மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.1.15

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை!


கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.
படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக
ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

சுவாமி விவேகானந்தர் : "நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை."

சுவாமி விவேகானந்தர் :" நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும்
துன்பம் ஏன்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட
முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
(By experience their life becomes better, not bitter!)"

சுவாமி விவேகானந்தர் : "அப்போது, சோதனைகள் நன்மைக்கு
என்று சொல்கிறீர்களா?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "ஆம். அனுபவத்தை விட பெரிய
ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை
கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்."

சுவாமி விவேகானந்தர் : "கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கித்
தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை"….

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "வெளியே பார்த்தால் எங்கே
போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும்.
கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான்
வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)"

சுவாமி விவேகானந்தர் : "சரியான பாதையில் போகும்போதும்
தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "செல்லும் பாதையில் வெற்றி என்பது
பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது."

சுவாமி விவேகானந்தர் : "கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள்
உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "எப்பொழுதும், இனி எப்படி போகப்
போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி
வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை
அல்ல".

சுவாமி விவேகானந்தர் : "இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பப்படும்போது “எனக்கு ஏன்?
என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது
அந்தக் கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான்
வியக்கிறேன்”.

சுவாமி விவேகானந்தர் : ”வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?”

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ”உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.”

சுவாமி விவேகானந்தர் :” கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில
நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன்
கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.”

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ”கேட்கப்படாத பிரார்த்தனைகள்
என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!)
அச்சத்தை விடு.நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல.
எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால்
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.”

இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம்.
    பக்தி மார்க்கத்தால் இறைநிலை உணர்ந்த ஞான குரு. ஒருமுறை இராமகிருஷ்ன பரமஹமசர் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகையில் "இராமகிருஷ்ன பரமஹமசர் போன்று ஒருவரை உருவாக்க இயலும் என்றால் 1000 உருவ கடவுள்களை வேண்டுமானாலும் வழிபடலாம்" என்கிறார். இராமகிருஷ்ன பரமஹமசர் காளியை வழிபட்டவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இராமகிருஷ்ன விஜயம் இதழ் www.chennaimath.org என்ற இனையத்தில் முற்றிலும் இலவசமாக PDF வடிவில் கிடைக்கின்றது.

    ReplyDelete
  2. வணக்கம் குரு,

    மிகவும் நல்லதொரு பதிவு.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  3. குருவும் சீடரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..

    அற்புத விருந்து..

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning...Thanks for sharing precious post.

    Advance pongal wishes to you, your family and our classmates.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  5. பழுத்த பலாச்சுளையைத் தேனில் தொட்டு உண்ணும் படியான கருத்துக்கள்.குருதேவர் பேசுவதையும், சுவாமிஜி கேட்பதையும் பற்றி சொல்லவா வேண்டும். குரு மீது வைத்த பரிபூரண நம்பிக்கையால் அன்றோ சுவாமிஜி மேன்மை அடைந்தார்.12 ஜனவரி விவேகான்ந்தரின் பிற‌ந்த‌ நாள். திதிப் படி பொங்கல் அன்று அவருடைய பிறந்த நாள்.பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்.
    அன்பும்,பண்பும்,பாசமும்,நேசமும் நிறைந்த அன்பு உள்ளம்களுக்கு எனது அன்பிலும் மேலான அன்பு நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இது பற்றி கருத்து சொல்லவில்லை
    இது இப்படியே இருக்கட்டும்...

    ReplyDelete
  9. Ayya...Sirappana purithal Guruvukkum sedarkkum...idaye...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com