மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.12.08

இடைப் பலகாரம்!

அது என்ன இடைப் பலகாரம்?

மதிய உணவிற்கும், இரவு டின்னருக்கும் இடையில் மாலையில்
சாப்பிடும் சிற்றுண்டி அல்லது நொறுக்குத் தீனி இடைப்பலகாரம்
எனப்படும்.

எங்கள் பகுதியில் அப்படித்தான் சொல்வார்கள்.

உங்களுக்காக இடைப்பலகாரம் செய்து வைத்துள்ளேன்.
அனைவரும் சாப்பிடுங்கள். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறதா
என்று சொல்லுங்கள்
===============================================
Over to Snacks!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுபக் கிரகங்களும், அசுபக் கிரகங்களும்! Malefics and benefics:

சில கிரகங்களை இயற்கையான சுபக்கிரகம் என்பார்கள்:
அவைகள் முறையே சந்திரன், சுக்கிரன் & குரு

சில கிரகங்களை இயற்கையான அசுபக்கிரகம் என்பார்கள்:
அவைகள் முறையே சனி, ராகு, கேது & செவ்வாய்

சூரியன் 50% + 50% (Mixed)

புதன் நடுநிலை. சேர்க்கைகளை வைத்து அதன் தன்மை மாறும்
புதன் சுபனோடு சேர்ந்தால் சுபன், அசுபனோடு சேர்ந்தால் அசுபன்

ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை தீமைகளைச் செய்யக்கூடிய
கிரகங்களைப் பட்டியல் இட்டுள்ளேன்.

அவைகள் பொதுப்பலன்கள். அதை மனதில் கொள்க!
==================================================
1
மேஷ லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
**** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2
ரிஷப லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3
மிதுன லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4.
கடக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5
சிம்ம லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6
கன்னி லக்கினம்:

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7.
துலா லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8
விருச்சிக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9
தனுசு லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்.
========================================================
10
மகர லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11
கும்ப லக்கினம்

யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12
மீன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
=======================================================
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. ஐயா,

    மதியம் சாப்பாடே (செவ்வாய் பற்றி)
    இன்னும் செரிக்கவில்லை-அதற்குள் இடைப்பலகாரமா? எனக்கு மீன லக்கினம் -லக்கினத்தில் குரு - ராஜயோகம் ?
    பதிவு சூப்பர்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. Thanks for this compact lesson. No books or commentators have given these information in one lesson clearly.

    ReplyDelete
  3. ////Blogger வேலன். said...
    ஐயா,
    மதியம் சாப்பாடே (செவ்வாய் பற்றி)
    இன்னும் செரிக்கவில்லை-அதற்குள் இடைப்பலகாரமா? எனக்கு மீன லக்கினம் -லக்கினத்தில் குரு - ராஜயோகம் ?
    பதிவு சூப்பர்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    பக்கத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மெதுவாகச் சாப்பிடுங்கள். என்ன ஆகிவிடப்போகிறது?

    ReplyDelete
  4. //////Blogger krish said...
    Thanks for this compact lesson. No books or commentators have given these information in one lesson clearly.

    எல்லாம் நமது வகுப்பறைக் கண்மணிகளுக்காகத்தான்!
    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  5. எடப் பலகாரம் சாப்பிடலாம்னு வந்தேன். சோஸியத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதால் சாப்பிடாமல் போகிறேன் :(

    ReplyDelete
  6. //////Blogger சதங்கா (Sathanga) said...
    எடப் பலகாரம் சாப்பிடலாம்னு வந்தேன். சோஸியத்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதால் சாப்பிடாமல் போகிறேன் :(////

    உங்கள் வயதில் நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்:-))))))

    ReplyDelete
  7. பலகாரம் நன்றாக உள்ளது. பாடம் புரியும் படி உள்ளது. நன்றி,

    ReplyDelete
  8. /////Blogger N.K.S.Anandhan. said...
    பலகாரம் நன்றாக உள்ளது. பாடம் புரியும் படி உள்ளது. நன்றி,/////

    நன்றி ஆனந்தன்!

    ReplyDelete
  9. ஐயா
    எனக்கு மகர லக்னம். மாரக அதிபதி செவ்வாய் என்று சொல்லி உள்ளீர்கள். எனக்கு 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்). இதன் பலன் எப்படி இருக்கும் ?
    மாரக அதிபதி என்றால்? குரு 4-ல் கேதுவுடன்?

    ReplyDelete
  10. நண்பரே,இது பற்றிய விளக்கமதான் நான் சில நாட்களுக்கு முன் எழுத வேண்டினேன்...

    லேட்டாக வந்தாலும் better late than never என்பதுதானே உண்மை!

    ReplyDelete
  11. அய்யா ஒரு சந்தேகம் ......ஒரு லக்னத்திற்கு யோககார கிரகம் ஒன்று ஓர் யோகமில்லாத கிரகத்தின் நட்சத்திர சாரத்திலோ அல்லது ஓர் மாரக கிரகத்தின் நட்சத்திர சாரத்திலோ நின்றால் யோககிரகத்தின் பலன்கள் எப்படி பாதிக்கப்படும் .
    அதே போல் ஒரு யோக கிரகம் தன்னுடைய சுய சாரத்தில் நின்றால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் . சுய சாரம் என்பது உச்ச வீட்டின் பலன் போல செயல்படுமா ....

    ReplyDelete
  12. /////Blogger Sunitha said...
    ஐயா
    எனக்கு மகர லக்னம். மாரக அதிபதி செவ்வாய் என்று சொல்லி உள்ளீர்கள். எனக்கு 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்). இதன் பலன் எப்படி இருக்கும் ?///////

    insufficient details to say about 7th house!
    --------------------------------------------------------
    மாரக அதிபதி என்றால்? குரு 4-ல் கேதுவுடன்?////

    மாரக அதிபதி என்றால் மரணத்தைக் கொடுப்பவன் என்று பொருள். உங்களுக்கு சின்ன வயது. அதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ள வேண்டாம்!

    ReplyDelete
  13. ////Blogger அறிவன்#11802717200764379909 said...
    நண்பரே,இது பற்றிய விளக்கமதான் நான் சில நாட்களுக்கு முன் எழுத வேண்டினேன்...
    லேட்டாக வந்தாலும் better late than never என்பதுதானே உண்மை!//////

    நீங்கள் கேட்டது நினைவில் இல்லை. தற்செயலாகப் பதிவிட்டேன். நன்றி அறிவன்

    ReplyDelete
  14. ///Blogger Ragu Sivanmalai said...
    அய்யா ஒரு சந்தேகம் ......ஒரு லக்னத்திற்கு யோககார கிரகம் ஒன்று ஓர் யோகமில்லாத கிரகத்தின் நட்சத்திர சாரத்திலோ அல்லது ஓர் மாரக கிரகத்தின் நட்சத்திர சாரத்திலோ நின்றால் யோககிரகத்தின் பலன்கள் எப்படி பாதிக்கப்படும்////

    யோககாரகன் எங்கே நின்றாலும் தன்னுடைய தசா புத்தியில் யோகத்தைக் கொடுப்பான்

    ////அதே போல் ஒரு யோக கிரகம் தன்னுடைய சுய சாரத்தில் நின்றால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் . சுய சாரம் என்பது உச்ச வீட்டின் பலன் போல செயல்படுமா///////

    ஆட்சி பெற்ற அளவிற்கு உரிய பலனை மட்டும் கொடுக்கும்!

    ReplyDelete
  15. பாடம் அருமை. மாரக அதிபதியின் தசா புத்தி கால கட்டங்கள் தீமையைக் கொடுக்குமா?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  16. Sir,
    Chips, pretzels, bread sticks, nuggets, tortilla chips....

    Good!!!

    ReplyDelete
  17. /////Blogger RAJA said...
    பாடம் அருமை. மாரக அதிபதியின் தசா புத்தி கால கட்டங்கள் தீமையைக் கொடுக்குமா?
    அன்புடன்
    இராசகோபால்//////

    மாரக அதிபதி என்றாலே தீயவன்தானே!

    ReplyDelete
  18. ////Blogger hotcat said...
    Sir,
    Chips, pretzels, bread sticks, nuggets, tortilla chips....
    Good!!!/////

    உங்கள் ஊரில் (யு.எஸ்) அந்தப் பெயர்கள் இருக்கலாம். எங்களுக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்?:-)))

    ReplyDelete
  19. இடைப்பலகாரம் நன்றாக இருந்தது வாத்தியாரையா.

    ReplyDelete
  20. ஓ...!கொறிக்ஸா..? நாங்க இப்படித்தான் சொல்லுவோம். நல்லாருந்துது.
    ஐயா! என் மகன் ஜாதகம் அனுப்பினால் பார்த்து பலன் சொல்வீர்களா? திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.

    ReplyDelete
  21. ////Blogger அமர பாரதி said...
    இடைப்பலகாரம் நன்றாக இருந்தது வாத்தியாரையா./////

    நன்றி அமரபாரதி!

    ReplyDelete
  22. ////Blogger நானானி said...
    ஓ...!கொறிக்ஸா..? நாங்க இப்படித்தான் சொல்லுவோம். நல்லாருந்துது.
    ஐயா! என் மகன் ஜாதகம் அனுப்பினால் பார்த்து பலன் சொல்வீர்களா?
    திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது./////

    இப்படிப் பொது இடத்தில் கேட்டு சிக்கலை உண்டாக்குகிறீர்களே?
    நானானி அக்காவிற்கு மட்டும் என்ன சலுகை? என்று என்னுடன்
    சண்டைக்கு வந்துவிடுவார்கள். மின்னஞ்சலில் வாருங்கள் சகோதரி!

    email: classroom2007@gmail.com

    ReplyDelete
  23. பலகாரத்துல, உப்பு அதிகமா இருக்கு, மீண்டும் ஒருமுறை சரியாக செய்து, என் வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க, முகவரி வேணுங்களா?

    ReplyDelete
  24. /////Blogger A N A N T H E N said...
    பலகாரத்துல, உப்பு அதிகமா இருக்கு, மீண்டும் ஒருமுறை சரியாக செய்து, என் வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க, முகவரி வேணுங்களா?/////

    முகவரியைக் கொடுங்கள்!

    ReplyDelete
  25. சூப்பர் தீனீ ;-) நன்றிகள்
    சந்தேகம்: (பள்ளியுலும் நான் இப்படி தான் சந்தேகங்கள் நிறைந்த மாணவன், ஆகவே ஆசிரியர் பொறுத்து அருளவும்)
    1. குரு எப்போதும் நன்மை செய்யும் என்று படித்தேனே !!! மாரக அதிபதியாக எப்படி உள்ளது ? மாரக அதிபதி உயிர் போக்க காரணம் ஆகிருது அல்லவா?
    2.குரு 2 மற்றும் 7 வீட்டில் அமரும் போது மாரக கிரகமாக மாறுமா?
    3.பொதுவாக எப்போது கிரகங்கள் மாரக கிரகமாக மாறுகின்றன?
    ஆவலுடன்,
    பிரகாஷ்.

    ReplyDelete
  26. ///Blogger PrakashMani said...
    சூப்பர் தீனீ ;-) நன்றிகள்
    சந்தேகம்: (பள்ளியுலும் நான் இப்படி தான் சந்தேகங்கள் நிறைந்த மாணவன், ஆகவே ஆசிரியர் பொறுத்து அருளவும்)
    1. குரு எப்போதும் நன்மை செய்யும் என்று படித்தேனே !!! மாரக அதிபதியாக எப்படி உள்ளது ? மாரக அதிபதி உயிர் போக்க காரணம் ஆகிருது அல்லவா?
    2.குரு 2 மற்றும் 7 வீட்டில் அமரும் போது மாரக கிரகமாக மாறுமா?
    3.பொதுவாக எப்போது கிரகங்கள் மாரக கிரகமாக மாறுகின்றன?
    ஆவலுடன்,
    பிரகாஷ்./////

    ஒரு ஜாதகனுக்கு இரண்டாம் அதிபதி அல்லது ஏழாம் அதிபதி மாரக அதிபதி எனப்படுவார். அவர்கள் இருவரில் யார் வலுவாக இருக்கிறாரோ அவர்தான் பிரம்பைக் கையில் எடுத்துக்கொள்வார் அவருடைய தசாபுத்தியில் மாரகம் ஏற்படும்
    இதைப் பற்றி முழுமையாக எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது பார்ப்போம். சற்று பொறுமை காக்கவும்!

    ReplyDelete
  27. sir in some books maraka grahas for thulam lagna is mentioned as Sun and mars... let me know the correct one?

    ReplyDelete
  28. /////Blogger Vinodh said...
    sir in some books maraka grahas for thulam lagna is mentioned
    as Sun and mars... let me know the correct one?/////

    சூரியன், துலா லக்கினத்திற்கு லாபஸ்தானத்திற்கு அதிபதி!
    செவ்வாய் 2 & 7 ற்கு அதிபதி. அவன்தான் மாரகன்!

    ReplyDelete
  29. ++/SP.VR. SUBBIAH said...
    /////Blogger Vinodh said...
    sir in some books maraka grahas for thulam lagna is mentioned
    as Sun and mars... let me know the correct one?/////

    சூரியன், துலா லக்கினத்திற்கு லாபஸ்தானத்திற்கு அதிபதி!
    செவ்வாய் 2 & 7 ற்கு அதிபதி. அவன்தான் மாரகன்!/++


    Ok sir..i quite confused.i have two question now,

    First one, For sara lagna lord of 11th will be the maraka graha or not...?

    Second one,Although mars is the lord of 2nd(dhana&kudumbha) sthana adhipathi...how come it becomes marka aspect?

    ReplyDelete
  30. Blogger Vinodh said...
    ++/SP.VR. SUBBIAH said...
    /////Blogger Vinodh said...
    sir in some books maraka grahas for thulam lagna is mentioned
    as Sun and mars... let me know the correct one?/////
    சூரியன், துலா லக்கினத்திற்கு லாபஸ்தானத்திற்கு அதிபதி!
    செவ்வாய் 2 & 7 ற்கு அதிபதி. அவன்தான் மாரகன்!/++
    Ok sir..i quite confused.i have two question now,
    First one, For sara lagna lord of 11th will be the maraka graha or not...?
    Second one,Although mars is the lord of 2nd(dhana&kudumbha) sthana adhipathi...how come it becomes marka aspect?/////

    அடிப்படை விதியே அதுதான். 2ஆம் வீடு அல்லது 7ஆம் வீடு ஆகியவற்றின் அதிபதிதான் மாரக அதிபதி. அதில் எதற்கு சந்தேகம்? எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் வரும்போது விவரமாக எழுதுகிறேன் சற்றுப் பொறுத்திருங்கள்

    ReplyDelete
  31. ஐயா
    வணக்கம்.
    தங்களுடைய சேவை பாராட்டுக்குரியது. மிகவும் பயனுக்குரியது. எனது ஜாதகத்தின் பலாபலன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 19.01.1979, காலை 4.35, சென்னை.

    நன்றி
    பாஸ்கர்

    ReplyDelete
  32. Vaathiyariya,

    I just read this posting.

    As you said, Maaragathipathi is 2nd or 7th lord.

    Is it from Rasi or Lagnam ?.

    Because for Miduna Lagnam, 2nd lord is Moon, but 7th lord is Guru..

    You have mentioned as Moon and Sani ( Sani is 8th and 9th lord from laknam or 2nd lord from Rasi )

    https://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=2735525522516437346&pli=1

    Which one to be considered for miduna laknam ?

    If Maaraghathipathi is also lord of 9th or 11 th house, will they still do the complete damage? or may be with less difficulties ?

    Is it true that Guru is good planet and will do good for all laknam ?



    Thanks
    Rajan

    ReplyDelete
  33. ////Rajan said...
    Vaathiyariya,
    I just read this posting.
    As you said, Maaragathipathi is 2nd or 7th lord.
    Is it from Rasi or Lagnam ?.//////

    It is from Lagna!
    >>>>>>>>>>>>>>>>>>>>>
    ////Is it true that Guru is good planet and will do good for all lagnam ?////

    Guru will confer good things according to his strength in the horoscope!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com