மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.6.12

Manavar Malar வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பது எப்படி?

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1


முழுமையான ஆனந்தமும் ஞானமும் எந்த வடிவில் உள்ளது?
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

ஆதியும் அந்தமுமிலா அருமறை போற்றும் பிரான், வானமும் வையமும் அளந்த கார்முகில் வண்ணன், 'அகலகில்லேன்' என்று திருமகள் அகலாது உறையும் திருமார்பன், வேதவிழுப்பொருள்,

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
(ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை)

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. 
(ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழி)

என்று ஆழ்வார்களும் அடியார்களும் பாடித் துதித்தேத்தும் ஸ்ரீமந் நாராயணனைப் பரம்பொருளாகத் தொழும் ஸ்ரீ வைணவம் பற்றி
இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

"முழுமையான ஆனந்தமும் ஞானமும் தன் வடிவமாகவே உடையது. எதனுடனும் ஒப்பிட முடியாதது. காலம் தேசம் போன்ற எல்லைகளைக் கடந்து நிற்பது, ஆயிரக்கணக்கான, வேத நூல்களாலும் விவரித்துக் கூறப்பட்டாலும் உணர்த்தப்படமுடியாதது. அதனைக் கண்டவுடன், நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்க வல்லது. இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு ப்ரஹ்மம்,

குருவாயூரில் நின்று ஒளிவீசுகிறது. இதனை அடைய மக்கள் செய்த புண்ணியம் என்னவோ ஆச்சரியமாக உள்ளதே!" என்று, ஸ்ரீ நாராயண  பட்டத்திரி, ஸ்ரீமந் நாராயணனின் எங்கும் நிறைத் தன்மையை, ஸ்ரீமந் நாராயணீயம், முதல் தசகம், முதல் ஸ்லோகத்தில் போற்றுகிறார்.

ஸ்ரீமந் நாராயணனே இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூல காரணம். இப்பிரபஞ்சத் தோற்றம் உண்மை. அது இறைச் செய்கை.சித், அசித் , ஈஸ்வரன் (இங்கு ஈஸ்வரன் என்பது ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும்) என்ற மூன்றும் தத்துவங்கள். சித் என்பதுஜீவாத்மாக்களைக் குறிக்கும். அசித் என்பது மாயைஅல்லது ப்ரக்ருதியையும் ஈஸ்வரன்என்பது பரமாத்மாவையும்
குறிக்கும்.ப்ரக்ருதியானது ஜடம். அறிவில்லாதது. சித், அசித் ஆகிய இரண்டும் ப்ரும்மமான ஈஸ்வரனுடன் தொடர்புகொண்டுள்ளன. சித்-அசித் தை தன்னைச் சேர்ந்த விசிஷ்டமாகக் கொண்ட பிரும்மமே உண்மை என்ற ஸ்ரீ இராமானுஜரின்தத்துவமே விசிஷ்டாத்வைதம் (சிறப்பு உள்ள அத்வைதம்) ஆகும். விசிஷ்டாத்வைதம் உபய வேதாந்தம் எனப்படுகிறது. அதைத்
தழுவியவர்கள் உபய வேதாந்திகள் எனப்படுவர். ஸ்ரீவைணவம், பெரும்பான்மையும் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தில் நிலை
பெற்றுள்ளது.

ஸ்ரீமந் நாராயணனே, மோக்ஷ சாதனமும் அதை அடைவிக்கும் கதியுமாவார். ஜீவாத்மா நித்யன் அதாவது அழிவற்றவன். மோக்ஷம்என்பது பிறவா நிலையை அடைந்து, பரமபதத்தில் இறைவனுக்குத் தொண்டாற்றுதலே என்பது ஸ்ரீவைணவக் கொள்கை.

இறைவன் ஒருவரே. அவரே ஸ்ரீமந் நாராயணன். அவர் ஒருவரையே தொழ வேண்டும். வேறுவித வழிபாடுகள் கூடாது என்பது ஸ்ரீவைணவக் கொள்கை. 'மறந்தும் புறந்தொழா மாந்தர்' ஸ்ரீ வைணவர்கள். உலகனைததையும் தன் தேகமாகத் தாங்கி நிற்கும்

ப்ரும்மம் அவரே. அவரே எண்குணத்தான். அவரையும் அவரது கல்யாண குணங்களையும் பிரித்தெடுக்க இயலாது. ஆகவேஅவர் சகுணப் பிரம்மமே என்பது ஸ்ரீ வைணவக் கோட்பாடு. பக்தியும் பிரபத்தி(சரணாகதி)யுமே இறைவனை அடைய வழிகள்.

ஸ்ரீமந் நாராயணனே தேவர் மூவர் ஆகிய யாவருள்ளும் உறைந்து அவர்களைச் செயல்படுத்துகிறார். படைத்தல், காத்தல்,மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களைப் புரியும் பரம்பொருள், ஸ்ரீமந் நாராயணனே.

ஆகமம் என்றால் தொன்றுதொட்டு வரும் அறிவு அல்லது சாத்திரம் என்பது பொருள். ஸ்ரீவைணவத்தில், வைகாநசம்,பாஞ்சராத்திரம் என்ற இரு ஆகம வகைகள் உள்ளன. விகநச முனிவரால் உருவாக்கப்பட்ட வைகாநச ஆகமத்தைப்பின்பற்றுவோர் வைகாநசர்கள் எனப்படுகின்றனர். இவர்களது நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால்,இவர்கள் திவ்யப் பிரபந்தங்களை ஓதுவதில்லை. பஞ்சஸம்ஸ்காரம் எனப்படும் வைணவதீட்சை தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே, தங்களுக்கு இடப்பட்டுவிட்டது என்பது இவர்களது கொள்கை. பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை எனும்வைணவ வழிபாட்டு நெறிகளில், அர்ச்சாரூபமாக (விக்ரஹ ரூபமாக) பெருமாளை வழிபடும் நெறியையே பின்பற்றுகிறார்கள்.

திருமாலால் ஐந்து இரவுகளில் உபதேசிக்கப்பட்டது பாஞ்சராத்திர ஆகமம். இது வேதத்துக்குச் சமமானதாகக்கருதப்படுகிறது. இதில் பரமாத்மாவின் ஐந்து நிலைகள் விளக்கப்படுகின்றன.

பரம் : ஸ்ரீ வைகுண்டமாகிய பரமபதத்தில், உபய நாச்சியார்களுடன், சர்வாலங்கார ரூபனாக, கருடர் முதலான நித்யசூரிகள்புடைசூழ, முக்தாத்மாக்களின் கைங்கர்ய சேவையை ஏற்றிருக்கும் திவ்ய மங்கள ஞான வடிவம்.வ்யூஹம்: உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், தியானம் மூலம் வழிபடவும் பூஜை செய்யப்படவும் நான்கு வடிவில்இருப்பதே வ்யூஹம். அவை, வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் ஆகியவை ஆகும்.

விபவம் : தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிக்க எடுக்கும் அவதாரங்களே விபவம். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்கள்அநேகம். அவற்றுள், மச்ச,கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, பலராம, ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் சிறப்பாகப் போற்றப்படுகின்றன.

அந்தர்யாமித்வம்: எல்லா ஜீவர்களுக்குள்ளும் உறையும் தன்மை. இதயத்தில் வாழும் வடிவம்.அர்ச்சை: கல், ஐம்பொன் முதலான விக்ரஹ வடிவங்களால், கோவில்களில் வணங்கப்பெறும் வடிவம்.

வைகாநச வழிபாட்டு முறைகளில், மந்திரங்களும், பாஞ்சராத்திர வழிபாட்டு முறைகளில், தாந்திர, முத்திரைகளும்முக்கியத்துவம் பெறுகின்றன. திருமாலின் அடியவர்கள் ஆழ்வார்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். ஸ்ரீ எம்பெருமானின்கல்யாண குணங்களில் ஆழ்ந்து ஈடுபடும் தன்மையால் ஆழ்வார்கள் எனப்பெயர் பெற்ற இவர்கள் பன்னிருவர். முதலாழ்வார்கள்
எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார்,குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், திருப்பாணாழ்வார்,திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகியோர்ஆழ்வார்கள் எனப் போற்றப் படுகின்றனர்.

ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்கள், 'நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்' என்று போற்றப்படுகின்றன. இவற்றைத்தொகுத்தவர், ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக அருளிச் செய்யப்பட்ட பாசுரங்கள், 'நான்குவேதங்களின் தமிழ் வடிவம்' என்றே போற்றப்படுகின்றன. த‌மிழ் மொழியையும் ப‌க்தி இல‌க்கிய‌த்தையும் ஏற்றம் பெற‌ச் செய்த‌தில்
ஆழ்வார்க‌ளின் பாசுர‌ங்க‌ளுக்கு மிக முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு

ஸ்ரீ வைணவத்தில் ஆசார்யப் பரம்பரையினருக்கு மிகுந்த ஏற்றம் உண்டு. ஸ்ரீமந் நாராயணனே, ஆசார்யப்பரம்பரையில்முதலாவதாக வைத்துப் போற்றப்படுகிறார்.

    ஸ்ரீமந் நாராயணன்
    ஸ்ரீ லக்ஷ்மி தேவி
    ஸ்ரீ விஷ்வக்சேனர்
    ஸ்ரீ நம்மாழ்வார்
    ஸ்ரீ நாதமுனிகள்
    ஸ்ரீ உய்யக்கொண்டார்
    ஸ்ரீமணக்கால் நம்பி
    ஸ்ரீஆளவந்தார்
    ஸ்ரீபெரிய நம்பி
    ஸ்ரீ திருக்கச்சி நம்பி
    எம்பெருமானார் என்னும் ஸ்ரீ இராமானுஜர்
    ஸ்ரீ கூரத்தாழ்வான்

(http://dravidaveda.org/images/stories/acharya_parambarai_.jpg)

ஜீவாத்மாக்களுள் ஸ்ரீ லக்ஷ்மியே, முதல் ஆசாரியராக அமைந்தருளுவதால், இம்மரபு, ஸ்ரீ வைணவம் எனப் பெயர்பெற்றது. ஸ்ரீவைணவத்தில் 'தாயார்' எனப் போற்றப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, நித்யசூரிகளுள் முதலாமவளாகப் போற்றப்படுகிறாள். புருஷாகாரம் எனப்படும் பெருமானின் காருண்யமாகவே விளங்குபவள். எம்பெருமானை விட்டு ஒருபோதும் அகலாது அருள்புரிபவள்.

ஜீவர்களின் கஷ்டங்களை மிகப்பொறுமையாகக் கேட்பதால், 'இதி ஸ்ரீ ச்ருணோதி' என்ற பெயர் தாயாருக்கு. பின் ஜீவர்களின்குறைகளை, பெருமானுக்கு விசேஷ காருண்யம் ஏற்பட்டு, உடனே ஓடி வந்து உதவிடும்படியாகப் பெருமானிடம் சொல்லிஜீவர்களுக்கு அருள்புரிகிறாள்.

யதா வைகுண்ட நகரே யதா வை க்ஷீரஸாகரே
ததா மத்பவநே திஷ்ட ஸ்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ‌

என்று ஸ்ரீ லக்ஷ்மி ஹ்ருதயம், எம்பெருமானுடைய ஐந்து நிலைகளிலும், தாயாருடைய சமான நிலையை உறுதிப்படுத்துகிறது.

எம்பெருமானைப் போற்றும் சிறப்பு வாய்ந்த துதிகளுள் ஒன்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம். ஆயிரம் நாமாவளிகளால் திருமாலைத்துதிக்கும் இதில் ஒரு திருநாமம், 'கோவிந்தா' என்று பெருமாளைத் துதிக்கிறது. 'பசுக்களைக் காப்பவன் என்பது இந்தத்திருநாமத்தின் ஒரு பொருள். ஜீவர்களை ரட்சிப்பவன், ஆதிவராஹப் பெருமாளாய் பூமியைக்காத்தவன் (கோ=பூமி, விந்தன்= ரட்சகன்) என்று பலப்பல பொருள்க‌ளில் விளங்கும் இந்தத் திருநாமம், பாவம் போக்கும் தன்மையுடையது. குறிப்பாக, யாரும்
துணை செய்ய இயலாத சந்தர்ப்பங்களில், கை விடாமல் காக்கும் திருநாமம் இது. பாஞ்சாலி, கௌரவ சபையில் யாரும் துணைவராத போது, இருகைகளையும் தூக்கி 'கோவிந்தா' எனும் போது அந்தத் திருநாமமே புடவை சுரந்தது. அதனாலேயே, இறுதியில் யாரும் துணை வராத யாத்திரையில், 'கோவிந்தா' என்று உச்சரிக்கும் வழக்கம் வந்தது.

ஸ்ரீ வைணவத்தில், அடியார்களுக்கு மிகுந்த ஏற்றம் உண்டு. பெருமானிடத்தில் அபசாரப்பட்டாலும், பெருமானின்அடியார்களிடத்தில் அபசாரப்படலாகாது. 'நான், எனது' என்னும் பதங்களை உபயோகிக்காது, 'அடியேன், அடியேனது'
என்பதாகச் சொல்லும் 'தாஸ்ய பாவம்' ஸ்ரீ வைணவர்களது தனிச்சிறப்பு.

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
 (ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++              
2


அறிவியலும் அருளியலும்
ஆக்கம்: தேமொழி

அறிக அறிவியலை! விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெருக! "அறிவு" என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும். 

அறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.

ஒன்றிலிருந்து பிரிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது.   இந்த உலகம் எப்படி இயங்குகிறது?

என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல்.  நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல்.  நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல். 

அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை.  உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை.

"ஆன்மிகம்" என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு.  ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும்.  உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்துள்ளது.  வளர்ந்துகொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும்.   ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வளராமல்
தேக்கம் கண்டுவிட்டது.  ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி "மதம்" என்ற அமைப்புக்குள்  சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது.  கடைசியாக  ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ்.  "ஆன்மா"  "ஜீவன்"  என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார்

என்பது உண்மையானாலும்  "ஆன்மா"வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.

ஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆன்மா என்பது என்ன?  ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா?  ஆன்மா தோற்றமும் அழிவுமுடையதா? ஆன்மா, அறிவுப்பொருளா?  அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா?  ஆன்மாவின் இலட்சியம்தான் என்ன?

ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் --- இன்பமும் --- துன்பமும் குறிக்கிடுவது எப்படி? எதனால்?  ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?  இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒருவகையான அறிவியலே ஆன்மவியல். 

அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.  ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன! அறியத்தக்கன! 

அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்!  அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் "வாழ்க்கை நலம்" என்ற நூலில் உள்ள முதல் கட்டுரை.
பதிப்பு: டிசம்பர் 1992
பக்க எண்: 9
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


எதனால்தான் இந்தப் பாசாங்கு?
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்

Hypocrisy is the state of pretending to have virtues, moral or religious beliefs, principles, etc., that one does not actually have. Hypocrisy involves the deception of others and is thus a kind of lie

இதுதான் 'ஹிபோகிரசி' பற்றி விக்கிபீடியா கொடுக்கும் விளக்கம்.

சில நாட்கள் முன்னர்  இந்தச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் வந்தது.அது வந்தது முதலே இந்தச் சொல் என்னை ஒரு பிரம்ம ராட்சசன் போலப் பிடித்து ஆட்டத் துவங்கிவிட்டது. இதைப் பற்றிய சிந்தனை மேலோங்கி 'நான் இப்படி ஒரு ஹிபோக்ரைட்டா?'என்ற ஒரு சுய பரிசோதனைத் துவங்கிவிட்டது.

எந்த சந்தேகம் வந்தாலும்  முதலில் நான் போய் முட்டிக் கொள்வது ஒரு தாத்தாவிடம்தான்.சுமார் 2000 வயது ஆன இந்தத் தாத்தாவிடம் எல்லாவற்றிற்கும் ஒரு பதில் இருக்கும்.நாம் போய்க் கேட்டால் தாடியை ஒருமுறை உருவி விட்டுக்கொண்டு, குரலை கனைத்துக் கொண்டு எழுபது சொற்களில்  ரத்தினச் சுருக்கமாக சூத்திரம் போலச் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவார்.(சுழல விடுகிறேன் என்று சுற்றி விட மாட்டார்:)II) அந்தக் காலத்தில் இது புதுக்கவிதையென்றே போற்றப்பட்டதாம்.

'கூடா ஒழுக்கம்' என்று தலைப்பிட்டுச் சொன்னார் பாருங்கள் ஹிப்போக்ரைட்டுக்கு விளக்கம்,இனி ஒருவன் வந்துதான் பிறக்க வேண்டும் இப்படி ஒரே போடாகப் போட:

                      கூடா ஒழுக்கம்

271.     வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
            ஐந்தும் அகத்தே நகும்.   

272.     வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-தன் நெஞ்சம்
            தான் அறி குற்றபடின்?.   

273.     வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
           புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.   

274.     தவம் மறைந்து, அல்லவை செய்தல்-புதல்மறைந்து
           வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.   

275.     'பற்று அற்றேம்' என்பார் படிற்று ஒழுக்கம். ‘எற்று! எற்று!' என்று
           ஏதம் பலவும் தரும்.   

276.     நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து,
           வாழ்வாரின் வன்கணார் இல்.   

277.     புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி
           மூக்கில் கரியார் உடைத்து.   

278.     மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி,
            மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.

279 .    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
          வினைபடு பாலால் கொளல்.    

280.     மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம்
            பழித்தது ஒழித்துவிடின்.   

'நெஞ்சில் துறவார்', 'மறைந்து ஒழுகும் மாந்தர், 'மூக்கில் கரியார்''புலியின் தோல் போர்த்தவர்'என்றெலாம் 'நச்'சென்று சொல்லிவிட்டார் தாத்தா. என்னவோ இப்போது நாளிதழ்களில் வரும் செய்திகள் அனைத்தையும் படித்துவிட்டு எழுதியதைப்போல அல்லவா உள்ளது! இப்படியும் இருக்கலாம். எப்படி? தாத்தாவின் காலத்திலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருந்திருக்கலாம்தானே!?

தர்மமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் உறையும் கந்தவேளிடம் வேண்டுவார் இன்னொரு வெள்ளாடைப் பெரியவர்:" உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"

என்னை அறியாமல் பெரிய அறிவாளி போல எழுதத் துவங்கிவிட்டேன்.

இதைத்தான் பாசாங்கு, வேஷம் என்பார்கள். இதைத்தான் 'ஹிப்போக்ரசி' என்கிறார்கள். நானோ மெத்தப் படித்த அறிவாளியில்லை.பின்னர் ஏன் அந்த வேடத்தைப் போட முனைகிறேன்? எல்லாம் மற்றவர்கள் புகழ வேண்டும், மதிப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான். அதனால்தான் இந்தப் பாசாங்கு.

 மக்கள் வழக்கமாகப் பேசும்  சில பழமொழிகள் 'நச்' என்று பாசாங்கு, வெளி வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

"ஆர் குடி கெடுக்க இந்த ஆண்டி வேஷம்?"

இராமாயணக் கதையே இதில் சுட்டப் படுகிறது. கபட சன்னீயாசி வேஷம் புனைந்து இராவணன் சீதைக்கு இழைத்த கொடுமை சட்டென்று நினைவுக்கு வருகிறது.மக்களை மிகச் சுலபமாக ஏமாற்ற ஏற்றது துறவுக் கோலம்தான்.

'ரிஷி மூலம் பார்க்காதே'என்ற மன இயல்பு மக்களுடையது.காவி கட்டிய எவரையும் வணங்கும் வழக்கம் உள்ள மக்களை சுலபமாக ஏய்த்துவிடலாம். அப்படித்தான் இன்று பல போலிச் சாமியார்கள் புற்றீசல் போல முளைக்கிறார்கள்.

"அகோர தபசி;விபரீத சோரன்"

இதுவும் அது! எவ்வளவுக்கெவ்வளவு தன் துறவை வலியுறுத்தி வேடம் புனைகிறானோ அதைவிட இரண்டு மடங்கு தன் ஆசைகளை மனதில் கொண்டிருப்பான் என்கிறது இந்தப் பழமொழி.

"அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமும்"

பேசுவதைத் தேன் தடவி இனிக்க இனிக்க பேசிவிடுவான். ஆனால் மனத்துக்குள் வஞ்சம் கொண்டாடுவான்.

"அழுகள்ளன், தொழுகள்ளன், ஆசாரக்கள்ளன்"

கோவிலில் எல்லோரும் காணக் 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கு'வான்;விதவிதமாக வணங்கிக் கோணங்கித்தனம் காட்டுவான்;தன் ஆச்சார சீலத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வான். எல்லாம் புகழும் பணமும்,செல்வாக்கும் பெறப் போடுகின்ற‌ வேடம்தானே!

"ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான்;தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்"

சூழலுக்குத் தகுந்தபடி தன் பேச்சையும் வேடத்தையும் மாற்றிக் கொள்ளுதல்.
சிவாச்சாரியர்களைக் கண்டால் 'சிவ சிவ'என்று புலம்ப வேண்டியது. வைணவ ஆச்சாரியர்களைக் கண்டால் 'ரங்கா ரங்கா' என்று உருக வேண்டியது.

நமது தெருவில்கூட இப்படிப்பட்ட அரசியல் வா(வியா)திகளைக் காணலாம். தேர்தல் முடிவு வெளியாகி கொண்டிருக்கும் போதே முந்தும் அரசியல் கட்சியின் கரை வேட்டியை எடுத்துக் கட்டி விடுவார்கள்.

"இங்கே தலையும் அங்கே வாலையையும் காட்டுகிறான்"

இதுவும் அது! பாலுக்கும் காவல் பூனைக்கும்தோழன். தன் சுய லாபத்திற்காக நிலைத்த கொள்கையில்லாமல் பச்சோந்தியைப் போல நிறம் மாறிக்கொண்டே இருப்பது.

"நெற்றியிலே நாமம் வயிற்றிலே பட்டை"

இது ஒரு நல்ல தமாஷ்! சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு தொழிலாளர் தினத்தன்றும்(மே முதல் நாள்) சுவாமிமலை முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளை அலுவலக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து செய்வோம்.

ஒரு முறை அப்படி செய்துவிட்டுப் பேருந்தில் தஞ்சை திரும்பிக் கொண்டு இருந்தோம்.பெண்கள் அனைவரும் அமர்ந்து பயணம். ஆண்கள் எல்லோரும் நின்று பயணம். மூக்கு ரமணி என்று ஒரு பெரியவர்.இப்போது இருந்தால் 85 வயது இருக்கலாம்.எப்போதும் இடி இடி என்று சிரித்துக் கொண்டே இருப்பார்.(பல ரமணிகள் இருந்ததால் அடையாளத்துக்கு தீர்க்கமான மூக்கு உடைய அவர் மூக்கு ரமணி.அழுத்தமான குணம் உடைய மற்றொரு ரமணி அமுக்கு ரமணி))அவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள ஒரு அம்மாமி பேச்சு வாக்கில் மேற்படி பழமொழியைச் சொன்னார்.
சாதாரணமாகவே சிரிக்கும் மூக்குரமணி 'நெற்றியிலே நாமம் வயிற்றிலே பட்டை'என்பதை கேட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கிவிட்டார்.அம்மாமி அதற்கு விளக்கம் கொடுத்தவுடன் மேலும் சிரிக்கிறார்.அம்மாமி கொடுத்த விளக்கம் இதோ:

"ஸ்ரீரங்கத்தில் மடைப்பள்ளி உத்தியோகத்தில் நிறைய சம்பாத்தியம் உண்டு.அந்த சம்பாத்தியத்தை அடைய இரண்டு சைவர்கள் ஆசைப்பட்டார்கள். வைணவ வேடம் தரித்தாலே அங்கே வேலை கிடைக்கும். எனவே நெற்றியில் நாமத்தைக் குழைத்துப் போட்டார்கள்.மடைப்பள்ளியில் வேலை வாங்கிக் கொண்டு விட்டார்கள்.ஆனால் அவர்களுக்கு சிவன் மேலேதான் பக்தி. எனவே பிழைப்புக்காக  நெற்றியிலே நாமம்! சிவனை மறக்காமல் இருக்க வயிற்றின் மீது திருநீற்றுப் பட்டை போட்டுக் கொண்டார்கள்."

மூக்கு ரமணியின் சிரிப்பைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. கீழே விழுந்து விழுந்து சிரித்த காட்சியை இன்றும் மறக்க முடியவில்லை.

இதையே ஸ்ரீரெங்கத்துக் குயவனாருக்கும் கூறுவதுண்டு.ஸ்ரீரெங்க‌த்து வைணவர்கள் நாமம் போட்ட குயவனாரிடமிருந்தே  சட்டி பானை வாங்குவார்களாம். அதனால் ஒரு சைவக் குயவனர் நாமம் நெற்றியில் போட்டுக்கொண்டு, வயிற்றில் விபூதிப்பட்டை தரித்துக் கொண்டு வியாபாரம்
செய்தார். காரணம் கேட்டபோது 'இது என் குலாச்சாரம்' என்று திரு நீற்றுப்பட்டையை காட்டினாராம், 'இது என் வயிற்றாசாரம்' என்று நாமத்தைக் காட்டினாராம்.
=========================================
"ஏன் தாதரே ஆண்டி புகுந்தீர்?"
"இதையும் ஒரு மண்டல‌ம் பார்த்துவிடுவோம்"

தாதன் என்பவர் வைணவப் பரதேசி. ஆண்டி என்பவர் ஆண்டிப் பண்டாரம் என்னும் சைவர். ஒரு தாதன் திடீரென சைவராக வேடம் தரித்தாராம்.ஒரு வேளை அதில் வருமானம், சாப்பாடு கூடக் கிடைக்குமோ என்று ஒரு நப்பாசைதான்
============================================
இன்னும் சில பழமொழிகள்:

"கையில் ஜபமாலை, கக்கத்தில் கன்னக்கோல்"
"வேஷமோ தவ வேஷம்;மனதிலே அவ வேஷம்"
"ருத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணியது போல"
"மனதிலே ஒன்று வாக்கிலே ஒன்று"
"பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலையும் காட்டுவது"
"கள்ளனுமாகி விளக்கும் பிடிக்கிறது"
"கண்டால் முறை சொல்வது;காணாவிட்டால் பேர் சொல்வது"
"கண்டால் காமாட்சி நாயக்கர்;காணாவிட்டால் கம்மனாட்டி நாயக்கர்"
"உதட்டிலே உறவும் நெஞ்சிலே பகையும்"
"உதடு பழம் சொரிய உள்ளே நெஞ்சு எரிய"

இவை எல்லாவற்றையும் விளக்கி எழுத ஆசைதான். படிப்பவர்களுடைய பொறுமையை சோதிக்கக்கூடாது என்பதால் இங்கே முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                  
 4

உங்களுக்குத் தெரியுமா ?
கவிதையாக்கம்: தேமொழி

நூலகம் முழுவதும் தேடினேன் - அதில்
நூல்கள் பலவும் புரட்டினேன்
பக்கம் பக்கமாகவும் தேடினேன் - அதில்
வரிகள் யாவும் வாசித்தேன்
நான் தேடுவது எங்கும் காணவில்லை

பல்கலைக் கழகமதில் நுழைந்தேன் - அங்கு
பலதுறைகளுக்கும் சென்று வந்தேன்
ஆசிரியர் பலரையும் கேட்டேன் - அங்கு
பயிலும் மாணவர்களையும் கேட்டேன்
நான் கேட்பது யாருக்கும் தெரியவில்லை

வாழ்நாள் முழுவதும் உழைத்தேன் - வரும்
வருமானம் போதாமல் குமைந்தேன்
சோர்ந்தே நானும் போனேன் - வரும்
வருமானத்திற்குமேல் சொத்து சேர்ப்பதை
எனக்கு சொல்லித் தருவார் யாருமில்லை 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5ஒரு மனைவியின் புலம்பல்:
கவிதையாக்கம்: புவனேஷ்வர்

இரவின் இருளில் நிலவு துணை எனக்கு
அமாவாசை அதுவும் இல்லை;
குளிருக்கு கதகதப்பு
கம்பளி கொடுத்தால் உண்டு;

மாதம் முப்பது நாள், மூன்று நாள் மட்டும்
மல்லிகை மணம் இல்லை மாதரார்க்கு;
எனக்கென்னவோ மூன்றும் முப்பதும் ஒன்றுதான்….
வித்தியாசம் சைபர் தானே…….

வாயும் வயிறுமாய் வாழ்ந்திருக்க வந்தவளை
வாய்க்கும் வயிற்றுக்கும் அலைப்புண்டுழல விட்டாய்;

கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்……

ஒரு பெண்ணின் வாழ்வை (மட்டும்) நீ கெடுத்தாய்
என சட்டம் சொல்லும்…..
உண்மை அதுவா? உனக்கே புரியும்…..
ஒரே ஒருத்தியின் வாழ்வை மட்டுமா நீயழித்தாய்?

செய்யாத தவறுக்கு சிறை சென்ற பெண்ணிங்கே
சீதை மட்டும் தானா?
கற்பழித்தாய், கொலை செய்தாய்,
ஆயுள் கைதியாகி சிறை சென்றாய்……

தாலி விலங்காக, தனிமை சிறையாக
நானும் ஆனேன் ஆயுள் கைதி……
உன்னால்……….
Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
www.bhuvaneshwar.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6அன்றிலிருந்து இன்றுவரை
ஆக்கம்: தனுசு

நான்
ஓட்டமெடுக்க பிறந்தவனா?
ஓடிக்கொண்டே இருக்கிறேனே-நின்று
மூச்சுவாங்க பார்த்து
முடியாமல் தவிக்கிறேன்! -

நான் பிறந்து
உருண்டு புரண்டபோது
நின்றிட நடந்திட
துரத்தல்
தவழும் போதே
துவங்கியது.

கொஞ்சம்
காலெடுத்து நடந்தபோது
விழித்திட உடுத்திட
துரத்தல்
பள்ளிக் காலத்தில்
வேகம் பிடித்தது!.

படிக்கையில்
மதிப்பேன் எடுத்து
முதலிடம் வந்திட
துரத்தல்
தேர்வுக்காக பருவவயதில்
பந்தயம் தொடுத்தது.!.

மேல் படிப்பில்
திட்டம் போட்டு
பட்டம் பெற்றிட
துரத்தல்
கல்லூரிக் காலத்தில்
மிரட்டல் தந்தது!

பட்டத்தோடு
வேலைக்கு அலைந்து
பனியில் அமர்ந்திட
துரத்தல்
பிழைப்புக்காக வாலிபத்தில்
இறக்கமின்றி இறுக்கியது!

பதவி உயர்வாய்
கல்யாணம் கட்டி
குடும்பஸ்தன் ஆகிட
துரத்தல்
இல்லறம் நல்லறமாக்க
துணை தந்து துளைத்தது!..

யாருக்கும் குறைவின்றி
செல்வம் சேர்த்து
குடும்பம் செழித்திட
துரத்தல்
பெரியமனிதன் பெயருக்காக
கௌரவமுடன் விரட்டியது!

பாதி வயதில் நானிருக்க
பிள்ளையை உயர்த்தி
சிறப்பாய் அமர்த்திட
துரத்தல்
அப்பனாய் நிறுத்தி
பொறுப்பாய் எரித்தது!.

மீதி வயதும் நெருங்கையில்
சிறகு முளைத்து
சீறிப் பறந்தது குஞ்சுகள்.
நான் சிறகு முறிந்து
தனித்து விழுந்தேன்!.

ஓடி ஓடி சேர்த்ததெல்லாம்
நான் ஓய்வெடுக்க
உட்காரையில்
எனை விட்டு ஓடிப்போனது!
என் கூடும் காலியானது!

பதித்திட்ட தடங்கள்
திரும்பி பார்த்திட-மீண்டும்
துரத்தல்
தலை நறை நிறம்பிய
முக்கால் வயதிலும் விடவில்லை!.

முதுமையோடு முயலாமையோடு
படுக்கையில் இருந்தாலும்
துரத்தல்
எந்தன் தேவை என்னைக்கொன்டே
தேட வைத்தது!.

ஓய்வாய் அமர
திருவாய் மலரா
துரத்தல்
இன்னும் என்னை தொடர-இறுதியாய்
இறைவன் நினைவே வந்தது!

எதுவரை ஓடுவது?
எங்கே போய் நிற்ப்பது?
இந்த துரத்தல்
எல்லைக்கோடு இல்லாத
ஓட்டப் பந்தயமோ?

இறைவா...
உன் கருணையில்
என்னை படைத்தது
துரத்தல் மூலம்- என்னை
ஓட வைத்து அழகு பார்க்கவா?
-தனுசு-
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7சிறுகதை:  ஒரு ஆசை + ஒரு கொலை = தற்கொலை
ஆக்கம்: தனுசு

பணத்தாசை இல்லாதவர் யாருமில்லை அப்படியே இருப்பாரேயானால் அவரை நாம் காண முடியாது. அவர் ஏதாவது மனித நடமாட்டமில்லாத ஒதுக்கு புறத்தில் ஒதுங்கியே இருப்பார்கள் .

போலிஸ் கமிஷனர் கோபாலன்  தன் நண்பரான வேதநாயகம் பிள்ளையின் மரணத்திற்குப்  பின் அவரது இரண்டாம் மனைவி கல்பனாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு போகவும் அது கொலையாக கூட இருக்கலாம் நீங்களும் ஜாக்கிரதையாக  இருங்கள் என்று சொல்லிவிட்டு போகவும் அவரின் வீட்டுக்கு வந்திருந்தார்.

வேதநாயகத்தின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த கமிஷனர் கோபாலன், அவருக்கு முன் மாட்டாப் பட்டிருந்த ஆளுயர வேதநாயகத்தின் படத்தைப் பார்த்தபடியே பழையதை லேசாக நினைக்க தொடங்கினார்.

வேதநாயகம் அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர்.எல்லோராலும் எப்போதும் பேசப்படுபவர்.அதற்கு காரணம் அவரது பணம்.இப்போதும் எல்லோராலும் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறார் அதற்கு காரணம் அவரது மரணம் .அதுவும்இரண்டாம் திருமணத்தால் புது மாப்பிள்ளை ஆகி ஆறேமாதத்தில் மரணம்.

ஐம்பதை தாண்டியவர். நிறைய சொத்துக்கள். ஊட்டியில் எஸ்டேட் அதற்கும் மேலாக ரியல் எஸ்டேட்  பிசினெஸ். உறவுகள் இல்லாத ஒற்றை மனிதன். முதல் மனைவி இறந்ததும் வாரிசு என்று சொல்லிக்கொள்ள பிள்ளை குட்டி இல்லாததால் ,நலம் விரும்பிகள் இரண்டாம் திருமணத்திற்கு ஆலோசனை சொன்னார்கள்.தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.இந்த பழமொழி இவருக்கு உடல் இச்சையில் ஒத்துபோய்விட்டது .

பலரும் பெண் கொடுக்கவும் பெண் பார்த்து கொடுக்கவும் தயாரானார்கள். ஆனால் அவரோ அதற்கெல்லாம் வேலை வைக்காமல் அலுவலகதில் அவருக்கு துனையாக இருந்த கல்யாணமாகாத காரியதரிசி  மீது கண்வைத்து கணக்காய்  காய் நகர்த்தினார், கைக்கு எட்டிவிட்டது.ஹனிமூன் ட்ரிப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்பாகவே முடித்துக்கொண்டு நிதானமாக இரண்டாம் திருமணமாக காரியதரிசி கல்பனாவையே கல்யாணம் கட்டிக் கொண்டார்.காரியதரிசியை கட்டிக் கொண்டதால் பலருக்கு வருத்தம் சிலருக்கு கோபம் .காரணம் சொத்து. கோடிக்கணக்கான சொத்து. நம்  கையைவிட்டு யாருக்கோ போகிறதே அதுவும் கண் எதிரேயே போகிறதே எனும் ஆதங்கம் ஆத்திரம். .ஆனால் இன்று ஆத்திரப் பட்டவர்களும் ஆதங்கப் பட்டவர்களும் ஒருசேர அதிர்ந்து போய் நிற்கிறார்கள் வேதநாயகம் மரணத்தைப் பார்த்து.

அவரின் நினைவலையின்  இடையில் அதனை கலைப்பது போல், வீட்டுப் பனிப் பெண் சூடாக காபி கொண்டு வந்து கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் "தேங்கியு" சொன்னவர்

"கல்பனா ....." என்று சொல்ல அதற்குள் முந்திக்  கொண்ட பனிப்பெண்

"அம்மா இப்போ வந்து விடுவார்கள் சொல்ல சொன்னாங்க"

காபியை இரண்டு மடக்கு குடித்தவருக்கு, வேதநாயகம் பிள்ளை மரண மடைந்த தினம் அங்கே நடந்த உரையாடல் அவர் அனுமதி பெறாமலேயே அவரின் நினைவை ஆக்கிரமித்தது.

"எப்படி இப்படி திடீரென்று இறந்தார். நேற்று இரவு வரை என்னிடம்
பேசிக்கொண்டு இருந்தாரே" இது மேனேஜர். "சாகக் கூடிய வயசா" இது ஒரு பெருசு.

"எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு" இது ஒருவர்

இப்படி பலவகையான அபிப்பிராயங்கள் வந்ததே தவிர .துக்கத்தில் இருக்கும்
புது மனைவியைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. கமிஷனர் நன்கு அறிந்தவர்தான் கல்பனாவை. ஆகவே அவர் மட்டுமே கல்பனாவுக்கு
ஆறுதலும் தேறுதலும் சொன்னார்.

"சரி ஆகவேண்டிய வேலைகளைப் பாருங்கள் அடுத்து செய்ய வேண்டியதை
செய்யுங்கள்,கல்பனா  நடந்தது நடந்துவிட்டது இறைவன் விருப்பம் இதுதான்
என்றால் அதை நம்மால் ஏதும் செய்ய முடியாது .எல்லாம் நன்மைக்கே .அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நான் வந்து உங்களைப் பார்க்கிறேன் '"கமிஷனர் தான் சொன்னதே தனக்கு நிழற்படம் போல் தெரிவதை உணராமல் உட்கார்ந்திருக்க,

மீண்டும் அவரின் நினைவை கலைப்பது போல் "வணக்கம் சார்" சொல்லிக் கொண்டே கல்பனா வந்தார்.

"வாங்க கல்பனா எப்படி இருக்கிறீர்கள்"

'ஏதோ இருக்கிறேன்.சாரி சார் உங்களை காக்க வைத்து விட்டேன். நீங்கள் வரும் போது பூஜை அறையில் இருந்தேன் , அது தான் கொஞ்சம் லேட்டாயிடிச்சு."

"பரவாயில்லை கல்பனா ,சரி... சார் போட்டோ முன்னாடி இருந்தால் உங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கும் ,வாங்களேன் தோட்டத்து பக்கம் போகலாம்." இருவரும் தோட்டத்தை நோக்கி நடந்தனர்.

"கல்பனா நீங்கள் கொஞ்சம் ஆஃபிஸ் பக்கம் போய்வந்தால் உங்களுக்கு இந்த
இருக்கமான சூழ்நிலை விலகும்"

"நானும் அதைத்தான் நினைகிறேன் சார்"

"அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்த்து சரி பன்னுங்க, வக்கீலை வர சொல்லி உள்ளேன் நிர்வாகத்தையும் மற்ற டாக்குமெண்ட்சையும் உங்கள் பெயரில் மாற்றிவிடலாம்".

"அவருக்கு நெருக்கமான நண்பர் யார் என்றால் நீங்கள் மட்டும்தான்.நீங்கள்
இருவரும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்ததையும் பழகியதையும் அவர் பலமுறை சொல்லியுள்ளார். அதனால் நீங்கள் சொல்வதால் மட்டுமே இதற்கெல்லாம் நான் சம்மதிக்கிறென் சார்"

"வேதநாயகம் இறந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது, உங்களுக்கு அது
மிகப்பெரிய இழப்பு ,எதைக்கொண்டும் அதை ஈடு செய்ய முடியாது.உங்களை
தொந்திரவு செய்ய கூடாது என்றுதான் இருந்தேன் , நாங்களும் பல
கோனங்களிலிருந்து விசாரிக்க துவங்கி விட்டோம்.இருந்தும் கேட்கிறேன்
வேதநாயகம் இறந்த அன்று என்ன நடந்தது கொஞ்சம் சொல்ல முடியுமா?" கமிஷ்னர் கேட்க;

"அதிகாலையிலேயே நான் குளித்து முடித்து பூஜை அறைக்கு போய் பூஜை முடித்து ஆறு மணி சுமாருக்கு நான் வெளியே வந்தேன்.சரி இன்னும் தூங்குகிறார் என்று நான் கிளம்பி இதோ இங்கு வந்து வாக்கிங் போய்க்கொண்டு இருந்தேன்.திடீரென்று வேலைக்காரி ஓடிவந்து அம்மா அய்யாவை வந்து பாருங்கள்,எழுந்திருக்க வில்லை பயமாக இருக்கிறது என்று படபடப்பாக சொன்னார், நான் ஓடிப் போய் பார்த்தேன்.எழுப்பினால் எழுந்திரிக்கவில்லை, பயந்து போய்தான் டாக்டரை கூப்பிட்டேன், அவர் வந்து பார்த்துவிட்டு மூச்சு இல்லை என்று சொன்னார், அதன் பின்தான் டாக்டர் உங்களை அழைத்தார்".கலபனா தன் கணவரின் மரணம் எப்படி நடந்தது என்பதை விளக்கினார்.

தன் பால்யகால நண்பன் இறந்ததை ஜீரணிக்கமுடியாமல் அவர் இறந்திருக்கக்கூடாது என்பது போல் தலையை ஆட்டி "அனைத்தையும் அவர் அனுபவித்தது அற்ப ஆயுளில் போகத்தானா"தன் நண்பரின் மரனத்தை தாங்க முடியாமல் வேதனையோடு சொன்னார் கமிஷ்னர்."அவருக்கு ஒரு குழந்தை இல்லாதது பெரிய குறையாக இருந்தது அதை உங்கள் மூலம் அடைய ஆசைப்பட்டார். அதற்குள் அவர் நேரத்தை இறைவன் முடித்துவிட்டான்"என்று சொன்ன கமிஷ்னர் தனக்கு நேரமாவதை உணர்ந்து, 'சரி நான் புறப்படுகிறேன். மணி ஆகி விட்டது' என்று சொல்லி தன் வாட்சைப் பார்த்தார். அதோடு கல்பனாவின் கையையும் பார்த்து,

'எங்கே உங்கள் கையில் வாட்ச் கானவில்லை'கமிஷனர் கேட்டார்.

"ஒரு வாரமாக கானவில்லை எங்கேயோ அறுந்து விழுந்துவிட்டது இங்குதான் எங்கேயோ தோட்டத்தில் என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை. அதுவும் அது கோல்ட் வாட்ச் ஐந்து பவுனில் செய்தது." என்றார் கலப்னா.

"என்னது ஒரு வாரமாக கானவில்லையா"? அதிர்ச்சியுடன் கேட்டார் கமிஷ்னர்

"ஒரு நிமிடம்" என்று சொல்லி அவசரமாக யாருக்கோ போன் செய்து சற்று தள்ளி நின்று கலபனாவுக்கு கேட்காதவாறு பேசினார்.

..............

நானே ஸ்டேஷனுக்கு வருகிறேன் "என்று சற்றே உரக்க சொல்லிவிட்டு கலபனாவின் பக்கம் வந்து "கல்பனா நீங்கள் கொஞ்சம் ஸ்டேஷன் வரை வந்துவிட்டு போங்கள்.என்று சொல்லிவிட்டு அவரின் கண்களையே பார்த்தார்.

"எதுக்கு? கல்பனா கொஞ்சம் குழப்பமாக கேட்க

"ஒரு சந்தேகம் தீர்த்துக்கொள்ள அதுவும் இந்த கேஸ் சம்பந்தமாக"

'இல்லையில்லை என்னால் அங்கெல்லாம் வரமுடியாது" என்று கல்பனா முடிக்கும் முன்பே கமிஷ்னர், பக்குவமான குரலில் "சிறிது நேரத்தில் திரும்பிவிடலாம் நான் உங்களுடன் தான் இருப்பேன் வாங்க போகலாம்' சொல்லிவிட்டு கமிஷ்னர் காரை நோக்கி நடக்க, கல்பனாவும் அவரை பின் தொடர்ந்தார்.

ஸ்டேஷனில்.

"இதுவா உங்கள் கையிலிருந்து அறுந்துவிழுந்து காணாமல் போன வாட்சோட செயின்."

....................அதைப்பார்த்த கல்பனா ஒன்றும் சொல்லாமல் நிற்க '
கமிஷ்னர் தொடர்ந்தார் "நிதானமாக் பார்த்து சொல்லுங்கள் அவசரம்
ஒன்றுமில்லை"

 "ஆமாம் அதைப்போல்தான் தெரிகிறது" குழப்பமாக கல்பனா சொல்ல,

"அதைப்போலவா அல்லது அதேதானா உறுதியாக சொல்லுங்கள்"கமிஷ்னர் கேட்டார்.

..................................."இதுதான்"........குழப்பமும் தயக்கமும் ஒருசேர சொன்னார் கல்பனா.

நீண்ட பெருமூச்சைசை இழுத்துவிட்ட கமிஷ்னர், "நல்லது நீங்கள் ஒரு
கையெழுத்தைப் போட்டு கொடுத்திட்டு இந்தச் செயினை வாங்கிக்கொண்டு
போங்கள்.அப்புறம் கல்பனா எப்போது கானாமல் போனது சரியாக சொல்லுங்கள்." என்றார்

'அதான் சொன்னேனே ஒரு வாரத்துக்கு முன்னாடி.வீட்டு தோட்டத்தில் என்று
நினைக்கிறேன்."கலப்னா கூற "ஒருவாரத்துக்கு முன்னாடி என்று சொல்கிறீர்கள் அப்புறம் எப்படி உங்கள் கணவரின் கையில் இது இருந்தது.கானாமல் போன உங்கள் வாட்ச்சின் செயின் எப்படி உங்கள் கணவரின் கையில் அதுவும் அவர் இறக்கும் அன்று வந்தது."
கல்பனாவின் கண்களை பார்த்து கமிஷ்னர் கேட்க,

"அவர் கையிலயா? அதுவும் செத்துப்போன அன்றைக்கா? எப்படி வந்திருக்கும்?
ஒருவேளை அவர் கையில் கிடைத்து எடுத்து  வைத்திருக்கலாம். தடுமாறியபடி சொல்ல

"அப்படி என்றால் அவர் உங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லது சொல்லியாவது இருக்கலாம் கல்பனா நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்வது போல் இல்லை, சொல்லுங்கள்"கமிஷ்னர் லேசாக போலீஸ் குரலுக்கு மாறினார்.

............................

ஒரு அமைதியே அங்கு குடிகொள்ள கலபனா தன்னை கலவரம் சூழ்வதுபோல்
உணர்ந்தார்.கல்பனாவின் முக மாற்றத்தை பார்த்த கமிஷ்னர் தூண்டிலில்
இருக்கும் இறையை துள்ளிவரும் மீன் கடிப்பதை உணரும் தூண்டில்காரன் போல் தன் நண்பரின் மரணத்தில் உள்ள முடிச்சை அவிழ்கும் இலகுக்கு தான் வருவதை உணர்ந்தார்.சாதுரியமாக அடுத்த கேள்வியை தொடுத்தார்

"சொல்லுங்கள் எப்படி அவர் கையில் வந்தது?"

"கல்பனா சொல்லுங்க?"

எதற்குமே பதில் தராமல் மௌனமாய் நிற்க மீண்டும் அமைதியை கமிஷனரே
கலைத்தார்.நீங்கள் சொல்லவில்லை என்றால் வேறுமாதிரி விசாரிக்க
வேண்டியதிருக்கும்.வேதநாயகம் சார் இறக்கும் அன்று என்ன நடந்தது. நீங்களாக சொல்லிவிட்டால் உங்களுக்கு நல்லது. நாங்களாக உண்மையை வரவழைத்தால் உங்களுக்கு நல்லதல்ல. இம்முறை போலிஸ் விசாரனையில் இருக்கும் கமிஷ்னராகவே கேட்டார்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்னும் புரியவில்லை ,மேலும் நீங்கள்
என்னை இதுமாதிரி கேள்வி கேட்பது சரியில்லை ,என்னை ஒரு குற்றவாளி போல் பார்கிறீர்கள் நடத்துகிறீர்கள் எதுவும் நல்லதுக்கு இல்லை"

"நல்லது கெட்டது எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்களாக சொல்வதுதான்
உங்களுக்கு நல்லது",வார்த்தையில் கடுமையை காட்டி போலிஸின் பார்வையை பிரயோகித்தார்,கமிஷ்னர்.எலிப்பொறிக்குள் மாட்டிகொண்ட எலி ஓட முடியாமல் தவிப்பதுபோல் தவித்தார் கல்பனா.

முகம் கருத்த கல்பனா நா வறண்டு எச்சில் முழுங்கினார். அவர் முகத்தில்
பயம் அப்பட்டமாக தெரிந்தது.அனைத்தையும் கவனித்த கமிஷ்னர் ஏதோ ஒரு நாடகம் முடிவுக்கு வர போவதை அவரின் போலிஸ் புத்தி சொல்கிறது என்பதை உணர்ந்தார்.அதே வேகத்தோடு,

"கமான் கல்பனா நீங்கள் சொல்வதைவைத்துதான் நான் உங்களுக்கு
உதவிடமுடியும்',வகையாக ஒரு இறையை வீசினார் கமிஷ்னர்

"மன்னிச்சிடுங்கள் சார் நான் தான்..........."தொண்டை கம்ம ஈனக்குரலில் நடுங்கினார்.

"ம்....... ஒரு அதிகார மிரட்டல் வெளிப்பட்டது கமிஷ்னரிடமிருந்து."

"நாந்.......தான்........ சார்........ அவரை....... தலையணையால............." ஒவென்று அழத்துவங்கினார் கல்பனா.

"சொல்லுங்கள் தலையணையால என்ன ஆச்சு......"

"அன்றைக்கு....... கா.....லையில் அவர் தூங்கும் போ....து தலயணையை எடு.....த்.......து..............அவர்...........மூஞ்சி..யில்......அம்ம்ம்..........
முக்க்கி..அழுத்தி.........இ....ருக்கி....கொ......கொன்....னேன். அப்போ
அவரு ரொம்ப..........."

"மீதியை நான் சொல்கிறேன் தலயனையால அமுக்கி மூச்சு முட்ட வச்சி  நீங்கள் இறுக்கும் போது உங்கள் இருவருக்கும் போராட்டம் நடந்து அதில் உங்களின் கையில் இருந்த வாட்ச் அறுந்து அவர் உள்ளங்கையில் ஒரு பகுதி மாட்டிக் கொண்டது.அதை நீங்கள் கவனிக்கவில்லை. ஆனால் உங்கள் கையில் இருந்த வாட்ச் காணவில்லை என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்த பின் எங்கேயோ அறுந்து விழுந்திருக்கும் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் .இப்போது அது உங்களை காட்டி கொடுத்து விட்டது.சரிதானே.கமிஷ்னர் தன் துப்பறியும் போலிஸ் புத்தியை நன்கு பயன்படுத்தி நடந்ததை அப்படியே கணித்துச் சொன்னார்.

ஆ..ம்..மா....ம் சார்.
.
"பாதகி ஏன் அப்படி செய்தாய்....."தன் நண்பர் கொலை செய்யப்பட்டது
ஊர்ஜிதமான ஆத்திரத்தில் கத்தாத குறையாக கேட்டார் கமிஷ்னர்.

ஓ வென குரலெடுத்து அழுது "மன்னிசிடுங்கள். .....மன்னிச்சிடுங்கள். .....சொத்துக்கு ஆசைப்பட்டுதான் நான் அப்படி செய்தேன். எங்கள் கல்யாணத்தை யாரும் விரும்பவில்லை. அப்படியும்  எங்கள்  கல்யாணம்  முடிந்தது. இது இரண்டாம் கல்யாணம் என்பதால் சொத்து முழுக்க எனக்கே கிடைக்காமல் போனாலும் போகும் மூத்த மனைவியின் தூரத்து
உறவு என்று யாராவது வந்தால் கை விட்டு போக வாய்ப்புண்டு. அதனாலா அந்த சொத்து முழுக்க எனக்கே கிடைக்கவேண்டும் என்று, அதுவாக கிடைக்கும்முன்பு நானாக எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியம்
பன்னிட்டேன்......... என் புருஷனை நானே கொன்னுட்டேன்........ அய்யோ....
ஆசைப்பட்டு புத்தி கெட்டு போயி இப்படி பன்னிட்டேண்.......... என்னை
மன்னிச்சிடுங்கள்...... என்னை காப்பாத்துங்கள்...... நான் செய்தது
தப்புதான்....... தெரியாமல் செஞ்சுட்டேன்....... என்னை
மன்னிச்சிடுங்கள்...." என்று கதறி அழ பின் புத்தியாய் போன ஒரு
பேராசைக்காரியின்  பாவமன்னிப்பு கேட்கும் அழுகுரலை அங்கு
கேட்பதற்குத்தான் யாருமில்லை.

"இரக்கமில்லாத இவளை உள்ளே தள்ளுங்கள்"-பெண் போலிசை அழைத்தார் கமிஷ்னர், கைது செய்ய வந்த பெண் போலிஸ்,ஆசைப்படலாம் பேராசைபடகூடாது.காசுக்கு ஆசப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்ட சரி. பேராசை எதுக்கு பட்டாய் இப்படி உன்னையே காவு கொடுக்கவா? என்றார்.

-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8

Boy Friends
Sent by G.Aananthamurugan

Once upon a time there was a girl who had four boyfriends.

She loved the fourth boyfriend the most and adorned him with rich robes and treated him to the finest of delicacies. She gave him nothing but the best.

She also loved the third boyfriend very much and was always showing him off to neighboring kingdoms. However, she feared that one day he would leave her for another.

She also loved her second boyfriend. He was her confidant and was always kind, considerate and patient with her. Whenever this girl faced a problem, she could confide in him, and he would help her get through the difficult times.

The girl's first boyfriend was a very loyal partner and had made great contributions in maintaining her wealth and kingdom. However, she did not love the first boyfriend, although he loved her deeply, she hardly took notice of him!

One day, the girl fell ill and she knew her time was short. She thought of her luxurious life and wondered, 'I now have four boyfriends with me, but when I die, will I be alone.'

Thus, she asked the fourth boyfriend, 'I loved you the most, endowed you with the finest clothing and showered great care over you. Now that I'm dying, will you follow me and keep me company?

'No way!', replied the fourth boyfriend, and he walked away without another word.

His answer cut like a sharp knife right into her heart.

The sad girl then asked the third boyfriend, 'I loved you all my life. Now that I'm dying, will you follow me and keep me company?' 'No!', replied the third boyfriend. 'Life is too good! When you die, I'm going to marry someone else!' Her heart sank and turned cold.

She then asked the second boyfriend, 'I have always turned to you for help and you've always been there for me. When I die, will you follow me and keep me company?'

'I'm sorry, I can't help you out this time!', replied the second boyfriend. 'At the very most, I can only walk with you to your grave.' His answer struck her Like a bolt of lightning, and the girl was devastated.

Then a voice called out: 'I'll go with you. I'll follow you no matter where you go.' The girl looked up, and there was her first boyfriend. He was very skinny as he suffered from malnutrition and neglect.

Greatly grieved, the girl said, 'I should have taken much better care of you when I had the chance!'

In truth, you have four boyfriends in your lives:

Your fourth boyfriend is your body. No matter how much time and effort you lavish in making it look good, it will leave you when you die.

Your third boyfriend is your possessions, status and wealth.When you die, it will all go to others.

Your second boyfriend is your family and friends. No matter how much they have been there for you, the furthest they can stay by you is up to the grave.

And your first boyfriend is your spirit. Often neglected in pursuit of wealth, power and pleasures of the world.

However, your spirit is the only thing that will follow you where ever you go. Cultivate, strengthen and cherish it now, for it is the only part of you that will follow you to the throne of God and continue with you throughout Eternity.

Thought for the day: Remember, when the world pushes you to your knees, you're in the perfect position to pray.

Pass this on to someone you care about - I just did.

Being happy doesn't mean everything's perfect. It means you've decided to see beyond the imperfections.

Ananthamurugan.G
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Humour
By S.Sabari Narayanan, Chennai

Wife is like a TV
Girlfriend is like a mobile
 
At home u watch TV
but when u go  out u take your mobile
 
no money, u keep your old TV
got money, u change your mobile
 
sometimes u enjoy TV
but most of the time u play with your mobile
  
TV is free for life
but for the mobile, if u don't pay, services will be terminated
  
TV is big and bulky
mobile is cute, slim, curvy and very portable
 
operational costs for TV is minimal
but for the mobile it is often high and demanding
 
most importantly, mobile is a two-way communication ( u talk and listen )
but with the TV you must only listen ( whether you want to or not )
  
TV's don't have viruses
but mobiles often do .
 
and now... you can watch TV on your mobile....!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10

Computer & Husband
Sent by G.Aananthamurugan

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

64 comments:

thanusu said...

எனது இரு ஆக்கத்தையும் வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றிகள்.

kmr.krishnan said...

ஸ்ரீவைஷ்ணவம் பற்றி முழுமையாகக் கூறியுள்ள பார்வதி அம்மைக்குப் பாராட்டுக்கள். ஆழ்வார்கள் பட்டியலும் அவர்களைப் பற்றிய குறிப்பும் விட்டுப் போயுள்ளதோ?

thanusu said...

வழக்கம் போல் பார்வதி அவர்களின் ஆக்கம் உயர்ந்து நிற்கிறது.

மனித வாழ்கையில் ஆனந்தமாக இருப்பது சந்தேகமே இல்லாமல் வாழகையை துவங்கும் குழந்தைகள் தான். ஞானத்துடன் இருப்பது வாழ்கையை வாழ்ந்து முடிக்கும் நிலையில் இருக்கும் வயதானவர்கள்.ஆக இந்த இரண்டு வடிவிலும் ஆனந்தமும் ஞானமும் நாம் கானலாம்.இரண்டும் சேர்ந்து இருக்கும் வடிவு அல்லது நிலை நம்மால் கொண்டுவர முடியுமா?

kmr.krishnan said...

தேமொழி அவர்களே! அப்ப‌டி வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்தவர்களிடம் கேட்டால் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.அதற்கு அவர்கள் கேட்கும் கமிஷனை வெட்ட வேண்டும்.

thanusu said...

அறிவியலும் அருளியலும் படிக்கும் போது வாத்தியார் தவறுதலாக பார்வதியின் பெயருக்குபதில் தேம்மொழியின் பெயரை போட்டுவிட்டாரோ எனும் சந்தேகம் வந்தது.
ஆன்மாவின் அடுத்த நிலை என்ன இதை அறிவிப்பதில் தான் அந்த இரு துருவங்களான விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் பயனிக்கிறது.ஆனால் அது ஆகாயம் போன்றது. முடிவு இல்லாதது.இதுவும் எல்லைகோடு இல்லாத பயனமே.

kmr.krishnan said...

தாலி விலங்கா? அதுசரி புவனேஷ்வர்! அப்போ ஆண்களுக்குத் திருமணத்தைக் கால்கட்டு என்றும் மூக்கணாங் கயிறு என்றும் சொல்வது எதற்காக?
புதுச் செய்தியைக் கூறும் புதுக்கவிதை நன்றாக உள்ளது.பாராட்டுக்கள்.

kmr.krishnan said...

'ஓட்ரா ஓட்ரா ஓட்ரா ராஜா' என்று ஒரு பாடல் வரும்.அதுபோல ஓட்டத்தைப் பற்றிய கவிதையும் தொய்வில்லாமல் ஓடுகிறது.வில்லாளிக்குப்பாராட்டுக்கள்.

kmr.krishnan said...

ஒரு மாறுபட்ட முயற்சியாக தனுசு கொடுத்துள்ள கதை நன்றாக உள்ளது. விறு விறுப்பான கதைக்கு ஏற்ற விறு விறுப்பான நடையும் தேவை. அடுத்த கதை முயற்சியில் நடயைப் பற்றியும் அக்கறை கொள்வீர்களா?

kmr.krishnan said...

ஆனந்த முருகனின் ஆங்கில ஆக்கம் படித்து மகிழ்ந்தேன்.ஸ்பிரிட் என்பதை
முயற்சி என்று பொருளில் பார்த்தால் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்று சொல்லத் தோன்றியது.

kmr.krishnan said...

மனைவியைத் தொலைக் காட்சிக்கும், காதலியை அலைபேசிக்கும் ஒப்பிட்ட
நகைச்சுவை வித்தியாசமானதுதான்.சபரிக்குப் பாராட்டுக்கள்.

ஆனந்த முருகனின் நகைச்சுவைக் கார்ட்டூனும் நல்ல நகைச்சுவை.

என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி!

Parvathy Ramachandran said...

என் ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. படித்துவிட்டு, பின்னூட்டமிட்ட/இடப்போகும் சக மாணவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

அய்யர் said...

இன்றைய மலரின் ஆக்கங்கள்
இனிதே.. அது பற்றி கருத்து சொல்லும் முன்

உங்களுடன் ஒரு தகவல்..
உள்ளபடியே பகிர்ந்து கொள்கிறோம்..

.....

அமைதியிழந்து பலர் துக்கப்படுவதற்கு
அந்த தாழ்வு மனப்பான்மை தான் காரணம்

நம்மையும் நம்முடைய படைப்புகளையும் (வாழ்க்கையில் படைத்தவைகள்)

இன்னொருவர் recognise பண்ணனும்னு நினைப்பது இயல்பே

அதனால்...

நமது வெற்றி தோல்வியை பிறருடைய அங்கீகாரத்தில் ஒளித்து வைத்திருக்கின்றோம்.

ஆனால்...

உங்களைப் பற்றிய பிறருடைய அபிப்ராயங்களால் பாதிக்கப்படாதீர்கள்

உங்களைப் பற்றிய உங்களுடைய அபிப்ராயங்கள் தான்
வெற்றி மாளிகையின் அடித்தளம்

இனி

பதிவு பற்றிய கருத்துக்களை
படைக்கின்றோம் அடுத்த பின் ஊட்டத்தில்..

வணக்கமும்
வாழ்த்துக்களும்

Parvathy Ramachandran said...

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழறிவும் ஆராய்ச்சித் திறனும் ஈடு இணையற்றது. அவரது அருமையான கட்டுரையைப் படிக்கத் தந்த தேமொழி அவர்களுக்கு நன்றி.

//அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்! அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.//

என்ற வரிகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை.

கட்டுரைக்கான படம், தற்போதைய ஆதீனகர்த்தரான தவத்திரு பொன்னம்பல தேசிக சுவாமிகளின் படம் என்று நினைக்கிறேன்.

Parvathy Ramachandran said...

திரு.கே.எம்.ஆர் அவர்களின் கட்டுரை மிக மிக அருமை. திருக்குறளிலிருந்து சொல்லடைகள் வரை மிக அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தது. பட்,பட் என விழும் சொல்தேர்வும் அழகு.

//ஸ்ரீவைஷ்ணவம் பற்றி முழுமையாகக் கூறியுள்ள பார்வதி அம்மைக்குப் பாராட்டுக்கள். ஆழ்வார்கள் பட்டியலும் அவர்களைப் பற்றிய குறிப்பும் விட்டுப் போயுள்ளதோ?//

தங்களின் பாராட்டுக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ஆழ்வார்கள் பட்டியல் கட்டுரையில் இருக்கிறது . 'அயோனிஜர்'களான முதலாழ்வார்களையும், மற்ற ஆழ்வார்ப்பெருமக்களின் பெயர்களையும் கொடுத்திருக்கிறேன். அவர்களைப் பற்றிய சிறு குறிப்பும் எழுதி விட்டுப் பார்த்தால் கட்டுரை மஹா நீளமாக இருந்தது. உதாரணமாக, ஸ்ரீ நம்மாழ்வார் பற்றி எழுதினால் 'உறங்காப்புளி'யிலிருந்து, ஆரம்பித்து 'எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?' என்று தொடர்ந்து 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' வரை முடிக்காவிட்டால் சரியாக வரவில்லை. எழுதி விட்டு கத்தரித்த மற்றொரு பகுதி 108 திவ்ய தேசங்களும் அவற்றின் பெயர்களும். 'அர்ச்சை' யின் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து, பின் நீளம் கருதி விடவேண்டியதாகிவிட்டது.

கட்டுரையை ஆழ்ந்து படித்து விமரிசிக்கும் தங்களைப் போன்ற பெரியவர்களின்
பாராட்டுக்களே மேன்மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி.

Parvathy Ramachandran said...

தனுசு அவர்களின் இரு ஆக்கங்களும் அருமை. குறிப்பாக, கதை என்னை மிகவும் ஈர்த்தது. முதல் முயற்சி என்று நினைக்கிறேன். சம்பவக் கோர்வை நன்றாகக் கொடுத்திருக்கிறீர்கள். நிறைய எழுதுங்கள். மிகச் சிறு குறைகளும் மறையும்.

கவிதையும் அழகு. பொதுவாக, தகப்பன் தன் குடும்பத்திற்காகப் படும் பாடு பெரிதாகப் பேசப்படவில்லையோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. நெஞ்சைத் தொடும் படைப்பு. அருமை.

என் ஆக்கத்தைப் பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Parvathy Ramachandran said...

தேமொழி அவர்களின் கவிதை நன்றாக இருக்கிறது. அடுத்த கவிதாயினி!!!!!. ஆல் த பெஸ்ட்.

Parvathy Ramachandran said...

திரு. புவனேஷ்வரின் கவிதைத் திறன் பிரமிக்க வைக்கிறது. பெண்மனதுள் புகுந்து எழும் திறம் அருமை. பிற்காலத்தில் இலக்கிய உலகில் தன் பெயரை பலமாக நிறுவப்போகும் ஒரு கவிஞரின் ஆக்கங்களைப் படிக்கிறேன் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வரியும் வெகுவாக ஈர்த்தன. இப்படித்தான் முடியும் என்று ஒவ்வொரு வரியிலும் வெவ்வேறு அனுமானங்கள் தோன்ற, அடுத்தவரியிலேயே வேறுபக்கம் திரும்பும் அருமையான கவிதை. மிக மிக அற்புதமான கவிதை தந்தமைக்கு நன்றி.

Parvathy Ramachandran said...

//Being happy doesn't mean everything's perfect. It means you've decided to see beyond the imperfections.//

என்னை மிகவும் கவர்ந்திழுத்த வரிகள். மிக மிக நன்றி ஆனந்த முருகன்.

Parvathy Ramachandran said...

சபரி அவர்களின் நகைச்சுவையும் ஆனந்தமுருகன் அவர்கள் அனுப்பிய கார்ட்டூனும் சிரிக்க வைத்தன. ஆனால்......ம்ம்ம்ம், கடைசி கார்ட்டூனுக்கு, தேமொழி அவர்களின் 'எதிர்ப்பாட்டை' எதிர்ப்பார்க்கிறேன்.

அய்யர் said...

1.
நன்று...
எல்லாவற்றிலும் வேறுபட்டு நிற்பதே முக்தி நிலையே.. அதை இதுவரை காணாமையினால் அது குறித்து சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம்

நாம் யாருடன் பேசுகிறோமோ..
அவருக்கும் அதே மொழி தெரிந்தால்
வேறுபட்ட கருத்து இராது (நாதி-காது என்று கதை சொல்வார்களே அதுபோல்)
சுவாரசியமாக இருக்கும் இல்லையா.. சகோதரியாரே..

2.

புத்தகத்தில் இருந்து எடுத்துச் சொன்னதால் கருத்துச் சொன்னால் ஆக்கியவரையே சேரும் அனுப்பியவரை அல்ல என்று விலகலாம். (இப்படியும் ஒரு யோசனை நல்லாத்தேன் இருக்கு)

அறிவு விளக்கம் பெறும் வரை எல்லா உயிர்களும் உயிர்களே.. அறிவு விளக்கம் பெற்றவுடன் தான் அது ஆன்மா..

அந்த விளக்கம் மற்ற பக்கத்தில் இருந்து எடுத்து தந்திருக்கலாம்..

3.

உங்களுக்கும் அவரே தாத்தா என்பதால் தான் நம் உறவுகள் ப(பா)லமாக இருக்கிறது..

ஆனால்
நம் தாத்தா ஒழுக்கம் எனப்படுவது யாது எனில் என சொல்ல வில்லை..
(அது பற்றி பின்னொரு சமயம் பேசுவோம்)

ஆண்டி என்றால் எதுவும் இல்லாதவர் என்ற பொருளில் சொல்லி உள்ளதாக அறிகிறோம்.. ஆண்டி என்றால் கருவூலம் என்றல்லவா பொருள் சொல்லுவார்கள்..

நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அவரைத் தான் இன்று தமிழகம் மட்டுல்ல உலகமெல்லாம் பேசுகிறது..

அது சரி..
காவி கட்டுவது நமது கலாச்சார மரபா தெரியவில்லை..
இரமலிங்கசுவாமிகள் காவி கட்டியதாக அறியவில்லை..

அப்பர் சுவாமிகளும் காவி கட்டியதாக அறியவில்லை (விளக்கம் அறிந்தவர்கள் சொல்லாம்)

சமயம் சாப்பாட்டிற்காக இல்லை..
சம்பாதிப்பதற்காக இல்லை கடவுள்

கடவுள் வேலையே வேறு..
கர்மத்தோடு தொடர்பு படுத்துவது இடராக உள்ளது போல் இருக்கிறதே..
நீங்கள் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறோம்..(நம் ஒப்பந்தப்படி..!!)

4.

வருமானம் என பணத்தை சொல்கிறீர் என நினைக்கின்றோம்..

சொத்து என்பது செலவழிக்காமல் சேர்த்து வைப்பதை சொல்கிறீர் என அறிகின்றோம்..

ஆனால்..
அதை இறையருள் என்றும்
இதை முக்தி என்றும் பொருள் கொண்டு பாருங்கள்

சொல்லித்தருபவர் தானே வருவர்
(when student is ready; teacher will appear) ஓவியராய்.. கதையாசிரியராய்.. கவிஞராய்.. பல திறமைகள் உள்ள உங்களுக்கு தெரியாத என்ன சகோதரியாரே

5.

மீட்டு வந்த பதிவில் இருந்து
மீண்டும் சீதை இங்கே வந்ததால்

கருத்தேதும் இல்லை..
மனம்போல் வாழ்க..

6.

தேடல் தான் வாழ்க்கை
தேடுங்கள் கண்டு அடைவீர்கள் என்பார் ஏசுபிரான்

இறுதியில் இறைவன் நினைவு என்ற வரிகளில் மாற்றம் செய்திருக்கலாமோ என எண்ணத் தோன்றியது

7.

கவிதையில் இருக்கும் ஓட்டம்
கதையில் இருந்திருக்கலாம்..
இன்னும் ஒரு முறை படித்துப் பார்த்து கருத்து சொல்கிறோம்

8.

Thought for the day: என குறிப்பிட்டது குறித்து வைத்துக்கொள்ளலாம்

9.
சபரியின் நகைச்சுவை வழக்கம் போல்

10.
முருகனின் பதிவிட்ட படத்திற்கு வாழ்த்துக்கள்..

உங்களுடன் ஒரு நிமிடம்..

மலர்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவை
ரோஜாவைப் போல் மல்லி இல்லை
மல்லியைப் போல் சூரியகாந்தி இல்லை இவைகளைப் போல செம்பருத்தி இல்லை. எல்லாவற்றையும் ரசிக்கத்தானே செய்கிறோம்

அப்படியே இன்றைய மலர் பத்தும் முத்தாய் எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமுடியாது என்பதால் விரும்பியதை விரும்புபவர்கள்
சுவைக்கட்டுமே..
சுழல விட பாடல் இருந்தும் அமைதியாக
வணக்கமும் வாழ்த்துக்களும்..

thanusu said...

கிருஷ்னன் அவர்களே "அகோர தபசி;விபரீத சோரன்"-இதற்கு கொடுத்த விளக்கம் அருமை. அதைவிட கொடுமை இது நம்முடனேயே நடைமுறையில் சேர்ந்தே வருவதுதான்.இந்த பாசாங்கை லேசாக தொட்டதைவிட இன்னும் தோலுரித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.நன்றாக இருந்தது.

thanusu said...

தேமொழி எதுக்கு அதையெல்லாம் கத்துக்கிட்டு, ஒருத்தராவது உத்தமரா இருக்கட்டுமே,

வருமானத்திற்கு மேல் சொத்து சேர்பதை
எனக்கு சொல்லி தருவார் யாருமில்லை

தவறான பாதை ஊர் போய் சேராது.
தவறான இடத்தில் தேடினால் கிடைக்காது.

டேபிளுக்கு கீழே கைநீட்டினால் கிடைக்கும்
இந்த சோக பாட்டையும் அது துடைக்கும்

thanusu said...

புவனேஷ்வருக்கு, சென்ற வார தொடர்ச்சியாய் வந்த கவிதயும் நன்று.

thanusu said...

சபரி
நான் மீண்டும் அவளும் இவளும் எழுத வைத்துவிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

tv is free for life
but for the mobile, if you dont'pay
services will be terminated

இதுதான் ரொம்ப நச்

thanusu said...

ஆனந்தத்துக்கு வழி காட்டிய அனந்தராமனுக்கு பாராட்டுக்கள்

ஜி ஆலாசியம் said...

சகோதரியாரின் ஆக்கம் வழக்கம் போல அழகும் அருளும் நிறைந்து காண்கிறது.
////பெருமானிடத்தில் அபசாரப்பட்டாலும், பெருமானின்அடியார்களிடத்தில் அபசாரப்படலாகாது.///
எத்தனை அருமையானக் கருத்து....
பகவானின் குழந்தைகளிடம் அன்பு பாராட்டினால் தாயான அவனின் அன்பைப் பெறுவது தான் எத்தனை எளிது!!!

இந்த பேருண்மையைத் தான் ஆண்டாளும் அழகாச் சொன்னார்கள். எத்தனயோ வழியில் பரந்தாமனை அழைத்தும் காணப் பெறாது.. கடைசியாக சரியான ஒன்றை கை கொள்கிறார்!!! அது தான் '' பகவத சம்பந்தம் பெற்றால் எம்பெருமானின் தரிசன் அருள் கிட்டும் '' என்பதே பெரியாழ்வார் அழைத்தால் கண்ணன் வந்தே தீர வேண்டும் என்றே தீர்க்கமாக முடிபு கொண்டுத் துணிந்தால்.....

கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!! என்னும் திருநாமம் கோடி முறை அழைத்தால் அது அவனை ஒரு முறையாவது மகிழ்வுறச் செய்யாதா! அப்படி ஒரு தொனியிலே அழைக்கும் நிகழ்வும் நடை பெறாதா! என்ற ஏக்கத்துடனே...

அருமையானப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

ஜி ஆலாசியம் said...

தேமொழி அக்காவின் விருப்ப வெளியீடாக இம்முறை என்போன்ற மெஞ்ஞான பிரியர்களுக்கு பெரு விருந்து.

அறிவது ====> அறிவியல். எதனை அறிவது? அதை பொறுத்து விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் (நாம் கூறும் அறிவியலும் , அருளியலும்) இரண்டாகிறது.... எது எப்படியாயினும் இரண்டையும் அறிவது அந்த அறிவாகிய ஆன்மா என்பது வாழ்வாங்கு வாழ்ந்தோரின் கூற்று என்பர்...

தங்களின் இந்த பகிர்வில் தெய்வத்திரு அடிகளாரின் வாக்கிற்கு இணங்க மகாகவி பாரதியின் வாக்கையும் இங்கே மொழிந்திட விரும்புகிறேன்.

''உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான்.
* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.
* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள்.
* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.''

அற்புதமானக் கட்டுரையை அளித்த தங்களுக்கு நன்றி.

ஜி ஆலாசியம் said...

கிருஷ்ணன் சார் அசத்தீட்டீங்கே போங்க...

///என்னை அறியாமல் பெரிய அறிவாளி போல எழுதத் துவங்கிவிட்டேன்.////
இல்லை, அந்நிலையில் தான் உண்மை வெளியாகும்... விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் இந்த நிலையில் தான் சரியான துல்லிய முடிவைத் தருமாம்.

பொதுவாக எத்தனை அறிவும் அழகும், கல்வியும் செல்வமும் இருந்தாலும் இந்த ஒழுக்கம் இல்லாவிட்டால் உயிரில்லாதது போல் ஆகிவிடும் என்பார் வெண்தாடி வேந்தன்.
இதில் என்ன பெரிய விஷயம் என்றால் நேரம் நல்லா இருந்தால் அப்போதே ந்த ஒழுக்கக் கேடு வெளிப்பட்டு.. சரியாக நடக்க வழி செய்யும்... அப்படி இல்லாவிட்டால், நாட்டின் அதிபர்களாக்கி அங்கே கொடுக்கும் பாருங்கள் தர்மம் தனது அடி.... அப்போது நாம் கண்கூடப் பார்க்கலாம் அந்த உயிரற்ற நடை பிணங்களை!!!

அருமையான ஆக்கம்... பழ மொழிகளில் என் கவனத்தைக் திருப்பியது..
"கண்டால் முறை சொல்வது;காணாவிட்டால் பேர் சொல்வது"
நிறைய எழுத முடியவில்லை. ஆக்கத்தைவிட பின்னூட்டம் அவ்வளவு கடினம் தாங்கள் அறிந்தது தானே!

நன்றிகள் சார்.

ஜி ஆலாசியம் said...

''வாழ்நாள் முழுவதும் உழைத்தேன் - வரும்
வருமானம் போதாமல் குமைந்தேன்
சோர்ந்தே நானும் போனேன் - வரும்
வருமானத்திற்குமேல் சொத்து சேர்ப்பதை
எனக்கு சொல்லித் தருவார் யாருமில்லை ''

இதனைத் தான் வெண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு நெய்யிற்கு அழிந்தது என்பார்கள்!!

இதற்காகவா இப்படியெல்லாம் சிரமப்பட்டீர்கள்... கறுப்புச் சட்டையோ, அல்லது காவி வேஷ்டியோ கட்டிக் கொண்டு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருந்துக் கொண்டு கூட்டம் சேர்த்தால் சுலபம் ஆயிற்றே! அல்லது நேரடியாக களத்தில் இறங்க வேண்டுமானால் மூணு 'சி' யைக் கொடுத்து விட்டு முன்னூறு 'சி' யை அடிக்க அம்மையையோ, அப்பனையோ வேண்டினால் போயிற்று!:)):))

கவிதைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரே.

ஜி ஆலாசியம் said...

சகோதரர் புவனேஸ்வரர் கவிதை
ஒரு கைதியின் புலம்பலாக நிற்கிறது...

ஊழ்வினை வந்து உறுத்தியதால்
உற்றக் கணவன் இங்கே பெற்ற
உயர்பதவியால் உழலும் அபலையின் கண்ணீராய்!!

நல்லக் கற்பனை. வாழ்த்துக்கள்.

ஜி ஆலாசியம் said...

''யாருக்கும் குறைவின்றி
செல்வம் சேர்த்து
குடும்பம் செழித்திட
துரத்தல்
பெரியமனிதன் பெயருக்காக
கௌரவமுடன் விரட்டியது!''

ஒரு மனிதனின் புலம்பல்
கவியும் நடையும் நன்று கவிஞரே!

ananth said...

தாங்கள் சொன்ன பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் வராவிட்டாலும் கருடரையும், சுதர்சனரையும் ஆழ்வார் என்று வைணவர்கள் சிறப்பித்து கூறுவார்கள். சரிதானே பார்வதி அவர்களே.

KMRK அவர்கள் கொடுத்த பழமொழி, விளக்கம், அந்த குட்டி கதைகள் அனைத்தும் நன்றி. படித்து மறந்து போன சில பழமொழிகளை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தார். புதிதாகவும் சில பழமொழிகளைத் தெரிந்துக் கொண்டேன்.

Parvathy Ramachandran said...
This comment has been removed by the author.
Parvathy Ramachandran said...

//ananth said...
தாங்கள் சொன்ன பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் வராவிட்டாலும் கருடரையும், சுதர்சனரையும் ஆழ்வார் என்று வைணவர்கள் சிறப்பித்து கூறுவார்கள். சரிதானே பார்வதி அவர்களே//

தாங்கள் சொல்வது மிகச் சரிதான். ஸ்ரீமந் நாரயணனின் கல்யாணகுணங்களில் ஆழ்ந்து பக்தி செய்பவர்களே ஆழ்வார்கள் எனச் சிறப்பித்துப் போற்றப்படுகின்றனர். ஆசாரியர்கள் வரிசையில் வரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அம்முறையிலேயே போற்றப்படுகின்றார்.

பன்னிரு ஆழ்வார்களும் திருமால் தமது திருமேனியில் தரித்திருக்கும், கதை, பாஞ்சசன்னியம் எனும் சங்கு, கௌஸ்துபமணி போன்றவற்றின் அம்சமாகவும், திருமாலின் அருகிலிருந்து திருத்தொண்டாற்றுபவர்கள் அம்சமாகவும் அவதாரமானவர்கள். எடுத்துக்காட்டாக, ஸ்ரீ பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாகவும், ஸ்ரீ குலசேகராழ்வார், கௌஸ்துப மணியின் அம்சமாகவும், கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக பூதத்தாழ்வாரும், நந்தகம் என்னும் திருவாளின் அம்சமாக பேயாழ்வாரும் அவதரித்தனர். ஸ்ரீ சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசையாழ்வார். பெருமாளின் படைத்தலைவரான, ஸ்ரீ விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார். இவர் திருக்குருகூரில் உள்ள ஆதிபிரான் கோவிலுள் வாசம் செய்த புளியமரம், 'திருப்புளியாழ்வார்' என்றே போற்றப்படுகிறது.

ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாக அவதரித்த, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் இளவல் பரதன், பரதாழ்வார் என்றே போற்றப்படுகிறார். மிக்க நன்றி திரு. ஆனந்த் அவர்களே.

Parvathy Ramachandran said...

//ஜி ஆலாசியம் said...
சகோதரியாரின் ஆக்கம் வழக்கம் போல அழகும் அருளும் நிறைந்து காண்கிறது//

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரரே.

minorwall said...

பார்வதி, தேமொழி,
புவனேஷ்,ஆனந்தமுருகன்,சபரி என்று எல்லோர் ஆக்கங்களும் நன்றே.
இன்றைய மலரில் என்னைக் கவர்ந்தது KMRKவின் ஆக்கத்தின் முன்பாதியும்,
தனுசுவின் புது முயற்சி கொலை விசாரணைக் கதையிலே இருந்த விறுவிறுப்பைவிட துரத்தலில் இருந்த வேகமும்தான் என்னைக் கவர்ந்தது..

thanusu said...

kmr.krishnan said...கவிதையும் தொய்வில்லாமல் ஓடுகிறது.வில்லாளிக்குப்பாராட்டுக்கள்./////

.அய்யர் said...கவிதையில் இருக்கும் ஓட்டம்
கதையில் இருந்திருக்கலாம்..

Parvathy Ramachandran said...தனுசு அவர்களின் இரு ஆக்கங்களும் அருமை. நெஞ்சைத் தொடும் படைப்பு. அருமை.////
ஜி ஆலாசியம் said...ஒரு மனிதனின் புலம்பல்
கவியும் நடையும் நன்று கவிஞரே!
minorwall said...தனுசுவின் புது முயற்சி கொலை விசாரணைக் கதையிலே இருந்த விறுவிறுப்பைவிட துரத்தலில் இருந்த வேகமும்தான் என்னைக் கவர்ந்தது..

படித்து பாராட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

thanusu said...

ஜி ஆலாசியம் saஇதற்காகவா இப்படியெல்லாம் சிரமப்பட்டீர்கள்... கறுப்புச் சட்டையோ, அல்லது காவி வேஷ்டியோ கட்டிக் கொண்டு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருந்துக் கொண்டு கூட்டம் சேர்த்தால் சுலபம் ஆயிற்றே! அல்லது நேரடியாக களத்தில் இறங்க வேண்டுமானால் மூணு 'சி' யைக் கொடுத்து விட்டு முன்னூறு 'சி' யை அடிக்க அம்மையையோ, அப்பனையோ வேண்டினால் போயிற்று!:)):))

அசத்தலோ அசத்தல் .

ananth said...

அறிவியல்/அருளியல் இவற்றுக்கான வித்தியாசம்/விளக்கம் அருமை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்தால் அதன் முடிவு சிறையில்தான். நமக்கெதற்கு அதெல்லாம்.

புவனேஸ்வரின் கவிதையைப் படித்துவுடன் எப்படியேல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றியது.

ananth said...

கவிஞர்களின் கற்பனைக்கு எல்லையில்லை. இது தனுசுவின் கவிதையைப் படித்தவுடன் தோன்றியது. கவிதை அருமையிலும் அருமை.

கதை? இது போன்ற crime கதைகளை அதிகமாக விரும்பி படிப்பவன் நான். கதை நன்றாக இருக்கிறது. என்ன கொலைக்கான motiveதான் அவ்வளவு பலமாக இல்லை. முதல் மனைவியும் அவர் மூலம் குழந்தையும் இல்லாத பட்சத்தில் இரண்டாவது மனைவிக்குதான் அனைத்து உரிமைகளும் போய் சேரும். இந்த கதையில் அவர் இதையெல்லாம் யோசிக்காமல்/இது பற்றி சரியாக தெரியாமல் இப்படியொரு முடிவெடுத்து விட்டார் என்று எடுத்துக் கொள்கிறேன்.

sundari said...

Sir,
Present

sriganeshh said...

@சகோதரிக்கு,
//தன்னைச் சேர்ந்த விசிஷ்டமாகக் கொண்ட பிரும்மமே உண்மை என்ற ஸ்ரீ இராமானுஜரின்தத்துவமே விசிஷ்டாத்வைதம் (சிறப்பு உள்ள அத்வைதம்) ஆகும்.//

வித்தியாசமான அர்த்தம்.. விசிஷ்டாத்வைதம் த்வைத சம்பிரதாயத்திலிருந்து வந்தது. இருவித நிலைகள் எப்போதும் சேர இயலாது என்பது த்வைதம் அதில் ராமானுஜர் சற்று வேறுபட்டார் என்று வைத்துக்கொண்டாலும், அத்வைத நிலைக்கு அதாவது இரு நிலைகளும் சேர முடியும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அந்த கொள்கையின் அடிப்படையில் விசிஷ்டா த்வைதம் அதாவது த்வைதத்திலிருந்து விசேஷமாக பிறந்தது அல்லது வளர்ந்தது என்று தான் கருத வேண்டி உள்ளது.
அதே மாதிரி வைஷ்ணவ சம்பிரதாயம் ராமானுஜர் முன்பேயிருந்து ஆகையால் வைஷ்ணவம் என்றால் இராமானுஜர் என்று வந்தது ஒரு வேளை அவர் தமிழ் நாட்டில் பிறந்து அந்த சம்பிரதாயத்தை பரப்பினார் என்பதால் வைஷ்ணவம் என்றால் இராமானுஜர் அல்லது "vice versa" என்று வந்திருக்கலாம்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தின் நான்கு பிரிவு ருத்ர, ப்ரஹ்மா, ராமானுஜ, நிம்பஆதித்யா..
முதலாவது ருத்ர ‍பிரிவு கிருஷ்ணரிலிருந்து தொடங்கி, சிவா, ருத்ர, விஷ்ணுசாமி, தீர்த்த சுவாமி, சீதர சுவாமி என்று வரும். இவர்கள் கௌடியா வைஷ்ணவர்கள் அதாவது தீவிரமானவர்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் சுவாமி நாராயணன் இயக்கத்தை நடத்துகிறார்கள். குஜராத் கட்ச் பகுதியிலிருந்து உலகம் முழுவதும் வைஷ்ணவத்தை பரப்பியதில் முதன்மையான இடம் இவர்களுக்கு.
இரண்டாவது ப்ரம்ம பிரிவு, இதுவும் கிருஷ்ணரிலிருந்து தொடங்கி, ப்ரஹ்மா, நாரத முனி, கிருஷ்ண த்வைபாயன வியாசர், மாத்வாச்சார்ய பிறகு அவர் ஏற்படுத்திய அஷ்ட மடம் தலைவர்கள் என்று செல்லும்.மாத்வ சம்பிராயத்தினரும் தீவிரமானவர்கள். ராகவேந்திரர், வாதிராஜர்,விஜேய‌ந்திரர், ரகூத்தமர், வியாசராஜர், எனக்கு தெரிந்தவரை. இவர்கள் தஞ்சை, கும்பகோணம், இரங்கம், கோவை, சென்னை மற்றும் கர்னாடகம், ஆந்திரா என்று வைஷ்ணவத்தை பரப்பியவர்கள்.
மூன்றாவது இராமானுஜர்...தங்கள் அளித்தது
நான்காவது குமார வைஷ்ணவ சம்பிரதாயம். இதுவும் கிருஷ்ணரிலிருந்து தொடங்கி, விஷ்ணு, ஹம்சவதார், சனக குமாரர், நிம்ப ஆதித்யா என்று செல்லும். இதைப்பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை.
மேற்சொன்ன விவரம் என்னுடைய ஞாபகத்திலிருந்து...

kmr.krishnan said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

//முதலாவது ருத்ர ‍பிரிவு கிருஷ்ணரிலிருந்து தொடங்கி, சிவா, ருத்ர, விஷ்ணுசாமி, தீர்த்த சுவாமி, சீதர சுவாமி என்று வரும். இவர்கள் கௌடியா வைஷ்ணவர்கள் அதாவது தீவிரமானவர்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் சுவாமி நாராயணன் இயக்கத்தை நடத்துகிறார்கள்//

கெளடியா மடம் என்றே உள்ளது.இவர்கள் கிருஷ்ண சைத்தன்யர் என்ற வங்காள தேசத்து அவதார புருஷரை பின்பற்றுகிறார்கள். 'இஸ்கான்' இந்த வகையையே கைக் கொள்கிறார்கள்.

மத்வருடைய வழிவந்தவர்களே மாத்வர்கள். துவைத தத்துவவாதிகள்.இவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரையே வழி படு தெய்வமாகக் கொண்டவர்கள். குறிப்பாக உடுப்பிக் கிருஷ்ணர்.

விசிஷ்ட+ அத்வைதம்=விசிஷ்டாத்வைதம் என்பது சரியா அல்லது
விசிஷ்ட+த்வைதம்=விசிஷ்டத்வைதம் என்பது சரியா என்ற் தத்துவ விசாரணையை ஸ்ரீ கணேஷ் துவக்கி வைத்துவிட்டார்.நல்லது. மேல் அதிகத்தகவல்கள் அளிப்பதன் மூலம் தெளிவு கிடைக்கலாம்.

kmr.krishnan said...

என் ஆக்கத்தைப்படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்ட பார்வதி அம்மையார், அய்யர், தனுசு, ஆனந்த், ஹாலாஸ்யம், மைனர்வாள் ஆகியொருக்கு மிக்க நன்றி.

அடுத்தது என் 100வது ஆக்கம்.

அது வெளி வந்த பின்னர் வாரம் தவறாமல் கடமை போல எழுதி வந்த பழக்கத்தைக் கைவிடவும், எழுத வேண்டும் என்ற மன எழுச்சி வந்தபோது மட்டும் எழுதுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

Parvathy Ramachandran said...

@சகோதரர் ஸ்ரீகணஷூக்கு,

முதலில் என் கட்டுரையை ஆழ்ந்து படித்துப் பின்னூட்டமிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்களது கருத்துக்கள் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்றால் மிகையாகாது. எனக்குத் தெரிந்தவரை தங்கள் கருத்துக்களுக்குப் பதிலளிக்கிறேன்.

//விசிஷ்டாத்வைதம் த்வைத சம்பிரதாயத்திலிருந்து வந்தது. இருவித நிலைகள் எப்போதும் சேர இயலாது என்பது த்வைதம் அதில் ராமானுஜர் சற்று வேறுபட்டார் என்று வைத்துக்கொண்டாலும், அத்வைத நிலைக்கு அதாவது இரு நிலைகளும் சேர முடியும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அந்த கொள்கையின் அடிப்படையில் விசிஷ்டா த்வைதம் அதாவது த்வைதத்திலிருந்து விசேஷமாக பிறந்தது அல்லது வளர்ந்தது என்று தான் கருத வேண்டி உள்ளது. //

விசிஷ்டாத்வைதம், த்வைதம் இரண்டும் இருவேறு கொள்கைகள். ஒன்றிலிருந்து ஒன்று என்று கொள்வது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார், 'தெய்வத்தின் குரலி'ல் கூறியிருக்கும் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

"பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரு வேறு வ்யக்திகள் என்ற அபிப்ராயத்தைக் கொண்டதால் 'த்வைதம்' எனப்படுகிறது. ஒரு குயவன் தனக்கு முற்றிலும் வேறாகப் பானை என்று ஒன்றைப் பண்ணிப் போடுகிற மாதிரி பரமாத்மா ஜீவாத்மாவை அடியாடு வேறு வஸ்துவாகப் பண்ணிவிடவில்லை என்றும், உடம்பை உயிர் இயக்குகிற மாதிரி ஜீவனின் உயிரை அதற்கும் உயிராக (''உயிர்க்குயிராக' என்கிறோமே, அப்படி) இயக்கும் அந்தர்யாமியாக அவன் இருக்கிறானென்றும் ராமாநுஜர் ஸித்தாந்தம் செய்தார். இதைத்தான் விசிஷ்டா த்வைதம் என்பது. அவரும் இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவை த்வைதமாகப் பிரிந்திருந்து பக்திதான் பண்ணிக்கொண்டிருக்க முடியுமே தவிர, அந்தப் பரமாத்ம தத்வத்திலேயே ஜீவன் பிறிதற அத்வைதமாக ஒன்றிவிட முடியாது என்றுதான் மோக்ஷ நிலையை த்வைதமாக செய்திருக்கிறார்.”

ஆக, த்வைத சித்தாந்தத்திலிருந்து வேறுபட வேண்டும் என்பது மட்டும் விசிஷ்டாத்வைதத்தின் நோக்கமாக இருக்க முடியாது. 'ஜீவனும் ப்ரும்மமும் ஒன்றே, இரண்டும் முடிவில் ஒன்றுவதே முக்தி' எனும் அத்வைத சித்தாந்தத்தையே, விசிஷ்டாத்வைதம் முழுவதுமாக நிராகரணம் செய்கிறது. ஏனேன்றால், மோக்ஷ நிலை த்வைத சித்தாந்தத்தைச் சார்ந்து குறிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறப்பு வாய்ந்த அத்வைதம் எனும் கோட்பாட்டின்படியே, 'விசிஷ்டாத்வைதம்' இருக்கக் காரணம் உள்ளது.

Parvathy Ramachandran said...
This comment has been removed by the author.
Parvathy Ramachandran said...

//அதே மாதிரி வைஷ்ணவ சம்பிரதாயம் ராமானுஜர் முன்பேயிருந்து ஆகையால் வைஷ்ணவம் என்றால் இராமானுஜர் என்று வந்தது ஒரு வேளை அவர் தமிழ் நாட்டில் பிறந்து அந்த சம்பிரதாயத்தை பரப்பினார் என்பதால் வைஷ்ணவம் என்றால் இராமானுஜர் அல்லது "vice versa" என்று வந்திருக்கலாம். //

தாங்கள் கூறுவது மிகச்சரி. சில வாரங்களுக்கு முன் திரு. புவனேஷ்வர் அவர்கள் தன் பின்னூட்டத்தில் இது குறித்து மிக அருமையாக, அழகாக விளக்கியிருப்பதை தாங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஸ்ரீ வைணவம் குறித்து நான் கூறியது சம்பந்தமாக, மேலதிகத் தகவல்களை சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.

மேலும் ஸ்ரீ வைஷ்ணவம் தாங்கள் கூறிய பல சம்பிரதாயங்களை உள்ளடக்கியதே. ஆனால் அவை பெரும்பான்மையும் த்வைத சித்தாந்தத்தில் நிலை கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்பதாகவே சொல்லப்படுகிறது. ஆகவே, 'ஸ்ரீவைணவம், பெரும்பான்மையும் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தில் நிலைபெற்றுள்ளது' என்று கூறியிருக்கிறேன். அதையே என் கட்டுரையிலும் (ஆழ்வார், ஆசாரியர் உள்பட) கையாண்டிருக்கிறேன்.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய எல்லா கொள்கைகளுமே மானுட வாழ்வில் ஏற்றத்திற்காக ஆசாரியப் பெருமக்களால் பிரசாரம் செய்யப்பட்டவை. எந்தச் சித்தாந்தமும் ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல. அனைத்துக் கொள்கைகளுமே அநாதியானவை. ஆசாரியர்கள்
அதைப் புனருத்தாரணம் செய்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.

சகோதரர் திரு. ஸ்ரீகணேஷ் அவர்களின், பின்னூட்டம், விஷயங்களை நன்கு ஆராய்ந்தறியும் அவரது பரந்துபட்ட ஞானத்தை நன்கு உணர்த்துகிறது. தாங்கள் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் மிக நல்ல கட்டுரைகளைத் தர இயலும். இதை எனது தாழ்மையான வேண்டுகோளாக ஏற்கப் பிரார்த்திக்கிறேன்.

thanusu said...

.krishnan said...அடுத்தது என் 100வது ஆக்கம்.
அது வெளி வந்த பின்னர் வாரம் தவறாமல் கடமை போல எழுதி வந்த பழக்கத்தைக் கைவிடவும், எழுத வேண்டும் என்ற மன எழுச்சி வந்தபோது மட்டும் எழுதுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

எதுக்கு இந்த விபரீத யோசனை. வாத்தியாருக்கு வழி வகுத்தது மாதிரி ஆயிடும்.இன்னும் பல நூறு நீங்கள் தரவேண்டும் .கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்

sriganeshh said...

சகோதரிக்கு,

//விசிஷ்டாத்வைதம், த்வைதம் இரண்டும் இருவேறு கொள்கைகள். ஒன்றிலிருந்து ஒன்று என்று கொள்வது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. //

நன்றி. நான் வித்தியாசப்படுத்தி காட்டியது விசிஷ்டாத்வைதம் சிறப்பு வாய்ந்த அத்வைதம் அல்ல. அத்வைதம் வேறு, த்வைதம் வேறு. த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய இரண்டும் ஒரு பக்கம் என்றால் அ+த்வைதம் அதற்கு மறுபக்கம் ஆகும் என்பது என் கருத்து.

காஞ்சி பரமாச்சார்யாள் மீது எனக்கு அபரிமிதமான பக்தி உண்டு. ஆனால் பக்தி வேறு கொள்கை அடிப்படையில் மாறுபட்ட கருத்து கொள்வது என்பது வேறு. அவர் அத்வைத வாதி ஆகவே அவரை ஒரு ரெஃபரன்ஸ் ஆக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அதே பரமாச்சார்யாள் மூன்று தத்துவங்களும் ஜீவன் பயணத்தின் முப்பரிமாணங்கள் என்று சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது முதல் நிலை அறியாமை த்வைதம், இரண்டாவது சற்று தெளிதல் இது விசிஷ்டாத்வைதம், மூன்றாவது அனைத்தும் அறிந்து ப்ரம்மமும் நாமும் ஒன்றே என்று உணருதல் (வார்த்தை சரி என்று நினைக்கிறேன்) அது அத்வைதம்...ஆக ஒவ்வொரு ஜீவனும் இந்த மூன்று நிலைகளை கடக்கிறது. இதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வர். சந்தேகம் தான்.


//ஆக, த்வைத சித்தாந்தத்திலிருந்து வேறுபட வேண்டும் என்பது மட்டும் விசிஷ்டாத்வைதத்தின் நோக்கமாக இருக்க முடியாது. 'ஜீவனும் ப்ரும்மமும் ஒன்றே, இரண்டும் முடிவில் ஒன்றுவதே முக்தி' எனும் அத்வைத சித்தாந்தத்தையே, விசிஷ்டாத்வைதம் முழுவதுமாக நிராகரணம் செய்கிறது. ஏனேன்றால், மோக்ஷ நிலை த்வைத சித்தாந்தத்தைச் சார்ந்து குறிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறப்பு வாய்ந்த அத்வைதம் எனும் கோட்பாட்டின்படியே, 'விசிஷ்டாத்வைதம்' இருக்கக் காரணம் உள்ளது.//

இது எனக்கு புரியவில்லை.

Parvathy Ramachandran said...

அன்புச் சகோதரர் ஸ்ரீகணேஷுக்கு,
// நான் வித்தியாசப்படுத்தி காட்டியது விசிஷ்டாத்வைதம் சிறப்பு வாய்ந்த அத்வைதம் அல்ல. அத்வைதம் வேறு, த்வைதம் வேறு. த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய இரண்டும் ஒரு பக்கம் என்றால் அ+த்வைதம் அதற்கு மறுபக்கம் ஆகும் என்பது என் கருத்து.//

தாங்கள் 'விசிஷ்டாத்வைதம் த்வைத சம்பிரதாயத்திலிருந்து வந்தது.' என்று குறிப்பிட்டிருந்தபடியால் அப்படிக்கூறினேன். த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய இரண்டும் ஒருபக்கம் தான். அதனால் தான் அத்வைதத்தை நிராகரணம் செய்வதாக எழுந்த இந்தக் கொள்கைக்கு 'விசிஷ்டாத்வைதம்' விசிஷ்ட+ அத்வைதம் என்று பெயர்க்காரணம் இருக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. த்வைதத்தை நிராகரணம் செய்வது விசிஷ்டாத்வைதத்தின் மிக முக்கிய நோக்கமாக இருப்பது இயலாது. ஏனென்றால், மோக்ஷ நிலையில், ஜீவனும் ப்ரும்மமும் வேறுபட்டிருப்பதை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக் கொள்கிறது.

//அதில் ராமானுஜர் சற்று வேறுபட்டார் என்று வைத்துக்கொண்டாலும், அத்வைத நிலைக்கு அதாவது இரு நிலைகளும் சேர முடியும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அந்த கொள்கையின் அடிப்படையில் விசிஷ்டா த்வைதம் அதாவது த்வைதத்திலிருந்து விசேஷமாக பிறந்தது அல்லது வளர்ந்தது என்று தான் கருத வேண்டி உள்ளது. //

ஸ்ரீகாஞ்சி பெரியவரின் கூற்றை முன்வைத்தது, த்வைத, விசிஷ்டாத்வைதத்திற்க்குள்ள வேறுபாட்டை அவர் தெளிவாக விளக்கியிருப்பதால். வேறு எந்த நோக்கமும் இல்லை. கிட்டத்தட்ட, த்வைத, விசிஷ்டாத்வைதக் கொள்கைகள் ஒத்திருக்கும் போது, விசிஷ்ட+ த்வைதம் என்பதை விட, விசிஷ்ட+அத்வைதம் அதாவது அத்வைதத்திலிருந்து முழுதும் வேறுபட்ட‌, அத்வைதத்தினின்றும் சிறப்புவாய்ந்த கொள்கை என்ற அடிப்படையிலேயே அதன் பெயர்க்காரணம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

seenivasan said...

Thanks to Parvathi madam for making me to recall my School days from 1977 to 1984 in Lakshmi mills school in Kovilpatty.Everyday we sung Shri Namalwar Tiruvaimozli in our daily school prayer meet during this period.

sriganeshh said...

@சகோதரிக்கு,

நன்றி. தங்களின் தெளிவான விரிவுரைக்கு நன்றி.


@கிருஷ்ணன் சார்,

நானே சென்னையில் உள்ள கௌடியா மடம் மட்டும் கௌடியா மட் ரோட் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள். நன்றி.

Uma said...

ஸ்ரீ வைணவம் பற்றிய நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடிந்தது பார்வதியின் ஆக்கம் மூலம்.

குன்றக்குடி அடிகளாரின் கட்டுரையை அறியத்தந்தமைக்கு நன்றி!

கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தின் மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.

தேமொழி, புவநேஸ்வரின் கவிதைகள் ஓகே.

தனுசு முதல் கதையே க்ரைம் கதை என அசத்தியிருக்கிறார். கவிதையும் நன்றாக இருந்தது, எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்.

என்னை மிகவும் கவர்ந்தது ஆனந்தமுருகன் அனுப்பியது.

சபரியின் நகைச்சுவைத் துணுக்கையும் படித்தேன்.

kmr.krishnan said...

//கிருஷ்ணன் சாரின் ஆக்கத்தின் மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.//

புரியவில்லையா? ரொம்ப சரி! 99 வது ஆக்கத்திலாவது எனக்குத் தத்துவமேதை என்ற அந்தஸ்தை அளித்ததற்காக நன்றி உமாஜி!

எனக்கே புரியவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய தத்துவமாக இருக்க வேண்டும்!

வீட்டில் ஒரு நெட் கனெக்ஷன் வாங்கி வைத்துக்கொண்டு நிதானமாகப் படிக்கவும்.
அப்போது ஒரு வேளை புரியலாம்.

minorwall said...

தேமொழி அவர்களின் முதல் கவிதை முயற்சி பற்றி சொல்ல விட்டுவிட்டேன்..

'வரும் மானம்' என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாக 'போகும் மானம்' என்று சொல்லலாம்..

அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டா எதிர்ப்பதம்தான் வரும்..
அதாவது போகும்..

அதுனாலே வர்றதை மட்டும் வரவிலே வைப்போம்..

கவிஞர் தேமொழி வாழ்க..

தேமொழி said...

என் கவிதையை வெளியிட்டதுடன் நான் "படித்ததில் பிடித்ததை' மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி.
அவற்றை படித்தவர்களுக்கும், அதைப்பற்றிய தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள நேரம் எடுத்துக் கொண்டவர்களுக்கும் நன்றி.
நம்மக்களில் பெரும்பாலோர் வருமானத்திற்கு மேல் சொத்தும் வேண்டாம் அதனால் வரும் தொல்லையும் வேண்டாம் என்று நினைப்பது அவர்கள் கொடுத்த அறிவுரைகளில் இருந்து புரிகிறது:)))

தேமொழி said...

பார்வதியின் கட்டுரையில் இருந்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன் என்ற வழக்கமான பல்லவியைப் பாடுவதற்கு வருந்தினாலும்...அதுதான் உண்மை. கட்டுரையை ஆழ்ந்து படித்தாலும் மெத்த படித்தவர்களுக்கும், சுத்தமாக படிக்கதவர்களுக்கும் சந்தேகம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் இரண்டாவது வகை.

ஸ்ரீகணேஷ் போன்று விவாதிக்க ஆர்வம் இருந்தாலும், பள்ளியில் சீறாப்புராணம், தேம்பாவணி, நாலாயிரத் திவ்ய பிரபந்தம், பெரியபுராணம் என்று எவ்வளவு அறிமுகப் படுதப்பட்டதோ அவ்வளவே என் சமய அறிவு. சுற்றுச் சூழ்நிலையினால் இந்துமதத்தைப் பற்றி கொஞ்சம் கூடவே தெரிந்திருக்கலாம். நீங்கள் எழுதுங்கள் படிக்க நானிருக்கிறேன் என்பதே நான் தரக்கூடிய ஊக்கம். (மீறி விவாதித்தேன் என்றால் என் அறியாமை மிகவும் வெளிப்படும் அபாயம் உள்ளது :)))

தேமொழி said...

KMRK ஐயாவின் கட்டுரையை ரசித்தேன், ஆனால் அவர் துறவுக் கோலத்தில் உள்ளவர்களை அதிகம் சாடுகிறார். தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் பாசாங்கு செய்வதுதான் ஏதோ ஒருவகையில் நடந்து கொண்டிருக்கிறது. வேண்டுமானால் அரசியல்வாதிகள் நம்மைவிட முன்னணியில் இருக்கக்கூடும்.

தமிழனத் தலைவர் என்று சொல்லி தன் இனத்தைக் கைவிடுபவர்களும், தாய்க்குலமே என்று சொன்னாலும் பேத்தி வயது பெண்களை அரைகுறை ஆடைகளுடன் ஆடவிடுவதையும் நாம்தான் பார்த்திருக்கிறோமே (அதே பெண்கள் மற்ற நடிகர்களுடன் நடிக்கும்பொழுதோ, தன் வயதை ஒத்தவர்களுடன் நடிக்கும்பொழுதோதான் தினசரி வாழ்க்கையில் உள்ள பெண்களைப்போல உடை உடுத்தி நடிப்புத் திறமையைக் காட்டும் வாய்ப்பை பெற்று வந்தார்கள் என்பதைக் கவனித்தால் தெரியும்).

அதனால் பெரும்பாலானோர் பாசாங்காக சொல்வது ஒன்றும் செயல் வேறு வகையைக் காட்டும் என்பதே உண்மை. இரண்டும் ஒன்றாக இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள். ஆடிக்கறக்க வேண்டிய மாட்டையும் பாடிக்கறக்க வேண்டிய மாட்டையும் அதன் வழியிலே சென்று மடக்கினால்தானே நமக்கு ஆதாயம்.

பட்டை என்பது "பட்டை சாதத்தை" குறிக்காதோ? நாமம் போட்டு வேடமிட்டால்தான் வயிற்றுக்கு சோறு என்று பொருள் எடுக்கலாமா?

தேமொழி said...

///ஒரே ஒருத்தியின் வாழ்வை மட்டுமா நீயழித்தாய்?///

புவனேஸ்வர் கவிதையை பலமுறைப் படித்தேன். இன்னமும் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை. கவிதையில் ஏதாவது ஒரு குட்டிகதை ஒளிந்திருக்கிறதோ? நாயகன் இரண்டு பெண்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டாரா? ஒருபெண்ணுக்கு இழைத்த குற்றத்தினால் சிறை சென்ற காரணத்தினால் அவனை நம்பி வந்த மனைவியின் வாழ்வும் பாதிக்கப்பட்டு மனைவி புலம்புகிறாளா? அதனால் தாலி விலங்காகி அவள் வாழ்க்கையும் தண்டனையானதா? இல்லை நான்தான் வரிகளுக்கு இடையே அர்த்தம் தேடுகிறேனா?

தேமொழி said...

தனுசு தன் வாழ்வில் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிரும்பொழுதும் அதைப் பற்றி ஒரு கவிதையும் எழுதியுள்ளார். காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற கண்ணதாசனின் பாடல் நினைவிற்கு வந்தது. ஓட்டத்தை நிறுத்தும் நேரமே தூங்க ஆரம்பிக்கும் நேரமாகிவிடுகிறது. நல்ல கவிதை.


கதையும் நன்றாக இருக்கிறது, இப்பொழுதெல்லாம் யார்தான் கைக்கடிகாரம் கட்டுகிறார்கள், கைபேசி வந்தவுடன் அந்த வழக்கம் என்னைப் பொறுத்தவரை காணாமல் போய்விட்டது. சங்கர்லால் துப்பறிகிறார் கதைகள் பாணியில் நடையும், எழுத்துக்களில் விளையாடி உரைநடையை கையாள்வதில் சுஜாதாவின் பாணியும் தெரிகிறது. முடிவில் பெண் போலீஸ் பேசுவது திரைப்படங்களில் கடைசிக் காட்சியில் வரும் போலீஸ் பாணியில் இருந்தது.

அனிதா இளம் மனைவியில் கணேஷ் என்று தொடங்கி அவரை வைத்து பல கதைகளை எழுதி
னார் சுஜாதா. தமிழ்வாணனும் அதே முறையை உபயோகித்தார். கமிஷ்னர் கோபாலனை வைத்து தொடர்ந்து எழுதுங்கள். இப்படி செய்தால் அந்தப் பாத்திரத்தின் மீது நம்மை அறியாமல் எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு ஒட்டுதல் வந்துவிடும். உறவினர்களை நண்பர்களை எதிர்பார்ப்பது போல எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.

தேமொழி said...

சபரி மற்றும் அனந்தராமன் ...மன்னிக்கவும் எல்லாம் இந்த தனுசு செய்யும் வேலை ....ஆனந்தமுருகனின் பதிவுகளின் உட்கருத்துக்கள் மிகவும் உண்மை ...எதார்த்தம்.... நன்றி.

இது பார்வதிக்காக...
அவுக எல்லாம் மனைவியையும் (டி.வி.) துணைவியையும் (செல்ஃபோன்) இணைத்து இணைவியாக்கி உல்லாசமா இருக்காக.......
காலம் மாறிப்போச்சு அம்மிணியும் கூடிய சீக்கிரமே சொல்றத கேக்காத கம்ப்யூட்டரை கடாசிட்டு வசதியா சின்னதா ஒரு ஐபாட் வச்சுக்கக்கிடுவாக..........
நமக்கும் அந்த கதி வரக்கூடாது அப்படின்னு யோசிச்ச ஐயா சமயம் பார்த்து தன் அருமை பெருமைகளை அம்மிணிக்கு நினைவு படுத்துவதற்காக விடும் அறிக்கை இது.
பாவம் அவர் பீதி அவருக்கு பார்வதி....

Parvathy Ramachandran said...

// நீங்கள் எழுதுங்கள் படிக்க நானிருக்கிறேன் என்பதே நான் தரக்கூடிய ஊக்கம்.//

மிக்க நன்றி தேமொழி. எதிர்ப்பாட்டுக்கும் நன்றி.

//அனிதா இளம் மனைவியில் கணேஷ் என்று தொடங்கி அவரை வைத்து பல கதைகளை எழுதினார் சுஜாதா. தமிழ்வாணனும் அதே முறையை உபயோகித்தார். கமிஷ்னர் கோபாலனை வைத்து தொடர்ந்து எழுதுங்கள். இப்படி செய்தால் அந்தப் பாத்திரத்தின் மீது நம்மை அறியாமல் எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு ஒட்டுதல் வந்துவிடும். உறவினர்களை நண்பர்களை எதிர்பார்ப்பது போல எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.//

மிகச்சரியான வார்த்தைகள். அப்போதெல்லாம், 'த்ரில்லர்' தொடர்கதைகள் மேல் ஒரு கிரேஸ் வந்ததற்கு நீங்கள் கூறுவது மிக முக்கியமான காரணம். இன்று வரையில் ஞாபகம் இருக்கிறதே!!. 'நைலான் கயிறி'லேயே கணேஷ் வருகிறார். ஆனால் அவரை மிக முக்கிய கதாபாத்திரமாகச் செய்தது நீங்கள் கூறுவது போல் 'அனிதா இளம் மனைவி'யில் தான். ( 'வஸந்து'க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?!!, 'மூன்று நிமிஷம் கணேஷ்' என்று நினைக்கிறேன்) இது ஸ்ரீதேவி, ஜெய்சங்கர் நடித்த படமாகப் பார்த்துவிட்டுத்தான், 'தொடர்கதைகளைப் படமாக எடுக்கும் போது பார்ப்பதில்லை அல்லது இது நாம் படித்த கதை என்பதை மறந்துவிட்டுப் பார்க்க வேண்டும்' என்று கொள்கை முடிவெடுத்தேன்.

இப்போது பத்திரிகைகளில் எங்கே அப்படிப்பட்ட கதைகள் வருகின்றன?. வந்தால் யார் படிக்கிறார்கள்?!!!. 'இணையத்திலாவது படிக்கிறார்களே, அதை நினைத்து சந்தோஷப்படவேண்டும்' என்கிறீர்களா!!! அதுவும் சரிதான்!!!!.

Bhuvaneshwar said...

Dear friends and respected Sir,
As I am away again in Salem to attend a family function, I am unable to reply to your comments. I just came to a browsing center and saw!
I shall reply in detail soon.
I thank Vaathiyaar for posting my poem.
I thank all the good hearts and friends who have commented here.
I shall be back.
:)