மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

6.1.15

Quiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள்!


Quiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள்!

புதிர் எண் 73ற்கான விடை

6.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
3 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம்
ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா?
வாய்ப்பு உள்ளதா?
3. அவருடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது? அல்லது
எப்படி இருக்கும்?

சரியான பதில்கள்:

1. ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.
2. தாமதமாக அவருடைய 31 வயதில் நடந்தது.
3. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைந்தது.

ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள், பார்ப்போம்!

1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 3ம் இடமான
வெற்றி ஸ்தானத்தில். அவர் நீசமடைந்திருந்தாலும் குரு
பகவானின் சேர்க்கையால் வலிமை பெற்றுள்ளார்.

2. பூராட நட்சத்திரம். ராசிக்குரிய குரு பகவான், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் நல்ல நிலைமையில் உள்ளார்.

3. ஏழாம் அதிபதி சனீஷ்வரன் லக்கினத்திற்கு 9ம் வீட்டில் அவர் நீசமடைந்திருந்தாலும், லக்கினாதிபதி சூரியன், குரு பகவான்,
2 & 11ற்குரிய புதன் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியோரின் பார்வையை பெற்று வலிமையாக உள்ளார்.

4. சனியைத் தவிர்த்து மற்ற முக்கியமான கிரகங்கள் எல்லாம்
கேது & ராகு கம்பெனியின் பிடியில் உள்ளன. அதனால் தாமதமான
பலன்கள்.

5. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதுடன் ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை
யாகி உள்ளார். இருவரும் சேர்ந்து ஜாதகிக்கு நல்ல திருமண
வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

6. ஏழு மற்றும் ஒன்பதாம் அதிபதிகளின் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதுடன், நல்ல துணையையும் கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

7. 7ல் உள்ள ராகு தன் பங்கிற்குத் திருமணத்தைத் தாமதப் படுத்தினான்.

8. சந்திர ராசியில் இருந்து, அந்த ராசிக்கு 7ம் அதிபதியான  புதன் 11ல் இருப்பதுடன், குருவுடனும் சேர்ந்து உள்ளான். அத்துடன் அவருடன் களத்திரகாரகன் சுக்கிரனும் உள்ளார். அது மட்டுமா சந்திர ராசிக்கு 9ம் அதிபதியான சூரியனும் அவர்களோடு கூட்டாக உள்ளான். அந்த
அமைப்பு நல்ல கணவனையும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
யையும் கொடுக்கும். கொடுத்தது.

9. எதற்கும் கால நேரம் அமைய வேண்டுமல்லவா? அதாவது உரிய
தசா புத்தி வர வேண்டுமல்லவா? அதன்படி ஜாதகிக்கு யோககாரகன் செவ்வாயின் மகா திசையில் சுக்கிர புத்தியில் ஜாம் ஜாம் என்று
திருமணம் நடந்தேறியது.

10. இரண்டில் மாந்தி இருப்பதை வைத்துப் பலரும் குழம்பி இருப்பீர்கள்.
அந்த வீட்டுக்காரன், அதாவது மாந்தி அமர்ந்த இரண்டாம் வீடான
குடும்ப ஸ்தானத்தின் அதிபதி புதன், குருவுடன் சேர்ந்ததால், மாந்தியை
ஓரம் கட்டிவிட்டு ஜாதகிக்கு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தான்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:

அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான
பாராட்டுக்கள். அவர்களின் பதில்களுக்கு நட்சத்திரக்குறியிடு
(ஸ்டார்) போட்டிருக்கிறேன்.

மீதமுள்ள 14 பேர்களும் இரண்டில் ஒன்றிற்குத்தான் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அதாவது திருமணமாகியிருக்கும் ஆனால் குடும்பவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எழுதியுள்ளார்கள் அவர்களுக்கு 1/2 மதிப்பெண்கள் போட்டு அதை அவர்களுடைய
பதிலில் சேர்த்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
***//////Blogger slmsanuma said...
    Date of Birth 14.11.1969
    MARRIEAGE
    1) The 7th house lord Saneeswaran is situated in 3rd place to 7th house get Neesha Bagam by and Parivarthanai with Sevaai who is Uacham. Lagna lord (suriyan) is also get Neesha Bangam by Sukkaran in own house.
    2) Sukkaran is in own house with Guru and Guru see the 7th house.
    3) Thosam by Ragu in 7th house is nullified by Guru Parvai.
    4) The benefic planets sukkran, chandran, guru are not spoiled and thus she got married.
    FAMILY LIFE
    1) The second house lord Budhan is situated in second place to second house and also associated with Lakna lord (Suriyan) (Neesa Bangam) with Guru and Sukkaran (own House).
    2) Though get the direct view of Saneeswaran from 9th House (Neesha Bagam and Parivarthanai with Sevaai who is Uacham), Guru bear this negaiveness of Saneeswaran.
    3) The benefic planets sukkran, chandran, guru, Bhudan are not spoiled and thus her family life is good.
    CONCLUSION
    So as per the above findings She got married during 12.8.95 to 12.8.2002 Sevvai Dasa and her family life is good.
    Monday, January 05, 2015 9:12:00 AM/////
----------------------------------------------------
2
1/2  //////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்........
    அம்மனி ஜாதகம்..
    1. 2ல் மாந்தி, 7ல் ராகு
    2. செவ்வாய்+சனி பரிவர்த்தனை
    3.சூரி,புத,சுக்,குரு,செவ்=
    இந்த 5 ஆசாமிகழும் சனியின்
    மப்பான பார்வையில்
    மயங்கிபோனார்கள்!!!
    30 வயதில் செவ்வாய் திசையில்
    திருமணம் நடந்திருக்கும்.......
    Monday, January 05, 2015 10:04:00 AM/////
-------------------------------------------------
3
1/2 //////Blogger valli rajan said...
    Dear Guruji,
    1. maanthi in 2nd house bad for family life.
    2. ketu in 1st house and rahu in 7th house bad.
    3. 7th lord is neecham.
    4.guru aspect of 7th lord is relief.
    5. 6th Lord and 9th lord exchange is bad.
    6. yogakarakan mars is exalted but in 6th house.
    Definitely there is marraige in rahu dasa guru sub period. But marriage will not be happy.
    Monday, January 05, 2015 10:54:00 AM/////
-------------------------------------------------
4
*** //////Blogger trmprakaash@gmail.com said...
    ayya,
    1. ivarukku thirumanam aagiyirukkum. (karanam guru paarvai 7 m veettirkku matrum 7 m athipathikku.
    2. Raghu Thisaiyil Thirumanam Aagiyirukkum. Kumba Raghu Nanmaiye seivar. Kooda Kumba Raghuvirkku Guru Paarvai Ulladhu.
    3. Kudumba vaazhkkai santhoshamagave irukkum. Kaaranam 2m athipathy budhan subhargalaana sukkiran matrum guruvudan. Adhu mattumindri 7m athipathy neesabanga rajayogathil matrum subargalaana budhan, sukkiran, guru and lagnathipathy suriyanin parvayil.
    Nandrigal.
    Mu.Prakaash
    Monday, January 05, 2015 11:01:00 AM/////
----------------------------------------------
5  
*** //////Blogger bg said...
    அய்யா,
    வணக்கம்.
    ஜாதகி பிறந்த நாள் : நவம்பர் 14 1969
    நேரம் : 01.05 a.m.(app time)
    சுக்கிரன் ஆட்சி.
    யோகாதிபதி செவ்வாய் உச்சம்.
    சனி ( ஏழாம் அதிபதி ) நீசம்.
    ஏழாம் அதிபதி மீது காரகன் சுக்கிரன் பார்வை.
    குருவின் நேரடி பார்வை. லக்கினாதிபதி சூரியன் பார்வை உள்ளது.
    இரண்டாம் அதிபதி புதன் பார்வையும் உள்ளது.
    கண்டிப்பாக திருமணம் உண்டு.
    27 வயதில் வரும் செவ்வாய் திசையில் திருமணம் நடைபெறும்.
    இரண்டில் மாந்தி உள்ளார்.
    திருமண வாழ்வு நன்றாகவே இருக்கும்.
    yours
    Balamurugan
    Monday, January 05, 2015 11:29:00 AM/////
----------------------------------------------
6
1/2 /////Blogger venkatesh r said...
    புதிர் எண் 73க்கான அலசல் :
    சிம்ம லக்னம், தனுசு ராசி ஜாதகி.அவருக்கு
    1. திருமணம் மிகவும் தாமதமாக நடந்திருக்கும்.
    2. 36 வயதிற்கு மேல் ராகு தசை, குரு புத்தியில் திருமணம்.
    3. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை.
    காரணங்கள் :
    1. லக்னத்தில் கேது.லக்னாதிபதி சூரியன் 3ல் நீசம்.கஷ்ட ஜாதகம்.
    2. இரண்டில் மாந்தி.குடும்ப ஸ்தானாதிபதி புதன் மூன்றில் அஸ்தங்கம். இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    3. களத்திராதிபதி சனி 9ல் நீசம்.
    4. யோகாதிபதி செவ்வாய் ஆறில் மறைவு. செவ்வாயும், சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர்.
    5. களத்திர காரகன் சுக்கிரன் தன் சொந்த வீடான துலாமில் கிரக யுத்தத்திலுள்ளார்.
    6. களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளார். ஏழாமிடத்திற்கும் அதன் அதிபதி நீச சனிக்கும் சுபகிரகமான குருவின் பார்வை இருக்கிறது. இது ஒன்றே திருமணம் தடைப்படாமல் (Delayed but not denied) நடை பெறுவதிற்கு காரணம்.
    7.ஜாதகிக்கு திருமண வயதில் வந்த யோகாதிபதி செவ்வாயின் தசை சனியுடன் ஏற்பட்ட பரிவர்த்தனை காரணமாக உதவவில்லை.
    8.அதற்கு பிறகு வந்த ராகு தசை, குரு புத்தியில் 36 வயதிற்கு மேல் திருமணம் நடைபெற்றிருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வாத்தியாரின் வழக்கமான "தனித் தன்மை" அலசலுக்கு காத்திருக்கிறேன்.
    Monday, January 05, 2015 3:07:00 PM//////
--------------------------------------------------
7
1/2 /////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    1. களத்திர ஸ்தான அதிபதி சனி நீச்சம் பெற்றாலும், நீச பங்க ராஜயோகம் பெற்று பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து, சிம்ம லக்னத்துக்கு யோகாதிபதியும் பாகய ஸ்தான அதிபதியுமான உச்சம் பற்ற செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று, பரஸ்பர பார்வையிலும் இருக்கிறார். களத்திர காரகன் சுக்கிரனின் பார்வையும், 5க்கும் 8க்கும் அதிபதியான குருவின் பார்வையும் அவருக்குகிடைப்பதால் ஜாதகிக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்.
    2. ஆனால் களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பது திருமணத்தை தாமதப் படுத்தும். எனவே அவருடைய 33 வது வயதில்தான திருமணம் ஆகி இருக்கும்.
    3. ஆனால் லக்னாதிபதி நீச்சம் பெற்று, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்ந்து, சனியின் பார்வையில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. குடும்ப ஸ்தானத்தில் மாந்தியும் இருக்கிறது.
    Monday, January 05, 2015 3:35:00 PM/////
----------------------------------------------------
8
1/2 //////Blogger Ravichandran said...
    Ayya,
    1. Marriage would have happened, but it was late marriage.
    2. The marriage would have happened in Rahu Desa(almost age of 31).The Reason of getting marriage is Guru is aspecting 7th house. Normally Rahu acts like Chevvai. Chevvai is in Uccham in this horoscopr. The reason for getting late marriage is Shani(7th house owner) is neecham.
    3. Family life is average life only. Eventhough second house owner(bhudhan) sitting in 2nd house from his house, but Mandhi is sitting in 2nd house.
    Your Student,
    Trichy Ravi
    Monday, January 05, 2015 3:56:00 PM//////
-------------------------------------------------
9
1/2 ///////Blogger ponnusamy gowda said...
    அய்யா வணக்கம்.
    புதிர் எண் 73.
    1) திருமணம் நடந்திருக்கும் ஆனால் மிகவும் தாமதமாக.
    லக்கினாதிபதி சூரியன் 3ல் மறைவு.நீச்சம் ஆனாலும் ஆட்சி நாதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம் உண்டு.
    லக்கினத்தில் கேது 7ல் ராகு.ஆயினும் 7மிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் தாமத திருமணம்.
    2).35 வயதில் ராகு தசா குரு புத்தியில் நடந்திருக்கும்.
    3).குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது.
    இரண்டாமிடம் பாப கர்த்தாரி யோகத்தில்,தவிர இரண்டில் மாந்தி வாழ்வை பாழாக்கிவிடும். இரண்டாம் ஆதி 3ல் மறைந்து சூரியனின் சேர்க்கையால் அஸ்தங்கமடைந்து விட்டது.12மிடத்திற்கும்,லக்கினத்துக்கும் உச்சமடைந்த செவ்வாயின் பார்வை. (சுக,பாக்கியாதிபதி) ஆயினும் அவரே பாதகாதிபதியும் ஆகிறார்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Monday, January 05, 2015 5:51:00 PM//////
------------------------------------------------------
10
1/2  //////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    ஜாதகிக்கு காலதாமதமாக அவருடைய 33வது வயதில் அதாவது ராகு திசை குரு புக்தி கோட்சார குரு ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரித்த நேரத்தில் நடந்திருக்கும். திருமணமாகுமென கூற ஒரே ஒரு காரணம் என்னவெனில் அது குரு பகவானின் பார்வை ஜனன லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் 7மிட அதிபதிக்கும் மற்றும் சந்திரா லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் கிடைத்திருக்கிறது.
    தாமத திருமணத்திற்கு காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 7க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 6 மற்றும் 7குடைய சனி, 4 மற்றும் 9குடைய செவ்வாய் இடம் மற்றும் பார்வை பரிவர்த்தனையில் உள்ளார்கள். இதனால் இருவறுடைய பாவங்களும் கெட்டுவிட்டன. அத்துடன் 7இல் ராகு அமர்ந்துள்ளார். குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார்.
    குடும்ப வாழ்க்கை சுகப்படாது. அதற்க்கான காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 2க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 2இல் மாந்தி மற்றும் 2மிடம் பாப கர்தாரி யோகத்தில்.
    குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார். அயன சயன போக ஸ்தானாதிபதி சந்திரன் அந்த வீடிற்கு 6இல், சந்தோசத்தை குறிக்ககூடிய 5மிடம் விரையதிபதி அமர்வாள் கெட்டுவிட்டது. சுகாதிபதியும், பாக்கியாதிபதியும், யோகா காரனுமாகிய செவ்வாய் பாதிப்படைந்துள்ளார்.
    நன்றி
    செல்வம்
    Monday, January 05, 2015 8:23:00 PM//////
-------------------------------------------------
11
1/2  /////Blogger Sundaravadivel K said...
    குரு திருவடி சரணம்..
    அம்மணியின் ஜாதகத்தில்.
    1.சனி நீசம்,செவ்வாய் உச்சம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் மேலும் குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் விழுவதாலும்..
    2.அம்மணியின் 26வது வயதில் அங்காரக திசை அங்காரக புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றிருக்கும்
    3.2-இல் மாந்தி இருப்பதால்
    குடும்ப ஸ்தானத்தில் நின்ற மாந்தி குடும்பத்தின் ஒற்றுமையையும் , நிம்மதியையும் பெரிதும் பாதிக்கும். அவச் சொல் பெற நேரிடும்,வாக்கு சுத்தம் இருக்காது . தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும். குடும்ப சந்தோஷம் , பூரன செல்வம் ஆகியவை மிக மிக குறைவாக இருக்கும் . சிலருக்கு கண்பார்வைக் குறையும் , மாரகத்துக்கு ஒப்பான கண்டங்களை அடிக்கடி எதிர் கொள்ளவும் நேரிடும். கல்வி தடைபடும். பெரும் பாக்கியங்களை அடைய முடியாது.
    Monday, January 05, 2015 9:03:00 PM//////
---------------------------------------------------
12
1/2  ///////Blogger kmr.krishnan said...
    ஜாதகி பிறந்த நாள் 14 நவம்பர் 1969; நேரம் 1 மணி 5 நிமிடம் இரவு; இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    1. ஜாதகிக்கு திருமணம் ஆயிற்று.7ம் இடத்திற்கு குருபார்வை. 7ம் அதிபதி சனிக்கு, குரு,சுக்கிரன், புதன், மற்றும் லக்னாதிபதியான சூரியனின் பார்வை.
    7ம் அதிபதி சனி நீசம் அடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதனும் பாக்யாதிபதியும் யோககாரகனுமான செவ்வாய் உச்சம் அடைந்து 9ம் இடத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.7ம் அதிபதியும் அவரது பார்வையில் உள்ளார்.எனவே திருமணம் நடந்தது.
    2.2000 ஆவது ஆண்டு 32 வயதில் திருமணம் நடந்தது.செவ்வாய் தசா புத புக்தி அல்லது செவ்வாய் தசா சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.
    3.திருமண வாழ்க்கை சுகமில்லை.இரண்டாம் இடத்தில் மாந்தி,மாங்கல்யஸ்தானத்தை ராகுவும் சனியும் சூழ்ந்தது,இரணடாம் அதிபதி புதன் அஸ்தங்கதம் ஆனது ஆகியவை குடும்ப வாழ்வைகுலைத்துவிட்டது.
    கணவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிரமத்தில் இருப்பார்.பூராடம் என்பதாலும் மாங்கல்ய ஸ்தான்ம் பாபகர்தாரியில் இருப்பதாலும் கணவரின் ஆயுளைப் பற்றி என்ன சொல்வது?
    Monday, January 05, 2015 10:47:00 PM//////
------------------------------------------------
13
1/2  //////Blogger Prasanna said...
    Dear Sir,
    Vanakkam,
    Ans: 1 This female native has the marriage yoga, she is married .
    Ans : 2. As she Has marriage yoga , she might have married before the age of 25, probability for marriage was more during Chandra Maha dasa between ( 17 to 25) especially before 21 years. she is born during Sukra Maha dasa. She belongs to Pooradam star.
    Ans: 3 She had no martial bliss, means her family life is not good . She might have got divorced or separated from her first husband and her second marriage too will not have succeeded. She is born to live a lonely life.
    Explanations and reasons:
    The Rahu in 7th house is good for marriage, provided Venus and the Moon are well-situated in the horoscope. It is also very powerful in regard to partnerships and contracts, which it helps to make successful.Here venus is well placed in own house and moon is seen in 5th house too .So she might be married . More over 7th house is receiving aspect of Guru, which is 5th aspect , so she might have married with the blessings of Poorvapunayadhi pathi guru at the same time the marriage should not have lost long, as he is seen placed with neecha Surya her lagna lord in the 3 rd house.
    3rd house is house of courage which is strong , This shows , she will take action very swiftly , whatever comes to her mind,hasty decisions are possible. 5th house moon denotes she is a a romantic person who gives selfless love but it often realizes that love should be mutual then the war starts . Seeing 4 planets placement in a house we can think of Tapasvi yoga, but there is no such possibility because the lagna lord himself is neecha and shani too is present in 9th house in neecha postilion and mars is aspecting Saturn too. Satrun is aspecting kalathrakaraka sukra , second lord budha, and 5th as well as 8th lord guru. kethu in lagan and neecha surya denotes she has no happy martial life. kethu is always karaka for detachment , liberation , and kethu in first house will make the native egoist and cant make her love any body due to the past birth bad karma.Nodes denotes our past birth karma, which we must keep in mind. Rahu in 7th house promotes marriage at the same time kethu in lagna will break it for sure.
    2nd house Mandhi will break the marriage. it wont allow native to live happily , even second marriage too cant be successful, she has partial Mangal dosh though it is getting nullified. 2nd house is highly corrupted because of mandhi there. 7th lord shani is also neecha in 9th house. so her bhagya is corrupted. 2nd lord and 11 th lord budh is co joined with all other planets and got com busted ,
    and for 2nd house is for marriage sustenance , placement of mandhi there will break it .
    6th house Mars makes her too brave and victory over enemies and Saturn
    in 9th house will make her to marry outside the religion or caste.
    Thanks and regards,
    Prasanna.
    http://devarshivedicastrology.freeforums.org/index.php
    Monday, January 05, 2015 11:37:00 PM/////
----------------------------------------------------
14
1/2  //////Blogger thozhar pandian said...
    1) இலக்கினாதிபதி சூரியன் நீசம், ஆனால் உடன் அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் மற்றும் வியாழன்.
    2) 7ம் அதிபதி சனியும் நீசம். ஆனால் குரு மற்றும் சுக்கிரனின் பார்வையுடன்.
    3) 2ம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 2ல். ஆனால் 2ம் வீட்டில் மாந்தி. குடும்பத்திற்கு அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல.
    4) 7ம் வீட்டில் இராகு. ஆனால் குருவின் பார்வை உள்ளது.
    5) 9ம் வீட்டில் உள்ள சனி 6ம் வீட்டில் உள்ள செவ்வாயையை பார்க்கிறார். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர். அவர் உச்சம் பெற்று 7ம் வீட்டுக்காரர் சனியை பார்க்கிறார்.
    6) ஜாதகிக்கு திருமணம் உண்டு. ஆனால் பல எதிர்ப்புகளுக்கு பிறகு 28-30 வயதில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.
    7) குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.
    ஒரு சந்தேகம். 4 நவம்பர் 1970 பிறந்த தினமாக கொண்டால், செவ்வாயின் இடம் தவிர ஜாதகம் சரியாக பொருந்துகிறது. செவ்வாய் 6ம் வீட்டிற்கு பதிலாக 2ம் வீட்டில் இருப்பதாக வருகிறது.
    Monday, January 05, 2015 11:57:00 PM/////
---------------------------------------------
15
1/2  ///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No.73:
    1. She has married.
    2. Married at her age of 29 to 32.
    3. Married life are not happy.
    Reasons:
    1. Kala sarpa dosha horoscope. But Rahu leading. Hence she has not married upto 27.
    2. She married after 27 of her age due to kala sarpa dhosa left.
    3. Though seventh lord and lagna lord are debilitated, they are in seventh position. Mutual aspect along with Venus and Jupiter.
    4. Jupiter aspecting 7th house as well as 7th house lord and co joined with kalathra karaga (Venus).
    5. Yoga karaga Mars and Seventh lord Saturn having mutual exchange as well as mutual aspects. Thainya exchange also.
    6. Kalathra karaga is in own house.
    7. In second house, Mandhi is there. Saturn and Mars are won't give happy life.
    8. Lagna lord is debilitated.
    Hence, Her married life was not happy.
    With kind regards,
    Ravichandran M.
    Monday, January 05, 2015 11:58:00 PM////
---------------------------------------------
16
1/2 //////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    புதிர் 73 க்கு விடை
    1) ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆகாது .
    காரணம்
    அ) 7 ஆம் வீட்டு அதிபதி நீசம் .
    ஆ) செவ்வாய் 7 ஆம் அதிபதியை யும் லக்கினத்தையும் பார்வையில் வைத்து இருக்கிறார் .
    இ) 7ஆம். வீட்டில் ராகு அமர்ந்து இருக்கிறார் .
    2 ) ஜாதகிக்கு தன் 34 வயது க்கு மேல் திருமணம் நடக்கும் .
    காரணம் ,
    அ) 7 ஆம் வீட்டுக்கு குரு பார்வை இருக்கிறது.
    ஆ) களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி.
    3) குடும்ப வாழ்க்கை அமையாது.
    காரணம்
    அ) 2 ஆம் வீட்டில் மாந்தி
    ஆ) லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் நீசமாகி உள்ளதால் குடும்ப வாழ்க்கை சிறக்காது
    இ) சந்திர ராசிக்கு 2 ல் ராகு உள்ளார்
    ஈ) 2 க்கு அதிபதி புதன் 3 ல் உள்ளார்.
    நன்றி ஐயா
    கண்ணன் .
    Tuesday, January 06, 2015 12:16:00 AM/////
------------------------------------------------
17
1/2  //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Quiz no. 73
    வணக்கம்.
    13.11.1969ல் 1.26:10 காலையில் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.
    1. ஜாதிகிக்கு திருமணம் ஆகவிட்டது தாமதமாக.
    7ம் வீடு, 7ம் வீட்டு அதிபதி, லக்கினாதிப‌தி சூரியன் ஆகிய மூவரும் கெட்டிருப்பதால் திருமணம் ஆவது கடினம். ஆனால், திருமணம் தாமதமானது.
    7ம் வீட்டில் ராகு, 7ம் வீட்டு அதிபதி சனி மேஷத்தில் 9ம் வீட்டில் நீசம். பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், மேலும் சனியின் 7ம் பார்வை லக்கினாதிப‌தி சூரியன் மீது இருப்பதாலும் திருமணம் ஆவது கடினம்.
    2. திருமணம் 38 வயதில் ராகு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற்றது.
    குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும், குரு, சுக்கிரனின் 7ம் பார்வை 7ம் வீட்டு அதிபதி சனியின் மீது இருப்பாதாலும், ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது.
    3. ஜாதகியின் குடும்ப வாழ்க்கை பிரிவில் முடிந்தது.
    2ம் வீடு பலவீனமாக‌ உள்ளது. 2ம் வீட்டில் மாந்தி, 2ம் வீடு பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது, மறு பக்கம் சூரியன்),2ம் வீட்டு அதிபதி புதன் 3ம் வீட்டில் சூரியனுடன் அஸ்தமனம், கிரக யுத்ததில், 9ம் வீடு பாக்கியஸ்தானம் பலவீனமாக‌ உள்ளது. பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், குடும்பஸ்தானம் பாதிக்க பட்டுள்ளது. திருமணம் பிரிவில் முடிந்தது.
    பெண் நட்சத்திரம் பூராடம் நூலாடும் என்று கூறுவார்கள்.
    அதிகபடியான தகவல்: 7ம் வீட்டில் 32 பரல்கள், லக்கினத்தில் 42 பரல்கள்.திருமணம் நிச்சயம் நடைபெறும்.
    2ம் வீட்டில் 22 பரல்கள், பாக்கியஸ்தனத்தில் 21 பரல்கள் இருப்பதாலும், சுக்கிரனின் சுய‌ பரல்கள் 3 இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை குறுகிய காலத்தில் பிரிவில் முடிந்தது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, January 06, 2015 12:51:00 AM//////
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

slmsanuma said...

போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்.அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:

அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான
பாராட்டுக்கள்.

Sir, I am very much pleased for the above compliments and I humbly submit the same to your feet as I am enlightened by your education with love and care through this blog for the past 7 more years.

Thank you very much sir.

kmr.krishnan said...

1.செவ்வாய் சனி பரிவர்தனை பயனில்லை;தைன்ய பரிவர்தனை அல்லவா?
2. குரு எட்டாம் வீட்டுக்கும் உரியவர் அல்லவா?அவர் எட்டாம் வீட்டுக்கு உரிய தீயபலனை ஏன் செய்யவில்லை?
3.புதன் சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழக்கவில்லையா?
4.யோககாரகனாக இருந்தாலும் செவ்வாய் 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
5.12ம் அதிபனான் சந்திரன் தன் வீட்டுக்கு 6ல் மறைந்தத‌ற்கு என்ன பலன்?
6.8ம் இடமும் பெண்களுக்கு திருமண சம்பந்தம் உடையது அல்லவா?அப்ப‌டியென்றால் எட்டாம் இடம் ராகு சனியால் சூழப்பட்டதற்கு என்ன பலன்?
7.இரண்டில் மாந்தி நின்றதற்கு என்ன பலன்?
எது எப்படியோ ஜாதகிக்கு இறையருள் இருந்திருக்கிறது. எனவே தாமதத் திருமணம் ஆனாலும், குடும்ப வாழ்வு நன்கு அமைந்துவிட்டது.பூர்வ புண்ணியமே காரணம்.
Astrology has no thumb rule.

jayakumar M said...

ஐயா,
சிம்ம லக்குனத்திற்கு செவ்வாய் 4 & 9 ல ஆட்சி பெறுவதை விட 6 ல் உச்சம் பெரும்பொழுது குறைவான பலன்களை வழங்க முடியுமா. யோககாரன் 6 ல் உச்சம் பெற்றதின் பலன் என்ன..

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
9ம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனது ஆங்கில ஆசிரியர் திருவாளர் வேலுசாமி அவர்கள் வகுப்புக்கு வந்தவுடன் ஒரு சிறு நகைச்சுவை சொல்லி பாடம் நடத்துவார்கள் ..பாடங்கள் மனதில் தங்கும் விதமாக நடத்துவார்கள் .
அது போல நீங்கள் நகைச்சுவை நடத்தி பாடம் நடத்துகிறீர்கள் ...
புதிர் எண் 73 மிக புதிரானா ஜாதகம்தான் ..
எனக்கு மீண்டும் பள்ளி ஞாபகம் வருகிறது .. [1968.]
கவனமாக இனி அலசுவேன். [ஏற்கெனெவே இது மிகுந்த தாமதமாக பார்த்தேன் பதிலும் அவசரமாக போட்டது. ??**இருந்தாலும் கணபதியாரே... நீரூ படிக்கிற படிப்பு தெரியாதா.**. ??என வாத்தியார் கிண்டலடிப்பது கேட்கிறது .. ] .

நன்றி அய்யா ..

Subbiah Veerappan said...

/////Blogger slmsanuma said...
போட்டில் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்.அவர்களில் 17 பேர்கள் மட்டுமே
சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
அவர்களிலும் 3 பேர்கள் மட்டுமே மிகவும் சரியான பதில்களான திருமணமாகியிருக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
என்று எழுதியுள்ளார்கள்:
அவர்கள் மூவருக்கும்
1.slmsanuma, 2.trmprakash, 3.bg எனது விஷேசமான பாராட்டுக்கள்.
Sir, I am very much pleased for the above compliments and I humbly submit the same to your feet as I am enlightened by your education with love and care through this blog for the past 7 more years.
Thank you very much sir./////

எத்தனை ஆண்டுகளாகப் படிக்கிறேன் என்று சொன்னீர்கள். சரி, உங்கள் பெயரையும், வசிக்கும் ஊரையும் சொல்லியிருக்கலாமே!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
1.செவ்வாய் சனி பரிவர்தனை பயனில்லை;தைன்ய பரிவர்தனை அல்லவா?
2. குரு எட்டாம் வீட்டுக்கும் உரியவர் அல்லவா?அவர் எட்டாம் வீட்டுக்கு உரிய தீயபலனை ஏன் செய்யவில்லை?
3.புதன் சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழக்கவில்லையா?
4.யோககாரகனாக இருந்தாலும் செவ்வாய் 6ல் மறைந்ததற்கு என்ன பலன்?
5.12ம் அதிபனான் சந்திரன் தன் வீட்டுக்கு 6ல் மறைந்தத‌ற்கு என்ன பலன்?
6.8ம் இடமும் பெண்களுக்கு திருமண சம்பந்தம் உடையது அல்லவா?அப்ப‌டியென்றால் எட்டாம் இடம் ராகு சனியால் சூழப்பட்டதற்கு என்ன பலன்?
7.இரண்டில் மாந்தி நின்றதற்கு என்ன பலன்?
எது எப்படியோ ஜாதகிக்கு இறையருள் இருந்திருக்கிறது. எனவே தாமதத் திருமணம் ஆனாலும், குடும்ப வாழ்வு நன்கு அமைந்துவிட்டது.பூர்வ புண்ணியமே காரணம்.
Astrology has no thumb rule./////

கடைசியாகச் சொன்னீர்களே - ஒற்றை வரியில். அதுதான் உண்மை!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

/////Blogger jayakumar M said...
ஐயா,
சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் 4 & 9 ல ஆட்சி பெறுவதை விட 6 ல் உச்சம் பெரும்பொழுது குறைவான பலன்களை வழங்க முடியுமா.
யோககாரன் 6 ல் உச்சம் பெற்றதின் பலன் என்ன..//////

கனவெல்லாம் நனவாகும். உச்சம் பெற்ற செவ்வாய் நடத்தித் தருவான். உச்சம் பெற்றதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
9ம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனது ஆங்கில ஆசிரியர் திருவாளர் வேலுசாமி அவர்கள் வகுப்புக்கு வந்தவுடன் ஒரு சிறு நகைச்சுவை சொல்லி பாடம் நடத்துவார்கள் ..பாடங்கள் மனதில் தங்கும் விதமாக நடத்துவார்கள் .
அது போல நீங்கள் நகைச்சுவை நடத்தி பாடம் நடத்துகிறீர்கள் ...
புதிர் எண் 73 மிக புதிரானா ஜாதகம்தான் ..
எனக்கு மீண்டும் பள்ளி ஞாபகம் வருகிறது .. [1968.]
கவனமாக இனி அலசுவேன். [ஏற்கெனெவே இது மிகுந்த தாமதமாக பார்த்தேன் பதிலும் அவசரமாக போட்டது. ??**இருந்தாலும் கணபதியாரே... நீரூ படிக்கிற படிப்பு தெரியாதா.**. ??என வாத்தியார் கிண்டலடிப்பது கேட்கிறது .. ] .
நன்றி அய்யா ../////

அதெல்லாம் செய்ய மாட்டேன். கணபதியாரைக் கிண்டல் அடிப்பேனா? நிச்சயமாக இல்லை!

Gunasekaran Janarthanam said...

அய்யா,
நான் உங்கலுடைய எல்லா பாடங்கள் மிகவும் பயனுள்ளதா உள்ளது மிக்க நன்றி.

Kirupanandan A said...

விதண்டா வாதத்திற்காக சொல்ல வில்லை. ஜோதிடத்தில் thumb rule என்று ஒன்று இல்லையென்றால் யாருக்கும் யாரும் பலன் பார்த்து சொல்ல முடியாது. இந்த ஜாதகர் இந்தியாவில் பிறந்தவர் என்று எடுத்துக் கொள்கிறேன். சரியான அயனாம்சம் எது என்று இன்று வரை விவாதம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் குழப்பத்தினால் லக்கினம் மாறிப் போகும் வாய்ப்பிள்ளது. பிறந்த நேரம் துள்ளியமாக இருக்க வேண்டும். மருத்துவ மனையில் பிறந்திருந்தால் சரி. கடிகாரமே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்தவரானால் இதுவும் சரியாக இருக்காது. அதுவும் அன்றைய காலகட்டத்தில் நிலைமை எப்படியென்று சொல்லவே வேண்டாம். அடுத்து time zone. இப்போதுதான் IST என்று இருக்கிறது. அன்றைய கால கட்டத்தில் இடத்திற்கு இடம் நேரம் மாறு படும். இப்படியே பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். இந்த ஜாதகத்தில் லக்கினமோ அல்லது மற்ற கிரக நிலைகளோ 100% சரியானதுதான் என்பதில் எனக்கு மன நிறைவு இல்லை.

yathavan nambi said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு