Poetry தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?
கவிதைச் சோலை
கவிதைச் சோலை
தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும்
சாம்பல்தான் மீத மாகும்
பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்
பழம்பாடல் வாழு முலகில்
மாசற்ற பொன்னோடும் வைரமும் மணிகளும்
மார்பாட வாழும் சிலையே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
மதுரைமீ னாட்சி உமையே!
- கவியரசர் கண்ணதாசன்
தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும்
சாம்பல்தான் மீத மாகும்
பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்
பழம்பாடல் வாழு முலகில்
மாசற்ற பொன்னோடும் வைரமும் மணிகளும்
மார்பாட வாழும் சிலையே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
மதுரைமீ னாட்சி உமையே!
- கவியரசர் கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
தாசியிடம் சென்றால் சந்நியாசி பட்டம் கூட மிச்சம் இல்லை . அப்படி தாசி வாழ்கை கொண்டவளிடம் மிச்சம் வைத்தால் சாம்பல் கூட நிச்சயம் இல்லை.
ReplyDeleteஅருமையான பாடல் வரிகள் அய்யா. மாசற்ற பொன்னோடும் , வைரமும் , மணிகளும் , அடர்ந்த கூந்தலில் மலர் மணம் வீசும் மீனாட்சியின் தெய்வீகம் நம் வீட்டிலும் வர வேண்டுவோம்.
kalai seattle
நல்லதொரு செய்யுள்/பாடல். "பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்" என்ற வரியில் வருகின்ற பழம்பாடலை அறிந்தவர்கள் எடுத்துக் கூறக் கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலும் புறப்பாடலாக இருக்கலாம்.ஐயாவுக்கு நன்றி!
ReplyDelete///தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?///
ReplyDeleteதழும்பும் சாம்பலும் என்பது உங்கள் கேள்விக்கு விடை.
(சரியாக பதில் சொல்லிவிட்டேனா? ஹி..ஹி..ஹீ. ... விடை பார்த்துதான் எழுதினேன்)
///பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;///
என்ற வரிகள்....
"வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனிதனால் வந்த நோயடா"
வரிகளை நினிவிற்கு கொண்டு வந்தது.
கவிநயம், பொருள் நயம் நிறைந்த கவிதை. கவியரசரின் அருமையான பாடல்கள் பலரை சென்றடைந்து , அவர்களையும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாழ்க்கையில் பாட வைத்தது அது இசை வடிவத்தை பெற்றபொழுதுதான்.
நல்ல கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.
கவியரசரின் மிக அற்புதமான பாடல் பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDelete//பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்
பழம்பாடல் வாழு முலகில்//
உலக நடப்பை உறைக்கச் சொல்லும் அருமையான வரிகள். ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் கண்முன் அறைகிறது. அருமையான கவிதை தந்தமைக்கு மீண்டும் நன்றி.
பாசமும் நட்பும் இவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போகலாம் ஆனால் அது
ReplyDeleteஅவனால் அங்கீகரிக்கப்படும்
வாத்தியாரின் இந்த பாடல் வரிகளே சட்டென்னு.... நிழலாடியது
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன்
திருந்தப் பார்க்கணும்
தப்புச் செய்வதன்
வருந்தி ஆகணும்
பொருள் சார் உலகிலே பொருளெல்லாம் பார்த்துப்பின் அதில்
ReplyDeleteபொருளெதுவுமில்லையென உணர்ந்த் நம் கவியரசன், இக
இருளிலிருந்து மீள ஒரு வழியதனைச்சொல்வான் எனில் அது
அருள் மழை பொழியவேண்டி கருவரையில் நின்று எமை
காலமெல்லாம் காத்திடும் மீனாட்சி உமையின்
கால்கள் சரணே !!
சுப்பு ரத்தினம்
///////Blogger கலையரசி said...
ReplyDeleteதாசியிடம் சென்றால் சந்நியாசி பட்டம் கூட மிச்சம் இல்லை . அப்படி தாசி வாழ்கை கொண்டவளிடம் மிச்சம் வைத்தால் சாம்பல் கூட நிச்சயம் இல்லை.
அருமையான பாடல் வரிகள் அய்யா. மாசற்ற பொன்னோடும் , வைரமும் , மணிகளும் , அடர்ந்த கூந்தலில் மலர் மணம் வீசும் மீனாட்சியின் தெய்வீகம் நம் வீட்டிலும் வர வேண்டுவோம்.
kalai seattle//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்லதொரு செய்யுள்/பாடல். "பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்" என்ற வரியில் வருகின்ற பழம்பாடலை அறிந்தவர்கள் எடுத்துக் கூறக் கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலும் புறப்பாடலாக இருக்கலாம்.ஐயாவுக்கு நன்றி!/////
நல்வழி’ பாடல் அது! தேடி எடுத்துத் தருகிறேன். நன்றி!
//////Blogger தேமொழி said...
ReplyDelete///தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?///
தழும்பும் சாம்பலும் என்பது உங்கள் கேள்விக்கு விடை.
(சரியாக பதில் சொல்லிவிட்டேனா? ஹி..ஹி..ஹீ. ... விடை பார்த்துதான் எழுதினேன்)
///பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;///
என்ற வரிகள்....
"வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனிதனால் வந்த நோயடா"
வரிகளை நினிவிற்கு கொண்டு வந்தது.
கவிநயம், பொருள் நயம் நிறைந்த கவிதை. கவியரசரின் அருமையான பாடல்கள் பலரை சென்றடைந்து , அவர்களையும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாழ்க்கையில் பாட வைத்தது அது இசை வடிவத்தை பெற்றபொழுதுதான்.
நல்ல கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.////
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று
மறந்துவாழ ஒன்று!
என்ற கவியரசரின் பாடல் வரிகளும் நினைவுக்கு வருகின்றது!
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteகவியரசரின் மிக அற்புதமான பாடல் பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.
//பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
படும்பாடு கோடி யாகும்;
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்
பழம்பாடல் வாழு முலகில்//
உலக நடப்பை உறைக்கச் சொல்லும் அருமையான வரிகள். ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் கண்முன் அறைகிறது. அருமையான கவிதை தந்தமைக்கு மீண்டும் நன்றி.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger அய்யர் said...
ReplyDeleteபாசமும் நட்பும் இவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போகலாம் ஆனால் அது
அவனால் அங்கீகரிக்கப்படும்
வாத்தியாரின் இந்த பாடல் வரிகளே சட்டென்னு.... நிழலாடியது
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன்
திருந்தப் பார்க்கணும்
தப்புச் செய்வதன்
வருந்தி ஆகணும்/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!
////Blogger sury said...
ReplyDeleteபொருள் சார் உலகிலே பொருளெல்லாம் பார்த்துப்பின் அதில்
பொருளெதுவுமில்லையென உணர்ந்த நம் கவியரசன், இக
இருளிலிருந்து மீள ஒரு வழியதனைச்சொல்வான் எனில் அது
அருள் மழை பொழியவேண்டி கருவரையில் நின்று எமை
காலமெல்லாம் காத்திடும் மீனாட்சி உமையின்
கால்கள் சரணே !!
சுப்பு ரத்தினம்/////
நிதர்சனமான உண்மை! நன்றி சுப்பு சார்!
கண்ணா,
ReplyDeleteநீங்கள் கேட்ட நாராயணா பாடல் .......
நாராயணா என்னும் பாராயணம்
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம் தேவாம்ருதம்
படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே
திருமலைப் படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே
இந்த தளத்தில் உள்ளது....
http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=956&mode=Language&Language=0
நல்ல பாடம், வாத்தியார் ஐயா.
ReplyDeleteநன்றி.
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteநல்ல பாடம், வாத்தியார் ஐயா.
நன்றி./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி புவனேஷ்வர்!
பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
ReplyDeleteமாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.
பதிவு மிகவும் அருமை அய்யா.
////Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeleteபாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.
பதிவு மிகவும் அருமை அய்யா.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteதமதத்திற்க்கு மன்னிக்கவும்
உள்ளேன் ஜயா
நன்றி
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்
உள்ளேன் ஜயா
நன்றி////
இது தரையில் 4 சுவர்களுக்குள் நடக்கும் வகுப்பு அல்ல! செயற்கைக்கோள்கள் மூலம் ஆகாயத்தில் நடக்கும் இணைய வகுப்பு. இதற்கு நேரம், காலமெல்லாம் கிடையாது. தாமதம் என்பதற்கும் இங்கே இடமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். போகலாம். உங்கள் செளகரியப்படி வந்து செல்லுங்கள் உதயகுமார். மன்னிப்பையெல்லாம் வீணாக்காதீர்கள்:-)))