மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.10.15

புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக இருக்கும்
---------------------------------------------------------------------
புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?

பசு காப்பாற்றியதா அல்லது காப்பாற்றவில்லையா? விபரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்
---------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்லிருந்து என்னை காப்பாற்றிய பசு :
written by Amit Vaidhya
________________________________________
நான் அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று என்னுடைய
27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் .

"என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

சிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது.

ஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன்.

மருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடைய மரணதிற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.

இறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன்.

உறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்.

இறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது.

40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையைக் கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுநோய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணரத் துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.

மரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன்.

தற்போது "ஹீலிங் வைத்யா" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. எனக்கு இந்தியா நிறையக் கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..

தற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....
புனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு
மேலும் படிக்க : www.healingvaidya.org
http://www.live4todayamit.com/press.html.  
============================================
மேலதிகத் தகவலுக்கு இதையும் க்ளிக்கிப் படியுங்கள்:
http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_panchakavya.html
=================================================================
Please share this msg. Maybe useful to someone

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. உள்ளேன் ஐயா
    கேட்கும் போதே மனம் மகிழ்சியாக உள்ளது. பசு நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதை நாம் பாலிற்கு மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த தகவலை அனுப்பிய வாத்யார் அய்யாவுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

    ReplyDelete
  2. ஐயா

    பஞ்சகவ்ய மகிமையை எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  3. நல்ல செய்திதான். ஒரிரு நபர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் உதவாது. இதனை இன்னும் அதிகமாக ஆய்வு செய்து மக்களுக்குக் கூற வேண்டும்.

    சாதரண, சராசரி ம‌னிதன் எந்த ஒரு வைத்திய முறையைப் பற்றியும் அதிக ஆர்வமோ, அதிக அலட்சியமோ காட்ட வேண்டியதில்லை.எதில் தனக்கு விரைந்த,நாட்பட்ட சுகம் கிடைக்கிறதோ அதனைக் கைக்கொண்டால் போதுமானது.

    அல்லோபதியில் பரிசோதனை முறைகளும், அறுவை சிகிச்சையும் நன்கு முன்னேறிவிட்டன. அதில் அளிக்கப்படும் மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை அவ‌ர்களே நன்கு கூறுகிறார்கள்.அதுபோல மற்ற மருத்துவங்களில் கூறுவதில்லை.அது போலவே மற்ற மருத்துவங்களில் டோசேஜ் பற்றிய பொதுவான அபிப்ராயம் இல்லை.

    எனக்கு சொரியாஸிஸ் குப்பைமேனியால் சரியாயிற்று. அதுவே இன்னும் பலபேருக்கு சரியாகவில்லை.

    ReplyDelete
  4. It is very useful to all ...Thanks once again ...

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்கு பிறகு அடியேன் வருகை. ஏற்றுக் கொள்ளவும். ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்

    ReplyDelete
  6. அற்புதமான பகிர்வு குரு. நன்றி, செல்வம்

    ReplyDelete
  7. Respected Sir,

    Happy morning... important and useful post...Thanks for sharing.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்

    பஞ்சகௌவியம் சித்த மருத்துவ த்தில் அறிய மருந்தாக பயன்பட்டு வருகிறது.
    மிகச்சிறந்த கிருமி நாசினியாக பசு சாணம் ,
    கோமியம் இன்னும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

    அறிய தகவலுக்கு நன்றி ஐயா

    கண்ணன்

    ReplyDelete
  9. Vanakkam iyya,

    Migavum payanulla thagaval :) Mikka nandri.

    Nandri,
    Bala

    ReplyDelete
  10. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    "FACTS OF LIFE" தலை வாசல் வாசகம் பார்த்ததுமே புரிந்தது வாத்தியார் ஒரு புதுமையான(?) விஷயம் சொல்கிறார் என்று.
    ஒரு ஆர்வக் கோளாறினால் சித்த வைத்திய முறைகளைப் படித்து பார்க்க ஒரு பாக்கியம் கிடைத்தது.இதே விஷயத்தை ஒரு சித்த வைத்தியரிடமும் கலந்தாய்வு செய்யும் பாக்கியமும் பெற்றேன்.சித்த வைத்தியத்தில் பஞ்ச கவ்வியம் மிக சிலாகித்து சொல்லப் பட்டுள்ளது.எம்பெருமான் திருமாலின் திருக் கோவில்களிலும் கொடுக்கப் படும் தீர்த்தம் பஞ்சகவ்வியமே - இது நோய் தீர்க்கும் அருமருந்து (அமிர்தத்திற்கு இணையாக) சொல்லப் படுகின்றது. எந்த நோய் எனினும் சித்த மருந்தை பசுநெய் அல்லது தேனுடன் சேர்த்து உண்ணும் படி அறிவுறுத்தப் படுகின்றது.
    முக்கியமான விஷயம் அதுவல்ல. இது போன்ற மருந்துகளை வெளியில் சொல்லாமல் காசு பார்க்க விற்கப்படுகின்றது.இன்றைய விஷயத்தை படித்த பலரும் இதனால் பயன் அடைவர் என்பது உறுதி.எனது கருத்துப் படி நமது வகுப்பறை அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஒளியாக, பஞ்சகவ்வியம் போன்று செயலாற்றுகின்றீர்கள்.நன்றி.
    சித்த வைத்தியத்தில் வயிற்று உப்புசத்திற்கு துளி எறுமை சாணம் நீரில் கலந்து குடிக்க உடனே சரியாகும். குடல் நோய்வாய்ப்பட்டால் பசி எடுக்காது, ருசி தெரியாது. ஆட்டுகுடலை சமைத்து உண்ண நோய் குணமாகும். ஆறாத புண்ணுக்கு அவரை இலை சாறு தேய்த்து, அவரை இலையை வைத்து கட்ட உடனே குணமாகுமாம்.
    இன்றைய அலோபதி மருத்துவர்களும் சித்த வைத்தியர்களின் உதவி நாடி அலைகின்றனர்.
    தங்களின் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பதிவில் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என பதிவியிருந்தீர்கள். அமிர்தம் போன்ற அருமருந்து அதுதான். இன்றைய தேதியில் விளம்பரங்களில் வரும் சித்த மருந்துகள் பலன் தராது. உண்மையான குரு மருந்து எனப்படும் சித்தர்கள் குறிப்பிட்ட மருந்து சேர்க்கப் படும்போதுதான் அவை வேலை செய்யுமாம்.
    முக்கிய குறிப்பு: நான் சித்த வைத்தியனல்ல.
    சில நல்ல முக்கியமான விசயங்களை தங்கள் பதிவின் மூலம் சாதாரண சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் தெய்வத் திருப் பணிகள் என்றென்றும் தொடரவேண்டி வணங்குகின்றோம்.
    வாழ்க தங்கள் நலம்! வளர்க தங்கள் திருப்பணிகள்!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..

    ம்ஹ்ம்ம் நாம சொன்ன யாரு கேட்பா..இதே இது வெளி நட்டு காரன் ஆராய்ச்சி செஞ்சு சொன்ன ஆஹா ஓஹோ என்று புகழ்வான்..
    அய்யா .ஒரு முக்கியமான விஷயம் நமது வகுப்பறை வரும் சக மாணவர் ஒருவருக்கு இது போன்ற ஒரு புற்று நோய் உள்ளது கீமோ தெரபி எடுத்து கொண்டிருக்கிறார்.. அவரும் தனது வாழ் நாளை எண்ணி கொண்டிருக்கிறார் ...அவருடன் தொடர்பு இருக்கிறது ..
    பழனி அப்பன் மனசு வைத்து இதை அவர் பின் பற்றினால் குணமாகும்.. அப்பன் கடை கண் பார்பாணா ???

    ReplyDelete
  12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    தங்களின் இந்த பதிவை .அப்படியே தட்டச்சு செய்து . எனது முக நூல் பக்கத்தில் வெளி இட்டுள்ளேன் ..
    நிறைய பேர் பயனடிவார்கள் ..
    நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  13. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    கேட்கும் போதே மனம் மகிழ்சியாக உள்ளது. பசு நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதை நாம் பாலிற்கு மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த தகவலை அனுப்பிய வாத்யார் அய்யாவுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  14. ////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    பஞ்சகவ்ய மகிமையை எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி.
    எம்.திருமால்
    பவளத்தானூர்/////

    நல்லது. நன்றி பவளத்தானூர்க்காரரே!

    ReplyDelete
  15. //////Blogger kmr.krishnan said...
    நல்ல செய்திதான். ஒரிரு நபர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டும் உதவாது. இதனை இன்னும் அதிகமாக ஆய்வு செய்து மக்களுக்குக் கூற வேண்டும்.
    சாதரண, சராசரி ம‌னிதன் எந்த ஒரு வைத்திய முறையைப் பற்றியும் அதிக ஆர்வமோ, அதிக அலட்சியமோ காட்ட வேண்டியதில்லை.எதில் தனக்கு விரைந்த,நாட்பட்ட சுகம் கிடைக்கிறதோ அதனைக் கைக்கொண்டால் போதுமானது.
    அல்லோபதியில் பரிசோதனை முறைகளும், அறுவை சிகிச்சையும் நன்கு முன்னேறிவிட்டன. அதில் அளிக்கப்படும் மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை அவ‌ர்களே நன்கு கூறுகிறார்கள்.அதுபோல மற்ற மருத்துவங்களில் கூறுவதில்லை.அது போலவே மற்ற மருத்துவங்களில் டோசேஜ் பற்றிய பொதுவான அபிப்ராயம் இல்லை.
    எனக்கு சொரியாஸிஸ் குப்பைமேனியால் சரியாயிற்று. அதுவே இன்னும் பலபேருக்கு சரியாகவில்லை.//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////Blogger vignesh waran said...
    It is very useful to all ...Thanks once again ...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger SELVARAJ said...
    நீண்ட நாட்களுக்கு பிறகு அடியேன் வருகை. ஏற்றுக் கொள்ளவும். ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்/////

    வகுப்பறையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!

    ReplyDelete
  18. /////Blogger selvam velusamy said...
    அற்புதமான பகிர்வு குரு. நன்றி, செல்வம்//////

    நல்லது. நன்றி செல்வம் வேலுசாமி!

    ReplyDelete
  19. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... important and useful post...Thanks for sharing.
    With kind regards,
    Ravichandran M.//////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  20. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    பஞ்சகௌவியம் சித்த மருத்துவ த்தில் அறிய மருந்தாக பயன்பட்டு வருகிறது.
    மிகச்சிறந்த கிருமி நாசினியாக பசு சாணம் ,
    கோமியம் இன்னும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
    அறிய தகவலுக்கு நன்றி ஐயா
    கண்ணன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  21. ////Blogger nandha kumar said...
    நல்ல பதிவு

    நல்லது. நன்றி நந்தகுமார்!

    ReplyDelete
  22. /////Blogger bala said...
    Vanakkam iyya,
    Migavum payanulla thagaval :) Mikka nandri.
    Nandri,
    Bala////

    நல்லது. நன்றி பாலா!

    ReplyDelete
  23. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    "FACTS OF LIFE" தலை வாசல் வாசகம் பார்த்ததுமே புரிந்தது வாத்தியார் ஒரு புதுமையான(?) விஷயம் சொல்கிறார் என்று.
    ஒரு ஆர்வக் கோளாறினால் சித்த வைத்திய முறைகளைப் படித்து பார்க்க ஒரு பாக்கியம் கிடைத்தது.இதே விஷயத்தை ஒரு சித்த வைத்தியரிடமும் கலந்தாய்வு செய்யும் பாக்கியமும் பெற்றேன்.சித்த வைத்தியத்தில் பஞ்ச கவ்வியம் மிக சிலாகித்து சொல்லப் பட்டுள்ளது.எம்பெருமான் திருமாலின் திருக் கோவில்களிலும் கொடுக்கப் படும் தீர்த்தம் பஞ்சகவ்வியமே - இது நோய் தீர்க்கும் அருமருந்து (அமிர்தத்திற்கு இணையாக) சொல்லப் படுகின்றது. எந்த நோய் எனினும் சித்த மருந்தை பசுநெய் அல்லது தேனுடன் சேர்த்து உண்ணும் படி அறிவுறுத்தப் படுகின்றது.
    முக்கியமான விஷயம் அதுவல்ல. இது போன்ற மருந்துகளை வெளியில் சொல்லாமல் காசு பார்க்க விற்கப்படுகின்றது.இன்றைய விஷயத்தை படித்த பலரும் இதனால் பயன் அடைவர் என்பது உறுதி.எனது கருத்துப் படி நமது வகுப்பறை அறியாமை என்னும் இருளைப் போக்கும் ஒளியாக, பஞ்சகவ்வியம் போன்று செயலாற்றுகின்றீர்கள்.நன்றி.
    சித்த வைத்தியத்தில் வயிற்று உப்புசத்திற்கு துளி எறுமை சாணம் நீரில் கலந்து குடிக்க உடனே சரியாகும். குடல் நோய்வாய்ப்பட்டால் பசி எடுக்காது, ருசி தெரியாது. ஆட்டுகுடலை சமைத்து உண்ண நோய் குணமாகும். ஆறாத புண்ணுக்கு அவரை இலை சாறு தேய்த்து, அவரை இலையை வைத்து கட்ட உடனே குணமாகுமாம்.
    இன்றைய அலோபதி மருத்துவர்களும் சித்த வைத்தியர்களின் உதவி நாடி அலைகின்றனர்.
    தங்களின் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பதிவில் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என பதிவியிருந்தீர்கள். அமிர்தம் போன்ற அருமருந்து அதுதான். இன்றைய தேதியில் விளம்பரங்களில் வரும் சித்த மருந்துகள் பலன் தராது. உண்மையான குரு மருந்து எனப்படும் சித்தர்கள் குறிப்பிட்ட மருந்து சேர்க்கப் படும்போதுதான் அவை வேலை செய்யுமாம்.
    முக்கிய குறிப்பு: நான் சித்த வைத்தியனல்ல.
    சில நல்ல முக்கியமான விசயங்களை தங்கள் பதிவின் மூலம் சாதாரண சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் தெய்வத் திருப்பணிகள் என்றென்றும் தொடரவேண்டி வணங்குகின்றோம்.
    வாழ்க தங்கள் நலம்! வளர்க தங்கள் திருப்பணிகள்!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    அவ்வப்போது சங்கை எடுத்து ஊதிக் கொண்டிருக்கிறேன். சாமிகளுக்கு செய்திகள் போய்ச் சேர்ந்தால் போதும். நான் எழுதுவதின் நோக்கமும் அதுதான் நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  24. /////Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
    ம்ஹ்ம்ம் நாம சொன்ன யாரு கேட்பா..இதே இது வெளி நட்டு காரன் ஆராய்ச்சி செஞ்சு சொன்ன ஆஹா ஓஹோ என்று புகழ்வான்..
    அய்யா .ஒரு முக்கியமான விஷயம் நமது வகுப்பறை வரும் சக மாணவர் ஒருவருக்கு இது போன்ற ஒரு புற்று நோய் உள்ளது கீமோ தெரபி எடுத்து கொண்டிருக்கிறார்.. அவரும் தனது வாழ் நாளை எண்ணி கொண்டிருக்கிறார் ...அவருடன் தொடர்பு இருக்கிறது ..
    பழனி அப்பன் மனசு வைத்து இதை அவர் பின் பற்றினால் குணமாகும்.. அப்பன் கடை கண் பார்ப்பானா ???//////

    பார்ப்பாரா என்ற சந்தேகம் எதற்கு? பார்ப்பார் என்ற முழு நம்பிக்கையோடு செய்யச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  25. //////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    தங்களின் இந்த பதிவை .அப்படியே தட்டச்சு செய்து . எனது முக நூல் பக்கத்தில் வெளி இட்டுள்ளேன் ..
    நிறைய பேர் பயனடைவார்கள் ..
    நன்றி..நன்றி..நன்றி..///////

    இதற்கு எதற்கு இத்தனை நன்றி! நல்ல செயலைத்தானே செய்துள்ளீர்கள் கணபதியாரே!

    ReplyDelete
  26. Very very useful information thank you sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com