மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.10.14

மாமனிதர்களுக்கு மரணமில்லை!


மாமனிதர்களுக்கு மரணமில்லை!

நாச்சிமுத்து மகாலிங்கம் என்ற பெயரை அறியாத கோவை வாசிகள்
இருக்க மாட்டார்கள். அத்துடன் தமிழகம் முழுமையும்
அறிந்த பெயர் அது!

பல அரிய சாதனைகளைச் செய்த மாமனிதர் அவர்!

21.3.1923 அன்று பொள்ளாச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த
அவர், சென்னை லயோலா கல்லூரியிலும் பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியிலும் படித்துப் பொறியாளரானவர் அவர்.

அவருடைய தந்தையார் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக
இருந்தமையால், மகாலிங்கம் அவர்களும் அரசியல் வாழ்க்கையில்  ஈர்க்கப்பெற்று அன்றைய காங்கிரஸ் இயக்கத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி, மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று சுமார்
15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார்.
(1952 முதல் 1967வரை)

பரம்பிக்குளம் ஆளியார் அணைத் திட்டம் உருவாகக் காரணமாக
இருந்தவர் அவர்.

முன்னாள் அமைச்சர்கள் திரு.கே. காமராஜர், திரு.சி.சுப்பிரமணியம்,
திரு வெங்கட்ராமன் என்று அத்தனை தலைவர்களுடனும் நட்பாக
இருந்தவர் அவர்.

1967ம் ஆண்டில் வங்கிகள் தேசியமான பிறகு வங்கிகள் உதவியுடன்
பல தொழில்களைத் துவங்கி அவற்றை தன்னுடைய அயராத
உழைப்பால் விரிவு படுத்தினார்.

இன்று அவருடைய சக்தி குழுமத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்
பாட்டில் உள்ளன (Sakthi Group of Companies is a name to reckon with as
 it has forayed into sugar, distilling, automobiles, finance, etc.)

வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) மீது அதீத பற்று உடையவர்.
அதுபோல வேதாத்ரி மகரிஷி சுவாமிகளிடமும் பற்றுடையவராக
இருந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். பல
பதிகங்களை புத்தக வடிவில் வெளிவர ஏராளமான பொருள் உதவி
செய்தவர்.

இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட மாமனிதர் 2.10.2014 அன்று இயற்கை எய்தி விட்டார்
(91 வயது)

மாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்
என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

அவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கான சுட்டி
URL: http://en.wikipedia.org/wiki/N._Mahalingam

அவருக்காக சக்தி குழுமத்தின் மாத இதழில் ஒரு விசேட அஞ்சலி
சிறப்பிதழ் ஒன்றை அவருடைய 13ம் நாள் கிரியைகள் நடைபெற்ற
அன்று வெளியிட்டார்கள்  (14.10.2014)

அந்த இதழில் அடியவன் எழுதிய அஞ்சலி கட்டுரை ஒன்றும்
வெளியாகி உள்ளது.

உங்கள் பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. ஆம் ஐயா! தெய்வத்திரு நா.மகாலிங்கம் ஐயா பற்றித் தாங்கள் கூறியது அனைத்தும் மிகையல்ல. நற்செயல் நடக்கும் அனைத்து இடங்களிலும் அந்த ஐயாவின் முத்திரை இருக்கும்.தங்களுடைய நேரடி அனுபவம் படிக்க சுவையாக இருந்தது.90 வயதிலும் தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து பல அறச்செயல்களில் ஈடுபட்டவர்.காந்தி வள்ளல்லர் நிகழ்ச்சியில் காந்தி ஜெயந்தியில்
    மேடையிலேயே உயிர் பிரிந்தது ஓர் அதிசயமே!

    ReplyDelete
  2. எனது வேண்டுகோளை வெளியிட்டு பேருதவி செய்ததற்கு மிகுந்த நன்றிகளையும்
    வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  3. மாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்
    என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

    மகத்தான பகிர்வுகள்.

    ReplyDelete
  4. வணக்கம் குரு,

    நாச்சிமுத்து மகாலிங்கம் அய்யா அவர்கள் இயற்க்கை எய்திய தகவலை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். ஆனால் அய்யா அவர்களின் அருமை பெருமைகளை அறிந்திருக்கவில்லை. அறிய செய்தமைக்கு நன்றிகள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  5. தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்

    கூட இருந்தே
    குழி பறித்தாலும் கூட இருந்தே கொடுத்தது காத்து நிக்கும்...

    மலை போலே வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும்

    நம்மை வாழவிடாதவர் வந்து
    நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு.. வாழ்வில்

    நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
    நான்குமறை தீர்ப்பு,..

    ReplyDelete
  6. வணக்கம் சார்..

    டாக்டர். நா.மாகாலிங்கம்....
    அருட்செல்வர்!
    பொருட்செல்வர்!
    கல்விச்செல்வர்!

    இந்த வாய்ப்பும், வசதியும்
    எத்தனைபேருக்கு கிடைக்கும்???
    அதீத புண்னியம்.
    அதீத பாக்யம் பெட்றவர் என்றால்
    மிகையாகாது.......

    வரம்வேண்டும்+வரம்வேண்டும்
    வாங்கிவந்தவேண்டும் !!!

    ReplyDelete
  7. Respected Sir,

    Hope all is well. It's great to share about respectable personalities. So that the next generation also can learn many things.

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    ஆம் ஐயா! தெய்வத்திரு நா.மகாலிங்கம் ஐயா பற்றித் தாங்கள் கூறியது அனைத்தும் மிகையல்ல. நற்செயல் நடக்கும் அனைத்து இடங்களிலும் அந்த ஐயாவின் முத்திரை இருக்கும்.தங்களுடைய நேரடி அனுபவம் படிக்க சுவையாக இருந்தது.90 வயதிலும் தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து பல அறச்செயல்களில் ஈடுபட்டவர்.காந்தி வள்ளல்லர் நிகழ்ச்சியில் காந்தி ஜெயந்தியில்
    மேடையிலேயே உயிர் பிரிந்தது ஓர் அதிசயமே!////

    நல்லது. உங்களின் கருத்துப்பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    மாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்
    என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!
    மகத்தான பகிர்வுகள்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    நாச்சிமுத்து மகாலிங்கம் அய்யா அவர்கள் இயற்கை எய்திய தகவலை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். ஆனால் அய்யா அவர்களின் அருமை பெருமைகளை அறிந்திருக்கவில்லை. அறிய செய்தமைக்கு நன்றிகள்.
    நன்றி
    செல்வம்/////

    நல்லது. அறிந்து கொண்டதைத் தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  11. /////Blogger வேப்பிலை said...
    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்
    கூட இருந்தே
    குழி பறித்தாலும் கூட இருந்தே கொடுத்தது காத்து நிக்கும்...
    மலை போலே வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும்
    நம்மை வாழவிடாதவர் வந்து
    நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு.. வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
    நான்குமறை தீர்ப்பு,.. /////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் பாடல்வரிகளுக்கும் நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்..
    டாக்டர். நா.மாகாலிங்கம்....
    அருட்செல்வர்!
    பொருட்செல்வர்!
    கல்விச்செல்வர்!
    இந்த வாய்ப்பும், வசதியும்
    எத்தனைபேருக்கு கிடைக்கும்???
    அதீத புண்னியம்.
    அதீத பாக்யம் பெட்றவர் என்றால்
    மிகையாகாது.......
    வரம்வேண்டும்+வரம்வேண்டும்
    வாங்கிவந்தவேண்டும் !!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  13. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Hope all is well. It's great to share about respectable personalities. So that the next generation also can learn many things.
    Have a pleasant day.
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!.

    ReplyDelete
  14. மாமனிதர்களுக்கு மரணமில்லை உண்மைதான்

    அவர்கள் செய்யும் புண்ணியங்கள் நன்மைகள் , படைப்புகள். அவர்களை
    என்றென்றும் நிலைத்து நிற்கும் .

    நன்றி ஐயா .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com