மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.12.08

யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?


அது ஒரு வனாந்திரக்காடு. கார்த்திகை மாதம். அடை மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடி கொடி என்று எல்லாமே ஈரமாகியிருந்தது.

பெரிய மரம் ஒன்றில், கூட்டில் இருந்த தூக்கனாங் குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்காமல், சேர்த்து வைத்திருந்த உணவைத் தின்று விட்டுக் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்தது.

மழை சற்று நின்றது. மழையால் ஏற்பட்ட இரைச்சலும் காணாமற்போனது.

நமது குருவியின் போதாத நேரம், கூட்டைவிட்டுத் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.

கூடு தொங்கிக் கொண்டிருந்த கிளைக்குக் கீழ் கிளையில் குரங்கு ஒன்று வெட வெடவென்று நடுங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையாலும், ஜில்'லென்ற சீதோஷ்ண நிலையாலும், முழுக்க ஆறு மணி நேரத்திற்கு மேல் அடை மழையில் நனைந்திருந்ததாலும் அந்த நடுக்கம்!

இரக்கம் கொண்ட குருவி, அந்தக் குரங்கைப் பார்த்துச் சொன்னது.

"அண்ணா! நீங்கள் என்னை விட நூறு மடங்கு வலிமையானவர். திறமையானவர்.
இப்படி நடுங்கும் நிலை ஏற்படலாமா? நீங்களும் என்னைப்போல ஒரு கூடைக்
கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வளவு
பாதுகாப்பாக இருக்கும்? நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?"

குரங்கார் மேலே நிமிர்ந்து பார்த்தார். அவருக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது?

"நீ எனக்கு எப்படி அறுவுரை சொல்லலாம்? என்னை என்ன முட்டாள் என்று
நினைத்தாயா? உனக்கு ஒரு கூடு இருப்பதால் தானே இந்தத் திமிர்ப் பேச்சு?
இப்போது என்ன செய்கிறேன் பார்!" என்று மேல் கிளைக்குத்தாவி, தொங்கிக்
கொண்டிருந்த கூட்டைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டிப் பிடிங்கித் தன்
கைகளில் பற்றியது.

அரண்டு போன குருவி கூட்டை விட்டுப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்தில்
போய் அமர்ந்து கொண்டு, தன் கூட்டிற்கு எற்படும் நிலைமையைத் தன்
கண்களால் பரிதாபமாகப் பார்த்தது.

என்ன ஏற்பட்டிருக்கும்?

குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூறுவார்களே அந்த நிலைதான் கூட்டிகும் ஏற்பட்டது.

கூடு சுக்கல் நூறாகி மரத்தின் கீழ் பகுதிகளில் சென்று விழுந்தது.

தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

45 comments:

  1. ஆகா கதை நன்றாகத்தான் இருக்கிறது,
    ஆனால் அடுத்த பாடம் எப்போது என்ற ஆவல் தான் மேலிடுகிறது,
    காத்திருக்கிறோம் ,காத்திருப்பது சுகமாய்த்தெரியவில்லை.
    ( இன்று முதல் மாணவனாநேன் )

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்ல கதை. அடுத்த பாடம் எப்போது அய்யா ?

    ReplyDelete
  4. btw,is it intended for somebody?

    -Shankar

    ReplyDelete
  5. இன்னொரு சோதிட வகுப்பு புத்தாண்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது அய்யா..

    For your information!!

    // ஸ்வாமி ஓம்கார் said...
    திரு வில்லியனூர் சந்தோஷ் ,

    திரு சுப்பையா அவர்களால் சிறப்பாக அடிப்படை ஜோதிட கூறுகள் கற்றுக்கொடுக்கப்படும் தளம் அது.

    ஓர் முழுமையான ஜோதிட ஆய்வை அதன் மூலம் செய்வது கடினம். ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து அதன் மூலம் வாழ்க்கை சம்பவங்களை இந்த தேதியில் நடக்கும் என்ற அளவுக்கு கூறக் கூடிய ஜோதிடம் இது.

    December 2, 2008 6:36 AM//

    http://vediceye.blogspot.com/2008/11/blog-post_29.html

    ReplyDelete
  6. It is easy when we are in prosperity to give advice to the afflicted.

    ReplyDelete
  7. //////KS said...
    ஆகா கதை நன்றாகத்தான் இருக்கிறது,
    ஆனால் அடுத்த பாடம் எப்போது என்ற ஆவல் தான் மேலிடுகிறது,
    காத்திருக்கிறோம் ,காத்திருப்பது சுகமாய்த்தெரியவில்லை.
    (இன்று முதல் மாணவனானேன் )/////

    அடுத்த பாடம் தயாராக இருக்கிறது. வாரக் கடைசியில் வலையேற்றினால் நமது வகுப்புக் கண்மணிகள் அனைவரும் அதைச் சூடாகப் படிக்க முடியாது. பாதிபேர்கள் - அவர்கள் மொழியில் சொன்னால் ஆணி பிடுங்கும் வேலையில் இருக்கிறார்கள். சனி, ஞாயிறு அவர்களுக்கு விடுமுறை தினங்கள். ஆகவே திங்கட்கிழமை யன்று பாடம் பதிவாகும். பொறுத்துக்கொள்ளுங்கள்.

    பிரியமான பெண்ணிற்காக காத்திருப்பவர்களிடம் கேளுங்கள்: காத்திருப்பது சுகமா?அல்லது சுகமில்லையா? என்று. தகுந்த பதிலை அவர்கள் சொல்வார்கள்

    ReplyDelete
  8. /////புதுகைத் தென்றல் said...
    super kathai sir,
    nandri/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. //////Geekay said...
    நல்ல கதை. அடுத்த பாடம் எப்போது அய்யா?////

    இதுவும் பாடம்தான்! நீதிக்கதை! நீங்கள் கேட்கும் ஜோதிடப்பாடம் திங்களன்று!

    ReplyDelete
  10. //////Vijay said...
    நல்ல கதை./////

    நன்றி விஜய்!

    ReplyDelete
  11. ////hotcat said..
    btw,is it intended for somebody?
    -Shankar/////

    இது பொதுவான நீதிக்கதை. தனிப்பட்ட யாருக்காகவும் இல்லை!

    ReplyDelete
  12. /////Geekay said...
    இன்னொரு சோதிட வகுப்பு புத்தாண்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது அய்யா..
    For your information!!
    // ஸ்வாமி ஓம்கார் said...
    திரு வில்லியனூர் சந்தோஷ் ,
    திரு சுப்பையா அவர்களால் சிறப்பாக அடிப்படை ஜோதிட கூறுகள் கற்றுக்கொடுக்கப்படும் தளம் அது.
    ஓர் முழுமையான ஜோதிட ஆய்வை அதன் மூலம் செய்வது கடினம். ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து அதன் மூலம் வாழ்க்கை சம்பவங்களை இந்த தேதியில் நடக்கும் என்ற அளவுக்கு கூறக் கூடிய ஜோதிடம் இது./////
    http://vediceye.blogspot.com/2008/11/blog-post_29.html/////

    தகவலுக்கு நன்றி. சுவாமிஜியின் பதிவுகளைப் படிப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன்!

    ReplyDelete
  13. /////Ragu Sivanmalai said...
    It is easy when we are in prosperity to give advice to the afflicted./////

    இது பொதுக்கதைதான். வளமையில் இருப்பவன் சொல்வது என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் நண்பரே?

    ReplyDelete
  14. வாழ்க்கையில் நானும் பட்டுக் கற்றது. இத 5 வருஷம் முன்னால படிச்சிருந்தாலும் எனக்கு நீதி விளங்கியிருக்காது:-)

    ReplyDelete
  15. நுணலும் தன் வாயால்கெடும்-பழமொழிக்கு ஏற்ப துர்க்கனாம்குருவி தன்வாயால் தனது கூட்டை இழந்துவிட்டது.அறிவுரை சொல்லும்முன் அதற்கு அவர் தகுதியானவரா என ஆய்ந்து சொல்லவேண்டும்.அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றோம்.காத்திருந்திருந்து படிப்பதில்தானே சுகமே இருக்கிறது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    வாழ்க்கையில் நானும் பட்டுக் கற்றது. இத 5 வருஷம் முன்னால படிச்சிருந்தாலும் எனக்கு நீதி விளங்கியிருக்காது:-)/////

    எனக்கும் இதில் சொந்த அனுபவம் உண்டு சகோதரி!

    ReplyDelete
  17. /////வேலன். said..
    நுணலும் தன் வாயால்கெடும்-பழமொழிக்கு ஏற்ப துர்க்கனாம்குருவி தன்வாயால் தனது கூட்டை இழந்துவிட்டது.அறிவுரை சொல்லும்முன் அதற்கு அவர் தகுதியானவரா என ஆய்ந்து சொல்லவேண்டும்.அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றோம்.காத்திருந்திருந்து படிப்பதில்தானே சுகமே இருக்கிறது.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    பாடம் ரெடியாக உள்ளது.அரங்கேற்றம் திங்களன்று!

    ReplyDelete
  18. அய்யா,

    கதை அருமை! மெச்சினேன் உங்கள் பொறுமை, கரு மூலம் சொல்ல வந்த நீதி, புரிய வெண்டியிவர்க்கும் புரியும் என நம்புகிறேன்.

    ஆவலுடன் திங்கட் கிழமை எதிர் பார்க்கிறேன்

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  19. /////Sridhar said...
    அய்யா,
    கதை அருமை! மெச்சினேன் உங்கள் பொறுமை, கரு மூலம் சொல்ல வந்த நீதி, புரிய வேண்டியிவர்க்கும் புரியும் என நம்புகிறேன்.
    ஆவலுடன் திங்கட் கிழமை எதிர் பார்க்கிறேன்
    நன்றி,
    ஸ்ரீதர் S/////

    இந்தக்கதை பொதுக்கதை. அனைவருக்கும் புரிந்தால் நல்லது நண்பரே!

    ReplyDelete
  20. //பிரியமான பெண்ணிற்காக காத்திருப்பவர்களிடம் கேளுங்கள்: காத்திருப்பது சுகமா?அல்லது சுகமில்லையா? என்று. தகுந்த பதிலை அவர்கள் சொல்வார்கள்//

    ஐயா
    போன பெண்ணுக்காகக் காத்திருந்து போனபெண் பேரிளம்பெண்ணாகிப் பேரப்பிள்ளைகளுடன்வந்திறங்கி , தாத்தாவுக்குப் பேரப்பிள்ளைகள் டாட்டா காட்டிச்சென்ற கதைகள் நம்நாட்டில் நிறையவே உள்ளன.

    ( இது 7 ஆம் இடத்து அதிபதி 8 ஆம் இடத்தில் நின்ற பலன் என்பதா )

    ReplyDelete
  21. /////KS said...
    //பிரியமான பெண்ணிற்காக காத்திருப்பவர்களிடம் கேளுங்கள்: காத்திருப்பது சுகமா?அல்லது சுகமில்லையா? என்று. தகுந்த பதிலை அவர்கள் சொல்வார்கள்//
    ஐயா
    போன பெண்ணுக்காகக் காத்திருந்து போனபெண் பேரிளம்பெண்ணாகிப் பேரப்பிள்ளைகளுடன்வந்திறங்கி , தாத்தாவுக்குப் பேரப்பிள்ளைகள் டாட்டா காட்டிச்சென்ற கதைகள் நம்நாட்டில் நிறையவே உள்ளன.
    ( இது 7 ஆம் இடத்து அதிபதி 8 ஆம் இடத்தில் நின்ற பலன் என்பதா )/////

    அந்தப் பெண்ணை யார் கேட்டார்கள் சுவாமி?
    உங்களுக்காக உருகுகின்ற அல்லது அவளுக்காக நீங்கள் உருகுகின்ற பெண்ணிற்குக் காத்திருப்பதைப் பற்றியல்லவா கேட்டேன்.
    அரிசியைப்பற்றிப் பேசினால், உமியைப் பற்றிப்பேசுகிறீர்களே?
    பூவைப் பற்றிப்பேசினால் சருகைப் பற்றிப்பேசுகிறீர்களே?
    ஷ்ரேயா ரெட்டியைப் பற்றிப் பேசினால், பானுமதியைப் பற்றிப் பேசுகிறீர்களே?
    என்ன நியாயம்?

    ReplyDelete
  22. மதிப்பிற்குரிய ஐயா,
    4-ஆம் வீடும் 8-ஆம் வீடும் பற்றிய பாடம் எதில் உள்ளது.
    தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை ?
    தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன்.
    Thanks in Advance

    ReplyDelete
  23. hello sir,

    I am also started read ur blogs. But I am in starting stage. newly join.

    present sir

    Yoga

    ReplyDelete
  24. /////Sunitha said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    4-ஆம் வீடும் 8-ஆம் வீடும் பற்றிய பாடம் எதில் உள்ளது.
    தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை ?
    தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன்.//////

    4-ஆம் வீடும் 8-ஆம் வீடும் பற்றிய பாடங்கள் இனி வரும்
    சற்றுப் பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  25. ////YOGANANDAM M said...
    hello sir,
    I am also started read ur blogs. But I am in starting stage. newly join.
    present sir
    Yoga//////

    வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக!
    பழைய பாடங்களை ஒவ்வொன்றாகப் படியுங்கள்

    ReplyDelete
  26. கதை நன்றாக உள்ளது வாத்தியாரே..

    தீயவர்களுக்குச் செய்யப்படும் அறிவுரையும் நமக்குத் தீதே என்பதையும் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..

    பாடங்களை திங்கள் முதல் வெள்ளிவரை என்று வைத்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  27. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    கதை நன்றாக உள்ளது வாத்தியாரே..
    தீயவர்களுக்குச் செய்யப்படும் அறிவுரையும் நமக்குத் தீதே என்பதையும் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்../////

    அதைத்தான் கவியரசர் கண்ணதாசனும் சொன்னார்: "அனுபவம் என்பது சீப்பு. தலை வழுக்கையான பிறகே அது கிடைக்கும்!
    ============================================
    ///// பாடங்களை திங்கள் முதல் வெள்ளிவரை என்று வைத்துக் கொள்ளுங்கள்..//////

    அப்படித்தான் செய்ய வேண்டும் உனா தானா!
    அலோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  28. நண்பர் சுப்பையா அவர்களே,
    அர்த்தமுள்ள கதை !
    இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????

    ReplyDelete
  29. மூடனுக்கு புத்தி சொல்லக் கூடாது என்பதே இக்கதையின் நீதி!

    ReplyDelete
  30. //இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????//

    இல்லை!

    ReplyDelete
  31. //தீயவர்களுக்குச் செய்யப்படும் அறிவுரையும் நமக்குத் தீதே என்பதையும் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..//

    இங்கே குரங்காரை தீயவர் என்று எப்படி ஒப்பிட்டீர்கள் உண்மைத் தமிழரே?

    கூடு கட்டி வாழும் வழக்கம் குருவிக்குத்தான் உண்டே அன்றி குரங்குக்கு அல்ல!

    அப்படி இருக்கையில் குரங்காருக்கு யோசனை சொன்னால் அது பரிகாசம் செய்ததாகவே எடுத்துக் கொள்ளப் படும் அல்லவா?

    ReplyDelete
  32. என்ன இருந்தாலும் நாமக்கல் காரனான நான் குரங்காரை விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?

    ஹே ராம்!

    ReplyDelete
  33. // நாமக்கல் சிபி said...
    //இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????//

    இல்லை!??


    100/100 இல்லை
    இல்லவே இல்லை
    கண்டிப்பா இல்லை
    உறுதியா இல்லை
    வாய்பே இல்லை
    நிச்சயமா இல்லை
    சத்யமா இல்லை
    கடவூளறிய இல்லை

    இதை நம்புவது உங்கள் வசதிபோல

    ReplyDelete
  34. /////அறிவன்#11802717200764379909 said...
    நண்பர் சுப்பையா அவர்களே,
    அர்த்தமுள்ள கதை !
    இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????///////

    எந்த வம்பிற்கும் நான் போவதில்லை. எதையும் தொடர்பு படுத்தி எழுதுவது. உள்குத்தாக எழுதுவது ஆகிய வேலைகளையெல்லாம் நான் செய்ய மாட்டேன். அது பதிவு தர்மமுமல்ல! எதையும் நேரடியாகச் சொல்வதையே நான் விரும்புவேன்.ஸோ இந்தக் கதை பொதுக்கதை. அவ்வளவுதான் அறிவன்ஜி

    ReplyDelete
  35. /////நாமக்கல் சிபி said...
    மூடனுக்கு புத்தி சொல்லக் கூடாது என்பதே இக்கதையின் நீதி!/////

    கரெக்ட்! Well said Sibiyaare!

    ReplyDelete
  36. /////நாமக்கல் சிபி said...
    //இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????//
    இல்லை!//////

    உண்மை! எனக்காகப் பரிந்துரைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  37. /////நாமக்கல் சிபி said...
    //தீயவர்களுக்குச் செய்யப்படும் அறிவுரையும் நமக்குத் தீதே என்பதையும் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..//
    இங்கே குரங்காரை தீயவர் என்று எப்படி ஒப்பிட்டீர்கள் உண்மைத் தமிழரே?
    கூடு கட்டி வாழும் வழக்கம் குருவிக்குத்தான் உண்டே அன்றி குரங்குக்கு அல்ல!
    அப்படி இருக்கையில் குரங்காருக்கு யோசனை சொன்னால் அது பரிகாசம் செய்ததாகவே எடுத்துக் கொள்ளப் படும் அல்லவா?/////

    இல்லை. அவை இரண்டையும் வைத்து மனிதனுக்குச் சொன்னது!

    ReplyDelete
  38. /////நாமக்கல் சிபி said...
    என்ன இருந்தாலும் நாமக்கல் காரனான நான் குரங்காரை விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?
    ஹே ராம்!////

    எல்லாக் குரங்குகளும் ஹனுமான் ஆகிவிடாது:-))))))

    ReplyDelete
  39. /////புரட்சித் தமிழன் said...
    // நாமக்கல் சிபி said...
    //இது சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ ?????//
    இல்லை!??
    100/100 இல்லை
    இல்லவே இல்லை
    கண்டிப்பா இல்லை
    உறுதியா இல்லை
    வாய்ப்பே இல்லை
    நிச்சயமா இல்லை
    சத்தியமாக இல்லை
    கடவுளறிய இல்லை
    இதை நம்புவது உங்கள் வசதிபோல////////

    கடவுளறிய இல்லை என்று எழுதிவிட்டு - நம்புவதைப் பற்றி - உங்கள் வசதிபோல என்று எழுதியது சரியாக இல்லை!:-((((((

    ReplyDelete
  40. தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் தந்த வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி
    அன்புடன்
    செல்லி

    ReplyDelete
  41. /////கத்துக்குட்டி(Selli) said...
    தமிழில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் தந்த வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி
    அன்புடன்
    செல்லி//////

    நன்றி சொல்வதுதானே முறை! பயன் படுத்துபவர்கள் அனைவரும் அதைச் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  42. //கடவுளறிய இல்லை என்று எழுதிவிட்டு - நம்புவதைப் பற்றி - உங்கள் வசதிபோல என்று எழுதியது சரியாக இல்லை!:-//

    ஒரு சிலர் தாங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் நம்பாமல் வீண் விதண்டாவாதம் செய்கிறார்களே.

    அந்த உங்கள் - அந்த நண்பர்களுக்காக.

    ReplyDelete
  43. ////புரட்சித் தமிழன் said...
    //கடவுளறிய இல்லை என்று எழுதிவிட்டு - நம்புவதைப் பற்றி - உங்கள் வசதிபோல என்று எழுதியது சரியாக இல்லை!:-//
    ஒரு சிலர் தாங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் நம்பாமல் வீண் விதண்டாவாதம் செய்கிறார்களே.
    அந்த உங்கள் - அந்த நண்பர்களுக்காக.////

    நம் நண்பர்கள் என்று சொல்லுங்கள். அவர்களுக்கென்றால் சரிதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com