மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.10.15

Humour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்!


Humour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்!

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கவும். வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------------------------------------
வங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:

”ஏம்ப்பா, மாடு வாங்கணும்ன்னு லோன் வாங்கறியே கரெக்டா கட்டுவியா?”

“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா?, நிச்சயமா கட்டி வைப்பேன் சார்”.

“நான் கேட்டது மாட்டை இல்லை.”

“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க.?”

“அப்ப வாங்கினப்புறம் கேட்டா.?”

“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது.”

“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை.”

“பின்னே எதை.?”

“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்.”

“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படிக் குடுப்பேன்?”.

”ஐயோ…. சரி.. ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா?

”கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை.”

“நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தான் கேட்டீங்க.”

“உன்னை ஏன் கட்டணும்.?”

“என்னைக் கேட்டா? நீங்கதானே சொன்னீங்க, கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு. அப்ப என்னைன்னுதானே அர்த்தம்?”

“கேட்டது உன்னைத்தான்.”

“அப்படீன்னா ஏன் என்னைக் கட்டணும்ன்னும் நீங்களே சொல்லிடுங்க.”

“கட்டறதுன்னா மாடும், நீயும்தானா?..மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா.?”

“மூணாவதான்னா… நீங்கதான் இருக்கீங்க”.!.

“என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லைன்னா உன்னைக் கடிச்சாலும் கடிச்சிடுவேன்.”

“அப்பவே சொன்னாங்க அந்த பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு.”
======================================================
எப்படி உள்ளது சாமிகளா?

அன்புடன்,
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. நல்ல நகைச்சுவை.இப்படி நம் வாழ்விலும் நாம் ஒன்று சொல்ல மற்றவர்கள் வேறு மாதிரிப் புரிந்து கொள்வது நடக்கிறது.

    எங்கள் விட்டுப்பணியாளர் ஒரு முறை விடுப்பு கேட்கும் போது 'ஓம சக்தி'க்குப் போக வேண்டும் என்றார்.அதென்ன ஓம சக்தி, வெந்தய சக்தி, சீரக சக்தி என்று கேட்டேன். அது ஓம் சக்தியாம்!!

    ReplyDelete
  2. Anbudan vathiyaar ayya vanakkam

    Asathal. Arumaiooo arumai...

    ReplyDelete
  3. Like 'Enna ennanai' vadivelu comedy. Nice one.

    ReplyDelete
  4. ஆமாம் பைத்தியம் தான்
    அப்படி தான் சொன்னங்க..

    ReplyDelete
  5. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!,
    மிக நல்ல நகைச்சுவை. ரசித்து முடித்ததும் மீண்டும் மீண்டும் படித்தபோது ஒரு சந்தேகமே வந்துவிட்டது, இந்த நகைச்சுவை, வாசித்தவர்களை கட்டிப்போட்டதுடன்,பைத்தியம் பிடித்தது மேனேஜருக்கா அல்லது வாசகர்களுக்கா?......
    அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை வாத்தியார் இந்த தலைப்பின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள் என்பது சரிதானே ஐயா?.... “ அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்”..........!!!!!!!!!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்

    Nice joke

    Kannan.

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    நல்ல நகைச்சுவை.இப்படி நம் வாழ்விலும் நாம் ஒன்று சொல்ல மற்றவர்கள் வேறு மாதிரிப் புரிந்து கொள்வது நடக்கிறது.
    எங்கள் வீட்டுப்பணியாளர் ஒரு முறை விடுப்பு கேட்கும் போது 'ஓம சக்தி'க்குப் போக வேண்டும் என்றார்.அதென்ன ஓம சக்தி,
    வெந்தய சக்தி, சீரக சக்தி என்று கேட்டேன். அது ஓம் சக்தியாம்!!//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete

  8. ////Blogger hamaragana said...
    Anbudan vathiyaar ayya vanakkam
    Asathal. Arumaiooo arumai...//////

    நன்றி. கணபதியாரே!

    ReplyDelete


  9. //////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா//////////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete



  10. //////Blogger selvaspk said...
    Like 'Enna ennanai' vadivelu comedy. Nice one//////

    நல்ல்து. நன்றி நண்பரே!.

    ReplyDelete
  11. /////Blogger வேப்பிலை said...
    ஆமாம் பைத்தியம் தான்
    அப்படி தான் சொன்னங்க////////..

    சொன்னவர்களுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. ///////GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!,
    மிக நல்ல நகைச்சுவை. ரசித்து முடித்ததும் மீண்டும் மீண்டும் படித்தபோது ஒரு சந்தேகமே வந்துவிட்டது, இந்த நகைச்சுவை,
    வாசித்தவர்களை கட்டிப்போட்டதுடன்,பைத்தியம் பிடித்தது மேனேஜருக்கா அல்லது வாசகர்களுக்கா?......
    அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை வாத்தியார் இந்த தலைப்பின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள் என்பது சரிதானே ஐயா?....
    “ அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்”..........!!!!!!!!!!!

    நல்லது. நீங்கள் சொன்னால் சரிதான். நன்றி பொன்னுசாமி அவர்களே.

    ReplyDelete
  13. ///////Blogger நன்மனம் said...
    super :-) :-) :-)///////

    thanks nanmanam

    ReplyDelete
  14. ///////Blogger நன்மனம் said...
    super :-) :-) :-)///////

    thanks nanmanam

    ReplyDelete
  15. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    Nice joke
    Kannan.//////

    நல்லது. நன்றி கண்ணன்!!!!!

    ReplyDelete
  16. ஓன்றுமே புரியலே உலகத்திலே.

    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  17. அருமை வாத்தியாரே...

    குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம்.... நன்றி...

    ReplyDelete
  18. /////Blogger Rajam Anand said...
    ஓன்றுமே புரியலே உலகத்திலே.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்///////////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /////Blogger Rajam Anand said...
    ஓன்றுமே புரியலே உலகத்திலே.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்///////////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. //////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமை வாத்தியாரே..
    குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம்.... நன்றி..////////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மி நாராயணன்!!.

    ReplyDelete
  21. Monday, October 19, 2015 11:46:00 PM Delete
    /////Blogger பரிவை சே.குமார் said...
    ரசித்தேன் ஐயா..//////

    நல்லது. நன்றி குமார்!!!

    ReplyDelete
  22. நன்று அய்யா... விசு ஞாபகம் வந்தார்...!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com