Astrology - Popcorn Posts வாத்தியாராவது எப்படி?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி இரண்டு!
வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார். அதாவது class teacher!
அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?
பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)
இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும் புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other
இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.
ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teaching ability) கொடுத்தான். அதனால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
கையில் இருந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன். சரியாக இருக்கிறது.
ReplyDeleteநண்பர் ஒருவர் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணீயில் சேர்ந்திருக்கிறார். 2006ஆம் ஆண்டே NET தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், அரசுக்கல்லூரிக்கு சென்றால் அனுபவம் இருக்கிறதா என்று கேட்டார்கள். தனியார் கல்லூரிக்கு சென்றால் வாய்ப்பு கொடுக்காமலேயே உங்களால் பாடம் நடத்த முடியாது என்று நிராகரித்தார்கள். அவரது உறவினர்கள் எல்லாம், ஏதாவது போட்டித்தேர்வு எழுதி கிளர்க் வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று அவரை மட்டம் தட்டி பேசினாலும், அவர் நான் படித்தது எனக்கு மட்டும் பயன் தருவதாக இருக்க விரும்பவில்லை. நான் படித்ததை மற்றவர்க்கும் சொல்லித்தர விரும்புகிறேன் என்று உறுதியாக, தனியார் டியூஷன் சென்டரில் வேலை பார்த்துக்கொண்டே இருந்தார். இப்போது ஒரு தனியார் கல்லூரியில் மற்றொரு நண்பரின் சிபாரிசின் பேரில், சிபாரிசு என்றால் இவருக்கு வேலை கொடுங்கள் என்ற சிபாரிசு அல்ல. அவரை வகுப்பு எடுக்க சொல்லுங்கள். அதைப் பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி விட்டார். இவர் வகுப்பு எடுத்த விதம் அந்த கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், முதல்வர் அனைவருக்கும் பிடித்துப்போக இப்போது அந்த தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து விட்டார்.
ஒருவருக்கு கடவுள் என்ன கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாரோ அதை யாராலும் தடுக்க முடியாது. அவர் என்னென்ன கொடுக்க முடிவு செய்திருக்கிறார், எதை மறுத்திருக்கிறார் என்பதை சரியாக ஜாதகத்தை அலசினால் கண்டுபிடித்துவிடலாம் என்பதை கண்டுகொண்டேன். ஜாதகர் கல்வியில் அசத்துகிறார். பலரும் 50 வயதாகியும் திணறும் NET தேர்வை 25 வயதுக்குள் ஒரே முறையில் பாஸ் பண்ணியும் அவரை நிராகரித்தவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? போலியோவால் 100 சதவீதம் பாதிக்கப்பட்ட கால்களை வைத்துக்கொண்டு பாடம் நடத்த முடியாது என்பதுதான்.
மாற்றுத்திறனாளி மாணவர் என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். கால்களில் அவர் இழந்த சக்தி கைகளிலே இரண்டு மடங்காக இருப்பதை நான் அறிவேன். எங்கள் வகுப்பு 3வது மாடியில். மூன்று ஆண்டுகளும் அவர் யாருடைய உதவியும் இன்றி 3 மாடி ஏறி இறங்கி படித்தவர்.
போதிக்கத் தேவையான எந்த அமைப்புகளுமே எனக்கில்லை என்று என் கட்டங்கள் அறிவுறுத்துகிறது.
ReplyDeleteமாணவர்களும் பிழைத்துவிட்டார்கள். ஏதோ என்னால் முடிந்த நல்ல காரியம் :)))
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
பாடத்திற்கு நன்றி ஐயா
அய்யருக்காக செய்தது போல் உள்ளது இன்றைய பதிவு விளக்கம்..
ReplyDeleteபத்தாம் அதிபதி புதன்
பத்திரமாக...அங்கேயே..
(இரண்டில் தான் கேது..)
நல்லதை எடுத்துச் சொல்ல
எந்த பதவியில் இருந்தால் என்ன?
நன்றிகளுடன் வருகை பதிவினை பதிவு செய்கிறோம்
பத்துக்குரியன் புதன் அவன் ஒன்பதுக்குரியவன் சூரியனோடு கூட்டு சேர்ந்து பத்தில் இருந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறான்...
ReplyDeleteபொறியல் துறையில் இருந்தாலும் (புதன் செவ்வாயின் வீட்டில் சூரியனோடு நெருப்புச் சூழலில் மின்சார மற்றும் மின்னணுவியலில்) இருந்தாலும். தொழிலில் ஆய்வும், அது தொடர்பான போதனையுமான துறைச் சூழலே அமையும்.ஒரு பெரிய கூட்டத்தை வழிநடத்துவது முன்னின்று செல்வது என்ற சூழலும் இதிலே இருக்கும்.
தனுசு லக்னம், புதன் அம்சத்தில் உச்சம்... (சூரியன் ஆட்சி), அதனால் வாத்தியார்த் தான மாத்திரம் என்னை விட்டுப் போனதாக தெரியவில்லை:):)))
நன்றிகள் வாத்தியாரே!
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஜயா
நன்றி
சுயஜாதகத்தை அலசி பார்க்கவைத்த அருமையான குரும்பதிவை தந்த வாத்தியார் அய்யாவிற்கு நன்றிகள்.எனது ஜாதகத்தில் 10ம்மிட அதிபதி புதன் 9ம் இடத்திலும்,9ம் இடாதிபதி சூரியன் 10ம் இடத்திலும் பரிவர்த்தனை பெற்று தர்மகர்மாபதி யோகத்தில் உள்ளனர்.பாகைஇடைவெளி 9 மட்டுமே (புதன் அவுட்).எனவே வாத்தியார்வேலை நோசான்ஸ்.ஆனால் 20வயதிலிருந்து இன்றுவரை மோட்டாருடன் போராடிக்கொண்டிருக்கிறேன்.அதுதான் எப்படி என்று புரியவில்லை.இப்போது சனிதசை ஆரம்பத்தில் பதிவுலகில் கால்வைத்திருக்கிறேன்.ஒரு மிகபெரிய ஆறுதல்,லக்கினம் தனுசு.லக்கினாதிபதி குரு 7ல் 7பரல்களுடன் அட்டகாசமாக அமர்ந்து லக்கினத்தை தன்நேரடி பார்வையில் வைத்து அபரிமிதமான தாக்குபிடிக்கும் சக்தியை தந்துகொண்டிருக்கிறார்.
ReplyDeleteமிக நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு நன்றி. எனக்கும், பத்தாம் அதிபதி, புதனைப் பார்வையில் வைத்திருப்பதாலோ என்னவோ, ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் இன்ஸ்ட்ரக்டராகவே பணி வாழ்வைத் துவக்கினேன். இரு வேலைகள் மாறிய பின், சில தனிப்பட்ட காரணங்களால், ஒரு பள்ளியில் அக்கவுன்டன்ட் ஆக வேலை பார்க்க நேர்ந்த போதும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது, சில ஆசிரியைகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் திருத்திய பேப்பரைச் சரிபார்ப்பது என செய்தது உண்டு.
ReplyDeleteபல, பெரிய, சின்னத் திரை பிரபலங்களின் குழந்தைகளோடும், பெற்றோர்களோடும் நேரடிப் பழக்கம் உண்டு. மாணவர்களோடு மாணவர்களாகக் கலந்து பழகும் வழக்கம் உண்டு. எந்த அளவுக்கு என்றால், என் பையில் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகள் தரும் சாக்லெட்களை, உரிமையாக, மாணவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். பணியில் இல்லை என்றாலும் இன்றும் போன் செய்து நலம் விசாரிக்கும் மாணவத் தோழர்கள் பெற்றதே பெரும் பேறு. மிக்க நன்றி ஐயா.
சுய ஜாதக பரிசோதனைக்கு பாப்கார்ன் பதிவு உதவி செய்கிறது.
ReplyDelete///பத்தாம் வீட்டு காரனோடு புதன் கூட்டணி போட்டு,அல்லது பத்தாம் வீட்டு காரனும் புதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள///எனக்கு இதில் இரண்டும் உள்ளது .
புதன் ஆட்சியாய் ஒன்பதிலிருக்க பத்தாம் அதிபதி சந்திரன் மூன்றிலிருந்து ஒருவரை ஒருவர் பார்கிறார்கள். வாத்தியார் வேலை இல்லை .ஆனால் நிர்வாகம். ஒரு வகையில் வாத்தியார் வேலை போல் தான் .நன்றிகள் அய்யா இதுவும் ஜாதக அலசலைப்போல் தான் உள்ளது.
அருமையான பதிவு!
ReplyDeleteபத்தாம் அதிபதி புதனாக இருந்து, அவர் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நல்ல நிலையில் உள்ள குருவோடு அமர்ந்தாலும் வாத்தியார் (professor)ஆகலாமே?
போனவாரம் மாணவர் மலரில் வெளிவந்த எல்லோரின் ஆக்கங்களையும் மனமகிழ்வோடு படித்தேன்.
ReplyDeleteவழக்கம் போல சகோதரி பார்வதியாரின் கட்டுரையும் தனுசு அவர்களின் கவிதையும் அழகு.
:)
எனது கவிதையின் பொருளை பற்றி சகோதரி தேமொழி வினவி இருந்தார்.
அது தான் தலைப்பிலேயே இருக்கிறதே!
சொந்தக்காரியம் அதோடு பணி நிமித்தமான பயண அலைச்சலில் ஒரு பின்னூட்டமும் இட இயலாமல் இருந்தது.
மன்னிக்கவும்.
ஆய்ந்து ஓய்ந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து விட்டேன்!
@ Saran:
ReplyDeleteHats off to your friend. Applause.
The sad part is we rarely give them the empathy they deserve and accommodation they need. We rather proffer them sympathy which is the last thing they would want. Or worse still, we treat them as third class citizens.
:(
ஐயா,
ReplyDeleteஎனக்குப் பத்தில் புதன்,அதுவும் தனியாக,பத்தாம் அதிபதி சுக்கிரன் 8ல் உச்சம்.இருந்தும் நமக்கு அந்த வேலை இல்லை.இதனால் ஒரு நன்மை எனக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு நல்ல அறிவுரைகளை எப்போதும் சொல்லுவேன்.எனக்குத் தெரிந்த கருத்துக்களை அனைவரிடமும் பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்வேன்.
அன்புடைய ராஜாராம் அவர்களே,
ReplyDeleteமற்ற வீடுகளின் நிலைகளை அறியாமல் இந்த இரண்டை மட்டும் என்ன பலன் சொல்ல முடியும்?
மற்ற கோள்கள், அவற்ரோன் நேர் மற்றும் ஓரப்பார்வைகள், கூட்டணி..... வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
Also we need navamsa and ashtagavargam. Right?
வாத்தியார் அவர்களுக்கு:
ReplyDeleteஐயா, தசாம்சம் மற்றும் பாவ சக்கரம் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி ஒரு நாலு வார்த்தை சொல்லுங்களேன்.
ஜோதிடத்தில் நவகிரகங்களில்,சந்திரனும் புதனும்
ReplyDeleteஇரட்டை நிலை தன்மை உடையது.
சந்திரன் பூமிக்கருகில் இருந்து கொண்டு,
தான் இருக்கும் நட்சத்திர மண்டலங்களுக்கு
தகுந்தால் போல்,மற்ற கிரகங்களில்
இருந்து வரும் கதிர் வீச்சுகளை வாங்கி
ஒரு டிரான்ஸ்மீட்டரை போல் செயல்படுகிறது.
சந்திர திசை,புக்தி,அந்தரம் நடக்கும்
ஜாதகர்களுக்கு,ஆராய்ந்து
பலன் சொல்ல வேண்டும்,இல்லையென்றால்
பலன்கள் மாறுபாடாக நடந்துவிடும்.
புதனும் தான் சேர கூடிய,பார்க்க கூடிய,
ஏன் வாங்கிய நட்ச்சத்திர சாரத்தை பொருத்து கூட,
மாறுபடாக பலன்களை தருகிறது.
அதிகம் வக்கிர நிலை அடைவதும் புதன் தான்.
இந்த இரண்டு கிரகங்களையும்,மனிதர்களுடைய
நிலையில்லாத மனம்,மற்றும் நிலையில்லாத புத்தியின்
காரகத்துவமாக வைத்துள்ள சித்தர்களின்
அண்ட பிண்ட ஆராய்ச்சியின் நுட்பத்தை அறிந்து மகிழ்ந்து கொள்ளலாம்.
ஒருவர் ஆசிரியராக புதன் காரகத்துவம் என்றாலும்,
அந்த காரகத்துவத்தை இயக்க கூடிய பாவங்களான
லக்னம் நான்காமிடம் ஒன்பதாமிடம் போன்றவைகளையும்
கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
லக்னம் ஜாதகரையும்,நான்காமிடம் ஆரம்ப கல்வியையும்
ஒன்பதாம்மிடம் உயர் கல்வியையும் சுட்டி
காட்டும் பாவங்களாகும்.
நன்கு கற்றவரே கற்பிக்க முடியும்.
மேற்கூறிய பாவங்களில் புதன் இருந்தாலும்,
அல்லது மேற்கூறிய பாவ அதிபதிகளுடன்
சேர்க்கை அல்லது பார்வை கொண்டிருந்தாலோ,
கற்பதிலும் கற்பிப்பதிலும் நிபுணத்துவம் ஏற்ப்படும்.
இதில் பத்தாமிட அதிபதி கர்மகாரகன்
சனி,புதனோடு சாதக தன்மையோடு இருந்தால்,
தகுதிக்கு தகுந்த ஊதியத்தோடு
வேலை கிடைக்கும்.
புதனோடு பத்தாமிட அதிபதி மற்றும் சனி
பாதக தன்மையோடு இருந்தால்,
தகுதிக்கு தகுந்த போல் ஊதியம் கிடைக்காது.
மேலும் படித்த படிப்புக்கும்,பார்க்கும் வேலைக்கும்
சிறிதும் சம்மந்தமில்லாமல் போய்விடும்.
ஓம் சரவணபவ நம
Blogger சரண் said...
ReplyDeleteகையில் இருந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன். சரியாக இருக்கிறது.
நண்பர் ஒருவர் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்திருக்கிறார். 2006ஆம் ஆண்டே NET தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், அரசுக்கல்லூரிக்கு சென்றால் அனுபவம் இருக்கிறதா என்று கேட்டார்கள். தனியார் கல்லூரிக்கு சென்றால் வாய்ப்பு கொடுக்காமலேயே உங்களால் பாடம் நடத்த முடியாது என்று நிராகரித்தார்கள். அவரது உறவினர்கள் எல்லாம், ஏதாவது போட்டித்தேர்வு எழுதி கிளர்க் வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று அவரை மட்டம் தட்டி பேசினாலும், அவர் நான் படித்தது எனக்கு மட்டும் பயன் தருவதாக இருக்க விரும்பவில்லை. நான் படித்ததை மற்றவர்க்கும் சொல்லித்தர விரும்புகிறேன் என்று உறுதியாக, தனியார் டியூஷன் சென்டரில் வேலை பார்த்துக்கொண்டே இருந்தார். இப்போது ஒரு தனியார் கல்லூரியில் மற்றொரு நண்பரின் சிபாரிசின் பேரில், சிபாரிசு என்றால் இவருக்கு வேலை கொடுங்கள் என்ற சிபாரிசு அல்ல. அவரை வகுப்பு எடுக்க சொல்லுங்கள். அதைப் பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி விட்டார். இவர் வகுப்பு எடுத்த விதம் அந்த கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், முதல்வர் அனைவருக்கும் பிடித்துப்போக இப்போது அந்த தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து விட்டார்.
ஒருவருக்கு கடவுள் என்ன கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாரோ அதை யாராலும் தடுக்க முடியாது. அவர் என்னென்ன கொடுக்க முடிவு செய்திருக்கிறார், எதை மறுத்திருக்கிறார் என்பதை சரியாக ஜாதகத்தை அலசினால் கண்டுபிடித்துவிடலாம் என்பதை கண்டுகொண்டேன். ஜாதகர் கல்வியில் அசத்துகிறார். பலரும் 50 வயதாகியும் திணறும் NET தேர்வை 25 வயதுக்குள் ஒரே முறையில் பாஸ் பண்ணியும் அவரை நிராகரித்தவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? போலியோவால் 100 சதவீதம் பாதிக்கப்பட்ட கால்களை வைத்துக்கொண்டு பாடம் நடத்த முடியாது என்பதுதான்.
மாற்றுத்திறனாளி மாணவர் என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். கால்களில் அவர் இழந்த சக்தி கைகளிலே இரண்டு மடங்காக இருப்பதை நான் அறிவேன். எங்கள் வகுப்பு 3வது மாடியில். மூன்று ஆண்டுகளும் அவர் யாருடைய உதவியும் இன்றி 3 மாடி ஏறி இறங்கி படித்தவர்.//////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteபோதிக்கத் தேவையான எந்த அமைப்புகளுமே எனக்கில்லை என்று என் கட்டங்கள் அறிவுறுத்துகிறது.
மாணவர்களும் பிழைத்துவிட்டார்கள். ஏதோ என்னால் முடிந்த நல்ல காரியம் :)))
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
பாடத்திற்கு நன்றி ஐயா/////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஅய்யருக்காக செய்தது போல் உள்ளது இன்றைய பதிவு விளக்கம்..
பத்தாம் அதிபதி புதன்
பத்திரமாக...அங்கேயே..
(இரண்டில் தான் கேது..)
நல்லதை எடுத்துச் சொல்ல
எந்த பதவியில் இருந்தால் என்ன?
நன்றிகளுடன் வருகை பதிவினை பதிவு செய்கிறோம்//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
//////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteபத்துக்குரியன் புதன் அவன் ஒன்பதுக்குரியவன் சூரியனோடு கூட்டு சேர்ந்து பத்தில் இருந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறான்...
பொறியல் துறையில் இருந்தாலும் (புதன் செவ்வாயின் வீட்டில் சூரியனோடு நெருப்புச் சூழலில் மின்சார மற்றும் மின்னணுவியலில்) இருந்தாலும். தொழிலில் ஆய்வும், அது தொடர்பான போதனையுமான துறைச் சூழலே அமையும்.ஒரு பெரிய கூட்டத்தை வழிநடத்துவது முன்னின்று செல்வது என்ற சூழலும் இதிலே இருக்கும்.
தனுசு லக்னம், புதன் அம்சத்தில் உச்சம்... (சூரியன் ஆட்சி), அதனால் வாத்தியார்த் தான மாத்திரம் என்னை விட்டுப் போனதாக தெரியவில்லை:):)))
நன்றிகள் வாத்தியாரே!//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஜயா
நன்றி/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////Blogger sadan raj said...
ReplyDeleteசுயஜாதகத்தை அலசி பார்க்கவைத்த அருமையான குரும்பதிவை தந்த வாத்தியார் அய்யாவிற்கு நன்றிகள்.எனது ஜாதகத்தில் 10ம்மிட அதிபதி புதன் 9ம் இடத்திலும்,9ம் இடாதிபதி சூரியன் 10ம் இடத்திலும் பரிவர்த்தனை பெற்று தர்மகர்மாபதி யோகத்தில் உள்ளனர்.பாகைஇடைவெளி 9 மட்டுமே (புதன் அவுட்).எனவே வாத்தியார்வேலை நோசான்ஸ்.ஆனால் 20வயதிலிருந்து இன்றுவரை மோட்டாருடன் போராடிக்கொண்டிருக்கிறேன்.அதுதான் எப்படி என்று புரியவில்லை.இப்போது சனிதசை ஆரம்பத்தில் பதிவுலகில் கால் வைத்திருக்கிறேன்.ஒரு மிகபெரிய ஆறுதல்,லக்கினம் தனுசு.லக்கினாதிபதி குரு 7ல் 7பரல்களுடன் அட்டகாசமாக அமர்ந்து லக்கினத்தை தன்நேரடி பார்வையில் வைத்து அபரிமிதமான தாக்குபிடிக்கும் சக்தியை தந்துகொண்டிருக்கிறார்./////
ஆமாம். தாக்குப்பிடிக்கும் சக்திதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு நன்றி. எனக்கும், பத்தாம் அதிபதி, புதனைப் பார்வையில் வைத்திருப்பதாலோ என்னவோ, ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் இன்ஸ்ட்ரக்டராகவே பணி வாழ்வைத் துவக்கினேன். இரு வேலைகள் மாறிய பின், சில தனிப்பட்ட காரணங்களால், ஒரு பள்ளியில் அக்கவுன்டன்ட் ஆக வேலை பார்க்க நேர்ந்த போதும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது, சில ஆசிரியைகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் திருத்திய பேப்பரைச் சரிபார்ப்பது என செய்தது உண்டு.
பல, பெரிய, சின்னத் திரை பிரபலங்களின் குழந்தைகளோடும், பெற்றோர்களோடும் நேரடிப் பழக்கம் உண்டு. மாணவர்களோடு மாணவர்களாகக் கலந்து பழகும் வழக்கம் உண்டு. எந்த அளவுக்கு என்றால், என் பையில் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகள் தரும் சாக்லெட்களை, உரிமையாக, மாணவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். பணியில் இல்லை என்றாலும் இன்றும் போன் செய்து நலம் விசாரிக்கும் மாணவத் தோழர்கள் பெற்றதே பெரும் பேறு. மிக்க நன்றி ஐயா./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
/////Blogger thanusu said...
ReplyDeleteசுய ஜாதக பரிசோதனைக்கு பாப்கார்ன் பதிவு உதவி செய்கிறது.
///பத்தாம் வீட்டு காரனோடு புதன் கூட்டணி போட்டு,அல்லது பத்தாம் வீட்டு காரனும் புதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள///எனக்கு இதில் இரண்டும் உள்ளது .
புதன் ஆட்சியாய் ஒன்பதிலிருக்க பத்தாம் அதிபதி சந்திரன் மூன்றிலிருந்து ஒருவரை ஒருவர் பார்கிறார்கள். வாத்தியார் வேலை இல்லை .ஆனால் நிர்வாகம். ஒரு வகையில் வாத்தியார் வேலை போல் தான் .நன்றிகள் அய்யா இதுவும் ஜாதக அலசலைப்போல் தான் உள்ளது.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅருமையான பதிவு!
பத்தாம் அதிபதி புதனாக இருந்து, அவர் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நல்ல நிலையில் உள்ள குருவோடு அமர்ந்தாலும் வாத்தியார் (professor)ஆகலாமே?/////
பத்தாம் அதிபதி புதனாக இருந்து அவர் வாக்கு ஸ்தானத்தில் வந்து அமர்ந்திருந்தால், தொழில்முறைப் பேச்சாளராகவும் ஆகலாம்!:-))))
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteபோனவாரம் மாணவர் மலரில் வெளிவந்த எல்லோரின் ஆக்கங்களையும் மனமகிழ்வோடு படித்தேன்.
வழக்கம் போல சகோதரி பார்வதியாரின் கட்டுரையும் தனுசு அவர்களின் கவிதையும் அழகு. :)
எனது கவிதையின் பொருளை பற்றி சகோதரி தேமொழி வினவி இருந்தார்.
அது தான் தலைப்பிலேயே இருக்கிறதே!
சொந்தக்காரியம் அதோடு பணி நிமித்தமான பயண அலைச்சலில் ஒரு பின்னூட்டமும் இட இயலாமல் இருந்தது.
மன்னிக்கவும். ஆய்ந்து ஓய்ந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து விட்டேன்!////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா,
எனக்குப் பத்தில் புதன்,அதுவும் தனியாக,பத்தாம் அதிபதி சுக்கிரன் 8ல் உச்சம்.இருந்தும் நமக்கு அந்த வேலை இல்லை.இதனால் ஒரு நன்மை எனக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு நல்ல அறிவுரைகளை எப்போதும் சொல்லுவேன்.எனக்குத் தெரிந்த கருத்துக்களை அனைவரிடமும் பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்வேன்./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு:
ஐயா, தசாம்சம் மற்றும் பாவ சக்கரம் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி ஒரு நாலு வார்த்தை சொல்லுங்களேன்./////
பழைய பாடங்களில் உள்ளதே சாமி! படித்துப் பாருங்கள்!
Blogger Bhogar said...
ReplyDeleteஜோதிடத்தில் நவகிரகங்களில்,சந்திரனும் புதனும் இரட்டை நிலை தன்மை உடையது.
சந்திரன் பூமிக்கருகில் இருந்து கொண்டு, தான் இருக்கும் நட்சத்திர மண்டலங்களுக்கு
தகுந்தால் போல்,மற்ற கிரகங்களில் இருந்து வரும் கதிர் வீச்சுகளை வாங்கி
ஒரு டிரான்ஸ்மீட்டரை போல் செயல்படுகிறது.
சந்திர திசை,புக்தி,அந்தரம் நடக்கும் ஜாதகர்களுக்கு,ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்,இல்லையென்றால்
பலன்கள் மாறுபாடாக நடந்துவிடும். புதனும் தான் சேர கூடிய,பார்க்க கூடிய, ஏன் வாங்கிய நட்ச்சத்திர சாரத்தை பொருத்து கூட, மாறுபடாக பலன்களை தருகிறது.
அதிகம் வக்கிர நிலை அடைவதும் புதன் தான். இந்த இரண்டு கிரகங்களையும்,மனிதர்களுடைய
நிலையில்லாத மனம்,மற்றும் நிலையில்லாத புத்தியின் காரகத்துவமாக வைத்துள்ள சித்தர்களின்
அண்ட பிண்ட ஆராய்ச்சியின் நுட்பத்தை அறிந்து மகிழ்ந்து கொள்ளலாம்.
ஒருவர் ஆசிரியராக புதன் காரகத்துவம் என்றாலும், அந்த காரகத்துவத்தை இயக்க கூடிய பாவங்களான
லக்னம் நான்காமிடம் ஒன்பதாமிடம் போன்றவைகளையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
லக்னம் ஜாதகரையும்,நான்காமிடம் ஆரம்ப கல்வியையும் ஒன்பதாம்மிடம் உயர் கல்வியையும் சுட்டி
காட்டும் பாவங்களாகும். நன்கு கற்றவரே கற்பிக்க முடியும். மேற்கூறிய பாவங்களில் புதன் இருந்தாலும்,
அல்லது மேற்கூறிய பாவ அதிபதிகளுடன் சேர்க்கை அல்லது பார்வை கொண்டிருந்தாலோ,
கற்பதிலும் கற்பிப்பதிலும் நிபுணத்துவம் ஏற்ப்படும்.
இதில் பத்தாமிட அதிபதி கர்மகாரகன்
சனி,புதனோடு சாதக தன்மையோடு இருந்தால், தகுதிக்கு தகுந்த ஊதியத்தோடு
வேலை கிடைக்கும். புதனோடு பத்தாமிட அதிபதி மற்றும் சனி
பாதக தன்மையோடு இருந்தால், தகுதிக்கு தகுந்த போல் ஊதியம் கிடைக்காது.
மேலும் படித்த படிப்புக்கும்,பார்க்கும் வேலைக்கும் சிறிதும் சம்மந்தமில்லாமல் போய்விடும்.
ஓம் சரவணபவ நம////
பாப்கார்ன் பதிவு என்பதை நினைவில் கொள்ளூங்கள். அதில் - அதன் அளவில் என்ன எழுத முடியுமோ அதைதான் சின்னதாக எழுதி வருகிறேன். நீங்கள் சொல்கின்ற மேட்டர்களை எல்லாம் வைத்து எழுதினால் அது முழுச் சாப்பாடாகிவிடும். அதை முன்பு எழுதியிருக்கிறேன். மேல்நிலைப் பாடங்களில் எழுதிக்கொண்டும் வருகிறேன்!
@ vaathiyaar:
ReplyDeleteOh, I missed it!!!
Let me go back and search. Once again!
நல்ல பதிவு சார், நானும் ஆசிரியை பணியில் சேரவே சிறுவயதில் விரும்பினேன். இப்போதும் அந்த ஆசை இருக்கவே செய்கிறது. என் மகனுக்கும், மகளுக்கும் நானே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து அந்த ஆவலை ஓரளவு தீர்த்துக்கொள்கிறேன்.
ReplyDeleteசரண் அவர்களின் கருத்து அண்மையில் பார்த்த சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறது நன்றி
ReplyDeleteநல்ல பதிவு ஐயா...சிலரின் பின்னூட்டங்களில் புதன் பத்தாமிடத்தில் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் வாத்திராகவில்லை.இதற்கு பத்தாமிடத்தில் விழும் பார்வை,புதனுடன் உள்ள சேர்க்கை, நவாம்சத்தில் அவர்களின் நிலை, பத்தாம் அதிபனின் நிலை மற்றும் புதனின் நிலை...இவற்றையும் அலச வேண்டும்.இந்த அலசலில் தசாம்சத்தையும் சேர்க்க வேண்டுமா ஐயா?
ReplyDeleteBlogger Bhuvaneshwar said...
ReplyDelete@ vaathiyaar:
Oh, I missed it!!!
Let me go back and search. Once again!////
ஆகட்டும். அப்படியே செய்யுங்கள் நண்பரே!
////Blogger Uma said...
ReplyDeleteநல்ல பதிவு சார், நானும் ஆசிரியை பணியில் சேரவே சிறுவயதில் விரும்பினேன். இப்போதும் அந்த ஆசை இருக்கவே செய்கிறது. என் மகனுக்கும், மகளுக்கும் நானே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து அந்த ஆவலை ஓரளவு தீர்த்துக்கொள்கிறேன்./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
Blogger Raja said...
ReplyDeleteசரண் அவர்களின் கருத்து அண்மையில் பார்த்த சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறது நன்றி/////
நல்லதை நினைவு படுத்தினால் நல்லதுதானே! நன்றி!
////Blogger Arul said...
ReplyDeleteநல்ல பதிவு ஐயா...சிலரின் பின்னூட்டங்களில் புதன் பத்தாமிடத்தில் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் வாத்திராகவில்லை.இதற்கு பத்தாமிடத்தில் விழும் பார்வை,புதனுடன் உள்ள சேர்க்கை, நவாம்சத்தில் அவர்களின் நிலை, பத்தாம் அதிபனின் நிலை மற்றும் புதனின் நிலை...இவற்றையும் அலச வேண்டும். இந்த அலசலில் தசாம்சத்தையும் சேர்க்க வேண்டுமா ஐயா?////
ஆமாம். நான் கூறியுள்ளது பொது விதி. பாப்கார்ன் பதிவில் அந்த அளவுதான் எழுத முடியும்.
Always be thankful for having haters / criticisers, because they are your biggest fans – they take time out of their lives to watch your wrong moves” - Sent by G.Ananthamurugan
ReplyDeleteஇந்த சிந்தனையை அனுப்பித் தந்தமைக்காக...
தோழர் முருகனுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
கருத்து நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நடு விரலைக்காட்டும் ஆபாசப் படம் சொல்ல வந்த கருத்தின் தரத்தைக் குறைக்கிறது.
ReplyDelete////Blogger தேமொழி said...
ReplyDeleteகருத்து நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நடு விரலைக்காட்டும் ஆபாசப் படம் சொல்ல வந்த கருத்தின் தரத்தைக் குறைக்கிறது./////
எனக்கு ஒன்றும் தெரியவில்லை! ஐ.க்யு அவ்வளவுதான். இருந்தாலும் நீங்கள் சொல்லியதற்காகப் படத்தை மாற்றிவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!
BEHIND EVERY SUCCESSFUL PERSON LIES A PACK OF HATERS என்ற கருத்திருக்கும் படத்தைச் சொல்கிறார் தேமொழி என்று நினைக்கிறேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.
ReplyDeleteஹையோ... ஹையோ..ஐயா, இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்களே நான் என்ன செய்வேன்...
ReplyDeleteஹி...ஹி...ஹீ ....பதிவின் படம் இல்லை ஐயா...
இந்தக் காலத்து பள்ளிப் பசங்க கூட சொல்லிடுவாங்களே....
ஹி...ஹி...ஹீ .... நான் சொன்னது ஆனந்தமுருகன் கருத்தின் படம்.
Pack of Haters போஸ்டர் படத்தில் இருக்கும் ஆள் "f*** you" என்று சைகை செய்கிறார்.
இதே வார்த்தையை கூகிள் இமேஜ்ல் தேடி படம் பாருங்கள். விவரம் தெரியும்.
நீங்கள் *** போட்டு தேடிவிடாதீர்கள்...
*** என்ற இடத்தில தேவையான எழுத்தை போடவேண்டும்.
என்ன எழுத்து போடவேண்டும் என்று வாத்தியாருக்கு தெரியுமான்னும் தெரியல்லியே.
இப்படி அப்பாவியா இருக்காரே ...
ஹி...ஹி...ஹீ ....ஹையோ... நான் என்ன செய்வேன் ....என்ன செய்வேன் .... எங்கேன்னு போய் முட்டிக்குவேன்.
அன்பு சகோதரி தேமொழி,
ReplyDeleteஎனக்கு ஒண்ணுமே புரியல....
எந்த படம், எங்கே?
என் கண்ணுக்கு ஒண்ணுமே பிடிபடலையே.......
இங்க பாருங்கப்பா இன்னொரு அப்பாவி வராரு...
ReplyDeleteஹி..ஹி..ஹீ..
ஐயே..... நான் அப்பாவியாவே இருந்துட்டு போறேன் :-))))))
ReplyDeleteபடம் எங்கன்னு சொல்லுங்க அக்கா......
ஆராய்ச்சி வேலைக்காக தம்பி 3.30 மணிக்கு முழிச்சதே பெரிய விஷயமாக்கும்...... இதுல இவுக வேற ஆர்வத்த திசை திருப்பி விடுராகளே...... நான் என்ன பண்ணுவேன்......
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் :-)))))
வணக்கம் ஐயா!
ReplyDeleteதங்க பதக்கம் படத்தில் வரும்
" சோதனை மேல் சோதனை "'
என்னும் பாடலின் இடையில் வரும் வைர வரிகள் தான் இன்றைய பாடத்தில் தாங்கள் கூறியது ஞாபகத்திற்கு வந்ததது :-)))
why No body talked about Guru? Is He not contributing for teaching?
ReplyDeletewhy No body talked about Guru? Is He not contributing for teaching?
ReplyDelete