மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.10.15

Humour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்?


Humour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும்  என்ன வித்தியாசம்?

முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்? விளக்கிச் சொல்கிறார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

-------------------------------------------------------------------------------------------------
2


என்ன செய்தார் கஸ்டமர் கேர் வாடிக்கையாளர்?

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.

தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.

அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில்
சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான
எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே
அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.

"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.
பின் குரல் தொடர்ந்தது...

"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது...

என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.

இப்பொழுது

"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும் தெரியாதவர் என்றால்
எண் 2 ஐ அழுத்தவும் கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ
அழுத்தவும் கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்
பேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும் நண்பர் என்றால்
எண் 6 ஐ அழுத்தவும் சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும் பால், பேப்பர்,
தபால்காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும் மீண்டும் முதலில்
இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்" என்ற அறிவிப்பு வந்தது.

ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில்
வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.

மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...

"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சிறிது பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.

"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!"

என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
கஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.

பாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.

"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்"

மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக
இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.

"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க
இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால்
திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டு
மென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்
என அறிவித்தது.

தன்னைத்தானே நொந்து கொண்டவராய்...

"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...

தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி
வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...வேக வேகமாக தள்ளிக்கொண்டு,
அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.

எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....

"எங்களுக்கும் காலம் வரும்".
(எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது?)
----------------------------------------------------------------
கஸ்டமர் கேரில் சிக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. ஐயா

    இரண்டாவது நகைச்சுவை அற்புதம். ஒவ்வொருவரும் நாள்தோறும் அனுபவிப்பதற்கு சரியான தீர்வு. நெற்றிப்பொட்டில் அடித்தது போன்று.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  2. மனைவி பால் எடுத்துவந்தால் முதல் இரவு; மகன் எடுத்து வந்தால் கடைசி இரவு' இது நகைச்சுவை மட்டுமல்ல‌மனைவி. ஒவ்வொருவரும் 'வாழ்க்கை நிலையாமை' பற்றி சிந்திக்க வேண்டிய உயர் தத்துவம்.

    இந்த கஸ்டமர் கேர் செய்தியும் நமக்கு ஏற்படும் அநுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே ஆகும்.எரிச்சலால் வந்த நகைச்சுவை.

    உங்கள் ரசனை உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  3. அய்யா அவர்களுக்கு வணகங்கள்!
    ”அதிசயங்கள் ஆயிரம்” தலைப்பில் உங்களுக்கு கட்டாயம் ஒரு விருது கொடுத்தே ஆக வேண்டும், பதிவுலகத்தாரால் மற்றும் மாணவர்களால்!!. தலைப்பிலேயே தங்களுடைய மனதை தெளிவு படுத்தும் படியான தலைப்பாக தேர்ந்தெடுக்கப் படுகின்றது சிறப்பு.
    முதல் இரவு சொம்பில் நிறைந்த பாலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் கணவன் கடைசி இரவு பாலை எதிர்பார்த்து காத்திருப்பான்.
    கஸ்டமர் கேர் ஜோக்கை காப்பி அருந்திக்கொண்டே படிக்க ஆரம்பித்து வாயிலிருந்த காபி வெளியே சிந்தி லேப்டாப்பில் விழுந்து நானே ”சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி” என பாட ஆரம்பித்துவிட்டேன்.முழு ஜோக்கையும் படித்து சிரித்து முடிக்க 5 நிமிடங்கள் பிடித்தன.
    ஆனால் தங்களுடைய எழுத்து,எண்ணம்,தலைப்பை தேர்ந்தெடுக்கும் விதம் தங்கள் ஜாதகத்தில் அமைந்துள்ள புதனின் வலுவை பறைசாற்றுகின்றன.
    வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றோம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Nice...superb...

    Have a pleasant day.

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  5. ஆமாம் குரு. இதுபோல் சிக்கியதுண்டு. நன்றி, செல்வம்.

    ReplyDelete
  6. ///Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    இரண்டாவது நகைச்சுவை அற்புதம். ஒவ்வொருவரும் நாள்தோறும் அனுபவிப்பதற்கு சரியான தீர்வு. நெற்றிப்பொட்டில் அடித்தது போன்று.
    எம்.திருமால்
    பவளத்தானூர்////

    உண்மைதான். கஸ்டமர் கேரில் சிக்கித் தவிப்பவர்கள் அனைவருக்கும் இதைப்படித்தவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் ஏற்பட்டிருக்கும்
    நன்றி பெருமாள்/திருமால்

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    மனைவி பால் எடுத்துவந்தால் முதல் இரவு; மகன் எடுத்து வந்தால் கடைசி இரவு' இது நகைச்சுவை மட்டுமல்ல‌மனைவி. ஒவ்வொருவரும் 'வாழ்க்கை நிலையாமை' பற்றி சிந்திக்க வேண்டிய உயர் தத்துவம்.
    இந்த கஸ்டமர் கேர் செய்தியும் நமக்கு ஏற்படும் அநுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே ஆகும்.எரிச்சலால் வந்த நகைச்சுவை.
    உங்கள் ரசனை உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்////

    உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நானும் தலை வணங்குகிறேன். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  9. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணகங்கள்!
    ”அதிசயங்கள் ஆயிரம்” தலைப்பில் உங்களுக்கு கட்டாயம் ஒரு விருது கொடுத்தே ஆக வேண்டும், பதிவுலகத்தாரால் மற்றும் மாணவர்களால்!!. தலைப்பிலேயே தங்களுடைய மனதை தெளிவு படுத்தும் படியான தலைப்பாக தேர்ந்தெடுக்கப் படுகின்றது சிறப்பு.
    முதல் இரவு சொம்பில் நிறைந்த பாலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் கணவன் கடைசி இரவு பாலை எதிர்பார்த்து காத்திருப்பான்.
    கஸ்டமர் கேர் ஜோக்கை காப்பி அருந்திக்கொண்டே படிக்க ஆரம்பித்து வாயிலிருந்த காபி வெளியே சிந்தி லேப்டாப்பில் விழுந்து நானே ”சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி” என பாட ஆரம்பித்துவிட்டேன்.முழு ஜோக்கையும் படித்து சிரித்து முடிக்க 5 நிமிடங்கள் பிடித்தன.
    ஆனால் தங்களுடைய எழுத்து,எண்ணம்,தலைப்பை தேர்ந்தெடுக்கும் விதம் தங்கள் ஜாதகத்தில் அமைந்துள்ள புதனின் வலுவை பறைசாற்றுகின்றன.
    வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றோம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.//////

    உங்களுடைய மேலான பாராட்டுக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  10. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Nice...superb...
    Have a pleasant day.
    With kind regards,
    Ravi/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger selvam velusamy said...
    ஆமாம் குரு. இதுபோல் சிக்கியதுண்டு. நன்றி, செல்வம்.//////

    ஆமாம். பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். நன்றி செல்வம்!

    ReplyDelete
  12. ப்ரமாதம் குருஜி, சிரித்து வயிறு நோகுது. அந்தப் பெண்மணியின் ஜோக்கு, தத்துவக் கோர்வை
    நன்றி, ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  13. //////Blogger Rajam Anand said...
    ப்ரமாதம் குருஜி, சிரித்து வயிறு நோகுது. அந்தப் பெண்மணியின் ஜோக்கு, தத்துவக் கோர்வை
    நன்றி, ராஜம் ஆனந்த்/////

    வாரம் ஒரு நாளாவது நம்மை மறந்து சிரித்து மகிழ வேண்டாமா? அதன் காரணமாகத்தான் வாரம் ஒரு பதிவாவது நகைச்சுவைப் பதிவு வெளியிடுகிறேன். உங்கள் ரசனை உணர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com