மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.15

மண் ஆனால் எங்கே மண் ஆகவேண்டும்?


மண் ஆனால் எங்கே மண் ஆகவேண்டும்?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திரு. T.M. செளந்தரராஜன் அவர்கள் பாடிய
முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழ வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

(மண்ணானாலும்)

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்
பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் - மனம்
பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

(மண்ணானாலும்)

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் - பழச்
சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் - அருள்
உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன் - தனி
உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

(மண்ணானாலும்)

முருகா முருகா முருகா முருகா
*********************************************



Our sincere thanks to the person who uploaded this video in the net
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. அருமையான பாடல் பகிர்வு ஐயா...

    ReplyDelete
  2. Ayya Arputhamana padal MURUGA PERUMANIN Methulla Athetha Bhakthi Kalantha Anbal Padapattathu...Nenaivu Koorthathuku Nandri...Ungal Puthiya Manavar...

    ReplyDelete
  3. ஐயா வணக்கம் .

    தங்கள் பதிவில் உள்ள முருகனின் பாடலை கேட்கும் போதும் , அதை படிக்கும் போதும் மனதில் ஓர் அமைதி நிலவுவதை உணர முடிகிறது .

    நன்றி ஐயா .

    கண்ணன் .

    ReplyDelete
  4. அருமையான பாடல்.

    'படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே'என்ற ஆழ்வார்களின் மொழியை எடுத்து எளிமையாக இயற்றப்பட்ட அற்புதப்பாடல்.

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா!

    வணக்கம். இன்றைய நாள் இனிய நாள் . பக்கத்துக்கு நாட்டில் உள்ள நமது உறவுகள் நல்ல தீர்ப்பு வழங்கிய நாள். நல்ல மனிதர்களின் எண்ணம் போல எல்லாம் நன்றாக அமைய எம்பெருமான் திருச்செந்தூர் பாலசுப்பிரமணியனை வணங்குகின்றேன் . நன்றி வணக்கம்.

    ReplyDelete
  6. /////Blogger Kamban said...
    ஓம் முருகா !!!!/////

    ஓம் கந்தா!
    ஓம் கடம்பா!
    ஓம் கார்த்திகேயா!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    குருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  8. ////Blogger sundari said...
    vanakkam sir,////

    உங்கள் வணக்கத்திற்கு நன்றி அம்மணி! (அம்மணி என்றால் அம்மாவைப் போன்ற பெண்மணி என்று பொருள்)

    ReplyDelete
  9. ////Blogger -'பரிவை' சே.குமார் said...
    அருமையான பாடல் பகிர்வு ஐயா...////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  10. ////Blogger Pathrachalam Chalam said...
    Ayya Arputhamana padal MURUGA PERUMANIN Methulla Athetha Bhakthi Kalantha Anbal Padapattathu...Nenaivu Koorthathuku Nandri...Ungal Puthiya Manavar..////.

    புதிய வரவா? நல்லது தொடர்ந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    தங்கள் பதிவில் உள்ள முருகனின் பாடலை கேட்கும் போதும் , அதை படிக்கும் போதும் மனதில் ஓர் அமைதி நிலவுவதை உணர முடிகிறது .
    நன்றி ஐயா .
    கண்ணன் ./////

    அதுதான் இறைவணக்கத்தின் சிறப்பு!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    அருமையான பாடல்.
    'படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே'என்ற ஆழ்வார்களின் மொழியை எடுத்து எளிமையாக இயற்றப்பட்ட அற்புதப்பாடல்.////

    கவிஞர் வாலி அவர்கள் துவக்க காலத்தில் எழுதிய தனிப் பாடல்களில் இதுவும் ஒன்று. அவர் திருவரங்கத்துக்காரர். நம்மாழ்வாரின் பாசுரங்களைப் படித்துத் தேறியவர். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலில் மயங்கியவர், அதன் உந்துதலில் இந்தப் பாடலை எழுதியிருக்கலாம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. /////Blogger kanna said...
    வாத்தியார் ஐயா!
    வணக்கம். இன்றைய நாள் இனிய நாள் . பக்கத்துக்கு நாட்டில் உள்ள நமது உறவுகள் நல்ல தீர்ப்பு வழங்கிய நாள். நல்ல மனிதர்களின் எண்ணம் போல எல்லாம் நன்றாக அமைய எம்பெருமான் திருச்செந்தூர் பாலசுப்பிரமணியனை வணங்குகின்றேன் . நன்றி வணக்கம்.////

    ஆஹா.... வணங்குங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com