளக்கம் பிடித்திருந்தது. பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. thanusu said...
    //உதயத்தில் ஆதவனே அழகு
    உத்திதவரில் விவேகானந்தரே அழகு//

    உதயத்தில் ஆதவன் அழகு!
    உதித்தபின் வீர துறவியின் வாழ்க்கை அழகு!
    உணரவைத்த வாத்தியாரின் வார்த்தை அழகு!

    ReplyDelete
  15. ஐயா வணக்கம்

    இது ஏற்கனவே தாங்கள் வெளியிட்டது.இம்முறை கொஞ்சம் விளக்கமாகவும்,சில புதிய யோகங்களுடனும் விளக்கியுள்ளீர்கள் அருமை.
    //தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.//

    ல‌க்கின‌த்தில் அர‌ச‌கிர‌க‌மான‌ சூரிய‌ன்(பாக்கியாதிப‌தி) வந்து அமர்ந்திருக்கும் போது கீழ்த்த‌ரமான‌ புத்தி வ‌ராது.ராகு,ச‌னி,கேது அமர்ந்தால் தானே த‌ன்னைப்பேணியாக‌ இருப்பார்க‌ள்.என்னுட‌ன் வேலை செய்யும் ஒருவ‌ன் த‌ன‌க்கு என்ன‌ மிஞ்சும் என்று கேட்டுவிட்டுத்தான் அடுத்த‌வேலையே பார்ப்பான்,ஆனால் பேச்சு ம‌ட்டும் வாய் கிழிய‌ த‌ர்ம‌ம், நீதி ப‌ற்றிப் பேசுவான்.

    திருமண‌ வாழ்க்கைக்குரிய‌ 7 ம் வீட்ட‌திப‌தி+கார‌க‌ன் இருவ‌ரும் அந்த‌ வீட்டிற்கு எட்டில் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ச‌ரியில்லாதது கார‌ண‌ம்.சுக்கிரனுக்கு 6ம் இட ஆதிபத்தியம்+7ம் அதிபதியுடன் கூட்டு.மேலும் 12ம் வீட்டை த‌ன‌து க‌ட்டுப்பாட்டில் ச‌னி வைத்திருப்ப‌தால் திரும‌ண‌மாகியிருந்தாலும் ச‌ன்னியாசியாக‌த் தான் வாழ‌வைத்திருப்பான்.
    மேலும் சனி+சந்திரன் கூட்டணி(புனர்பூ தோஷம்)இதுவும் ஒரு காரணம்.

    சுவாமிஜி அவர்க‌ள் குருதசை,சுக்கிர‌புத்தியில் முக்தியடைந்தார்.மார‌க‌ ஸ்தான‌மான 2ல் சுக்கிரன்(6ம் அதிபதி)+புதன்(மாரகன்) கூட்ட‌ணி(உப‌ய‌ராசிக்கு 7ம் அதிப‌தி பாத‌காதிபதி).புத‌னின் தூண்டுத‌லால் சுக்கிரன் தனது புத்தியிலேயே போட்டுத்தள்ளி விட்டான்.

    எனது சிற்றறிவிற்கு எட்டியதைத் தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்,தவறெனில் பொறுத்தருள வேண்டும்.

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    சுவாமிஜியின் ஜாதகத்தில் அமைந்த அனைத்து அமைப்புகளையும் மிகவும் தெளிவாக இன்று தந்துள்ளீர்கள் ஐயா...மதங்களைக் கடந்து தனது ஆன்மிக சிந்தனைகளால் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் சுவாமிஜி தான்...சுவாமிஜியை எனக்கு மிகவும் பிடிப்பதற்கு மற்றுமொரு காரணம் சுவாமிஜியின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு எனது பிறந்தநாள்...ஹஹா...

    அருமையான பதிவு ஐயா...இப்படி ஒருவர் மறுபடியும் நம் நாட்டில் எப்பொழுது பிறப்பார்...நல்ல மனிதர்களை காணும் பாக்கியம் என்னைப் போன்ற இத்தலைமுறையினர்க்கு என்றுமே கிடைக்காதோ? என்று வருத்தமாக உள்ளது...

    ReplyDelete
  17. சுவாமி விவேகானந்தரின் ஜாதக அலசல் அருமை. புதிதாக சில யோகங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், அவற்றைப்பற்றி சற்று விரிவாக எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். ராஜ சம்பந்த யோகம் எனக்கு இருந்தும், இரண்டு வில்லன்கள் சேர்ந்து சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் ராகு புத்தியில் நன்மைகள் அதிகமிருந்தன.

    இப்போது சந்தேகங்கள்:

    லக் அதிபதி 11 ல், இருந்தும் பகைவீட்டில். அதனால் பாதிப்பு ஏதும் கிடையாதா?

    இவரின் ஜாதகத்தில் குறைந்த ஆயுளுக்கான காரணம் லக்னத்தின் அஷ்டவர்க்கப்பரல் ஒன்று என்பதாலா அல்லது வேறு ஏதாவதா?

    ReplyDelete
  18. ஐயா,

    ///குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்

    நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி முக்தி கிடைக்கும்?

    சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    கற்றுக்கொள்வோம்///.

    சுவாமி அது தாங்கள் அடிக்கடி சொல்வதுபோல் அவ‌ன‌வ‌ன் வாங்கி வந்த வரம்.வக்ரபுத்தி படைத்தவனுக்கு நிறைவான மனமே தோன்றாது.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. நீங்கள் கேட்கலாம் ஏன்பா அடுத்தவர்களைப் பற்றி இவ்வளவு சொல்கிறாயே?என்று.எனக்கு 5ல் உள்ள கேதுபகவானும்,உச்சம் பெற்ற லக்கினாதிபதி சூரியனின் சமசப்தமப் பார்வையில் உள்ள அவர்(கேது) நின்ற வீட்டுக்கதிபதி குருவும் சேர்ந்து நிறைவான‌ ம‌ன‌தை எப்போதும் தந்து கொண்டு இருக்கிறார்க‌ள்.எப்போதும் அடுத்த‌வ‌ர்க‌ளைக் குறை சொல்லும் த‌ன‌து த‌குதி என்ன‌வென்று பார்க்க‌வேண்டும‌ல்ல‌வா?.ப‌டிக்கிற‌து ராமாய‌ண‌ம் இடிக்கிற‌து பெருமாள் கோவில் என்றால் பார்க்கிற‌வ‌ன் காறித்துப்ப மாட்டானா?என்ன‌.பொதுச்சேவை செய்ய‌ முத‌லில் ம‌ன‌ம் வேண்டுமே.........தாங்க‌ளின் எழுத்துத் தான் என்னைக் க‌வ‌ர்ந்த‌து.

    ReplyDelete
  19. அதி தீவிர ஜாதக அலசல் என்பது இதுதானோ? வாத்தியாருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..
    ஏற்கனவே விவேகானந்தர் சிவனின் வடிவம் என்று KMRKகருத்து வெளியிட்டிருந்தார்..இங்கே பார்வதி அம்மையார் அர்ஜுனன் வடிவம் என்று சொல்லியிருக்கிறார்..அவரை கடவுளாக்காமல் மனிதருள்ளே மெய்ஞானத்தைப் போதிக்க வந்த ஞானி என்று சொல்லிவிடுவதே இதற்கு முற்றுப் புள்ளி என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  20. நாடி சோதிடத்தின் மர்மங்கள் என்ற புத்தகத்தில் எஸ் .ரவி என்பவர் கூற்றுப்படி
    சனியும், கேதுவும் சுக்கிரனுக்கு 5, 9 ல் அமர்ந்ததால்தான் திருமண‌ம் சுவாமிஜிக்கு ஆகவில்லை என்று சொல்கிறார்.அந்த முறையில் 1,5, 9 என்று எல்லா கிரஹங்களுக்குமே பார்வையாம். அதன்படி கேது சுக்கிரனை 9ம் பார்வையாகவும், சனி 5ம் பார்வையாகவும் பார்த்துவிட்டதால் சுவாமிஜிக்குத் திருமண யோகம் இல்லையாம்.இது சரியா?

    ReplyDelete
  21. Guru vanakkam,

    Excellent alasal. Thanks for the post.

    Ramadu

    ReplyDelete
  22. In this link Mr krushnas method of astavarka style if jupiter is placed in libra then marriage will be a problem../no marriage..in this case of vivekji too it has been prooved..
    http://www.jupitersweb.com/kas-research-statistics-on-marriage.html

    ReplyDelete
  23. வேசி யோகம் என்பது KMRK அவர்கள் சொன்னதைப் போன்ற பலன் தருமா. தெரிந்துக் கொள்வதற்காகதான் கேட்கிறேன். என் ஜாதகத்தில் சூரியனுக்கு 2ல் சந்திரன் மட்டும் இருக்கிறார். ஆக எனக்கு இந்த யோகம் இல்லை. ஆனால் சதா சஞ்சார யோகம் இருக்கிறது. இருந்து விட்டு போகிறது, அதனால் என்ன என்று பேசாமல் இருக்கிறேன்.

    ஒரு மனிதன் 80 வருடத்திற்கு மேல் வாழ்ந்து சாதிக்க வேண்டிதை 39 வருடத்திலேயே சாதித்து விட்டார் எனலாம். இயற்கையின் நியதி. யாராக இருந்தாலும் ஓர் அளவுக்கு மேல் (மேலே) போகமுடியாது. ஒன்று கீழே இறங்கியாக (அல்லது விழுந்தாக) வேண்டும். ஜாதகத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் மரணம்தான் அதற்கு முடிவாக இருக்கும்.

    ReplyDelete
  24. //// kmr.krishnan said...
    முன்பே ஒரு முறை கூறியிருந்தாலும் இப்போது மேலும் விரிவு படுத்தியுள்ளீர்கள். நன்றாக உள்ளது.
    வேசி யோகம்: தந்தை மறைந்த பின்னர் நரேந்திரர் வேலை தேடி அலைந்தார். அப்போது அவருக்கு ஒரு செல்வ சீமாட்டியிடமிருந்து 'அப்படி'ப்பட்ட

    சேவைக்கான அழைப்புக் கிடைத்தது. அவளைத் 'தாயே' என்று அழைத்து வணங்கிவிட்டு வந்தாராம். அப்போது அவருடைய வயது 20.
    ஓயாத பயணத்தாலும், அடிக்கடி மாறிய உணவு முறைகளாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.லக்னாதிபதி குரு சர ராசியில். எனவே சதாசஞ்சார யோகம்.////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. //// ஆலாசியம் said...
    பிரபஞ்சத்தையே ஒரேப் பார்வையில் பார்த்த பிதாமகன்...
    வெள்ளையர்களின் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட ஆன்மீக குரு....
    மனித இனத்தின் விடியலுக்கும், ஆத்ம சுதந்திரம் ஒவ்வொருவரின்
    பிறப்புரிமை அதை இன்றேத் தொடங்குவாய், விழித்தெழுவாய் என்றும்
    அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து சரியானப் பாதையையும் காட்டி
    அவரும் அந்தப் பாதையிலே சென்று சுதந்திரம் பெற்று சுடரோடு இணைந்தவர்...
    எல்லோரும் அமரநிலை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று
    எண்ணில்லாப் பயணம் கொண்டே எல்லோரையும் எழுப்பிய வீரத் துறவி...
    இந்தியத் தாயின் தவப் புதல்வன் நமக்கு மிகவும் அணுக்கமான உறவுக் காரன்
    அப்படிப் பட்ட விவேகானந்தரின் அவதார அமைப்பை அழகாக விளக்கிய
    அற்புதப் பதிவு...
    நன்றிகள் ஐயா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  26. /// thanusu said...
    உதயத்தில் ஆதவனே அழகு
    உத்திதவரில் விவேகானந்தரே அழகு .///

    உண்மைதான். நன்றி தனூர்ராசிக்காரரே!

    ReplyDelete
  27. //// Sathish K said...
    விளக்கங்கள் மிகவும் அழகு மற்றும் தெளிவாக இருந்தது. சிறு பிராயத்திலேயே ஞானம் அடைய மகா புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். இங்கே ஞானம் பாவம் பற்றியெல்லாம் பேசினால் 'சாமியார் மாதிரி மொக்க போடாத மச்சி' என்று ஏச்சு தான் கிடைக்கிறது. தடம் புரள இருந்த தருணத்தில் பாலகுமாரன் புத்தகங்கள் காப்பாற்றின. தற்போது உங்களைப் போன்றவர்கள் உள்ளனர்.
    நன்றி ஐயா./////

    நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது உங்களைக் காப்பாற்றும்!

    ReplyDelete
  28. /////eswari sekar said...
    ayya vannkam enrya lessan nanrga ullathu jathka alasalil ungali yarum minga mutiyathu./////

    கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு' என்ற அவ்வையின் வார்த்தைகளை மறக்க வேண்டாம்! என்னைவிடச் சிறப்பாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு சிலரைத் தெரியும். நான் அவர்களுடைய ரசிகன்!

    ReplyDelete
  29. ////// thanusu said...
    நங்கல்ல்லூர் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர அர்ச்சகரின் தட்டில் பத்துரூபாய் போட தர்மசிந்தனை இருக்காது.
    நான்காயிரம் கொடுத்து சரக்கு வாங்கி அடிப்பார்கள் கோயில் உண்டியலில் நூறுரூபாய் போடமாட்டார்கள் .குடும்பத்தோடு சரவணபவனுக்கு சென்று ஒரு வேளைக்கு ஆயிரம் செலவு செய்வார்கள்.ஆனால் ஒரு ஏழைக்கு பசியை தீர்க்க ஐம்பது ரூபாய் தரமாட்டார்கள். மனம் இருக்காது.
    நெத்தி அடியாக எழுதினீர்கள் அய்யா. ஆசானிடம் பிடித்த பலவைகளிள் ,இந்த நெத்தி அடி கருத்துகளும் அவைகளை தாங்கி வரும் இந்த எழுத்துகளுக்கும் தனி
    இடமுண்டு.தாங்களின் இந்த எழுத்தாற்றல் தான் பலரையும் இங்கே கட்டிப்போட்டிருக்கிறது.//////

    இறைவன் என்னை எழுதப் பணித்திருக்கிறான். ஆகவே அப்படி வரும் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தில் வருகின்றன. அந்த உத்வேகமும் இறைவனின் கொடைதான். பாராட்டுகள் இறைவனையே சேரும்!

    ReplyDelete
  30. ///// Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவு.
    நிறைய யோகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. திரு.கே.எம்.ஆர் அவர்களின் பதிவு மூலம் மேலும் இரு யோகங்களைப் பற்றி அறிய முடிந்தது.
    தகவலுக்கு நன்றி.சிலர் பிறருக்காகவே பிறந்து வாழ்கிறார்கள்.
    அப்படிப்பட்ட ஒரு மகானின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும், நர,நாராயண அம்சம் என்று ஒரு கருத்து உண்டு. பூர்வ ஜென்மத்தில், ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனுமே,மக்களை வாழ்விக்க தங்கள் அம்சங்களை
    இக்கலியுகத்தில்,ஸ்ரீஇராமகிருஷ்ணராகவும் ஸ்ரீவிவேகனந்தராகவும் பிறப்பித்தார்கள்.
    இந்து தர்மத்தை,உலகெங்கும் முழங்கியதில் இருந்து,ஆன்மிகத்தில் இளைஞர்களையும் ஈடுபடுத்தியது வரை, ஸ்வாமிஜியின் சாதனைகளைச் சொல்ல வார்த்தைகளில்லை. அவரது,சிகாகோ மாநாட்டு உரை,வீழ்ந்து கிடப்போரையும் வீறு கொண்டு எழச் செய்யும்.
    தன்னைத் தான் தாழ்த்திக் கொள்வது பெரிய பாவம், 'அஹம் ப்ரம்மாஸ்மி'என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதை அவர் ஒவ்வொரு உரையிலும்
    குறிப்பிடத்தவற வில்லை. ஆனால்,மிகப்பெரிய மகான்களில் பலர் குறைந்த காலமே வாழ்ந்ததன் அர்த்தம் புரியவில்லை. ஸ்ரீஆதிசங்கரரில் இருந்து, பல மகான்களின் வாழ்க்கை ஏன் இவ்வாறே அமைந்தது?/////

    அது இருந்தால் இது இல்லை
    இது இருந்தால் அது இல்லை
    அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
    அவனுக்கு இங்கே இடமில்லை
    - எனபார் கவியரசர் கண்ணதாசன்.
    எல்லா பாக்கியங்களையும் நிறையப் பெற்றவர்கள் சீக்கிரம் விடை பெற்றுக்கொண்டு போய் விடுவார்கள்.

    ReplyDelete
  31. //// thanusu said...
    வேலைக்கு டும்மாதான் .சும்மா கடலைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் கப்பலின் winch (காரில் உள்ள கிளர்ச் போன்றது ) நங்கூரத்தை கடலின் தரையில் பதிய வைப்பது. ராட்சச சைஸ் , சரிவர ஒத்துழைப்பு இல்லை .மைனரின் ஊரிலிருந்துதான் மூவர் வந்து சரி செய்துக் கொண்டு
    இருக்கிறார்கள்.சரிசெய்த பின் தான் பனிதுவங்கும் .//////

    மைனர் ஊர் என்றாலே கெட்டிக்காரர்கள் என்றுதான் அர்த்தம்!:-))))

    ReplyDelete
  32. /// k.umapathy said...
    Sir,Present.Excellent article about Vivekanandar
    By Umapathy.k/////

    Thanks for your appreciation my dear friend!

    ReplyDelete
  33. //// கூகிள்சிறி .கொம் said...
    உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின்
    சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம்
    பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள்
    பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  34. //// arul said...
    miga miga arumayana jathagam arumayana vilakkam niraya puthiya visayangalai kattru kolla mudinthathu
    asiriyarukku nandri////

    நல்லது. நன்றி அருள்!

    ReplyDelete
  35. ///// Govindasamy said...
    அய்யா, பாடம் வழக்கம் போலவே தனிச்சுவையுடன் இருந்தது. நன்றிகள்.
    ஒரு சந்தேகம்.
    சூரியனும் சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால் ராஜ சம்பந்த யோகம் என்பது இவை இரண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..? அதாவது அமாவாசையில் பிறந்தவர்களுக்கும் ராஜ சம்பந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..?
    தயை செய்து விளக்கவும்.
    மறுபடி நன்றிகள்./////

    கொள்ளக்கூடாது. அமாவாசை, பெள்ர்ணமி பிறப்புக்களுக்கெல்லாம் பலன்கள் வேறு. பின்னொரு நாளில் அது பற்றி விரிவாக எழுதுகிறேன்!

    ReplyDelete
  36. /// தேமொழி said...
    எனக்குப் பிடித்த ஜதாக அலசல் பதிவு. சனியும் புதனும் பரிவர்த்தனை ... அஷ்டவர்க்கம் விளக்கம் பிடித்திருந்தது. பதிவுக்கு நன்றி ஐயா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  37. //// Maheswaran said...
    நன்றி ஐயா!///

    நல்லது மகேஷ்வரன்!

    ReplyDelete
  38. //// Ananthamurugan said...
    thanusu said...
    //உதயத்தில் ஆதவனே அழகு
    உத்திதவரில் விவேகானந்தரே அழகு//
    உதயத்தில் ஆதவன் அழகு!
    உதித்தபின் வீர துறவியின் வாழ்க்கை அழகு!
    உணரவைத்த வாத்தியாரின் வார்த்தை அழகு!/////

    எனக்கு என் வகுப்பறை மாணவர்கள் (3,072 பேர்களும்) அழகு!

    ReplyDelete
  39. //// Rajaram said...
    ஐயா வணக்கம்
    இது ஏற்கனவே தாங்கள் வெளியிட்டது.இம்முறை கொஞ்சம் விளக்கமாகவும்,சில புதிய யோகங்களுடனும் விளக்கியுள்ளீர்கள் அருமை.
    //தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை,

    அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.//
    ல‌க்கின‌த்தில் அர‌ச‌கிர‌க‌மான‌ சூரிய‌ன்(பாக்கியாதிப‌தி) வந்து அமர்ந்திருக்கும் போது கீழ்த்த‌ரமான‌ புத்தி வ‌ராது.ராகு,ச‌னி,கேது அமர்ந்தால் தானே
    த‌ன்னைப்பேணியாக‌ இருப்பார்க‌ள்.என்னுட‌ன் வேலை செய்யும் ஒருவ‌ன் த‌ன‌க்கு என்ன‌ மிஞ்சும் என்று கேட்டுவிட்டுத்தான் அடுத்த‌வேலையே பார்ப்பான்,ஆனால்
    பேச்சு ம‌ட்டும் வாய் கிழிய‌ த‌ர்ம‌ம், நீதி ப‌ற்றிப் பேசுவான்.
    திருமண‌ வாழ்க்கைக்குரிய‌ 7 ம் வீட்ட‌திப‌தி+கார‌க‌ன் இருவ‌ரும் அந்த‌ வீட்டிற்கு எட்டில் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ச‌ரியில்லாதது கார‌ண‌ம்.சுக்கிரனுக்கு 6ம் இட ஆதிபத்தியம்+7ம் அதிபதியுடன் கூட்டு.மேலும் 12ம் வீட்டை த‌ன‌து க‌ட்டுப்பாட்டில் ச‌னி வைத்திருப்ப‌தால் திரும‌ண‌மாகியிருந்தாலும் ச‌ன்னியாசியாக‌த் தான்
    வாழ‌வைத்திருப்பான்.மேலும் சனி+சந்திரன் கூட்டணி(புனர்பூ தோஷம்)இதுவும் ஒரு காரணம்./////

    புனர்பூ தோஷம் ஒரு முக்கிய காரணம். அவருடைய உயர்ந்த ஜாதகத்தின் அமைப்பு, அந்த தோஷம் செயல்படாமல் அவரைக் காப்பாற்றியுள்ளது.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///சுவாமிஜி அவர்க‌ள் குருதசை,சுக்கிர‌புத்தியில் முக்தியடைந்தார்.மார‌க‌ ஸ்தான‌மான 2ல் சுக்கிரன்(6ம் அதிபதி)+புதன்(மாரகன்) கூட்ட‌ணி(உப‌ய‌ராசிக்கு 7ம்
    அதிப‌தி பாத‌காதிபதி).புத‌னின் தூண்டுத‌லால் சுக்கிரன் தனது புத்தியிலேயே போட்டுத்தள்ளி விட்டான்.
    எனது சிற்றறிவிற்கு எட்டியதைத் தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்,தவறெனில் பொறுத்தருள வேண்டும்./////

    நீங்கள் சொல்லும் காரணங்கள் சரிதான். மகானின் ஜாதகம். அவரே பஞ்சாங்கத்தைப் பார்த்து தனது மரணத்தை முடிவு செய்து முக்தி அடைந்துள்ளார் என்பதால் அதைப்பற்றி நான் குறிப்பிடவில்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  40. /// Uma said...
    சுவாமி விவேகானந்தரின் ஜாதக அலசல் அருமை. புதிதாக சில யோகங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், அவற்றைப்பற்றி சற்று விரிவாக எழுதுமாறு
    கேட்டுக்கொள்கிறேன். ராஜ சம்பந்த யோகம் எனக்கு இருந்தும், இரண்டு வில்லன்கள் சேர்ந்து சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் ராகு புத்தியில் நன்மைகள்
    அதிகமிருந்தன.
    இப்போது சந்தேகங்கள்:
    லக் அதிபதி 11 ல், இருந்தும் பகைவீட்டில். அதனால் பாதிப்பு ஏதும் கிடையாதா?////

    பகை வீட்டில் இருந்தால் பலன் பாதியாகக் குறையும் சம்பள உயர்வு இல்லாத வேலையைப் போன்ற பலன்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///இவரின் ஜாதகத்தில் குறைந்த ஆயுளுக்கான காரணம் லக்னத்தின் அஷ்டவர்க்கப்பரல் ஒன்று என்பதாலா அல்லது வேறு ஏதாவதா?////

    ஆமாம். அதுவும் ஒரு காரணம்!

    ReplyDelete
  41. //// Rajaram said...
    ஐயா,
    ///குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக்
    கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து
    கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது.
    கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு
    இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்
    நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப்
    போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில
    உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய்
    செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி
    முக்தி கிடைக்கும்?
    சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
    கற்றுக்கொள்வோம்///.
    சுவாமி அது தாங்கள் அடிக்கடி சொல்வதுபோல் அவ‌ன‌வ‌ன் வாங்கி வந்த வரம்.வக்ரபுத்தி படைத்தவனுக்கு நிறைவான மனமே தோன்றாது.போதுமென்ற மனமே
    பொன் செய்யும் மருந்து. நீங்கள் கேட்கலாம் ஏனப்பா அடுத்தவர்களைப் பற்றி இவ்வளவு சொல்கிறாயே?என்று.எனக்கு 5ல் உள்ள கேதுபகவானும்,உச்சம் பெற்ற
    லக்கினாதிபதி சூரியனின் சமசப்தமப் பார்வையில் உள்ள அவர்(கேது) நின்ற வீட்டுக்கதிபதி குருவும் சேர்ந்து நிறைவான‌ ம‌ன‌தை எப்போதும் தந்து கொண்டு
    இருக்கிறார்க‌ள்.எப்போதும் அடுத்த‌வ‌ர்க‌ளைக் குறை சொல்லும் த‌ன‌து த‌குதி என்ன‌வென்று பார்க்க‌வேண்டும‌ல்ல‌வா?.ப‌டிக்கிற‌து ராமாய‌ண‌ம் இடிக்கிற‌து
    பெருமாள் கோவில் என்றால் பார்க்கிற‌வ‌ன் காறித்துப்ப மாட்டானா?என்ன‌.பொதுச்சேவை செய்ய‌ முத‌லில் ம‌ன‌ம் வேண்டுமே.........தாங்க‌ளின் எழுத்துத் தான்
    என்னைக் க‌வ‌ர்ந்த‌து./////

    என்னை முருகப்பெருமான் எழுதப் பணித்திருக்கிறார். ஆகவே வரும் பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சேரும்! நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  42. //// minorwall said...
    அதி தீவிர ஜாதக அலசல் என்பது இதுதானோ? வாத்தியாருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..
    ஏற்கனவே விவேகானந்தர் சிவனின் வடிவம் என்று KMRKகருத்து வெளியிட்டிருந்தார்..இங்கே பார்வதி அம்மையார் அர்ஜுனன் வடிவம் என்று
    சொல்லியிருக்கிறார்..அவரை கடவுளாக்காமல் மனிதருள்ளே மெய்ஞானத்தைப் போதிக்க வந்த ஞானி என்று சொல்லிவிடுவதே இதற்கு முற்றுப் புள்ளி என்றே
    நினைக்கிறேன்..//////

    அவரை மெய்ஞான குரு/ஞானி என்பதே சரியானது! நன்றி மைனர்!

    ReplyDelete
  43. /// kmr.krishnan said...
    நாடி சோதிடத்தின் மர்மங்கள் என்ற புத்தகத்தில் எஸ் .ரவி என்பவர் கூற்றுப்படி
    சனியும், கேதுவும் சுக்கிரனுக்கு 5, 9 ல் அமர்ந்ததால்தான் திருமண‌ம் சுவாமிஜிக்கு ஆகவில்லை என்று சொல்கிறார்.அந்த முறையில் 1,5, 9 என்று எல்லா
    கிரஹங்களுக்குமே பார்வையாம். அதன்படி கேது சுக்கிரனை 9ம் பார்வையாகவும், சனி 5ம் பார்வையாகவும் பார்த்துவிட்டதால் சுவாமிஜிக்குத் திருமண
    யோகம் இல்லையாம்.இது சரியா?////

    சுக்கிரன் களத்திரகாரகன். அவனுக்கு கோணத்தில் பாவிகள் அமரும்போது, களத்திரத்திற்கான பலனை அவனால் கொடுக்க முடியாமல் போகும். அது உண்மைதான்! நன்றி!

    ReplyDelete
  44. //// RAMADU Family said...
    ////Guru vanakkam,
    Excellent alasal. Thanks for the post.
    Ramadu////

    Thanks for your appreciation my dear friend!

    ReplyDelete
  45. //// minorwall said...
    In this link Mr krushnas method of astavarka style if jupiter is placed in libra then marriage will be a problem../no marriage..in this case of vivekji too it has been prooved..http://www.jupitersweb.com/kas-research-statistics-on-marriage.html////

    Thanks for the information Minor!

    ReplyDelete
  46. //// ananth said...
    வேசி யோகம் என்பது KMRK அவர்கள் சொன்னதைப் போன்ற பலன் தருமா. தெரிந்துக் கொள்வதற்காகதான் கேட்கிறேன். என் ஜாதகத்தில் சூரியனுக்கு 2ல்
    சந்திரன் மட்டும் இருக்கிறார். ஆக எனக்கு இந்த யோகம் இல்லை. ஆனால் சதா சஞ்சார யோகம் இருக்கிறது. இருந்து விட்டு போகிறது, அதனால் என்ன
    என்று பேசாமல் இருக்கிறேன்.
    ஒரு மனிதன் 80 வருடத்திற்கு மேல் வாழ்ந்து சாதிக்க வேண்டிதை 39 வருடத்திலேயே சாதித்து விட்டார் எனலாம். இயற்கையின் நியதி. யாராக
    இருந்தாலும் ஓர் அளவுக்கு மேல் (மேலே) போகமுடியாது. ஒன்று கீழே இறங்கியாக (அல்லது விழுந்தாக) வேண்டும். ஜாதகத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் மரணம்தான் அதற்கு முடிவாக இருக்கும்./////

    நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு பறவையும் அது படைக்கபெற்ற உயரத்தில்தான் பறக்க முடியும். கருடனின் உயரத்திற்கு குருவியால் பறக்க முடியாது. மனிதன் அதை உணருமபோது வாழ்க்கை இனியதாகிவிடும்.

    ReplyDelete
  47. ஐயா உங்கள் தமிழ் எழுதியில் ஒளவை என எழுத சிரமமாக இருந்தால் "olavai" என்று முயன்று பாருங்கள். ஒளவையார் என எழுத "olavaiyar " என தட்டச்ச வேண்டும். என்ன செய்வது சிறுவயதில் தவறாக உச்சரித்தது இப்பொழுது கை கொடுக்கிறது. :))))

    ReplyDelete
  48. Whenever i feel feared,depressed & dejected 'i have a big slogan in my office desk and home 'Ezumin Vizumin Kurisarum Varai Nilladhu Selmin'. Immediately after seeing him and read the slogan, your body cell will get boosted.

    ReplyDelete
  49. விவேகானந்தரை சிவனின் 'அம்சம்' என்று சொல்வது வேறு; 'வடிவம்' என்று சொல்வது வேறு. ஸ்ரீராகவேந்திரரை ஆஞ்சனேயரின் அம்சம் என்று சொல்வதுண்டு.ஆதிசங்கரரையும் சிவ அம்சம் என்று சொவதுண்டு. இன்று ஸ்ரீபங்காரு அடிகளாரை அம்பிகையின் அம்சம் என்று சொல்வதும் வழக்கம் தான்.
    பக்தர்களாக இருப்பவர்கள் சொல்வதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அவ்வாறு கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  50. ஐயா வணக்கம்.

    எல்லாம் சரி . கடைசியில் எல்லோருடைய மனதை தொடும் அளவிற்கு எழுதி இருக்கின்றிர்களே ஐயா.


    படிப்பு , பணம், வீரம், செயல் திறன் , தனி தன்மை, நிபுனதன்மை , இன்னும் நிறைய கூறலாம் , அவைகள் எல்லாம் இருந்தால் தான் ஊரு உலகம் மனிதனை மனிதனாக ஏற்று கொள்கின்றது .

    ஊரு பணத்தை கொள்ளை அடித்து கோவில் குழம் வெட்டி வைக்கின்ற ஆளை கூட சமுகத்தில் பெரிய மனிதனாக ஏற்றுகொள்கின்றது ஐயா!

    பிறந்தது முதல் ஆன்மிக சிந்தனையில் செல்லுகின்றவனை யாவரும் யாருடத்து பார்க்காவிட்டாலும் கூட பரவாக இல்லை சும்மா இருக்கவனை சீண்டி விட்டு அவன் அல்லது அடுத்தவன் படும் துன்பத்தினை ரசிக்கும் கூட்டம் தான் நம்மை சுற்றி உள்ளது ஐயா இந்த பாலாக போன கலியுகத்தில் ஐயா!

    உங்களுக்கு ஒன்று தெரியுமா ஐயா!

    தேரை இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் தான் வருகின்ற சமுகத்தில் உள்ளது.

    தான் ஜனனம் ஆக காரணம் ஆக இருந்த தனது "முன்னோர்களை ";
    கிறுக்கன், கோமாளி, பயித்தியகாரன் என நிறைய பட்டங்களை குடுத்து விட்டு தன்னை எதோ மிகவும் மேதாவி ஆக காட்டி கொண்டு எங்கு இருந்தோ வந்த ஒரு கொள்கையை அல்லது போதனையை மட்டும் சரி என்று சால்ரா போட்டு ஏற்றுக்கொண்டு கொண்டு தாம் மட்டும் எல்லா சுகத்துடன் வாழ வேண்டி சொறி சிரங்கு பிடித்து அலையும் தெரு நாய்கள் போல அலையும் நாய்களை என்ன வென்று ஐயா கூற.

    வெக்கம், மானம், தன்மானம் என்று எல்லாத்தையும் கேவலமாக காற்றில் பறக்க விட்டு விட்டு பட்சொந்திகளாக அலையும் பட்சொந்திகளை என்ன வென்று ஐயா அழைக்க.

    யான் யதனை கூற வருகின்றேன் என்று வகுப்பறைக்கு வரும் அனைத்து சக மாணவருக்கு புரிந்து இருக்கும் என்று நினைகின்றேன் ஐயா!

    அவர்கள் கூறும் கூற்று உண்மை எனில் உண்மையிலையே சத்தியம் இருக்கும் எனில் ஏன் மற்ற இனத்தில் மனிதன் பிறக்க பட வேண்டும் .

    பிறப்பினை நிறுத்தி விட வேண்டியது தானே ?

    அந்த சக்தி கூட இல்லாத ஒரு கிறுக்கு பயல்கள் கூறும் கூற்றை உண்மை என நம்பி சென்று வாழ்வதை விட ஒரு முலம் கயிற்றில் நாண்டுகிட்டு மேலே போவது மேல்.

    புரிய வேண்டி மாக்களுக்கு புரிந்தாள் போதும் . யாம் இங்கு இந்தனை தூரம் எழுதமைக்கு கிடைக்கும் வெற்றி ஆகும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com