மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.1.15

அறிவின் உன்னத நிலை!

 

அறிவின் உன்னத நிலை!

பேச்சு, செயல், அறிவு என்று எல்லா நிலைகளிலும் புத்திசாலித் தனத்தோடு இருப்பது ஒரு உன்னதமான நிலை. அதை வெளிப்படுத்தும் முகமாக சில சம்பவங்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்!

கிணற்றுத் தண்ணீர் யாருக்குச் சொந்தம்? விற்றவனுக்கா அல்லது வாங்கியவனுக்கா?

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான். கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.

அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

எப்படி உள்ளது இந்த அதிரடித் தீர்ப்பு?
-----------------------------------------------------
2

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் - ஆண்டு 1947 - இடைக்காலப் பிரதமராகப் பதவி ஏற்ற the de-facto prime minister of India திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களிடையே பேசத் துவங்கினார்.

“நமது ராணுவத்திற்குத் தலைமை தாங்க ஒரு பிரிஷ்காரரை நியமிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நமக்கு ராணுவத்தை வழி நடத்தும் அனுபவம் இல்லாததால் அதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

அதுவரை பிரிட்டீஷ் ராணுவத்திடம்  பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிலர், அதுதான் சரி என்பதைப் போல தலையை அசைத்தார்கள்.

நாது சிங் ராத்தோர் என்ற மூத்த அதிகாரி எழுந்து தன் கருத்தைச் சொல்வதற்கு அனுமதி கேட்டார். அந்த அதிகாரியின் குறுக்கீட்டை விரும்பாவிட்டாலும், சிறிது  யோசனைக்குப் பிறகு, நேரு அவர்கள், அவரைப் பேசுவதற்கு அனுமதித்தார்.

"நீங்கள் பாருங்கள் சார், அதே போல இந்த நாட்டை வழி நடத்துவதிலும் நமக்கு அனுபவமில்லை. ஆகவே, ஒரு பிரிட்டீஷ்காரரை முதல் பிரதம மந்திரியாக நாம் நியமிக்க வேண்டும். செய்வீர்களா” என்று கேட்டார்.

சபையில் மாயான அமைதி நிலவியது. நேர் அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனாலும் சதாகரித்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கேட்டார்.

“ராணுவத்தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் தயாரா?”

அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த அதிகாரி தொடர்ந்து சொன்னார்,” என்னைவிடத் திறமையுள்ள எனது மூத்த அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் திரு.
கரியப்பா அவர்கள் அதற்குத் தகுதியானவர். அவரை நியமிக்கலாம்”

நேரு அவர்களும் அதையே செய்தார்.

மிகவும் திறமை வாய்ந்த திரு.கரியப்பா அவர்கள் இந்தியாவின் முதல் ராணுவத் தலைமை தளபதியானது அப்படித்தான். ரத்தோர்? அவர் முதல் லெப்டினண்ட் ஜெனரலானார்
===============================================
இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், அதை மொழிமாற்றம் செய்து உங்களுக்குப் படிக்கத்தந்துள்ளேன்!

இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

========================================  
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

kmr.krishnan said...

Both are nice, Sir! Thank you, Sir!

ravichandran said...

Respected sir,

Happy morning... Nice story...

With kind regards,
Ravichandran M

Lekaniya said...

2 things are Super....

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் .
நமது நாட்டின் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் அனுபவமில்லாத இவரால் இன்றும் சீரழிந்து கொண்டிருக்கிறோம். ??? விட்டுகொடுத்த இடம்,..,பஞ்ச ஷீலா கொள்கை,,,,பாகிஸ்தான் பிரிவினை. ..,
அந்நேரம் அனுபவமிக்க எத்துனை பேர் இருந்தார்கள் ஆனால் நாம் செய்த வினை இவர் பிரதமாராக வந்து .இன்னும் மீழ முடியாமல் இருக்கிறோம்..!!!
யாரும் சண்டைக்கு வர வேண்டாம் ..!!

sundari said...

good afternoon sir,

very very good posting Thanks for ur
posting sir i love too much

வேப்பிலை said...

01.
நீதிபதிகள் சில சமயங்களில்(மட்டும்)
நிறைவாக நீதி சொல்வார்கள்

02.
தகுதி யில்லாதவர்களுக்கு
தகுந்த பதவி தருவது எத்தனை

முக்கியம் என்பதை
முழுமையாக சொன்ன தகவல்...

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
ஐயமின்றி செய்யும் பணியில்

நாம் செய்த தவறுகளை
நாசூக்காக சொல்லியது அருமை

வேப்பிலை said...

சில சந்தேகம் கேட்கலாமா?

1. படத்தில் உள்ளவர் இந்தியரா- பிரிட்டிஷ்காரரா?

2. படத்தில் உள்ளவர் சுதந்திரத்திற்கு
முந்தியவரா? இல்லை பிந்தியவரா?

3. அடுத்த பிரதமருக்காக அடையாளம் காட்டும் இளைய தலைமுறையா?

பதவி ஒன்றே
பிறவி எடுத்த பயன் என்று

பலரும் தமிழகத்தில் துடிக்கையில்
பளார் கொடுத்தது போல் அமைந்த

இந்த பதிவினை
இவர்கள் படிப்"பார்"களோ?

selvam velusamy said...

வணக்கம் குரு,

இரண்டுமே அருமை. முதலில் உள்ளது நீதியையும் தர்மத்தையும் இரண்டாவதாக உள்ளது தேசபற்றையும் தைரியத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

நன்றி
செல்வம்

தமிழ்ச் செல்வன்ஜீ said...

இரண்டுமே மிகவும் அருமையாக உள்ளது...மிக்க நன்றி சார்

siva kumar said...

vanakam iya

lrk said...

ஐயா வணக்கம் .
தங்கள் வரலாற்று பதிவு மிக அருமை .
கண்ணன் .

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வணக்கம் வாத்தியாரே!!!

இரண்டு பதிவுகளுமே அருமை.

கிணற்று பஞ்சாயத்தே அறிவின் உன்னத நிலை என எனக்கு தோன்றுகிறது.


இரண்டாம் பதிவு, ஆளும் அரசின் கொள்கை முடிவு. எல்லா நேரமும் அந்த விவாதம் அறிவின் உன்னத நிலையாக இருக்க வாய்ப்பில்லை. சந்தர்ப்ப வாதமும், சுயநலமும், பதவி ஆசையும் நிறைந்தது தானே கொள்கை முடிவுகள். நாட்டை இழந்து பின் மீட்டு எடுத்து, பைத்தியங்களின் கையில் சாட்டையை கொடுத்தது போலவே நாம் பெற்ற சுதந்திரத்தை எண்ணுகிறேன்.


என்னுடைய கருத்து அதிக பிரசங்கிதனமாக இருந்தால் மன்னிக்கவும்.


பதிவிற்கு நன்றி.


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

சுதந்திரம் பற்றிய என் விடுபட்ட கருத்தை தெரிவித்து கொள்கிறேன்.

சென்ற வருடம் லண்டனையும் அங்கு வாழும் தன் மகன் குடும்பத்தையும் பார்க்க சென்ற எங்கள் குடும்ப நண்பர் அரிசி கடை அண்ணாச்சி மாமா, லண்டனில் வாழும் மற்றும் இருக்கும் அனைத்து நாட்டு முதியவர்களுக்கும் (டூரிஸ்ட் விசாவாக இருந்தாலும்) வழங்கப்படும் முன்னுரிமையும், முதுகுடிமக்களுக்கு இலவச ஊதியமும்(ஒய்வு ஊதியம் அல்ல) கண்ணியமும், ஒரு போன் போட்டால் வீட்டிற்கே ஓடி வரும் இலவச மருத்துவ குழுவும், கேட்க கேட்க நாம் பெற்ற சுதந்திரம் காரி துப்பும் நிலைமையில் உள்ளதை உணர்ந்தேன்.

இங்கே எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லம், அங்கே அரசே முதியவர்களை பாதுகாக்கிறது. பணம் இருந்தாலும், கொடுப்பதர்க்கு மனம் வேண்டுமே, அவர்களிடம் உள்ளது.

மடி தட்டி போன மாட்டை, பணம் வாங்கி அடி மாட்டிற்கு அனுப்பும் இந்த நாட்டில் இது என்றைக்கு சாத்தியம்.


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

kmr.krishnan said...

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க கொளல்"

நேரு பற்றிய இந்தக் குறிப்பில், நேரு தன் கருத்தினை மாற்றிக் கொண்ட பெருந்தனமையையும் நாம் பாராட்ட வேண்டும்.தன்னை விமர்சித்தவரை பகைக்காமல் இருந்ததையும்,அவர்களுக்கு அளித்த பேச்சு சுதந்திரத்தையும்
நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நேரு பிரதமர் ஆன போது நாடு துண்டாடப் பட்டதால் ஏற்பட்ட அகதிகள் பிரச்சனை, பெரும் பஞ்சத்தால் ஏற்பட்ட உணவுத்தட்டுப்பாடு,படிப்பறிவு இல்லாத பெரிய மக்கள் தொகை, பெயருக்குக்கூட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாத சூழல், விவசாயத்தில் புதுமை இல்லாத நிலை ஆகியவை கோலோச்சின.நேரு அவற்றை மிகவும் சரியாக அணுகினார்.இன்று மக்கட்தொகை மும்மடங்காக பெருகியபின்னரும் இந்தியா பஞ்சம் இல்லாமல் இருக்கிறது என்றால் அதற்கு நேரு இட்ட அடித்தளமே காரணம்.உயர்கல்வியில் நேரு கண்ட கனவு நினைவாகி வருகிறது.அறிவியல் தொழில் நுட்பம் பெருகியுள்ளது.ஜனநாயக பண்பு பெருகியுள்ளது. சக்திவாய்ந்த இந்திராவை நாடு தோல்வியுற செய்தது என்றால்,அது நேருவினால் அனைவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குரிமையால் அல்லவா? இன்று நரேந்திர மோதிக்கும் அதுவே துணை நிற்கிறது.

சீனாவை அதிகம் நம்பியதும்,ஊழல் நபர்களை இனம் காணாமல் விட்டதும் அவரது பலவீனங்கள்.

Govindasamy said...

உண்மையிலேயே புத்திசாலித்தனமான பேச்சுக்கள்தான்.

பகிர்வுக்கு நன்றி அய்யா.