மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.6.12

Astrology அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 21

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்தொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.82
R.விஜய். ஈரோடு

ஐயா கேள்வி பதில் பதிவிற்கு நன்றி..
ஷட் பலனின்படி புதன் பலஹீனமாக உள்ளது.. புதனின் அருளை பெற என்ன வழிகள்? புதனுகென்று சிறப்பு வழிபாடு ஏதேனும் உள்ளதா?
நன்றி,
vijay,Erode.

புதன் என்று இல்லை, எந்தக் கிரகம் வலிமை இழந்து இருந்தாலும், நன்மைபெற கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
அதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்த சுவாமிகள் அருளினார். அந்தப் பாடலுக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது
---------------------------------------------------------------------
email.No.83
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலத்தையும் திரும்ப சேர்ந்து வாழும் காலத்தையும் எவ்வாறு கண்டறிவது?

இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக
ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும்.

2.தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது ஆக இருந்தால் நல்ல தசை புத்தியை எவ்வாறு அட்டவணை இல்லாமல் சுலபமாக கண்டறிவது?

குழப்புகிறீர்களே சுவாமி! தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது என்று சொல்லிவிட்டு, நல்ல தசை என்று எதைக் கேட்கிறீர்கள்? சுலபமாகக் கண்டறிவதற்கு ஒருவழிதான் உள்ளது. உள்ளூரில் நல்ல ஜோதிடராகப்
பார்த்துக் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்
--------------------------------------------------------
email.No.84
அருள் முருகன்

Sir

Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
with regards,
Arul Murugan

சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
------------------------------------------------------------------
email.No.85
சு.தேவராஜன்

ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு ஒரு ஐயம்.

1. எனது நண்பன் ஜாதகத்தில் திருக்கணித முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய்.வாக்கிய முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி குரு.இவர்கள் இருவரும் ராகுவுடன் சேர்ந்து சிம்ம வீட்டில் இருகின்றார்கள்.சிம்ம வீட்டை கேது பார்க்கிறான் . மகரம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறான். இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுமா?.மனைவி எப்படி அமையும். அவர் மீன ராசி. எனக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா.
உங்கள் அன்பு மாணவன்
சு.தேவராஜன்

”இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்?” என்று கேட்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி.

திருமணத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள முறைப்படி ஜாதகத்தை அலச வேண்டும். அதற்கு முழு ஜாதகம் வேண்டும். அல்லது முழுப் பிறப்பு விவரங்கள் வேண்டும்.

ஜாதகன் 32 வயதைத் தாண்டியவன் என்றால், ஏன் அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் அவன் தகுதியும் தெரிய வேண்டும் (அதையும் ஜாதகத்தில் அலசலாமே என்றால், ஜாதகத்தின் 12 வீடுகளையும்
அலச வேண்டும். அதற்கு ஜோதிடருக்கு நேரம் இருக்காது. அதனால், அதற்கு உரிய கதைச் சுருக்கத்தை நாம்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்)

அஜீத் போன்ற தோற்றத்தையும், அண்ணா நகரில் பெரிய பங்களாவையும், முதுகலைப் பட்டத்தையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானத்தையும் உடைய ஜாதகன், அனுஷ்கா சர்மா போன்ற பெண்ணைத் தேடி மணந்து
கொள்ளலாம். தி.நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் இளைஞன், தன் தகுதிக்குக் காந்திமதி போன்ற பெண்ணைத்தான் தேடவேண்டும். எல்லா அம்சமும் பொருந்திய மனைவி கிடைக்க ஜாதகனுக்குத் தகுதி வேண்டாமா?.

லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள். அது மூன்றும் இல்லாவிட்டால் கிடைக்கிற பெண்ண மணந்து கொண்டு, மனதையும் தேற்றிக் கொண்டு, வருகிறவளுக்கு அல்லது கிடைக்கிறவளுக்குத் தகுதியான கணவனாக நாம்தான் இருக்கவேண்டும்! புரிகிறதா நண்பரே?
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


30 comments:

  1. நிலமை மாற கூட்டு பிரார்த்தனைக்கு என தேவார பாடல்களை பதிவு செய்ய வேண்டாமென வாத்தியார் சொன்னதின் படி பதிவு செய்யவில்லை..

    கையை கட்டிபடி
    வாயை பூட்டிபடி

    வருகை பதிவு தருகிறோம்

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்

    உள்ளேன் ஐயா

    நன்றி

    ReplyDelete
  3. நன்றி ஐயா, குறிப்பிட்டிருக்கும் கோளறு திருப்பதிகம் சுட்டி இடம் மாறிவிட்டது போலிருக்கிறது.

    மாற்று சுட்டியாக கீழே குறிப்பிட்டதை உபயோகிக்கலாம்....
    http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_085.htm
    இசைப் பயிற்சி செய்ய ஒலிவடிவமும் இந்தத் தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
    பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. மிக அருமையான மீள்பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. உதாரணங்கள் மனதில் சட்டென்று பதிவதால், அதில் சொல்லப்படும் செய்தியும் நினைவில் நிற்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள்//

    ஐயா,
    சந்தேகம். Stupid ஆக இருந்தால் மன்னிக்கவும்.
    இதில் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரியவில்லை.
    இந்த conditions இல் மூன்றுமே இருந்தாக வேண்டுமா இல்லை இரண்டு இருந்தாலும் போதுமா?
    அதாவது, சமைக்கிற பொழுது ஏதோ தனியா தூள் இல்லாவிட்டாலும் கார பொடி போட்டு ஒப்பேத்தி விடலாமே அது போல மூன்றில் இரண்டு இருந்தால் ஒரோ 70 % பலன் போல கிடைக்குமா இல்லை all three conditions satisfied இருந்தால் தான் ஆச்சு, இல்லை என்றால் இல்லையா?

    Thanks!

    ReplyDelete
  6. கேள்வி பதில் மீள் பதிவு படித்துப் பயன் அடைந்தேன்.

    பார்த்து ஐயா! காந்திமதி ரசிகர் மன்றக்காரார்கள் வழக்குப் போட்டு விடக்கூடும்!

    ReplyDelete
  7. ////Blogger அய்யர் said...
    நிலமை மாற கூட்டு பிரார்த்தனைக்கு என தேவார பாடல்களை பதிவு செய்ய வேண்டாமென வாத்தியார் சொன்னதின் படி பதிவு செய்யவில்லை..
    கையை கட்டிபடி
    வாயை பூட்டிபடி
    வருகை பதிவு தருகிறோம்////

    வருகைப் பதிவிற்கு நன்றி!
    கூட்டுப் பிரார்த்தனை எதற்கு சுவாமி?
    ஓ...நித்யா மேட்டரா?
    அதைக் கர்மகாரகன் சனீஷ்வரன் பார்த்துக்கொள்வான்.
    நீங்கள் கவலையை மறந்து விட்டு, ஜிக்கி அம்மா பாடிய பழைய பாடல்களைக் கேளுங்கள். மனம் நிம்மதியடையும்!

    ReplyDelete
  8. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  9. //ஓ...நித்யா மேட்டரா?
    அதைக் கர்மகாரகன் சனீஷ்வரன் பார்த்துக்கொள்வான்.//

    ayyo ayyo! ROFL! Your humour is awesome, teacher sir :)

    ReplyDelete
  10. சிறிய பதிவு ஆனால் பயனுள்ள தகவல்கள்...நன்றி ஐயா...

    ReplyDelete
  11. /////Blogger தேமொழி said...
    நன்றி ஐயா, குறிப்பிட்டிருக்கும் கோளறு திருப்பதிகம் சுட்டி இடம் மாறிவிட்டது போலிருக்கிறது.
    மாற்று சுட்டியாக கீழே குறிப்பிட்டதை உபயோகிக்கலாம்....
    http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_085.htm
    இசைப் பயிற்சி செய்ய ஒலிவடிவமும் இந்தத் தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
    பதிவிற்கு நன்றி ஐயா./////

    உங்கள் சுட்டிக்கு நன்றி. பதிவில் அதையே உள்ளிட்டுவிட்டேன். இப்போது பாருங்கள். சரியாக இருக்கும்!

    ReplyDelete
  12. ////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான மீள்பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா. உதாரணங்கள் மனதில் சட்டென்று பதிவதால், அதில் சொல்லப்படும் செய்தியும் நினைவில் நிற்கிறது. மிக்க நன்றி./////

    உதாரணங்களூடன் சொல்வதன் நோக்கமும் அதுதான். நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. //////Blogger Bhuvaneshwar said...
    //லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள்//
    ஐயா,
    சந்தேகம். Stupid ஆக இருந்தால் மன்னிக்கவும்.
    இதில் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரியவில்லை.
    இந்த conditions இல் மூன்றுமே இருந்தாக வேண்டுமா இல்லை இரண்டு இருந்தாலும் போதுமா?
    அதாவது, சமைக்கிற பொழுது ஏதோ தனியா தூள் இல்லாவிட்டாலும் கார பொடி போட்டு ஒப்பேத்தி விடலாமே அது போல மூன்றில் இரண்டு இருந்தால் ஒரோ 70 % பலன் போல கிடைக்குமா இல்லை all three conditions satisfied இருந்தால் தான் ஆச்சு, இல்லை என்றால் இல்லையா?
    Thanks!//////

    முதல் வகுப்புப் பெட்டி, குளிசாதனவசதியுடன் கூடிய பெட்டி, படுக்கை வசதி மட்டுமே உள்ள பெட்டி - ஆக மூன்றில் எதாவது ஒன்றிற்கு உங்களிடம் முன்பதிவு செய்யப்பெற்ற பயணச்சீட்டு இருந்தால் போதும். ரயிலில் இடம் உறுதி. உங்களின் பயணமும் உறுதி!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    கேள்வி பதில் மீள் பதிவு படித்துப் பயன் அடைந்தேன்.
    பார்த்து ஐயா! காந்திமதி ரசிகர் மன்றக்காரார்கள் வழக்குப் போட்டு விடக்கூடும்!/////

    T.R.ராஜகுமாரி அம்மாவில் இருந்து இன்றுள்ள ஷ்ரேயா ரெட்டி அம்மணி வரை அனைவரின் ரசிகர் மன்றத்திலும் எனக்கு வேண்டியவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் கவலைப்பட ஏதுமில்லை சுவாமி!

    ReplyDelete
  15. /////Blogger Bhuvaneshwar said...
    //ஓ...நித்யா மேட்டரா?
    அதைக் கர்மகாரகன் சனீஷ்வரன் பார்த்துக்கொள்வான்.//
    ayyo ayyo! ROFL! Your humour is awesome, teacher sir :)/////

    புதிய, நவீன, கோளறு திருப்பதிகம் கீழே உள்ளது. தினமும் காலையில் 10 முறை பாராயணம் செய்யுங்கள். நகைச்சுவை உணர்வு தானாக வந்துவிடும். உங்களை விட்டு என்றும் போகாது. அதற்கு நான் க்யாரண்டி!

    ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
    ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
    வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
    வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
    ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

    ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
    ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
    தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
    வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

    கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
    தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..

    கண்டதும் காதல் வழியாது
    கண்டதால் வெட்கம் கழியாது
    பூனையில் சைவம் கிடையாது
    ஆண்களில் ராமன் கிடையாது
    புரட்சிகள் ஏதும் செய்யாமல்
    பெண்ணுக்கு நன்மை விளையாது
    கண்ணகி சிலைதான் இங்குண்டு
    சீதைக்கு தனியாய் சிலையேது

    ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
    பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
    பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
    அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி

    பகலிலே கலர்கள் பார்க்காமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?
    சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?
    ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
    இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

    ReplyDelete
  16. ////Blogger Arul said...
    சிறிய பதிவு ஆனால் பயனுள்ள தகவல்கள்...நன்றி ஐயா.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஐயா,
    நகைச்சுவை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது.
    கலித்தொகையில் மருதக்கலியில் பாடல் இருபது ஒன்பதினை படித்து மகிழுங்கள்.
    அதற்க்கான சுட்டி இதோ....... http://ilakkiyam.com/index.php/sangailakkiyam/34-tamil/isai/kuzhanthai/3221-3221kalithogai93
    கூனியும் குள்ளனும் காதலிக்கும் காட்சியை படம் பிடிக்கும்.
    அடக்கும் கூனி தன அழகை வியந்து குள்ளனை எள்ளுவதும், குள்ளன் கூனியின் காதலை வேண்டுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைக்கும்.
    நமது இலக்கியங்களில் நகைச்சுவைக்கு குறைவில்லை!

    ReplyDelete
  19. ayyo ayyo! ROFL! Your humour is awesome, teacher sir :)

    இதில் என்ன humour புரியவில்லை..

    ReplyDelete
  20. P.VR. SUBBAIYA said...ஊர்வசி ஊர்வசி டேக்.........................

    வகுப்பறை கலகலப்பாக போகிறது.

    இதேபோன்று வாத்தியார் பள்ளிக்காலத்திலும் கிடத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லாவே படித்திருப்பேன்.

    ReplyDelete
  21. Bhuvaneshwar said...ஐயா,
    சந்தேகம். Stupid ஆக இருந்தால் மன்னிக்கவும்.
    இதில் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரியவில்லை........//////

    புவனேஷ்வருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என முன்பு சொல்லியிருந்தார்,அதனால் இந்த இடத்தில் மிகவும் ஜாக்கிரைதையாக இருக்கிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  22. //புவனேஷ்வருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என முன்பு சொல்லியிருந்தார்,அதனால் இந்த இடத்தில் மிகவும் ஜாக்கிரைதையாக இருக்கிறார் என நினைக்கிறேன்.//

    அட எல்லாம் ஒரு public welfare காக தான்!

    :P

    ReplyDelete
  23. ஐயா,

    என் சிறு அறிவுக்கு எட்டிய ஒரு கேள்வி...

    ஏழாம் வீடும்,சுக்கிரனும் களத்திரத்தை குறிப்பன. அது போல ஐந்தாம் வீடும், குருவும்(புத்திர காரகன்) மழலை செல்வங்களை குறிப்பன. ஆகையால், லக்கினத்தை விட ஐந்தாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஐந்தாம் அதிபதி மற்றும் குருவின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், நல்ல குழந்தைகள் அமைவார்கள் என்று கொள்ளலாமா?

    ReplyDelete
  24. ///SP.VR. SUBBAIYA said...
    ஓ...நித்யா மேட்டரா?
    அதைக் கர்மகாரகன் சனீஷ்வரன் பார்த்துக்கொள்வான்.
    நீங்கள் கவலையை மறந்து விட்டு, ஜிக்கி அம்மா பாடிய பழைய பாடல்களைக் கேளுங்கள். மனம் நிம்மதியடையும்! ///

    வாத்தியார் சொல்றதுதான் சரி...இருங்க அய்யர் ஐயா உங்களுக்காக நான் ஒரு பாடல் சுழல விடுகிறேன்....

    "ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை

    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
    வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே
    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்"

    கவலையே படாதீங்க ...வரலாறு திரும்புவது என்று சொல்வது உண்மை என்றால் எல்லாவற்றையும் அம்மா கவனிச்சுக்குவாங்க.
    இப்பவே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் தங்கமகன் (குணத்தினால் அல்ல; தங்க கிரீடம், தங்க சிம்மாசனம், தங்க ருத்திதிராட்ச மாலை அணிவதால் என்று பொருள் கொள்க), என்ன ரகசிய கண்காணிப்பில் இருப்பாரோ யாருக்குத் தெரியும். மாட்ட முடியாத அளவுக்கு தவறு செய்யும் வரை விட்டு வைத்து, வழக்கம் போல ராவோட ராவா சென்று லபக்குன்னு கோழி போல அமுக்கி கொண்டு வந்து அடைச்சுடுவாங்க. அப்புறம் என்ன? வெளியில் வர எவ்வளவு காலம் ஆகுமோ, அதுவரை சனீஸ்வரன் கிருபையால் எல்லாவற்றையும் இரும்பிலேயே கதவு, கைகாப்பு என வைத்துக் கொள்ளலாம். அப்பொழுது கதவை திறங்கள் காற்று வரட்டும் என்று சொல்லிப்பார்க்கட்டும்.

    ReplyDelete
  25. ///////Blogger Bhuvaneshwar said...
    ஐயா,
    நகைச்சுவை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது.
    கலித்தொகையில் மருதக்கலியில் பாடல் இருபது ஒன்பதினை படித்து மகிழுங்கள்.
    அதற்க்கான சுட்டி இதோ....... http://ilakkiyam.com/index.php/sangailakkiyam/34-tamil/isai/kuzhanthai/3221-3221kalithogai93
    கூனியும் குள்ளனும் காதலிக்கும் காட்சியை படம் பிடிக்கும்.
    அடக்கும் கூனி தன அழகை வியந்து குள்ளனை எள்ளுவதும், குள்ளன் கூனியின் காதலை வேண்டுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைக்கும்.
    நமது இலக்கியங்களில் நகைச்சுவைக்கு குறைவில்லை!////////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ////////Blogger அய்யர் said...
    ayyo ayyo! ROFL! Your humour is awesome, teacher sir :)
    இதில் என்ன humour புரியவில்லை..///////

    No problem. Take it easy Viswanathan!

    ReplyDelete
  27. //////Blogger thanusu said...
    P.VR. SUBBAIYA said...ஊர்வசி ஊர்வசி டேக்.........................
    வகுப்பறை கலகலப்பாக போகிறது.
    இதேபோன்று வாத்தியார் பள்ளிக்காலத்திலும் கிடத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லாவே படித்திருப்பேன்.//////

    படிப்பெல்லாம் புத்திநாதனைப் பொறுத்த விஷயம். வாத்தியார் கிடைப்பதைப் பொறுத்ததல்ல! ஜாதகத்தில் அவன் நன்றாக இருந்தால், நல்ல வாத்தியார்களிடமும், நல்ல பள்ளியிலும் அவனே கொண்டுபோய் விட்டுவிடுவான்

    ReplyDelete
  28. ///////Blogger thanusu said...
    Bhuvaneshwar said...ஐயா,
    சந்தேகம். Stupid ஆக இருந்தால் மன்னிக்கவும்.
    இதில் ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரியவில்லை........//////
    புவனேஷ்வருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என முன்பு சொல்லியிருந்தார், அதனால் இந்த இடத்தில் மிகவும் ஜாக்கிரைதையாக இருக்கிறார் என நினைக்கிறேன்.////////

    அவர் ஒரு விஞ்ஞானி. திருமணம் ஆனபிறகும் அவர் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்:-)))

    ReplyDelete
  29. //////Blogger மகேஸ்வரன் said...
    ஐயா,
    என் சிறு அறிவுக்கு எட்டிய ஒரு கேள்வி...
    ஏழாம் வீடும்,சுக்கிரனும் களத்திரத்தை குறிப்பன. அது போல ஐந்தாம் வீடும், குருவும்(புத்திர காரகன்) மழலை செல்வங்களை குறிப்பன. ஆகையால், லக்கினத்தை விட ஐந்தாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஐந்தாம் அதிபதி மற்றும் குருவின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், நல்ல குழந்தைகள் அமைவார்கள் என்று கொள்ளலாமா?/////

    கொள்ளலாம்!

    ReplyDelete
  30. ////Blogger தேமொழி said...
    ///SP.VR. SUBBAIYA said...
    ஓ...நித்யா மேட்டரா?
    அதைக் கர்மகாரகன் சனீஷ்வரன் பார்த்துக்கொள்வான்.
    நீங்கள் கவலையை மறந்து விட்டு, ஜிக்கி அம்மா பாடிய பழைய பாடல்களைக் கேளுங்கள். மனம் நிம்மதியடையும்! ///
    வாத்தியார் சொல்றதுதான் சரி...இருங்க அய்யர் ஐயா உங்களுக்காக நான் ஒரு பாடல் சுழல விடுகிறேன்....
    "ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
    வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே
    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்"
    கவலையே படாதீங்க ...வரலாறு திரும்புவது என்று சொல்வது உண்மை என்றால் எல்லாவற்றையும் அம்மா கவனிச்சுக்குவாங்க.
    இப்பவே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் தங்கமகன் (குணத்தினால் அல்ல; தங்க கிரீடம், தங்க சிம்மாசனம், தங்க ருத்திதிராட்ச மாலை அணிவதால் என்று பொருள் கொள்க), என்ன ரகசிய கண்காணிப்பில் இருப்பாரோ யாருக்குத் தெரியும். மாட்ட முடியாத அளவுக்கு தவறு செய்யும் வரை விட்டு வைத்து, வழக்கம் போல ராவோட ராவா சென்று லபக்குன்னு கோழி போல அமுக்கி கொண்டு வந்து அடைச்சுடுவாங்க. அப்புறம் என்ன? வெளியில் வர எவ்வளவு காலம் ஆகுமோ, அதுவரை சனீஸ்வரன் கிருபையால் எல்லாவற்றையும் இரும்பிலேயே கதவு, கைகாப்பு என வைத்துக் கொள்ளலாம். அப்பொழுது கதவை திறங்கள் காற்று வரட்டும் என்று சொல்லிப்பார்க்கட்டும்.///////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com