மண் ஆனால் எங்கே மண் ஆகவேண்டும்?
பக்தி மலர்
இன்றையப் பக்தி மலரை திரு. T.M. செளந்தரராஜன் அவர்கள் பாடிய
முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழ வேண்டுகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
(மண்ணானாலும்)
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்
பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் - மனம்
பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
(மண்ணானாலும்)
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் - பழச்
சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் - அருள்
உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன் - தனி
உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
(மண்ணானாலும்)
முருகா முருகா முருகா முருகா
*********************************************
Our sincere thanks to the person who uploaded this video in the net
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஓம் முருகா !!!!
ReplyDeletevanakkam sir,
ReplyDeleteஅருமையான பாடல் பகிர்வு ஐயா...
ReplyDeleteAyya Arputhamana padal MURUGA PERUMANIN Methulla Athetha Bhakthi Kalantha Anbal Padapattathu...Nenaivu Koorthathuku Nandri...Ungal Puthiya Manavar...
ReplyDeleteஐயா வணக்கம் .
ReplyDeleteதங்கள் பதிவில் உள்ள முருகனின் பாடலை கேட்கும் போதும் , அதை படிக்கும் போதும் மனதில் ஓர் அமைதி நிலவுவதை உணர முடிகிறது .
நன்றி ஐயா .
கண்ணன் .
அருமையான பாடல்.
ReplyDelete'படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே'என்ற ஆழ்வார்களின் மொழியை எடுத்து எளிமையாக இயற்றப்பட்ட அற்புதப்பாடல்.
வாத்தியார் ஐயா!
ReplyDeleteவணக்கம். இன்றைய நாள் இனிய நாள் . பக்கத்துக்கு நாட்டில் உள்ள நமது உறவுகள் நல்ல தீர்ப்பு வழங்கிய நாள். நல்ல மனிதர்களின் எண்ணம் போல எல்லாம் நன்றாக அமைய எம்பெருமான் திருச்செந்தூர் பாலசுப்பிரமணியனை வணங்குகின்றேன் . நன்றி வணக்கம்.
/////Blogger Kamban said...
ReplyDeleteஓம் முருகா !!!!/////
ஓம் கந்தா!
ஓம் கடம்பா!
ஓம் கார்த்திகேயா!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா..////
குருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
////Blogger sundari said...
ReplyDeletevanakkam sir,////
உங்கள் வணக்கத்திற்கு நன்றி அம்மணி! (அம்மணி என்றால் அம்மாவைப் போன்ற பெண்மணி என்று பொருள்)
////Blogger -'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteஅருமையான பாடல் பகிர்வு ஐயா...////
நல்லது. நன்றி குமார்!
////Blogger Pathrachalam Chalam said...
ReplyDeleteAyya Arputhamana padal MURUGA PERUMANIN Methulla Athetha Bhakthi Kalantha Anbal Padapattathu...Nenaivu Koorthathuku Nandri...Ungal Puthiya Manavar..////.
புதிய வரவா? நல்லது தொடர்ந்து படியுங்கள் நண்பரே!
////Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம் .
தங்கள் பதிவில் உள்ள முருகனின் பாடலை கேட்கும் போதும் , அதை படிக்கும் போதும் மனதில் ஓர் அமைதி நிலவுவதை உணர முடிகிறது .
நன்றி ஐயா .
கண்ணன் ./////
அதுதான் இறைவணக்கத்தின் சிறப்பு!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான பாடல்.
'படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே'என்ற ஆழ்வார்களின் மொழியை எடுத்து எளிமையாக இயற்றப்பட்ட அற்புதப்பாடல்.////
கவிஞர் வாலி அவர்கள் துவக்க காலத்தில் எழுதிய தனிப் பாடல்களில் இதுவும் ஒன்று. அவர் திருவரங்கத்துக்காரர். நம்மாழ்வாரின் பாசுரங்களைப் படித்துத் தேறியவர். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலில் மயங்கியவர், அதன் உந்துதலில் இந்தப் பாடலை எழுதியிருக்கலாம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger kanna said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
வணக்கம். இன்றைய நாள் இனிய நாள் . பக்கத்துக்கு நாட்டில் உள்ள நமது உறவுகள் நல்ல தீர்ப்பு வழங்கிய நாள். நல்ல மனிதர்களின் எண்ணம் போல எல்லாம் நன்றாக அமைய எம்பெருமான் திருச்செந்தூர் பாலசுப்பிரமணியனை வணங்குகின்றேன் . நன்றி வணக்கம்.////
ஆஹா.... வணங்குங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!
Nichayamaga Ayya...Nandri
ReplyDelete